TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:42 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:09 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 30, 2024 3:08 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பிஸ்தாவினால் கிடைக்கும் நன்மைகள்!!

Go down

பிஸ்தாவினால் கிடைக்கும் நன்மைகள்!! Empty பிஸ்தாவினால் கிடைக்கும் நன்மைகள்!!

Post by KAPILS Tue Oct 08, 2013 8:31 pm

ஆசிய பகுதியின் மேற்கு பகுதியில் இருந்து வருவது தான் பிஸ்தா. இது இயல்பாக ஒரு பழமாகும். ஆனால் இதன் உள்ளே இருக்கும் கொட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக நட்ஸ்களின் நன்மைகள் அனைவரும் அறிவோம். அதுபோல் இந்த பிஸ்தாவிலும் அதிக அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது. உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன. உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது. அதிலும் இந்த பருப்பை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கண் பார்வை சீராக இருக்கும். சருமத்திற்கு மினுமினுப்பு கிடைக்கும். மற்ற பருப்புகளை போன்று இதிலும் கொழுப்பு தன்மை அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் உடலுக்கு தேவையான ஈரத்தன்மை கிடைக்கின்றது. இப்போது அந்த பிஸ்தாவை அதிகம் உட்கொண்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பார்ப்போமா!!!

ஆரோக்கியமான இதயம்

பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது. இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது.

நோயெதிர்ப்பு அழற்சி தன்மை

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள், உடலில் ஏற்படும் நீர் கட்டி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது.

நீரிழிவு நோயை தடுக்கின்றது

பிஸ்தாவில் உள்ள 60% பாஸ்பரஸ், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ், புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து, உடலுக்கு வலிமை சேர்க்கின்றது.

இரத்தத்திற்கு ஏற்றது

இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல புரதச்சத்தில் ஒன்றான வைட்டமின் பி6 உதவுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது. ஆகவே பிஸ்தாவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கின்றது.

நரம்பிற்கு நல்லது

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 நரம்பிற்கு மிகவும் நல்லது. அமைன்கள் என்பது நரம்பு மண்டலத்தில் செய்தியைக் கொண்டு செல்லும் கூறுகளாகும். இதன் மூலம் அமினோ அமிலம் உற்பத்தி செய்யப்பட்டு, உடலுக்கு வலிமை அதிகரிக்கின்றது. மேலும் நரம்பு மண்டலத்தைச் சுற்றி ஒருவித மயிலீனை உருவாக்கின்றது மற்றும் இவை செய்திகளை ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்பு இழைகளுக்கு கொண்டு செல்ல உதவுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 அமினோ அமிலங்கள் பிஸ்தாவினால் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

கருவிழி சீரழிவு/கருவிழி சிதைவு

கருவிழி சீரழிவு காரணமாக எதைவும் ஒழுங்காக படிக்க முடியவில்லை என்று பெரியவர்கள் கூறுவர். பொதுவாக இது வயதான காலத்தில் வரும் ஒரு வித நோயாகும். இதனால் அடுத்த மனிதர்களை இனம் காண முடியாத அளவிற்கு பாதிப்பு உண்டாகின்றது. மாகுலர் திசு செயலிழப்பின் விளைவாக இந்த சேதம் ஏற்படுகின்றது. லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன், இந்த பாதிப்பை எதிர்த்து போராடுகின்றது. இத்தகைய பொருட்கள் மிகப்பெரிய அளவில் பிஸ்தாவில் இருப்பதால், இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வைட்டமின் பி6 ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் காரணியாகும். இதனால் உடலில் இரத்தத்தின் ஓட்டம் சீராக ஓடுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் அதிக அளவில் உள்ளது.

ஆரோக்கியமான மூளை

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது.

ஆரோக்கியமான சுரப்பிகள்

மண்ணீரல் போன்ற சுரப்பி, நாளமில்லா சுரப்பி போன்றவை ஆரோக்கியமான மற்றும் தொற்று நோயை எதிர்க்கும் சுரப்பியாகும். இவை இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் (WBC) சரியாக பணி புரிய செய்கின்றது. இத்தகைய சக்தியானது பிஸ்தாவில் கிடைக்கின்றன.

ஆரோக்கியமான சருமம்

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எப்படியெனில் இதனை சாப்பிட்டால், இது சருமத்தின் மென்சவ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கின்றது. இதன் மூலம் சருமமானது ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படுகின்றது.

வயதான தோற்றத்தை போக்குகின்றது

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தில் தோன்றும் வயதான தோற்றத்தை போக்கி, இளமையான தோற்றத்தை அளிக்கின்றது. இதற்கு இந்த பிஸ்தாவில் உள்ள எண்ணெய்ப்பசை தான் காரணம்.

புற்றுநோய்

இதில் உள்ள வைட்டமின் பி6 இரத்த எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது.

நேச்சுரல் மாய்ஸ்சுரைசர்

பிஸ்தா எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர். அது இயற்கையாகவே சருமத்தை மிகவும் மென்மையாக்கி ஈரப்பதத்துடன் விளங்க செய்கின்றது. எனவே வழக்கமான மாய்ஸ்சரைசருக்கு பதிலாக, இந்த எண்ணையை எடுத்துக் கொள்ளலாம்.

சரும வறட்சி

சரும வறட்சியினால் ஏற்படும் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க வல்லது. அதிலும் இதில் இருக்கும் ஆற்றல்மிக்க ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பல்வேறு வகைகளில் உதவி புரிந்து, இளம் வயதிலேயே முதிர்ச்சியான தோற்றத்தைப் போக்குகின்றது.

வெள்ளையான சருமம்

பிஸ்தாவை தினமும் எடுத்து கொள்வதால், சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்க முடியும். ஏனெனில் இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கணிசமான அளவில் உள்ளது. மேலும் வழக்கமான உணவில் பச்சை ஆப்பிள்களை சேர்த்து கொண்டாலும், மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும்.

வேனிற்கட்டிகள்

பிஸ்தாவில் இருக்கும் வைட்டமின் ஈ உடலின் ஒரு கொழுப்புத் தன்மையை அதிகரிக்கின்றது. இதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். மேலும் இது தோல் புற்றுநோய் மற்றும் வேனிற் கட்டி சிரமங்களை குறைத்து, சூரியக் கதிர்களால் சருமத்திற்கு சேதம் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஆரோக்கியமான பார்வை

பிஸ்தாவை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், ஆரோக்கியமான பார்வையைப் பெற முடியும்.

கூந்தல் வளர்ச்சி

பிஸ்தாவில் இருக்கும் கொழுப்புத்தன்மை கூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கின்றது. இதன் மூலம் கூந்தல் வளர்ச்சி அடைகின்றது.

வலுவான கூந்தல்

பிஸ்தாவை அதிகம் சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்களால் மயிர் கால்களை வலுப்படுத்தப்பட்டு, கூந்தல் உதிர்தல் தடைபடுகிறது

கூந்தல் வெடிப்பு

பிஸ்தாவின் மூலம் தயாரிக்கப்படும் மாஸ்க்கை கூந்தலுக்கு போட்டால், கூந்தலுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கின்றது. இதனால் கூந்தலுக்கு பிளவு ஏற்படாமல் நன்றாக வளரவும் உதவுகின்றது.

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும்

பயோட்டின் குறைபாடு கூந்தல் உதிர்தலுக்கு காரணமாக விளங்குகின்றது. இத்தகைய பயோட்டின் பிஸ்தாவில் கணிசமான அளவில் உள்ளதால், இதனை தினமும் சாப்பிட, கூந்தல் உதிர்தல் நின்று, கூந்தல் ஆரோக்கியமாக வளரும்.
நன்றி:http://tamil.boldsky.com/
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum