TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!

5 posters

Go down

மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்! Empty மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!

Post by Tamil Tue Jan 21, 2014 9:36 pm

பொங்கல், தீபாவளினு பண்டிகை வந்துட்டா, பொண்டாட்டி, புள்ளகுட்டிங்களுக்குப் புதுத்துணி, பலகாரம், பட்டாசுனு வாங்கிக் கொடுத்துட்டு, தனக்குப் புதுசா ரெண்டு ஜட்டி மட்டும் வாங்கிக்கிட்டு, நடு ஹால்ல பாயை விரிச்சுப் படுத்துக்கிட்டு, வர்ற போனுக்கெல்லாம் 'ஹேப்பி பொங்கல், ஹேப்பி மாட்டுப் பொங்கல், ஹேப்பி சக்கரைப் பொங்கல்’னு வாய் நிறைய வாழ்த்து சொல்ற ஆயிரக்கணக்கான அப்பாவி மிடில் கிளாஸ் மாதவன்களின் கண்ணீர்தான் இது...
பிஞ்சுபோன செருப்பையே ஃபெவிகால் ஒட்டி பல வருஷம் பயன்படுத்துற பரதேசிங்கய்யா நாங்க. மூணு நாளா யோசிச்சு, சரி 300 ரூபாய்க்குள்ள புதுச் செருப்பு ஒண்ணு வாங்கலாம்னு வந்தா, 'இந்தச் செருப்பை தார் ரோட்டுல போடலாம்... இந்தச் செருப்பைத் தண்ணில போடலாம்’னு 2000 ரூபாய் 3000 ரூபாய் செருப்புகளை எல்லாம் எடுத்துக்காட்டி அவமானப்படுத்துறீங்களே! தண்ணில போட்டு குழம்பு வெக்க நாங்க என்ன பருப்பா வாங்க வந்தோம்? தரையில போட்டு நடக்க செருப்பு தானே வாங்க வந்தோம்!
மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்! P20சாம்பார்ல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க, சால்னாவுல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க, சரக்குல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க... ஆனா, தீர்ந்துபோன ஷாம்பூ பாட்டில்ல தண்ணியை ஊத்தி யூஸ் பண்றதைப் பார்த்திருக்கீங்களா? அதைக் குலுக்கிக் குலுக்கி, ஒரு மாசத்துக்கு ஊரே குளிப்போம்யா!
அரை மூட்டை அரிசியும், ஒரு லிட்டர் நல்லெண்ணையும் வாங்கவே சொங்கிப்போயிக் கிடக்கிற வெங்கப்பய நாங்க. இதுல, அட்சயத் திரியைக்கு நகை வாங்கு, ஆடித் தள்ளுபடிக்கு நெக்லஸ் வாங்குனு, 'சின்னத்தம்பி’ பிரபு ஆரம்பிச்சு 'பெரியதம்பி’ சத்யராஜ் வரை, கேரக்டர் ஆர்டிஸ்ட் அங்கிள்களை வீட்டுக்கு அனுப்பி ஆசையைக் கிளறுறீங்களே... எங்க உடம்புல இருக்கிற ஏதாவது அங்கத்தை அடகு வைச்சாத்தான், தங்கம் வாங்க முடியும்னு உங்களுக்குத் தெரியாதுல்ல?
100 ரூபா கொடுத்துட்டோம்கிற ஒரே காரணத்துக்காக 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தையே சிரிச்சுச் சிரிச்சுப் பார்த்தவங்கய்யா நாங்க. 50 ரூபா கொடுத்துட்டோம்கிற காரணத்துக்காக 'அன்னக்கொடி’ல மனோஜ் பண்ண அட்டூழியத்தை வெறிச்சு வெறிச்சுப் பார்த்தவய்ங்களும் நாங்கதான். எங்ககிட்ட போய்  ஆயிரம் ஆயிரமா வருமான வரியைப் பிடிச்சு ஈரக்கொலையை உருவுறீங்களே... இது நியாயமாரேரேரே..!
மாசத்துல மொத வாரம் ஹோட்டல்ல இட்லிக்கு சட்னியையும் சாம்பாரையும் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுற நாங்க, மாசக்கடைசில சட்னிக்கும் சாம்பாருக்கும் இட்லியைத் தொட்டுக்கிட்டுத் தின்னா, ஏதோ அவங்க மச்சினி கையைப் புடிச்சு இழுத்த மாதிரி முறைக்கிறீங்களே ஹோட்டல்கார்... ஹோட்டல்ல டிபன் பார்சல் வாங்கினா, குருமா பாக்கெட் தருவாங்க. ஆனா, அஞ்சு ரூவாவுக்கு வெறும் குருமா பாக்கெட் மட்டும் பார்சல் வாங்குறதைக் கண்டுப்பிடிச்ச கஞ்சப் பரம்பரைங்கப்பா நாங்க!
ஏ அரசாங்கமே... பெட்ரோல் விலையை எவ்வளவு வேணா ஏத்திக்க, நான் 100 ரூபாய்க்குத்தான் வண்டிக்கு பெட்ரோல் ஊத்துவேன். ஏ ஏகாதிபத்தியமே... குவாட்டர்ல ஆயிரம் பிராண்ட் கொண்டு வா. ஆனா, நான் 65 ரூபா குவாட்டர்தான் ஊத்திக்குவேன்னு கடமையாத்துற கன் பார்ட்டி நாங்க. டாஸ்மாக் உண்டியல்ல காசைப் போட்டு கவர்மென்ட் கஜானாவுக்கு ரீசார்ஜ் செஞ்சுட்டு, சிவனேனு போறவனைக் கூப்பிட்டு வாயை ஊது, வயித்தை ஊதுனு டார்ச்சர் பண்றீங்களே, 65 ரூபா குவாட்டர்ல அத்தர் வாசனையா வரும்... ஆல்கஹால் வாசனைதான் வரும்!
மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்! P20a
வெள்ளைக்காரன் ஒபேரா, கூகுள் குரோம்னு இன்டர்நெட் பிரவுசர் பிரவுசராக் கண்டுப்பிடிக்கிறப்ப, துணிக்கடையில் வாங்குற நாலே நாலு டவுசருக்கும் தனித்தனியா பில் போட்டா, ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு கட்டைப் பை வாங்கலாம்னு கண்டுபிடிச்சது யாரு... பூரா நம்ம மிடில் கிளாஸ்காரப் பயலுவதான்!
'கால் கிலோ கறி கொடுங்க’னு கேட்டா, ஏதோ கல்லாப்பெட்டி சாவியைக் கொடுங்கனு கேட்ட மாதிரி கோவிச்சுக்கிறாங்க. 'அட எனக்கு கொலஸ்ட்ரால்பா... வீட்டு நாய்க்கு வாங்கிட்டுப் போறேன்’னு சால்ஜாப்பு சொன்னா, 'அப்போ வெறும் எலும்பாப் போடட்டுமா சார்’னு நாக்குல நரம்பில்லாம நக்கல் அடிக்கிறாங்க. அந்தக் கால் கிலோ கறியில குழம்பு வெச்சு, சட்டிக்குள்ள கரண்டியை விட்டு கறி கிடைக்குமானு வரட்டு வரட்டுனு தேடிப் பார்க்கிற வலி உங்களுக்கு என்னைக்குமே புரியாது ப்ரோ!
ஒரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? வாரத்துல ஒரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? வருஷம் முழுக்க ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? பெரிய தப்பு மாதிரி தெரியுதுல்ல! உப்புசப்பு இல்லாத அந்தத் துப்புக்கெட்ட உப்புமாவைச் சாப்பிட்டுத்தான்யா நாங்க உயிர் வளர்க்கிறோம். அட, அம்மாகூட பெத்த அம்மா, சின்னம்மா, பெரியம்மானு மூணு வகைதான். ஆனா, ரவை, கோதுமை, இட்லி, கிச்சடி, சேமியானு இந்த உப்புமா பல நூறு வகை. ஒரே ஒரு நாள் உப்புமாவை மூணு வேளையும் தின்னு பாரு... அப்பத் தெரியும் மிடில் கிளாஸ் கஷ்டம்!
மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்! P20b
குடும்பத்தோட தியேட்டர்ல படம் பார்க்கிறக் காசுக்கு, பொத்துக்கிடக்கிற பாத்ரூம் கதவை மாத்திடலாம்னு முடிவு பண்ணித்தான்யா திருட்டு டி.வி.டி. வாங்குறோம். இந்தா... 'தலைவா’ படம் தியேட்டர்ல முதல் நாள் கொண்டாடுறதுக்கு முன்னாடியே, திருட்டு டி.வி.டி-ல 30 நாள் கொண்டாடிருச்சே... அந்த பிசினஸுக்கு யார் காரணம்... நம்ம பயகதேன்!
'என்னது... இன்ஜின் ஆயில் மாத்த 250 ரூபாயா?’னு அதிர்ச்சியாகி, ரெண்டு ரூவாய்க்கு எலுமிச்சம் பழம் வாங்கி ஹெட்லைட்டு மேல வெச்சுக்கிட்டு ஓட்டுறவங்க நாங்க. காய்ச்சல் கீய்ச்சல் வந்தா டாக்டர்கிட்டயா போவோம்? நோ நெவர். 'ஜின்’னு முடியிற ஏதாவது மாத்திரையை வாங்கிப் போட்டுக்கிட்டா, உடம்பு கின்னுனு வந்திடும் என்பதே மிடில் கிளாஸ் நம்பிக்கை சார்!
இறங்கவேண்டிய ஸ்டாப் தள்ளி பஸ்ஸு பாகிஸ்தான் பார்டருக்குள்ளயே போனாலும், கண்டக்டர்கிட்ட மிச்சம் எட்டணா சில்லறையை வாங்காம இறங்க மாட்டோம். அப்படிப்பட்ட எங்ககிட்ட மிச்சம் ஒரு ரூபாய்க்குப் பதிலா, சாக்லேட் தந்து டார்ச்சர் பண்றீங்களே அண்ணாச்சி. போனாப் போகுதுனு தூக்கி எறிஞ்சுட்டுப் போக, அது ஹரி பட அருவா இல்ல அண்ணாச்சி, முழுசா ஒரு ரூவா!
பல்லு விளக்குற பேஸ்ட் தீர்ந்துபோனா, பூட்டை எடுத்து அது மேல தேய்ச்சுத் தேய்ச்சுப் பிதுக்கி, அதுல இருக்கிற பேஸ்ட்டை வேஸ்ட் பண்ணாம, திரும்பத் திரும்ப டேஸ்ட் பண்ணுவோம்!
மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்! P20c
ஆட்டு காது மாதிரி காலர் வெச்ச அப்பா சட்டையை ஆல்டர் பண்ணி பையனுக்குத் தர்றது, அம்மாவோட பழைய புடவையைக் கிழிச்சு பொண்ணுக்கு சுடிதார் தைக்கிறது, அண்ணன் டிரஸ்ஸை தம்பிக்குப் போட்டுவிடுறது, ரெண்டாவதாப் பொண்ணு பொறந்துட்டா 'பொண்ணைப் பையனாட்டம் வளர்க்கிறோம்’னு ஒரு tagline  சேர்த்துட்டு அதே சட்டை-டவுசரைப் போட்டுவிடுறதுனு, ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுனதே நாங்கதான் பாஸ்!
சினிமா தியேட்டர் கேன்டீன்ல பாப்கார்ன் வாங்கினா செலவு அதிகம்னு, வீட்டுல இருந்தே கடலை மிட்டாயைக் கர்ச்சீப்ல கட்டிக் கடத்துவோம். ஒண்ணு, வீட்ல இருந்தே வாட்டர் பாட்டில்ல தண்ணி கொண்டுவந்துருவோம். இல்லை, வெளியே எங்கேயாவது தண்ணி பாட்டில் வாங்கினா, அந்தக் காலி பாட்டிலை வீட்டுக்குக் கொண்டுபோயிடுவோம்.
மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்! P20dஎந்த ஹோட்டலுக்குச் சாப்பிடப் போகலாம்னு நீங்க யோசிப்பீங்க. எந்த ஹோட்டலுக்குப் போனாலும் எதை மட்டும் சாப்பிடணும்னு நாங்க யோசிப்போம். இ.பி.கோ. சட்டத்தை விட அதிக ஓட்டைகள் எங்க பனியன்-ஜட்டியில இருந்தாலும், டி.வி. ரிமோட்ல ஆரம்பிச்சு டி.வி.டி. ப்ளேயர் வரை எல்லாத்துக்கும் சட்டையும் ஜட்டியும் போட்டுவிட்ருப்போம். ரிமோட் ரிப்பேரானா, அதைக் கொட்டிக் கொட்டி வேலை வாங்குவோம். அதே சமயம் டி.வி. ரிப்பேர் ஆச்சுனா, அதைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவோம்.
அம்மாவோ சமையலறையில் டப்பா டப்பாவா சில்லறை சேர்த்துவைக்க, அப்பாவோ டி.வி., ஃப்ரிட்ஜ் ஏன் அயர்ன் பாக்ஸ், குக்கர் வாங்குறப்பக் கிடைச்ச அட்டை டப்பாக்களைச் சேர்த்து வைக்க, பையனோ ஜீரோ பேலன்ஸ் தர்ற பேங்க்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சு கலர் கலரா ATM  கார்டு சேர்த்துவைக்க, அக்காவோ ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டுல இருந்து தனக்கு வந்த கிரீட்டிங் கார்டுகளைச் சேர்த்து வைக்க, ஆக மொத்தக் குடும்பமும் கடைசி வரை காசு- பணத்தைச் சேர்த்து வைக்காம வாழுறதுதான் மிடில் கிளாஸ் வாழ்க்கை. இதெல்லாம் வாசிச்சாப் புரியாது...வாழ்ந்தால்தான் புரியும்!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்! Empty Re: மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!

Post by அருள் Sun Feb 16, 2014 7:56 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்! Empty Re: மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!

Post by mmani Mon Feb 17, 2014 3:33 pm

lolou  lolou  lolou
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்! Empty Re: மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!

Post by dinujohn Mon Feb 17, 2014 5:35 pm

நான் வாழ்ந்துட்டேதா இருக்கேன்...
dinujohn
dinujohn
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 19/12/2012

Back to top Go down

மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்! Empty Re: மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!

Post by krishnaamma Mon Feb 17, 2014 9:12 pm

dinujohn wrote:நான் வாழ்ந்துட்டேதா இருக்கேன்...
உண்மை
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்! Empty Re: மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum