Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கடற்கரும்புலி கப்டன் வினோத்
Page 1 of 1
கடற்கரும்புலி கப்டன் வினோத்
1988ம் ஆண்டுக் காலப்பகுதி…. வினோத்தின் வீட்டை இந்தியப் படைகள் அடிக்கடி சுற்றி வளைத்தனர். அவனைத் தேடி இந்திய சிப்பாய்கள் அங்கு பாய்வதும் வழமை யாகிவிட்டது. அந்த ஆபத்தான பொழுதுகளில் , வீட்டுக் கூரைக்குள் ஏற்றி பெற்றோரால் அவன் மறைத்துக் காக்கப்படுவான்.நீங்காத நினைவுகள் …..
மேலேயிருந்து – ” சயனைட் ” குப்பியைப் பற்களுக்கிடையில் செருகிக்கொண்டு எதனையும் எதிர்பார்த்து நொடிகளை எண்ணிக்கொண்டிருப்பான் வினோத்.
வினோத்தின் அக்கா சொல்கிறாள் ….
” அந்த நேரத்தில் சின்னச் சின்ன ‘ கானு ‘ களுக்குள்ள ( கொள்கலன் ) என்னவோ கொண்டு வந்து , வீட்டு மூலையளுக்குள்ள வைப்பான்.
‘ என்னடா இது ‘ என்று கேட்டால் , ‘ அதுக்குள்ளே தண்ணீர் அக்கா… ‘ என்றுவிட்டு போயிடுவான்.
அவன் போனதுக்குப் பிறகு தூக்கிப் பார்த்தா , அது தண்ணீர் இல்லை – இறுக்கமாக , பாரமாகக் கணக்கும் …. எங்களுக்கும் அது என்னென்று தெரியவில்லை. ”
யாரும் எதிர்பாராத ஓர் அதிகாலைப் பொழுதில் – திடீரென வீட்டிற்குள் நூலைந்த இந்தியர்களிடம் , வினோத் சர்ந்தப்பவசமாகச் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. வீட்டில் எல்லோரும் பார்த்து நிற்க துவைத்து எடுத்துவிட்டு , அவர்கள் அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
வினோத்தின் அப்பா சொல்கிறார் ….
” அவனொரு பயங்கரச் சுழியனடா தம்பி…. அவனை இந்தியன் புடிச்சுக் கொண்டு போய காம்பில் வைத்திருக்கேக்க ஒரு நாள்…. வீட்டு விராந்தையில் கிடந்த வாங்கில படுத்திருந்தான் – தற்செயலா லேனைப்பார்த்தேன் , சுவரோட சேர்த்துப் பூட்டியிருக்கிற லைற்றின்ர கோப்பைக்கு மேலால , சாதுவா , கறுப்பா என்னவோ தெரிஞ்சுது. கதிரையைக் கொண்டுபோய் வைத்திட்டு ஏறி எடுத்தனடா மோனை – அது ஒரு கிறனைட். அப்படியே நிண்டு எட்டிப் பாத்தன் , பக்கத்த பக்கத்தை இருக்குற நாலு லைற்றுக்கையும் கிறனைட் வைத்திட்டு போயிருக்கிறான்.
இயல்பாகவே மற்றவர்களோடு நெருங்கிப் பழகி - அவர்களை மகிழ்வில் ஆழ்த்தக்கூடிய சுபாவம் கொண்டிருந்த வினோத்தின் அப்பா தன பிள்ளை பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
” இந்தியனிடம் பிடிபட்டு காங்கேசன்துறை காம்பில இருக்கேக்க - நாங்கள் அவனைப் பார்க்கப் போறனாங்கள். அங்கபோற நேரமெல்லாம் , வீட்டில தான் வைத்துவிட்டுப்போன சாமான்களைப் பற்றித்தான் தம்பி சொல்லுவான்…. எங்களைப் பற்றி இல்லை. அதுகளைப் பத்திரமா எடுத்துப் பெடியளிட்டை குடுத்து விடோணும் என்கிறதிலதான் அவன்ர கவனமெல்லாம் இருக்கும். ”
இந்தியப்படை இங்கிருந்து வெளியேற்றப்பட்ட போது , ஏனையவர்களுடன் வினோத்தும் விடுவிக்கப்பட்டான்.
‘ தமிபி வந்திட்டான் ‘ என எல்லோரும் மகிழ்ட்சியடைந்திருந்த போது , 22ம் நாள் வினோத் திரும்பவும் காணாமல் போய்விட்டான். அதன் பின் அவன் இடைக்கிடை வீட்டுக்கு வந்து போவான்.
திரும்பவும் சிங்களப் படையினருடன் சண்டை ஆரம்பித்து சில நாட்களே நகர்ந்திருந்தன….
ஒரு நாள் வினோத் வீட்டிற்கு வந்தான்.
வரிப்புலிச் சீருடையில் , ” மிலிற்றறி ” சப்பாத்துப் போட்டு ஒரு கையில் துப்பாக்கியுடன் , மறுகையில் புகைப்படக் கருவி ஒன்றையும் கொண்டு வந்தான். வீடில் எல்லோருடனும் சேர்ந்து படம் எடுத்தான். அக்காமாரைக் கட்டிப்பிடித்தபடி…. அக்காமாரின் குழந்தைகளைத் தோளில் வைத்தபடி … ஆச்சியோடு நின்று… எல்லாவிதமாகவும் படமெடுத்தான்.
” என்னடா புதினமாக இன்றைக்கு எல்லோரையும் படம் எடுக்கிறாய்…? “ அக்கா கேட்டாள்.
” ஒன்றுமில்லை அக்கா …. நானொரு வேலையாகத் தூர இடத்திற்குப் போறான்… திரும்பி வரமாட்டன்… “ சிரித்துக்கொண்டு சொன்னான்.
அண்ணனின் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு ,
” உன்ர சித்தப்பா இனி வரமாட்டான்…. இறுக்கிக் கொஞ்சிவிடு…. என்று சொல்லிக் கொஞ்சினான். ”
‘… எங்களுக்கு அது அப்போது அவ்வளவு விளங்கேல்லை..’
வல்வெட்டித்துறையில் கடற்கரையோரமாக அவர்களுடைய வீடு இருந்தது. அங்கு பீரங்கிக் கப்பல்களின் தொடர்சியான தாக்குதல்கள் நிகழும். இதன் காரணமாக , கொடிகாமம் சென்று அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அம்மாவையும் , அப்பாவையும் வினோத் சென்று பார்த்தான்.
கட்டி அனைத்துக் கொண்டு படம் எடுத்த்தான்.
அம்மா கேட்டபோது – அக்காவுக்குச் சொன்ன அதே காரணத்தை இங்கேயும் சொன்னான். அவர்களாலும் வித்தியாசமாக எதனையும் உணர முடியவில்லை.
” நேவி அடிக்கிறான்னேன்று அலைந்து திரியாதீங்கள் அம்மா…. ஊரிலே போய் இருங்கோ…. ஒரு நாளைக்கு…. எங்களின் கடல் எங்களிடம் வரும் “ என்று சொல்லிவிட்டுப் போனான்.
அதன் பிறகு ஒரு நாள் கூடத் தங்களுடைய செல்வத்தை அவர்கள் காணவில்லை. இனிமேல் காணவுமாட்டார்கள்.
இப்போதும் வினோத்தின் அம்மா அவனைத் துயரத்தோடு நினைவு கூறுகிறார்.
” சின்னவனாய் இருக்கேக்க , என்னை வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அண்ணை , அக்காமார் எல்லோரும் கலியாணம் செய்து போனதுக்குப் பிறகு , அம்மாவையும் அப்பாவையும் நான்தான் பார்ப்பன் …… என்று சொல்லுவானடா தம்பி. ”
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» "தளபதி சூசை மற்றும் தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் - கடற்கரும்புலி கப்டன் மணியரசன்"
» கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்
» கடற்கரும்புலி கப்டன் மணியரசன்
» கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
» முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
» கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்
» கடற்கரும்புலி கப்டன் மணியரசன்
» கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
» முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum