Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கடற்கரும்புலிகள் கப்டன் சிதம்பரம் – கப்டன் ஜெயந்தன்
Page 1 of 1
கடற்கரும்புலிகள் கப்டன் சிதம்பரம் – கப்டன் ஜெயந்தன்
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ : கடற்கரும்புலிகள் கப்டன் சிதம்பரம் - கப்டன் ஜெயந்தன். 04 . 05 .1991
கடற்கரும்புலி சிதம்பரம் , நிறையபப்டிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால் , குடும்பத்தின் கஸ்ரநிலை அவனது கனவுகளைச் சிதைத்தது , நான்காம் வகுப்பிக்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை.
அவர்கள் குடியிருந்த வீட்டில்த்தான் ஏழ்மையும் குடியிருந்தது.
வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும் , பலகாரங்களையும் தொழில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும்.
வளர்ந்தபின் ‘ றோலரில் ‘ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால் , வாட்டத்தோடு திரும்பிவருவான்.
முற்றத்தில் நிற்கும் வேப்ப மரத்தில் ஏறி பூ கொய்துகொண்டு வந்து கொடுத்து….
” இதிலை ஏதாவது செய்யணை….. சாப்பிடுவம் “ என்று சொல்வான்.
சிதம்பரம் ஏற்க்கனவே கலகலப்பானவன். துன்பம் வாட்டுகின்றபொழுது , அவனது முகத்தில் அதைக் கண்டு கொள்ளமுடியாது. எல்லோரையும் சிரிக்கவைத்து தானும் சிரிப்பான்.
சந்திரனாக இருந்தவன் தான் – 1989 இன் இறுதிக் காலத்தில் சிதம்பரமானான்.
ஆரம்ப நாட்களில்…..
பலாலியில் சிங்கள முப்படைகளின் கூட்டுத்தளத்திற்கு எதிரில் , ஒரு பிறன் எல் . எம் . ஜி உடன் காவலிருந்த சிதம்பரத்தின் பணி , பிற்காலத்தில் ஒரு கடற்புலி வீரனாகத் தமிழீழ அலைகளின் மீது தொடர்ந்தது.
இப்போது – சிங்களப் படையின் பீரங்கிக் குண்டினால் அரைவாசி இடிந்து நொறுங்கிய – அவர்களுக்குச் சொந்தமில்லாத வீடொன்றின் ஒருபக்க மூலையில் , கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயலாத நிலையில் , கட்டிலில் இருந்து கொண்டு – சிதம்பரத்தின் ஏழைத்தாய் தன வீரமைந்தனை நினைவு கூறுகின்றாள் …..
” அவனொரு இருட்டுக்குப் பயந்த பெடியன் மோனை… சின வயதில அவன் மீன்பிடிக்கப் போகேக்க , நான்தான் அவனை படகுவரை கூட்டிக் கொண்டு போய்விடவேனும்…. அப்பத்தான் போவான்….. அவனுக்கு அவ்வளவு பயம்.
….. அந்த மாதிரி பயந்துகொண்டு இருந்தவன் தான் தம்பி இயக்கத்துக்குப் போய் போராடி , அதே கடலில்… இப்ப இவ்வளவு வீரனாய்…. ”
அந்தத் தாய் கண்ணீரோடு பெருமைப்படுகிறாள்.
தளபதி சூசை அவர்கள் , தனது கண்களுக்குள் நிழலாடும் அந்த இறுதி நாட்காளைப் பற்றிச் சொல்கிறார்.
” நடுக்கடலில் நின்று கொண்டு எங்களுக்கு சவாலாக இருந்த , சிங்களக் கடற்படையின் ‘ அபித்தா ‘ என்ற கட்டளைக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டோம்.
அதற்காக இரண்டு கரும்புலிகள் தயார் செய்யப்பட்டனர். அதில் ஒன்று ஜெயந்தன் , மற்றது இன்னொரு போராளி.
கடைசி நேரத்தில் , அந்தப் போராளியை தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் அனுப்பமுடியாமல் போய்விட்டது. என்ன செய்யலாமென நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது , அருகில் நின்று நிலைமையைப் புரிந்து கொண்ட சிதம்பரம் தானே முன்வந்து , ‘ நான் போறேன் அண்ணை ‘ என்று சொன்னான்.
சிதம்பரம் ஏற்க்கனவே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தான்.
ஆனாலும் திடீரென ஒரு தேவை ஏற்ப்பட்டபோது தானே விரும்பி முன்வந்து கரும்புலித் தாக்குதலில் இறங்கியதை , என்னால் மறக்க முடியாது.
04.05..91 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலைப் பற்றி கதைத்தபொழுது மேலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பின்வருமாறு சொன்னார்.
இறுதி நேரத்தில் , கடலில் ….. சிதம்பரம் – ஜெயந்தன் காட்டிய உறுதியை இனால் மறக்க முடியாது. இப்போதும் அது என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன. அது ஒரு முன்னிரவு நேரம். எமது கரும்புலித் தாக்குதலின் இலக்காகிய ‘ அபிதா ‘ என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் கரையிலிருந்து சுமார் எட்டுமைல் தொலைவில் நின்றது. இக்கப்பலைத் தேடி திசையறி கருவியின் உதவியுடன் கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொண்டு கதைத்தார்கள்.
” நாங்கள் கதைக்கிறது விளங்குகிறதா…? “ எனக் கேட்டோம்.
” நீங்கள்….. கதைப்பது….. தெளிவாகக்…. கேக்கிறது. ” என எந்த வித சலசலப்புமில்லாமல் உறுதியுடன் அறிவித்தார்கள்.
மேலும் சில நிமிடங்கள் சென்றன……
சிதம்பரமும் – ஜெயந்தனும் சென்ற வெடிமருந்துப் படகு சுமார் 4 மைல் கடந்திருக்கும்.
அப்போது…… ‘ எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம் ‘
‘ எங்களுடைய இலக்கை கண்டுவிட்டோம்…. ‘ என ursaakam போங்க படகிலிருந்து அறிவித்தனர். குரலில் பதட்டமோ அலது தயக்கமோ தென்படவேயில்லை – கரையில் நின்ற தோழர்களின் நெஞ்சுதான் பதை பதைத்துக்கொண்டிருந்தது.
மேலும் சில நிமிடங்கள் சென்றிருக்கும் …
‘ திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம் ‘
” ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம் ” , என்ற குரல் கடல் இரைச்சலையும் கிழித்துக்கொண்டு எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது.
கரையில் நின்ற போராளிகள் அனைவரும் கண்வெட்டாது கடலையே பார்த்துக்கொண்டு , தொலைத்தொடர்பு சாதனத்திற்கு காதைக் கொடுத்துக்கொண்டு நின்றார்கள்.
அப்போது சிதம்பரமும் – ஜெயந்தனும் சேர்ந்து தொலைத்தொடர்பு சாதனம் ஊடாக……
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ” என உரக்கக் கத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து கடலுக்குள் பேரு வெளிட்சம் , சில வினாடிகளில் பெரும் வெடியோசையும் கரையை உலுக்கியது.
அடுத்த நாள் பகல் ஒருபக்கம் சாய்ந்தபடி , சேதமடைந்த நிலையில் , இருந்த ‘ அபிதா ‘ கப்பலை கட்டியிழுத்துச் செல்ல கடற்படையினர் முயன்று கொண்டிருந்தனர். சில ‘ டோரா ‘ விசைப்படகுகள் கடலில் எதையோ தேடியோடிக்கொண்டிருந்ததன.
பல வருடங்களாக எமது போராளிகள் பலரின் உயிர்களை விழுங்கக் காரணமாக இருந்த ஒரு கடலரக்கனைக் கொன்று சிதம்பரமும் – ஜெயந்தனும் வீரசாதனை புரிந்துவிட்டார்கள்.
- உயிராயுதத்திலிருந்து…..
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கப்டன் ஜெயந்தன் படையணி
» "கரும்புலி கப்டன் சிதம்பரம் 26.12.1972 – 04.05.1991"
» கடற்கரும்புலி கப்டன் மணியரசன்
» கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
» கரும்புலி கப்டன் மில்லர்"
» "கரும்புலி கப்டன் சிதம்பரம் 26.12.1972 – 04.05.1991"
» கடற்கரும்புலி கப்டன் மணியரசன்
» கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
» கரும்புலி கப்டன் மில்லர்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum