Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
2ஜி வழக்கு: பரபரப்பை கிளப்பிய ஜாபர்சேட் - சரத் ரெட்டி உரையாடல் தொகுப்பு!
Page 1 of 1

சென்னை: 2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழியை காப்பாற்ற கலைஞர் டிவி ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண், இது தொடர்பாக தங்களுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படும் ஆடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக எம். பி கனிமொழி - ஜாபர் சேட் , சரத்குமார் ரெட்டி - ஜாபர் சேட், சண்முகநாதன் - ஜாபர் சேட் ஆகியோரிடையே நடந்த உரையாடல் பதிவு அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ள நிலையில்,
சரத்குமார் ரெட்டி - ஜாபர் சேட் இடையேயான உரையாடலில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் மட்டும் இங்கே...
ஷரத் ரெட்டி : சார். அந்த சினியுக் ஆட்கள் டெல்லி மற்றும் மும்பையிலிருந்து அழைத்தார்கள். அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, அனேகமாக இந்த வாரம் வந்து விடுவார்கள். இந்த முறை கேள்விகளோடு வரமாட்டார்கள். வந்து இயக்குநர்களை கைது செய்து விடுவார்கள். அதனால் தயாராக இருக்குமாறு சொன்னார்கள்.
ஜாபர் சேட் : போன முறை கூட அவர்கள் இதைத்தானே சொன்னார்கள்...
ஷரத் ரெட்டி : போன முறை அவர்கள்......
ஜாபர் சேட் : டிவி அலுவலகத்துக்கு வருவார்கள் என்று சொன்னார்கள், நினைவிருக்கிறதா ?
ஷரத் ரெட்டி : ஆமாம்... இப்போதும் சொன்னார்கள். எல்லாம் தயாராக இருக்கிறது. இப்போது கைதுக்கு தயாராகிறார்கள். விசாரணைக்கு அல்ல. கைதுக்கு. ஆகையால் இது குறித்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் சோர்ஸ்களில் விசாரித்து விட்டு, இதை உறுதி செய்யுங்கள்.
ஜாபர் சேட் : நானும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். 50-50 சான்ஸ்தான் இருக்கிறது. யாரும் உறுதி செய்ய மாட்டேன் என்கிறார்கள். வாய்ப்பே இல்லை என்று சொல்கிறார்கள். இரண்டு மூன்று லாஜிக் சொல்கிறார்கள். ஒன்று, மூத்தவர்களைத்தான் முதலில் கை வைப்பார்கள் என்று சொல்கிறார்கள்.
ஷரத் ரெட்டி : கரெக்ட் சார்.
ஜாபர் சேட் : அது நடக்கவில்லை. அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்யலாம். அப்போதுதான் அந்த திசையில் பார்க்க மாட்டார்கள் என்பதற்காக. பரிவர்த்தனை விபரங்களை தெரிவித்து விட்டோம். அவர் (தயாளுஅம்மாள்) இயக்குநர் இல்லை என்பதையும் தெரிவித்து விட்டோம். அவர் பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். மற்றொரு இயக்குநனர் அங்கே இல்லை. இது போன்ற விவகாரங்கள்...
ஷரத் ரெட்டி : சார்.. அந்த பரிவர்த்தனை நடக்கையில் அவர் (தயாளு) அங்கே இருந்தார். அதுதான்...
ஜாபர் சேட் : என்ன...? என்ன...?
ஷரத் ரெட்டி : சார் பரிவர்த்தனை நடந்தபோது அவர் அங்கே ஒரு இயக்குநர்.
ஜாபர் சேட் : உண்மையாகவா ?
ஷரத் ரெட்டி : ஆமாம் சார்.
ஜாபர் சேட் : அன்றைக்கு இல்லை என்று சொன்னீர்களே...
ஷரத் ரெட்டி : சார் அவர் டிசம்பர் மாதத்தில் இயக்குநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் எல்லாம் பழைய தேதிகள் சார். நான் இப்போது உட்கார்ந்து சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஜாபர் சேட் : இல்லை.. டிசம்பரில் ராஜினாமா. அது உள்ளே வருகிறதா என்ன?
ஷரத் ரெட்டி : சார். பணம் 2008ல்தானே வந்தது?
ஜாபர் சேட் : ஓ... இந்த டிசம்பரில்தானே அவர் ராஜினாமா செய்தார். எந்த டிசம்பர்?
ஷரத் ரெட்டி : ஆமாம் சார். இந்த டிசம்பரோ... போன டிசம்பரோ... ஆனால், அவர் அந்த காலகட்டத்தில் இயக்குநராக இருந்தார். நான் ஒரு 100 பக்கங்களை
பின்தேதியிட்டு நேற்றுதான் கையெழுத்திட்டேன். எல்லாவற்றையும் நகல் எடுத்து படித்துக் கொண்டிருக்கிறேன்.
ஜாபர் சேட் : ம்ம்.
ஷரத் ரெட்டி : பிரச்னை என்னவென்றால், நாம் பல விஷயங்களை கேள்விப்படுகிறோம். பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதற்கு தகுந்தாற் போல, ஆவணங்களை திருத்துகிறோம் அதனால் பக்கங்கள் மாற்றப்படுகின்றன.
ஜாபர் சேட் : ம்ம்..
ஷரத் ரெட்டி : கனி மேடம் 2007-ல் இல்லை. 2007-க்குப் பிறகு பெரியம்மா (தயாளு அம்மாள்) இருந்தார்.
ஜாபர் சேட் : பெரியம்மா இருந்தது எனக்குத் தெரியும். அவருக்கு ஆங்கிலமும் தெரியாது, தமிழும் தெரியாது என்பதால் அவர் இருந்தார்.
ஷரத் ரெட்டி : கரெக்ட்... கரெக்ட்...
ஜாபர் சேட் : அவரை இதோடு அவர்களால் இணைக்க முடியாது. இல்லையென்றாலும் கூட, அந்தப் பரிவர்த்தனை உண்மைதானே.. அது வெளிப்படையான பரிவர்த்தனை. காசோலை மூலமாக நடந்தது.
ஷரத் ரெட்டி : அது சரிதான் சார். ஆனால், எந்த கோணத்தில் இது போகப்போகிறது என்பதுதான் கேள்வி.
ஜாபர் சேட் : அதைத்தான் நான் சொல்கிறேன். என்னுடைய ஆட்கள், என் சோர்ஸ்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இது சிக்கலாகக் கூடியது. அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். முதலில் விசாரணை செய்வார்கள். அது நடந்தாலும் கூட, விசாரணையில் அவர்கள் திருப்தி அடையாவிட்டால், இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்று அவர்கள் நினைத்தால்... கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தால்.. அல்லது சாட்சிகளை அழித்து விடுவீர்கள் என்று நினைத்தால், அப்போதுதான் அதற்காக (கைது) போவார்கள்.
ஷரத் ரெட்டி : அதற்குப் பிறகு ரொம்பவும் தீவிரமாக இருப்பார்களே...
ஜாபர் சேட் : ஆமாம்.
ஷரத் ரெட்டி : நான் உங்களிடம் சொல்லி விட்டேன். நீங்கள் சண்முகநாதன் சாரிடம் பேசுங்கள். இதை அவரிடம் சொல்லுங்கள். தமிழில் சொல்லுங்கள். என்னை விட நீங்கள் சொன்னால் பெட்டராக இருக்கும்
ஜாபர் சேட் : சரி... சரி.... நான் சொல்கிறேன். நீங்கள் தலைவரைப் பாருங்கள். இதையும் சொல்லுங்கள்.
இவ்வாறு அந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அடக்குமுறைக்கு பெயர் போன ஜாபர்சேட் சிக்கினார்
» பொதுக்குழுவில் அனல் கிளப்பிய பிரேமலதா
» மெக்ஸிக்கோவில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண பேரணி!
» ஜெகன் மோகன் ரெட்டி கைது
» சர்ச்சையைக் கிளப்பிய ஃஃபோர்டு கார் விளம்பரங்கள் நீக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum