Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சீரடி சாய்பாபா பாடல்கள்
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
சீரடி சாய்பாபா பாடல்கள்
பாபா என்றால் தந்தை
சாயி என்றால் கடவுள்
எங்கள் தெய்வத் தந்தையே
தெய்வத் தந்தையே
விந்தை செய்யும் தந்தையே
தெய்வத் தந்தையே
உன் கோயில் சுற்றி
உன் பாதம் பற்றி
வருவது எங்கள் கடமையே
பெறுவது மன அமைதியே
வஞ்சம் செய்தோரின் எண்ணமது
ஏதும் பலிக்கவேயில்லையே
வள்ளல் உன்பேரை சொல்லசொல்ல
வாயும் வலிக்கவேயில்லையே
உன் புகழ் பேசி
உன் அருள் பேசி
உலகிலே பல கூட்டமே
உன்னிடம் ஒரு நாட்டமே
அன்னம் தானமென அங்கும் இங்கும்
என அன்றாடம் நடக்கும்
எண்ணம் தூய்மையென நீயும் நானும்
வர எல்லாமும் சிறக்கும்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
பாமாலை
பாமாலை
உயிரெனும் நாரெடுத்து
நினைவெனும் மலர்தொடுத்து
பாபா உனக்கு ஒரு பூமாலை !
பாபா உனக்கு ஒரு பாமாலை !
உன்னை தாங்கியது
உவகை வாங்கியது
பாபா உன்னை இந்த மண்ணுலகம் !
பாபா உன்னை இந்த விண்ணுலகம் !
புலர்ந்தது புதுப்பொழுது
மலர்ந்தது மனநிறைவு
பாபா உந்தனது புன்னகையால் !
பாபா உந்தனது திருக்கரத்தால் !
பாத கமலம் தொட்டு
பாவம் கழுவி விட்டு
பாபா உன்னை நிதம் தொழுதிடுவோம் !
பாபா உன் புகழை எழுதிடுவோம் !
தேவைகள் கிடைப்பதற்கு
சேவைகள் தொடர்வதற்கு
பாபா பரிபூரண அருள்வேண்டும் !
பாபா உதாரண நிலைவேண்டும் !
சமதர்மம் நிலைக்க
சகலரும் மகிழ்ந்திருக்க
பாபா வாழுகின்றார் இன்னமும் !
பாபா வழங்குகின்றார் அன்னமும் !
அத்தனை ஊர்களிலும்
உந்தன் திருக்கோயில்
பாபா அமைந்ததொரு அற்புதமே !
பாபா அகிலத்திலே ஆனந்தமே !
பதற்றம் பறந்ததய்யா
பரவசம் பிறந்ததய்யா
பாபா நின்னுருவம் பார்க்கையிலே !
பாபா நின்கோயில் வருகையிலே !
கோடி மலர்களது
நாளும் பூக்கிறது
பாபா உன்தாளில் சேர்ந்திடவே !
பாபா உன்தோளில் சாய்ந்திடவே !
உலகின் பேரொளியே
உணர்வின் மெல்லிசையே
பாபா உனைப்பற்றி உரைத்திடவே !
பாபா உனக்குள்எமை கரைத்திடவே !
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
குருவிற்கு ஆரத்தி
குருவிற்கு ஆரத்தி
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
வழிநடத்து குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
வலியுறுத்து குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
தினம் மலர்வாய் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
சினம் களைவாய் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
வலம் வருவாய் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
பலம் தருவாய் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
இருள்அகற்று குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
துயர் துடைப்பாய் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
நம்பிடுவோம் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
நன்றி சொல்வோம் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
பணிகின்றோம் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
பணிசெய்வோம் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
நல்லவைதரும் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
வல்லமைதரும் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
சரணம் சத் குருவே
ஆரத்தி உனக்கு ஆரத்தி உனக்கு
சரணம் ஜகத் குருவே
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
விரதமுறை
விரதமுறை
விரதம் இருக்கலாம்
விரதம் இருக்கலாம்
ஜாதிமத பேதமின்றி
விரதம் இருக்கலாம்
ஆண்பெண் குழந்தைகளும்
விரதம் இருக்கலாம்
சாயிநாமம் சொல்லிவிட்டு
விரதம் இருக்கலாம்
மஞ்சள்துணி விரித்து
மன்னவனை அமர்த்து
தூயநீரை ஊற்று
துணியாலே துடைத்து
சந்தனம் குங்குமமிட்டு
மஞ்சள்நிற மலரணிந்து
ஊதுபத்தி சூடம் ஏற்று
விரதக்கதையை சொல்லு
பட்டினி அல்லது
பாலும் பழமுண்டு
இருந்தாலே நல்லது - இல்லை
ஒருவேளை சாப்பிடு
மாதவிலக்கு வந்தால்
மங்கையர்கள் கலங்காது
வாரங்கள் நகர்த்தலாம்
விரதத்தை தொடரலாம்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
அறிவாயா பாபா ?
அறிவாயா பாபா ?
கள்ளம் இல்லா பிள்ளை நலத்தை
நீதான் அறிவாயா ?
உள்ளம் சுமக்கும் காயங்களுக்கு
மருந்தாய் வருவாயா ?
இதயம் என்னும் பிச்சை பாத்திரம்
கேட்குது பசியோடு
அருளை அள்ளி பிச்சை தன்னை
அய்யா நீ போடு
நாயாய் நானும் அலைகின்றேனே
கருணை நீ காட்டு
சேயை காத்து தயவை சேர்த்து
நம்பிக்கை ஊட்டு
உண்மை கொண்ட உறவாய் இருந்தால்
அதுதானோ பிழையா ?
உயிர்கள் தம்மை கவர்வது தானே
அவர்கேட்கும் விலையா ?
சோகம் தன்னை சொல்லில் வைக்க
முடியாத நிலையா ?
நாடகம் இங்கே நடக்குது நாளும்
தவறான கலையா ?
கரடாய் முரடாய் மனித மனங்கள்
புரியாத புதிராய்
கடமை மீறிய கவலைகள் சொன்னால்
எப்போதும் எதிராய்
பேச்சும் மூச்சும் வார்த்தை வீச்சும்
என்றென்றும் அனலாய்
மகிழ்ச்சி வேண்டும் மாற்றிட வேண்டும்
வாழ்கையினை புதிதாய்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
எங்கள் பாபா
எங்கள் பாபா
தன்னலமில்லா
தன்னிகரில்லா
தனிப்பெரும் சக்தி
பாபா
விளம்பரமில்லா
வித்தைகளில்லா
வியத்தகு சக்தி
பாபா
உன் நூலை படித்தவன்
காலை பிடித்தவன்
தோற்றது இல்லை
பாபா
பிறர் வாழ்வை கெடுத்தவன்
வருத்தம் கொடுத்தவன்
வாழ்ந்தது இல்லை
பாபா
சீடர்கள் கோடி
சீரடி தேடி
வருகின்றோமே பாபா
ரட்சகனே நீ
அட்சதை தூவி
வாழ்த்திடவேண்டும் பாபா
தியானச் சுடரே
ஞானக் கதிரே
பார்த்திடவேண்டும் பாபா
கருணை மழையால்
கவலைகள் தம்மை
கரைத்திடவேண்டும் பாபா
ஊனம் இல்லா
உள்ளம் எல்லாம்
சாத்தியமா சொல் பாபா
உலவிடும் இந்த
உறவுகள் எல்லாம்
சத்தியமா சொல் பாபா
ஆசைகள் போடும்
ஆட்டம் எல்லாம்
அடங்கிவிடாதோ பாபா
தீயவர் வீசிடும்
தீமைத் தீயது
தீய்ந்துவிடாதோ பாபா
வெள்ளை உடையில்
பிள்ளை நடையில்
எல்லை கடந்தவன் பாபா
காலைச் சூரியன்
மாலைச் சந்திரன்
எல்லாம் எங்கள் பாபா
பசுவின் மடியினில்
சுரக்கும் அருளெனும்
பாலும் எங்கள் பாபா
வாசப் பூவில்
வாசம் செய்யும்
தேனும் எங்கள் பாபா !
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
பிருந்தாவனம்
பிருந்தாவனம்
செய்வோம் தவம்
பெறுவோம் வரம்
சாயி சாயி என்று சொல்ல
பரவும் சுகம்
நந்த வனம்
பூங்கா வனம்
சீரடி தான் எங்களுக்கு பிருந்தாவனம்
யாமிருக்க பயமது
வேண்டமென்றாய்
யாவருக்கும் நலமது
தருவேனென்றாய்
கோரிக்கை எதுவென்று
நீயும் கேட்டாய்
நம்பிக்கை கொண்டோர்க்கு
முகவரி தந்தாய்
விண்ணுலகம் கலந்து
கண்ணீர் தந்தாய்
மண்ணுலகை மறந்து
ஏன் நீ சென்றாய்
பூவுலகில் மறுபடியும்
என்று வருவாய்
புன்னகைகள் எப்போது
நீயும் தருவாய்
செய்வோம் தவம்
பெறுவோம் வரம்
சாயி சாயி என்று சொல்ல
பரவும் சுகம்
நந்த வனம்
பூங்கா வனம்
சீரடி தான் எங்களுக்கு பிருந்தாவனம்
யாமிருக்க பயமது
வேண்டமென்றாய்
யாவருக்கும் நலமது
தருவேனென்றாய்
கோரிக்கை எதுவென்று
நீயும் கேட்டாய்
நம்பிக்கை கொண்டோர்க்கு
முகவரி தந்தாய்
விண்ணுலகம் கலந்து
கண்ணீர் தந்தாய்
மண்ணுலகை மறந்து
ஏன் நீ சென்றாய்
பூவுலகில் மறுபடியும்
என்று வருவாய்
புன்னகைகள் எப்போது
நீயும் தருவாய்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
நாயகன்
நாயகன்
சீரடி வாழும் துறவி
ஈரடி தொட்டு தழுவி
விழிகளிலே விழிகளிலே ஈரமே
விலகுதம்மா விலகுதம்மா பாரமே
அருளை வழங்கும் அருவி
அகிலத்தில் மேன்மை தருவி
வருவதிலே வருவதிலே இன்பமே
விலகிடுமே விலகிடுமே துன்பமே
அருள்மழையே கருணைக்கடலே
அற்புதப் பேரொளியே
பொருள்தருவாய் புகழ்தருவாய்
உதவிட உயர்ந்திடவே
கனவிலும் நனவிலும் வருகைசெய்
கடமைகள் நன்றாய் நடத்திவை
பணிகளை காத்திடு பிணிகளை போக்கிடு
பக்தனை வாழ்த்திடு
பற்றியதே பரவியதே
பரம்பொருளின் புகழே
ஆகாரம் ஆதாரம்
நீயே அவதாரம்
நோய்கள் நீக்கும் மருத்துவன்
உயிர்கள் காக்கும் காவலன்
ஏணிகள் தருபவன் ஏழைக்கு சேவகன்
எங்களின் நாயகன்
சீரடி வாழும் துறவி
ஈரடி தொட்டு தழுவி
விழிகளிலே விழிகளிலே ஈரமே
விலகுதம்மா விலகுதம்மா பாரமே
அருளை வழங்கும் அருவி
அகிலத்தில் மேன்மை தருவி
வருவதிலே வருவதிலே இன்பமே
விலகிடுமே விலகிடுமே துன்பமே
அருள்மழையே கருணைக்கடலே
அற்புதப் பேரொளியே
பொருள்தருவாய் புகழ்தருவாய்
உதவிட உயர்ந்திடவே
கனவிலும் நனவிலும் வருகைசெய்
கடமைகள் நன்றாய் நடத்திவை
பணிகளை காத்திடு பிணிகளை போக்கிடு
பக்தனை வாழ்த்திடு
பற்றியதே பரவியதே
பரம்பொருளின் புகழே
ஆகாரம் ஆதாரம்
நீயே அவதாரம்
நோய்கள் நீக்கும் மருத்துவன்
உயிர்கள் காக்கும் காவலன்
ஏணிகள் தருபவன் ஏழைக்கு சேவகன்
எங்களின் நாயகன்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
எங்களுக்கு கிழக்கு
நீ தானே எங்களுக்கு கிழக்கு
எங்களுக்கு கிழக்கு
நீர் ஊற்றினாய் எரியுது விளக்கு
கொதிகலனில் கைகள் கொண்டு
சமைத்தாய்
மதங்களை தாண்டி மனிதம்
அமைத்தாய்
யாசகம் எடுத்தாய் தர்மமும் கொடுத்தாய்
யாரய்யா என்றால் நீயும் சிரித்தாய்
கோடானுகோடி இதயம் பிடித்தாய்
பஞ்ச பூதங்களும் உன் கட்டுக்குள்
பக்தரெல்லாம் உன் கட்டளைக்குள்
பாபா பாபா என்று உருகி
வருகின்றார்
பாவம் நீங்கி பாதை கண்டு
எழுகின்றார்
எங்கெங்கு காணினும் உன் கோயில்கள்
அங்கங்கு தர்மத்தின் வாயில்கள்
நாளும் உந்தன் தலத்தை நோக்கி
வருகின்றார்
குருவே உன்னை கண்ணீர் மல்க
தொழுகின்றார்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
விரதமிரு...
விரதமிரு...
விரதமிரு விரதமிரு வியாழன் தோறும்
விருப்பங்களும் திருப்பங்களும் உன்னை சேரும்
உள்ளத்தில் அவன் நினைவை நீயும் ஏற்று
ஊதுவத்தி தீபம்தனை நீயும் ஏற்று
மஞ்சள்நிற மலர்களையே நீயும் சூடு
மகனாவான் திருப்புகழை நீயும் பாடு
சந்தனமும் குங்குமமும் அவனுக்கு சாற்று
சாயிநாதன் நாமாவளி சொல்லிப் போற்று
பாலும் கொஞ்சம் பழங்களும் நீயும் உண்ணு
பாபாவின் திருநாமம் நீயும் எண்ணு
நிவேதனம் செய்ததை பிறருக்கு கொடு
நிம்மதிகள் வந்துகூடும் கவலையை விடு
வாரங்கள் ஒன்பது விரதம் நீ இரு
வரங்கள் தரும் சுகங்களை நீயும் பெறு
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
சாயிநாதா
சாயிநாதா
கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரை துடைக்கின்ற
விரலானவன் நீ விரலானவன்
நிறைகளை பார்க்கின்ற குறைகளை கேட்கின்ற
குரலானவன் நீ குரலானவன்
புத்தியை சுத்தி செய்தோம்
புத்தி புதிதானதே
புத்தியில் பக்தி சேர்த்தோம்
புத்தி மணமானதே
நீயே எங்கள் துணைவன்
நீயே எங்கள் தலைவன்
நீயே எங்கள் இறைவன்
சாயிநாதா
சாயிநாதா
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
சகலமுமே நீயானாய்
சகலமுமே நீயானாய்
எண்ணமெல்லாம் நிறைந்தவன்
வண்ணமெல்லாம் வரைந்தவன்
எங்களுக்கு என்றுமே தாயுமானவன்
சிந்தையிலே வாழுகின்ற தந்தையானவன்
சகலமுமே நீயானாய் சாயிநாதா
சத்தியமும் சந்தோஷமும் யாவும்நீ தா
உள்ளமெனும் தாள் தனிலே
உன்பெயர் எழுதிவிட்டோம்
உதியின் மகிமைதனை
உலகுக்கு சொல்லிவைத்தோம்
உன் நாமம் சொல்லசொல்ல
உதட்டுக்கு வலிக்கவில்லை
உந்தன் நினைவை விட
வேறேதும் பிடிக்கவில்லை
கண்கள் கலங்கினால்
ஆறுதல் உன்மடிதான்
கைகள் எப்பொழுதும்
தொழுவது உன்னடிதான்
நிழலாய் இருக்குதையா
உந்தன் சந்நிதிதான்
நித்தமும் கிடைக்குதய்யா
நெஞ்சுக்கு நிம்மதிதான்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
சீரடி பாபா
சீரடி பாபா
விதியாலும் மதியாலும் சதியாலும் இங்கே
விளைவுகள் கோடி கோடி
அலைந்தோமே கலைந்தோமே தொலைந்தோமே நாங்கள்
வழிதனை தேடி தேடி
யாரிடம் சொல்வது
யாரிடம் செல்வது
எங்களுக்கு ஏது கதி !
யாரிங்கு உண்மையாய் ?
யாரிங்கு வன்மையாய் ?
உன்னிடம் சரணாகதி !
சீராக்கு எம்வாழ்வை சீரடி பாபா !
சிறப்பாக்கு எம்வால்வை சீரடி பாபா !
ஆகாயம் நீதானே சீரடி பாபா !
ஆனந்த மழையாய்வா சீரடி பாபா !
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
யாரவன் ???
யாரவன் ???
புண்ணியம் செய்ததொரு வேப்பமரம்
புனிதனை நிழல்தந்து பார்த்தமரம்
யாருடன் பேசாமல் யாரென்று கூறாமல்
இரவையும் பகலையும் கடந்தான் ஒருவன்
குளிரிலும் வெயிலிலும் நடந்தான் ஒருவன்
யாரவன் அவன் யாரவன்
உலகினை காக உதித்தவன்
உள்ளத்தில் தம்மை பதித்தவன்
பாபா பாபா பாபா பாபா
பாபா பாபா
பாபா பாபா பாபா பாபா
சாயி பாபா
ஆண்டியா ? இல்லை அரசனா ?
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
கண்ணனா ? தத்தாத்ரேயனா ?
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
ஆதியும் அந்தமும் அற்றவன்
அகிலத்தை ஆளுகின்ற கொற்றவன்
பாபா பாபா பாபா பாபா
பாபா பாபா
பாபா பாபா பாபா பாபா
சாயி பாபா
யோகியா ? இல்லை தியாகியா ?
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
நாடோடியா ? வழிப்போக்கனா ?
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
நன்மைகள் ஏராளம் புரிந்தவன்
நம்மையும் நன்றாக அறிந்தவன்
பாபா பாபா பாபா பாபா
பாபா பாபா
பாபா பாபா பாபா பாபா
சாயி பாபா
புண்ணியம் செய்ததொரு வேப்பமரம்
புனிதனை நிழல்தந்து பார்த்தமரம்
யாருடன் பேசாமல் யாரென்று கூறாமல்
இரவையும் பகலையும் கடந்தான் ஒருவன்
குளிரிலும் வெயிலிலும் நடந்தான் ஒருவன்
யாரவன் அவன் யாரவன்
உலகினை காக உதித்தவன்
உள்ளத்தில் தம்மை பதித்தவன்
பாபா பாபா பாபா பாபா
பாபா பாபா
பாபா பாபா பாபா பாபா
சாயி பாபா
ஆண்டியா ? இல்லை அரசனா ?
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
கண்ணனா ? தத்தாத்ரேயனா ?
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
ஆதியும் அந்தமும் அற்றவன்
அகிலத்தை ஆளுகின்ற கொற்றவன்
பாபா பாபா பாபா பாபா
பாபா பாபா
பாபா பாபா பாபா பாபா
சாயி பாபா
யோகியா ? இல்லை தியாகியா ?
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
நாடோடியா ? வழிப்போக்கனா ?
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
யாரவன் அவன்
யாரவன் அவன்
யாரவன்
நன்மைகள் ஏராளம் புரிந்தவன்
நம்மையும் நன்றாக அறிந்தவன்
பாபா பாபா பாபா பாபா
பாபா பாபா
பாபா பாபா பாபா பாபா
சாயி பாபா
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
மகானே
மகானே
மகானே உன் மடி கொடு
நான் சோகம் சொல்லி அழவேண்டும்
மகானே தலை கோதிடு
நான் வாழ்வு பெற்று எழவேண்டும்
பயனுற வாழ - பயன்
பலரையும் சூழ
பகவானே நீ உதவிடு
பகலவனே நீ ஒளிகொடு
மதங்களை கடந்தவன் நீ
மனங்களில் நிறைந்தவன்
லீலைகள் புரிந்தவன் நீ
வேளைகள் அறிந்தவன்
காடுமலைகளில் அலைந்தவன்
காட்சியில் நீ எளியவன்
உலகம் முழுதும் உன்னை புகழும்
நீதானே என் இறைவன்
பாடல்கள் பாடினாய் நீ
ஆடல்கள் ஆடினாய்
உணவினை நாடினாய் நீ
உணவினை வழங்கினாய்
கோபத்தில் நீ உணர்த்தினாய்
நோய்களை நீ நீக்கினாய்
உலகம் முழுதும் உன்னை புகழும்
நீதானே என் தாயானாய்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சாய்பாபா பாடல்கள்
» சீரடி சாய்பாபாவிற்கு 51 தங்கக் காசு மாலை காணிக்கை
» சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடம்: புட்டபர்த்தியில் 144 அமல்
» சத்ய சாய்பாபா - வாழ்க்கை குறிப்புகள்
» சத்ய சாய்பாபா மகா சமாதி திறப்பு : புட்டபர்த்தியில் பக்தர்கள் குவிந்தனர்
» சீரடி சாய்பாபாவிற்கு 51 தங்கக் காசு மாலை காணிக்கை
» சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடம்: புட்டபர்த்தியில் 144 அமல்
» சத்ய சாய்பாபா - வாழ்க்கை குறிப்புகள்
» சத்ய சாய்பாபா மகா சமாதி திறப்பு : புட்டபர்த்தியில் பக்தர்கள் குவிந்தனர்
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum