Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உடல் எடை அதிகரிப்புக்கு பயந்து விரும்பியதை சாப்பிடாமல் இருக்க முடியுமா? இதை படியுங்கள்...
Page 1 of 1
உடல் எடை அதிகரிப்புக்கு பயந்து விரும்பியதை சாப்பிடாமல் இருக்க முடியுமா? இதை படியுங்கள்...
[You must be registered and logged in to see this image.] இந்த உலகில் ஒரு சாண் வயிற்றுக்கு உணவு தேடுவதே முதன்மையான வேலையாக இருக்கிறது. அத்தகைய உணவு நமக்கு திருப்தியையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் சாப்பிடும் உணவில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் மற்றும் சிற்சில விஷயங்கள், பெருமளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன. சாப்பிடும் உணவு திருப்தியைத் தரவில்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வேறு நொறுக்குத் தீனிகளைத் தேடிச் செல்கிறீர்களா? ஆம் என்றால், சாப்பிடும் உணவை ரசித்து, ருசித்து சாப்பிட்ட பின், அதில் திருப்தியையும் மற்றும் முழுமையையும் கொடுக்கும் சில உணவுப் பழக்கங்களை கொடுத்திருக்கிறோம். அதை படித்துப் பயன் பெறுங்கள். |
உணவுப் பழக்கம் சாப்பிடும் போது டிவி பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. உணவு உண்ணும் நேரத்தை, சாப்பிடுவதில் மட்டுமே செலவிட வேண்டும். அப்படி கவனத்துடன் சாப்பிடும் வேளைகளில், வேகமாகவும், முழுமையாகவும் உண்டு முடித்த திருப்தி கிடைக்கும். மேலும் சாப்பிடும் நேரங்களில் வேகமான இசையைக் கேட்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாப்பிடும் வேகத்தை அது அதிகப்படுத்தி விடும். இதனால் உடல் நலத்திற்கும் கேடு விளையும். நுகர்தலும், மெல்லுதலும் உணவை நுகர்ந்து பார்க்கும் போதே, பாதி திருப்தி ஏற்படும். இரண்டாவதாக, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில் நொறுங்கத் தின்றால் நூறு வயது! எப்படியெனில் நன்றாக மென்று சாப்பிடும் போது, நாவின் செல்கள் தூண்டப்பட்டு, இந்த செய்தியை மூளைக்கு கொண்டு செல்லும். இதன் மூலம் 'பேஷ், பேஷ் சூப்பரா சாப்டாச்சு!!' என்ற உணர்வும் கிடைக்கும். ஈரப்பதமான உணவுகள் நீர்மச்சத்து மற்றும் நீர்மம் போன்ற உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு காரணம், அதிக காற்றும், நீரும் உள்ள உணவுகள் வேகமாக வயிற்றை நிரப்பிவிடும் என்பதாலேயே. எனவே பாப்-கார்ன்களுக்குப் பதிலாக காய்கறி சூப்பும், முந்திரிப் பழங்களுக்கு மாற்றாக திராட்சைகளையும் சப்பிடலாம். கொழுப்புச்சத்து உணவுகளை தவிர்க்கவும் புரோட்டின் அதிகமாக உள்ள உணவுகளை விட, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகள் திருப்திப்படுத்தும் உணர்வுகளை தூண்டுவதற்கு சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். எனவே கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். தூக்கம் தூக்கம் குறைவாக இருக்கும் போது, க்ரெலின் மற்றும் குறைவான அளவு லெப்டின் ஆகிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இவை தான் உணவுத் தேவைக்கான வேலைகளில் ஈடுபட்டு வருபவை. வயிற்றில் உற்பத்தியாகும் க்ரெலின் பசிக்கான தூண்டுதலை அதிகப்படுத்தும் போது, லெப்டின் திருப்திக்கான தூண்டுதலை உருவாக்கி, பசியைக் குறைக்கும். எனவே உடலுக்கு ஓய்வும், துக்கமும் தேவை. தண்ணீர் தினமும் சராசரியாக 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். சில சமயங்களில் அடிக்கடி பசியெடுக்கும். இதற்கு உண்மையான காரணம் தாகமாக இருப்பது தான்! எனவே சாப்பிடும் முன் 2 டம்ளர் அல்லது அதற்கும் மேல் தண்ணீர் குடிக்கவும். இதனால் சாப்பாட்டில் திருப்தியும், முழுமையும் கிடைக்கும். சிறிய தட்டுகள் சாப்பிடும் தட்டு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அந்த தட்டு முழுவதும் சாப்பாடு போட்டு, தட்டு காலியாகும் வரை சாப்பிடுவது தான் வழக்கம். இந்த பழக்கத்தால், சாப்பிடுவதன் நோக்கம் முழுமையாக மற்றும் திருப்தியாக சாப்பிடுவது என்று இல்லாமல், தட்டை காலியாக்குவது தான் என்று மாறிவிடுகிறது. எனவே, பெரிய தட்டுக்கு மாற்றாக, சற்றே அளவில் சிறிய தட்டினை பயன்படுத்தத் தொடங்கினால், திருப்தியை உணரலாம். நெடுநேரம் சாப்பிட வைக்கும் உணவுகள் சாப்பிட அதிக நேரம் எடுக்கும் உணவுகளை சாப்பிடும் போது, சாப்பாட்டில் முழுமையாக கவனம் திரும்பும் மற்றும் திருப்தி ஏற்படும். எடுத்துக்காட்டாக, முட்களையுடைய மீன்கள், காரமான குழம்பு ஆகிய உணவுகள் சாப்பாட்டு நேரத்தை அதிகப்படுத்தும். ஆப்பிள் சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால், சாப்பாட்டின் அளவு குறைவதுடன், திருப்தியும் கிடைக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. எனவே, தினசரி உணவில் ஒரு ஆப்பிளை சேர்த்துக் கொள்வதன் மூலம், தேவையான நார்ச்சத்தும் கிடைக்கும். இயற்கை உணவுகள் செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளில், சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகமான கலோரிகளை கொண்டது. எனினும், இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடும் போது, அதிகமாக மென்று தின்ன வேண்டியதாக இருப்பதால், ஒவ்வொருமுறை மெல்லும் போதும் திருப்தியும், முழுமையும் கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது. மேற்கூறியவற்றையெல்லாம் பின்பற்றும் போது, உடலை பருமடையச் செய்யும் பழக்கமான அதிகமான உணவு உட்கொள்ளுதல் குறைவதோடு, இத்தகைய ஆரோக்கியமான பழக்கத்தால் உடலும் நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். |
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» அலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள் உடல் கெடாமல் இருக்க அடிக்கடி செய்ய வேண்டிய உடல் பயிற்சிகள்.
» அலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள் உடல் கெடாமல் இருக்க அடிக்கடி செய்ய வேண்டிய உடல் பயிற்சிகள்.நண்பர்களிடம் பகிருங்கள்!!!!!!
» என்ன செய்தாலும், உடல் எடையை அதிகரிக்கவோ.. குறைக்கவோ முடியவில்லையா?.. இதை படியுங்கள்
» உடல் எலும்புகள் பலமாக இருக்க
» பாதி உடல் உடன் இருக்க முடுயுமா ? இந்த படத்தை பாருங்கள்
» அலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள் உடல் கெடாமல் இருக்க அடிக்கடி செய்ய வேண்டிய உடல் பயிற்சிகள்.நண்பர்களிடம் பகிருங்கள்!!!!!!
» என்ன செய்தாலும், உடல் எடையை அதிகரிக்கவோ.. குறைக்கவோ முடியவில்லையா?.. இதை படியுங்கள்
» உடல் எலும்புகள் பலமாக இருக்க
» பாதி உடல் உடன் இருக்க முடுயுமா ? இந்த படத்தை பாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum