TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நளினியின் காதல் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன: முருகன் உருக்கமான பேட்டி

Go down

நளினியின் காதல் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன: முருகன் உருக்கமான பேட்டி Empty நளினியின் காதல் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன: முருகன் உருக்கமான பேட்டி

Post by மாலதி Wed Feb 19, 2014 2:45 pm

நளினியின் காதல் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன: முருகன் உருக்கமான பேட்டி 7cf5f61c-27f2-4279-9a6e-bcf74b3d0e6d_S_secvpf


சென்னை, பிப். 19–
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக சிறையில் வாடிய முருகன்-நளினியின் காதல் கதை மிகவும் சோகமயமானது.
1991–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன் முதலாக சந்தித்த இருவரும் 4 மாதத்துக்குள்ளாகவே ஜுன் மாதத்தில் ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று விட்டனர்.
இவர்களின் இல்லற வாழ்வின் சாட்சியாக பிறந்த அரித்ராவுக்கு 22 வயதாகிறது. அவர் லண்டனில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், வேலூர் சிறையில் இருக்கும் முருகன் தனது காதல் வாழ்க்கை பற்றி மனம் திறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–
9 சகோதர-சகோதரிகளுடன் யாழ்ப்பாணம் இத்தாவில் பிறந்த நான், 1987–ம் ஆண்டு மூத்த அண்ணனைத் தொடர்ந்து புலிகள் அமைப்பில் சேர்ந்தேன். வீட்டில் எனக்கு வைக்கப்பட்ட பெயர் ஸ்ரீகரன். புலிகள் அமைப்பில் வைக்கப் பட்ட பெயர் இந்து.
எனது 19–ம் வயதில் 1991–ம் ஆண்டு ஜனவரியில் சென்னை வந்தேன். சென்னையில் எனக்கு நானே சூட்டிக் கொண்ட பெயர் தாஸ்.
இங்கு பாக்கியநாதன் என்ற தமிழ் ஆர்வலர் வீட்டில் தங்க வைக்கப் பட்டேன். பாக்கியநாதனின் அக்கா தான் நளினி. ஆனால், நான் அவர்களது வீட்டில் தங்கி இருந்த போது அவர், தனது தாயாருடன் கோபித்துக் கொண்டு தனது பெரியம்மா வீட்டில் இருந்தார்.
எனது பிறந்ததினமான பிப்ரவரி 8–ந்தேதி முதன்முதலாக நளினியை நான் சந்தித்தேன். அவரைப் பார்த்தவுடன் இனம் புரியாத ஈர்ப்பு வந்தது. ஆனால், அதனைக் காதல் எனச் சொல்ல முடியாது.
எனது பிறந்தநாளில் என்னுடன் வந்தவர்களுக்கு எளிமையான விருந்தளித்தார் நளினி. எப்போதுமே பிறந்தநாளைக் கொண்டாடியிராத எனக்கு அது புதிய அனுபவமாக இருந்தது.
நளினியை தாயுடன் சேர்த்து வைப்பதற்காக அடிக்கடி சந்தித்தேன் . மார்ச் மாதம் பொதுக்கூட்டம் ஒன்றிற்காக மெரினா பீச் சென்றிருந்த போது, கூட்டமாக இருந்த சாலையைக் கடப்பதற்கு உதவினார் நளினி. அந்தப் பிடிப்பிலும், வார்த்தையிலும் அவ்வளவு பிரியம். அன்று வீடு வரை சேர்ந்தே நடந்து வந்தோம். எங்கள் காதலுக்கு இரு தரப்பிலும் அச்சாணி விழுந்த நாள் அது.
காதல் உணர்வு எங்களை ஈர்த்து இருந்தாலும், நளினியின் எதிர்கால வாழ்வு குறித்து நான் கவலைப்பட்டேன். அந்தக் கவலைகளை ஏற்றுக் கொண்ட நளினி, அதற்கான காரணங்களை நிராகரித்தார். காதலில் உறுதியாக இருந்தார். ‘உன்னோடு ஒருநாள் வாழ்ந்தாலும் போதும்‘ என்றார்.
பெரிய கனவுகள், ஆசைகள் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்வின் மீது பெரும் தாகம் இருந்தது. அதை எப்படி அமைப்புக்குச் சொல்வது, நளினி குடும்பம் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணங்களுக்கு இடையே நாட்கள் ஓடியது.
ஒரு பெண்ணாக பிற உயிர்கள் மீது கரிசனத்தோடு இருந்தாரேத் தவிர ஈழப் போராட்டத்துக்கும் நளினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு போராளியைக் காதலித்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் நளினி செய்யவில்லை.
இந்நிலையில், எனக்காக, என் மீதான காதலுக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தணு, சுபா இருவரையும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார் நளினி.
ஏப்ரல் 22–ந்தேதி திருப்பதியில் வைத்து நளினியைத் திருமணம் செய்து கொண்டேன். பல்வேறு நெருக்கடிகள் காரணமாக எங்கள் திருமணத்தை ரகசியமாக வைக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், மே21–ந் தேதி ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், அதிர்ச்சியும் குழப்பமும் சரிவிகிதத்தில் என்னைத் தாக்கின.
ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் தாணு படம் பத்திரிக்கைகளில் வெளியானபோது பீதியில் நானும், நளினியும் உறைந்து விட்டோம்.
நளினி தம்பி பாக்கியநாதனை சி.பி.ஐ கைது செய்தது. நானும் நளினியும் மீண்டும் திருப்பதி சென்றோம். தற்கொலை செய்து கொள்ள நானும் நளினியும் முடிவு செய்திருந்தோம்.
என்னிடம் இருந்த சயனைடு குப்பி தண்ணீரில் நனைந்து பாழாகி விட்டதால், புதிய சயனைடு குப்பி கேட்டிருந்தேன்.
ஆனால், திருப்பதியில் நளினி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. அதனால் மீண்டும் விழுப்புரம் திரும்பினோம். சைதாப் பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கிய எங்களை கைது செய்தனர். சில நாட்களில் எனக்கு, ‘மொட்டைத் தலை’ முருகன் என பெயர் வைத்தார்கள். ரொம்ப வேடிக்கையான பெயர் தான்.
விசாரணை கைதியாக செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது நளினி ஐந்து மாதக் கர்ப்பிணி. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நளினியை நான் பார்த்த போது, நடக்க முடியாமல் தரையில் தவழ்ந்து வந்தார். ‘எனக்கு சாப்பாடு பத்தலை. ரொம்ப பசிக்குது. இப்படியே விட்டா என் பிள்ளை செத்துப் போகும்‘ எனக் கதறினார்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து நளினிக்கு போதிய உணவு கிடைக்கச் செய்தேன். குறித்த தேதிக்கு முன்னதாகவே நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பலவீனமாக இருந்தார்கள். மாற்றுத் துணியோ, உணவோ எதுவுமே எங்களுக்கு இல்லை.
ஒவ்வோரு இரவிலும் நளினி அனுபவித்த அந்தத் துன்பம் என்னால் வந்தது என்று இப்போதும் நினைத்து நினைத்து அழுகிறேன்.
சிறை அதிகாரி ஒருவர் நளினியின் நிலையைப் பார்த்து குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுத்தார். சிறைக்கு வந்த பேரறிவாளனின் அப்பா குயில்தாசன் குழந்தை அரித்ராவுக்கு கொசுவலை வாங்கிக் கொடுத்தார். கேட்க அது சாதாரணமாக இருக்கும். ஆனால், அது அப்போது மிகப் பெரிய உதவி.
அரித்ராவுக்கு இரண்டரை வயதான போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றினார்கள். அங்கே, பசு மாட்டை ஆச்சரியமாகப் பார்த்த அரித்ராவின் எதிர்காலம் குறித்து நளினிக்கு அச்சம் ஏற்பட்டது.
எங்கள் வழக்கிலேயே சக சிறைவாசியாக இருந்த சுசீந்திரனின் தாயார் அரித்ராவை கோவையில் வைத்து வளர்த்தார். சில ஆண்டுகள் கழித்து ஈழம் சென்ற அரித்ரா, பிறகு லண்டன் சென்றாள். தற்போது அவளுக்கு வயது 22.
இன்றும் பாதுகாப்பு என்ற பெயரில் தனிமைச் சிறையில் தான் நானும், நளினியும் வாழ்ந்து வருகிறோம். ஆறு அடி தூர இடைவெளியில் 10 பேர் சூழ்ந்து நிற்க தான் நானும், நளினியும் பேசிக் கொள்வோம்.
நீண்ட கால சிறைவாசிகளுக்கு செவித்திறன் பாதிக்கப்படும். ஆம், எனக்கும், நளினிக்கும் செவித்திறன் பாதிப்பு உள்ளது. செவித்திறன் பாதிக்கப்பட்ட இருவர் ஆறு அடி இடைவெளியில் என்னப் பேசிக் கொள்ள முடியும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்வின் எந்தச் சந்தோஷங்களையும் காணாத எனது வாழ்வில், ஒரு வானவில்லைப் போல மின்னி மறைந்த நளினியுடனான காதல் நினைவுகள் மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கின்றன.
இவ்வாறு முருகன் கூறியுள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இச்சலுகை அன்று ஒரு நாள் மட்டுமே மட்டுமே.
» இளவரசனின் உருக்கமான காதல் கடிதம்
» இந்திய கிரிக்கெட்டின் சுவர் டிராவிட் விடைபெற்றார் : உருக்கமான பேட்டி
» ”என் காதல் உண்மையானது” தற்கொலை செய்த சாய் பிரசாந்தின் உருக்கமான கடிதம்
» லண்டனில் இருந்து நளினி முருகன் மகள் ஹரித்ரா அவர்களின் மனதை உருக்கம் பேட்டி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum