Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
2ஜி வழக்கில் கனிமொழியை காப்பாற்ற ஆவணங்களில் முறைகேடு: ஆம் ஆத்மி ஆடியோ ஆதாரம்
Page 1 of 1

புதுடெல்லி: 2ஜி ஊழலில் இருந்து தி.மு.க. எம்.பி. கனிமொழியை காப்பாற்ற ஆவணங்களில் முறைகேடு செய்யப்பட்டதாகவும், இந்த ஊழல் கருணாநிதிக்கு தெரிந்தே நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண், இது தொடர்பான உரையாடல் பதிவையும் வெளியிட்டுள்ளார்.
கலைஞர் டி.வி.க்காக, 2ஜி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஷாகீத் பல்வாவிடமிருந்து, 200 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாகவும், இந்த பணம் நேரடியாக வராமல், ஷாகீத் பல்வாவின் டி.பி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் 2ஜி ஊழல் வழக்கை விசாரித்த சிபிஐ, இது தொடர்பான விசாரணையை தொடங்கியதும், இந்த தொகை கடனாக பெறப்பட்டதாக கலைஞர் டி.வி. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலைஞர் டி.வி. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சினியுக் நிறுவனம், கலைஞர் டி.வி.யில் பங்குகள் வாங்குவதற்காக 200 கோடி ரூபாயை அளித்ததாகவும், அது நிறைவேறாத காரணத்தால் வட்டியோடு திருப்பி கொடுக்கப்பட்டதாகவும், இதில் தவறேதும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 2ஜி வழக்கு தொடர்பாக திமுக எம். பி கனிமொழி - ஜாபர் சேட் , சரத்குமார் ரெட்டி - ஜாபர் சேட், சண்முகநாதன் - ஜாபர் சேட் ஆகியோரிடையே நடந்த உரையாடல் பதிவு தொடர்பான உரையாடல் கடந்தவார இறுதியில் வெளியே கசிந்தது.
இதனிடையே டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டிய பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கலைஞர் டி.வி. ஆண்டறிக்கையில் கூறப்பட்ட தகவல்களுக்கு ஏற்ப, லஞ்சமாக பெறப்பட்ட தொகையை கடனாக பெற்றது போன்று காட்டுவதற்காக ஆவணங்களில் சரத் ரெட்டி திருத்தம் செய்ததாக குற்றம் சாட்டியதோடு, இது தொடர்பாக சரத் ரெட்டிக்கும், அப்போதைய உளவுத்துறை ஐஜியான ஜாபர் சேட்டுக்கும் இடையே 13.02.2011. அன்று நடைபெற்றதாக கூறப்படும் உரையாடல் பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த உரையாடல் பதிவு கடந்த வார இறுதியில் கசிந்த நிலையில், இன்று அதன் முழு ஆடியோ பதிவும் தங்களுக்கு கிடைத்து உள்ளதாக கூறி அதனை வெளியிட்டார் பிரசாந்த் பூஷண்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
2ஜி ஊழல் இன்னும் பல ஊழல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது என்பது எங்களுக்கு கிடைத்த பல்வேறு உரையாடல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. திமுக எம். பி கனிமொழி - ஜாபர் சேட் , சரத்குமார் ரெட்டி - ஜாபர் சேட், சண்முகநாதன் - ஜாபர் சேட் ஆகியோரிடையே நடந்த உரையாடல் பதிவு தொடர்பான ஆடியோ ஆதாரம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
நோக்கியா மொபைல் மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த பதிவுகளிலிருந்து 2ஜி ஊழலும், அதனை மூடி மறைப்பதற்கான நடவடிக்கைகளும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரிந்தே நடந்தது என்பது தெரிய வருகிறது. இதற்கு அவரது உதவியாளர் சண்முகநாதன் மற்றும் தமிழகத்தின் அப்போதைய உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர்சேட் உரையாடல்கள் மெய்ப்பிக்கின்றன.
கருணநிதி குடும்பத்தினருக்கும் டாடா நிறுவனங்களுக்கும் இடையே நடந்த பல்வேறு பணபரிவர்ததனைகள் தெளிவாக தெரியவருகிறது. இந்த வழக்கிலிருந்து கனிமொழியை காப்பாற்றும் வகையில் இது தொடர்பான ஆவணங்களை திருத்த முயன்றதன் மூலம் தெரியவருகிறது. இதுதவிர இன்னும் பல ஆவணங்கள் விரைவில் கிடைக்கலாம் என நினைக்கிறேன்.
2ஜி வழக்கு தொடரபான முக்கிய ஆவணங்களில் சரத்ரெட்டி பல திருத்தங்களை செய்திருக்கிறார்.
டாடா நிறுவனம் கனிமொழிக்கு சொந்தமான தொண்டு நிறுவனத்திற்கு முறைகேடாக நன்கொடை என்ற பெயரில் 25 லட்சம் வரை தந்ததும் இந்த பதிவுகளில் இடம்பெற்றுள்ளது. மேலும் டாடா நிறுவனதத்தின் 200 கோடி மதிப்பிலான வோல்டாஸ், பலவிதங்களில் போலியான ஆவணங்களின் மூலம் கைமாறியதும் தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆடியோ ஆதாரம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், 2ஜி வழக்கில் கனிமொழி மற்றும் சரத் ரெட்டிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சிபிஐ மறு விசாரணை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரசாந்த் பூஷண் வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் தி.மு.க.வுக்கு வரும் நாட்களில் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: 2ஜி வழக்கில் கனிமொழியை காப்பாற்ற ஆவணங்களில் முறைகேடு: ஆம் ஆத்மி ஆடியோ ஆதாரம்
2ஜி வழக்கு: பரபரப்பை கிளப்பிய ஜாபர்சேட் - சரத் ரெட்டி உரையாடல் தொகுப்பு! ( க்ளிக் செய்க)
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» புது தில்லி, ஜூலை 5: அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை மத்திய அமைச்சரும் அவரது சகோதரருமான மு.க.அழகிரி திங்கள்கிழமை சந்தித்தார்.
» நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் மன்மோகன் சிங்கிற்கு சம்மன்!
» 2ஜி வழக்கில் யாரையும் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கவில்லை: வி.நாராயணசாமி
» வீரப்பன் மனைவி மீது சுமத்தப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை
» கனிமொழியை ஜாமீனில் விட ஆட்சேபணை இல்லை என்று சி.பி.ஐ. கூறி இருக்கிறது; கருணாநிதி பரபரப்பு பேட்டி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum