Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள் என கூறவில்லை: சீ.வி விக்னேஸ்வரன் மறுப்பு - தனிநாடு அல்ல சுயாட்சியையே கோருகிறோம்! இரா. சம்பந்தன் பா.உ.
Page 1 of 1

தமது கட்சி கேட்பது தனிநாடு அல்ல, சுயாட்சி அதிகாரமே என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக படித்து அறியுமாறு சகலரிடமும் கேட்டுக்கொள்வதாக கூறினார்.
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அரசு சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அன்று விடுதலைப் புலிகள் கேட்டதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கேட்பதாக ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார்.
ஆனால் விடுதலைப் புலிகள் அன்று என்ன கேட்டனர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று என்ன கேட்கிறது என்பதை ஜனாதிபதி கூறவில்லை.
எப்படியாவது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருக்கும் விடயங்களை முன்வைத்து சிங்கள மக்களை தூண்டிவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும் விஞ்ஞாபனத்தின் உண்மை என்ன என்பதை அறிந்த தமிழ் மக்கள் அந்த நிலைமைக்கு செல்ல மாட்டார்கள்.
நாங்கள் சகல தேர்தல்களிலும் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஐக்கியமான நாட்டிற்குள் வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி நிர்வாகத்தையே கேட்கிறோமே அன்றி தனிநாடு அல்ல. எந்த சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு தனிநாடு கேட்காது.
தமிழ் மக்கள் கௌரவமாக வாழும் சூழலை விரும்புகின்றனர். இதனால் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக வாசிக்க வேண்டும். அதனை முற்றாக வாசிக்காது மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கக் கூடாது.
அரசாங்கம் இதுவரை தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைக்கவில்லை. குறைந்தது தேர்தலுக்கு பின்னர் வடபகுதி மக்களுக்கு வழங்கப் போகும் நிவாரணங்கள் என்ன என்பதைக் கூட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடவில்லை.
இப்படி எதனையுமே செய்யாது எவ்வாறு வந்து எந்த அடிப்படையில் மக்களிடம் வாக்குகளை கேட்கின்றனர்?.
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஏற்று கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கத் தயார் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பில் சாதகமான பதிலை வழங்கும்.
வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கியது எதுமில்லை. தமிழ் மக்களை ஏமாற்றாது அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்க வேண்டும் என்றார்.
தமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள் என கூறவில்லை: சீ.வி விக்னேஸ்வரன் மறுப்பு
தமிழரும் சிங்களவரும் கணவன்- மனைவி உறவு போன்றவர்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவுபடுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் நான் த ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி ஒன்று வழங்கியிருந்தேன். அந்த செவ்வியின் சில விடயங்கள் குறித்து தற்போது காரசாரமாக பேசப்பட்டு வருகின்றது.
எனினும் த ஹிந்து பத்திரிகையின் செய்தியாளர் என்னிடம் 10 மேற்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தார். அத்தனை கேள்விகளுக்கும் கொடுத்த பதில்களில் ஒன்றாவது வரவில்லை.
ஆனால் இந்த ஒரு கேள்விக்கான பதில் மட்டும் திரிவு படுத்தப்பட்டு வந்துள்ளதுடன் நான் கூறிய முக்கியமான சில விடயங்களையும் அவர் குறிப்பிடாது விட்டுள்ளார் என்றார்.
அதேவேளை ஹிந்து பத்திரிகை தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள் பற்றிய தகவல் வெளியிட்ட விக்னேஸ்வரன்,
தென்னியந்திய இளைஞர் யுவதிகள் நடாத்திய போராட்டமும் அவர்கள் தமது உணர்வுகளைத் தெரிவித்த விதமும் எமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் அதனால் எமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்று கூறியிந்தேன்.
மேலும் அரசியல் கட்சிகள் எமது பிரச்சினைகளை தமது சுயநலனுக்காக பாவிக்ககூடாது என்றும் அப்படி பாவிப்பது ரெனிஸ் பந்தை அடிப்பது போல் இருக்கும்.
அத்துடன் பிரிவினையை ஒரு தீர்வாக வெளிநாட்டில் இருப்பவர்கள் கூறுவது ஒரு கணவன் மனைவி சம்பந்தப்பட்ட விடயத்தில் மூன்றாவது நபர் ஒருவர் குறுக்கே வந்து நீங்கள் திருமண நீக்கத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தேன்.
இதில் கணவன் மனைவி என்று தமிழரையும் சிங்களவரையும் நான் குறிப்பிடவில்லை. அந்த மூன்றாம் நபர் உட்புகுந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்.
அதன்படி மூன்றாம் நபர்கள் உட்புகுந்து நீங்கள் பிரிந்து விடுங்கள் என்று கூறுவது கணவன்- மனைவிக்கு எவ்வாறு இருக்குமோ அதுபோல தான் பிரிவினை ஒன்றே தீர்வு என்று தென்னிலங்கையில் உள்ள கட்சிகள் கூறுவதும் எமது நாட்டு அரசுடன் பேசும் போது பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என்று கூறினேன்.
எனினும் தென்னிந்திய மக்களுக்கும் எனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை அங்குள்ளவர்களில் பலர் எனது நண்பர்கள் இருக்கின்றனர்.
அவர்களது அனுசரனையும் உதவிகளும் எமக்கு வருங்காலத்தில் வடமாகாண சபையிலோ அல்லது எந்தவொரு சந்தர்ப்பத்திலோ தேவையானது. எனவே அவற்றை மறந்து அவர்களை நான் கொச்சைப்படுத்தியதாக குறித்த பத்திரிகை பிரசுரித்துள்ளமை எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள் என கூறவில்லை: சீ.வி விக்னேஸ்வரன் மறுப்பு
» புத்திசாலி மனைவி v/s கணவன்.
» கணவன்- மனைவி நகைச்சுவை
» மனைவி ரத்தத்தை குடித்த கணவன்
» கணவன், மனைவி உறவு மேம்பட…
» புத்திசாலி மனைவி v/s கணவன்.
» கணவன்- மனைவி நகைச்சுவை
» மனைவி ரத்தத்தை குடித்த கணவன்
» கணவன், மனைவி உறவு மேம்பட…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum