Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
10 மாதமாக ஒரே உடையுடன் ஈரான் சிறையில் வாடிய தமிழக மீனவர்கள்
Page 1 of 1

சென்னை:""போதிய உணவு, குடிநீர் இல்லாமல், பத்து மாதங்களாக, ஒரே உடையை அணிந்து கொண்டு, சொந்த ஊருக்கு திரும்ப வழி கிடைக்காதா என ஏங்கியபடி, பயங்கரமான கொடுமைகளை அனுபவித்து வந்தோம். எங்களை மீட்க உதவிய, தமிழக முதல்வருக்கு, நன்றிக்கடன் பட்டுள்ளோம்,'' என, ஈரான் சிறையில் இருந்து மீட்கப்பட்ட, 16 மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், காரன்காடு கிராமத்தை சேர்ந்த ஜெகராஜ், முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த மாயாண்டி, முத்துதர்மா; மோர்பண்ணை கிராமத்தை சேர்ந்த ராஜ கருப்பையா, சாகிப்; திருபாலைக்குடி கிராமத்தை சேர்ந்த காளியப்பன், காளி கண்ணதாசன், மாயகிருஷ்ணன், உமாசெல்வம்.கடலாடியை சேர்ந்த கிறிஸ்டின் ராஜ்; கன்னியாகுமரி மாவட்டம், ஆரோக்கியபுரத்தை சேர்ந்த மைக்கேல் ஆண்டனி, ஆண்டனி சுரேஷ், ஆரோக்கிய கெவின்ராஜ்; குளச்சலை சேர்ந்த ஜெயசீலன், அன்ஜைரோ; நாகப்பட்டினம் மாவட்டம், பழையாறை சேர்ந்த விமல்ராஜ், ஆகியோர், சவுதி அரேபியாவில் உள்ள, தனியார் மீன்பிடி நிறுவனத்தில், குத்தகை அடிப்படையில், மீனவர்களாக வேலை செய்து வந்தனர். ஈரான் கடல் எல்லைக்குள் புகுந்த இவர்கள் கைது செய்யப்பட்டு, 10 மாதமாக அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த, 16ம் தேதி, விடுவிக்கப்பட்டனர். நேற்று முதல்வரை சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
கொடுமை:
முதல்வரை சந்தித்த மீனவர்கள், சிறையில் அனுபவித்த கொடுமைகளை, கண்ணீர் மல்க தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:கிறிஸ்டின்ராஜ்: சிறையில், தினமும் காலை ஒரு பேரிச்சம்பழம், ஒரு ரொட்டி கொடுத்தனர். ரொட்டியை சாப்பிட முடியாது. மதியம் சிறிதளவு சாதம், ஒரு ஸ்பூன் குழம்பு கொடுப்பர். அதுவும் சாப்பிடும் நிலையில் இருக்காது. இரவு ஒரு ரொட்டி தருவர். எதையும் சாப்பிட முடியாது. உயிர் வாழ வேண்டும் என்பதற்காக, அவற்றை சாப்பிட்டோம். சிறை பிடிக்கப்பட்டதில் இருந்து, ஒரே துணியுடன் இருந்தோம். மாற்றுத்துணி தரவில்லை. சென்னை வரும் வரை, அதே துணியுடன் வந்தோம். இங்கு அதிகாரிகள் பேன்ட், சட்டை கொடுத்தனர்.சிறையில், குளித்துவிட்டு, ஈரத் துணியை அணிந்து கொள்வோம். அந்தத் துணி காய வேண்டும் என்பதற்காக, சிறிது நேரம் சிறைக்குள் நடப்போம். அனைவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம்.குடிக்க தண்ணீர் தருவதில்லை. கழிவறையில் உள்ள குழாயில் வரும் தண்ணீரை, கையில் பிடித்து குடிப்போம். வெளியில் சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்தோம். நாளடைவில், குடும்பத்தினரை சந்திக்காமலே, இறந்து விடுவோமோ என்ற பயம் ஏற்பட்டது.அப்போது எங்களுடன் இருந்த கைதிகள், "குடும்பத்தினரிடம் பேச வேண்டும் என வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருங்கள்' என்றனர். அதை ஏற்று, ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தோம். அதிகாரிகள் வந்தனர்; விவரம் தெரிவித்தோம்; ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
அதன்பின் ஈரான் நாட்டை சேர்ந்த கைதி ஒருவர் உதவியோடு, இரண்டு நிமிடம் மட்டும், குடும்பத்தினரிடம் பேச அனுமதி பெற்று பேசினோம்.அப்போது, முதல்வர் எங்கள் குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கியதும், அவர் எங்களை மீட்க, நடவடிக்கை எடுப்பதும் தெரிந்தது. சற்று நிம்மதி அடைந்தோம். தற்போது, சிறையில் இருந்து மீண்டு வந்தது, பெரிதும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
உமாசெல்வம், 40: ஈரான் கடற்படை, டிசம்பர், 14ம் தேதி எங்களை கைது செய்தது. தெரியாமல் செய்த தவறுக்காக, நாங்கள் சிறையில், நிறைய கஷ்டப்பட்டோம். சிறையில் சாப்பாடு மோசமாக இருந்தது.ஒரு நாளைக்கு, ஒரு ரொட்டியும், சிறிதளவு பேரிச்சம் பழங்களும், உணவாக தரப்பட்டது. தமிழக முதல்வரின் முயற்சியால், தற்போது மீட்கப்பட்டு, தாயகம் திரும்பி உள்ளோம்.
சாகிப், 30: எனக்கு குழந்தை பிறந்த செய்தி, சென்னை வந்த பிறகு தான் தெரிந்தது. ஈரான் சிறைவாசம், மிகவும் கொடுமையாக இருந்தது. சிறையில் அடைபட்ட பிறகு, வெளி உலகத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.சிறையில் இருந்த எங்களை, ஈரானில் உள்ள, இந்திய தூதரகத்துடன் பேச கூட அனுமதிக்கவில்லை. இன்னொரு முறை, அங்கு வேலை கிடைத்தாலும், செல்ல மாட்டேன்.
மீனவரின் உறவினர், ராசக்கிளி, 60: நாங்கள் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி, என் மகன் விமல்ராஜை, வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தோம். என் மகன் கைதான பிறகு, எங்கள் குடும்ப நிலை கேள்விக்குறியாக இருந்தது. முதல்வர் ஜெயலலிதா, ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். தற்போது, எங்களது பிள்ளைகளையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்துள்ளார்; அவருக்கு எங்களது நன்றி.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
உறவினர்கள் ஏக்கம்:
ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, 16 மீனவர்கள், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நன்றி கூறினர். அவர்களை பார்க்க, உறவினர்கள், அவர்களை விடுவிக்க போராடிய, தென்னிந்திய மீனவர் தோழமை அமைப்பு நிர்வாகிகள், தமிழக மீனவர் பேரவை நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்கள் முதல்வரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. "நிதியுதவி வழங்கிய முதல்வரை, நேரில் சந்தித்து, நன்றி தெரிவிக்க ஆசைப்பட்டோம். அதிகாரிகள் அனுமதிக்கவில்லை' என, தலைமைச் செயலக வளாகத்தில் காத்திருந்த, மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு
» தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு
» இலங்கைச் சிறையில் 8 மீனவர்கள்
» இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் விடுதலை
» இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் இன்று விடுதலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum