Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )
Page 1 of 1

சேரமான் பெருமாள் என்பவர் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜுமா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அராபியர்களுடன் வியாபார, கப்பல் தொடர்பைக் கொண்டிருந்தது. பல்வேறு கிறித்துவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.
மெக்காவில் முகம்மது நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர் பலரிடமும் விசாரித்தார். அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அராபியர் கூட்டம் ஒன்று அது பற்றித் தங்களுக்கு தெரியும் என கூறியதைக் கேட்டு, அவர்களைத் தனது அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் (முகம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்ப வைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறினர் . இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அந்த அராபியர்களிடம் தான் முகம்மது நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அராபியர் கூட்டம் தாங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாளை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.
தனது அரசைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்த சேரமான் பெருமாள் அதைத் தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர்). அதன் பிறகு சேரமான் பெருமாள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பிச் சென்றார். அங்கு முகம்மது நபியை (சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அங்கேயே இசுலாம் மதத்தை ஏற்றார். மேலும் முகம்மது நபியால் (ஸல்) தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின் முகம்மது நபிக்கு (சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) தான் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார். இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்:
இந்தியாவிலிருந்து முகம்மது நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு கலன் நிறைய ஊறுகாய்களைக் கொண்டு வந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.
சேரமான் பெருமாள் அரேபியாவிலுள்ள ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மணம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலியல்லாஹு அன்ஹு ) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாய்ப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
மாலிக் பின் தீனாரின் (ரலியல்லாஹு அன்ஹு ) குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள், இஸ்லாம் மதத்தைப் பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காகப் பல மசூதிகளைக் கட்டுமாறும் தன் குடும்பத்தாருக்குப் பணித்திருந்தார். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இசுலாம் மதத்தைப் பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு(ரலியல்லாஹு அன்ஹு ) உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலியல்லாஹு அன்ஹு )கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் கட்டினார்.
· சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.
· சேரமான் பெருமாள் ஜுமா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜுமா மசூதி மதினாவில்உள்ளது)
· சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
· சேரமான் பெருமாள் மற்றும் மாலிக் பின் தீனார் (ரலியல்லாஹு அன்ஹு ) ஆகிய இருவரது சமாதியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» ராஜா ரவிவர்மா ஓவியங்கள்
» நாடுகடந்த மாயமான் - சேரமான்
» சேரமான் காதலி என்ற நாவலுக்கு...
» அரசியல் கோமாளிகளின் கேலிக்கூத்து -சேரமான்
» கருணாநிதி போட்டுடைத்த ‘இரகசியத்தின்‘ சூட்சுமம் – சேரமான்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum