TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்பும் கவிதையும்..

Go down

தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்பும் கவிதையும்.. Empty தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்பும் கவிதையும்..

Post by Tamil Thu Nov 21, 2013 7:22 am

தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்பும் கவிதையும்..
.......................................................
[You must be registered and logged in to see this image.]
தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்ததும் அவன் வீரச் சாவைத் தழுவிக் கொண்டதும் இன்றுவரை எதோ நம்பமுடியாத செய்தி போலத் தான் இருக்கிறது. உண்மையிலேயே திலீபனை உண்ணாவிரத மேடையிலேயே கொண்டு உட்கார்த்திவிட்டோம். கந்தன் கருணை வீட்டிலிருந்து அவனை அழைத்துவந்து நல்லூரின் அந்த வீதியிலே, மனோன்மணி அம்மன் கோவில் மூலையிலே அமைக்கப்பட்ட மேடையிலே உட்கார்த்தி இருக்கிறோம். நான் உண்மையைச் சொல்கிறேன்; நான் என்றுமே பொய் சொல்வதில்லை; அப்பொழுது திலீபனை நாங்கள் சாகக் கொடுப்போமேன்று நான் கருதவில்லை. ஆனால் திலீபன் கருதியிருந்தான். நான் கருதவில்லை. ஒரு 4,5 நாட்கள் வரையும் திலீபனைச் சாகக் கொடுப்போமேன்று நான் கருதவில்லை. இந்தியாவை அப்பொழுது நம்பாவிட்டாலும் முதற்பலியாக திலீபனையே சாவுகொள்ளக் கொடுப்போமேன்று நான் கருதவில்லை. எனவே அந்த 4 நாட்கள் வரையும் எதிர்ப்புணர்வை இந்தியாவுக்குக் காட்டுகிறோம் என்பது போலத் தான் கழிந்தது. ஆனால் 4வது நாள் திலீபனிடம் பேசிவிட்டு வரும்போது, எனக்குச் சாடையாக ஏதோ மனதில் இவனை நாம் இழந்துவிடுவோமோ என்ற எண்ணம் எனக்குள்ளேயே வரத் தொடங்கியது. 

நானும் திலீபனும் மிக நெருக்கமானவர்கள். ஒரு வழியில் சொன்னால் என்னை இந்த விடுதலைப் புலிகளுடன் இணைக்க வைத்ததே திலீபனும் கேணல் கிட்டுவும் தான். நான்காம் நாளுக்குப் பிறகு என்னுடைய அந்தர ஆத்மா சொல்கிறது, திலீபனை இழக்கப் போகிறாய் என்று. இந்த மண் இவனை இழக்கப் போகிறது என்ற குரல் எனக்குள்ளே கேட்கத் தொடங்கியது. அப்பொழுது தான் அந்தக் கவிதையை எழுதினேன். எழுதிவிட்டு எல்லோருமே, திலீபனுக்கு அமைக்கப்பட்ட மேடைக்கு அருகில் அமைக்கப்பட்ட மேடையில் ஏறித்தான் கவிதையை வாசித்தோம். நான் கவிதை எழுதிவிட்டேன் என்பதும் நான் இன்று கவிதையை வாசிக்கப் போகிறேன் என்பதும் திலீபனுக்குத் தெரிந்துவிட்டது. திலீபன் எனக்கு ஒரு செய்தி அனுப்புகிறான். "புதுவை அண்ணையை, தயவுசெய்து கவிதையை வாசிக்க வரவிடவேண்டாம் இந்த மேடைக்கு. ஏனென்றால் நான் தாங்க மாட்டேன்; அவரும் தாங்க மாட்டார்" . எனவே அந்த மேடைக்கு ஏறி தயவுசெய்து வாசிக்க வேண்டாம் என்று சொல்லி, அதே போல் அந்தக் கவிதை மேடையில் வாசிக்கப்படவில்லை. அது அப்பொழுது எங்களுடையை நிதர்சனத்தினுடைய ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்த நேரம், நாலாம் நாள் அந்த ஒளிபரப்பினூடாக அந்தக் கவிதையை ஒளிபரப்பினோம். மேடையிலிருந்து திலீபன் அந்தக் கவிதையைக் கேட்டான். அந்தக் கவிதையை இன்றுவரை உச்சமாக - அற்புதமான மன உணர்வின் பதிவாகத் தான் நான் நினைக்கிறேன்.

"நாவிழந்து நாதமணி பேச்சிழந்து தூண் 
துவண்ட மாதிரியாகப் போய் முடியப் போகிறாயா..
காற்றே நீ நிறுத்து; கடல் அலையே நீ நிறுத்து;
கூற்றுவனா அவனைக் கொண்டு வந்து தூக்கிலிடு"

எனக்கு என்னவென்று சொன்னால் அந்தர ஆத்மா கூறத் தொடங்கிவிட்டதல்லவா திலீபனை நீ பறிகொடுக்கப் போகிறாய் என்று. அந்த உணர்வலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது, சனக்கூட்டத்திலிருந்த பல்லாயிரக்கணக்கனோர் "ஒ" என்று கத்தியதை நான் அறிவேன். ஏனென்று சொன்னால் ஒளிப்பதிவை முடித்துவிட்டு ஒளிபரப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது, நானும் அந்த வீதியிலே பார்த்துக் கொண்டு நின்றேன். அந்தச் சூழலிலே எனக்கு ஏற்பட்ட உணர்வு, அந்த முதல் நான்கு நாட்களிலும் ஏற்பட்ட உணர்வல்ல. அந்தக் கவிதையைப் பார்த்தால் தெரியும் உன்னை நாங்கள் இழக்கப் போகிறோமா என்று சொல்லிக் கேட்கும்..
---- நன்றி : எரிமலை --------

இனி, போராடும் தமிழினத்தின் கவிஞர் புதுவை அவர்கள் அன்று தியாகி. லெப். கேணல் திலீபனின் நினைவாக எழுதிய கவிதையின் வரிகள்...

கூற்றுவனைத் தூக்கிலிடு
...................................
புதுவை இரத்தினதுரை
....................................
எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே, இருந்தவனைக் காணவில்லை
எங்கே என் தம்பி?
மெல்ல...மெல்ல
அந்த விளக்கணையும் வேளையிலே
எல்லோரும் சேர்ந்து 'எண்ணையிடு' என்றோமே
கல்லான நெஞ்சே....!
நீ கண்திறந்து பார்க்கவில்லை
நாவரண்டு நாவரண்டு,
நாதமணிப் பேச்சிழந்து
பூ சுருண்டமாதிரியாய் போய்முடிந்து விட்டானா?
காற்றே நீ மூசு,
கடலலையே பொங்கி எழு.
கூற்றுவனா?
அவனைக் கொண்டுவந்து தூக்கிலிடு
எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே இருந்தவனைக் காணவில்லை
என் இனிய திலீபனே!
ஒரு வார்த்தை...
ஒரே ஒரு வார்த்தை மட்டும்.....
பேசிவிடு
"தமிழீழம்" என்ற தாரக மந்திரத்தைச்
சொல்லிவிட்டு; 
மீண்டும் தூங்கி விடு
மக்கள் சமுத்திரத்தில்
மரணித்து விட்ட வீரனே!
ஒரு வார்த்தை; 
ஒரே ஒரு வார்த்தை மட்டும்
பேசிவிட்டுத் தூங்கு......
என்னினிய தோழனே!
உனது மரணப்படுக்கை கூட
இங்கே மகத்துவம் மிக்கதாகி விட்டது
நீ கண்மூடியபடி தூங்குகின்றாய்
அந்தப் படுக்கை இங்கோர் பூகம்பத்தையே வரவழைக்கிறது
உன் சாவே இங்கோர் சரித்திரமாகிவிட்டது
செத்த பின்னர்!
ஊர்கூடித்
தேம்புவதுதான் இங்கு வழக்கம்.
ஆனால்....
ஊரே தேம்பிக் கொண்டிருந்தபோது
மரணித்த வரலாறு
உன்னுடன்தான் ஆரம்பமாகிறது
சாவு பலதடவை உன்னைச் சந்திக்கவந்து
தோல்வி கண்டது
இப்போது
சாவை நீயாகச் சந்திக்கச்சென்று
வெற்றிகண்டு விட்டாய்
என் இனிய திலீபனே!
நீ கையில் ஆயுதம் ஏந்தியபோதும்
உன்னை அருகிருந்து பார்த்துள்ளேன்.
நீ....நெஞ்சில் அகிம்சை ஏந்திய போதும் 
அருகிலி பார்த்துள்ளேன்
எந்த வித்தியாசமும் தெரியவில்லை
போராளிகளுக்குரிய போர்க்குணமே உன்னில் தெரிந்தது
இந்திய அரசே!
இது உனக்குப் புரிகிறதா?
தம்பி திலீபன்.....உன்னிடம் என்னதான் கேட்டான்
எங்களை
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவிடு என்றான்.
எங்கள் மண்ணின்
இறைமையைத் தா என்றான்
இது குற்றமா?
இதற்காகத்தானே போராடினான்
இதற்காகத்தானே போராடினான்
இதற்கு என்ன பதில் தரப்போகின்றாய்......
உன் பதிலை
நேற்று வந்த விமானத்திலும் எதிர்பார்த்தோம் 
தாமதித்துவிட்டாய்
நீ கடத்திய ஒவ்வொரு நொடிப் பொழுதும்
இங்கோர் புயலையே உருவாக்கிவிட்டாய்
திலீபன் என்ற புயல்
உன்னைச் சும்மா விடாது
உசுப்பியே தீரும்
எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே!
இருந்தவனைக் காணவில்லை.
என்இனிய திலீபனே!
நிம்மதியாய்த் தூங்கு
நிலம் வெடிக்கப் போகிறது
நிம்மதியாய்த் தூங்கு
நிலம் வெடிக்கப்போகிறது.
காற்றே நீ முக
கடலலையே பொங்கி எழு
கூற்றுவனா?
அவனைக் கொண்டுவந்து தூக்கிவிடு!
............................
ஈழமுரசு
28.9.1987
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்து மூன்றாம் ஆண்டு நினைவுநாள்
» "தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஐந்தாம் நாள்(19-09-1987)"
» லெப் கேணல் புலேந்திரன் பற்றிய சில குறிப்புகள்…
» லெப். கேணல் பொன்னம்மான் பற்றிய சிறு குறிப்பு
» தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum