TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


30 வருஷம்... 5000 குழந்தைகள்! - 'பசுமை' நாகராஜன்

Go down

30 வருஷம்... 5000 குழந்தைகள்! - 'பசுமை' நாகராஜன் Empty 30 வருஷம்... 5000 குழந்தைகள்! - 'பசுமை' நாகராஜன்

Post by அருள் Mon Oct 28, 2013 7:50 am

30 வருஷம்... 5000 குழந்தைகள்! - 'பசுமை' நாகராஜன்
30 வருஷம்... 5000 குழந்தைகள்! - 'பசுமை' நாகராஜன் 1385230_523098484450142_1527050443_n
'ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்' என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டு மக்கள் பசுமையை மிகவும் நேசிப்பவர்கள்... அங்குள்ள எல்லா நகரங்களிலும் மேலே கண்ட வாசகங்களுடன் கூடிய பலகையைக் காணலாம். அங்கே, அதிஅவசியமாக ஒரு மரத்தை வெட்ட வேண்டியிருந்தாலும் ஒன்றுக்கு நூறுமுறை யோசித்துதான் வெட்டுவார்கள்.

அரதப்பழசான துருபிடித்த சைக்கிள், அதன் கேரியரில் ஒரு மண்வெட்டி மற்றும் கடப்பாரை, இரண்டு பக்கமும் தொங்கும் பழைய பிளாஸ்டிக் குடங்கள்...

இதுதான் ஐம்பத்தி மூன்று வயது 'பசுமை' நாகராஜனின் அடையாளம். தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தன் சைக்கிளைக் கிளப்பிவிடுவார். நேராக போய் நிற்பது... சாலையோரங்களில்! அன்றைக்கு புதிதாக செடிகளை நடவேண்டி யிருந்தால் அதை நட்டு தண்ணீரை ஊற்றுவார். ஏற்கெனவே தான் நட்டு வைத்திருக்கும் செடிகளுக்கும் தண்ணீரை ஊற்றுவார். இப்படியே, கடந்த முப்பது வருடங்களாக நாகராஜன் வளர்த்தெடுத்திருக்கும் மரங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டும்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் கிராமத்தில், தனக்குச் சொந்தமான சின்னஞ்சிறு வீட்டிலிருக்கும் கைத்தறியில் தினமும் ஏதாவது துணியை நெய்தெடுத்தால்தான் குடும்பத்துக்கே சாப்பாடு. இத்தகைய ஏழ்மைச் சூழலிலும் சுற்றுச்சூழல் மீதான ஆர்வம்தான் அவரை 'பசுமை' நாகராஜன் என்றாக்கியிருக்கிறது.

''அப்ப எனக்கு பதினேழு வயசு இருக்கும். எங்க ஊர்ல இருக்கற மரத்தடியில ஒருநாள் நின்னுக்கிட்டிருந்தேன். 'ஊரெல்லாம் காய்ஞ்சி கிடக்கே... பச்சை பசேல்னு மரம், செடியோடவும் தளதளனு பூவோடவும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்?’னு மின்னல் மாதிரி என்னோட மனசுக்குள்ள ஒரு நினைப்பு வந்துபோச்சி. அடுத்த நிமிஷமே, 'ஊர் முழுக்க நாமளே மரங்களை நட்டா என்ன?'னு இன்னொரு மின்னல். அன்னிக்கே ஒரு மரக்கன்னு ரோட்டோரமா நட்டேன். அது நல்லா வளர ஆரம்பிக்கவும், அதைப் பார்த்து பார்த்து எனக்குள்ள சந்தோஷம் பொங்க ஆரம்பிச்சிடுச்சி. தொடர்ந்து மரங்களை நடறதுனு முடிவெடுத்தேன். ஒரு நாளைக்கு எவ்வளவு மரக்கன்னுகளை நட முடியுமோ, அவ்வளவு நட்டேன். விடியற்காலை அஞ்சி மணிக்கெல்லாம் சைக்கிள்ல குடத்தை கட்டிக்கிட்டு கிளம்பிடுவேன். வழியில் ஏதாவது பொதுக் குழாயில தண்ணியைப் பிடிச்சி ஒவ்வொரு மரத்துக்கா ஊத்துவேன். காலையில பத்து மணி வரைக்கும் இதை முடிச்சிட்டு, அதுக்குப் பிறகு தறியில போய் உட்காருவேன். மறுபடியும் சாயங்காலம் அஞ்சு மணிக்கு கிளம்பினா, ராத்திரி ஏழு மணிக்குதான் வீடு திரும்புவேன்.

ஆரம்பத்துல, 'எதுக்கு இந்த வெட்டிப்பொழப்பு’னு சிலர் கேலி பேசினாங்க. நான் காதுல போட்டுக்கலை. நான் நட்ட மரங்கள், என்னை கேலி செஞ்சவங்களுக்கும் சேர்த்து இப்ப நிழலையும் மழையையும் தரும்போது மனசுக்கு இதமா இருக்கு'' என்று சொல்லி, வானத்தைப் பார்த்தவர்,

''புங்கன், வாகை, வேம்பு, அரசு, ஆல், இச்சி, பூவரசன், வாதநாராயணானு ஊர்முழுக்க நான் வெச்ச மரங்கள் செழிச்சி நிக்குறத பார்த்தா அசோக சக்கரவர்த்தியே நேர்ல வந்து பாராட்டிட்டு போறமாதிரி ஒரு நெனப்புங்க.

என்னோட இந்த ஆர்வத்துக்கு தடை போடாம, தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்திக்கிட்டிருக்கிறது என்னோட வீட்டுக்காரி பிரேமா. அவளைத்தான் உண்மையிலயே பாராட்டணும்'' என்று நெகிழ்ச்சியோடு முடித்தார் நாகராஜன்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழகம் முழுக்கவே கடும் வறட்சி... குடிக்கவே தண்ணீர் இல்லை என்கிற நிலையில் காஞ்சிக்கோவில் கிராமமும் திணறியது. ஆனால், நாகராஜனின் இயற்கை சேவைக்கு எந்தவித தடங்கலும் வரக்கூடாது என்பதற்காக, 'அவர், எந்த குழாயடிக்கு குடத்தோடு வந்தாலும், உடனடியாக வழிவிட்டுவிடவேண்டும்' என்று ஊரில் தீர்மானமே போட்டு உற்சாகப் படுத்தியிருக்கிறார்கள். அவர்கள்தான் 'பசுமை' நாகராஜன் என்ற பட்டத்தையும் சூட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாகராஜனை வாழ்த்தி பல்வேறு சமூக நல அமைப்புகளும் பட்டங்கள் கொடுத்து கௌரவித்துள்ளன!

நன்றி - விகடன்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum