Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கடற்கோள்....மகா ஜலபிரளயம் பற்றிய நூல்கள் குறிப்பிடும் ஒற்றுமைகள்....
Page 1 of 1

பல லட்சம் வருடங்களுக்கு முன்பு தற்போது தனித்தனியாக உள்ள ஆஸ்திரேலியா அண்டார்ட்டிகா தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆகிய பகுதிகள் ஒன்றாக இருந்தது என்றும் அதற்கு பெயர்தான் லெமூரியா கண்டம் என்றும் புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்
தொடர்ச்சியான மிகப்பெரும் கடல் கோள்களால தாக்கப்பட்டு அந்தக் கண்டம் பல கூறுகளாகப் பிரிந்து விட்டது என்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இதற்கு ஆதாராமாக ஆஸ்திரேலியா அண்டார்டிகா கண்டங்களில் உள்ள மலைத் தொடர்களின் அமைப்புகள் ஒரே மாதிரி இருப்பதாகவும் அதற்கு இரு கண்டங்களில் உள்ள கற்களின் அமைப்பை நுண்ணியமாக ஆராய்ந்த பின்பே இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
லெமுரியா கண்டம் இருந்ததற்கான ஆதாரமும் அது மிகப் பெரும் கடல் சீற்றத்தால் அழிந்து போய் இருப்பதற்கான ஆதாரமும் 19ம் நூற்றாண்டில்தான் கிடைத்தது என்று பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் கூறினாலும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே மிகப்பெரும் கடல் சீற்றம் ஏற்பட்டு பெரும் நிலப்பரப்பு ஒன்று அழிந்து போனதாக பாரதத்தின் பல நூல்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன.
மாபெரும் ஜலப் பிரளயம் பூமியில் ஏற்பட்டது. உலகெங்கும் உள்ள உயிர்கள் நீரில் மூழ்தி அழிந்த போது விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து மனுவையும் மற்றைய ஜீவன்களின் ஒவ்வொரு ஜோடியையும் ஒரு பேழையில வைத்து ரட்சித்ததாக மச்ச புராணம் கூறுகிறது.
மேலும் இந்தக் கடல் கோள் பற்றி அதர்வண வேதத்தில் மிக விரிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. அதர்வண வேதத்தில் கூறப்பட்டு இருக்கின்ற கருத்துக்களே சுமேரியர்களின் பிரளயக் கதையாக இருக்கிறது என்று டாக்டர் ஹேன் என்பவர் சுறுகிறார். வேத நூலில் பிரளய காலத்தில் சத்ய வரத மனு என்பவர் உயிர்த்தொகுதிகள் அழிந்து போகாமல் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.
பாகவத்தில் கடல்கோள் பற்றி வேதத்திலும் மச்சபுராணத்திலும் கூறப்பட்ட விஷயங்களே இருந்தாலும் உயிர் வகைகளைக் காப்பாற்றியது திராவிட பதி என்ற குறிப்பு உள்ளது. சத்ய வரத மனுவைப் பற்றிய விளக்கத்தைப் பார்க்கும்போது அவன் பொதிகை மலையில் தவம் செய்தான் என்று இருக்கிறது. திராவிட பதியும் பொதிகை மலையில் தான் இருந்தான் என்று பாகவதம் கூறுகிறது. எனவே இந்த இரண்டு பெயர்களும் ஒரே நபருக்கு உடையதுதான் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி உள்ளது.
தொல் பழமை காலத்தில் புகழ் பெற்ற நகரமாக விளங்கிய பாபிலோனில் ஜலப்பிரளயத்தைப் பற்றி ஒரு கதை உண்டு. அது கி.மு. 300ம் ஆண்டுதான் எழுத்து வடிவம் பெற்றது. பெரோஷஸ் என்பவர் இதை எழுதி வைத்தள்ளார். அதில் அணு என்பவன் பிரளயத்தின் போது உயிர்களை ரட்சித்து பாபிலோனியர்க்கு விவசாயம் செய்வது உட்பட நாகரீகங்கள் பலவற்றைக் கற்றுக் கொடுத்ததோடு மனிதத் தலைமுறைகளின் சட்டதிட்டங்களையும் வகுத்துக் கொடுத்தான் எனக் கூறப்படுகிறது. வேதங்களில் வருகின்ற மனுவிற்கும் பெரோஷஸ் நூலில் குறிப்பிடப்படும் பிரளய காட்சிக்கும் அதிக வித்யாசம் இல்லை.
இம்மக்களின் இந்த நம்பிக்கை கதையில் மேலும் சில தகவல்கள் கிடைக்கிறது. பூமியில் ஜனப்பெருக்கம் அதிகமாகி விட்டதனால் அது பாரம் தாங்காமல் திணறியது. அப்போது ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மண்ணிற்குள் இருந்து தண்ணீர் கொப்பளித்து பிரவாகமாக வெளிப்பட்டது. நிலப்பகுதி முழுமைக்கும் தண்ணீரின் அளவு ஏறிக்கொண்டே சென்றதனால் பாகாக்காவும் அவனது மனைவியும் கையில் கிடைத்த உயிரினங்களை எல்லாம் பிடித்து ஒரு பேழையில் அடைத்துக் கொண்டு தாங்களும் அதில் ஏறி ஜலப்பிரளயத்திலிருந்து தப்பி தண்ணீர் வடிந்தபின் பிரஜா உற்பத்தியில் ஈடுபட்டனர்.
ஐரோப்பாவில் தென்கிழக்கு தீபகற்கபகுதியில் உள்ள வரலாற்றுப் பெருமைமிக்க கிரேக்க நாட்டிலும் இதே போன்ற ஒரு கதை உள்ளது. அந்தக் கதையில் டியூக்கேளியன் என்று ஒரு மனிதன் இருந்ததாகவும் அவனுக்கு பிர்ரஹா என்ற மனைவியின் மூலம் ஹெலின் என்ற மகன் இருந்ததாகவும் இந்த மகன் காலத்தில் உலகெங்கும் தீமை கோரமாகத் தலைவிரித்து ஆடியதாகவும் இதனால் கிரேக்கர்களின் பெரிய தெய்வம் கோபம் கொண்டு பூமியில் பெரும் மழையை ஏற்படுத்தியதாகவும் இதனால் வெள்ளம் நாலாபுறமும் சூழ்ந்து உயிர்களைக் கபளிகரம் செய்ததாகவும் ஹெலினும் அவனது இளம் மனைவியும் படகில் தப்பி பூமியின் தெற்குப் பகுதிக்குச் சென்று மனித உற்பத்தியை ஆரம்பித்தாகவும் கிரேக்கக் கதை கூறுகிறது.
கிறிஸ்தவ வேதமான விவிலியத்திலும் மகாபிரளத்தைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகின்றது என்றும் அவன் இருதயத்தின் நினைவுகளில் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்திற்கு விசனமாய் இருந்தது.
அப்பொழுது கர்த்தர் நான் சிருஷ்டித்த மனுஷனை பூமியின் மேல் வைக்காமல் மனுஷன் முதற்கொண்டு மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கின்றனவைகளை நிக்கிரஹம் பண்ணுவேன். நான் அவர்களை உண்டாக்கினது. எனக்கு மனஸ்தாபமாய் இருக்கிறது என்றார்.
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி மாமிசமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது. அவர்களாவே பூமி கொடுமையினால் நிறைந்தது. நான் அவர்களை பூமியோடு கூட அழித்துப் போடுவேன்.
நீ கோப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உருவாக்கு. அந்தப் பேழையிலே அறைகளை உண்டு பண்ணி அதை உள்ளும் புறமும் பிசின்களால் பூசு என்றார்.
கர்த்தரின் கடடளைபடி நோவா கோப்பேர் மரத்தால் பேழையைக் கட்டி முடித்து அதற்கு உள்ளும் புறமும் பிசின் பூசினார். அந்தப் பேழையின் அளவு கர்த்தரின் உத்தரவுபடி 300 அடி நீளமும் 50 அடி அகலமும் 30 அடி உயரமும் உள்ளதாக இருந்தது.
பேழை செய்யப்பட்ட பின்பு அதனுள் சகல வித மாமிசமான ஜீவன்களில் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி வீதமும் நோவாவும் அவர் குடும்பத்தினரும் பேழைக்குள் பிரவேசித்தனர் சகல ஜீவன்களிலும் மனிதர்களிலுமாக பேழைக்குள் ஏறிக்கொண்ட ஏழு நாட்களுக்குப் பிறகு நோவாவின் 600வது வயதில் இரண்டாம் மாசத்தில் 17ம் தேதியில் மகா பாதாளத்தின் ஊற்றுக் கண்களும் பிளந்தன. வானத்தின் மதகுகளும் திறவுண்டன.
இவ்வாறாக ஜலப்பிரளயம் 40 நாள் பூமியின் மேல் உண்டானபோதும் தண்ணீர் பெருகி பேழையைக் கிளம்பப் பண்ணியது. அது பூமிக்கு மேல் மிதந்தது. ஜலம் பெரும் வெள்ளமாகி பூமியெங்கும் மூழ்கலாயின. பின்னர் 7ம் மாதம் 17ம் தேதியில் பேழை ஹரராத் என்னும் மலையின் மேல் தங்கிற்று. 10ம் மாதம் முதல் ஜலம் வடியத் தொடங்கியது. மலைச்சிகரங்களும் மலைமேல் இருந்த மரங்களும் தெரிய ஆரம்பித்தன. (பைபிள் ஆதியாகமம் 6 முதல் 8ம் அதிகாரம் 4.5 வசனம் வரை.
திருக்குரானும் இதைப் பற்றி விஸ்தாரமாகவே பேசுகிறது. நிச்சயாக நாம் நூகுவை அவர்களுடைய ஜனங்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பி வைத்து அவரை நோக்கி உம்முடைய ஜனங்களுக்கு துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே அவர்களுக்கு (அதனை பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் என்று கட்டளை இட்டோம்.
நமது கட்டளைப்படி நூகு அந்த ஜனங்களை நோக்கி எனது ஜனங்களே நிச்சசயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். அவ்வாறு நீங்கள் வழிபாடுகளை இசைந்து நடத்துங்கள். அவ்வாறு நீங்கள் நடப்பீர்களானால் இறைவன் உங்கள் குற்றங்களை மன்னித்துக் குறிப்பிட்ட காலம் வரை உங்களை வாழ அனுமதிப்பான்.
நிச்சயமாக (வேதனைக்குக் குறிப்படப்படும்) இறைவனின் காலக்கெடு வரும் பட்சம் அது ஒரு சிறிதும் பிந்தாது. இதனை நீங்கள் அறிய வேண்டாமா? எனக் கூறினார்.
அம்மக்கள் (தூதரை விளித்து) நூஹே நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கித்தீர். அதுவும் அதிகமாகவே தர்க்கித்துவிட்டீர். நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (வீண்தர்க்கத்தை விட்டொழித்து) நீர் அச்சுறுத்தும் அந்த வேதனையை நம்மிடம் கொண்டு வாரும்.
தூதராகிய நூஹீவுக்கு மீண்டும் வந்த இறை அறிவிப்பின் தொடர் இவ்வாறு கூறிச் செல்கிறது.
(ஓ நூஹே) நாம் அறிவக்குமாறு நம் கண் முன்பாகவே ஒரு மரக்கலத்தை நீர் செய்யும். அக்கிரமக்காரர்களைப் பற்றி (இனிமேலும்) நீர் என்னுடன் பேசாதீர். நிச்சயமாக அவர்கள் பெரும் வெள்ளதில் மூழ்கடிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அவர் மரக்கலத்தைச் செய்து கொண்டிருந்த சமயத்தில் அம்மக்களின் தலைவர்கள் அதன் சமீபமாகச் சென்ற போதெல்லாம் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் நீங்கள் எங்களை (இப்பொழுது) பரிகசித்தால் நிச்சயமாக நீங்கள் நகைப்பது போலவே (விரைவில்) நாங்களும் உங்களைப் பார்த்துப் பரிகசிப்போம் எனக் கூறினார். ஆகவே அவர் தன் இறைவனை நோக்கி நிச்சயமாக நான் இவர்களிடம் தோற்றவிட்டேன். எனக்கு உதவி செய்வாயாக என்று பிரார்த்தனை செய்தார். ஆதலால் வானத்தின் வாயில்களைத் திறந்துவிட்டு தாரை தாரையாக மழை கொட்டும்படிச் செய்தோம்.
அன்றி பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டு) பாய்ந்து ஒடச் செய்தோம். ஆகவே குறிபிட்ட ஓரளவுக்கு இரு ஜலங்களும் கலந்தன. நாம் அவரையும் அவரை ஏற்றுக்கொண்டவர்களையும் மரக்கலத்தின் மீது சுமந்து கொண்டோம். அது நம் கண் முன்னே பிரளயத்தின் மிதந்து சென்றது.
மேலும் அந்தப் பிரளயத்தினால் பூமியில் எத்தனை விதமான அழிவுகள் கொடூரமான முறையில் விவரிக்க முடியாத பயங்கரமாக இருந்தது என்பதை குர்ஆனின் இன்னொரு வசனம் பறைசாற்றுகிறது. அலைகள் சீறிவரும் போது அதிலிருந்து நெருப்புப் பிழம்பு வந்ததாகவும் ஒவ்வொரு நீர்த்திவலையும் கருங்குன்றுகள் போல் பூமியைத் தாக்கியதாகவும் இதனால் உயினங்கள் ஓலமிட்டு மரணவாயிலில் அடுக்கடுக்காக விழுந்ததாகவும் மலைகள் எல்லாம் எரிமலை சீற்றத்தால் வெடித்துச் சிதறுவது போல் தூள் தூளாக நொறுங்கி கடலில் கலந்ததாகவும் குர்ஆன் வர்ணனை செய்கிறது.
குர்ஆன் பைபிள் போலவே சிலப்பதிகாரமும் இந்த மகா ஊழிக் காலத்தை
பஃறுளியாற்றுடன்
பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடும்
கொடுங்கடல் கொள்ள
என்று கூறுகிறது. அதாவது கடைச் சங்க காலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டத்தை (லெமுரியா) கடல் கொண்டபோது தற்போது இருக்கும் இமயமலையை விட பல மடங்கு பெரிதான குமரிக்கோடு என்ற மாமலையையும் அதிலிருந்து உற்பத்தியான குமரி ஆறு பஃறுளியாறு ஆகிய இரு நதிகளையும் கடல் கபளீகரம் செய்திருப்பதைத் தமிழ் பேரகராதி குமரி ஆறு என்ற தலைப்பின் கீழ் இவ்வாறு குறிப்பிடுகிறது.
இது தென்பாற் கண்ணதாகிய ஒராறு இதனையுள்ளிட்ட நாற்பத்தொன்பது நாடுகள் கடையூழி இறுதிக் காலத்தில் கடல் கொண்டழிந்து போயின. அதன் வடபால் நாடு பின்னர்க் குமரிநாடு என்றும் அக்கடல் குமரிப் பௌவ மென்றும் பழைய பெயரே பெற்று வழங்கப்படுவன வாயின
இப்படி உலகம் முழுவதும் உள்ள புராண இதிகாசங்களும் கர்ண பரம்பரை நம்பிக்கைகளும் ஜலப்பிரளயம் ஒன்று பூமியில் ஏற்பட்டு ஒரு கண்டத்தையே அழித்த விதத்தை பல கோணங்களில் வேறு வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டாலும் அவைகள் அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் கூறுகின்றன என்பதை நம்மால் உணர முடிகிறது.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» எம்.ஜி.ஆர். குறித்த நூல்கள்.
» பாலுறவு பற்றிய நூல்கள்
» இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம்
» தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ... !
» 1983 & 2011 - நம்பமுடியாத ஒற்றுமைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum