TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


2013 டாப் 10 பிரச்னைகள் - மின்வெட்டு

Go down

2013 டாப் 10 பிரச்னைகள் - மின்வெட்டு Empty 2013 டாப் 10 பிரச்னைகள் - மின்வெட்டு

Post by Tamil Tue Dec 31, 2013 1:06 pm

[You must be registered and logged in to see this image.]ந்த ஆண்டு மட்டுமல்ல, எதிர்வரும் பல ஆண்டுகளுக்கு மின்வெட்டுதான் தமிழகத்தின் தலையாயப் பிரச்னையாக இருக்கும். வறுமைக்கோடு போலவே, மின்சாரப் பற்றாக்குறைக் கோடும் இனி நிரந்தரம்தான். இது எதிர்மறைப் பார்வை அல்ல... யதார்த்தமே இதுதான்.
[You must be registered and logged in to see this image.] தமிழ்நாட்டின் மின் தேவை 12,000 மெகாவாட். இதில் மூன்றில் ஒரு பங்கான 4,000 மெகாவாட், இப்போது பற்றாக்குறை. ஆண்டின் மூன்றில் ஒரு பகுதிக் காலத்தில் பருவக்காற்று வீசுகிறது. அப்போது தமிழகம் மின் மிகை மாநிலம். ஆண்டில் மூன்றில் ஒரு பங்கான கோடையில் மின் பற்றாக்குறை. மூன்றில் ஒரு பங்கான மழை, பனிக்காலத்தில் மின் பற்றாக்குறை.
[You must be registered and logged in to see this image.]
[color][font]
[You must be registered and logged in to see this image.] சுய உற்பத்தி, மத்தியத் தொகுப்பு, தனியாரிடம் கொள்முதல்... என மூன்று சம பங்குகளாகப் பெறப்படும் மின்சாரமே, மாநிலம் முழுக்க அனைத்துத் தேவைகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.] தமிழக அரசின் மொத்தக் கடன் சுமார் 1,30,000 கோடி ரூபாய். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன், இதில் மூன்றில் ஒரு பங்கு. அதாவது சுமார் 40,000 கோடி ரூபாய்.
- மின்வெட்டுச் சிக்கலைப் பற்றி சிந்திக்கும்போது இந்த 'மூன்றில் ஒன்று’ கணக்கு மனதில் வந்துபோனது. ஆனால், தமிழ்நாடு மின் வாரியம் ஒன்றும் சோடையான நிறுவனம் அல்ல!
[/font][/color]
[color][font]
1985-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை தொடர்ந்து நாட்டின் சிறந்த உற்பத்தித் திறனுக்கான பரிசை தமிழக அனல்மின் நிலையங்கள் (எண்ணூர் அனல்மின் நிலையம் தவிர்த்து) பெற்றுவருகின்றன. நாட்டின் மொத்தக் காற்றாலை மின் உற்பத்தியில் 40 சதவிகிதம் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது. 'தானே’ புயல் சீரழித்த ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் ஒரே மாதத்தில் சரிசெய்தவர்கள் நம் மின்வாரியத் தொழிலாளர்கள். விற்கப்படும் மின்சாரத்துக்கான விலையை முழுமையாக வசூலிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளின் மின்இழப்புக் குறியீடான 10 சதவிகிதத்துக்கு நெருக்கமாக 12.5 சதவிகித மின் இழப்பு உள்ள நகர்ப் பகுதிகள் நம்முடையவை. இப்படிப் பல மெடல்களைத் தாங்கி நின்ற தமிழக மின்சார வாரியத்தின் கோட்டு, இன்று பொத்தல் பொத்தலாகக் கிழிந்து தொங்குகிறது.
2008-ம் ஆண்டு தொடங்கிய மின்வெட்டுக்கு இன்று வயது ஐந்து. தமிழகத்தை ஆண்ட இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகளாக மின்வெட்டைப் பேணிப் பராமரித்துள்ளன. மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான அரிய வாய்ப்பு 2012-ல் இருந்தது. கட்டுமானப் பணி முடியும் தருவாயில் இருந்த வடசென்னை 1,200 மெகாவாட், மேட்டூர் 600 மெகாவாட், வல்லூர் 1,041 மெகாவாட், தூத்துக்குடி 387 மெகாவாட், நெய்வேலி 225 மெகாவாட்... எனக் கிட்டத்தட்ட 3,300 மெகாவாட்டுக்கு மேலான சுய உற்பத்தித் திறனை முடுக்கிவிட அரசு முயலவே இல்லை.
ஆண்டுக்கு 1,000 மெகாவாட் அளவுக்கு மின் தேவை அதிகரித்துவரும் நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் மின் பற்றாக்குறை 7,500 மெகாவாட்டாக வளர்ந்து நிற்கும். அப்போது தனியாரிடம் கொள்முதல் செய்வது மட்டுமே அரசுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி. துயரம் என்னவெனில், அந்த அளவுக்கான நிதி ஆதாரம் அரசிடம் இல்லை; இருக்கப்போவதும் இல்லை. இந்த ஆண்டு, தனியாரிடம் வாங்கும் மின்சார விலையை ஈடுகட்ட, மின் கட்டண மானியமாக 5,197 கோடியை ஒதுக்கியுள்ளது அரசு. கடந்த காலங்களில் மின்சாரக் கட்டமைப்பு மூலதனமாக ஒதுக்கப்பட்ட அந்த நிதி, இன்று மின் கட்டண மானியமாக ஒதுக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் தனியார் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மட்டுமே இருக்கும். மின்சாரத்துக்கு அவர்கள் வைத்ததுதான் விலை என்ற நிலை வரும். அது எளியோரிடம் இருந்து மின்சாரத்தைப் பிடுங்கி பணம் உள்ளோருக்கு மட்டும் வழங்கும். அப்போது நடுத்தர வர்க்கத்தினர் வாங்கிக் குவித்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளும், குளிர்சாதனப் பெட்டிகளும் வெறுமனே காட்சிப் பொருள்களாக மாறிவிடும். இது அடிப்படை இல்லாத கட்டுக்கதை அல்ல. ஒரு புள்ளிவிவரம் பார்த்தால் இது புரியலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 89 லட்சம் வீடுகள், ஆண்டுக்கு 5,000 மில்லியன் யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால், வெறும் 4.30 லட்சம் வீடுகள் 4,300 மில்லியன் யூனிட்களைப் பயன்படுத்துகின்றன. 89 என்பது, பெரும்பான்மை ஏழை மக்களைக் குறிக்கிறது. 4.3 என்பது, வசதியானவர்களைக் குறிக்கிறது!''
-vikatan-[/font][/color]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum