TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அமெரிக்கா பொறுமை இழக்கின்றது இந்தியா கைவிடுகின்றது ? - சிக்கலில் சிறீலங்கா ஆட்சியாளர்கள்

Go down

அமெரிக்கா பொறுமை இழக்கின்றது இந்தியா கைவிடுகின்றது ? - சிக்கலில் சிறீலங்கா ஆட்சியாளர்கள்  Empty அமெரிக்கா பொறுமை இழக்கின்றது இந்தியா கைவிடுகின்றது ? - சிக்கலில் சிறீலங்கா ஆட்சியாளர்கள்

Post by மாலதி Thu Feb 06, 2014 3:30 pm

அமெரிக்கா பொறுமை இழக்கின்றது இந்தியா கைவிடுகின்றது ? - சிக்கலில் சிறீலங்கா ஆட்சியாளர்கள் 
---------------------------------------------------------
அமெரிக்கா பொறுமை இழக்கின்றது இந்தியா கைவிடுகின்றது ? - சிக்கலில் சிறீலங்கா ஆட்சியாளர்கள்  1656060_714779885213404_1839830677_n



ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் மூன்றாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரும் என்று அறிவித்துள்ள நிலையில், சிறீலங்கா பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்படப்போகும் ஆபத்துக்களை எடுத்து விளக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, இலங்கைப் பயணத்தின் நிறைவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களில் சிறீலங்கா முன்னேற்றம் காட்டவில்லை என்பதால் பொறுமை இழக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கின்றார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

அனைத்துத் தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்களை நடத்தியுள்ளேன். இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சிறீலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால உறவு என்பது, இருநாட்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமல்ல, இருநாட்டு மக்களுக்கும் இடையிலானது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

இலங்கையில் நடந்த சந்திப்புகள் ஆக்கபூர்வமானவையாகவும் ஒத்துழைப்பு சார்ந்ததாகவும் அமைந்தன. நீதி, நல்லிணக்கம், போரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் சிறீலங்கா போதுமான முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்ற அமெரிக்காவின் கவலைகளை சிறீலங்கா அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

போரின் விளைவாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக, சிறீலங்கா சொந்தமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதற்கே அமெரிக்கா எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது. ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களில் சிறீலங்கா முன்னேற்றம் காட்டவில்லை என்பதால் பொறுமை இழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சிறீலங்காவில் மனித உரிமைகளுக்கான மதிப்பு மோசமடைந்து வருகின்றமை, மதச் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்கள், சட்டத்தின் ஆட்சி சீர்கெட்டு - ஊழல்களும் சட்டத்தின் பிடியில் குற்றவாளிகள் சிக்காததன்மையும் சிறீலங்காவின் ஜனநாயக பாரம்பரியத்தின் பெருமையை சீரழிக்கிறது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை ஏற்கமுடியாது.

எனவே சிறீலங்காவில் நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, ஐ.நா மனித
உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் மூன்றாவது தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டு வரும். அந்த தீர்மானத்தில் எந்தவகையான வாசகங்கள் இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. எனினும், அது சிறீலங்கா மக்களின் நட்புணர்வுடன் இசைந்து போவதாக இருக்கும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இருந்து வெளியேறிய அவர், இலண்டன் வந்துள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா மீது அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு பிரித்தானியாவும் அனுசரணை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரின் இலண்டன் பயணம் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது. அங்கு பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சு நடத்திவிட்டு இலண்டனிலிருந்து ஜெனிவாவுக்கு பயணம் செய்யவுள்ளதுடன் அங்கு ஜெனீவா மனித உரிமைப் பேரவைக்கான இந்தியாவின் தூதுவரையும் சந்தித்து பேச்சுநடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி திலிப் சிங்குடன் நிஷா தேசாய் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பாகவே இந்திய பிரதிநிதி திலிப் சிங்குடன் நிஷா பிஷ்வால் கலந்துரையாடவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதுவேளை, ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாத இந்திய மத்திய அரசு, சிறீலங்காவிற்கு உதவ மறுத்துள்ளது என இந்தியாவின் ‘எக்கொனமிக் ரைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை டில்லியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது, அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையில் அனைத்துலக விசாரணை கோரப்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு உதவ வேண்டும் என்று பீரிஸ் கோரியிருந்தார் என இந்திய வெளிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் மனோ நிலையில் இருந்த சல்மான் குர்ஷித், இதற்கு எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அதிகாரிகள் அவருக்குக் கூறியுள்ளனர். அதேவேளை, அமெரிக்காவுடனேயே (வாஷிங்
டனுடனேயே) இதுபற்றி நேரடியாகப் பேசிக் கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சர் பீரிசுக்கு, சல்மான் குர்ஷித் ஆலோசனை கூறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தீர்மானம் தொடர்பாக டில்லி சரியான நேரத்தில் முடிவெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கிரஸ் கட்சி இன்னமும் தமிழ்நாட்டில் எந்தக் கூட்டணியையும் அமைக்கவில்லை. தமிழின அழிப்புப் போரில் சிறீலங்காவிற்கு ஆதரவாக நின்று இனஅழிப்பில் பங்கேற்றதாக கொங்கிரஸ் மீது குற்றம்சாட்டப்படும் நிலையில், சிறீலங்காவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால், தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பதில் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலேயே சிறீலங்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதாகவும் எக்கொனமிக் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொழும்புடன் நட்புடன் இருப்பதற்கும் டில்லி விரும்புவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தப் பயணத்தின்போது மூன்று நாட்கள் இந்தியத் தலைநகர் டில்லியில் தங்கியிருந்து 82 நாடுகளின் தூதுவர்களை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து ஆதரவு கோரியிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. சிறீலங்காவில் தூதரகங்களைக் கொண்டிராத நாடுகளின் தூதுவர்களையே டில்லியில் சந்தித்து, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்து ஆதரவு கோரியுள்ளார்.

எனினும் அந்நாடுகளிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்காமையால், இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் முன்னர் ஊடவியலாளர்களைக்கூடச் சந்திக்காமல் நாடு திரும்பியதாகக் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் இறுக்கமான நிலைப்பாட்டினாலும், இந்தியாவின் கைவிடும் போக்கினாலும் ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேர
வையின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிப்பது சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு சிக்கலுக்குரிய ஒரு விடயமாகவே இருக்கும் என்று கருதப்படுகின்றது. எனவே, அமெரிக்காவின் கடுமையான தீர்மானத்தில் இருந்து தப்பிப்பதற்கான மாற்று வழிகளைத் தேடுவதிலும், பிரேரணையை முறியடிப்பதற்கான வழிகளைக் கண்டறிவதிலும் சிறீலங்கா தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

நன்றி: ஈழமுரசு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அந்தமான் தீவுகளில் இந்தியா சிறீலங்கா கடற்படைகள் ஒத்திகை
» இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ள இரகசிய கடிதம் சிறீலங்கா
» சீன - சிறீலங்கா உறவு மேலும் பலம்பெறுகின்றது: இனியாவது உணருமா இந்தியா?
» சிறீலங்கா தொடர்பில் இந்தியா இரட்டை வேடம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
» மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கிறது இந்தியா: அமெரிக்கா பாராட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum