Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பச்சிலைக் காய்கறிகளில் உள்ள சத்துக்களின் அளவு - அனுபவங்கள்
Page 1 of 1

வணிஷா நம்பியார், தி எம்.எஸ். யுனிவர்சிட்டி ஆப் பரோடா, வடோதரா,
அக்டோபர் 9ம் தேதி, 2007ல் வெளியான செய்தி
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உயிர்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் உள்ளன. மேலும் அவற்றில் உள்ள தாவர வேதிப்பொருட்கள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நீரழிவு போன்றவற்றை தடுக்கும் திறன் கொண்டவை ஆகும். செரிபரோ வாஸ்குளார் நோயினால் ஏற்படும் இறப்பிற்கும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளும் அளவிற்கும் எதிர்மறையான தொடர்பு காணப்படுகிறது. ஒரே தாவர வேதிப்பொருளைக் காட்டிலும், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிக் கலவையில் இருந்து கிடைக்கும் பலவகை வேதிப்பொருட்கள் உடலை நன்கு காத்து பராமரிக்கின்றன.
இந்தியாவில் உள்ள தாவர வர்க்கத்தில் 6000 சிற்றினங்கள் உணவிற்காக பயன்படுகிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு பச்சிலைக் காய்கறிகள் ஆகும். பச்சிலைக் காய்கறிகளில் அதிக அளவில் தாது உப்புகளும், ஊட்டச்சத்துகளும் உள்ளன. இவற்றை முறையாக உட்கொண்டால் இந்திய மக்களின் நுண்ணுாட்டம் முன்னேற்றம அடையும். இதில் பலவற்றில் மருத்துவ குணங்கள் உள்ளது. இந்திய மக்களின் உடல் நலக்கோளாறுகளை கலைவதற்கு, மருத்துவ குணங்களும் நுண்ணூட்டச் சத்துகளும் நிறைந்த பச்சிலைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எனினும் அனைத்து பச்சைக் காய்கறிகளிலும், அதிக அளவில் தண்ணீர் இருப்பதால், அவை விரைவில் கெட்டுப் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே நீண்டநாள் வைப்பதற்காக, அவற்றில் உள்ள ஈரப்பதத்தை வெளியேற்ற வேண்டும். இன்றியமையாத சத்துக்கள், நீர் அகற்றத்தின் போது வெளியேறாமல் இருக்க, நேரடியாக சூரிய ஒளியில் உலரவைத்தல், நிழலில் உலரவைத்தல், மின் அறையில் உலரவைத்தல், முன்நேர்த்தி செய்து நிழலில் உலர வைத்தல் போன்ற முறைகளால் 25-90% வரை ஈரப்பதம் உள்ள பல்வேறு உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தலாம்.
இவ்வாறு உலர்த்தப்பட்ட காய்கறிகளை மக்களின் பாரம்பரிய சமையல் வகைகளில் சேர்த்து, மக்களிடம் அவசியத்தை உணர்த்தி, உணவு சார்ந்த அணுகுமுறையில் ஊட்ட அளவை மேம்படுத்தலாம்.
குழு உறுப்பினர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
R மேற்கண்ட கருத்துக்கு மறுபதில் அளித்து, தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவிக்கிறோம்.
மறுபதில்களின் தொகுப்புகள்
அனுபவங்களின் ஒப்பீடுகள்
சார்ந்த பிற தகவல் இணைப்புகள்
மறு பதில்களின் தொகுப்பு
பச்சிலைக் காய்கறிகள், மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கனிமப் பொருள்களையும் அளித்து உணவுப் பயிர்களுள் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. கீரைகளின் சத்தளவை பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாததாலும், அதனை பயன்படுத்துவதற்கான நுட்பங்களை அதிகஅளவில் உட்புகுத்தாததினாலும், மக்கள் கீரைகளை மிக குறைவாகவே பயன்படுத்துகின்றனர். பச்சிலைக் கீரைகள் மூலம், மக்கள் உட்கொள்ளும் உணவின் சத்தை உயர்த்துவதற்காக எழுப்ப்ப்பட்ட கேள்விகளுக்கு பலர் விடையளித்துள்ளனர். இதில் பச்சிலைக் காய்கறிகளின் சத்தளவு, அவற்றை பயன்படுத்துவதன் இடர்பாடுகள், உணவுப் பண்டங்களில் பச்சிலைக் கீரைகள் சேர்க்கப்படும் அனுபவங்கள் பற்றிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
பச்சிலைக் காய்கறிகளை பற்றி கூறும் பொழுது, சிறுசெடி, புதர் மற்றும் மரங்களில் இருந்து பச்சிலைக் காய்கறிகளில் உள்ள இலைகள் கிடைப்பதாகவும், அவற்றில் அதிக அளவு சத்துகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இலைகளில் வைட்டமின் ஏ, சி, போலிக் அமிலம், ரைபோபிலேவின், தைமின், β கரோடின், மற்றும் இரும்பு மற்றும் கால்சியம் போன்ற கனிமப் பொருள்கள், அதிக அளவில் நார்ச் சத்துக்கள் உள்ளன. பச்சிலைக் காய்கறிகளில் உள்ள β கரோடின், வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு கண் குருடு வராமல் தடுக்கிறது. பருவம், பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களின் வகை மற்றும் ரகம் குறித்து பச்சிலைக் காய்கறிகளின் சத்தளவு வேறுபடும். இராசயனப் பொருள் அதிகம் பயன்படுத்தப்படும் பச்சிலைக் காய்கறிகளில், வைட்டமின் சி, பி, சக்கரை மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டுகள் குறைவாக உள்ளன. எளிமையான, முறையில் குறைவான செலவில், குறைந்த அளவு ஆட்கள் மற்றும் பராமரிப்புடன் பச்சிலைக் காய்கறிகளை சாகுபடி செய்ய வேண்டும்.
சாகுபடி செய்யப்பட்ட அல்லது வயல்வெளிகள், வரப்புகள், நன்செய் வரப்புகள் போன்றவற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட பச்சிலைக் காய்கறியின் வேதிக் கூறுகள் பற்றி கலந்துரையாடலில் பங்கேற்றோர் கூறுகின்றனர். அவற்றை வேம்பு, முருங்கை, மற்றும் பப்பாளி போன்ற மர / புதர் வகை இளம் இலைகள்; முட்டைகோஸ், பூசணி, மிளகாய், சக்கரைக் கிழங்கு மற்றும் பீட்ருட் (மேற்கு வங்காளம். பீஹார் மற்றும் ஓரிசாவில் பயன்படுத்தப்படும்) போன்ற சுவையான சத்துள்ள காய்கறி இலைகள்; ரோசேல், புளிச்சகீரை, இனிப்பு மற்றும் கசப்பு சணல், கருவேற்பிலை போன்றவற்றின் இலைகள்; வட மற்றும் தென்னிந்திய மக்கள் உண்ணும், சிறுநெல்லி இலைகள், தண்டுக்கீரையின் இலைகள் மற்றும் தண்டுகள், கோழிக்கொண்டை, வல்லாரை, பருப்புக்கீரை, பிரம்மி, கோவைப்பழம் போன்ற கீரைகள் என பிரித்துள்ளனர். மேலும் சிலர் தங்களது இடத்தில் உள்ள காடுகள் மற்றும் புதர்களில் கிடைக்கக் கூடிய கீரைகளை உட்கொள்கின்றனர். கொத்தமல்லி, புதினா, திருநீற்றுப்பச்சிலை, வெங்காயத்தாள், சதகுப்பை, வெள்ளரி போன்றவற்றை பச்சையாகவும் சமைத்தும் உண்ணலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
பச்சிலைக் காய்கறிகள் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் இடர்பாடுகள் பற்றிக் கூறினர். பாக்டீரியா, ஏனைய கிருமிகள், பூச்சிகள் மண் மற்றும் தண்ணீர் மூலம் பல நச்சுப் பொருட்கள் பச்சைலைக் கீரையை மாசுபடுத்துவதால் தாய்மார்கள் அவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை. அனைத்து கீரைகளையும் உபயோகிக்கும் முன் நன்றாக ஒடும் தண்ணீரில் கழுவி வயிற்றுப்போக்கை தடுக்கலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மேலும் முறையான சேமிப்பு மற்றும் பதனப்படுத்தும் முறைகளை பயன்படுத்தாததால் 60% காய்கறிகள் சேதமாகின்றது. பச்சிலைக் கீரைகள் விரைவில் அழுகி விடுவதால், அவற்றை தொலை தூரங்களுக்கு பாதுகாப்பு வசதி இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. அதிக அளவில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பட்டினாலும், பாசனத்திற்கு கழிவுநீர் பயன்படுத்துவதாலும், கீரைகளில் கடின உலோகங்கள் மற்றும் நுண்ணுயிர் மாசுபாட்டை கண்டறிய வேண்டும் என்று உறுப்பினர்கள் கூறுகின்றனர். மேலும் மேற்கத்திய காய்கறிகளான நூல்கோல் மற்றும் சிவப்பு முட்டைகோஸ் போன்றவற்றில் நகர்புற மக்களுக்கு நாட்டம் அதிகரித்திருப்பதால், இந்திய வகைக் காய்கறிகளின் கிராக்கி குறைந்துள்ளது.
பச்சிலைக் கீரைகளை பண்டங்களில் சேர்ப்பதன் அனுபவங்களை உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்திய குழந்தைகள் உண்பதற்கு கஷ்ட்டப்படாதவாறு, தற்பொழுது உள்ள உணவுப் பட்டியலில் எவ்வாறு காய்கறிகளையும், பச்சிலைக் காய்கறிகளையும் சேர்த்து உணவு பண்டங்கள் தயார் செய்யலாம் என தேசிய உணவூட்ட அமைப்பு கூறுகிறது. இவ்வாறு காய்கறிகள் மற்றும் பச்சிலைக் காய்கறிகள் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் மத்திய உணவுத் திட்டத்தின் மூலம் டெல்லியில் உள்ள அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில், உணவின் தரம் மற்றும் சுவை மாறாமல் இருக்க, முருங்கை, வெந்தையம் மற்றும் கருவேற்பிலை பொடிகளை அப்பளம், கூட்டு, சூப்புகளில் கலக்கின்றனர். இவ்வாறு தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள், கிராமப்புற மக்களின் வாழ்வை உயர்த்துகிறது. சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பக்கோரா போன்ற உணவு வகைகளை தயாரிக்கும் பொழுது, கோதுமை, அரிசி மற்றும் பெசன் மாவுடன் காலிப்பிளவர் இலைப் பொடியை கலப்பதன் மூலம் β- கரோடின் தக்கவைக்கப்பட்டு வைட்டமின் 'ஏ' குறைபாடு தீர்க்கப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தில் தெருக்கடைகளில் உள்ள உணவுகளில் தண்டுக் கீரைப் பொடி சேர்க்கப்பட்டுகின்றது.
பச்சிலைக் காய்கறிகள் சாகுபடி செய்யவும் பயன்படுத்தவும் தேவையான பரிந்துரைகளை உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்.
ஊட்டச்சத்து சார்ந்த சிக்கல்களுக்கு, இயற்கைப் பொருட்களே தீர்வாக முடியும். எனவே குறைவான செலவில், எளிதில் கிடைக்கக் கூடிய, நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்த காய்கறிகளை உண்பதன் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களின் நுண்ணூட்டத்தையும் அதிகரிக்க முடியும்.
அனுபங்களின் ஒப்பீடு
இமாச்சல பிரதேசம்
தெருக்கடைகளில் விற்கப்படும் உணவுகளின் ஊட்டச்சத்தை பச்சிலைக் கீரைகள் அதிகரிக்கிறது. பாலம்பூர் (ஸ்வர்ணா, புதுடில்லி)
இந்திய தெருக்கடைகளில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்காக, மாத்ரி, உருளைக்கிழங்கு, டிக்கி போன்றவற்றில் பச்சிலைக் காய்கறிகள் சேர்க்கப்படுகிறது. தண்டு கீரைகளின் இலைகள் பொடியாக்கப்பட்டு, அவை திட்டமிடப்பட்டு, அவை வெவ்வேறு இலைப்பொடிகளுடன் அளிக்கப்படுகிறது. மேற்கண்ட இரண்டு உணவுப்பண்டங்களிலும் ஊட்டச்சத்து அதிகரித்து நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
புது டெல்லி
(from கீரைகளுடன் ஊட்டமளிக்கப்பட்ட மதிய உணவு திட்டம் (ராஜேஸ்வரி ரமணா, இந்திய உணவூட்ட அமைப்பு, புது டில்லி))
அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் மதிய உணவின் தரத்தையும் ஊட்டச்சத்தையும் அதிகரிப்பதற்காக இந்திய உணவூட்ட அமைப்பு, முயற்சி எடுத்து வருகிறது. பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கீரைகள் மற்றும் காய்கறிகளின் சேர்க்கப்பட்ட உணவு அளிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளும் ஆசிரியர்களும் கீரைகள் மற்றும் காய்கறிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து சுவையை பாராட்டினர்.
பல்வேறு மாநிலங்கள்
காய்கறிகளின் பச்சிலைப் பகுதிகளை நன்றாக பயன்படுத்துதல் (சுசந்தா ராய், தேசிய தோட்டக்கலை மிஷன், புதுடில்லி)
பொதுவாக அகற்றப்படும் காளிப்பிளவர் இலைகளில் அதிக அளவில் பச்சையமும், β கரோடினும் உள்ளது. இலைப் பகுதிகளை நன்கு கொதிக்க வைத்து, உலர்த்திய பிறகு பொடியாக்க வேண்டும். உலர்ந்த இலைகளை மின் இயக்கும் சுத்தி அலையில் பொடியாக்க வேண்டும். இவ்வாறு உள்ள β கரோடின் நிறைந்த காளிப்பிளவர் இலைப்பொடியை கோதுமை, அரிசி மற்றும் பெசன் மாவுடன் கலந்து உட்கொள்வதன் மூலம் நாட்டில் உள்ள வைட்டமின் ஏ குறைபாடு நீக்கப்படுகிறது.
தமிழ்நாடு
பச்சிலைக் காய்கறிகளில் உள்ள இரும்புச் சத்து (டி என். அனுராதா இணை ஆராய்ச்சியாளர்) (from T. பன்னிமடையில் உள்ள கிராமப்பள்ளிக் குழந்தைகளுக்கு அன்றாட மதிய உணவின் போது கூட்டுடன் 25 கிராம் முருங்கை இலை இரண்டு நாட்களுக்கும், தண்டுக் கீரை மூன்று நாட்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால், தாளையூர் கிராமப் பள்ளிக் குழந்தைகளுக்கு அவை கொடுக்கப்படவில்லை. ஆறு மாதத்திற்கு பிறகு பள்ளிக் குழந்தைகளின் இரத்தத்தில் உள்ள சராசரி ஹீமோகுளோபின் அளவை ஒப்பிட்டுப் பார்த்ததில் பச்சிலைக் காய்கறிகள் உண்டவர்களின் ஹீமோகுளோபின் அளவு சற்று அதிகரித்திருந்தது.
சார்ந்த பிற தகவல் இணைப்புகள்
பரிந்துரை செய்யப்பட்ட ஆவணங்கள்
குறைவாகப் பயன்படுத்தப்படும் மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் தோட்டக்கலைப் பயிர்கள் - புத்தகம் (கே. வி. பீட்டர், கேரளா வேளாண்மைப் பல்கலைக்கழகம், திருச்சூர்)
தகவல் கிடைக்குமிடம் ; [You must be registered and logged in to see this link.]:
நார்ச்சத்துகள், கனிமச்சத்துகள் மற்றும் β கரோடின் நிறைந்த இலைகள் நிறைந்த காய்கறிகளான அகத்தி, செக்குருமனி, முருங்கை இலை,தண்ணீர் இலை, சேப்பங்கிழங்கு இலை ஆகியவற்றைக் காணவும்.
ராஜ் கங்குலி, தனி ஆலோசகர், புதுடில்லி
[You must be registered and logged in to see this link.]
பச்சிலை காய்கறிகள் மூலம் நச்சு வாய்ந்த / கடின உலோகங்களைஉள்ளீர்த்தல்.
வெளியீடு: யி.சோமசுந்தரம்; CSWCRTI, Research Centre ; தி ஹிந்து; கோட்டா; 16 நவம்பர் 2006. தகவல் கிடைக்குமிடம் :

மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில்மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் மதிப்பீடு (ராஜேஸ்வரி ரமணா, இந்திய உணவூட்ட அமைப்பு; புது டில்லி)

பச்சிலைக் காய்கறிகள்
வெளியீடு : இந்திய உணவூட்ட அமைப்பு

குழந்தைகளின் முழு வளர்ச்சியில் பள்ளியின் மதிய உணவுத் திட்டத்தின்
ஆய்வு அறிக்கை : ஸ்ரீ அவனாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரி, கோயமுத்துார்.
கிடைக்குமிடம் : [You must be registered and logged in to see this link.]
உணவு பதனப்படுத்துதல்
புத்தகம் : தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம்
தகவல் கிடைக்குமிடம் :

பரிந்துரை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் திட்டங்கள்
தேசிய உணவூட்ட நிறுவனம், ஐதராபாத் (தீக்ஷா ஷர்மா, உலக சுகாதார அமைப்பு, புதுடில்லி) ஜமாய் - ஓஸ்மானியா -500007, ஐதராபாத் தொலைபேசி : 040-27008921-27;
[url=http://www.indg.in/Documents and Settings/Rao/Local Settings/Temporary Internet Files/OLK89E/nin@ap.nic.in][You must be registered and logged in to see this link.][/url]; [You must be registered and logged in to see this link.]
இந்திய உணவூட்ட அமைப்பு, புதுடெல்லி (ராஜேஸ்வரி ரமணா) சி 13, குதப் இன்ஸ்டியூசனல் பகுதி, 110016; தொலைபேசி 91-11-26962615;[You must be registered and logged in to see this link.]
மேம்பாட்டு ஆராய்ச்சி தகவல் தொடர்பு மற்றும் சேவை மையம் கொல்கத்தா (அர்தெந்து சாட்டர்ஜி)
58கி தர்மபோலா ரோடு, போஸ்புகுர், 700042,
தொலைபேசி: 91-33-24427311; [You must be registered and logged in to see this link.]
மறுபதில்களின் தொகுப்பு
நுண்ணூட்டம் அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்வதை அதிகரித்தல்,அன்சு ஷர்மா, இந்திய உணவூட்ட அமைப்பு, புதுடில்லி. (ஆலோசனை : அனுபங்களின் ஒப்பீடு) வெளியான தேதி : 19 அக்டோபர் 2005.[You must be registered and logged in to see this link.]
மதிய உணவு திட்டத்தின் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்வதை அதிகரித்தல் ஸ்ருதி மர்ஜாரா, தேசிய உணவூட்ட அமைப்பு, புதுடில்லி (ஆலோசனை)
வெளியான தேதி : மே 2006
[You must be registered and logged in to see this link.](PDF , Size: 172 KB )

- அவரவர் பகுதிகளில் கண்டறியப்பட்ட பச்சிலைக் காய்கறிகளை அவற்றின் பின்னணி மற்றும் தாவரப்பெயருடன் அள
- கீரைகளை பதனப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் முறைகள் மற்றும் பல்வேறு கட்டங்களில் உலர்த்தும் போதும், சேமிக்கும் போதும் உள்ள சத்தளவு.
- உலர்ந்த இலை பொடிகளை பயன்படுத்திய சமூகத்தினர் (அ) தேசிய ஊட்டமளிப்பு திட்டத்தின் அனுபவங்கள்.
- பெண்களின் வேலைவாய்ப்பிற்காகவும் வருமானத்திற்காகவும் உலர்ந்த பச்சை கீரைகள் மற்றும் அவை சார்ந்த உணவுகள் தயாரித்தல் பற்றிய கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள்
- நல்ல கருத்துப் பரிமாற்றங்களையும், விவாதங்களையும் எதிர்பார்க்கிறோம்.
R மேற்கண்ட கருத்துக்கு மறுபதில் அளித்து, தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவிக்கிறோம்.
- கே. வி. பீட்டர், கேரளா வேளாண்மை பல்கலைக்கழகம், திருச்சூர்
- தீக்ஷா சர்மா, உலக சுகாதார அமைப்பு, புதுடில்லி
- ஹச். எஸ். ஷர்மா, தனி ஆலோசகர், புதுடில்லி
- காஜல் பாண்டியா, சீத்தாராம் பாரத்யா, அறிவியல் மற்றும் ஆராயச்சி நிறுவனம், புதுடில்லி
- [b style="font-weight: bold;"][b style="font-weight: bold;"][b style="font-weight: bold;"][b style="font-weight: bold;"][b style="font-weight: bold;"]அனுபாம் பெளல், வேளாண் பயிற்சி மையம், பூலியா, மேற்குவங்காளம்.[/b][/b][/b][/b][/b]
- ராஜ் கங்குலி, தனி ஆலோசகர், புதுடில்லி
- ஸ்வர்ணா, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு புதுடெல்லி
- ராஜேஸ்வரி ரமணா, இந்திய உணவூட்ட அமைப்பு, புதுடெல்லி
- அர்தெந்து சாட்டர்ஜி, மேம்பாட்டு ஆராய்ச்சி தகவல் தொடர்பு மற்றும் சேவைகள் மையம் (DRCSC), கொல்கத்தா
- நேகா ஸ்ரீவஸ்தவா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வாரணாசி
- இந்திரா சக்ரவர்த்தி, அகில இந்திய சுகாதாரம் மற்றும் பொது நல நிறுவனம், கொல்கத்தா
- சுசந்தா ராய், தேசிய தோட்டக்கலை நிறுவனம் புதுடெல்லி
மறுபதில்களின் தொகுப்புகள்
அனுபவங்களின் ஒப்பீடுகள்
சார்ந்த பிற தகவல் இணைப்புகள்
மறு பதில்களின் தொகுப்பு
பச்சிலைக் காய்கறிகள், மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கனிமப் பொருள்களையும் அளித்து உணவுப் பயிர்களுள் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. கீரைகளின் சத்தளவை பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாததாலும், அதனை பயன்படுத்துவதற்கான நுட்பங்களை அதிகஅளவில் உட்புகுத்தாததினாலும், மக்கள் கீரைகளை மிக குறைவாகவே பயன்படுத்துகின்றனர். பச்சிலைக் கீரைகள் மூலம், மக்கள் உட்கொள்ளும் உணவின் சத்தை உயர்த்துவதற்காக எழுப்ப்ப்பட்ட கேள்விகளுக்கு பலர் விடையளித்துள்ளனர். இதில் பச்சிலைக் காய்கறிகளின் சத்தளவு, அவற்றை பயன்படுத்துவதன் இடர்பாடுகள், உணவுப் பண்டங்களில் பச்சிலைக் கீரைகள் சேர்க்கப்படும் அனுபவங்கள் பற்றிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
பச்சிலைக் காய்கறிகளை பற்றி கூறும் பொழுது, சிறுசெடி, புதர் மற்றும் மரங்களில் இருந்து பச்சிலைக் காய்கறிகளில் உள்ள இலைகள் கிடைப்பதாகவும், அவற்றில் அதிக அளவு சத்துகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இலைகளில் வைட்டமின் ஏ, சி, போலிக் அமிலம், ரைபோபிலேவின், தைமின், β கரோடின், மற்றும் இரும்பு மற்றும் கால்சியம் போன்ற கனிமப் பொருள்கள், அதிக அளவில் நார்ச் சத்துக்கள் உள்ளன. பச்சிலைக் காய்கறிகளில் உள்ள β கரோடின், வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு கண் குருடு வராமல் தடுக்கிறது. பருவம், பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களின் வகை மற்றும் ரகம் குறித்து பச்சிலைக் காய்கறிகளின் சத்தளவு வேறுபடும். இராசயனப் பொருள் அதிகம் பயன்படுத்தப்படும் பச்சிலைக் காய்கறிகளில், வைட்டமின் சி, பி, சக்கரை மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டுகள் குறைவாக உள்ளன. எளிமையான, முறையில் குறைவான செலவில், குறைந்த அளவு ஆட்கள் மற்றும் பராமரிப்புடன் பச்சிலைக் காய்கறிகளை சாகுபடி செய்ய வேண்டும்.
சாகுபடி செய்யப்பட்ட அல்லது வயல்வெளிகள், வரப்புகள், நன்செய் வரப்புகள் போன்றவற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட பச்சிலைக் காய்கறியின் வேதிக் கூறுகள் பற்றி கலந்துரையாடலில் பங்கேற்றோர் கூறுகின்றனர். அவற்றை வேம்பு, முருங்கை, மற்றும் பப்பாளி போன்ற மர / புதர் வகை இளம் இலைகள்; முட்டைகோஸ், பூசணி, மிளகாய், சக்கரைக் கிழங்கு மற்றும் பீட்ருட் (மேற்கு வங்காளம். பீஹார் மற்றும் ஓரிசாவில் பயன்படுத்தப்படும்) போன்ற சுவையான சத்துள்ள காய்கறி இலைகள்; ரோசேல், புளிச்சகீரை, இனிப்பு மற்றும் கசப்பு சணல், கருவேற்பிலை போன்றவற்றின் இலைகள்; வட மற்றும் தென்னிந்திய மக்கள் உண்ணும், சிறுநெல்லி இலைகள், தண்டுக்கீரையின் இலைகள் மற்றும் தண்டுகள், கோழிக்கொண்டை, வல்லாரை, பருப்புக்கீரை, பிரம்மி, கோவைப்பழம் போன்ற கீரைகள் என பிரித்துள்ளனர். மேலும் சிலர் தங்களது இடத்தில் உள்ள காடுகள் மற்றும் புதர்களில் கிடைக்கக் கூடிய கீரைகளை உட்கொள்கின்றனர். கொத்தமல்லி, புதினா, திருநீற்றுப்பச்சிலை, வெங்காயத்தாள், சதகுப்பை, வெள்ளரி போன்றவற்றை பச்சையாகவும் சமைத்தும் உண்ணலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
பச்சிலைக் காய்கறிகள் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் இடர்பாடுகள் பற்றிக் கூறினர். பாக்டீரியா, ஏனைய கிருமிகள், பூச்சிகள் மண் மற்றும் தண்ணீர் மூலம் பல நச்சுப் பொருட்கள் பச்சைலைக் கீரையை மாசுபடுத்துவதால் தாய்மார்கள் அவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை. அனைத்து கீரைகளையும் உபயோகிக்கும் முன் நன்றாக ஒடும் தண்ணீரில் கழுவி வயிற்றுப்போக்கை தடுக்கலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மேலும் முறையான சேமிப்பு மற்றும் பதனப்படுத்தும் முறைகளை பயன்படுத்தாததால் 60% காய்கறிகள் சேதமாகின்றது. பச்சிலைக் கீரைகள் விரைவில் அழுகி விடுவதால், அவற்றை தொலை தூரங்களுக்கு பாதுகாப்பு வசதி இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. அதிக அளவில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பட்டினாலும், பாசனத்திற்கு கழிவுநீர் பயன்படுத்துவதாலும், கீரைகளில் கடின உலோகங்கள் மற்றும் நுண்ணுயிர் மாசுபாட்டை கண்டறிய வேண்டும் என்று உறுப்பினர்கள் கூறுகின்றனர். மேலும் மேற்கத்திய காய்கறிகளான நூல்கோல் மற்றும் சிவப்பு முட்டைகோஸ் போன்றவற்றில் நகர்புற மக்களுக்கு நாட்டம் அதிகரித்திருப்பதால், இந்திய வகைக் காய்கறிகளின் கிராக்கி குறைந்துள்ளது.
பச்சிலைக் கீரைகளை பண்டங்களில் சேர்ப்பதன் அனுபவங்களை உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்திய குழந்தைகள் உண்பதற்கு கஷ்ட்டப்படாதவாறு, தற்பொழுது உள்ள உணவுப் பட்டியலில் எவ்வாறு காய்கறிகளையும், பச்சிலைக் காய்கறிகளையும் சேர்த்து உணவு பண்டங்கள் தயார் செய்யலாம் என தேசிய உணவூட்ட அமைப்பு கூறுகிறது. இவ்வாறு காய்கறிகள் மற்றும் பச்சிலைக் காய்கறிகள் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் மத்திய உணவுத் திட்டத்தின் மூலம் டெல்லியில் உள்ள அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில், உணவின் தரம் மற்றும் சுவை மாறாமல் இருக்க, முருங்கை, வெந்தையம் மற்றும் கருவேற்பிலை பொடிகளை அப்பளம், கூட்டு, சூப்புகளில் கலக்கின்றனர். இவ்வாறு தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள், கிராமப்புற மக்களின் வாழ்வை உயர்த்துகிறது. சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பக்கோரா போன்ற உணவு வகைகளை தயாரிக்கும் பொழுது, கோதுமை, அரிசி மற்றும் பெசன் மாவுடன் காலிப்பிளவர் இலைப் பொடியை கலப்பதன் மூலம் β- கரோடின் தக்கவைக்கப்பட்டு வைட்டமின் 'ஏ' குறைபாடு தீர்க்கப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தில் தெருக்கடைகளில் உள்ள உணவுகளில் தண்டுக் கீரைப் பொடி சேர்க்கப்பட்டுகின்றது.
பச்சிலைக் காய்கறிகள் சாகுபடி செய்யவும் பயன்படுத்தவும் தேவையான பரிந்துரைகளை உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்.
- தினசரி உணவுப் பட்டியலில் அதிக அளவில் சத்துள்ள பச்சிலைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுதல்.
- பச்சிலைக் காய்கறிகளை சேமித்து வைப்பதற்கு தேவையான குறைந்த செலவிலான முறைகளை கண்டறிய கவனம் செலுத்தவும்.
- பச்சிலைக் காய்கறிகளை அதிக நேரம் சமைக்கவோ அல்லது பொறிக்கவோ கூடாது என வலியுறுத்த வேண்டும்.
- சமைக்கும் பொழுது ஏற்படும் சத்து இழப்பை தடுக்கும் வகையில் உணவு பண்டங்கள் தயார் செய்யவும்.
- கீரைகள் கிடைக்காத பருவங்களிலும், அவை கிடைக்கும் வகையில் அவற்றை விளையும் பருவங்களிலேயே பதனப்படுத்தி வைக்கவும்.
- பச்சிலைக் காய்க்கறிகள் கிராக்கியாக இருக்கும் காலங்களில், பச்சிலைப் பொடிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும். இதனால், கழுவுதல், சுத்தம் செய்தல், பச்சிலைக் காய்கறிகளை வெட்டுதல் போன்றவற்றை தவிர்க்கலாம்.
- குழந்தைகளிடையே காய்கறிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி, அவர்களின் உணவுப் பழக்கத்தை அதற்கேற்ற வகையில் மாற்றிக் கொள்ள வைக்கவும்.
- கிராமப் பெண்களின் வாழ்க்கையை உயர்த்த அவர்கள் உள்ளுரில் விளையாத மற்ற ஏனைய உணவுப் பயிர்களையும் பயன்படுத்த ஊக்குவிக்கவும்.
ஊட்டச்சத்து சார்ந்த சிக்கல்களுக்கு, இயற்கைப் பொருட்களே தீர்வாக முடியும். எனவே குறைவான செலவில், எளிதில் கிடைக்கக் கூடிய, நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்த காய்கறிகளை உண்பதன் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களின் நுண்ணூட்டத்தையும் அதிகரிக்க முடியும்.
அனுபங்களின் ஒப்பீடு
இமாச்சல பிரதேசம்
தெருக்கடைகளில் விற்கப்படும் உணவுகளின் ஊட்டச்சத்தை பச்சிலைக் கீரைகள் அதிகரிக்கிறது. பாலம்பூர் (ஸ்வர்ணா, புதுடில்லி)
இந்திய தெருக்கடைகளில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்காக, மாத்ரி, உருளைக்கிழங்கு, டிக்கி போன்றவற்றில் பச்சிலைக் காய்கறிகள் சேர்க்கப்படுகிறது. தண்டு கீரைகளின் இலைகள் பொடியாக்கப்பட்டு, அவை திட்டமிடப்பட்டு, அவை வெவ்வேறு இலைப்பொடிகளுடன் அளிக்கப்படுகிறது. மேற்கண்ட இரண்டு உணவுப்பண்டங்களிலும் ஊட்டச்சத்து அதிகரித்து நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
புது டெல்லி
(from கீரைகளுடன் ஊட்டமளிக்கப்பட்ட மதிய உணவு திட்டம் (ராஜேஸ்வரி ரமணா, இந்திய உணவூட்ட அமைப்பு, புது டில்லி))
அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் மதிய உணவின் தரத்தையும் ஊட்டச்சத்தையும் அதிகரிப்பதற்காக இந்திய உணவூட்ட அமைப்பு, முயற்சி எடுத்து வருகிறது. பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கீரைகள் மற்றும் காய்கறிகளின் சேர்க்கப்பட்ட உணவு அளிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளும் ஆசிரியர்களும் கீரைகள் மற்றும் காய்கறிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து சுவையை பாராட்டினர்.
பல்வேறு மாநிலங்கள்
காய்கறிகளின் பச்சிலைப் பகுதிகளை நன்றாக பயன்படுத்துதல் (சுசந்தா ராய், தேசிய தோட்டக்கலை மிஷன், புதுடில்லி)
பொதுவாக அகற்றப்படும் காளிப்பிளவர் இலைகளில் அதிக அளவில் பச்சையமும், β கரோடினும் உள்ளது. இலைப் பகுதிகளை நன்கு கொதிக்க வைத்து, உலர்த்திய பிறகு பொடியாக்க வேண்டும். உலர்ந்த இலைகளை மின் இயக்கும் சுத்தி அலையில் பொடியாக்க வேண்டும். இவ்வாறு உள்ள β கரோடின் நிறைந்த காளிப்பிளவர் இலைப்பொடியை கோதுமை, அரிசி மற்றும் பெசன் மாவுடன் கலந்து உட்கொள்வதன் மூலம் நாட்டில் உள்ள வைட்டமின் ஏ குறைபாடு நீக்கப்படுகிறது.
தமிழ்நாடு
பச்சிலைக் காய்கறிகளில் உள்ள இரும்புச் சத்து (டி என். அனுராதா இணை ஆராய்ச்சியாளர்) (from T. பன்னிமடையில் உள்ள கிராமப்பள்ளிக் குழந்தைகளுக்கு அன்றாட மதிய உணவின் போது கூட்டுடன் 25 கிராம் முருங்கை இலை இரண்டு நாட்களுக்கும், தண்டுக் கீரை மூன்று நாட்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால், தாளையூர் கிராமப் பள்ளிக் குழந்தைகளுக்கு அவை கொடுக்கப்படவில்லை. ஆறு மாதத்திற்கு பிறகு பள்ளிக் குழந்தைகளின் இரத்தத்தில் உள்ள சராசரி ஹீமோகுளோபின் அளவை ஒப்பிட்டுப் பார்த்ததில் பச்சிலைக் காய்கறிகள் உண்டவர்களின் ஹீமோகுளோபின் அளவு சற்று அதிகரித்திருந்தது.
சார்ந்த பிற தகவல் இணைப்புகள்
பரிந்துரை செய்யப்பட்ட ஆவணங்கள்
குறைவாகப் பயன்படுத்தப்படும் மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் தோட்டக்கலைப் பயிர்கள் - புத்தகம் (கே. வி. பீட்டர், கேரளா வேளாண்மைப் பல்கலைக்கழகம், திருச்சூர்)
தகவல் கிடைக்குமிடம் ; [You must be registered and logged in to see this link.]:
நார்ச்சத்துகள், கனிமச்சத்துகள் மற்றும் β கரோடின் நிறைந்த இலைகள் நிறைந்த காய்கறிகளான அகத்தி, செக்குருமனி, முருங்கை இலை,தண்ணீர் இலை, சேப்பங்கிழங்கு இலை ஆகியவற்றைக் காணவும்.
ராஜ் கங்குலி, தனி ஆலோசகர், புதுடில்லி
[You must be registered and logged in to see this link.]
பச்சிலை காய்கறிகள் மூலம் நச்சு வாய்ந்த / கடின உலோகங்களைஉள்ளீர்த்தல்.
வெளியீடு: யி.சோமசுந்தரம்; CSWCRTI, Research Centre ; தி ஹிந்து; கோட்டா; 16 நவம்பர் 2006. தகவல் கிடைக்குமிடம் :
[You must be registered and logged in to see this link.]
மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில்மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் மதிப்பீடு (ராஜேஸ்வரி ரமணா, இந்திய உணவூட்ட அமைப்பு; புது டில்லி)
[You must be registered and logged in to see this link.]
பச்சிலைக் காய்கறிகள்
வெளியீடு : இந்திய உணவூட்ட அமைப்பு
[You must be registered and logged in to see this link.]
குழந்தைகளின் முழு வளர்ச்சியில் பள்ளியின் மதிய உணவுத் திட்டத்தின்
ஆய்வு அறிக்கை : ஸ்ரீ அவனாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரி, கோயமுத்துார்.
கிடைக்குமிடம் : [You must be registered and logged in to see this link.]
உணவு பதனப்படுத்துதல்
புத்தகம் : தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம்
தகவல் கிடைக்குமிடம் :
[You must be registered and logged in to see this link.]
பரிந்துரை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் திட்டங்கள்
தேசிய உணவூட்ட நிறுவனம், ஐதராபாத் (தீக்ஷா ஷர்மா, உலக சுகாதார அமைப்பு, புதுடில்லி) ஜமாய் - ஓஸ்மானியா -500007, ஐதராபாத் தொலைபேசி : 040-27008921-27;
[url=http://www.indg.in/Documents and Settings/Rao/Local Settings/Temporary Internet Files/OLK89E/nin@ap.nic.in][You must be registered and logged in to see this link.][/url]; [You must be registered and logged in to see this link.]
இந்திய உணவூட்ட அமைப்பு, புதுடெல்லி (ராஜேஸ்வரி ரமணா) சி 13, குதப் இன்ஸ்டியூசனல் பகுதி, 110016; தொலைபேசி 91-11-26962615;[You must be registered and logged in to see this link.]
மேம்பாட்டு ஆராய்ச்சி தகவல் தொடர்பு மற்றும் சேவை மையம் கொல்கத்தா (அர்தெந்து சாட்டர்ஜி)
58கி தர்மபோலா ரோடு, போஸ்புகுர், 700042,
தொலைபேசி: 91-33-24427311; [You must be registered and logged in to see this link.]
மறுபதில்களின் தொகுப்பு
நுண்ணூட்டம் அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்வதை அதிகரித்தல்,அன்சு ஷர்மா, இந்திய உணவூட்ட அமைப்பு, புதுடில்லி. (ஆலோசனை : அனுபங்களின் ஒப்பீடு) வெளியான தேதி : 19 அக்டோபர் 2005.[You must be registered and logged in to see this link.]
மதிய உணவு திட்டத்தின் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்வதை அதிகரித்தல் ஸ்ருதி மர்ஜாரா, தேசிய உணவூட்ட அமைப்பு, புதுடில்லி (ஆலோசனை)
வெளியான தேதி : மே 2006
[You must be registered and logged in to see this link.](PDF , Size: 172 KB )
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» கீரைகளின் பயன்கள்
» தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதியில் உள்ள (M.L.A )எம்.எல்.ஏக்களின் ஈ-மெயில் ஐடிக்கள்..
» எனது இணையதள அனுபவங்கள்
» மரண விளிம்பில் 9 அனுபவங்கள் ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி
» பதறியடித்துக் கொண்டு ஓடிய சிங்களவர்! பிரபாகரன் ஆவியா? மார்க்ஸின் ஈழ அனுபவங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum