TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

Go down

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் Empty 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

Post by logu Fri Jul 12, 2013 8:09 am

அப்பாவிக்கணவர்களுக்கான 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 0'டைம் மேனேஜ் மென்ட்’ என்பது, வேலைக்கு செல்பவர் களுக்கு மட்டுமல்ல... இல்லத்தரசிகளுக் கும் அவசியம். சமை யல் அறையில் செல விடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு... வீட்டை அழகு படுத்துவது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, ரிலாக்ஸ் பண்ணுவது போன்றவற்றுக்கு பயன்படுத்த  உதவும் வகையில் '30 வகை ரெடி மிக்ஸ்’ ரெசிபிகளை அளிக்கிறார் சீதா சம்பத்.


''ரெடி மிக்ஸ்களை சுத்தமான, ஈரமில்லாத, காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைப்பது முக்கியம். வீட்டிலேயே செய்வதால்... ருசியில் அசத்தலாக இருப்பதுடன், நிறைய நாட்களுக்கு ஸ்டாக் வைத்து பயன்படுத்தலாம்'' என்று நம்பிக்கையூட்டும் சீதாவின் ரெசிபிகளை, கண்களுக்கு பரவசம் அளிக்கும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.


 பாதாம் மில்க் ரெடி மிக்ஸ் 

தேவையானவை: பாதாம் பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், குங்குமப்பூ - 15 இதழ்கள், பாதாம் எசென்ஸ் - 2 துளிகள்.

செய்முறை: பாதாம்பருப்பை சுடு நீரில் ஊற வைத்து தோல் நீக்கி, நிழலில் உலர வைத்து, வெறும் கடாயில் சூடுபட வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அத்துடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து பொடி செய்யவும். பிறகு, பாதாம் எசென்ஸ் விட்டு நன்கு கலந்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.






 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 1

தேவைப்படும்போது ஒரு  கிளாஸ்  சூடான பாலில், ஒரு ஸ்பூன் பாதாம் பொடி கலந்து பருகலாம். பாலில் பாதாம் மிக்ஸை தேவையான அளவு கலந்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் கொடுக்கலாம்.

குறிப்பு: பாதாம் பருப்பை தோல் உரிக்காமல், வெறும் கடாயில் சூடுபட வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

 பிடிகொழுக்கட்டை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: பச்சரிசி ரவை - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை  டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, இஞ்சித் துண்டுகள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும்  மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து, வறுத்தவை அனைத்தையும் பச்சரிசி ரவையில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைத்தால்... பிடிகொழுக்கட்டை ரெடி மிக்ஸ் தயார்.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 2

பிடிகொழுக்கட்டை தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு ரெடிமிக்ஸுக்கு 2 பங்கு என்ற அளவில் தண்ணீரை எடுத்து கொதிக்கவிடவும். தண்ணீரில் ரெடி மிக்ஸை தூவி கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகள் பிடித்து வைக்கவும் (நீளவாட்டிலும் தயார் செய்யலாம்). அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இதை குறைந்த நேரத்தில் தயார் செய்துவிடலாம். ஆவியில் வேக வைப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் Empty Re: 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

Post by logu Fri Jul 12, 2013 8:10 am

பச்சடி ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]வெள்ளை உளுத்தம்பருப்பு -  ஒரு கப், கடுகு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சித் துண்டுகள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 3

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]வெறும் கடாயில் உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறியதும் நைஸாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து வறுத்து எடுத்து, ஆறியதும் உளுத்தம்மாவில் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இதுதான் பச்சடி ரெடி மிக்ஸ்.

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]குறிப்பு: [/b]பச்சடி தேவைப்படும்போது ஒரு கப் தயிரில் 2 டீஸ்பூன் அளவு ரெடி மிக்ஸ் பவுடர் சேர்த்துக் கலக்கவும்.

 பாயசம் ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]சேமியா - ஒரு கப், ரவை - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால்  டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10, நெய் - 2 டீஸ்பூன்.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 4

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை:[/b] கடாயில் நெய் விட்டு, சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். ரவை, சேமியாவை வறுத்து, ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து, சர்க்கரையையும் சேர்த்துக் கலந்து, சுத்தமான டப்பாவில் போட்டு வைக்கவும்.

பாயசம் தேவைப்படும்போது இந்த மிக்ஸில் தேவையான அளவு எடுத்து, பால் கலந்து கொதிக்கவிட்டு, பாயசம் தயார் செய்யலாம்.
  
 தேங்காய் சட்னி ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]தேங்காய் துருவல் - ஒரு கப், பொட்டுகடலை - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் (காய வைத்தது) - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 5

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]வெறும் கடாயில் தேங்காய் துருவலை போட்டு, தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும். பொட்டுக்கடலை, காய்ந்த பச்சை மிளகாயை மிக்ஸியில் பொடிக்கவும். வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை அதனுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூளை வறுத்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, ஈரம் போக வறுத்து எடுத்து, தேங்காய் கலவை யில் சேர்த்துக் கலந்தால்... தேங்காய் சட்னி ரெடி மிக்ஸ் தயார்!
எவ்வளவு தேங்காய் சட்னி தேவையோ... அந்த அளவுக்கு கலவையை எடுத்து, தண்ணீர் விட்டு கலந்து உபயோகப்படுத்தவும்.
 தக்காளி ரசம் ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]காய்ந்த தக்காளிப் பழ துண்டுகள் - 16 (முழு பழம் 4 - தக்காளி பழ சீஸனில் பழத்தை வாங்கி எவர்சில்வர் கத்தியால் 'கட்’ செய்து, வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கலாம்), தனியா - 3 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 5, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு  - தலா அரை டீஸ்பூன், மஞ்சள் துண்டுகள் - 2, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 6

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]தக்காளி, கடுகு, நெய் நீங்கலாக, எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து, கடுகை நெய்யில் வறுத்து கலந்தால்... தக்காளி ரச ரெடி மிக்ஸ் தயார்.
கடாயில் காய்ந்த தக்காளிப் பழ துண்டுகள் 4, 5 போட்டு, தேவையான அளவு ரச மிக்ஸ், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நுரைத்து வந்ததும் கீழே இறக்கவும். இந்த ரசத்தை பருப்புத் தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் Empty Re: 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

Post by logu Fri Jul 12, 2013 8:10 am

ஸ்பெஷல் புளியோதரை ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை:[/b] புளி - சிறிய கமலா ஆரஞ்சு சைஸ், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்,  மிளகாய் வற்றல் - 10, பெருங்காயம் - சிறிய கட்டி, விரலி மஞ்சள் - ஒன்று, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை  - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.


 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 7

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கடாயில் எண்ணெய் விட்டு... மஞ்சள், வெந்தயம், மிளகாய் வற்றல், பெருங்காயத்தை வறுத்து நைஸாக பொடி செய்யவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு வறுத்து கொரகொரப்பாக பொடித்து, தனியாக வைத்திருக்கவும். வெறும் கடாயில் புளியை போட்டு ஈரம் போக வறுத்து, உப்பு சேர்த்து பொடி செய்யவும். கறிவேப்பிலையை தனியாக வறுத்து கைகளால் தூளாக்கவும். எல்லா பொடியையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு கலந்து எடுத்து வைக்கவும். இதுதான் ஸ்பெஷல் புளியோதரை ரெடி மிக்ஸ்.
புளியோதரை தேவைப்படும்போது, உதிரியாக வடித்த சாதத்தில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கிளறி, தேவையான அளவு புளியோதரை பொடி மிக்ஸ் போட்டு கலந்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து வடாம், சிப்ஸ் தொட்டு சாப்பிடவும்.
  
 மோர்க்குழம்பு ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]தேங்காய் துருவல் - 2 கப், சீரகம் - 4  டீஸ்பூன், பச்சை மிளகாய் (காய வைத்தது) - 6 (காரம் வேண்டுவோர் சற்று கூடுதலாக சேர்க்கலாம்), பெருங் காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - கால் கப், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 8

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]தேங்காய் துருவலை வெறும் கடாயில் உப்பு சேர்த்து வறுக்கவும். துவரம்பருப்பை தனியாக வறுக்கவும். தேங்காய் துருவல், துவரம்பருப்பு, காய்ந்த பச்சை மிளகாய், சீரகம் கலந்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை சேர்த்தால்... மோர்க்குழம்பு ரெடி மிக்ஸ் தயார்.
மோர்க்குழம்பு தேவைப்படும்போது, ஒரு கப் புளிப்பு தயிரில் தேவையான அளவு மோர்க்குழம்பு மிக்ஸ் கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நுரைத்து வரும்போது தீயை நிறுத்தி விடவும்.

 கொத்தமல்லி இலை பொடி 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]கொத்தமல்லி - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 9

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கொத்தமல்லி இலையை ஆய்ந்து சுத்தம் செய்து துணியில் போட்டு  நிழலில் உலர்த்தி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கொத்தமல்லி இலையை சூடான வெறும் கடாயில் போட்டு எடுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். இதுதான் பச்சை கொத்தமல்லி இலை பொடி.

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]குறிப்பு: [/b]இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைட் டிஷ் ஆக தொட்டு சாப்பிடலாம். கொத்தமல்லி கிடைக்காதபோது இந்த ரெடி மிக்ஸை ரசம், சாம்பாருக்கு போடலாம்.

 பஜ்ஜி  போண்டா ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை:[/b] கடலைப்பருப்பு - 500 கிராம், பச்சரிசி - 50 கிராம், மிளகாய் வற்றல் - 5, உப்பு - தேவையான அளவு.

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கடலைப்பருப்பு, பச்சரிசி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் அரைத்து வாங்கி, அதில் தேவையான அளவு உப்பு கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும். இதுதான் பஜ்ஜி - போண்டா ரெடி மிக்ஸ்.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 10

பஜ்ஜி தேவைப்படும்போது, தேவை யான அளவு ரெடி மிக்ஸுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு, ஒரு டீஸ்பூன் மைதா சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். பஜ்ஜி செய்யும் விதத்தில் நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பெரிய பச்சை மிளகாய், காலிஃப்ளவர் எது தேவையோ அதை பஜ்ஜி மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு, வெந்து பொன்னிறம் ஆனதும் திருப்பிவிட்டு, பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.
போண்டா என்றால்... நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை  கரைத்து வைத்த மாவில் கலந்து உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் Empty Re: 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

Post by logu Fri Jul 12, 2013 8:11 am

லெமன் ரைஸ்  லெமன் சேவை ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]லெமன் சால்ட் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல்  - 6, பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை. இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 11

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும்     கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல்,  கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில், பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை - இஞ்சியை மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும்.   லெமன் சால்ட், உப்பையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி பொடியாக்கி எடுக்கவும். இதில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கலந்தால்... லெமன் ரைஸ் - லெமன் சேவை ரெடி மிக்ஸ் தயார்.

லெமன் சாதம் / லெமன் சேவை தயாரிக்க வேண்டும் என்றால், சாதம் / சேவையில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான அளவு ரெடி மிக்ஸ் போட்டு லேசாக கலந்து மூடி வைத்து, 5 நிமிடம் கழித்து பரிமாறலாம். சிப்ஸ், வடாம் இதற்கு சரியான சைட் டிஷ்.

 பருப்பு உசிலி ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை:[/b] துவரம்பருப்பு - ஒரு கப், மிளகாய் வற்றல் - 4.

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை:[/b] துவரம்பருப்புடன் மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக மெஷினில் அரைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைத்து எடுக்கலாம்). இதுதான் பருப்பு உசிலி ரெடி மிக்ஸ்.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 12

தேவைப்படும்போது பருப்பு உசிலி மிக்ஸில் தண்ணீர் தெளித்து பிசிறி 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பிசிறி வைத்த பருப்பு உசிலி மிக்ஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். பருப்பு வெந்ததும் வேக வைத்த காய்கறியை தண்ணீர் வடித்து  சேர்த்து, சூடுபட கிளறி இறக்கவும்.

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]குறிப்பு: [/b]கொத்தவரங்காய், பீன்ஸ், வாழைப்பூ, கோஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி பருப்பு உசிலி செய்யலாம்.

 தேங்காய் சாதம்  தேங்காய் சேவை ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை:[/b] தேங்காய் துருவல் -  ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல்  - 2, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 13

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். வறுபட்டதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே கடாயில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக ஈரம் போக வறுத்து எடுக்கவும். தேங்காய் துருவலை உப்பு கலந்து வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சுத்தமான டப்பாவில் போட்டு வைக்கவும். இதுதான் தேங்காய் சாத ரெடி மிக்ஸ்.

தேங்காய் சாதம், தேங்காய் சேவை செய்ய... தேவையான அளவு ரெடி மிக்ஸை சாதம் (அ) சேவையுடன் சேர்த்து லேசாக கலக்கவும். 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.

 அடை ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை:[/b] இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து - ஒரு கப், மிளகாய் வற்றல் - 3.

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]இட்லி அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து மெஷினில் கொடுத்து கொரகொரப்பாக  அரைத்து வாங்கவும். இதுதான் அடை ரெடி மிக்ஸ்.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 14

அடை செய்யும்போது தேவை யான அளவு அடை  ரெடி மிக்ஸ் எடுத்துக் கொண்டு, உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டி யாக கரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலந்து வழக்கம் போல அடை தயார் செய்யவும்.

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]குறிப்பு: [/b]மாவில் கறிவேப்பிலை, கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு கலந்தும் செய்யலாம்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் Empty Re: 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

Post by logu Fri Jul 12, 2013 8:11 am

மிளகு வடை ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]வெள்ளை உளுத்தம்பருப்பு - ஒரு கப், மிளகு -  ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, மெஷினில் ரவை போல உடைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதுதான் மிளகு வடை ரெடி மிக்ஸ்.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 15

வடை தேவைப்படும்போது,  இந்த ரெடி மிக்ஸை தண்ணீர் தெளித்து நன்கு கலந்து பிசிறி, 15, 20 நிமிடம் ஊற வைக்கவும். கொஞ்சம் கலவையை எடுத்து  உருட்டினாற் போல செய்து எண்ணெய் தொட்டுக் கொண்டு,  பிளாஸ்டிக் ஷீட் அல்லது ஈர வெள்ளை துணியில் வடையாக தட்டவும் (நடுவில் ஓட்டை போடலாம்). சூடான எண்ணெயில் வடைகளை போட்டு வேகவிட்டு, பொன்னிறம் ஆனதும் திருப்பி விட்டு, வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.

 பாகற்காய் சாதம் ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]பாகற்காய் வற்றல் - 50 கிராம், மிளகாய் வற்றல் - 6, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பாகற்காய் வற்றலை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். பாகற்காய் வற்றலில் ஏற்கெனவே உப்பு சேர்க்கப்பட் டிருக்கும் என்பதால்,  குறைவான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடி செய்யவும்

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 16

இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு  டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம். இந்த பாகற்காய் பொடி சுகர், பித்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
பாகற்காய் வற்றல் செய்முறை: பாகற்காயை வட்டமாக கட் செய்து, விதை நீக்கி... தயிர், உப்பு கலந்து ஊற வைத்து, காய வைத்து எடுத்து டப்பாவில் வைக்கலாம். இது நாள்பட இருக்கும். கடையிலும் பாகற்காய் வற்றல் கிடைக்கும்.

 கறிவேப்பிலை குழம்பு பொடி  கறிவேப்பிலை பொடி ரெடி மிக்ஸ் 

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]கறிவேப்பிலை (சுத்தம் செய்தது) - 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 4 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சம் பழ அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 17

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல், பெருங்காயத்தை வறுக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  ஆகியவற்றையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்யவும். கறிவேப்பிலையை  தனியே வறுத்து பொடிக்கவும்.
புளியை  உப்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன், ஏற்கெனவே தயாராக உள்ள பொடிகளை சேர்த்துக் கலந்தால்... கறிவேப்பிலை குழம்பு பொடி - கறிவேப்பிலை பொடி ரெடி மிக்ஸ் தயார்.
தேவையான அளவு கறிவேப்பிலை குழம்பு ரெடி மிக்ஸில் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கடாயில் கால் டீஸ்பூன் கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால்... கறிவேப்பிலை குழம்பு தயார். கறிவேப்பிலை ரெடி மிக்ஸ் பொடியை சாதத்தில் நேரடியாக கலந்தும் சாப்பிடலாம்.

 மசால் வடை ரெடி மிக்ஸ்

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]கடலைப் பருப்பு - ஒரு கப், ஜவ்வரிசி - 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கடலைப்பருப்புடன் ஜவ்வரிசியை சேர்த்து சன்ன ரவையாக உடைத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல், உப்பு இரண்டையும் சேர்த்துப் பொடித்து கடலைப்பருப்பு கலவையில் கலக்கவும். காய்ந்த கறிவேப்பிலையை கையினால் நொறுக்கி சேர்க்கவும். இதில் சோம்பை சேர்த்துக் கலந்தால்...  மசால் வடை ரெடி மிக்ஸ் தயார்.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 18

மசால் வடை தேவைப்படும்போது... தேவையான அளவு  ரெடி மிக்ஸ் எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் தெளித்து 10 நிமிடம் ஊற வைக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காய துண்டுகளை தேவையான அளவு கலந்து பிசைந்து கொள்ளவும்.  இந்தக் கலவையில் சிறிது சிறிதாக எடுத்து, வடையாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் Empty Re: 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

Post by logu Fri Jul 12, 2013 8:12 am

ரவா லட்டு ரெடி மிக்ஸ்

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]ரவை - ஒரு கப், சர்க்கரை - ஒன்றே கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை  டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் (நெய்யில் வறுத்தது) - 10, நெய் - சிறிதளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 19

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை:[/b] வெறும் கடாயில் ரவையை பச்சை வாசனை போக வறுக்கவும். மிக்ஸியில் ரவையைப் பொடியாக்கவும். சர்க்கரையையும் பொடியாக்கவும். ரவைப் பொடி, சர்க்கரைப் பொடி, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகள் சேர்த்து நன்கு கலந்தால்... ரவா லட்டு ரெடி மிக்ஸ் தயார்.
ரவா லட்டு தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்து... சூடாக்கிய நெய் சேர்த்துக் கலந்து... கலவை சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்கவும்.

 எள் சாதம் ரெடி மிக்ஸ்

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]எள் (கறுப்பு (அ) வெள்ளை) - ஒரு கப், மிளகாய் வற்றல் - 4, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 20

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கடாயில் எண் ணெய் விட்டு, சூடானதும் மிள காய் வற்றல், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் எள்ளை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்துப் பொடித்தால்... எள் சாத மிக்ஸ் தயார்.
தேவைப்படும்போது உதிரியாக வடித்த சாதத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான அளவு எள் பொடி சேர்த்துக் கலக்கவும்.

 மிளகு குழம்பு ரெடி மிக்ஸ்

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]மிளகு, துவரம்பருப்பு - தலா 4 டீஸ்பூன், தனியா - ஒரு கப், மிளகாய் வற்றல் - 2, பெருங்காயம் - ஒரு சிறு கட்டி, புளி - பெரிய எலுமிச்சம் பழ அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 21

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பெருங்காயம், தனியா, மிளகாய் வற்றல், துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். மிளகை வாசனை வரும் வரை வறுக்கவும். கறிவேப்பிலையையும் வறுக்கவும். அதே கடாயில் புளியை வறுக்கவும். ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக பொடி செய்யவும். இதில் உப்பு சேர்த்து  ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... மிளகு குழம்பு மிக்ஸ் தயார்.

மிளகு குழம்பு தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்து, தண்ணீர் விட்டு கரைத்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
 அங்காயப் பொடி
[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]தனியா - 4 டீஸ்பூன், வேப்பம்பூ - 8 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், சுண்டைக்காய் (காய்ந்தது) - 15, பெருங்காயம் - சிறிதளவு, மிளகாய் வற்றல் - ஒன்று, சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 22

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை:[/b] வேப்பம்பூ, கறிவேப்பிலை, சீரகம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து, சுக்குப் பொடியை சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பெருங்காயம், மிளகாய் வற்றல், தனியா, மிளகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த சுண்டைக்காய் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். முதலில் செய்து வைத்திருக்கும் பொடியை இதனுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து, உப்பு சேர்த்தால்... அங்காயப் பொடி தயார்.

சாதத்தில் தேவையான அளவு அங்காயப் பொடி சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிடவும். பிரசவித்த பெண்களுக்கு 12-ம் நாள் முதல் இந்த பொடி கலந்த சாதம் சிறிதளவு சாப்பிட்ட பிறகுதான்  மற்ற உணவுகளை சாப்பிட அனுமதிப்பார்கள். உடல் வலிமை யாகவும், வயிற்று ரணம் ஆறவும் அவர்களுக்கு இதை கொடுப்பார்கள்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் Empty Re: 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

Post by logu Fri Jul 12, 2013 8:12 am

கண்டதிப்பிலி ரசம் ரெடி மிக்ஸ்

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]கண்டதிப்பிலி - 10 குச்சி, மிளகு - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி, புளி - எலுமிச்சம் பழ அளவு, நெய், சீரகம் - தலா அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 23

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]புளி, உப்பு இரண்டையும் வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும். கண்டதிப்பிலி, மிளகு, மிளகாய் வற்றல், தனியா, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். இந்தப் பொடியை புளி - உப்பு பொடியுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து எடுத்து வைத்த பொடியில் கலந்தால்... கண்டதிப்பிலி ரசம் ரெடி மிக்ஸ் தயார்.

ரசம் தேவைப்படும்போது, ரெடி மிக்ஸை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து, அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நுரைத்து வந்ததும் இறக்கவும்.
வாயு தொல்லை, உடல் வலியிலிருந்து நிவாரணம் அளித்து,  ஜீரண சக்தியை அதிகரிக்கும் இந்த ரசம்.
  
 தேன் குழல் ரெடி மிக்ஸ்

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை:[/b] பச்சரிசி - 6 கப், வெள்ளை உளுந்து - ஒரு கப், எள் (அ) சீரகம் - 10 கிராம், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 24

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]வெள்ளை உளுந்தை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து பச்சரிசியுடன் கலந்து மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும். அந்த மாவில் எள் அல்லது சீரகம் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்தால்... தேன் குழல் ரெடி மிக்ஸ் தயார்.

தேன்குழல் தேவையானபோது ரெடி மிக்ஸ் மாவில் சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, மாவை அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். வெந்ததும் திருப்பிவிடவும். சிறிது நேரத்துக்குப் பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.

 வேப்பம்பூ பொடி

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]வேப்பம்பூ - ஒரு ஆழாக்கு, தனியா - கால் ஆழாக்கு, மிளகு - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4 (விரும்பினால் அதிகம் சேர்க்கலாம்), பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 25

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]வேப்பம்பூவை சிவக்க வறுக்கவும். தனியா, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியற்றையும் வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் நைஸாக அரைத்தால்... வேப்பம்பூ பொடி தயார்.
சாதத்தில் நெய் விட்டு, தேவையான அளவு வேப்பம்பூ பொடி ரெடி மிக்ஸ் சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.

 புதினா சட்னி ரெடி மிக்ஸ்

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]புதினா இலை - 2 கப், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (காய வைத்தது) - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் (வறுத்தது), பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையானஅளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 26

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]புதினா இலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி, காய வைத்து எடுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புதினா, வறுத்த தேங்காய் துருவல், உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, புதினா கலவையில் போட்டு நன்கு கலந்தால்... புதினா சட்னி ரெடி மிக்ஸ் தயார். சட்னி தேவைப்படும்போது இந்தக் கலவையில் சிறிது எடுத்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]குறிப்பு: [/b]எலுமிச்சைச் சாறு சிறிது விட்டும் கலக்கலாம்.

 ரிப்பன் பக்கோடா ரெடி மிக்ஸ்

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]அரிசி மாவு, கடலை மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
.
[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து டப்பாவில் எடுத்து வைக்கவும். இதுதான் ரிப்பன் பக்கோடா ரெடி மிக்ஸ்.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 27

ரிப்பன் பக்கோடா தேவைப்படும்போது தேவையான அளவு இந்த ரெடி மிக்ஸ் எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். சூடான எண்ணெய் தயாராக இருக்கட்டும். பிசைந்த மாவை நாடா அச்சில் போட்டு நேரடியாக எண்ணெய் மேல் சுற்றி பிழியவும். வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

 பயத்தலாடு ரெடி மிக்ஸ்

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை:[/b] பயத்தம்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றே கால் கப்,  முந்திரித் துண்டுகள் (வறுத்தது) - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 28

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]வெறும் கடாயில் பயத்தம்பருப்பை வாசனை வரும் வரை... சிவக்க (அ) பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பயத்தம்பருப்பு, சர்க்கரை இரண்டையும் பொடி செய்யவும், வறுத்த முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்தூள், பயத்தம்பருப்பு ஆகியவற்றை பொடியில் சேர்த்து நன்கு கலந்தால்... பயத்தலாடு ரெடி மிக்ஸ் தயார்.

தேவையான போது, நெய்யை சூடாக்கி, தேவையான அளவு ரவா லட்டு மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். கலவை சூடாக இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் Empty Re: 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

Post by logu Fri Jul 12, 2013 8:13 am

இட்லி  தோசை மிளகாய்ப் பொடி

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]மிளகாய் வற்றல் - 10 (விருப்பப்பட்டால் அதிகம் சேர்க்கலாம்), கடலைப்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பெருங்காயம் - ஒரு சிறு துண்டு, எள் - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 29

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல்,  பெருங்காயத்தை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். எள்ளை தனியாக (பொரியும் வரை) வறுக்கவும். வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து, டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

 ரவா இட்லி ரெடி மிக்ஸ்

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]தேவையானவை: [/b]ரவை - ஒரு கப், லெமன் சால்ட் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 5, மிளகாய் வற்றல் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் 30

[b style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை: [/b]வெறும் கடாயில் ரவையை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டு... சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், முந்திரிப் பருப்பு துண்டுகள், கறிவேப்பிலையை சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு வறுத்து எடுக்கவும். இதனுடன் வறுத்த ரவை, உப்புச் சேர்த்துக் கலக்கவும். இதில் லெமன் சால்ட் கலந்து மூடி வைக்கவும். இதுதான் ரவா இட்லி மிக்ஸ்.


ரவா இட்லி தேவைப்படும்போது... தேவையான அளவு புளிப்பு தயிர், ரவா இட்லி மிக்ஸ் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு வழக்கம் போல இட்லி தயாரிக்கவும்.


நன்றி - அவள் விகடன் 
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள் Empty Re: 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum