Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உணவுப் பாதுகாப்பு சட்டம்... விவசாயிகளுக்கு உலை வைக்கும் திட்டம்!
Page 1 of 1

‘60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாய் சோறுகூட கிடைக்காமல் கிடந்தவர்கள், இன்று பட்டினியில்லாமல் இருக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
"இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்க எத்தனை மணிமேகலை வேண்டும். அந்த வகையில், ஏழை மக்களின் பசியை போக்க, மனிதாபிமானத்தோடு சோனியா காந்தி நடந்து கொண்டிருக்கிறார்" என்று சோனியாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
"விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவிட்டுப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தில்... உணவுப் பாதுகாப்புச் சட்டம்... ‘வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும் கருணைச் சட்டம்!" என்று வள்ளலார் ரேஞ்சுக்கு 'அருட்பா' பாடிக் கொண்டிருக்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.
60 ஆண்டுகளாக சோறு இல்லாமல் இருந்தவர்களுக்கு... இத்தனை ஆண்டுகள் கழித்து சோறு போடுவதே முதல் குற்றம். இந்தக் குற்றத்தை செய்த.... இத்தனை ஆண்டுகளாக துணை நின்ற... அத்தனை அரசியல்வாதிகளுக்குமே 'கருடபுராண' தண்டனைகள்கூட தரலாம். அப்படியிருக்க... ஆளாளுக்கு இவர்களே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
உணவுப் பாதுகாப்பு என்பது உண்மையிலேயே உன்னதமான விஷயம்தான். ஆனால், இப்படியெல்லாம் சட்டத்தைப் போட்டு வைத்துவிட்டால் மட்டும் எங்கிருந்து வரும் உணவு பாதுகாப்பு?
இந்தியாவில் விவசாய உற்பத்தி என்பது தொடர்ந்து சரிந்தே கிடக்கிறது. விளைநிலங்கள் தரிசாக போடப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படியிருக்க... ஒவ்வொரு ஏழைக்கும் எந்த நிலத்திலிருந்து கோதுமை, அரிசி, பருப்பு இதையெல்லாம் விளைவித்துக் கொடுக்கப் போகிறார்கள் சோனியாவும்... மன்மோகன் சிங்கும். ஒருவேளை அமெரிக்காவிலிருந்து வழக்கம் போல இறக்குமதி செய்வார்களோ?
எதையெடுத்தாலும் இறக்குமதி என்று போனதால்தான் நாடு இன்று நாசமாக போய்க் கொண்டிருக்கிறது என்று மன்மோகன் சிங் அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் விளைபொருட்களை இறக்குமதி செய்ய துட்டுக்கு எங்கே போவார்கள்?
விவசாய வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆண்டுதோறும் நகர்ப்புறவாசிகளாக மாறிக் கொண்டுள்ளனர். ஏன், கிராமங்கள்கூட நகர்ப்புறங்களாக வடிவெடுத்துக் கொண்டுள்ளன. அங்குள்ள மக்களும் விவசாய வேலைகளை செய்வதைவிட, கொத்தனார், ஜவுளிக்கடை, மருந்துக்கடை, ஹோட்டல் தொழில் என்று மாறிக் கொண்டுள்ளனர். காரணம், நாள் முழுக்க வெயிலிலும், மழையிலும் காய்ந்து வயல்களில் வேலை செய்யவேண்டியுள்ளது.
ஆனால், அதற்குரிய பலன் இல்லை. அதேசமயம், மற்ற வேலைகளில் எளிதாக சம்பாதித்துவிட முடிகிறது. பிறகெப்படி விவசாயிகளும்... விவசாய தொழிலாளர்களும் விளைநிலங்களையே நம்பிக்கொண்டு காலத்தை ஓட்ட முடியும்?
'விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு கட்டுப்படியான விலையைக் கொடுங்கள்' என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான கமிட்டி, பல ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கையை சமர்ப்பித்தும், இந்தக் குழுவை நியமித்த மத்திய அரசே அதைத் திரும்பிப் பார்க்கவில்லை.
கட்டுப்படியான விலை இல்லதாதால்... தொழிலாளர்களுக்கு ஓரளவுக்கு மேல் சம்பளமும் கொடுக்க முடியவில்லை. இதனால் நாடு முழுக்கவே விவசாய தொழிலாளர் பற்றாக்குறை பந்திபோட்டு உட்கார்ந்திருக்கிறது. போதாக்குறைக்கு, நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்கிற பெயரில், சுரண்டல் திட்டம் ஒன்று நடைமுறையில் இருக்கிறது.
இதன் காரணமாக பலர் சோம்பேறிகளாக மாறிக் கொண்டுள்ளனர். இந்தத் திட்டத்தை விவசாயத்துடன் இணைக்கலாம் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள் (கேரளாவில் இப்படி விவசாயத்துடன் இணைத்து வெற்றிகரமாக இத்திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்). அதைச் செய்வதற்கும் மத்திய அரசு முனையவில்லை.
இப்படி ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயமே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சூழலிலும், 'விவசாயிகளே விளைநிலங்களை விட்டு வெளியேறுங்கள்' என்று மன்மோகன் சிங் வகையறா... கூவிக் கொண்டிருக்கிறது.
எதற்குத் தெரியுமா... பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டு பண முதலைகளுக்கும் அந்த நிலங்களையெல்லாம் பட்டா போட்டுக் கொடுத்துவிட்டு, அதில் கார்ப்ரேட் விவசாயத்தை நடத்தத்தான். அதன்பிறகு, இந்த கார்ப்பரேட் முதலாளிகள் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிடும்.
சிமெண்ட், இரும்பு, மருந்து என்று அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு வாங்குவதுபோல, விளைபொருட்களையும் அவர்கள் சொல்லும் விலைக்குத்தான் வாங்க வேண்டியிருக்கும். இன்றைக்கு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலைக்கு உத்தரவாதம் தராத இதே அரசு... நாளைக்கு, இந்த கார்ப்பரேட் விவசாயிகள் விளைவிக்கும் கத்திரிக்காயை கிலோ 200 ரூபாய்க்கும்... முருங்கைக்காயை கிலோ 300 ரூபாய்க்கும் மறுபேச்சே இல்லாமல் விலை கொடுத்து வாங்கி, 'உணவுப் பாதுகாப்புச் சட்ட'த்தை நிறைவேற்றுவார்கள்!
இதன் மூலமாக 'இறக்குமதி'யைத் தவிர்க்கலாம். ஆனால், இந்தியாவில் வாழ வழியில்லாமல் ஏகப்பட்ட விவசாய உயிர்கள் 'ஏற்றுமதி' ஆக ஆரம்பித்துவிடுமே. அதைத் தடுக்க, எந்த 'மணிமேகலை' புறப்பட்டு வருவாரோ!
-ஜூனியர் கோவணாண்டி
news.vikatan

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» மாதம் ரூ.1000 ஓய்வூதியம், திருமணத்துக்கு ரூ.10 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்!
» பணியிடத்தில் பாலியல் வன்முறை பாதுகாப்பு சட்டம்
» விமான உணவுப் பொட்டலத்தில் வறுகடலையுடன் உயிர்ப்புழுக்கள் Read more about விமான உணவுப் பொட்டலத்தில் வறுகடலையுடன் உயிர்ப்புழுக்கள்
» நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ----- பகுதி 1--உங்களுக்கு உதவும் சட்டங்கள்
» என் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயட்டும் : ராமதாஸ் சவால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum