TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


என் கணவரை விசாரணைக்கென இராணுவம் அழைத்து சென்றனர்! இராணுவத்தை அடையாளம் காட்டமுடியும்!: விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவி சாட்சியம்

Go down

என் கணவரை விசாரணைக்கென இராணுவம் அழைத்து சென்றனர்! இராணுவத்தை அடையாளம் காட்டமுடியும்!: விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவி சாட்சியம் Empty என் கணவரை விசாரணைக்கென இராணுவம் அழைத்து சென்றனர்! இராணுவத்தை அடையாளம் காட்டமுடியும்!: விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவி சாட்சியம்

Post by மாலதி Fri Feb 14, 2014 8:23 pm

என் கணவரை விசாரணைக்கென இராணுவம் அழைத்து சென்றனர்! இராணுவத்தை அடையாளம் காட்டமுடியும்!: விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவி சாட்சியம்
என் கணவரை விசாரணைக்கென இராணுவம் அழைத்து சென்றனர்! இராணுவத்தை அடையாளம் காட்டமுடியும்!: விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவி சாட்சியம் 1900140_655106627902554_508502287_n
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு சாட்சியமளித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் றேகானின் (றேகா) மனைவி துளசிகா, இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் தனது கணவர் சரணடைந்த இராணுவ அதிகாரியினை அடையாளம் காட்டமுடியும் என தெரிவித்துள்ளார்.
என் கணவரை விசாரணைக்கென இராணுவம் அழைத்து சென்றனர்! இராணுவத்தை அடையாளம் காட்டமுடியும்!: விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவி சாட்சியம் 1912355_655107034569180_535923896_n
அங்கு தனது சாட்சியத்தில்,

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களை சரணடையுமாறு தெரிவித்து வந்தனர்.

இதன் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் நானும் எனது கணவரும் பிள்ளைகளுமாக இராணுவத்தினரிடம் சரணடைந்தோம்.

எனது கணவரைப் தனியாகவும் என்னை தனியாகவும் விசாரணை மேற்கொண்ட இராணுவத்தினர், எனது கணவரை வைத்தியர் சிவபாலன் மற்றும் விடுதலைப் புலிகளின் துணை மருத்துவப் பொறுப்பாளராக இருந்த மனோஜ் என்பவருடன் ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
என் கணவரை விசாரணைக்கென இராணுவம் அழைத்து சென்றனர்! இராணுவத்தை அடையாளம் காட்டமுடியும்!: விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவி சாட்சியம் 995804_655107104569173_1138712381_n
நாம் தனியாக ஒமந்தைச் சோதனைச் சாவடிக்குக் கொண்டு வரப்பட்ட போது அங்கு ஒரு வாகனத்தில் எனது கணவரும் மேற்குறிப்பிட்ட இருவரும் அமர்ந்திருப்பதை நான் அவதானித்தேன். அப்போது அங்கு விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் தம்மோடு சரணடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் இராணுவத்தினர் அறிவித்தனர்.

அங்கு எனது கணவர் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு ஒரு உயரதிகாரிக்கு முன்னால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதை நான் கண்டேன். அப்போது என்னை வட்டுவாகல் பிரதேசத்தில் விசாரணை நடத்திய அதிகாரியும் எனது கணவர் அங்கே இருக்கின்றார் எனக் காட்டினார்.

எனது கணவருடன் கதைத்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரியை என்னால் அடையாளம் காட்ட முடியாது. ஆனால் வட்டுவாகலில் எனது கணவரை ஒப்படைத்த இராணுவ அதிகாரியை அடையாளம் காட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

எனது கணவர் காணமற்போனதில் இருந்து நான் பல துன்பங்களை எதிர்நோக்கி வருவதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளேன். ஒரு முறை தற்கொலை முயற்சியும் மேற்கொண்டுள்ளேன்.

எனது அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் தான் நான் தற்போது வாழ்ந்து வருகின்றேன் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட நான் விரும்புகின்றேன்.

எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன் இருந்தாலும் அவரை சட்டத்திற்கு முன்பாக நிறுத்துமாறு நான் கோருகின்றேன்.

இதுவரை நான் எனது கணவர் தொடர்பில் எவரிடமும் முறைப்பாடு செய்யவில்லை.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உங்கள் முன்னால் நான் முதற்தடவையாக சாட்சியமளிக்கின்றேன். இதனால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த ஆணைக்குழு எனது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நேவியே எனது கணவரை இன்னமும் வைத்திருக்கின்றது;மனைவி ஒருவர் உருக்கமாக சாட்சியம்
» புலிகளின் முக்கிய தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம்
» பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி!!
» முள்ளிவாய்க்காலில் பொஸ்பரஸ்,கிளஸ்ரர் குண்டுகளை இராணுவம் வீசியது - ஆணைக்குழு முன் சாட்சியம்
» விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum