TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


படித்த, பகுத்தறிவுள்ள இன்றைய ....தமிழ் இளைஞர்கள் தலைகுனிய வேண்டிய நாள் இன்று..........

Go down

படித்த, பகுத்தறிவுள்ள இன்றைய ....தமிழ் இளைஞர்கள் தலைகுனிய வேண்டிய நாள் இன்று.......... Empty படித்த, பகுத்தறிவுள்ள இன்றைய ....தமிழ் இளைஞர்கள் தலைகுனிய வேண்டிய நாள் இன்று..........

Post by அருள் Thu Jul 04, 2013 8:10 pm

படித்த, பகுத்தறிவுள்ள இன்றைய ....தமிழ் இளைஞர்கள் தலைகுனிய வேண்டிய நாள் இன்று.......... 1014423_473334482761527_790633985_n
 படித்த, பகுத்தறிவுள்ள இன்றைய ....தமிழ் இளைஞர்கள் தலைகுனிய வேண்டிய நாள் இன்று..........

சாதி மறுப்பு திருமணம் செய்த இளவரசன் தற்கொலை...
தனது மரணத்தின் மூலம் ....சாதியத்தின் மீது காரி உமிழ்ந்திருக்கிறான் இளவரசன்

அடேங்கப்பா , போயும் போயும் ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து இணைவதை தடுக்க....அரிவாள் ஏந்திய சாதிய கைகள் என்ன ???? ....எரிந்த குடிசைகள் என்ன.....கிடுகிடுத்த நீதிமன்றம் என்ன.....ஆர்பரித்த ஊடகங்கள் என்ன .....கொதித்த தலைவர்கள் என்ன ......

அட ச்சீ ........கேடுகெட்ட இந்த நாட்டில் வாழ்வதற்கே அதுவும் சாதியம் மிகுந்த தமிழகத்தில் வாழ்வதற்கே கூனி குருகவேண்டியிருக்கிறது.......

இந்த மரணத்தை சாதியவாதிகளே கூடி கொண்டாடுங்கள்.....ஊர்கூடி கறி எடுத்து சமைத்து சாப்பிட்டு கொண்டாடுங்கள்..சாதிக்கு மனிதக்கறி என்றால் மிக விருப்பமாம்........

சாதியவாதிகளே .....எங்களை பலநூறு ஆண்டு பின்னோக்கி கொண்டு சென்ற புரட்சியவாதிகள் அல்லவா நீங்கள்.......வாழ்த்துக்கள்.......மகிழ்ச்சி கொள்ளுங்கள் ....சாதியம் பார்த்து, உனது பிள்ளையை எனது பிள்ளையை காலம் காலமாக மாற்றானிடம் அடிமையாகவே வைத்திருக்க போவதற்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள்


------------------------------------------------------------------------------------
எனது தமிழன்னைக்கு சக்தி இருப்பது உண்மையானால்......

தமிழன் என்கிற அடையாளமே உலகெங்கும் நிஜம்...சாதியம் வெறுமனே தமிழகம் என்கிற குண்டாசட்டிக்குள் குதிரை ஓட்டும் வித்தை என்பதை உணர்ந்து ........
என் மகன் உன் மகன் இருவரும் கைகோர்த்து ...இந்த சாதி மீது காரி உமிழ்வார்கள்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

படித்த, பகுத்தறிவுள்ள இன்றைய ....தமிழ் இளைஞர்கள் தலைகுனிய வேண்டிய நாள் இன்று.......... Empty Re: படித்த, பகுத்தறிவுள்ள இன்றைய ....தமிழ் இளைஞர்கள் தலைகுனிய வேண்டிய நாள் இன்று..........

Post by அருள் Thu Jul 04, 2013 8:16 pm

தமிழகம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டது தருமபுரி காதல் ஜோடி – திவ்யா இளவரசன். இவர்களின் காதல் விவகாரத்தில் திடிரென்று திவ்யா இனி இளவரசனோடு சேர்ந்து வாழ்வதில்லை என்று நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில், சம்பந்தப்பட்ட இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இளவரசனின் சடலம் தருமபுரி அரசுக் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து தர்மபுரி முழுவதும் பதட்டம் காணப்படுவதால். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.
படித்த, பகுத்தறிவுள்ள இன்றைய ....தமிழ் இளைஞர்கள் தலைகுனிய வேண்டிய நாள் இன்று.......... Ju-4-illavarasan
தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கெட்டாய் நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி ஊரைவிட்டு சென்று திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
பெண்ணின் தரப்பில் கடத்தல் என்றும், பையன் தரப்பில் காதல் என்றும் போலீஸ் நிலையத்தில் வாதிட்டனர். போலீசாரும் இளவரசனையும் திவ்யாவையும் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர். மனம் உடைந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு கயிற்றில் உயிர் துறந்தார். அதன்பிறகு தர்மபுரியில் கலவரம் ஏற்பட்டது. இந்த சாதி மோதல் வடமாவட்டங்கள் முழுவதும் பரவியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் பத்து மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 4-ம் தேதி திவ்யா தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன்பின்னர் திரும்பி வரவில்லை. இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசில் இளவரசன் புகார் செய்தார். இதற்கிடையே திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டிற்கு வந்திருந்த திவ்யா, தனது தாயுடன் செல்ல விரும்புவதாக கூறினார். தன்னுடன் வரும்படி இளவரசன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால் திவ்யா கண்டுகொள்ளாமல் இருந்தார்.
இதையடுத்து திவ்யாவை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று தாயாருடன் வந்திருந்த திவ்யா, இனிமேல் எந்த சூழ்நிலையிலும் காதல் கணவர் இளவரசனுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை என்று கூறினார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த திவ்யா செய்தியாளர்களிடம் பேசியபோது, எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை என்றும் அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன் என்றும் கூறினார்.
இந்த நிலையில், திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் தர்மபுரியில் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தர்மபுரி அரசு கல்லூரியின் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் ஒரு மோட்டார் சைக்கிள், கைப்பை ஆகியவையும் கிடந்தன.
படித்த, பகுத்தறிவுள்ள இன்றைய ....தமிழ் இளைஞர்கள் தலைகுனிய வேண்டிய நாள் இன்று.......... Ju-4-illavarasan.-body
அவரது சட்டைப் பையில் இருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களைச் சேகரித்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை வாழ வைக்க ஒரு கோஷ்டியும், பிரித்து வைக்க ஒரு கோஷ்டியும் மல்லுக்கட்டி வந்த நிலையில், இளவரசனின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\இதையடுத்து தர்மபுரி முழுவதும் பதட்டம் காணப்படுவதால். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து இளவரசனின் நண்பர்கள் தெரிவிக்கையில், உறவினர்களே அவரை அடித்துக் கொன்றிருக்கக் கூடும் என்றும், விபத்து ஏற்படுத்தியது போல் காட்ட முனைந்திருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர். மேலும், கடந்த நான்கைந்து நாட்களாக பெரும் பதட்டத்தில் இளவரசன் இருந்தான் என்றும், அவனை சமுதாயத் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, காப்பாற்றுவதற்கும் கைதூக்கி விடுவதற்கும் முன்வரவில்லை என்றும், அதனாலேயே பெரும் மன உளைச்சலில் இருந்தான் என்றும் அங்கே கூடியிருந்த நண்பர்கள் கூறினர்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

படித்த, பகுத்தறிவுள்ள இன்றைய ....தமிழ் இளைஞர்கள் தலைகுனிய வேண்டிய நாள் இன்று.......... Empty Re: படித்த, பகுத்தறிவுள்ள இன்றைய ....தமிழ் இளைஞர்கள் தலைகுனிய வேண்டிய நாள் இன்று..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூன் 6: தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று
» நான் படித்த இன்றைய செய்தியின் துளிகள்....................
» இலங்கைக்கு சுதந்திர நாள்! தமிழர்களுக்கு கரி நாள்! : பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு
» பிப்ரவரி 21: தமிழ் திரைப்பட உலகின் தன் நடிப்பால் தனி முத்திரை பதித்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் பிறந்த நாள் இன்று.
» சென்னை விமான நிலையத்தில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum