Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்தியாவின் சோதனைசாலையா தமிழ்நாடு? தமிழர்கள் என்ன சோதனை எலிகளா?
Page 1 of 1

இந்தியாவின் சோதனைசாலையா தமிழ்நாடு?
தமிழர்கள் என்ன சோதனை எலிகளா?
[You must be registered and logged in to see this image.]
இந்தியாவின் சோதனை முயற்சிகள் அனைத்தும் தமிழகத்தின் பகுதிகளுக்கே திணிக்கப்படுவது நாம் அறிந்ததே.அப்படி ஒன்றாக திணிக்கப்பட்டுள்ளதுதான் நியூட்ரினோ ஆய்வகம்.
பல ஆண்டுகளாக இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டு இறுதியாக நீலகிரி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. நீலகிரி பகுதியின் சுற்று சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படும் என்ற சுற்று சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பால் அங்கிருந்து மாற்றப்பட்டது.இறுதியாக தேனி போடிநாயக்கனூர் அருகிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தேர்வு செய்யப்பட்டது. நீலகிரி பகுதியைப் போன்றே இந்த பகுதியும் வனச்சூழல் நிறைந்த்து.இங்கு யானை, புலி, மான், காட்டு பன்றி உள்ளிட்ட பல வனவிலங்குகளும், பல மூலிகை தாவரங்களும், மரங்களும் என வளம் நிறைந்த பகுதியாக உள்ளது. எனவே இந்த பகுதியில் ஆய்வகம் அமைக்கப்பட்டால் சுற்றுசூழலும்,விவசாயமும், வனவிலங்குகளின் வாழ்வும் பாதிக்கப்படும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்று முடித்து இப்போது பணிகளை தொடங்க ஆரம்பித்துள்ளனர்.
நியூட்ரினோ என்பது என்ன?
ஒரு அணுவில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எனும் அடிப்படை துகள்கள் மட்டுமே இருப்பதாக முதலில் நம்பப்பட்டது.1930ஆம் ஆண்டில் நான்காவதாக நியூட்ரினோ என்ற துகள் இருக்கலாம் என கொள்கை உருவாக்கப்பட்டு,1956இல் ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டது.நியூட்ரினோ என்பது மின்னூட்டமற்ற துகள் என முதலில் அறியப்பட்டாலும், மிக குறைந்த அளவு மின்னூட்டம் பெற்ற துகள்கள் என விஞஞானிகள் தெரிவிக்கின்றனர்.நியூட்ரிநோக்கள், லெப்டான்கள் எனும் குடும்பத்தின் அடிப்படை பொருட்களாகும்.
எதற்காக இந்த நியூட்ரினோ ஆய்வகம்?
சூரியனில் நிகழும் அணுக்கதிர்வீச்சு வினைகளின் போது ஏராளமான நியூட்ரிநோக்கள் வெளிப்படுகின்றன. ஒவ்வொரு நொடியும் நமது உடலின் ஒவ்வொரு சதுர செ.மீ பகுதியிலும் 6 மில்லியனுக்கும் அதிகமான நியூட்ரிநோக்கள் புகுந்து வெளிவருகின்றன.நியூட்ரிநோக்களை கவர்ந்து ஆய்வு செய்வதன் மூலம் பூமியின் தோற்றம், சூரியனில் நிகழும் மாற்றங்கள் குறித்தும் தெரிய வரும் என நம்பப்படுகிறது. நியூட்ரிநோக்களை ஆராய்ச்சி செய்வதற்கு பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 2 கிமீ ஆழத்தில் ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக போடிநாயக்கனூர் அருகிலுள்ள பொட்டிபுரம் எனுமிடத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த ஆய்வு பணிகளுக்காக INO(India Based Neutrino Observatory) என்ற குழு செயல்பட்டு வருகிறது. Tata Institute Of Fundamental Research இல் பணிபுரியும் naba.K.Mondal என்பவர் இந்த குழுவில் முக்கிய உறுப்பினராக உள்ளார்.
கடினமான பாறைகள் கொண்ட மலைபகுதி(சார்நோகைட் பாறைகள்), குறைந்த மழை பொழிவு, போக்குவரதிற்கு ஏற்ற இடம் என மேற்கு தொடர்ச்சி மலையின் இடத் தெரிவிற்கு காரணம் கூறுகின்றனர் INO குழுவை சேர்ந்தவர்கள்.
நியோட்ரினோ தொழிற்சாலைகள் மூலம் உருவாகும் நியூட்ரிநோக்கள், சாதாரணமாக சூழலில் உள்ள நியூட்ரிநோக்களை விட அதிக ஆற்றல் கொண்டவை எனவும், அவற்றின் ஆற்றல் மதிப்பு 500 GEV வரை இருக்கக் கூடும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த கருத்தை INO குழுவினர் மறுத்துள்ளனர்.
பூமிக்கடியில் உருவாக்கப்படும் ஆய்வகத்தில் நியூட்ரிநோக்களை கவர்ந்து ஆய்வு செய்ய, உலகிலேயே மிக பெரிய காந்த சக்தி கொண்ட ,50000 டன் எடை கொண்ட காந்தங்கள் பயன்படுத்தப்படும்( Resistive Plate Chambers (RPCs), 2m X 2m RPCs being around 29000).
பூமியின் அடிப்பகுதியில் நான்கு நிலக் குடைவுகள் எடுக்கப்படும். ஒரு பெரிய, மற்றும் 3 சிறிய நில குடைவுகள் இதில் அடங்கும். நிலத்திற்கு அடியிலுள்ள இந்த ஆய்வகத்தை அடைவதற்கு 2100மீ தூரத்திற்கு சாய்வாக 7.5மீ அகலத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்படும். பெரிய ஆய்வகமானது 3432 சதுர மீ. பரப்பளவு கொண்டது.(132m X 26m X 20m).
மற்ற சிறிய ஆய்வகங்கள் முறையே,
2)55m X 12.5m X 8.6m,
3)40m X 10m X 10m,
4)10m X 10m X 10m அளவு கொண்டவை.
ஆய்வகத்தில் 1000 மீ அகலம் கொண்ட சுற்றுசுவர் ஒன்றும் கட்டப்படும். ஆய்வகத்திற்க்கு தேவையான நீர் 30 கிமீ தொலைவிலுள்ள சுருளி ஆற்றிலிருந்து எடுக்கப்படும். சுமார் 30000 டன் சிமெண்ட் மற்றும் மணல் ஆய்வக கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும்.
நியூட்ரினோ ஆய்வகத்தின் ஆயுள் காலம் 120 ஆண்டுகள் .DAE(Department Of Atomic Energy)& DST(Department Of Science & Technology) ஆகியவை நியூட்ரினோ ஆய்வுப் பணியில் இணைந்து செயல்படுகின்றனர். நியூட்ரினோ ஆய்வகப் பணிக்காக 1300 கோடி 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. ஆனால் உண்மையான செலவு எவ்வளவு ஆகும் என பின்னர் தான் தெரிய வரும்.
5-10 லட்சம் கிலோ அளவிலான பயங்கரமான வெடி மருந்துகள் கொண்டு வெடிக்கப்பட்டும், கன இயந்திரங்கள் கொண்டு இடிக்கப்பட்டும் நிலக் குடைவுகள் மேற்கொள்ளப்படும்.ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை வெடிப்புகள் மேற்கொள்ளப்படும்.அவ்வாறு வெடிக்கப்படும் போது 8,00,000டன் கடின பாறைகள் வெட்டி எடுக்கப்படும். இதனால் ஏராளமான துகள்கள் வெளிப்பட்டு சுற்றுசூழல் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும்.இந்த மாசுபடுதலினால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பகுதிக்கு கனரக வாகனங்கள் வந்து செல்வதற்கு போக்குவரத்திற்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படும். இதனால் வனவிலங்குகளின் வாழ்க்கை சூழல் பாதிக்கப்படும்.
தொடர்ச்சியான வெடிப்புகளின் போது நில அதிர்வுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் தேனி, கம்பம் பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆய்வகப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் பின்னாளில் ராணுவமயமாக்கப்பட்டு மக்களின் நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்றும் மக்கள் அஞ்சுகின்றனர். நியூட்ரினோ ஆய்வகதின் சுற்று சுவரில் விரிசல் ஏற்பட்டால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் அருகிலுள்ள நிலங்களில் விவசாயதிற்காக கிணறு எடுப்பது தடை செய்யப்படலாம் எனவும் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
பிற்காலங்களில் அணு உலை கழிவுகளை பாதுகாக்க இந்த சுரங்கங்களை பயன்படுத்துவார்களோ என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது.
நியூட்ரினோவை பயன்படுத்தி ஆயுதங்கள் தயாரிக்கலாம் என ஜப்பானில் 2003 இல் அறிமுகப்படுத்தினர். நியூட்ரினோ ஆயுதம் என்பது இன்னும் உலக அளவில் விவாதிக்கப்ப்டாத ஒன்றாக இருக்கிறது.( The advantage of a neutrino tactical assault weapon is that it can hit hard-to-reach places such as deep underground concrete bunkers and caves in mountainous areas. Since neutrinos can travel across the globe in the speed of light, a neutrino weapon does not allow the time for an early warning system. Since neutrinos cannot be shielded, a neutrino weapon is in principle non-defensible[You must be registered and logged in to see this link.]). நியூட்ரினோ ஆய்வகத்தை ஆயுதத்திற்காக பயன்படுத்தப்படும் ஒன்றாக மாற்றவும் முடியும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே நியூட்ரினோ ஆய்வகம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா, கனடா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. ஆனால் ஆய்வு முடிவுகள் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. அந்த நாடுகளில் அவர்கள் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கங்களையும், ஆளில்லாத பகுதிகளையும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடிகள் செலவு செய்து, வளமான பகுதியில் சுற்று சூழலை பாதிக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கையில் சில பாதிப்புகளையும் ஏற்படுத்தும் இந்த திட்டதின் மூலம் நாம் சாதிக்கப் போவது என்ன என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
மேலும் இத்த்திட்டதின் செயல்முறை குறித்த கூட்டங்கள் கேரளாவிலும்,தமிழ்நாட்டிலும் உள்ள சில கல்லூரி அரங்குகளிலும், சில அரங்கக் கூட்டங்களிலும் சில பேராசிரியர்களையும்,ஆய்வாளர்களையும் கொண்டும் விவாதித்து முடித்து விடுகிறார்கள். இத்திட்டத்தின் முழுமையான விவரங்கள் குறித்து பொது கூட்டங்கள் போட்டு பொது மக்களுக்கு விளக்க வேண்டிய கட்டாயம் அறிவியலாளர்களுக்கு உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். பொது மக்கள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்களின் கருத்துக்கள் குறித்து விவாதங்கள் நடத்தப் பட வேண்டும்.
கூடங்குளம் அணு உலை வந்தால் இந்தியா வளர்ச்சியடையும் என்றும் , சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வந்தால் இந்தியா முன்னேறும் என்றும் கூறிய அப்துல் கலாம், இப்போது நியூட்ரினோ வந்தால் தேனி மாவட்டமே முன்னேறும் என கிளப்பி விட்டிருக்கிறார். உண்மையில் நியூட்ரினோ ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு என்பது மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.அதுவும் கட்டுமான பணிகளுக்கான தொழிலாளர் வேலை மட்டுமே கிடைக்கும். இதனால் எந்த வகையில் தேனி மாவட்டம் முன்னேறும் என அப்துல் கலாம் சொல்கிறார் என புரியவில்லை. ஆய்வாளர்கள் தங்க சில கட்டிடங்கள் காட்டுவர். வெளிநாட்டு பார்வையாளர்கள் அடிக்கடி வந்து போவார்கள்.அவர்களுக்கு வானுயர் கெஸ்ட் அவுஸ்கள் கட்டுவார்கள். ஒருவேளை இதைத்தான் வளர்ச்சி என்கிறாரோ?
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது பொதுமக்கள் சார்ந்த வளர்ச்சி என்பதை நம் தலைவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்...

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இந்தியாவின் அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி
» ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் உளவியல் போர்!
» இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை .
» எங்களைக் கொன்று குவித்தது இந்தியாவின் ஆயுதங்கள்-நிரூபமாவிடம் தமிழர்கள் குமுறல்
» தமிழர்கள் அகதியாக்கபட்டதிற்கு காரணம் இந்தியாவின் இராணுவ உதவியே - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum