Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ராஜாத்தி அம்மாள் யார்?
Page 1 of 1
ராஜாத்தி அம்மாள் யார்?
[You must be registered and logged in to see this image.]
• வணக்கம் முகநூல் நண்பர்களே.... ராஜாத்தி அம்மாள் யார்? சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி, "ராஜாத்தி அம்மாள் யார்?' அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த சாதுர்யமான பதில், "என் மகள் கனிமொழியின் தாய்'. மாநிலத்தின் முதலமைச்சர்: ஒரு குடும்பத் தலைவன்: சகோ. கனிமொழியின் தந்தை: ராஜாத்தி அம்மாள் அவர்களின் கணவர்: பலகோடி தமிழ் மக்களின் தலைவராகப் போற்றப்படுபவர். இவ்வளவு சிறப்புக்குரிய ஒரு நபர் 'ராஜாத்தி அம்மாள் யார்?' என்ற கேள்விக்கு நெஞ்சை நிமிர்த்தி நேரிடையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம் என்ன? இந்திய அரசலமைப்புச் சட்டம். 'ராஜாத்தி அம்மாள் என் மனைவி' எனறு சொல்லியிருந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி குற்றவாளியாகிறார். ஏனெனில் ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்வது இந்து மத சட்டத்தின் படி குற்றம். இதைக் காரணமாக வைத்தே அவருடைய பதவியும் பறி போகலாம். அவர் மேல் வழக்கும் தொடரலாம். அதே நேரம் இரண்டாம் மனைவியோடு குடும்பம் நடத்துவதை அதே சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் மனைவி என்ற அந்தஸ்தை அதே சட்டம் அனுமதிக்காது. சரி, உண்மையில் யார் இந்த ராஜாத்தி என்று பார்ப்போம். 60களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி என்கிற தர்மாம்பாள் தற்போது ராஜாத்தி கருணாநிதியாக மாறி இருக்கிறார். இவருக்குத் தான் இன்று எத்தனை சொத்துக்கள் தோழர்களே….. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிஐடி காலனி வீடு, ராயல் பர்னிச்சர், பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட், விலையுயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்….. அந்த சர்க்காரியா கமிஷனின் அறிக்கை ஒரு அரசு ஆவணமாகும். வழக்கமான அரசு ஆவணங்கள், தவறாமல் இருக்கக் கூடிய இடங்கள், சென்னை கன்னிமரா நூலகம், ஆவணக்காப்பகம், தலைமைச் செயலக நூலகம் மற்றும் சட்டப் பேரவை நூலகம். இந்த அத்தனை இடங்களிலும் இந்த நூல் திடீரென்று காணாமல் போவது தற்செயல் நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியுமா ? ஆனால் இதுதான் நடந்துள்ளது. என்னதான் நடந்துள்ளது என்று சென்னை கன்னிமரா நூலகத்தில் விசாரித்த போது, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அனைத்து நகல்களும் வாங்கிச் செல்லப் பட்டு விட்டன என்ற தகவல் தெரிய வந்தது. யார் வாங்கிச் சென்றார்கள் என்று கேட்டால், ‘மினிஷ்டர் ஆபீஸ்லேர்ந்து வாங்கிகினு போனாங்க சார்… அத்தோட அவ்ளோதான்….’ என்று கூறினார். தர்மாம்பாள் என்ற அல்லது இராஜாத்தி என்னும் திருமதி தர்மா தென்னாற்காடு மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் திருமதி சிவபாக்கியம் அம்மாளுக்குப் பிறற்த கடைசி மகள் ஆவார். திருமதி சிவபாக்கியம் அம்மாள் முதலில் கருப்பையா நாடார் என்பவரை மணந்தார். அவர் மரணத்திற்குப் பின்னர் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி நாடார் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திற்குப் பின்னர் அவருக்கு இராஜலட்சுமி, சுப்ரமணியம், தர்மா என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இரண்டாவது கணவரும் இறந்து விட்டார். அதன் பின்னர் சிவபாக்கியம் அம்மாள் அந்த கிராமத்தை விட்டு சிதம்பரம் வந்து அங்கு தன் மூன்று பிள்ளைகளுடன் தங்கியிருந்தார். அதன் பிறகு அவர் தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். அவர் வசதியான நிலையில் இல்லை. அவருடைய மூன்று குழந்தைகளில் யாரும் தொடக்கக் கல்வியைத் தவிர உயர்கல்வி படிக்க முடியவில்லை. சென்னையில் சிவகாக்கியமும் அவர் குழந்தைகளும், இராயப்பேட்டையில் 62, முத்துமுதலி தெருவில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தனர். அதற்கு மாதம் ரூ.18 வாடகை கொடுத்து வந்தார். திருமதி தர்மா நாடகத்தில் நடிப்பதை தன் வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்டார். அவர் சகோதரர் சுப்ரமணியம் எம்.பி.டி லாரி சர்வீசில் கூலியாக வேலை பார்த்து வந்தார். 1962ல் மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஒரு வீட்டை மாதம் ரூ.75 வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கு அவர் குடியேறினர். 1966ல் “காகிதப்பூ“ என்னும் நாடகத்தில் திருமதி தர்மாவும் திரு.மு.கருணாநிதியும் ஒன்றாக இணைந்து நடித்த போது அவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டது. திரு.கருணாநிதி கூறியுள்ளபடி, அவர் திருமதி.தர்மாவை 1966ல் செப்டம்பர் மாதம் 23ந் தேதி சமயச் சார்பற்ற முறையில் (இதுக்குப் பேர்தான் சுயமரியாதைத் திருமணமா ? … கருமம். கருமம்) திருமணம் செய்து கொண்டார். அது முதற்கொண்டு இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகின்றனர். 1966ம் ஆண்டு மார்ச் 10ல் திருமதி தர்மா, சென்னை.17, தியாகராய நகரில், 24.A, திருமூர்த்தி தெருவில் மாதம் ரூ.100 வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கான வாடகையை கருணாநிதி கொடுத்து வந்தார். திருமதி தர்மாவுடன் அவர் தாயார், சகோதரர், சகோதரி ஆகியோரும் அதே வீட்டில் வசித்து வந்தனர். திரு கருணாநிதிக்கு 1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாளில் ஒரு பெண் குழந்தைக் பிறந்தது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த குழந்தை இன்று 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் மாட்டி இருக்கிறது. சென்னை தியாகராய நகர் திருமூர்த்தி தெருவில் உள்ள அவரது வீட்டில் தொலைபேசி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. திரு கருணாநிதி தர்மாவை பார்க்க அவ்வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அதன் பின்னர் 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் நாளில் திருமதி தர்மா, சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 57 ஆயிரத்திற்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இன்று ராஜாத்தி அம்மாளின் ஆண்டு வருமானம் - ஒரு கோடியே, 67 லட்சத்து, 94 ஆயிரம் ரூபாய். அதாவது மாதம் ரூபாய் 14 லட்சம் ஆமாம் -மாதம் 14 லட்சம் ரூபாய் சம்பதிக்கிறார் ! — —

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» ராஜாத்தி அம்மாள் யார்?
» சி.பி.ஐ. நீதிமன்றம் வந்த ராஜாத்தி அம்மாள்
» ராஜாத்தி அம்மாள் தில்லி பயணம்
» ராஜாத்தி அம்மாள் - நீரா ராடியா உரையாடல் ஆடியோ
» கருணா நிதி, ராஜாத்தி அம்மாள் இருவரிற்கும் இது மூன்றாவது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum