Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இது புதுசு: ஸ்கேட்டிங் பேட்டிங்...
Page 1 of 1
இது புதுசு: ஸ்கேட்டிங் பேட்டிங்...
இது புதுசு: ஸ்கேட்டிங் பேட்டிங்...
காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கிரிக்கெட் ஆடலாம்!
கிரிக்கெட், ரோலர் ஸ்கேட்டிங் ஆகிய ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு விளையாட்டையும் கலந்து ஸ்கேட்டிங் கிரிக்கெட் என்ற புதுவிதமான விளையாட்டை உருவாக்கியுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த விளையாட்டு எப்படி உருவானது என்பதை நம்மிடம் விவரிக்கிறார் இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் ஃபெடரேஷனின் பொதுச் செயலாளர் அருள்ராஜா...
சிறு வயது முதலே எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன். என்னைப் போன்றே என் மகனும் விளையாட்டின் மீது ஆர்வமாக இருந்தான். ஆதலால், ஸ்கேட்டிங் பயிற்சிக்கு அவனை 2006 -ஆம் ஆண்டில் அனுப்பி வைத்தேன். ஸ்கேட்டிங் பயிற்சியைப் பார்ப்பதற்காக நானும் அவனோடு செல்வேன். படிப்படியாகக் கற்றுக் கொண்ட அவன் 2008-ஆம் ஆண்டில் ஸ்பீட் வீல் எனப்படும் QUAD ஸ்கேட்டிங் ஷூக்களைக் கட்டிக்கொண்டு பயிற்சி செய்யத் துவங்கினான். பயிற்சிக்குப் பின்னர் ஹாக்கி, ரோல் பால் போன்ற விளையாட்டுகளை, ஸ்கேட்டிங் ஷூவைக் கட்டிக்கொண்டே அவனுடன் பயிற்சி பெறும் வீரர்களும் அவனும் விளையாடுவதைப் பார்த்தேன். அப்போது ஏன் இளைஞர்களும், குழந்தைகளும் விரும்பும் கிரிக்கெட் விளையாட்டை, ஸ்கேட்டிங் ஷூக்களைக் கட்டிக்கொண்டு விளையாடக் கூடாது என்று எண்ணினேன்.
இதுகுறித்து என் நண்பர் ஆவன் செந்தில் குமாரிடம் கூறினேன். பின்னர் இருவரும் இணைந்து தமிழகத்திலுள்ள பல ஸ்கேட்டிங் அமைப்புகளிடம் இந்த விளையாட்டைப் பற்றிக் கூறினோம். ஆனால், அவர்கள் ஸ்கேட்டிங்கில் கிரிக்கெட் விளையாடுவதென்பது இயலாத காரியம் எனக் கூறி எங்களைப் புறந்தள்ளினர்.
என் மகன் 2009-ஆம் ஆண்டு சண்டிகரில் நடைபெற்ற தேசிய அளவிலான QUAD WHEEL போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப் பட்டிருந்தான். அதற்காக நானும் அவனுடன் அப்போட்டிக்குச் சென்றிருந்தேன்.
அப்போது பிற மாநில ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்களுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அவர்களிடம் ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றிக் கூறினேன். ஆர்வமாக நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, அவர்களும் அதில் பங்குபெற வேண்டுமென்று விரும்பினர்.
அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கிரிக்கெட் விளையாட்டில் கைதேர்ந்தவர்கள் மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டில் அசத்தி வரும் வீரர்களின் உதவியுடன் ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட்டை வடிவமைத்தோம்.
அதே கையோடு நானும் எனது நண்பர் ஆவன் செந்தில்குமாரும் இணைந்து தமிழ்நாடு மற்றும் இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் ஃபெடரேஷனை உருவாக்கினோம்.
அதன் மூலம் ஸ்கேட்டிங் தெரிந்த பல வீரர்களுக்கு கிரிக்கெட் பயற்சி அளித்தோம். இதற்காக தமிழக அளவில் 2010-ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சிறப்புப் பயிற்சி அளித்துள்ளோம்.
அதன் பின்னர் 2011-ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் சங்கத்தின் மூலம் TRIAL NATIONAL போட்டியை 8 மாநிலங்களை ஒருங்கிணைத்து நடத்தினோம். இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக அணி வென்றது.
மெதுவாக இவ்விளையாட்டு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஸ்கேட்டிங் சங்கங்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் அனைவரும் எங்களுடன் ஒருங்கிணைந்து அந்தந்த மாவட்டங்களில் ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் பயிற்சியை வீரர்களுக்கு வழங்கினர்.
அதன் பின் 2011-ஆம் ஆண்டில் தமிழக அளவிலான போட்டியை நடத்தினோம். அதில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்றனர். 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் 22 மாவட்டங்களும், 2013-ஆம் நடைபெற்ற போட்டியில் 24 மாவட்டங்களிலிருந்து 60 அணிகளும் பங்குபெற்றன" என்கிறார் அவர்.
ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட்டை விளையாடுவது எப்படி என்பதைக் குறித்து நம்மிடம் விவரிக்கிறார் பயிற்சியாளர் ராம்ராஜ்...
வழக்கமாக விளையாடும் கிரிக்கெட்டிற்கும், ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட்டிற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால், ஸ்கேட்டிங் ஷூவை கால்களில் கட்டிக் கொண்டு வீரர்கள் பேட்டிங், பௌலிங், பீல்டிங் ஆகியவற்றை இதில் செய்ய வேண்டுமென்பதுதான் இதன் சிறப்பு.
ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட்டை சமமான சிமெண்ட் தளம், பாஸ்கட் பால் கோர்ட் மற்றும் ஸ்கேட்டிங் ரிங்கில்தான் விளையாட இயலும். இவற்றின் மைதான வடிவம் செவ்வக வடிவில்தான் இருக்கும். நேர் திசையில் (STRAIGHT) மட்டும்தான் பவுண்டரிகள் உள்ளன. மற்ற திசைகளில் பந்து சென்றால் ஒன்று அல்லது இரண்டு ரன்களை எடுக்கலாம்.
டென்னிஸ் பந்தில்தான் தற்போது ரோலர் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. வீரர்களின் பாதுகாப்பிற்காக KNEE PAD, HELMET போன்றவை கவசங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஓர் அணிக்கு 12 வீரர்கள். இதில் 4 வீரர்கள் சப்ஸ்டீட்யூட். மொத்தமாக ஓர் அணிக்கு 8 வீரர்கள் எனக் களத்தில் மற்றொரு அணியுடன் விளையாட வேண்டும். அதிகபட்சமாக ஒவ்வொரு அணிக்கும் 12 ஓவர்கள் வீசப்படும். எந்த அணி அதிக ரன்கள் எடுத்துள்ளதோ அந்த அணி வெற்றி பெறும். ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் தனித்தனியாக இந்த விளையாட்டு தற்போது விளையாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கு அதிகபட்சமாக ஒரு போட்டியில் 6 ஓவர்கள் மட்டுமே வீசப்படும்.
UNDER 11, UNDER 14, UNDER 17, UNDER 19, ABOVE 19 என ஐந்து ரக வயது வித்தியாசங்களில் இந்தப் போட்டி விளையாடப்பட்டு வருகிறது.
எதிர்வரும் காலத்தில் 11 வீரர்கள் விளையாடும் ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட்டைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்" என்கிறார் அவர்.
இந்த விளையாட்டின் வளர்ச்சியைப் பற்றி விவரிக்கிறார் இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் ஃபெடரேஷனின் நிறுவனர் ஆவன் செந்தில்குமார்...
ஈரோட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு பலரது ஒத்துழைப்புடன் படிப்படியாக வளர்ந்து சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. துவக்கத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் படர்ந்து, அதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களுக்கும், அதன் பின் சர்வதேச அளவிலும் இந்த விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது.
அதனைப் பிரதிபலிக்கும் விதமாக அண்மையில் ஈரோட்டில் முதலாவது தேசிய ரோல் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
இந்த விளையாட்டை தங்கள் பள்ளியில் உள்ள பாஸ்கட் பால் மற்றும் டென்னிஸ் கோர்ட்களில் விளையாடுவதற்கு பல பள்ளிகள் வாய்ப்புத் தந்ததால்தான் இந்த விளையாட்டு வளர்ந்துள்ளது. இந்த விளையாட்டிற்கு அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்தால் இதனை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்லலாம்" என்கிறார் அவர்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» மின்னல் வேக Firefox 4.0b1 புதுசு கண்ணா புதுசு!
» வேலன்-மவுஸில் ஸ்கேட்டிங் செய்ய
» கடைசி 4 ஓவரில் மோசமான பேட்டிங்: டோனி வருத்தம்...
» ஐதராபாத் டூ சபரிமலை ரகு வீ(ர்)ரமான "ஸ்கேட்டிங்' :கன்னிசாமியின் "கின்னஸ்' பயணம்
» 2ஜி, 3ஜி பழசு…5ஜி இது ரொம்ப புதுசு…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum