Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சுகம் ஒருவருக்கு... சோகம் மற்றவர்க்கு...?
Page 1 of 1
சுகம் ஒருவருக்கு... சோகம் மற்றவர்க்கு...?
அதிகமில்லை,
வெறும் 10 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் இருந்தால் போதும்; தடையற்ற
மின்சாரத்தை வழங்கி விடலாம். இன்னும் 3 ஆண்டுகளில் 6,900 மெகா வாட்
மின்சாரம் தயாரிக்க, 8,000 கோடி ரூபாய் வரை மின் உற்பத்தியில் முதலீடு
செய்ய இருப்பதாகக் கூறியிருக்கிறது தமிழக அரசு.
மகிழ்ச்சியான விஷயம். அதுவரை...?தென்னிந்திய
பஞ்சாலை சங்கத்தின் கணிப்புப்படி, 2012 வரைக்கும் மின் வெட்டு குறைய
வாய்ப்பேயில்லை. மாறாக, இன்னும் அதிகரிக்கவே நிறைய வாய்ப்புண்டு. அதாவது,
நாளுக்கு 3 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரம் வரை தொலைந்து போகும்
மின்சாரம், எதிர்காலத்தில் அவ்வப்போது தான் தலை காட்டும்.குழந்தைகள்
படிப்பு, சிறு தொழில்களின் எதிர்காலம், முதியோர் உடல் நலம், குடிநீர்
வினியோகம் என எது எக்கேடு கெட்டாலும் பிரச்னையில்லை; பகலெல்லாம் தொழில்
முடங்கி, இரவெல்லாம் தூக்கம் தொலைந்து, யார் என்ன பாடுபட்டாலும் எந்த
அவதியும் ஆட்சியாளர்களுக்குத் தெரிய வாய்ப்பேயில்லை.காரணம், அவர்கள்
தலைநகரத்துவாசிகள்.
மற்ற மாவட்ட கிராமங்களில், தினமும் 7 முறை
மின் வெட்டு, 6 மணி நேரம் மின் தடை என்பதெல்லாம் அவர்களுக்கு அந்நியச்
செய்தி. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு முரண்பாட்டைப்
பார்க்கவே முடியாது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும்
மின் தடை அமலில் இருக்கிறது. அந்த மாநிலங்களின் தலை நகரங்களான
திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத் என எந்த நகரத்துக்கும் இதில்
விதிவிலக்கு கிடையாது.ஆனால், தமிழகத்தில் சென்னைக்கு மட்டும் விதிவிலக்கு.
மற்ற பகுதிகளில் 3 மணி நேரம் மின் வெட்டு; உயர் மின்னழுத்த மின்
நுகர்வோருக்கு 30 சதவீத மின் வெட்டு, தமிழகத்தின் மொத்த மின் நுகர்வில் 20
சதவீதத்தை சென்னை மண்டலம் எடுத்துக் கொள்கிறது; மீதி 70 சதவீதத்தை 7
மண்டலங்கள் பகிர்ந்து கொள்கின்றன.
இவற்றில், ஒரு சில மாவட்டங்களில் 50 சதவீத
அளவுக்குக் கூட, மின் வினியோகம் நடப்பதில்லை. இத்தனைக்கும் சென்னையில்
என்ன மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதே தொகையைத்தான் மற்ற பகுதி
மக்களும் செலுத்துகின்றனர். இதையெல்லாம் விட கொடுமை, சிறு தொழில்
முனைவோர் படும் துன்பங்கள். எங்கோ வெளிநாட்டிலிருந்து இங்கே வந்து
சென்னையில் தொழில் துவங்கிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற
மின்சாரம். இங்கேயே பிறந்து, வளர்ந்து, பாரம்பரியமாய் தொழில் செய்வோர்க்கு
மின்தடை தாராளம்.இந்த முரண்பாட்டை களைய வேண்டுமென்று தென்னிந்திய பஞ்சாலை
சங்கம், ம.தி.மு.க., கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என பல்வேறு
அமைப்புகளும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் பகிரங்க கோரிக்கையே
வைத்துள்ளன.
ஆனால், ஆணையம் இதில் பெரிதாக என்ன செய்து விட
முடியும் என்பது தெரியவில்லை. குறைந்தபட்சம், தமிழகத்தின் பிற பகுதிகளில்
உள்ள மக்களுக்கு, அரசின் மீதுள்ள கோபத்தை, ஆணையம் முறையாக
வெளிப்படுத்தினாலே போதும். ஏனெனில், அதை நேரடியாகப் பார்த்தவர்கள் ஆணைய
உறுப்பினர்கள்தான்.மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக சமீபத்தில்,
மதுரை, கோவை, திருச்சியில் மின் ஒழுங்கு முறை ஆணையம் நடத்திய கூட்டத்தில்
பல்வேறு தரப்பினரும் தங்கள் கோபத்தை நேரடியாகப் பதிவு செய்திருந்தனர்.
அதற்கு, ஆணையத் தலைவர் பெரிதாக 'ரியாக்ஷன்' காட்டவில்லை.
தமிழகம் முழுக்க இருக்கும் மின் தட்டுப்பாட்டை
சென்னையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பு.
அப்படிச் செய்தால், மற்றவர்கள் மீதான மின் தடை சுமை குறையும் என்பதும்
உண்மை. ஆனால், அதைச் செய்ய அரசு முன் வருமா என்பது சந்தேகம்தான்.சுகம்
ஒருவர்க்கு, சோகம் மற்றவர்க்கு என்பது எந்த வகை நியாயம் என்பதுதான் தலை
நகரம் தவிர்த்த தமிழக மக்களின் கேள்வி. என்ன பதில் சொல்லப்போகிறது தமிழக
அரசு?
piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» திருப்தியான சுகம்!
» கருவறைச் சுகம்
» இன்று விஷ ஊசி மூலம், பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
» பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு: ஒருவருக்கு தலை துண்டிப்பு
» நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!
» கருவறைச் சுகம்
» இன்று விஷ ஊசி மூலம், பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
» பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு: ஒருவருக்கு தலை துண்டிப்பு
» நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum