Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பாராளுமன்ற தேர்தல்: பா.ஜ.க கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும்? - தமிழருவி மணியன் பேட்டி
Page 1 of 1

சென்னை, டிச.17-
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகவும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் மாற்று அணி அமைய வேண்டும்.
நரேந்திர மோடி அலையால் தமிழகத்தில் வெறும் 3 சதவீதமாக இருந்த பா.ஜ.க. வாக்கு எண்ணிக்கை தற்போது 10 சதவீதமாக உயர்ந்து உள்ளது. மது விலக்கு கொள்கையால் ம.தி.மு.க.வின் வாக்கு எண்ணிக்கை 8 சதவீதமாக உயர்ந்து உள்ளது. பா.ம.க.வு.க்கும், தே.மு.தி.க.வுக்கும் 8 சதவீத வாக்கு எண்ணிக்கை உள்ளது. இந்த கட்சிகள் ஒன்று சேர்ந்தாலே 30 சதவீத வாக்குகளை பெற்று விட முடியும்.
பா.ஜ.க. தலைமையில் மாற்று அணியை அமைப்பது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேசினேன். அதையடுத்து அவர் டெல்லியில் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியதில் பா.ஜ.க., ம.தி.மு.க. இடையே சுமுகமான கூட்டணி உருவானது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை தைலாபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் தனிமையில் சந்தித்து பேசினேன். அப்போது டாக்டர் ராமதாசிடம், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் நீங்கள் இடம் பெற வேண்டும் என்று கேட்டேன். அதற்கு டாக்டர் ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் தனித்து நிற்க போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிவிட்டார். எனினும் நரேந்திர மோடி பிரதமர் ஆவதை பா.ம.க. ஆதரிக்கும் என்றும் தெரிவித்தார்.
விஜயகாந்தை 2 முறை சந்தித்து பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. வர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் தொண்டர்களின் கருத்தை கேட்டு ஜனவரியில் பொதுக்கூட்டம் நடத்தி தனது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்பேன் என்று கூறிவிட்டார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டபேரவை தேர்தல் முடிவுகளை அடுத்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் வரக்கூடிய காலம் கனிந்து இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க., கூட்டணி அமையும் என்று நம்புகிறேன். தே.மு.தி.க. விலகி சென்று விட கூடாது என்ற அச்சமும் எனக்கு இருக்கிறது. பா.ஜ.க. கூட்டணியில் தமிழகத்தின் முக்கிய தலித் கட்சி ஒன்றை இணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
ஊழல், நிர்வாகத் திறமையின்மை போன்ற காரணங்களினால் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. பாராளுமன்ற தேர்தலில் இந்த அலை சுனாமி அலையாக மாறும். காங்கிரஸ் கட்சியிடமிருந்து மக்களை பாதுகாக்கவே பா.ஜ.க. தலைமையில் மாற்று அணி அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் நரேந்திர மோடிக்கோ, எவருக்கும் ஆதரவாளன் கிடையாது.
காந்திய மக்கள் இயக்கத்தின் அரசியல் விழிப்புணர்வு மாநாடு ஜனவரி 26-ந்தேதி திண்டுக்கல்லில் நடக்கிறது. காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ந்தேதி மது விலக்குக்கு ஆதரவாக சென்னையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மார்ச் 1-ந்தேதி காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ரவுத்திரம் மாத இதழின் ஆண்டு விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது. பிப்ரவரி 9-ந்தேதி மதுரையில் காந்திய மக்கள் இயக்கத்தின் செயற்குழு-பொதுக்குழு கூடுகிறது.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாது: ஜி.கே.மணி பேட்டி
» ஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி பேட்டி VS ஆனந்த விகடன் - காமெடி கும்மி
» தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறாதது ஏன்?- தமிழருவி மணியன் விளக்கம்
» மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை! - தமிழருவி மணியன்
» அது, வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள்: தமிழருவி மணியன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum