TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm

» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட
by velang Sun Mar 12, 2017 9:57 pm

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:01 pm

» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 7:30 pm

» வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த
by velang Sat Mar 11, 2017 10:21 pm


உங்கள் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஹட யோகா

Go down

HOT உங்கள் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஹட யோகா

Post by அருள் on Thu Aug 22, 2013 9:22 am

இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பாரம்பரிய ஹட யோகத்தை பற்றி பேசும் சத்குரு, சூரிய சந்திர சூழற்சி நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்கி, அதிலிருந்து விடுபடும் எளிய சூத்திரங்களையும் விளக்குகிறார். இந்த வார ஸ்பாட் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஹட யோகமாய்… படித்து மகிழுங்கள்!
 
 
[You must be registered and logged in to see this link.] தினத்தில், இரண்டாவது வருடாந்திர ஹட யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பை யோகா மையத்தில் நாம் தொடங்கினோம். அடுத்த 21 வாரங்களுக்கு தீவிர பயிற்சி பெறவும், பாரம்பரிய ஹட யோகாவிற்கு தங்களை பரிச்சயப்படுத்திக் கொள்ளவும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் 85 பேரை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.
[You must be registered and logged in to see this link.]
யோகா என்றால் பலபேருக்கு பல விஷயங்களாக இருக்கின்றது. ஆனால் நரகத்திற்குச் செல்வதை தவிர்க்க ஒரு வழி என்பது மட்டும் நிச்சயமான விஷயம். ஏனென்றால் உங்களை நரகத்திற்கு அனுப்பினாலும் ஹட யோகத்திற்கு பிறகு அதை சொர்க்கமாகவே பார்ப்பீர்கள். இதற்குபிறகு உங்களை யாராலும் சித்ரவதை செய்ய இயலாது. இந்த சுதந்திரம் மிகச் சிறியது என்று நினைத்துவிட வேண்டாம். உங்கள் உடல், மனம், சக்தி நிலைகளைக் கொண்டு வாழ்க்கையை உணர்வதற்கான ஒரு தளத்தை உருவாக்கும் அற்புத விஞ்ஞானம் [You must be registered and logged in to see this link.]. ஆனால் உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் எவ்வளவு ஆழமாக இருக்கின்றன என்பதுதான் உங்கள் முன் உள்ள கேள்வி.
உங்கள் ரசாயனத்தை ஏதோ ஒரு முறையில் மாற்றுவது என்பது அறிவுசார்ந்த ஒரு விஷயமாக இருக்காது. உங்கள் ரசாயனத்தை யோகா மூலமோ அல்லது போகா மூலமோ மாற்றினால் உங்களுக்கு இனிமையான அனுபவம் கிடைக்கும். ஆனால் இனிமை தேடுவது மட்டும் ஒரு அறிவார்ந்த விஷயமாக இருக்காது. வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் அனுபவமாக கைக் கொள்ளக்கூடிய ஒரு திறமையே ஹட. எந்தவொரு அனுபவமும் உங்கள் உடல் மனக் கட்டமைப்பை தகர்க்கவோ அல்லது உங்கள் சக்திநிலையைக் குலைக்கவோ முடியாத அளவிற்கு உருவாக்கப்பட்ட முறையே ஹட யோகா.
[You must be registered and logged in to see this link.]
உடலின் இரு முக்கிய சூத்திரதாரிகளான [You must be registered and logged in to see this link.] இடையே ஒரு இணக்கத்தை உருவாக்கும் முறையை ஹட என்கிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இந்த இரண்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆசனங்களை விடுங்கள், நடப்பது போன்ற எளிமையான விஷயத்தில் இருக்கும் உடலியக்க விதிகள் கூட ஒருவர் புரிந்து கொள்ள மிகவும் சிக்கலானவை.
உங்கள் காதிலுள்ள ஒரு துளி திரவத்தை எடுத்துவிட்டால், உங்களால் திடீரென நிற்க இயலாமல் போய்விடும். ஏனெனில், அத்திரவம் உங்கள் சமநிலையை தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் கால்கள் வலுவானவையாக இருக்கலாம், ஆனால் அதி வேகமாக சுழன்று, பயணம் செய்து கொண்டிருக்கும் இந்த கோள வடிவ கிரகத்தில் அவை நடப்பதென்பது பல்வேறு சக்திகளுடன் சம்பந்தம் உடையது.


ஹட யோகா என்பது இந்த சக்திகளுக்கு பணிவதன் மூலம், அந்த சக்திகளை பயன்படுத்தி உங்கள் வாழ்கை அனுபவத்தை உணர அல்லது வாழ்க்கையின் பெரும்பகுதி உங்களுக்கு கிடைக்க செய்வதற்கான ஒரு வழி. ஒவ்வொரு மனிதனின் தேடுதலும் அதுதான். நீங்கள் [You must be registered and logged in to see this link.], அறிவு, செல்வம், அன்பு இப்படி எதன் பின்னால் ஓடினாலும், அடிப்படையில் வாழ்க்கை என்னும் கனியின் பெரும்பகுதியைச் சுவைத்திடவே அனைவரும் விரும்புகின்றனர். முழுமையாக சுவைத்திட வேண்டும் என்றால், அதைச் செரிமானம் செய்யும் திறனும் உங்களுக்கு இருக்க வேண்டும். அது மிக முக்கியம்.
[You must be registered and logged in to see this link.]
பாரம்பரிய ஹட யோகா என்பது உங்கள் உடல் மற்றும் மனத்தை தயார் செய்கிறது. அனைத்திற்கும் மேலாக உங்கள் சக்தி நிலையை பலப்படுத்தி, எப்பேர்பட்ட அனுபவத்தையும் தாங்கிக் கொள்ளும் திறத்தை வழங்குகிறது. நீங்கள் வாழ்க்கை என்று எதை அழைக்கிறீர்களோ அவற்றை கையாளும் திறன் படைத்ததாக உங்கள் சக்தி உடல் இருக்கும்.
இனிமையானதோ இனிமையற்றதோ, எது நிகழ்ந்தாலும் அவற்றை உங்கள் நலனுக்காகவே மாற்றும் திறன் கொண்ட உடல் கட்டமைப்பை உருவாக்குவதே ஹட யோகா. வாழ்க்கை உங்கள் மீது எதை வீசப் போகிறது என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் அதிலிருந்து நீங்கள் எதை உருவாக்கலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். இது நிகழ, உங்களுக்கு சரியான உடல், மனம், மற்றும் சக்தி நிலை தேவை. இவை இல்லாதபட்சத்தில், வாழ்வின் முறைகள் உங்களை முழுவதுமாக அழித்துவிட முடியும். மிகவும் நல்லவராக, இனிமையானவராக உங்களை நீங்களே நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் யாராவது ஏதாவது ஒன்று உங்களுக்கு செய்துவிட்டால், நீங்கள் நொறுங்கிப் போவீர்கள்.
[You must be registered and logged in to see this link.]
ஹட என்பதன் இன்னொரு அர்த்தம் பிடிவாதம். நீங்கள் பிடிவாதமாய் இருக்கிறீர்கள், எதையும் சுலபமாய் விட்டுவிடும் ரகம் அல்ல. ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள், அவர்கள் பாதையில் மலர்களை வீசினால் மட்டுமே தொடர்ந்து செல்வார்கள், அசிங்கத்தை வீசினால் ஓடி விடுவார்கள். ஆனால் நீங்கள் பிடிவாதமானவர் என்றால் வாழ்க்கையில் பூ, புழுதி என்று எதை வீசினாலும் பொருட்படுத்தாது எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்வீர்கள். இந்த உலகம் உங்கள் மேல் எதை வீசினாலும் அது உங்களை பாதிக்காது. நீங்கள் அதுபோன்ற மனிதராய் உருவாக வேண்டுமென்றால் ஹட யோகா ஒரு நல்ல முறை. உங்கள் விதியை தீர்மானித்து, அதை செயல்படுத்த ஹட யோகா ஒரு சக்தி வாய்ந்த கருவி.
அன்பும் அருளும்,
[You must be registered and logged in to see this image.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum