Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
5 ரூபாய்க்கு அரசு மருந்தை வாங்கி 100 ரூபாய்க்கு விற்ற மோசடி கும்பல்
Page 1 of 1
5 ரூபாய்க்கு அரசு மருந்தை வாங்கி 100 ரூபாய்க்கு விற்ற மோசடி கும்பல்
சென்னை
: அரசு மருத்துவமனையில் இருந்து மருந்துகளை திருடி விற்ற பெண்ணிடம் 5
ரூபாய்க்கு வாங்கி , ரூ. 100க்கு விற்ற மோசடி சம்பவம் தற்போது தெரிய
வந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை அரசு பொது மருத்துவமனை துப்புரவு பெண்
ஊழியரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து,
மருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
காலாவதி மருந்துகளை, விவரங்களை மாற்றி
மீண்டும் விற்பனைக்கு அனுப்பியது தொடர்பாக மோசடி கும்பல் தலைவன் மீனாட்சி
சுந்தரம் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை, கொடுங்கையூர்
போலீசார் இது தொடர்பாக போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார், காலாவதி வழக்கில் மீனாட்சி சுந்தரம்,
அவரது தம்பி மாணிக்கம், பிரதீப் சோர்டியா, ராஜேஷ் மேத்தா, சஞ்சய்குமார்,
சேகர் மற்றும் மணி செட்டியார் ஆகிய ஏழு பேரையும் கோர்ட் அனுமதி பெற்று
காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மூன்று நாள் காவல் நேற்றுடன்
முடியும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஏழு பேரிடமும் போலீசார் தீவிர
விசாரணை மேற்கொண்டனர். இதில், காலாவதி மருந்தை பெற்று அதில் உள்ள
விவரங்களை மாற்றிய சஞ்சய்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு
'சீல்'களை தயாரித்தளித்தவர் பற்றிய விவரங்களை கூறியுள்ளார்.
இதனடிப்படையில் நேற்று முன்தினம் இரவு,
சவுகார் பேட்டை, ஜெனரல் முத்தையா முதலி தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனன்
என்பவரது மகன் சுரேஷ்பாபு (41)வை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து போலி
சீல்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, திருநின்றவூரைச் சேர்ந்த
மணிச்செட்டியாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு சென்னை அரசு பொது
மருத்துவமனையில் உள்ள பெண் ஊழியர் ஒருவர், அங்கிருந்து மருந்துகளை எடுத்து
வந்து கொடுத்தது மற்றும் அவர் பற்றிய விவரங்களை தெரிவித்தார். அவர்,
அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சென்னை அரசு பொது
மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக இருக்கும், மீஞ்சூர், கனியம்பாக்கம்
பகுதியைச் சேர்ந்த தீபன் என்பவரது மனைவி தனம் (எ) தனலட்சுமி (45)யை கைது
செய்தனர். இவர், அரசு பொது மருத்துவமனையில் இருந்து விலை உயர்ந்த
மருந்துகளை எடுத்து வந்து குறைந்த விலையில் அதாவது ஐந்து ரூபாய்க்கு மணி
செட்டியாரிடம் விற்றுள்ளார். மணி செட்டியார் இந்த மருந்துகளை
சஞ்சய்குமாரிடம் ஏழு ரூபாய்க்கு விற்றுள்ளார். இந்த மருந்துகள் தான்
பின்பு மீனாட்சிசுந்தரம் தரப்பினரால் கடைகளுக்கு 90 முதல் 100 ரூபாய் வரை
விற்பனை செய்யப் பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் தனலட்சுமியின்
வீட்டில் நடத்திய சோதனையில் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட மருந்துகள்
இருந்தது கண்டுபிடிக்கப் பட்டு கைப்பற்றப் பட்டன. தனலட்சுமி கடந்த நான்கு
ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. கைது செய்யப்பட்ட
சுரேஷ் பாபு மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் நேற்று எழும்பூர் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார்
நேற்று முன்தினம் சஞ்சய்குமாரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பல்வேறு
தகவல்கள் கிடைத்தன. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் சுப்புலட்சுமி,
பார்த்தசாரதி மற்றும் பரணிகுமார் தலைமையிலான தனிப்படையினர், அரும்
பாக்கத்தில் உள்ள சஞ்சய் குமாரின் ஜி.எச்., பார்மா, எழும்பூர், ஆராவமுதன்
தெருவில் உள்ள மருந்து குடோன்களில் சோதனை நடத்தினர். சோதனையில் இரண்டு
கோடி ரூபாய் மதிப்பிலான போலி மற்றும் காலாவதி மருந்துகள்
பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,மருந்துகளின் காலாவதி
விவரங்களை மாற்றி பதிவு செய்வதற்கான, 'சீல்'கள், போலி லேபிள்கள், ரப்பர்
ஸ்டாம்ப்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் சப்ளை செய்யப்படும் மருந்துகள்
கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து நேற்றும் இந்த மருந்து குடோன்கள்,
மீனாட்சி சுந்தரத்தின் மருந்து குடோன்களிலும் சி.பி.சி.ஐ.டி., போலீசார்
சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது மேலும் பல திடுக்கிடும்
தகவல்கள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. காவலில் எடுக்கப் பட்ட ஏழு
பேரிடமும் தொடர் ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில்,
காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய பிரமுகருக்கு காலாவதி மற்றும் போலி மருந்து
விவகாரத்தில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அந்த பிரமுகர்
விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மருந்து மோசடி கும்பல் மீது முட்டை வீச்சு!
காலாவதி மருந்து மோசடி கும்பலின் தலைவன் மீனாட்சி சுந்தரம், மாணிக்கம்,
பிரதீப் சோர்டியா, சஞ்சய்குமார் உள்ளிட்ட ஏழு பேரை போலீஸ் காவலில் எடுத்து
சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வந்தனர். போலீஸ் காவல் முடிந்து
நேற்று மாலை 6 மணியளவில் ஏழு பேரும் எழும்பூர் கோர்ட்டிற்கு
கொண்டுவரப்பட்டனர். இரண்டாவது பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி
விட்டு புழல் சிறையில் அடைக்க, அனைவரும் கோர்ட்டை விட்டு வெளியில் கொண்டு
வரப்பட்டனர். அப்போது கோர்ட் வளாகத்தின் வெளியில் இருந்தவர்கள் முட்டை,
பேப்பர் கட்டு மற்றும் செருப்பை எடுத்து மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர்
மீது வீசினர். இதனால், கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மீனாட்சி
சுந்தரம், மணிசெட்டியார் மீது இரண்டு முட்டைகள் வீசப்பட்டன. ஒரு முட்டை,
போலீசார் மீதும் விழுந்து உடைந்தது. தொடர்ந்து அனைவரையும் விரைவாக
வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். கோர்ட் வளாகத்தில் கடந்த முறை
மீனாட்சி சுந்தரம், சேகர் ஆகிய இருவர் மீதும் வக்கீல்கள் தாக்குதல்
நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மோசடி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மாத்திரைகளில் நூதன மோசடி அரங்கேற்றம்
» அரசு நிதி உதவி வாங்கி தருவதாக ஏமாற்றி கடத்தப்பட்ட மாணவி எங்கே?: வாலிபரை கைது செய்ய போலீஸ் தீவிரம்
» உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி "வலை' விரிக்கும் கும்பல்
» 8 கோடிக்கு வாங்கி 17 கோடிக்கு விற்ற 'வம்பு' படம்!
» வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி:14 பேர் கொண்ட கும்பல் கைது;
» அரசு நிதி உதவி வாங்கி தருவதாக ஏமாற்றி கடத்தப்பட்ட மாணவி எங்கே?: வாலிபரை கைது செய்ய போலீஸ் தீவிரம்
» உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி "வலை' விரிக்கும் கும்பல்
» 8 கோடிக்கு வாங்கி 17 கோடிக்கு விற்ற 'வம்பு' படம்!
» வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி:14 பேர் கொண்ட கும்பல் கைது;
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum