TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியா அசத்தல் வெற்றி!: பைனலுக்கு முன்னேறியது

Go down

இந்தியா அசத்தல் வெற்றி!: பைனலுக்கு முன்னேறியது Empty இந்தியா அசத்தல் வெற்றி!: பைனலுக்கு முன்னேறியது

Post by Tamil Mon Jan 11, 2010 7:22 am





இந்தியா அசத்தல் வெற்றி!: பைனலுக்கு முன்னேறியது Indian-team_88



மிர்புர்: முத்தரப்பு
கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த
லீக் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வரும் 13ம் தேதி நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மீண்டும்
பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்கும்
முத்தரப்பு ஒரு நாள் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. முதல் மூன்று
போட்டிகளில் வென்ற இலங்கை அணி ஏற்கனவே பைனலுக்கு முன்னேறியது. நேற்று
மிர்புரில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
சேவக் ஓய்வு:
இப்போட்டியில்
வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணியில் 3 மாற்றங்கள்
செய்யப்பட்டன. சேவக், நெஹ்ரா, ஹர்பஜனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தினேஷ்
கார்த்திக், சுதீப் தியாகி, அமித் மிஸ்ரா வாய்ப்பு பெற்றனர். இலங்கை
தரப்பில் தில்ஷன் மீண்டும் அணிக்கு திரும்பினார். டாஸ் வென்ற இலங்கை
கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
விக்கெட் மடமட:
இந்திய
"வேகங்கள்' போட்டுத் தாக்க, இலங்கை அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது.
முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் சுதீப் தியாகி. இவரது பந்தில் தரங்கா
"டக்' அவுட்டானார். பின் தியாகி ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி விளாசிய
அதிரடி தில்ஷன் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ஜாகிர் பந்துவீச்சில்
தில்ஷன்(33) நடையை கட்டினார். தொடர்ந்து வேகத்தில் மிரட்டிய ஜாகிர்,
ஜெயவர்தனாவையும்(5) வெளியேற்றினார். இந்தியாவுக்கு எதிரான கடந்த
போட்டியில் சதம் அடித்த சமரவீரா(0) இம்முறை ஸ்ரீசாந்த் பந்தில்
சரணடைந்தார். அடுத்து வந்த கண்டம்பி(1)பரிதாபமாக ரன் அவுட்டானார். திசரா
பெரேரா(11), அமித் மிஸ்ரா சுழலில் யுவராஜின் சூப்பர் "கேட்ச்சில்'
சிக்கினார். இப்படி அடுக்கி வைத்த சீட்டுக் கட்டுகளை கலைத்தது போல
இலங்கையின் விக்கெட்டுகள் வரிசையாக சரிய, 18.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 84
ரன்கள் எடுத்து தத்தளித்தது.
சங்ககரா ஆறுதல்:
இதற்கு
பின் போராடிய கேப்டன் சங்ககரா ஒரு நாள் அரங்கில் 54வது அரைசதம் கடந்தார்.
இவர் 68 ரன்களுக்கு யுவராஜ் பந்தில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் சூரஜ்
ரந்திவ், துஷாரா பொறுப்பாக ஆட, இலங்கை 200 ரன்களை கடந்தது. துஷாரா 28
ரன்கள் எடுத்தார். தனது முதல் அரைசதம் எட்டிய ரந்திவ்(56), மிஸ்ரா சுழலில்
வெளியேறினார். இலங்கை அணி 46.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் ஜாகிர், அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி துவக்கம்:
போகிற
போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர், தினேஷ்
கார்த்திக் அசத்தல் துவக்கம் தந்தனர். அதிரடியாக பேட் செய்த தமிழக வீரர்
கார்த்திக், துஷாரா ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார். இவர் 48
ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த விராத் கோஹ்லி "கம்பெனி' கொடுக்க,
தனது அபார ஆட்டத்தை காம்பிர் தொடர்ந்தார். தில்ஷன் உள்ளிட்ட இலங்கை
வீரர்கள் கைநழுவ, இரண்டு முறை கண்டம் தப்பிய காம்பிர் 71 ரன்களுக்கு
பெரேரா பந்தில் வீழ்ந்தார். மீண்டும் ஒரு முறை இலங்கை அணிக்கு எதிராக
அபாரமாக ஆடிய கோஹ்லி அரைசதம் கடந்தார். லக்மல் வீசிய 32வது ஓவரில் நான்கு
பவுண்டரிகள் அடித்த இவர், விரைவான வெற்றியை தேடி தந்தார். இந்திய அணி 32.4
ஓவரில் 2 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
கோஹ்லி 71(9 பவுண்டரி), யுவராஜ் 8 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட
நாயகன் விருதை ஜாகிர் கான் தட்டிச் சென்றார்.
இப்போட்டியில் விரைவாக
வென்ற இந்திய அணி ஒரு போனஸ் புள்ளி பெற்றது. வரும் 13ம் தேதி நடக்கும்
பைனலில் இந்தியா(9 புள்ளி), இலங்கை(12 புள்ளி) அணிகள் மோதுகின்றன. முதல்
மூன்று போட்டிகளில் தோற்ற வங்கதேசம் வாய்ப்பை இழந்தது.
இன்று நடக்கும் முக்கியத்துவம் இல்லாத கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
பீல்டிங் முன்னேற்றம்:
இந்திய
அணியின் பீல்டிங், பவுலிங்கில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. யுவராஜ்,
காம்பிர், விராத் கோஹ்லி போன்றவர்கள் கடினமான "கேட்ச்களை' கூட அருமையாக
பிடித்தனர். "ரன் அவுட்' வாய்ப்புகளையும் "மிஸ்' பண்ணவில்லை. பவுலர்கள்
உதிரிகளை குறைத்து, விக்கெட் வேட்டை நடத்தினர். 3 விக்கெட் வீழ்த்திய
ஜாகிர் கான் "பார்முக்கு' திரும்பினார். ஹர்பஜன் இல்லாத நிலையில், சுழலில்
அமித் மிஸ்ரா நம்பிக்கை தந்தார்.
ஆறுதல் ஜோடி:
மிர்புரில்
8வது விக்கெட்டுக்கு அதிக ரன்(59 ரன்) சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றனர்
இலங்கையின் சூரஜ் ரந்திவ், துஷாரா. இதற்கு முன் நியூசிலாந்தின் ஓரம்,
மில்ஸ் சேர்ந்து 41 ரன்(எதிர் வங்கதேசம், 2008) எடுத்திருந்தனர்.
சாதனை நோக்கி:
நேற்று
இந்தியா, இலங்கை அணிகள் 120வது முறையாக ஒருநாள் போட்டியில் மோதின.
இதன்மூலம் அதிக போட்டிகளில் மோதியுள்ள ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ்
அணிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டன. வரும் 13ம் தேதி நடக்கவுள்ள
முத்தரப்பு தொடரின் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதன்மூலம்
கிரிக்கெட் அரங்கில் அதிக ஒருநாள் போட்டியில் மோதிய அணிகள் வரிசையில்
முதலிடம் பிடித்து புதிய சாதனை படைக்க காத்திருக்கின்றன.
ஒருநாள் அரங்கில் 100 போட்டிகளுக்கு மேல் மோதிய இரு அணிகள்:
அணிகள் போட்டி
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் 120
இந்தியா-இலங்கை 120
இலங்கை-பாகிஸ்தான் 119
இந்தியா-பாகிஸ்தான் 118
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து 118
பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் 114
இந்தியா-ஆஸ்திரேலியா 103
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 101
ஸ்கோர் போர்டு
இலங்கை
தரங்கா(கே)கார்த்திக்(ப)தியாகி 0(4)
தில்ஷன்(கே)காம்பிர்(ப)ஜாகிர் 33(17)
சங்ககரா(கே)ரெய்னா(ப)யுவராஜ் 68(78)
ஜெயவர்தனா(கே)கோஹ்லி(ப)ஜாகிர் 5(13)
சமரவீரா எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்ரீசாந்த் 0(6)
கண்டம்பி-ரன் அவுட்(ஜாகிர்/கார்த்திக்) 1(11)
பெரேரா(கே)யுவராஜ்(ப)மிஸ்ரா 11(17)
ரந்திவ்(ப)மிஸ்ரா 56(76)
துஷாரா(கே)யுவராஜ்(ப)ஜாகிர் 28(44)
வெலகேதரா(ஸ்டம்)தோனி(ப)மிஸ்ரா 1(4)
லக்மல்-அவுட் இல்லை- 0(8)
உதிரிகள் 10
மொத்தம்(46. 1 ஓவரில் ஆல் அவுட்) 213
விக்கெட்
வீழ்ச்சி: 1-0(தரங்கா), 2-42(தில்ஷன்), 3-60(ஜெயவர்தனா), 4-61(சமரவீரா),
5-66(கண்டம்பி), 6-84(பெரேரா), 7-143(சங்ககரா), 8-202(துஷாரா),
9-209(ரந்திவ்), 10-213(வெலகேதரா).
பந்துவீச்சு:
தியாகி 7-1-46-1,
ஸ்ரீசாந்த் 7-0-38-1, ஜாகிர் 10-2-38-3, மிஸ்ரா 9.1-1-40-3, ரவிந்திர
ஜடேஜா 6-1-21-0, யுவராஜ் 4-0-18-1, ரெய்னா 3-0-9-0.
இந்தியா
கார்த்திக்(கே)சங்ககரா(ப)துஷாரா 48(40)
காம்பிர்(கே)வெலகேதரா(ப)பெரேரா 71(86)
கோஹ்லி-அவுட் இல்லை- 71(68)
யுவராஜ்-அவுட் இல்லை- 8(7)
உதிரிகள் 16
மொத்தம்(32.4 ஓவரில் 2 விக்.,) 214
விக்கெட் வீழ்ச்சி: 1-89(கார்த்திக்), 2-161(காம்பிர்).
பந்துவீச்சு: வெலகேதரா 5.4-0-51-0, லக்மல் 10-0-75-0, துஷாரா 6-0-33-1, ரந்திவ் 6-0-19-0, பெரேரா 5-1-32-1.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இத்தாலி அசத்தல் வெற்றி *"யூரோ' தொடர் பைனலுக்கு முன்னேறியது *ஜெர்மனி "அவுட்'
» கானா அணி அசத்தல் வெற்றி * முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறியது
» யுவராஜ் ராஜ்யம்!* "ஆல்-ரவுண்டராக' அசத்தல் * இந்தியா அபார வெற்றி
» டர்பன் டெஸ்ட் : இந்தியா அசத்தல் வெற்றி!
» "டுவென்டி-20: இந்தியா அசத்தல் வெற்றி * விராத் கோஹ்லி விளாசல் * இலங்கைக்கு மீண்டும் "அடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum