Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 2:38 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:46 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 4:22 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கோப்பை வெல்லுமா இந்தியா *இன்று இலங்கையுடன் மோதல்
Page 1 of 1
கோப்பை வெல்லுமா இந்தியா *இன்று இலங்கையுடன் மோதல்
மிர்புர்:
முத்தரப்பு ஒரு நாள் தொடரின் பைனலில் இந்திய அணி, இன்று இலங்கையுடன்
மோதுகிறது. இதில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை கைப்பற்றும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள்
பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில்
நடக்கிறது. இதில் லீக் போட்டியில் சொதப்பிய வங்கதேசம் வெளியேறியது. இன்று
மிர்புர், ஷேர் இ பங்களா மைதானத்தில் நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை
அணிகள் மோதுகின்றன.
வருகிறார் சேவக்:
இந்தியாவை
பொறுத்தவரை மிகவும் வலுவான அணியாக காட்சி அளிக்கிறது. கடந்த இரண்டு லீக்
போட்டிகளில் ஒய்வில் இருந்த சேவக், இன்று களமிறங்க உள்ளார். இவரது அதிரடி
கைகொடுக்கும் பட்சத்தில், இந்தியா வலுவான ஸ்கோரை எட்டலாம். இவருடன்
இணைந்து மற்றொரு துவக்க வீரர் காம்பிர், பொறுப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்துவது அவசியம். சேவக் வருகையால், தினேஷ் கார்த்திக்
நீக்கப்படலாம். மூன்றாவது வீரராக களமிறங்கும் கோஹ்லி, சச்சின் இல்லாத
குறையை சரியாக நிவர்த்தி செய்து வருகிறார். இத்தொடரில் தொடர்ந்து
நம்பிக்கை அளித்து வரும் இவர், இன்றும் அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.
மிடிர் ஆர்டர் பலம்:
இக்கட்டான
நேரத்தில் அணியை சரிவிலிருந்து மீட்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி
வருகிறார் கேப்டன் தோனி. மிடில் ஆர்டரில் இவருடன் ரெய்னாவின் ஆட்டமும்
இந்திய அணிக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
பவுலிங் கவலை:
இந்திய
அணியின் பவுலிங் தான் சற்று கவலை அளிக்கிறது. இருப்பினும் கடைசி இரண்டு
போட்டியில் இந்திய பவுலர்கள் எழுச்சி பெற்றுள்ளனர். பீல்டிங்கும் இதே நிலை
தான். ஜாகிர், நெஹ்ரா, ஸ்ரீசாந்த் வேகக் கூட்டணி, இன்று விக்கெட் வேட்டை
நடத்த வேண்டும். ஹர்பஜன் சுழலில் அசத்தும் பட்சத்தில், இலங்கை அணியை
விரைவில் சுருட்டி நெருக்கடி கொடுக்கலாம். யுவராஜின் பகுதி நேர பந்து
வீச்சும் அணிக்கு கைகொடுப்பது கூடுதல் பலம்.
பேட்டிங் படை:
கடந்த
ஆண்டு இந்தியாவிடம் ஒரு நாள் தொடரை இழந்த இலங்கை அணி, இம்முறை பதிலடி
கொடுக்க காத்திருக்கிறது. துவக்க வீரர்களான தரங்கா, தில்ஷன் சூப்பர்
பார்மில் மிரட்டுகின்றனர். கேப்டன் சங்ககரா, அனுபவ பேட்ஸ்மேன்களான
ஜெயவர்தனா, சமரவீரா இத்தொடரில் அசத்தி வருகின்றனர். தவிர, கண்டம்பி,
ஆல்-ரவுண்டர் பெரேராவின் அதிரடி ஆட்டம் இலங்கை அணிக்கு சாதகமாக
அமைந்துள்ளது.
ரந்திவ் அசத்தல்:
இலங்கை அணியின்
பந்து வீச்சு சுமாராகத்தான் உள்ளது. இருப்பினும் லேசாக எடை போட முடியாது.
வெலகேதரா, துஷாரா, பெரேரா நம்பிக்கை அளிக்கின்றனர். முரளிதரன் இல்லாத
குறையை ரந்திவ் நிவர்த்தி செய்கிறார். இருப்பினும் திறமையான சுழற் பந்து
வீச்சாளர் இல்லாமல் தவித்து வருகிறது இலங்கை அணி.
வெற்றி யாருக்கு?:
இத்தொடரின்
லீக் போட்டிகள் அனைத்திலும் இலக்கை "சேஸ்' செய்யும் அணியே வெற்றி
பெற்றுள்ளது. ஆடுகளமும் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக
அமைந்துள்ளது. இதனால் இன்றைய பைனலில் "டாஸ்' ஜெயிப்பது மிகவும் முக்கியம்.
ஒருவேளை இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால் 300 ரன்களுக்கு
மேல் "ஸ்கோர்' செய்ய வேண்டும்.
அணிகள் வருமாறு
இந்தியா:
தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், யுவராஜ், கோஹ்லி, ரெய்னா, ரவிந்திர
ஜடேஜா, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், டின்டா, ஜாகிர், நெஹ்ரா,
ஸ்ரீசாந்த், ஹர்பஜன், மிஸ்ரா மற்றும் சுதீப் தியாகி.
இலங்கை: சங்ககரா
(கேப்டன்), தில்ஷன், தரங்கா, ஜெயவர்தனா, சமரவீரா, கண்டம்பி, பெரேரா,
ரந்திவ், லக்மல், துஷாரா, குலசேகரா, சண்டிமால், பண்டாரா, திரிமன்னே,
வெலகேதரா மற்றும் உதாவட்டே.
பாக்ஸ் செய்திகள்:
இந்தியா ஆதிக்கம்
இவ்விரு
அணிகள் மோதிய ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி
வந்துள்ளது. இதுவரை மோதிய 120 போட்டிகளில் இந்தியா 64, இலங்கை 45
போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 11 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
அதிக பட்சம்
இலங்கை
அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 414 (2009, ராஜ்கோட்).
குறைந்த பட்ச ஸ்கோர் 54 (2000, சார்ஜா). இந்தியாவுக்கு எதிராக இலங்கை
அணியின் அதிகபட்ச ஸ்கோர் 411 (2009, ராஜ்கோட்). குறைந்த பட்ச ஸ்கோர் 96
(1984, சார்ஜா).
கோஹ்லி மிரட்டல்
சமீபகாலமாக
அதிரடி எழுச்சி கண்டுள்ளார் இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோஹ்லி.
முத்தரப்பு தொடரில் அசத்தி வரும் இவர், ஒரு சதம், 2 அரை சதம் உட்பட 273
ரன்கள் குவித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான இன்றைய பைனல் போட்டியில்,
இவர் சோபிக்கும் பட்சத்தில் இந்தியா கோப்பை வென்று சாதிக்கலாம். கடந்த 10
ஒரு நாள் போட்டிகளில் (79, 30, 10, 27, 54, 107, 9, 91, 71, 102) 4 அரை
சதம், 2 சதம் விளாசியுள்ளார் கோஹ்லி.
சாதிப்பாரா சங்ககரா?
இலங்கை
கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்
சங்ககரா. இதுவரை 3 ஒரு நாள் தொடர்களில் அணியை வழிநடத்திய இவர், ஒரு முறை
கூட கோப்பை வென்று தரவில்லை. தற்போது வங்கதேசத்தில் நடக்கும் முத்தரப்பு
தொடரின் பைனலில், இவர் அணிக்கு கோப்பை வென்று தர வேண்டிய கட்டாயத்தில்
உள்ளார்.
சாதனை போட்டி
இன்றைய
போட்டி, இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 121 வது ஒரு நாள் போட்டி. இதன்
மூலம் கிரிக்கெட் அரங்கில் அதிக ஒரு நாள் போட்டிகளில் மோதிய அணிகள் என்ற
பெருமை கிடைக்க உள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள்
(120 போட்டி) முதலிடத்தில் இருந்தன.
யுவராஜ் "250'
இலங்கை
அணிக்கு எதிராக இன்று களமிறங்கும் இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு இது
250 வது போட்டி. இதன் மூலம் அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 6 வது
இந்திய வீரர் என்ற பெருமை பெறுகிறார். இதற்கு முன் சச்சின் (440 போட்டி),
டிராவிட் (335), அசாருதின் (334), கங்குலி (308), கும்ளே (269) ஆகியோர்
இந்த இலக்கை எட்டியுள்ளனர்.
இம்மைதானத்தில் இதுவரை...
இன்று
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனல்
மிர்புரில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் நடக்கிறது. இங்கு இவ்விரு
அணிகளும் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இரு
அணிகளும் தலா ஒரு முறை வெற்றி கண்டுள்ளன.
* இம்மைதானத்தில் அதிக ரன்கள்
சேர்த்த இந்திய வீரர்கள் வரிசையில் கவுதம் காம்பிர் (9 போட்டி, 469 ரன்)
முன்னிலை வகிக்கிறார். இவரை தொடர்ந்து கேப்டன் தோனி (9 போட்டி, 385 ரன்),
விராத் கோஹ்லி (4 போட்டி, 273 ரன்), சேவக் (7 போட்டி, 261 ரன்) ஆகியோர்
உள்ளனர்.
* இம்மைதானத்தில் அதிக ரன்கள் சேர்த்த இலங்கை வீரர்கள்
வரிசையில் கேப்டன் சங்ககரா (7 போட்டி, 282 ரன்) முன்னிலை வகிக்கிறார்.
இவரை தொடர்ந்து உபுல் தரங்கா (7 போட்டி, 207 ரன்), சமரவீரா (4 போட்டி, 146
ரன்) ஆகியோர் உள்ளனர்.
* இங்கு அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய
வீரர்கள் வரிசையில் பியுஸ் சாவ்லா (4 போட்டி, 8 விக்கெட்) முன்னிலை
வகிக்கிறார். இவரை தொடர்ந்து யுவராஜ் சிங் (9 போட்டி, 6 விக்கெட்),
பிரவீண் குமார் (3 போட்டி, 5 விக்கெட்), ஜாகிர் கான் (5 போட்டி, 5
விக்கெட்), ஹர்பஜன் சிங் (2 போட்டி, 4 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.
*
இங்கு அதிக விக்கெட் வீழ்த்திய இலங்கை வீரர்கள் வரிசையில் குலசேகரா (5
போட்டி, 10 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். இவரை அடுத்து மெண்டிஸ் (3
போட்டி, 7 விக்கெட்), துஷாரா (6 போட்டி, 7 விக்கெட்), பெரேரா (3 போட்டி, 5
விக்கெட்), வெலகேதரா (3 போட்டி, 5 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.
* இங்கு
இந்திய அணி 9 போட்டியில் விளையாடி 7 வெற்றி, இரண்டு தோல்வியை பதிவு
செய்தது. இலங்கை அணி இங்கு விளையாடிய 7 போட்டியில் 5 வெற்றி, 2 தோல்வியை
பெற்றது.
* இம்மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 8
விக்கெட்டுக்கு 330 ரன் (எதிர்-பாகிஸ்தான், 2008), இலங்கை அணியின்
அதிகபட்ச ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 283 ரன் (எதிர்-இந்தியா, 2010).
*
இங்கு இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கு 283
ரன் எடுத்துள்ளது. இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக அதிகபட்சமாக 9
விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்துள்ளது.
சேவக் உறுதி
முத்தரப்பு
தொடரில் இந்தியா கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் சேவக் பங்கேற்க
வில்லை. தவிர, அணி வீரர்களுக்கான பயிற்சியிலும் அவர் கலந்து கொள்ள வில்லை.
இதனால் அவர் பைனல் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே
நேற்று பயிற்சியில் பங்கேற்ற சேவக் கூறுகையில்,"" அணி நிர்வாகத்திடம்
அனுமதி பெற்று கடந்த 4 நாட்களாக ஓய்வில் இருந்தேன். இன்று நடக்கும்
பைனலில் கட்டாயம் பங்கேற்பேன்,'' என்றார்.
தொடருமா தோனி வெற்றி நடை?
ஒரு
நாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி அதிரடி எழுச்சி கண்டுள்ளது. கடந்த
2008 ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பை தொடருக்குப் பின்,விளையாடிய
அனைத்திலும் கோப்பை வென்று அசத்தியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில்
மட்டும் சோபிக்க வில்லை. கடந்த ஆண்டு மட்டும் 4 தொடர்களில் (இலங்கை
அணிக்கு எதிரான 3 ஒரு நாள் தொடர், ஒரு முத்தரப்பு தொடர்). தற்போது வங்கதேச
முத்தரப்பு தொடரிலும் கோப்பை வெல்ல காத்திருக்கிறது தோனி தலைமையிலான
இந்திய அணி.
"நம்பர்-1' இடத்தை நோக்கி...
கடந்த
ஆண்டு இறுதியில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை (2-0) வென்றதன்
மூலம், டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை இந்திய அணி கைப்பற்றியது. ஒரு
நாள் அரங்கிலும் இப்பெருமையை எட்ட காத்திருக்கிறது இந்தியா. தற்போது
ஆஸ்திரேலிய அணி 130 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்தில் உள்ளது. இந்தியா
இரண்டாவது (123 புள்ளிகள்) இடத்தில் உள்ளது. முத்தரப்பு தொடரில் கோப்பை
வெல்லும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவை நெருங்கலாம்.
அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு
எதிராக சொந்த மண்ணில் நடக்க உள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான வங்கசேத அணி
அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் குணமாகாத நிலையில் மொர்டசா, மீண்டும்
வாய்ப்பை இழந்துள்ளார். இவருக்குப் பதில் சபியுல் இஸ்லாம்
சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் வரும் 17 ம் தேதி சிட்டகாங்கில்
துவங்குகிறது. கேப்டனாக சகிப் அல் ஹசன் நீடிக்கிறார். அணி வருமாறு:
சகிப்
அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ்,
ஜுனைட் சித்திக், அஷ்ரபுல், ரகிபுல் ஹுசைன், மகமதுல்லா, ஷாரியார் நபீஸ்,
சகாடட் ஹுசைன், ரூபெல் ஹுசைன், இனாமுல் ஹுசைன், மகபுபல் ஆலம் மற்றும்
சபியுல் இஸ்லாம்.
Similar topics
» கோப்பை வெல்லுமா இளம் இந்தியா: இன்று இலங்கையுடன் மோதல்
» கோப்பை கைப்பற்றுமா இந்தியா: இன்று இலங்கையுடன் மோதல்
» கோப்பை கைப்பற்றுமா இந்தியா* பைனலில் இன்று இலங்கையுடன் மோதல்
» கோப்பை வெல்லுமா இந்தியா * இன்று 2வது "டுவென்டி-20 சவால்
» தொடரை வெல்லுமா இந்தியா *இன்று இங்கிலாந்துடன் நான்காவது மோதல்
» கோப்பை கைப்பற்றுமா இந்தியா: இன்று இலங்கையுடன் மோதல்
» கோப்பை கைப்பற்றுமா இந்தியா* பைனலில் இன்று இலங்கையுடன் மோதல்
» கோப்பை வெல்லுமா இந்தியா * இன்று 2வது "டுவென்டி-20 சவால்
» தொடரை வெல்லுமா இந்தியா *இன்று இங்கிலாந்துடன் நான்காவது மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|