Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தனியாருக்கு தாரைவார்க்கப்படும் சென்னைக் குடிநீர் !!
Page 1 of 1

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், தனியார் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு அதிக அளவில் குடிநீர் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அத்துடன் இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் வழங்கினால் குடிநீர் பற்றாக்குறை ஓரளவு தீர வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
14 சதவீதமாகக் குறைந்த நீர் இருப்பு: சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் தற்போது மொத்த கொள்ளளவில் 14 சதவீதம் மட்டுமே உள்ளது.இதைத் தவிர வீராணம், சோழவரம் ஏரிகள் முழுவதுமாக வறண்டு விட்டன. மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்ட கிருஷ்ணா நதி நீர், இன்று வரை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக நாளொன்றுக்கு 83 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த சென்னை நகரில், தற்போது 55 கோடி லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.
விநியோகம் குறைந்ததால் கடந்த மாதத்தில் இருந்து குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. போதிய நீர் அழுத்தம் இல்லாததால், பெரும்பாலான இடங்களில் குழாய் வழி விநியோகம் குறைந்துவிட்டது. 2 அல்லது 3 நாள்களுக்கு ஒரு முறை குறைந்த அழுத்தத்தோடு வருகிறது. எனவே, நகரில் பெரும்பாலானோர் லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரையே நம்பி உள்ளனர்.
குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வழங்கும் லாரிகளின் எண்ணிக்கை 308-லிருந்து 391 லாரிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. லாரிகள் வாயிலாக நாளொன்றுக்கு 3,700 நடைகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 500-க்கும் அதிகமான நடைகள் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், தியேட்டர்களுக்கு விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பற்றாக்குறைக் காலங்களில் தனியார் நிறுவனங்களுக்கு குடிநீர் விற்கக்கூடாது என விதிகள் உள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் குடிநீர் வாரியத்துக்கு தெரியாமல், கூடுதல் விலை தரும் தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து, அதிக அளவில் லாரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த முறைகேடுகளுக்கு ஒப்பந்த லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், பகுதி பொறியாளர்கள் என அனைவரும் உடந்தையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக குடிநீர் விற்கப்படுவதாகத் தெரிகிறது.
20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட தனியார் லாரி குடிநீர், ரூ.3,000-க்கு விற்கப்படுகிறது. இதே கொள்ளளவு கொண்ட சென்னைக் குடிநீர் லாரியின் வணிகப் பயன்பாட்டுக்கான விலை ரூ.1800-க்கும் குறைவு. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் பகுதி பொறியாளர்கள், லாரி ஓட்டுநர்களுக்கு கமிஷன் கொடுத்து சென்னைக் குடிநீர் லாரிகளில் தண்ணீர் வாங்குவதாக புகார் கூறப்படுகிறது.
நீரேற்று நிலையங்களில் குடிநீர் திருட்டு: குடிநீர் வாரிய நீரேற்று நிலையங்களில் பொது மக்களுக்காக, 1,000 லிட்டர் குடிநீர் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு குடிநீர் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால், இந்த விலைக்கு குடிநீர் வேண்டுமென்றால் பொது மக்கள், தாங்களே லாரி பிடித்துக் கொண்டு வந்து நீரேற்று நிலையங்களில் குடிநீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத இந்த திட்டத்தின் கீழ் பயனடைவது டேங்கர் லாரி வைத்துள்ள தனியார் நிறுவனங்கள்தான். குறைந்த விலைக்கு குடிநீரை வாங்கி, வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் குடிநீர் திருட்டைத் தடுக்க, லாரிகள் செல்லும் வழித்தடங்களைக் கண்காணிக்கும் வகையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டன. இதற்காக லட்சக்கணக்கான தொகை செலவிடப்பட்டது. ஆனால் இன்று வரை அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இது குறித்து தகவல் சொன்ன பொதுமக்கள்,”குடிநீர் லாரிகளின் திருட்டை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதற்கான தொழில்நுட்பமும் மேம்படுத்தவில்லை. முறைகேடுகளைத் தடுக்காமல், எந்த வகையான போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் குடிநீர் வாரியத்தால் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது” என்கின்றனர்
தகவலுக்கு நன்றி
ஆ.கோபிகிருஷ்ணா

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இறுதி கட்டத்தில் "மெகா' குடிநீர் திட்டம் : விறுவிறுப்படையும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம்
» குடிநீர் கொள்ளை
» கல்வித்துறை வெப்சைட்டில் தனியாருக்கு, "லிங்க்': புத்தகங்களை, "டவுண்லோட்' செய்ய கட்டணம் வசூல்
» செட்-டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவது சட்ட விரோதம்: தனியாருக்கு, அரசு கேபிள் நிறுவனம் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum