TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆயிஷாவுடன் திருமணம்: சோயப் ஒப்புதல்

Go down

ஆயிஷாவுடன் திருமணம்: சோயப் ஒப்புதல் Empty ஆயிஷாவுடன் திருமணம்: சோயப் ஒப்புதல்

Post by Tamil Thu Apr 08, 2010 5:39 am

ஆயிஷாவுடன் திருமணம்: சோயப் ஒப்புதல் Tblfpnnews_22080194951







ஐதராபாத்
: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், பிரச்னைக்குரிய ஆயிஷா
சித்திக்கை முறைப்படி நேற்று விவாகரத்து செய்தார். ஆயிஷாவுடன் திருமணம்
நடந்தது அம்பலமானதுடன், அதை ஒப்புக் கொண்டிருக்கிறார் சோயப். ஆந்திர
அமைச்சர் இந்த விஷயத்தில் சமரசம் செய்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
சோயப் மாலிக், வரும் 15ம் தேதி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை
திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

இதற்கிடையே ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா
சித்திக் என்ற பெண், சோயப் மாலிக் தன்னை ஏற்கனவே 2002ல் திருமணம் செய்து
கொண்டு விட்டதாகவும், அவர் மூலம் தான் கர்ப்பம் அடைந்து கருச்சிதைவு
செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். சோயப் மாலிக்குடன் திருமணம்
நடந்ததற்கான சான்றிதழையும் ஆயிஷா வெளியிட்டுள்ளார். சோயப் உடன் ஓட்டலில்
தங்கியிருந்ததற்கான ஆதாரங்களையும் அவர் போலீசிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து, சோயப் மீது வரதட்சணை கொடுமை, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட
குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சோயப்பிடம் விசாரணை நடத்தி அவரது
பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்வதற்கான சூழலும்
உருவானது. ஆனால், 'ஆயிஷா, அழகான படத்தை இன்டர்நெட்டில் காட்டி தொலைபேசி
மூலம் திருமணம் செய்து கொண்டதாகவும், போட்டோவில் பார்த்த ஆயிஷா வேறு,
தற்போது திருமணம் செய்து கொண்டதாக கூறும் ஆயிஷா வேறு. இவரை நான் நேரில்
பார்த்ததேயில்லை'என, சோயப் தெரிவித்திருந்தார். சோயப்புக்கு பாகிஸ்தான்
தரப்பில் ஆதரவு பெருகி வந்த அதே சமயம், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட
இடங்களில் சோயப்புக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
பிரச்னை பூதாகரமாவதை உணர்ந்த ஆந்திர அரசியல் பிரமுகர்களும், முஸ்லிம்
தலைவர்களும் இந்த விஷயத்தை சுமுகமாக முடிக்க ஆலோசனை நடத்தினர்.

சமரசம்: ஆந்திர
சிறுபான்மைத்துறை அமைச்சர் முகமது அகமதுல்லா, ஆந்திர காங்கிரஸ் சிறுபான்மை
பிரிவு தலைவர் அபித் ரசூல் கான், முஸ்லிம் மத பெரியவர்கள் ஒன்று கூடி
ஆயிஷா குடும்பத்துடனும், சோயப்புடனும் நேற்று முன்தினம் இரவு
பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சோயப் மாலிக், ஆயிஷா சித்திக்கை
கடந்த 2002ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில்
திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டார். தற்போது அவரை விவாகரத்து
செய்வதாக எழுத்துப் பூர்வமாக நேற்று தெரிவித்தார். ஆயிஷாவை 'தலாக்'
செய்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக ஆயிஷாவின் தாய் பரிசா
தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெரியவர்களின் ஆலோசனையின் பேரில், இந்த
நடவடிக்கையை முழு மனதோடு ஏற்பதாகவும், இந்த முடிவை தான் ஆயிஷா
எதிர்ப்பார்த்ததாகவும் கூறினார்.

சானியாவின் உறவினர் குறிப்பிடுகையில், ' சோயப்
- ஆயிஷா பிரச்னை முஸ்லிம் சமுதாயத்துக்கும், நம் நாட்டுக்கும் அவப்பெயரை
ஏற்படுத்துவதாக இருந்தது. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண
இருதரப்பையும் அழைத்து பேசினோம். இந்த தீர்வால் யாருக்கும் லாபமோ, நஷ்டமோ
கிடையாது. வெற்றி பெற்றதெல்லாம் முஸ்லிம் சமுதாயமும், நம்நாடும் தான்'
என்றார்.இருதரப்பும் ஒத்துப் போனாலும், சோயப் மீதான புகார் இன்னும்
பரிசீலனையில் உள்ளது. இந்த புகாரை ரத்து செய்யும் படி சோயப் சார்பில்,
போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பஞ்ஜாராஹில்ஸ் போலீஸ் நிலையத்தில்
கொடுத்த புகாரை வாபஸ் பெற ஆயிஷா குடும்பத்தினர் ஒப்புதல்
தெரிவித்துள்ளதாக, மத்தியஸ்தம் செய்த பெரியவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிஷாவை 'தலாக்' செய்து விட்டதால் சோயப் - சானியா மிர்சா திருமணம் வரும்
15ம் தேதி நடப்பது உறுதியாகி விட்டது.

முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு:
அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியத் தலைவர் ஷாயிஸ்தா அம்பர்
குறிப்பிடுகையில், ' சோயப் - ஆயிஷாவுக்கு முறைப்படிகோர்ட் விவாகரத்து
வழங்கிய பின் தான் சானியா திருமணம் நடக்க வேண்டும். இதை மீறி நடந்தால் அது
சட்டத்தை மீறியதாகும். அதுமட்டுமல்லாது முதல் மனைவி இருப்பதை மறைத்து
சானியாவை மணக்க சோயப் துணிந்துள்ளார். எனவே, சானியா ஒரு இந்தியரை திருமணம்
செய்து கொள்வது தான் நல்லது' என்றார்.

முஸ்லிம் சட்ட வாரியத்தின் துணைத் தலைவர்
கால்பி சாதிக் குறிப்பிடுகையில், ' சோயப்பை மணப்பது சானியாவின் தனிப்பட்ட
முடிவாக இருந்தாலும், சானியா இந்திய பெண். அவர் பாகிஸ்தானிய வீரரை
மணப்பதன் மூலம் தன் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்கிறார். திருமணத்துக்கு
பிறகு சானியா, ரசிகர்களிடம் தன் செல்வாக்கை இழந்து விடுவார்' என்றார்.

ஆயிஷாவின் செலவுக்கு ரூ. 15 ஆயிரம்:
சோயப், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி ஆயிஷாவுக்கு தலாக் சொல்லியுள்ளார்.
இதற்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரம் ரூபாய் அவர் அளித்திருக்கிறார். இந்த பணம்
மூன்று மாதத்துக்குரியது. ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் வீதம் ஆயிஷாவின்
செலவுக்கு கொடுக்கப்பட்டது. இது குறித்து கோல்கொண்டா காஜி ஜாப்ரி
குறிப்பிடுகையில், 'சோயப் மூன்று முறை தலாக் சொல்லியுள்ளார். ஒவ்வொரு
தலாக்குக்கும் ஆயிஷா ஒவ்வொரு மாதம் காத்திருக்க வேண்டும். அவசரப்பட்டு
மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. மூன்று மாதத்துக்கு பிறகு தான் அவரது
விவாகரத்து செல்லுபடியாகும். ஆனால், சோயப்புக்கு இந்த நடைமுறை இல்லை. அவர்
உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம்' என்றார். முஸ்லிம்களின் ஒவ்வொரு
பிரிவில் ஒவ்வொரு விதமான சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றன. சோயப் சன்னி
பிரிவைச் சேர்ந்தவர். சானியா ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum