Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொன்சேகா தரப்போகும் தலையிடி!
Page 1 of 1
பொன்சேகா தரப்போகும் தலையிடி!
சவாலுக்கே இடமில்லாத பெரு வெற்றியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பு இந்தப் பொதுத் தேர்தலில்
ஈட்டியுள்ளது என்பது சந் தேகத்துக்குரியதல்ல. இன்னும் சுமார் பத்து
ஆசனங்களை எதிர்த் தரப்பில் இருந்து சுருட்டிக் கொண்டால் இந்த நாட்டின்
அரசியல் தலைவிதி யைத் தம்மிஷ்டப்படி மாற்றியமைக்கக் கூடிய வகையில்
அரசமைப்பைத் தன் எண்ணப்படி நிலைநிறுத்தத்தக்க விதத் தில் நாடாளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான் மையை அவர் பெற்றுக்கொண்டு விடுவார்
என்பதிலும் ஐயமில்லை. அப்படி எதிரணியிலிருந்து தேவையான எண்ணிக்கை
எம்.பிக்களை வாரி எடுப்பதும் அவருக்கு அப்படியொன்றும் சிரம மான காரியமாக
இருக்கப் போவதில்லை என்பதும் கூட உறுதி.
இப்படி ஒருபுறம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய பலமும், நாட்டின்
அதிகாரக் கட்டமைப்பையே தன் விருப்பப் படி மாற்றி அமைக்கக்கூடிய விதத்தில்
நாடாளுமன்றப் பல மும் ஒருங்கே பெற்று அசைக்க முடியாத தலைவராக உரு
வெடுத்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அசைக் கக்கூடிய தேர்தல்
முடிவொன்றும் இப்போது வெளிவந்திருப் பது பலராலும் கவனிக்கப்படாமல் உள்ளமை
வியப்புக்குரியதே.
அது கொழும்பு மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுதான். அங்கு ஜனநாயகத் தேசிய
முன்னணியின் சார்பில் அதன் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற
எம்.பியா கியிருப்பது பற்றிய தேர்தல் முடிவுதான் அது. இந்தப் பொதுத்
தேர்தலில் தமக்காக ஒரு சொல் கூட வாய் திறந்து பிரசாரம் செய்யக்கூடிய
வாய்ப்பு ஜெனரல் பொன் சேகாவுக்குக் கிடைக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பிரதான
வேட்பாள ராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டி யிட்டு, ஆளும்
தரப்பினர் வயிற்றில் கடைசிவரை புளியைக் கரைத்த பொன்சேகா, அந்தத் தேர்தல்
முடிந்து இரண்டு வாரங் களுக்குள்ளேயே கைது செய்யப்பட்டு இராணுவச் சிறைக்
குள்ளே அடைக்கப்பட்டு அடக்கப்பட்டு விட்டார். இராணுவச் சிறைக்குள்
"படுத்துக்கொண்டே' இந்தத் தேர்தலில் தலைநகரில் சுமார் ஒரு லட்சத்தை
நெருங்கும் அளவுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தேறியிருக்கின்றார்
தெரிவாகியிருக்கின்றார் பொன்சேகா.
ஆளும் தரப்பு இத்தகைய பெரு வெற்றியை அமோக வெற்றியை ஈட்டியிருக்கையில்
நான்கு, ஐந்து சக உறுப்பினர் களோடு ஜனநாயகத் தேசிய முன்னணியின் தலைவர்
ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்றுக்கு வந்து அப்படி என்ன பெரிதாகக்
"கிழித்து'விடுவார் என்று கேள்வி எழுவது நியாயமானதே. ஆனால் ஜெனரல்
பொன்சேகாவை நாடாளுமன்றுக்கு வர அனுமதிப்பதுதான் ஆளும் தரப்புக்கு பெரும்
சிக்கலாகி விடும் விவகாரமாகும். ஜெனரல் பொன்சேகா நடாளுமன்றத் துக்கு வர
அனுமதிக்கப்பட்டு, எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்து, நாடாளுமன்றத்தில்
சுதந்திரமாக உரையாற்ற அனுமதிக்கப்படு வாராயின் அதன் விளைவு ஆட்சிப்
பீடத்தில் இருப்போருக் குப் பெரும் விபரீதமாகிவிடும் என்பது
வெளிப்படையானது. தனக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது
அதிகாரபீடமும் எடுத்த கெடுபிடி நடவடிக்கைகளால் கடும் ஆத்திரத்தில் மனக்
குமைச்சலில் இருக்கின்றார் ஜெனரல் பொன்சேகா என்பதும் தெரிந்த அம்சம்தான்.
கடந்த வருடம் முற்பகுதியில் வன்னிப் பெருநிலப்பரப் பில் தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்துக்கு எதிராக அரசுப்படைகள் மேற்கொண்ட இறுதி யுத்தத்தின்
போது கட்ட விழந்த பல சம்பவங்களுக்கு சாட்சியமாக உறுதியளிக்கப் படக்கூடிய
சாட்சியாக இருப்பவர் அப்போதைய இராணுவத் தளபதியான ஜெனரல் பொன்சேகா. யுத்த
நடவடிக்கைகள் தொடர்பாக அவரிடம் புதைந்து கிடக்கும் இரகசியங்கள் அம்
பலமாவதற்கு ஒரு மேடை பகிரங்கக் களம் ஜெனரல் பொன் சேகாவுக்குக்
கிடைக்குமானால், அவர் பல உண்மைகளைப் பிய்த்து உதறி அம்பலப்படுத்தி
விடுவார் என ஆளும் தரப்பிலும் அஞ்சப்படுகின்றது எனக் கருதப்படுகின்றது.
யுத்தகால விடயங்களை அம்பலப்படுத்தத் தயங்கமாட்டேன் என்று ஜெனரல் பொன்சேகா
பகிரங்கமாகக் குறிப்பிட்டு சிலமணி நேரத்துக்குள் இராணுவப் பிரிவினரால்
குண்டுக் கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட அவர், அன்று முதல் இன்று வரை
பகிரங்கமாக வாய் திறக்க முடியாத நிலையில் இராணு வச் சிறைக்குள்
முடக்கப்பட்டிருப்பதன் பின்னணி இதுதான் என்றும் கருதப்படுகின்றது.
இவ்விடயத்தில் அவர் வாய் திறக்க வாய்ப்பளிக்கப்படுமாயின் அது சர்வதேச
யுத்தக் குற்றவியல் நீதிமன்றம் வரை பல விடயங்களை எதிரொலிக்கச் செய்யும்
என்பதும் நம்பக்கூடியதே.
இறுதி யுத்தகால நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச யுத்தக் குற்றவிசாரணை
மன்றத்தின் பிடிக்குள் சிக்கலாம் என்ற அச்சத்தில் மூழ்கிக் கிடக்கும்
இலங்கை ஆட்சிப்பீடம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்றமைக்காக ஜெனரல்
சரத் பொன்சேகா இலகுவாக வந்து நாடாளுமன்றத்தில் எல்லா உண்மைகளையும்
பகிரங்கமாகக் கக்கிவிட்டுச் செல் வதற்கு அனுமதிக்கும் என எதிர்பார்க்க
முடியாது. ஆனால், ஜெனரல் சரத் பொன்சேகா இப்போதுவரை சில குற்றச்சாட்டுகள்
தொடர்பில் வெறும் குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர் மட்டும்தான். குற்றம்
நிரூபிக்கப்பட்ட குற்ற வாளியல்ல. அப்படி சந்தேக நபர் ஒருவர் தேர்தலில்
வென் றால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப் படாத
வரையில் அவர் நாடாளுமன்றம் செல்வதைத் தடுப் பதற்கு வலுவான சட்ட ஏற்பாடுகள்
ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை. எனினும், எண்பதுகளின் முற்பகுதியில்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலைக்குற்றவாளியாகக் காணப் பட்டு,
பின்னர் சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்ட
குட்டிமணி (செல் வராசா யோகச்சந்திரன்), அப்போதைய வட்டுக்கோட்டைத் தொகுதி
எம்.பியான திருநாவுக்கரசு காலமானபோது அந்த இடத்துக்கு ஓர் எம்.பியாகத்
தமிழர் விடுதலைக் கூட்டணி யால் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர்
நாடாளுமன்றம் சென்று எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்ய இறுதிவரை
வாய்ப்பளிக்கப்படவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப்
பின்னணியில், பொன்சேகா நாடாளுமன்றம் சென்று அங்கு வாய் திறக்க
அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்ப்பது சாத்தியமற்றதே.
[You must be registered and logged in to see this link.]

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பொன்சேகா காற்றோட்டமில்லாத அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்
» மறக்கப்படும் மனிதராக மாறிவரும் பொன்சேகா?
» விடுதலைப்புலிகளை பொன்சேகா ஊக்குவித்தார்: இலங்கை அமைச்சர் சொல்கிறார்
» "சரத் பொன்சேகா இந்த வாரம் விடுதலை'
» நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum