TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!

2 posters

Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Empty மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!

Post by மாலதி Mon Jan 13, 2014 4:01 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.  
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Madurai-+Meenakshi_Amman_Temple_Tank

இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.

இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும்.  இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  91784079.uTFNzvCh.meenakshi35
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக  விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
    மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.  அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.

தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.  சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.

(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம்,  )

ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை  என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும்  உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன் 


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!

Post by மாலதி Mon Jan 13, 2014 4:02 pm

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்

1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.
முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659
சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36



மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!

Post by மாலதி Mon Jan 13, 2014 4:03 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  X7ot

ஊஞ்சல் மண்டபம்

ஊஞ்சல் மண்டபம் மீனாக்ஷி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு மேற்கில் உள்ளது. இது 1563 ளில் செட்டியப்ப நாயக்காரல் கட்டப்பட்டது. ஒவ்வொரு வெள்ளி கிழமை அன்று மீனாக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரர் தங்க உருவங்களை இதில் வைத்து பாடல்கள் பாடி ஆட்டுவார்கள்.

புது ஊஞ்சல் மண்டபம்
புது ஊஞ்சல் மண்டபம், பழைய ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரே உள்ளது. 1623 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1985 ஆம் ஆண்டு கிலாஸ் ஃபைபர் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. இதன் மேற்கூரையில் கடவுள் முருகனின் வரைபடங்கள்(ஆறு படை வீடுகள்) வரையப்பட்டுள்ளது. கடவுளின் ஊஞ்சல் உற்சவம் இங்கு தான் நடைபெறுகின்றது..


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!

Post by மாலதி Mon Jan 13, 2014 4:04 pm

மீனாக்ஷி அம்மன் தெப்பக்குளம்:
இங்கு தான் கோவில் பூசாரிகள் நீராடி இறைவனை வழி படுவது. இதை பகுதியில் தான் முற்காலத்தில் தமிழ் சங்கம் கூட்டம் நடைபெறும். தெப்பக்குளத்தை சுற்றியுள்ள வரந்த வில் பல தூண்கள் உள்ளது. இதன் வலது பக்கத்தில் உள்ள இடம் சித்ரா மண்டபம், இதன் சுவர்கள் இறைவனின் திருவிளையாடுகளை ஓவியமாக தாங்கி நிற்கிறது.

பகலில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Nh0y

இரவில் மின் விளக்கின் அழகிய ஒளியில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Z6dg


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!

Post by மாலதி Mon Jan 13, 2014 4:04 pm

அஷ்டஷக்தி மண்டபம்:

கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே வார வேண்டும் என்றால், முதலில் நாம் அஷ்டஷக்தி மண்டபம் வழியாக தான் நுழைய வேண்டும். இது திருமலை நாயக்கரின் மனைவிமார்கள் ருத்ரபதி மற்றும் தோளிமம்மை ஆகியோரால் கட்டப்பட்டது. இங்கு தான் தூரத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.. இந்த மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூணிலும் சிவனின் திருவியாளையாடல்களும், மீனாக்ஷி அம்மானின் பிறப்பு மற்றும் அவர் மதுரையை அரசியாக ஆட்சி செய்ததும் சிலை வடிவிலும் ஓவிய வடிவத்திலும் உள்ளது.
இது 14 மீட்டர் மற்றும் 5.5 மீட்டர் அகலமும் கொண்டது.
1960-1963-ல் கோவில் சீரமைப்பு போது எட்டு அஷ்டசக்தி யின் சிலை சேர்க்கப்பட்டது அதனால் தான் இம்மண்டபம் இப்பெயர் பெற்றது.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!

Post by மாலதி Mon Jan 13, 2014 4:04 pm

மீனாக்ஷி நாயக்கர் மண்டபம் :

அஷ்டஷக்தி மண்டபத்திற்கு அடுத்து இருப்பது மீனாக்ஷி நாயக்கர் மண்டபம். இது 160' நீளம் உடையது. இந்த மண்டபத்தில் 110 தூண்கள் 6 வரிசையாக உள்ளது. 6.7 மீட்டர் உயரம் கொண்டது. ஒவ்வொரு தூணிலும் யாழி (புனித விலங்கு - சிங்கத்தின் உடலும் யானையின் தலையையும் கொண்டது) எனப்படும் உருவம் உள்ளது. விசேச நாட்களில் இங்கு 1008 விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலிக்கும்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!

Post by மாலதி Mon Jan 13, 2014 4:05 pm

இருட்டு மண்டபம் :
இருட்டு மண்டபம், 1613 ஆம் ஆண்டு கடந்தை முதலியரால் கட்டப்பட்டது. இங்கு தெற்கு பக்கம் முனிவர் , மோஹினி, மற்றும் கடந்தை முதலியோரின் சிலைகள் உள்ளது.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!

Post by மாலதி Mon Jan 13, 2014 4:05 pm

கிளிக்கூண்டு மண்டபம் :
கிளிக்கூண்டு மண்டபம், பொற்றாமரை குலத்திற்கு மேற்கில் உள்ளது. 1623 ஆம் ஆண்டு அபிஷேக பண்டாரம் என்பவரால் கட்டப்பட்டது. இந்த மண்டபத்திலும் யாழி சிலை உள்ளது அதனால் இது யாழி மண்டபம் என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மற்றொரு பெயர் ஷ்ணகிலி மண்டபம். இங்கு பாண்டவர்கள் மற்றும் தௌரபதி மற்றும் சில திருவிளையாடுகள் ஓவியங்களாக உள்ளது... சித்தி விநாயகர் திருவுருவம் மற்றும் குமரனின் திருவுருவமும் உள்ளது


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!

Post by logu Mon Apr 14, 2014 8:22 am

அருமை மாலதி
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!  Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு
» பல்வேறு காலகட்டங்களில் மீனாட்சி அம்மன் கோவில்
» 18-ம் நூற்றாண்டில்.. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் மனங்கவர் தோற்றம்!
» காலங்கள் பல கடந்தும் கம்பீரமாய் நிற்கும் மீனாட்சி அம்மன் கோவில். அரிய நிழற்படம்.
»  தெரிந்து கொள்வோம் : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சிறப்புகள் :

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum