Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
“ அடி முதல் முடி வரை “ – இயற்கை சார்ந்த குளியல் முறை :
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
இந்த முறை என் பெரியப்பா. அவர்தான் இந்த கட்டுரைக்கான உந்துசக்தி.எப்பொழுதும் வெள்ளை கதர் வேட்டி,சட்டை அணிந்து சைக்கிளிலேயே உலா வருவார்.மிகவும் எளிமையான மனிதர்.அவரிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட பழக்கம்,என்னை சிறு வயது முதலே ஈர்த்து வந்துள்ளது.அது என்னவென்றால் அவருடைய குளியல் முறை ஆகும்.
தினமும் காலை எழுந்தவுடன் துண்டை தோளில் போட்டுக் கொண்டு கிளம்புவார். வீட்டிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் ஓடும் தென் வெள்ளாற்றை, சைக்கிளை மிதித்து சென்றடைவார்.பிறகு அங்கு குளித்து முடித்து விட்டு வீடு திரும்பி பின் பணிக்கு செல்வார்.
கோடை காலங்களில் ஆற்றில் நீர் இல்லாத போது,ஊருக்கு வெளியே அமைந்துள்ள குளங்களை தேர்வு செய்து குளிப்பார்.அவர் வீட்டில் குளித்து நான் பார்த்ததே இல்லை.ஆனால் அவர், மற்ற எல்லா விஷயங்களிலும் உடல் நலத்தை அப்படியொன்றும் பெரிதாக பேணுபவர் இல்லை;ஏனென்றால் அவரிடம் புகைக்கும் பழக்கம் உண்டு.இருந்தபோதிலும் இந்த குளியல் முறை, அவரிடம் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதை பல தருணங்களில் அறிய முடிந்தது.
இதில் என்ன இன்பத்தை கண்டார் இந்த மனிதர் ?.ஏன் இவ்வளவு தூரம் சைக்கிளை மிதித்துச் சென்று தினமும் ஆற்றில் குளிக்க வேண்டும் ?. இதன் பின்னணி என்னவாக இருக்கும். வாருங்கள் விடையைத் தேடுவோம்.
மனித உடல் என்பதனை ஒரு உயிருள்ள எந்திரம் ( Bio Engine ) எனக் கொள்ளலாம்.ஏனென்றால் பல்வேறு எந்திரங்கள் சேர்ந்து செய்யக் கூடிய பல பணிகளை, மனித உடலே செய்வதால் அவ்வாறு கொள்ளலாம்.
இத்தகைய உடலினை சிறப்பாக செயல்பட வைப்பதற்கு நம்முன்னோர்கள் பின்வரும் விதியை கடைபிடித்து வந்துள்ளனர்.அது வாதம், பித்தம் ,கபம் என்னும் மூன்றையும் மிகாது குறையாது காப்பதாகும்.இந்த மூன்றும் சமநிலையில் இருந்தால் உடல் நன்றாகச் செயல்படும்.
அதாவது இந்த மூன்றும் குறைந்தாலோ, மிகுந்தாலோ நம் உடல் நோய் வாய்ப்படும்.இதையே திருவள்ளுவர் மருந்து என்னும் 95 - வது அதிகாரத்தில் “ மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று “ என குறிப்பிடுகின்றார்.
இந்த மூன்றில் பித்தம் என்பதை பற்றி பார்ப்போம்.வெப்ப மண்டல பகுதியில் நாம் வசிப்பதால், நம் உடலில் பித்தம் ( வெப்பம் ) என்பது ஆண்டின் பெரும்பாலான காலங்களில் அதிகரித்தே காணப்படும்.இவ்வாறு பித்தம் அதிகரித்தால் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படும்.
சரி, உடலின் வெப்பம் அதிகரித்து விட்டதை எவ்வாறு உணர்வது ?.
உடலை பற்றிய நல்ல புரிதல் இருந்தால், இதனை நாம் நம் உடலிலேயே நன்கு உணர முடியும்.மேலும் இதனை பின்வருமாறும் உறுதிபடுத்திக் கொள்ளலாம்.சில சமயங்களில் நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்த அல்லது படுத்திருந்த இடத்தை தொட்டு பார்த்தால், அது சூடாக இருப்பதை உணர முடியும்.
எனவே இந்த நிலையில், உடலின் அதிகப்படியான வெப்பத்தை தணிக்க வேண்டியது அவசியமாகின்றது.
இதனை ஒட்டி தொல் தமிழர்களின் வாழ்வில் குளியல் என்பது பின்வருமாறு அணுகப்படுகின்றது.குளியல் என்பதன் தலையாய நோக்கம், உடல் என்னும் எந்திரத்தை குளிர்விக்கும் ( Cooling Method ) ஒரு செயலாகும்.உடலை தூய்மை படுத்துதல் என்பது இரண்டாவதாகும்.
இதில் குளியல் என்பது முதலில் காலின் அடிப்பகுதியை நீரால் குளிர்விக்க வேண்டும். பின் உரிய நேர இடைவெளிகள் கொடுத்து, ஒவ்வொரு பகுதியாக மேல் நோக்கி நகர்ந்து நீரால் குளிர்விக்க வேண்டும்.இறுதியாக தலைப் பகுதியை நீரால் குளிர்விக்க வேண்டும்.இதுவே இயற்கை சார்ந்த குளியல் முறை ஆகும்.இதனை “ அடி முதல் முடி வரை “ குளியல் என அழைக்கலாம்.
இத்தகைய முறையில் முதலில் கால் பகுதியை குளிர்விக்கும்போது, இந்த தகவல் உடனே மூளையை சென்றடைகின்றது.இதனைத் தொடர்ந்து நம் உடல் குளியலை எதிர்கொள்வதற்கு முற்றிலும் தயார் செய்யப்படுகின்றது.இப்பொழுது அடுத்தடுத்த பகுதிகளையும் முறையே குளிவிக்கும்போது, நம் உடலின் அதிகப்படியான வெப்பம் சீராக வெளியேற்றப்படுகின்றது.இவ்வாறாக இந்த முறையில் உடல் சீராக குளிர்விக்கப்படுகின்றது.
இந்த முறையில் குளிப்பதால் சளி படிப்பதில்லை.இன்றும் சில முதியவர்கள் இதனை கடைபிடித்து வருவதை நாம் காணலாம்.நம் பாட்டிமார்கள் குழந்தைகளை தம் முழங்காலில் கிடத்தி குளிப்பாட்டும் போது இவ்வாறு செய்வதை அறியலாம்.குழந்தைகளை, இவ்வாறு காலில் கிடத்தி குளிப்பாட்டும் முறைதான் உலகிலேயே எளிய,பாதுகாப்பான மற்றும் சிறந்த முறையாக இருக்கக் கூடும்.
மேலே நாம் விவாதித்தது அன்றாட குளியல் முறை ஆகும்.இது தவிர எண்ணெய்க் குளியல் என்னும் ஒரு வழக்கத்தையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.இந்த முறையில் உடலின் உள் உறுப்புகளில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேற்றப்படுகின்றது.
கோடைக் காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது, அன்றாட குளியலை தாண்டி வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இதில் எண்ணெய் உடல் முழுவதும் கீழிருந்து மேலாக தடவப்படுகின்றது.பின் அரை மணி நேரம் உடம்பு எண்ணெயில் ஊறுகின்றது.பிறகு சீயக்காய் கொண்டு தேய்த்து குளிக்கப் படுகின்றது.இதுவே எண்ணெய்க் குளியல் ஆகும்.
இதில் உடலில் எண்ணெய் தடவப்படும்போது, உடலின் மேற்பரப்பு குளிர்ச்சி அடைகின்றது. இந்த குளிர்ச்சி, உடலின் உள் உறுப்புகளில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளிப்படுவதால் சமன் செய்யப்படுகின்றது.இவ்வாறு உடலின் உள்ளுறுப்புகள் குளிர்ச்சி அடைகின்றன.
மேலும் சீயக்காய் கொண்டு குளிப்பது உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தருகின்றது.சீயக்காய் பயன்பாடு பல்வேறு தோல் நோய்களிலிருந்து நம்மை காக்கின்றது ; முடி உதிர்தல்,பொடுகு மற்றும் நரை முடியை தடுக்கின்றது.
ஆனால் இந்த அன்றாட மற்றும் எண்ணெய்க் குளியல்களை வீட்டில் மேற்கொள்வதை விட ஆறு,ஏரி,குளம் மற்றும் கிணறு போன்ற நீர் நிலைகளில் மேற்கொள்ளும் போது இதன் பலன் பலமடங்கு அதிகரிக்கும்.
இதுவரை நாம் விவாதித்ததிலிருந்து நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயல்களும் மிகவும் பொருள் மிக்கவை என அறியலாம்.அவர்களின் நுட்பமான அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
முன்னோர்களால் வரையறுக்கப்பட்ட இந்த குளியல் முறை காலம் காலமாக தொடர்ந்து இன்று வரை அரிதாகவாவது கடைபிடிக்கப் பட்டுவருகின்றது. இதன் தொடர்ச்சியாகத்தான், என் பெரியப்பா நீர் நிலைகளில் குளிக்கும் பழக்கத்தை பெரிதும் விரும்பி மேற்கொண்டார் என நினைக்கின்றேன்.
சரி, இன்றைய தேதியில் குளியல் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என பார்ப்போம்.
இன்று குளியலறையில் ஷவரில் குளிக்கும்போது முதலில் தலையில் நீர் விழுகின்றது.ஆனால் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பாணியில் சொன்னால் தலையில்தான் தலைமைச் செயலகம் ( மூளை ) உள்ளது.நாளாவட்டத்தில் இது மெல்ல மெல்ல பாதிப்படைகின்றது.மேலும் இம்முறையில் உடல் வெப்பநிலை சீராக குளிர்விக்கப்படுவதில்லை.இதுவே சில நோய்களுக்கு காரணமாக அமையலாம்.( குறிப்பு : தலைமைச் செயலகம் என்பது அமரர்.சுஜாதா அவர்கள் மூளையப் பற்றி எழுதிய நூல் ஆகும்.)
இன்று தவறான உணவு முறையும், அதிகரித்து வரும் புவி வெப்பமும் ( Global Warming ) நம் உடல் வெப்பநிலையை தொடர்ந்து மிகுதியாகவே வைத்திருக்கின்றது.இயற்கையாக குளிர்ச்சி தரும் மரங்களும் வெட்டப்படுகின்றன; நீர்நிலைகள் தொடர்ந்து காணாமல் போகின்றன.
இவ்வாறு உடலில் தொடர்ந்து நீடிக்கும் மிகுதியான வெப்பம், உள்ளுறுப்புகளை கடுமையாக பாதிக்கின்றது.உடலின் முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்கள் ஏற்பட இது காரணமாகின்றது.
மேலும் பெண்களுக்கு கருப்பை என்ற உறுப்பும், அதனை ஒட்டிய செயல்பாடுகளும் இருப்பதால் இந்த கருத்து கூடுதல் கவனம் பெறுகின்றது.
எனவே உடல் வெப்பத்தை கட்டுக்குள் வைக்க, இன்று இயற்கை சார்ந்த குளியல் அவசியமாகின்றது.
ஆனால் இன்றைய நிலையில் அதிகரித்து வரும் பொருளாதார தேவைகளும், அதனை ஒட்டி அதிகரிக்கும் வேலை பளுவும் இயற்கை சார்ந்த குளியல் முறைகளை மேற்கொள்வதற்கு தடையாக உள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை.
வேறு வழியில்லை.சிறிது சிறிதாகவோ, இயன்றவரையிலோ இம்முறைகளை மெல்ல மெல்ல முயற்சித்து பார்க்கலாம்.பார்க்க வேண்டும்.அதாவது அடி முதல் முடி வரை குளியல், எண்ணெய் + சீயக்காய் குளியல் போன்றவற்றை அவ்வப்போது மேற்கொள்ளலாம்.ஏனென்றால் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.வரும் முன் காப்பதே சிறப்பு.
ஆனால் நாங்கள் எப்பொழுதும் ஏசியிலேயே ( Air Conditioner ) இருக்கின்றோம்.எங்களுக்கு அவசியமில்லை என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம்.பானைத் தண்ணீர் தரும் குளிர்ச்சியை Fridge தண்ணீர் தருவதில்லை.அது போல் ஏசி காற்று ஒருபோதும் அரசமர காற்றுக்கோ,வேப்ப மர காற்றுக்கோ ஈடாகாது.எனவே ஏசி காற்று உடலின் உள்ளுறுப்புகளை சீரான வெப்பநிலையில் வைத்திருக்க வாய்ப்பில்லை.
எனவே இனி இயன்றவரை, இயற்கை சார்ந்த குளியல் முறைகளை மேற்கொள்வோம்.
இந்த செய்தியினை நீங்கள் நலம் விரும்பும் நபர்களுக்கு தெரியப்படுத்தவும்.இதன் மூலம் அவர்களை கோடையின் வெம்மையிலிருந்தும்,அதனால் ஏற்படும் நோய்களிலிருந்தும் ஓரளவாவது காக்கலாமே.
இதனை அனைவருக்கும் Share செய்யவும்.
நன்றி
இப்படிக்கு,
தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் பக்கம்.

Similar topics
» பின் தூங்கி முன் எழல் – இயற்கை சார்ந்த தூக்க முறை :
» இயற்கை சார்ந்த உணவுகள்.
» இயற்கை சார்ந்த உணவு முறைகள்
» இயற்கை சார்ந்த உணவு முறைகள்
» இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum