Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அனைத்து மத்திய சிறைகளிலும் ரகசிய கேமரா பொருத்தி அகன்ற திரையில் கண்காணிப்பு: தமிழக அரசு முடிவு
Page 1 of 1

சென்னை, அக்.13-
குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வது மட்டுமல்ல, அவர்களை அடைக்கும் சிறைகளிலும் குற்றங்கள் நடப்பதை கண்டுபிடித்து கட்டுப்படுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகள் சிலர், அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப குற்றச்செயலில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. சிறைக்குள் உச்சபட்சமாக கொலைகளும் நடந்துள்ளன.
சிறைதான் என்றாலும், கைதிகள் விரும்பும் பீடி, சிகரெட், கஞ்சா போன்ற புகை வஸ்துகளின் புழக்கம் இல்லாமல் இல்லை. கைதியை ஜெயிலில் பார்க்க வரும் போதும், கோர்ட்டில் ஆஜராவதற்காக வரும் போதும் உறவினர்கள், நண்பர்கள் மூலமாக இவை கைமாற்றப்படும். லஞ்சம் வாங்கும் சில சிறை ஊழியர்கள் மூலமாகவும் இவை சிறை அறைகளுக்குள் நேரடியாகக் கொடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சிறை ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார், சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்த சம்பவமும் நடந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறைகளுக்குள் செல்போனின் நடமாட்டமும் அதிகரித்தபடி உள்ளது. சிறைக்குள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை வைத்துக்கொண்டு வெளிநபர்களுடன் பேசி, குற்றச்செயல்களில் ஈடுபடுவது நடைபெற்று வந்தது.
சில சிறைக்கைதியின் வெளித்தொடர்பை அறிந்துகொள்வதற்காக சிறை ஊழியர்களே செல்போன் கொடுத்து உதவிய சம்பவங்களும் உண்டு. பின்னர் அந்த செல்போனை சோதித்து, அந்த கைதி யாராருடன் தொடர்பு கொண்டார் என்பதை அறிந்து, அவர்கள் செய்ய இருந்த குற்றத்தை தடுத்துள்ளனர். கைதிகள் சிலர் ரகசியமாக செல்போன்களை மறைத்து வைத்து பேசுவதும் உண்டு. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அதை பயன்படுத்திவிட்டு பின்னர் ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிடுவார்கள்.
சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக புழங்குவதாக புகார்கள் வரத்தொடங்கியதும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முடிவு செய்தது. அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள சில மத்திய சிறைகள் வளாகத்தில் முக்கியமான இடங்களில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டன. ஆனாலும் சிறையை முழுமையாக கேமராக்குள் அடக்க முடியவில்லை என்ற குறை இருந்தது.
இந்தக் குறையைப் போக்குவதற்காக கைதிகள் நடமாடும் அத்தனை முக்கிய பகுதிகளிலும் பதிவு வசதி கொண்ட ரகசிய காமிராக்களை பொருத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பெண்களுக்கான சிறப்பு சிறை, சிறார்கள் இல்லம் உட்பட அனைத்து சிறைகளிலும் 60 ரகசிய கேமராக்களை பொருத்த அரசு முன்வந்துள்ளது. பதிவு வசதி கொண்ட கேமராக்களை சிறையின் பிரதான வாயில்கள், அனுமதி பெறும் வாயில்கள், கைதிகளுடன் உறவினர்கள் பேசும் அறை, பாதுகாப்பு பகுதிகள், சிறை கோபுரங்கள் ஆகிய இடங்களில் பொருத்துவோம்.
அனைத்து கேமராக்களும் சிறையின் உள்ளே நடப்பது என்ன என்பதை, 24 மணிநேரமும் கண்காணித்தபடி இருக்கும். அந்த ரகசிய கேமராக்கள் அனைத்தும் 40 இன்ச் அளவு அகன்ற எல்.இ.டி. ஒளித்திரையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். எனவே சிறையின் மூலையில் நடக்கும் சம்பவத்தை கூட, இந்த திரை மூலம் சிறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதனால் குற்றச்செயல்களை உடனுக்குடன் தடுப்பதோடு, குற்றத்துக்கான நடவடிக்கை எடுக்கவும் ஆதாரம் கிடைக்கும்.
இந்த திட்டத்துக்காக அரசு ரூ.2 கோடி செலவிட உள்ளது. செல்போன் பயன்படுத்தும் குற்றம் சமீபமாக மிகவும் அதிகரித்து விட்டது. அதிகாரிகள் சோதனையிட்டு அவ்வப்போது செல்போன்களை கைப்பற்றுகின்றனர். இந்த நவீன கேமராக்களால் இந்த குற்றத்தை தடுக்க முடியும்.
சிறையில் தற்போது தொலைபேசி வசதிகள் இருந்தாலும், அதை கைதிகள் பெருமளவில் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், அந்த போன் அருகே ஆட்கள் இருப்பார்கள். எனவே தனிப்பட்ட விவகாரங்களை அதில் பேச முடியாது.
மேலும், சில கைதிகளை கோர்ட்டுகளில் முன்நிறுத்துவதற்கு அதிகாரிகள் தினமும் ரிஸ்க் எடுக்க வேண்டியதுள்ளது. கைதிகள் தப்பி ஓடுவது, கைதிகளை கோர்ட்டுகளுக்குள்ளே அல்லது வெளியே கொலை செய்யும் முயற்சிகள் போன்ற பெரிய சவால்களை ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் சந்திக்க வேண்டியதுள்ளது.
இதற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக தமிழகத்தில் உள்ள 17 சிறைகளிலும் 306 விசாரணை கோர்ட்டுகளிலும் 'வீடியோ கான்பரன்சிங்' தொழில்நுட்பத்தை புகுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கைதிகளை அழைத்துச்சென்று, மீண்டும் கொண்டு வரும் போக்குவரத்துச் செலவு மிஞ்சும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» அணுமின் நிலையம் திறக்க தமிழக அரசு முடிவு ;அமைச்சரவை கூட்டத்தில் ஜெ., சூப்பர் முடிவு !
» காவிரி: கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு முடிவு
» பாகிஸ்தானுடன் மத்திய அரசு ரகசிய பேச்சு: அத்வானி புகார்
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
» தமிழக அரசு கேட்ட நிதியில் மத்திய அரசு இதுவரை 1 ரூபாய்கூட ஒதுக்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum