Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நிச்சயம் தவிர்க்க வேண்டிய அதிக கலோரிகள் கொண்ட 20 இந்திய உணவுகள்
3 posters
Page 1 of 1
நிச்சயம் தவிர்க்க வேண்டிய அதிக கலோரிகள் கொண்ட 20 இந்திய உணவுகள்
[You must be registered and logged in to see this image.]
நிச்சயம் தவிர்க்க வேண்டிய அதிக கலோரிகள் கொண்ட 20 இந்திய உணவுகள் உணவு என்பது நாம் வாழ்வதற்கு தேவைப்படும் ஒரு முக்கிய பொருளாகும். அது மருந்தை போலத் தான். அதிலும் ஆரோக்கியமான உணவை தேவையான அளவு உட்கொண்டால், உடல் ஆரோக்கியமாக விளங்கும். அதுவே ஆரோக்கியமில்லாத உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலில் பல வியாதிகள் வந்து சேரும். சில இந்திய உணவு வகைகளில் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் அவரைகள் போன்ற சத்துள்ள பொருட்களை சேர்ப்பதால், அவைகள் ஆரோக்கியமான உணவுகளாக விளங்கும். இருப்பினும் நம் வட்டார வழக்கப்படி சமைக்கும் போது, அந்த உணவை எப்படி சமைக்கிறோமோ, அதனை பொறுத்து கலோரிகள் கூடிவிடும். சில நேரங்களில் உணவுகளில் க்ரீம், நெய், வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்ப்பதாலும் கூட கலோரிகள் அளவுக்கு அதிகமாக கூடிவிடும். ஆரோக்கியமான இதயத்தை பெறுவதற்கும், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் வேண்டுமானால், கூடுதல் கலோரிகளை கொண்ட சில இந்திய உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்படிப்பட்ட உணவுகள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இதோ அந்த உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. கோழி குருமா மிதமான க்ரீமி வகை உணவான கோழி குருமா பல இந்திய வீடுகளில் தயார் செய்யப்படும் உணவாகும். கோழி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி செய்யப்படுவது தான் இந்த உணவு. சமோசா சமோசாவானது உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பட்டாணிகள் சேர்த்து செய்யப்படும். மிகவும் புகழ் பெற்ற நொறுக்குத் தீனியாக விளங்கும் சமோசா, மாலை நேரங்களில் உண்ணப்படும். இதனை தயாரிக்க உருளைக்கிழங்கு மசாலா, கோழி (அரிதாக), காய்கறி, எண்ணெய் மற்றும் உப்பு தேவைப்படும். இதனால் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 2 சைவ சமோசாவில் தோராயமாக 260 கிலோ கலோரிகள். அதுவே 2 அசைவ சமோசாவில் 320 கிலோ கலோரிகள் இருக்கும். தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கன் என்பது மிகவும் புகழ் பெற்ற இந்திய உணவாகும். வறுத்த கோழி, தயிர் மற்றும் மசாலாக்களை கொண்டு தயார் செய்யப்படும் உணவு இது. இதன் மூலம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு கோழியின் காலில் தோராயமாக 264-300 கிலோ கலோரிகள் இருக்கும். மெட்ராஸ் சிக்கன் சிக்கன், பன்றிக்கறி, மாட்டிறைச்சி, ஆட்டுக் கறி மற்றும் கொத்துக்கறி போன்றவைகளை வைத்து இந்த காரமான குழம்பை தயாரிக்கலாம். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 100-200 கிராமில் தோராயமாக 450-500 கிலோ கலோரிகள் இருக்கும். புலாவ் சாதத்தில் சுவையை சேர்க்க மசாலாக்கள் சேர்த்து, அதில் கோழி, காய்கறி அல்லது மீனின் ஸ்டாக் போன்றவற்றை சேர்த்து சமைக்கும் உணவு தான் புலாவ். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை உட்கொள்ளும் அளவில் தோராயமாக 449 கிலோ கலோரிகள் இருக்கும். வெங்காய பஜ்ஜி இந்த காரசாரமான இந்திய நொறுக்குத் தீனி உருளைக்கிழங்கு பஜ்ஜியை போன்றது தான். பல வடிவங்களில் செய்யப்படும் பஜ்ஜியை பல இந்திய உணவுகளை உண்ணும் போது அதனுடன் சேர்த்து உண்ணலாம். தனியாகவும் உண்ணக்கூடிய இந்த உணவு மிகவும் புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது. உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 2-3 பஜ்ஜிகளில் 190 கிலோ கலோரிகள் இருக்கும். சிக்கன் டிக்கா மசாலா வறுத்த கோழி கறி துண்டுகளை காரசாரமான கிரேவியில் போட்டு தயார் செய்வது தான் சிக்கன் டிக்கா மசாலா. காரசாரமான ஆரஞ்சு நிறமுடைய க்ரீமி உணவு இது. இது நம் இந்திய பாரம்பரிய உணவே அல்ல. சிக்கன் டிக்காவை போல் உள்ளதால், முகலாய உணவு வகையான இது இப்பெயரை பெற்றது. இருப்பினும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது இது. கோழி குழம்பு கோழி குழம்பு என்பது ஒரு பொதுவான சுவைமிக்க இந்திய உணவாகும். கோழி மற்றும் குழம்பு கலந்து செய்யப்படுவது தான் இந்த உணவு. இதில் சேர்க்கப்படும் மசாலா பொடிகளில் போக குங்குமப்பூ, இஞ்சி மற்றும் இதர பொருட்களையும் சேர்க்கலாம். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 583 கிலோ கலோரிகள் இருக்கும். மட்டன் ரோகன் ஜோஷ் ரோகன் ஜோஷ் என்ற வாசனையான மட்டன் உணவு புகழ் பெற்ற காஷ்மீரி உணவாகும். இதனை அதிகபட்ச வெப்பத்தில் சமைக்க வேண்டும். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 589 கிலோ கலோரிகள் இருக்கும். மட்டன் கீமா குறும்பாட்டு கறியை காரசாரமான மசாலாக்கள் மற்றும் பச்சை பட்டாணியுடன் சேர்த்து சமைக்கப்படும் உணவு இது. உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 502-562 கிலோ கலோரிகள் இருக்கும். நாண் ரொட்டி நாண் ரொட்டி என்பது ஓவனில் வாட்டி தட்டையாக சமைக்கப்படும் ரொட்டி வகை உணவாகும். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு நான் ரொட்டியில் 317 கிலோ கலோரிகள் இருக்கும். பர்பி இந்திய இனிப்பு வகையில் ஒன்றான பர்பி செவ்வக வடிவில் இருக்கும். சர்க்கரை கலந்த பாலில் உலர்ந்த பழங்கள் மற்றும் மிதமான மசாலாக்கள் சேர்த்து, பாலை சுண்ட காய்ச்சி தயாரிக்கப்படுவது தான் பர்பி. பின் அதனை ஒரு தட்டையான தட்டில் ஊற்றி, அதனை சின்ன துண்டுகளாக வெட்ட வேண்டும். இந்த துண்டுகளை உண்ணக்கூடிய சில்வர் தகடு மூலம் அலங்கரிக்கலாம். அல்வா அல்வா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அடர்த்தியான இனிப்பு வகையை சேர்ந்த அல்வா இந்தியாவின் புகழ் பெற்ற இனிப்பு வகையாகும். அல்வாவில் பல பொருட்களும் சேர்க்கப்படலாம். அதில் சூரியகாந்தி விதைகள், நட்ஸ், பீன்ஸ், பருப்புகள், கேரட், பூசணி, சேனைக்கிழங்கு போன்றவைகள் சில உதாரணங்கள். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 570 கிலோ கலோரிகள் இருக்கும். ஜிலேபி ஜிலேபி என்பது மற்றொரு புகழ் பெற்ற இந்திய இனிப்பு வகையாகும். கோதுமை மாவை வட்ட வடிவில் நன்றாக பொறித்து, பின் சர்க்கரை சிரப்பில் ஊற வைத்து செய்யப்படுவது தான் ஜிலேபி. இந்த பலகாரத்தை வெதுவெதுப்பாகவோ அல்லது ஆற வைத்தோ உண்ணலாம். மெல்லக்கூடிய வகையில் இருக்கும் இந்த பலகாரத்தின் வெளிப்புறம் சர்க்கரை கற்களால் சூழப்பட்டிருக்கும். ரசமலாய் ரசமலாய் என்பது மற்றொரு புகழ் பெற்ற இந்திய இனிப்பு வகையாகும். ரச என்றால் ஜூஸ் என்றும், மலாய் என்றால் க்ரீம் என்றும் பொருள். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 250 கிலோ கலோரிகள் இருக்கும். சோலே படூரே சனா பூரி என்றும் அழைக்கப்படும் இந்த உணவு கொண்டைக்கடலை மற்றும் பூரியுடன் சேர்த்து உண்ண வேண்டும். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 450 கிலோ கலோரிகள் இருக்கும். பட்டர் சிக்கன் அடிப்படையில் வடஇந்திய உணவான பட்டர் சிக்கன் ஒரு புகழ் பெற்ற உணவு வகையாகும். இது கிடைக்காத இந்திய உணவகங்களே இல்லை என்று கூட கூறலாம். முந்திரி, பாதாம், தக்காளி மற்றும் வெண்ணெயை கொண்டு தயாரித்த க்ரீமி சாஸில் சமைத்த சிக்கனை போட்டு செய்யப்படுவது தான் பட்டர் சிக்கன். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 490 கிலோ கலோரிகள் இருக்கும். ஃபலூடா ஃபலூடா என்பது குளிர்ந்த இனிப்பு வகையை சேர்ந்த ஒரு பானமாகும். ரோஸ் சிரப், சேமியா, ஜெல்லி மற்றும் மரவள்ளிக்கிழங்கு பால், தண்ணீர் அல்லது ஐஸ் க்ரீமுடன் சேர்த்து இதனை தயாரிக்கலாம். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு பெரிய டம்ளரில் தோராயமாக 300 கிலோ கலோரிகள் இருக்கும். பன்னீர் புர்ஜி பன்னீர் புர்ஜி ஒரு சிறந்த காலை உணவாகவும் விளங்கும். சப்பாத்தி அல்லது பரோட்டாவுடன் சேர்த்து இதனை இரவும் உண்ணலாம். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு மீடியம் அளவு கிண்ணத்தில் தோராயமாக 412 கிலோ கலோரிகள் இருக்கும். பாவ் பாஜி பாவ் பாஜி என்பது மராத்திய வகை துரித உணவாகும். பாவ் பாஜியில் மல்லிச்செடி, வெங்காயம், எலுமிச்சை சாறு கலந்த பாஜி (அடர்த்தியான உருளைக்கிழங்கு க்ரேவி) மற்றும் வாட்டிய பாவ்வும் (பன்) இருக்கும். இந்த பாவ்வின் அனைத்து பக்கங்களிலும் வெண்ணெய் தடவப்படும். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு தட்டில் தோராயமாக 600 கிலோ கலோரிகள் இருக்கும்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
Re: நிச்சயம் தவிர்க்க வேண்டிய அதிக கலோரிகள் கொண்ட 20 இந்திய உணவுகள்
Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நீரிழிவு(SUGAR) நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!!!
» தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள்
» தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
» ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்
» கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum