Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நீதிமன்ற வளாக மோதல் சம்பவம்: அதிமுக-அமைச்சர்கள் வாக்குவாதம்
Page 1 of 1

Last Updated :
சென்னை, ஏப். 26: நீதிமன்ற வளாக மோதல் சம்பவங்கள் குறித்து, அதிமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையே திங்கள்கிழமை வாக்குவாதம் நடைபெற்றது.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியதாவது:
டி.ஜெயக்குமார் (அதிமுக): சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின்போது, முதல்வர் கருணாநிதி, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். கோகலே, தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் மற்றும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற சம்பவங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களை வெட்கி தலைகுனியச் செய்துள்ளது.
சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும். ஆனால், தமிழகத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யவில்லை. இங்கு நல்ல சட்டமும் இல்லை. நல்ல ஒழுங்கும் இல்லை. அதிமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: அதிமுக ஆட்சியில் வக்கீல் சண்முகசுந்தரத்தை கூலிப்படை வைத்து தாக்கியது யார்? சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியது யார்? சாத்தான் வேதம் ஓதுவதுபோல பேசக் கூடாது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம்: எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்த சம்பவத்தை முதல்வர் குறிப்பிட அதற்குப் பதிலாக மதுரை சம்பவத்தை நான் குறிப்பிட்டேன். ஆனால் நான் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விட்டீர்கள். அதுபோல அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசியதையும் நீக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: அதிமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதுண்டா என்று டி. ஜெயக்குமார் கேட்டார். அதற்குத்தான் அமைச்சர் பரிதி இளம்வழுதி பதில் கூறினார்.
பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன்: உயர் நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்பவம் பற்றி மட்டும் பேச வேண்டும். வேறு விஷயங்களைப் பேசினால் அதற்கு அமைச்சர் பதில் சொல்லத்தான் செய்வார்.
டி.ஜெயக்குமார் (அதிமுக): உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் பற்றித்தான் பேசுகிறேன். பத்திரிகை, தொலைக்காட்சியை திறந்தாலே நெஞ்சம் பதைக்கிறது.
அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு மோசமாகியுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதல் சம்பவத்தில்
பத்திரிகையாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஜெயா டிவி ஒளிப்பதிவாளர் பொன்னையா தேவன் உள்ளிட்டோர் கடுமையாகத் தாக்கப்பட்டு தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்போது உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த டிஜிபி வன்முறையைத் தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி, சட்ட அமைச்சர் துரைமுருகன், டிஜிபி லத்திகா சரண் ஆகியோர் பதவி விலக வேண்டும்.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: 2001-ல் திமுக நடத்திய பொதுக்கூட்டத்தின்போது அதிமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை எல்லோரும் அறிவார்கள். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு கருப்புக் கொடி காண்பிக்க ஏற்பாடு செய்ததே டி.ஜெயக்குமார்தான்.
சி.ஞானசேகரன் (காங்கிரஸ்): சில மாவோயிஸ்ட் வழக்கறிஞர்கள் முன் அனுமதி பெறாமல் கருப்புக் கொடி காட்டியுள்ளனர். அதனை சில வழக்கறிஞர்கள் எதிர்த்துள்ளனர். அதனால் கலவரம் ஏற்பட்டுள்ளது. அதனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள்,
ஒளிப்பதிவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது நீதிபதி கண்முன்னே முட்டை வீசப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மோசமான சம்பவங்கள் நடைபெற்றன. கருப்புக் கொடி காட்டுவதற்கு ஜனநாயகத்தில் உரிமை உள்ளது.
ஆனால், வழக்கறிஞர்கள் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். காவல்
துறையினர் தனக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி விட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்முருகன் (பாமக): 6 நபர்கள்தான் கருப்புக் கொடி காட்டியுள்ளனர். அவர்களை போலீஸôர் அப்புறப்படுத்தியிருந்தால் பிரச்னையே வந்திருக்காது.
முதல்வர் கருணாநிதி: காவல் துறையினர்தான் நீதிமன்ற வளாகத்துக்குள் வரக்கூடாதே.
வேல்முருகன் (பாமக): உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒரு பத்திரிகையாளர் 3 மணி நேரம் போலீஸôரால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
முதல்வர், துணை முதல்வர் தலையிட்ட பிறகுதான் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்
கூட்டியே அனுமதி பெறாமல் கருப்புக் கொடி காட்டியது கண்டனத்துக்குரியது.
அதே நேரத்தில் பதிலுக்கு பதிலாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் கண்டிக்கதக்கது.
பாலபாரதி (மார்க்சிஸ்ட்): ஜனநாயகத்தில் கருப்புக் கொடி காட்டுவது மிகப்பெரிய குற்றம் அல்ல. ஆனால் முன் அனுமதி பெற்று போராட்டம் நடத்தியிருக்கலாம். ஆனால் பதிலுக்குப் பதில் தாக்குதல் என்பது சரியல்ல. அந்த நேரத்தில் முதல்வர் கருணாநிதி நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது.
அமைச்சர் துரைமுருகன்: கருப்புக் கொடி காட்ட உரிமை உள்ளது என்பதைக் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக நான்கைந்து பேர் கருப்புக் கொடியைக் காட்டினால் சும்மா இருக்க வேண்டுமா?
வை.சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): சென்னை உயர் நீதிமன்ற வளாகம் என்றாலே ஏதோ கலவர பூமி என்ற எண்ணம் உள்ளது. அங்கு தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருந்தத்தக்கது.
நீதிமன்ற வளாகங்கள் இதுபோல வன்முறைக் களமாக மாறினால் மக்களுக்கு நீதித்
துறையின் மீது நம்பிக்கை போய்விடும். அனுமதி இல்லாமல் கருப்புக் கொடி காட்டியது கண்டிக்கத்தக்கது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாக்டர் சதன் திருமலைக்குமார் (மதிமுக): சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களை மதிமுக கண்டிக்கிறது. கவலை கொள்கிறது.
டி.ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி): முதல்வர் கருணாநிதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை அவமதிக்கும் வகையில் அனுமதி பெறாமல் கருப்புக் கொடி காட்டியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அசம்பாவிதம். ஊடகங்களில் கவனம் பெறுவதற்காக இதுபோல வழக்கறிஞர்கள் நடந்து கொள்கின்றனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» போபால் விஷவாயு கசிவு சம்பவம்: பரிந்துரைகளை 21-ல் இறுதி செய்கிறது அமைச்சர்கள் குழு
» திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம்
» காவிரி விவகாரத்தால் மக்களவையில் அதிமுக, பாஜக எம்.பி.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
» அதிமுக கூட்டணி 135 இடங்கள்; அதிமுக மட்டும் 131 தொகுதிகள்; தனித்தே ஆட்சியமைக்கிறது அதிமுக!!
» அதிமுக கூட்டணி 165 இடங்கள்; அதிமுக மட்டும் 157 தொகுதிகள்; தனித்தே ஆட்சியமைக்கிறது அதிமுக!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum