TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டங்கள் என்ன?: நரேந்திர மோடி விளக்கம்...What are the future plans for India?: Narendra Modi description ...

Go down

இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டங்கள் என்ன?: நரேந்திர மோடி விளக்கம்...What are the future plans for India?: Narendra Modi description ... Empty இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டங்கள் என்ன?: நரேந்திர மோடி விளக்கம்...What are the future plans for India?: Narendra Modi description ...

Post by Tamil Mon Jan 27, 2014 7:08 am

இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டங்கள் என்ன?: நரேந்திர மோடி விளக்கம்...What are the future plans for India?: Narendra Modi description ... 1601039_720428257976669_1324808110_n

காந்திநகர், ஜன.27-

இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டங்கள் குறித்து நரேந்திர மோடி தனது வலைத்தளத்தில் விளக்கி உள்ளார். 

பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, குடியரசு தினத்தையொட்டி தனது வலைத்தளத்தில் எழுதி இருப்பதாவது:-

நாம் 65-வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். 64 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் நமது நாடு குடியரசு ஆனது. அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. இந்த நாள் தேசிய வலிமை நாள், சுய நம்பிக்கை நாள்.

'மோடி எல்லாம் சரிதான், இந்தியாவை பற்றிய உங்கள் எதிர்கால திட்டம் என்ன?' என்று பலரும் நீண்ட தலையங்கங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக என்னை கேட்டிருக்கிறார்கள். 

ஒரு தனி மனிதன் அல்லது ஒரு பொருள், இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டத்தை தனதாக உருவாக்கி விட முடியாது என்பதை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவை பற்றிய திட்டம் என்ற வகையில், நான் சில அம்சங்களை பகிர்ந்துகொள்ளக்கூடிய வாய்ப்பினை கடந்த வாரம் பாரதிய ஜனதா தேசிய கவுன்சில் கூட்டம் வழங்கியது.

குடியரசு தினம் நம் ஒவ்வொருவரிடமும் வலிமையான உணர்ச்சிகளை நிரப்புகிறது. இந்தியாவின் ராணுவ பலத்தை உலகுக்கு அணிவகுப்பு காட்டுகிறது. அதை காணும் போது மனம் நிறைகிறது. 

இந்தியாவை குறித்த திட்டம் இன்னொரு முறை நம்மை வீர வணக்கம் செய்ய வைக்கிறது. அது சகிப்புத்தன்மைக்காக மட்டுமல்ல, எல்லா அம்சங்களிலும் பொருந்தும். தனிப்பட்ட ஒவ்வொரு மனிதரின் உணர்வுகளும் மதிக்கப்படும். நமது பெண்கள், ஆண்கள் ஆகிய இருபாலாரின் சுயநலமற்ற தேசப்பற்றும் சமநிலை கொண்டவை. 

இந்த நாள் நமது சிறப்பு வாய்ந்த கடந்த காலத்தை நினைத்துப்பார்க்க வைக்கிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாபெரும் வீரர்கள், வீராங்கனைகளின் தியாகத்தை நினைத்துப்பார்ப்போம். நாம் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் அமைந்துள்ள அரசியல் சாசனத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களை நினைத்துப்பார்ப்போம்.

இந்தியாவை அதன் வடிவில் உருவாக்கிய புனிதமான அரசியல் சாசனத்தின் உள்ளடக்கம் குறித்த நமது நம்பிக்கையை, உறுதியை புதுப்பித்துக்கொள்வோம். பாபா சாகேப் அம்பேத்காருக்கு நமது மரியாதையை செலுத்துவோம். அவரது பங்கு பணிகள் என்றென்றும் நினைவுகூரத்தகுந்தவை. ஒரு காலத்திலும் மறக்க முடியாதவை.

முக்கியமாக இந்த நாள் சுயபரிசோதனை செய்வதற்கான நாள் ஆகும். இந்திய குடியரசு எதற்காக? அதன் அர்த்தம் என்ன? கடந்த 70 ஆண்டுகளில் அது எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது? வரக்கூடிய காலத்தில் அது என்ன செய்ய வேண்டிய அவசியம் உள்ளது? இதையெல்லாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

சத்தியம், சமாதானம், அகிம்சை ஆகிய மூன்றும்தான் இந்தியாவுக்கான திட்டத்தின் மையப்பொருள். நமது சமய நூல்கள் சத்யமேவ ஜெயதே என்று கூறுகின்றன. அது, வாய்மையே வெல்லும் என்பதாகும். நீதியின் சக்கரங்கள் வேகமாக சுழலுகிற இந்தியா, ஒவ்வொரு இந்தியனுக்கும் வகுப்பு, சாதி, இனம் பற்றி பார்க்காமல் சமத்துவம் ஆகியவற்றுடன் கூடிய இந்தியாவை உறுதி செய்ய உறுதி பூண்டுள்ளேன். 

அப்படிப்பட்ட இந்தியாவில் அநீதி செல்லுபடியாகாது. அதே போன்று அகிம்சை என்னும் கொள்கை நினைவுக்கு எட்டாத காலத்தில் இருந்து நமது தேசத்தை ஆசீர்வதித்து வந்திருக்கிறது.

இது புத்தர், மகாவீரர், மகாத்மா காந்தி வாழ்ந்த பூமி. அகிம்சை தான் மிக உயர்ந்த தர்மம். இதைத்தான் நமது சமய நூல்கள் கூறுகின்றன. இந்தியாவுக்கான திட்டத்தில் வன்முறைக்கு எந்த வகையிலும் அல்லது ரூபத்திலும் இடம் கிடையாது. 

இந்தியாவுக்கான திட்டம், சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கையான, நிச்சயமான இந்தியா என்ற கனவை நனவாக்கும். இந்தியாவுக்கான திட்டம், அனைவரும் வளத்துடனும், சந்தோஷத்துடனும், நோய் நொடியின்றி வாழும் வாய்ப்பினை, நாட்டத்தினை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு இந்தியனும் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கும் வாய்ப்பை தந்து, அதிகாரம் வழங்குவதாக அமையும். பெண்களின் பாதுகாப்பை, கண்ணியத்தை நாம் ஒரு சமூகமாக சேர்ந்து உறுதி செய்யாதவரையில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் என்ற கனவை சாதித்துக்காட்ட முடியாது. 

நமது மூதாதையர் பெண் தெய்வங்களை பல நூற்றாண்டு காலமாக வழிபட்டு வந்துள்ளனர். அப்படி இருக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்? பெண்கள்தான் இல்லத்தரசிகள். அவர்கள் தேசத்தையும் நிர்மாணிப்பவர்கள் என்று நாம் பார்க்க வேண்டும். 

ஒரு மோசமான கூட்டாட்சியால் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியப்படாது. நமது அரசியல் சாசனத்தை நிர்மாணித்தவர்கள், மத்திய அரசும், மாநில அரசுகளும் முன்னேற்றப்பாதையில் சம அதிகாரம் பெற்ற வலுவான கூட்டாட்சி அமைப்பினை கனவு கண்டனர். 

யாரும் பெரியவர்கள் அல்ல. யாரும் சிறியவர்களும் அல்ல. மத்திய அரசின் கருணையில் மாநில அரசுகள் வாழ வேண்டும் என்ற மனோபாவத்தை நாம் மாற்ற வேண்டும். நமது நாட்டின் கஜானாவில் உள்ள பணம், நாட்டு மக்களின் பணம்தான்.

அனைத்து முதல்-மந்திரிகள், பிரதமர், மாநில மந்திரிகள், மத்திய மந்திரிகள் கூட்டாக உழைப்பதின் பலனாக நாட்டின் முன்னேற்றம் அமைய வேண்டும் என்று நாங்கள் கனவு காணுகிறோம். உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் கூட, உடன் குழுவாக இணைந்து உழைத்து, வலுவான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் நரேந்திர மோடி எழுதி உள்ளார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்: நரேந்திர மோடி பேச்சு
» இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திர மோடி
» சிறையில் படித்து பட்டதாரி ஆனார்கள்: விடுதலையாகும் 3 பேரின் எதிர்கால திட்டங்கள்
» பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்
» சோனியாவின் வாய்க்கு சர்க்கரை போட வேண்டும்: மோடி உற்சாகம்...Sonia to put sugar in the mouth: Modi excited ...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum