TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

2 posters

Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by udhayam72 Mon Jun 10, 2013 3:54 pm

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி
(ரிஷ்வன்)






தினமும் பார்க்கும்
பூக்கள் தான் என்றாலும்
நீ
சூடிய பிறகு தான்
பூக்களும்
பூப்பெய்துகின்றனவோ...!



ரம்யாவுடன் பார்த்திருக்கவேண்டிய தசாவதாரம் படத்தை இதோ படம் வெளிவந்து 57 நாட்கள் கழித்து இன்று, என் கைவிரல்களை கீர்த்தனாவின் கைவிரல்களோடு கோர்த்துக்கொண்டு, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விசயங்கள் எப்படி ஓரிழையில் இணைக்கப்படுகின்றது என கியாஸ் தியரி சொல்லி கமலஹாசன் கதையை ஆரம்பிக்க, கோவிந்தராஜப்பெருமாளை குலோத்துங்கச்சோழன் கடலில் வீசுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இப்படி கீர்த்தனாவுடன் நெருக்கமாக அமர்ந்து இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் ரம்யா சென்னை வரும்பொழுது தன்னைச் சந்திக்கக்கூடாது என எனக்கு உத்தரவிட்டாளோ என்னவோ.. வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் கண்ணுக்குப்புலப்படாத தொடர்பு இருக்குமோ? தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

இப்போது கியாஸ் தியரி, பட்டர்பிளை எபெக்ட் என யோசிக்காமல் கீர்த்தனாவின் மென்மையான தொடுதலையே மனம் விரும்பியது. கீர்த்தனா என் கையில் இருந்த காயத்தழும்பைத்தடவிக்கொடுக்கையில் அந்த ஸ்பரிசத்தில் காமம் இல்லை எனப் புரிந்தது. கீர்த்தனாவிற்கு இடதுபுறம் எனது அலுவலகத் தோழிகள் வேறுசிலரும் வந்திருந்ததாலும், நாங்கள் அமர்ந்திருந்தது "B" வரிசையாகப் போனதாலும் கீர்த்தனாவை சமயம் வாய்க்கும்பொழுது முத்தமிடலாம் என்ற எண்ணத்தை செயல் படுத்தவேண்டாம் என முடிவு செய்தேன். அவளுக்கான முதல் முத்தத்தை பின்னால் இருந்து யாரேனும் கவனித்து விட்டால் அது அவளை சங்கடப்படுத்திவிடக்கூடும் என்பதால் அப்படி ஒரு அவசர முத்தத்தைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. தாமதமானாலும் பரவாயில்லை, அவளுக்கான முத்தம் கண்ணியமானதாகவும் நீண்ட,ஆழந்த அன்புடனும் தயக்கமில்லாத ஒன்றாகவும் இருக்கவேண்டும்.

திரைப்படத்தில் அசின் பெருமாளே பெருமாளே எனக்கத்தும் பொழுதெல்லாம், கீர்த்தனாவின் காதில் "Je t'aime" சொல்லியபோது என் கைகளை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். நான் ஏற்கனவே படத்தைப்பார்த்து இருந்ததால் இடைவேளை வர சில நிமிடங்களுக்கு முன்னர், என் கைகளை விலக்கிக்கொண்டேன். எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பிக்க, கீர்த்தனாவின் கண்களில் சிலநீர்த்திவலைகள் பனித்திருந்தன.

"உங்களுக்குப் பிடிச்சிருந்ததா, கீர்த்தனா"

"ம்ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு கார்த்தி, தாங்க் யூ"

கீர்த்தனாவை எனது அலுவலக நண்பர்கள்,தோழிகள் மத்தியில் நான் மரியாதையாக அழைப்பதுதான் வழக்கம். எங்களுக்குள் குறைந்தபட்ச நட்புக்கூட இல்லை என அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கீர்த்தனாவின் விருப்பமும் அவ்வாறே. எனக்கும் அது சரியாகவேப்பட்டது. எனது முதல் காதல் பற்றி ஊருக்கெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டதில், அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் ஊத்திக்கொள்வதைப்போல தோல்வி அடைந்தது. ரம்யாவுடன் ஆன இரண்டாவது காதல் ஏதோ பரவாயில்லை முதலுக்கு மோசமில்லாமல் நட்பை மட்டும் தக்கவைத்துக்கொண்டு காதலை விலக்கியாகிவிட்டது. ரம்யாவுக்கும் அதுவே விருப்பம். அவள் என்னை ஆரம்பத்தில் இருந்தே நண்பனாக மட்டுமே பார்த்து வருகிறாள்.

என்னுடைய இந்த மூன்றாவது காதலுக்கு என்னுடைய முதல் இரண்டு காதல்கள்தான் காரணம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அட உண்மைதாங்க ..எப்படின்னு கேட்கறீங்களா? எனக்கு கீர்த்தனாவைப்பிடிக்கக் காரணம் என்னோட முதல் காதலி ஜெனி. கீர்த்தனாவிற்கு என்னைப் பிடிக்க காரணம் என்னோட இரண்டாவது காதலி ரம்யா. இத்தனைக்கும் இவங்க மூன்று பேரும் சந்தித்துக்கொண்டதே இல்லை.

கீர்த்தனாவை என் கண்களுக்கு கடைசி ஒரு வருஷமாத் தெரியும். என் மனதிற்கு கடைசி மூன்று மாதங்களாகத் தெரியும். போனவருடம் பிற்பகுதியில் எங்கள் அலுவலக வளாகத்தில் முதன் முதலில் கீர்த்தனாவைப் பார்த்தேன். அசப்பில் ஜெனியைப்போலவே இருந்ததால் ஏதோ ஒரு ஈர்ப்பு அவள் மேல ஆரம்பமானது. ஜெனி சம்பந்தப்பட்ட எந்த ஒரு நினைவும் கசப்பான அதிர்வுகளையே மனதில் ஏற்படுத்திவிடும். ஆனால் கீர்த்தனா ஜெனியைப்போல இருந்தாலும் ஜெனிக்கான "நெகட்டிவ் வேவ்லெங்த்" ஏதும் இல்லாததனால் கீர்த்தனாவை என் கண்கள் தேட ஆரம்பித்தது.. இருந்தபோதிலும் அந்த சமயங்களில் ரம்யாவுடனான என் காதலை நான் வெற்றி பெற வைக்க , விக்கிரமாதித்தன் போல மனம் தளாராமல் விடாமல் என் காதல் விருப்பத்தை ரம்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததாலும் வேலைப்பளுக்காரணமாக அடிக்கடி அலுவலக வளாகத்தில் சுற்ற முடியாததாலும் கீர்த்தனாவைப் பற்றி அதிக யோசனை இல்லை. எத்தனை தடவை வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் ஒரு சமயத்தில் ஒருவரை மட்டுமே காதலிக்கவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடுடன் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கும்.

"நான் எங்கேங்க இல்லைன்னு சொன்னேன், இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன்" என கமல்ஹாசன் பக்தியைப் பகுத்தறிவுடன் கலந்தடித்து காதல் வசனம் பேசிக்கொண்டிருக்க, படம் முடியப்போகிறது என உணர்வு வந்து நிகழ்காலத்திற்கு வந்தேன்.

படம் முடிந்து வெளியே வந்து, உடன் வந்திருந்த அலுவலக நண்பர்களை வழியனுப்பிவிட்டு கீர்த்தனாவிடம் "நீ கண்டிப்பா ஊருக்குப்போகனுமா, "

"ஆமாண்டா, அப்பா கண்டிப்பா இன்னக்கே வரச்சொல்லி இருக்காரு" அவளுக்கு ஊருக்குப்போக விருப்பமில்லை என்பதை கண்களிலும் ஊருக்குப் போகவேண்டியக் கட்டாயத்தை வார்த்தைகளிலும் சொன்னாள்.
அசோக்பில்லரில் புதுச்சேரி பேருந்துவர அவளை பேருந்தில் ஏற்றிவிட்டு பேருந்து வளையும் வரை அவள் முகத்தைப்பார்த்துவிட்டு அவளின் கைபேசிக்கு அழைத்தேன். அவளின் முதல் வாக்கியம் "மீ டு, தாங்க் யூ" குரலில் வழக்கத்தை விட மென்மையாக இருந்தது. மற்றும் ஒரு மாலைப்பொழுது கீர்த்தனாவுடன் இனிமையாக தொலைபேசி உரையாடலில் கரைந்தது. நேரக் கரைதலில் காதல் வளர்ந்திருந்தது.

சில மாதங்களுக்கு முன் "ஒரு அடி Gap கொடுத்திங்கன்னா, அந்தப்பக்கம் போயிடுவேன்னு" நான் சொன்னபொழுது "ஒரு அடி வேண்டுமா?, ஒரு அடி வேண்டுமா " என ஸ்கேலை வைத்துக்கொண்டு கீர்த்தனா என்னிடம் முதன்முதலாக நான் ரசிக்கும்படியாக பேசியபொழுது மனதின் ஓரத்தில் கீர்த்தனாவிற்கு ஒரு இடம் தயாராகப்போகிறது என்ற ஆழமனம் சொன்னபொழுது மனம் கீர்த்தனாவைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வப்பட்டது.

"சுமதி, யாரு அந்த பொண்ணு, டிரெயினிங் ஏதும் வந்து இருக்காங்களா?"

"யாரும் புதுசா ஆபிஸுக்கு வந்திரக்கூடாதே, உடனே உன் என்கொயரி ஸ்டார்ட் ஆயிடுமே? டிரெயினி எல்லாம் இல்லை நம்ம எம்ப்ளாயிதான்? பேரு கீர்த்தனா"

"பார்க்க கியுட்டா இருந்தாங்க அதான் கேட்டேன், நத்திங் சீரியஸ், டெவலப்மெண்டா? அட்மினிஷ்ட்ரேசனா?"

"ம்ம்ம் மேனேஜ்மெண்ட், நம்ம கம்பெனிக்கு புதுசா வந்திருக்கிற கம்பெனி செக்ரட்டரி"

"ம்ம்ம் "

"புரொஜெக்ட் டிரெயினிங் வரப் பொண்ணுங்க கிட்ட கடலைப்போடுற மாதிரி ஏதும் பேசிக்கிட்டு இருக்காதே?"

"சரி சரி.. "

அடுத்து வந்த நாட்களில் கீர்த்தனாவின் ஊர் பாண்டிச்சேரி என்பதும் அவளது அப்பா புதுச்சேரி அரசு துறை ஒன்றில் பெரிய பதவியில் இருப்பதும் கீர்த்தனாவுடன் பேசும் எனது அலுவலகத்தோழிகள் வாயிலாக தெரிந்து கொண்டேன். கம்பெனி செக்ரட்டரி பதவி என்பது சார்ட்டர்ட் அக்கவுண்டட்க்கு சமமானது என்பதையும் கூகுளில் பார்த்துக் கண்டுபிடித்தேன். நான் ஏழுவருஷமா குப்பைக்கொட்டி வாங்கும் சம்பளத்தில் கீர்த்தனா தனது இரண்டுவருட அனுபவத்துடன் இங்கு வந்து சேர்ந்து இருக்கிறாள் என்பதும் தெரிந்தது.

கீர்த்தனாவை நேரில் பார்க்கும்பொழுதெல்லாம் கண்ணோடு கண்ணாகப் பார்க்க ஆரம்பித்தேன். "நான் உன்னை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்" என நான் என் கண்களால் சொல்லுவதாக என் மனதில் நினைத்துக்கொண்டேன். சில சமயங்களில் நான் பார்க்கிறேன் எனத்தெரிந்து அவளும் பார்ப்பாள், அந்தப்பார்வை "இவன் ஏண்டா நம்மை இப்படி பார்க்கிறான்" என்பதாக இருக்கும்.

சுமதியிடம் பேசும்பொழுதெல்லாம் கீர்த்தனாப் பற்றிய பேச்சை வீம்பாக ஆரம்பிப்பேன். நான் வேண்டுமென்றேக் கேட்பதைத் தெரிந்து "என்ன ரூட் விடுறியா? ஏற்கனவே பெங்களூர்ல ரம்யா, இப்போ பாண்டிச்சேரியா?"

"சே சே, அப்படி எல்லாம் இல்லை. லவ்வுக்கும் எத்திக்ஸ் உண்டு, ஒரு சமயத்தில ஒரு டிராக் தான், ஆனால் நிறைய சைட் அடிக்கலாம்..கீர்த்தனா ரிசம்பல்ஸ் ஜெனி"

சுமதி ஜெனியை நேரில் பார்த்து இருக்கிறாள்.

"ம்ம்ம் .. அதுக்காக ?"

"ஜெனி மாதிரி இருக்கிறதுனாலே கொஞ்சம் எக்ஸ்ட்ரா அட்டென்சன் அவ்வளவுதான்,"

"சரி சரி ..ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் பீலிங்ஸ், உனக்கு கீர்த்தனா பத்தி ஒன்னு சொல்றேன்"

"சொல்லு சொல்லு"

"கீர்த்தனாவுக்கு எப்.எம்ல நைட் பேசுற ஆர்.ஜே கவுதமைப்பிடிக்கும்"

ஏனோதெரியவில்லை எனக்கு காதில் புகைவந்தது போல இருந்தது. பொதுவாக நான் பண்பலையில் ரகசிய சினேகிதிதான் கேட்பதால் கவுதமை தவிர்த்துவிடுவேன். கீர்த்தனாவிற்காக அன்றில் இருந்து சிலதினங்களுக்கு கவுதமின் பண்பலை நிகழ்ச்சியைக் கேட்க ஆரம்பித்தேன்.

அடுத்த சில வாரங்களில் நாங்கள் வானொலி பண்பலை நிறுத்தப்பட்டு, மனதின் பண்பலைவரிசைகள் பாடத்தொடங்கின. காதல் உறுதியாகும் சூழலில், மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் முடிவை நான் எடுத்தேன்.
கீர்த்தனா, ஜன்னலின் ஓரம் உள்ள இருக்கையில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்த வண்ணம் அமர்ந்திருக்க, சிறிது நேரத்திலே அவளுக்கு அதுவும் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது,

அந்த சீட்டின் புஷ்பேக் பட்டனை அழுத்தி, நன்றாக சாய்த்து படுத்துக்கொண்டே, தன் கைப்பையில் இருந்து ஒரு ஜெம்ஸ் ஹட்லி சேஸ் நாவலை
பிரித்து படிக்க ஆரம்பித்தாள். ஒரு சில பக்கங்களை புரட்டியவளுக்கு அதற்கு மேலும் எதோ மனம் ஈடுபாடுகொள்ளவில்லை,

மனம் என்னவோ கார்த்தியை சுற்றியே வட்டமிட்டது, அதுவும் சற்று முன் பார்த்த படத்தில் வரும் கியாஸ் தியரி, தன்னுடைய வாழ்க்கையிலும் நடைபெறுகிறதோ என்று அவளுக்கு தோன்றியது. புதுச்சேரியில் பிறந்த எனக்கும், கார்த்திக்கும் எப்படி ஒரு நட்பு தொன்றியது, அது நட்பு தானா இல்லை காதலா, எப்படி எனக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது...


பஸ்ஸின் ஹாரன் சத்தம் பலமாக கேட்க.... என்வென்று தலையை ஜன்னலின் வழியே எட்டி பார்க்க... பஸ்ஸோ தாம்பரத்தைத் தாண்டிக் கொண்டு இருந்தது ..


கார்த்திக்கை பிரிந்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை, ஏனோ நீண்ட நாள் பிரிந்தது போல அவளுக்கு தோன்றவே...


செல்பேசியை எடுத்தவள், அவனுக்கு போன் செய்ய வேண்டும் போல தோன்றியது... பட்டன் அழுத்த நினைத்தவள், மறுகணம் செல்போன் அலறவே.. அவன் தான்... இப்பொழுதானே நினைத்தேன்... அவனுக்கு என் நினைப்புதானா.. என்ன ஒரு ஒற்றுமை... இரண்டு பேருக்கும் மன அலைவரிசை ஒரே மாதிரி இருப்பதை நினைத்து வியந்தவளாய்...


'என்னடா... கார்த்தி...'


'சும்மாதான்... தூங்கிட்டியா ... இல்ல.. முழிச்சிட்டு இருக்கியான்னு செக் பண்ண போன் பண்ணேன்.. '

'நா என்ன சின்ன பொண்ணா.. ஹாய்.. அதுக்கா... போன் பண்ண....உண்மையைச் சொல்லு...'


'கீர்த்தனா.. உன்ன அனுபிச்சேனே தவிர... எனக்கு அடுத்த பஸ் பிடிச்சி.. புதுச்சேரி வரலாம்னு தோணுது...'


'ஏன்டா.. அப்படி எல்லாம் வந்திடப்போரே..'


'என்னமோ தெரியல...உன்ன பிரிஞ்சு இருக்கவே மனசு கஷ்டமா இருக்கு'


'ரெண்டு நாள் தானேடா.... அப்புறம் தான் மீட் பண்ண போறோமே..'


அவள் அப்படி சொல்லிவிட்டாலும், தனக்கும் அவனை பிரிந்து இருப்பதை நினைக்கவே மனம் விரும்பவில்லை...


' ஐ லவ் யு ... கீர்த்தனா...'


'மீ டூடா..'


போனை கட் செய்தாள்... பஸ் வேகமாக சென்று கொண்டிருக்க.... புதுச்சேரியில் தனக்காக ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருக்கும் என்பதை அறியாமலே....

நினையாத தருணத்தில்
என் நினைவாக
உன் கைபேசி
அழைப்பில் தெரிந்தது...
நனையாத உன்நெஞ்சில்
காதல் மழை
தூறல் விட்டதை...!



கீர்த்தனா ஜன்னலின் கண்ணாடியை தனக்கு தேவையான அளவு காற்று வருமாறு விலக்கி, வெளியில் மரங்களும், மனிதர்களும் அத்தனை ஜீவராசிகளும் வேகமாக பின்னோக்கி செல்வதை ரசித்து, காற்றை முகத்தில் வாங்கியபடி லேசாக கண்ணை மூட... அவளை அறியாமலே தூக்கம் அவள் கண்களில் ஒட்டிக்கொண்டது..

அதே சமயம்...

கார்த்திக் .. கீர்த்தனாவைப் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, தன் வீட்டை நோக்கிச் சென்றான்.. எதோ ஒன்றை தொலைத்து விட்டதைப் போலவும், ஜெனி தன்னை ஏமாற்றியதைப் போல இவளும் செய்து விடுவாளோ... இன்னும் சிறிது நேரம் அவள் கூட இருந்திக்கலாமோ...அல்லது ரம்யா சொன்னது போல....

'இது... ஜஸ்ட் டைம் பாஸ் கார்த்திக்.. இத போய் ..காதல் கத்தரிக்காயின்னு போட்டு கொழப்பிக்காத... நம்ம பிரண்ட்ஸாவே இருப்போமே..' என்று சொன்னது போல கீர்த்தனாவும் கடைசில் சொல்லிவிடுவாளோ...

மனம் ஒரு குரங்கு தான்.. அதிலும் பெண்களின் மனமோ... பொல்லாத கருங்குரங்கு... எந்த நேரத்தில் தாவுமோ.. என்பதை அவளைப் படைத்த ஆண்டவனாலும் அறிய முடியாது என்பதை உலகமே அறியும்.. தன் மனம் பலவாறு சிந்திக்க.. பைக் அவன் வீட்டின் காம்பௌண்டை அடைந்தது ..

வீட்டின் கார் பார்க்கிங்கில்... அப்பாவின் கார் நின்றிருந்தது... அப்பா வீட்டுக்கு வந்து விட்டதை அது அவனுக்கு உணர்த்தியது. அப்பாவின் மேல் அவனுக்கு மரியாதை கலந்த ஒரு பயம் இருந்து வந்தது.

வாழ்க்கையில் தனி ஒருவனாக போராடி, சாதாரண நிலையில் இருந்து, கடுமையாக உழைத்து, இன்று ஒரு கம்பெனியை திறம் பட நடத்தி வருகிறார் என்றால், அதுவே அவரின் கடும் உழைப்புக்கு சாட்சி.

தான் ஆசைப்பட்டத்தை எல்லாம் நிறைவேற்றி தருவதில் அவருக்கு நிகர் அவரே.. விருப்பபட்ட படிப்பு, பைக், தனி அறையில் தனக்கென்று எல்இடி டிவி., உயர்ரக லேப்டாப்.. லேட்டஸ்ட் மொபைல் போன்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

வேலைக்கு போகும் வரையில், அப்பாவின் அருமை எல்லாம் அவ்வளவாக தெரியவில்லை, விளையாட்டுத் தனமாகவே சென்றுவிட்டது.

அப்பாவுக்கு சிறு வயதில் ஒரு ஆசை உண்டு, ஏனோ அப்போதைய பொருளாதார நிலையில் அவரால், அதை நிறைவேற்ற இயலவில்லை. அது வேறோன்றும் இல்லை, வெளிநாட்டிற்குச் சென்று எம்பிஏ படிக்கவேண்டும், அதுவும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் யுனிவெர்சிட்டியில் தான் படிக்க வேண்டும் என்ற ஆசை கடைசி வரையில் நிறைவேறவே இல்லை, அந்த குறை அவருக்கு எப்பொழுதும் உண்டு, அதை தன்னிடம் அடிக்கடி கூறி,

'கார்த்தி... நீயாவது என் ஆசையை நிறைவேற்றுவாயா .. '

என்பதன் விளைவே தன் மேல்படிப்பு பயணம், அதுவும் பல வருட போராட்டத்திற்குப் பின் டோபெல் மற்றும் கேட் தேர்வை எல்லாம் எழுதி தேர்ச்சி பெற்று, அதன் மூலம்...அப்பாவின் ஆசைப்படியே கடும் முயற்ச்சிகுப் பின் ஹார்வர்ட் யுனிவெர்சிட்டியில் எம்பிஏ சீட் இந்த வருடம் தான் கிடைத்ததாக ... அவனுக்கு இமெயிலில் கடிதம் வந்தது. அதுவும் ஒரு வாரத்திற்கு முன்பு தான்.. இன்னும் இதைப் பற்றி தன் நண்பர்கள் யாருக்கும் அவன் மூச்சு விடவில்லை... '

அப்பாவின் ஆசையை அவன் முதலில் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை, ஜெனியின் காதல் தோல்விக்கு பின்தான் வெளிநாட்டுப் படிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் தந்தான்...
கல்லூரியில் அவளுடன் ஒன்றாகவே படித்ததால், ஜெனியின் மேல் தன்னுடைய காதாலை மிகச் சுலபமாக கூறிவிட்டான். கல்லூரியின் மூன்றாம் வருடம் இறுதியில், ஜெனி, காம்பஸ் இண்டர்வியு மூலமாக வேலையை பெற்று விட.. தன்னால் வேலை வாங்க முடியாததை அடிக்கடி கூறி வெறுப்பேற்றுவாள்.. அவனுக்கு கொஞ்சம் அவள் மேல் வெறுப்பு ஏற்பட்டாலும்... காதல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது...
கல்லூரி முடிந்தவுடன்... ஜெனி வேலைக்குச் சென்று விட, கார்த்தி வேலை கிடைக்காமல், கடும் போரட்டிற்க்குப் பிறகு, ஒரு சிறிய கம்பெனியில் வேலை கிடைக்க..

ஒரு நாள் ஜெனியை சந்தித்தான்.. தன் காதலை தொடர விரும்ப...

'இதோ பார் ... கார்த்தி... நான் இந்த கம்பெனியல இப்ப.. ப்ராஜெக்ட் லீடரா இருக்கேன்...நீயோ இன்னும் ப்ரோக்ராமராதான் இருக்க... ஒரு வருஷம் போனா. நான் மேனேஜர் ஆகிவிடுவேன்... நீ அப்பவும் இப்படியே இருப்பே...அதனாலா தான் சொல்றேன்.. உனக்கு எனக்கும் சரிப்பட்டு வராது... என்ன மறந்திடு...'

'என்ன ஜென்னி.. இப்படி சொல்ற.. கேவலம் பணமும், பதவியும், அந்தஸ்த்தும் பார்த்தா நாம காதலிச்சோம்... '

'அப்ப . ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல.. அனுபவமில்லாம எடுத்த தவறான முடிவு அதுன்னு எனக்கு தோணுது.. யோசிச்சு பார்த்த... இப்ப இது தான் எனக்கு முக்கியமா தெரியுது... '

'கடைசியா.. என்னதான் சொல்ல வர..'

'கார்த்தி... ப்ளீஸ் திருப்பி திருப்பி என்னால சொல்ல முடியாது.. என்ன மறந்திடு.... குட் பை...'

அப்பொழுதே அவனுக்கு பெண்களின் ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது உண்மை தான்.. 'ச்சே.. கேவலம்..பணமும்.. பதவியும் கூட காதலில் தோல்விக்கு காரணமாக இருக்கிறதே..மனம் வெறுத்து போய் .. அடுத்து இரண்டு நாட்களுக்கு ஆபீஸ் லீவ் போட்டு விட்டு... பைத்தியம் பிடித்தவன் போல... நண்பர்களுடன் நேரத்தை செலவிட..அப்பொழுதான் முடிவு செய்தான்... தான் மேலும் படித்து ஜெனியை விட பெரிய அளவுக்கு வளரவேண்டும் என்பதே...

பைக்கை காரின் ஓரத்தில் நிறுத்திவிட்டு.. காலிங் பெல்லை அடிக்க... அம்மாதான் கதவைத் திறந்தார்..

'ஏண்டா.. இவ்வளவு நேரம்.. அப்பா வேற சீக்கிரம் வந்திட்டார்.. உனக்காக சாப்டாம்மா வெயிட் பண்ணிட்டு இருக்கார்..'

'ஆபீஸ் கொஞ்சம் வேலம்மா...முடிச்சி கொடுத்திட்டு வந்தேன்... அதான் லேட்டு..'
அது என்னமோ தெரியவில்லை.. காதலில் விழுந்தாலே கள்ளத் தனமும் தன்னால் வந்து விடுகிறது.. நேராக தன் அறைக்குச் சென்றவனை... அப்பாவின் அழைப்பு நிறுத்தியது..

'கார்த்தி... எத்தன வாட்டி சொல்றது... பைக் ஓட்டும் போது...செல்போன் பேசதேன்னு...'

'இல்லப்பா.. நான் எப்பவும் ஓரமா நிறுத்திட்டு தான் பேசுவேன்..'

'பொய் சொல்லாதடா... நான் காரில் இருந்து பார்த்தேனே...'

சரியாக மாட்டிக்கொண்டதை அப்பொழுதான் உணர்ந்தான்.. இனிமேல் பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை...

'சாரிப்பா... '

'என்னங்க... பையன் கிட்ட...கோர்ட்ல கேள்வி கேக்கறமாதி கேக்கறிங்க...'

அம்மா... எனக்கு ஆதரவாகப் பேச..

'நானே நேர்ல பார்த்தேன்... அதனாலதானே கேக்கறேன்..'

'ஏம்ப்பா.. அப்பா சொல்றது உண்மையா.. . எங்களுக்கு நீயோ.. கரிவேப்பில கொத்து மாதிரி... ஒண்ணே ஒண்ணு ... கண்ணே.. கண்ணுன்னு இருக்க... பைக்கில ஓட்டும் பொது அப்படியெல்லாம் பேசாதப்ப.. '

அம்மா அக்கறையோடு சொல்ல...
'இனிமே போன் வந்தா.. ஒண்ணு அப்புறம் பேசு.. இல்லன்ன.. வண்டியை ஓரமா நிறுத்தி பேசிட்டு.. அப்புறமா ஒட்டு...நான் சொல்றது உனக்கு கஷ்டமா தான் இருக்கும்.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்...அப்புறம் யுஸ் காலேஜ் அட்மிஷன் என்னாச்சி..'

'யுஸ் விசா வாங்க அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன்ப்பா ... அடுத்த மாசம் அஞ்சாம் தேதி கிடைச்சிருக்கு...'

'அப்படியா.. சரி.. இப்பவே அங்க இருக்கிற விஷயத்தை எல்லாம்
தெரிஞ்சிக்கோ... என்ன..'

'ஏன் தான்.. பையன கடல் கடந்து போய் படிக்கச் சொல்றீங்களோ.. எனக்கு புரியல.. சின்ன வயசிலிருந்தே... ஹாஸ்டல் இருந்து படிச்சிருக்கான்...
இப்பத்தான்.. கொஞ்ச நாளா தான் நம்ம கூட இருந்து வேலைக்கு போயிட்டு இருக்கான்.. அவன அனுப்பறதிலே குறியா இருக்கீங்களே.. '

'எனக்கு மட்டும் அவன் நம்ம கூட இருக்கனும்னு ஆசை தான்.. இந்த டிகிரி மட்டும் படிச்சிட்டானா ...அப்புறம் ... என்னோட கம்பெனிய அவன் கிட்ட ஒப்படைச்சிட்டு.. நான்.. நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம்னு தான்.. அப்புறம்.. காலம் பூர நம்ம கூடத்தானே இருக்கப்போறான்..'

'என்னமோ போங்க... இபப படிச்சதே.. போதாதா...உங்க கம்பெனிய கவனிக்கறதுக்கு... நீங்க எல்லாம் அங்க போய் படிச்சிட்டு தான்... கம்பெனிய நடத்துறீங்களா..'

'தனம்.... என் காலம் வேற.... இவன் காலம் வேற... நான் ரொம்ப கஷ்டப்பட்டு... கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி.. இந்த நிலைக்கு வந்தேன்.. இது போட்டி உலகம்... அவன் பல விஷயம் தெரிஞ்சா தான் கம்பெனிய நடத்த முடியும்... அதுவும் இல்லாமா இது என் தனிப்பட்ட ஆசை...நமக்கும் பெருமை தானே...'

'சரி.. சரி... எனக்கு எதுவும் புரியல... கார்த்தி... நீ போய் டிரஸ் மாத்திட்டு வாப்பா.. சாப்பிடலாம்..'

ஜன்னலின் காற்று, லேசாக குளிர.. கீர்த்தனா கண் திறந்து வெளியே பார்க்க.. பூமியை இருட்டு மொத்தமாய் குத்தகை எடுத்து முழுவதும் வியாபித்து இருந்தது...மரங்களின் குளிருக்கு.. நிலவு ஒளியை போர்வையாய் மூடுவதாக நினைத்து கொண்டு... கிளைகளிலும், இலைகளிலும் மறைந்து மறைந்து கண்ணா மூச்சிக் காட்டிக் கொண்டிருக்க...கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள் .. ஒன்பது ஆகிருந்தது... சாலை ஓரத்தில் இருந்த பதாகையில்.. திண்டிவனம்... பத்து கிலோமீட்டர் என்று இருக்க..இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வீட்டிற்குள் இருக்கலாம்..மனம் சந்தோசத்தில் குதியாட்டம் போட...

அவளுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது...சினிமா தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டதோடு சரி.. தன் கைப்பையில் எப்பொழுதும் சாக்லட் வைத்திருப்பவள்.. அதையும் சாப்பிட்டு விட்டோமோ.. எதாவது இருக்கிறதா என்று பையின் எல்லா ஜிப்புகளிலும் பார்க்க... ஒரே ஒரு பைவ்ஸ்டார் சாக்லட் இருந்ததது...

நல்ல வேலை... புதுச்சேரி வரைக்கும் இது தாங்கும்...என்றவள் அதனை பிரித்து... வாயில் கொண்டு செல்லும் பொது...கார்த்தியின் முதல் சந்திப்பு ஒரு சாக்லட்டால் தானே வந்தது என்பதை நினைவு கூர்ந்து... தனக்குள் சிரித்து கொண்டாள்.

மூன்று மாதத்திற்கு முன், கீர்த்தனா தன்னுடைய பிறந்த நாளின் போது..

ஒரு சாக்லட் பாக்ஸ்சை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் கொடுத்து கொண்டிருக்க...பதிலுக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ..
கார்த்தியின் முறை வர.. அவளை ஏற இறங்க பார்த்தான், ஒரு தேவதை போல இருந்தாள், கோயில் தேர் ஆடி ஆடி அசைந்து எதிரில் வருவது போல அவன் எதிரில் அவள் வர.. அவளை கண்ட பொழுதில் தன்னை மறந்து.. வாழ்த்து அட்டையில் பின்வருமாறு எழுதிக் கொடுத்தான்...

'மூர்த்தி குறைந்தாலும்
கீர்த்தி பெற்று - வாழ்வில்
பூர்த்தி அடைந்து
பூர்ண ஆரோக்கியத்துடன் வாழ
கீர்த்தனாவுக்கு என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...'


''அட பார்டா... என்ன ரைமிங்கா எழுதி இருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ்... நீங்க கவிதை எல்லாம் சொல்விங்களா...'

'இது கவிதை இல்ல கீர்த்தனா.. ஒரு பழமொழி.. அத கொஞ்சம் மாத்தி உனக்காகச் சொன்னேன்.'

'அது என்ன ..மூர்த்தி..கீர்த்தி....புரியலையே..'

'அது தெரியாதா.. தெரியாத வரைக்கும் சந்தோசம்...'

'சொன்னாதானே... என்னால ரசிக்க முடியும்....'

'கீர்த்தின்ன புகழ்..'

'ஒ... அப்புறம்.. மூர்த்தினா..'

'அது எதுக்கு ... விடுங்க...'

'சும்மா சொல்லுங்க... தெரிஞ்சிக்கலாம்...;

'சொன்னதக்கு அப்புறம்...கோவப்படக் கூடாது... .'

'பரவாயில்ல... என்ன பத்தி சொல்லிட்டு... அத தெரிஞ்சிக்காம போகமாட்டேன்...'

'மூர்த்தினா.. உருவம்..உயரம் அப்படின்னு...'

'ஒ... சந்ததி சாக்குல .. நான் குள்ளமா இருக்கிறேன்னு சொல்லீட்டிங்களா.. .. பரவாயில்ல... உங்க கவிதைக்கும் வாழ்த்துக்கும் என்னோட நன்றி கவிஞரே'

அவளும் தன் பங்கிற்கு அவனை கிண்டல் செய்தாள்
'யு ஆர் வெல்கம்...'

'எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..'

'என்ன சொல்லுங்க.. செய்யறேன்...

'என்ன பத்தி...ஒரு நாலு வரி கவிதை எழதி சொல்லுங்களேன்..'

'ஐயோ.. எனக்கு கவிதை எல்லாம் வராதுங்க..'

'எனக்கு கவிதையின்னா ரொம்ப பிடிக்கும்... உங்களுக்கு என்ன தோணுதோ.. என்னபத்தி...அதச்சொல்லுங்களேன்... ரொம்ப அவசரமில்ல.. நின்னு நிதானமா சொன்னா போதும்'

'ட்ரை பண்றேன்...'
சொல்லிவிட்டனே ஒழிய... இதற்கு முன் கவிதை எல்லாம் எழுதிய முன் அனுபவம் எதுவும் அவனுக்கு இல்லை..

அன்று வீடு திரும்பும் பொது... மறக்காமல்.. திநகர் சென்று ... பல புத்தக கடையெல்லாம் ஏறி இறங்கி... வைரமுத்து...நா.முத்துக்குமார்.. பா.விஜய். கவிதை தொகுப்புகளை வாங்கி வீட்டிற்க்குச் சென்றான்..

கீர்த்தனா . ஆசையாய் கேட்டாளா.. சும்மா என்னை வெறுப்பேற்ற கேட்டாளா.. . உண்மையில் என் மீது ஏற்பட்ட நல்ல அபிமானத்தால் கேட்டாளா.. ..அவள் அதை ரசித்து இருந்தால் தான்...அப்படி கேட்டிருக்க முடியும்...எதோ ஒன்று அவள் மனதில் தோன்றத்தான்... அப்படி கேட்டிருக்கவேண்டும் என்று அவன் உள்மனது கூறியது.. எப்படியாவது.. அவளை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும்...இது எனக்கு கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் .. இதனை நழுவ விடக் கூடாது.. ரம்யாவுடன் பறி கொடுத்த காதலை... இவளிடமாவது மீட்டு விடவேண்டும்...பல யோசனைக்குப் பிறகு..

அன்றைய இரவு... அவனுக்கு தூக்கம் போய் விட்டது.. வாங்கி வந்து புத்தகங்களை எல்லாம் ஒன்று விடாமல் படித்தான்... எல்லாம நன்றாக இருந்தது... எல்லாவற்றையும் அவர்களே எழுதி விட்டார்களோ என்று என்னும் படியாக ... அனைத்து விஷயங்களையும் அழகாக எழுதி இருந்தார்கள்..

தனக்கு என்று புதிதாக ஒன்றுமே தோன்றவில்லை... கவிதை எழுதுவதென்பது .. கடையில் சென்று கத்தரிக்காய் வாங்கி வருகிற காரியமா என்ன .. .விலை கொடுத்து வாங்க....அது ஒரு கலை.. அது அனைவருக்கும் வாய்க்குமா ...

அவ்வளவு சீக்கிரம் அவனுக்கு கை கொடுக்கவில்லை... பேப்பர் எழுதி எழுதி பார்த்தான் . எதுவும் பிடிபடவில்லை... பேசாமல்.. அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை கொடுத்து தனது கவிதை என்று கூறிவிடலாமா என்று யோசித்தான்...

அதெப்படி முடியும்... அவள் தன்னைப்பற்றி தானே எழுத கேட்டாள்... அவள் அழகை நான் தானே நேரில் பார்த்து இருக்கிறேன். ..

எப்படி எழுதுவது... மனமும்... கண்ணும் தூங்க மறுத்தது...கையும் பேணவும் எழுத மறுத்தது.. அவளைப் பற்றி என்ன கூறுவது... என்ன எழுதுவது..

இது எனக்கு கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம்...இந்த கவிதையின் மூலம்.. அவளைப் பற்றியும்...தான் அவள் மேல் பிரியப் படுவதையும் மறைமுகமாக வெளிப்படுத்த வேண்டும்...

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை... இரண்டு நாள் கடும் முயற்சிக்கு பின்... எதோ தனக்கு தோன்றியதை கிறுக்கினான்....

அந்த கவிதையை . ..எப்படி அவளிடம் காண்பிப்பது.. நானே பொய் சொன்னால்.. என்னைப் பற்றி என்ன நினைப்பாள்..

' ரொம்பாத்தான்.. அலையாறான்...' அப்படி நினைத்து கொண்டாள் என்ன செய்வது...

அடுத்து இரண்டு நாட்கள் . ஆபீஸ்ஸில் அவளை பார்க்கும் சந்தர்ப்பமும் குறைவு.. மேலும்.. கீர்த்தனா அவனைக் கண்டு கொண்டதாகவும் தோன்றவில்லை...

இரண்டு நாள் கழித்து காண்டீனில்..

'சாரி.. கார்த்திக்... ரெண்டு நாளா ஆடிட்டிங் வொர்க் இருந்துச்சி..வீட்ல இருந்து கெளம்பும்போது... உன்கிட்ட கேட்ட கவிதையை கேக்கணும் நினைப்பேன்... ஆன பாரு... ஆபீஸ் வந்தப்புறம்.. இருக்கிற வேலையில... எல்லாத்தையும் மறந்திடுவேன்..'

'அதுக்கென்ன... கீர்த்தனா... இப்பவாவது கேட்டிங்களே.. '

'என்னப்பா.. ரொம்ப பீல் பண்றயா.. ..'

'அதெல்லாம் ஒன்னுமில்ல ...பாவம்... உங்களுக்கு .. வேல டென்ஷன் மறந்திருப்பீங்க.. '.

'சரி.. சரி.. எங்க அந்த கவிதையை சொல்லுங்க பார்ப்போம். '

'உடனே எல்லாம் சொல்லமுடியாது.... அப்புறம் படிச்சிட்டு என்ன கேலி பண்ண ஆரம்பிச்சுடுவிங்க..'

'அதெல்லாம் பண்ண மாட்டேன்... சும்மா சொல்லுங்க '

'வேனும்மின்ன... ஒண்ணு செய்யறேன்... உங்களோட மெயில் ஐடிக்கு அந்த கவிதையை அனுப்பறேன்.. படிச்சிட்டு.. அப்புறம் உங்களோட பதிலா சொன்னாப் போதும்.. ''

'டன்..' என்றாள்...

சொன்னமாதிரியே.. அந்த கவிதையை... அவளுக்கு அனுப்பிவிட்டு...அவள் பதிலுக்காக காத்திருந்தான்... ஒரு நாள் சென்றது... இரண்டு நாள் சென்றது.. பதிலே இல்லை.... ஒரு வேலை தப்பாக எழுவிட்டோமோ...இல்லை... அதில் என்னுடைய விருப்பத்தையும் நாசுக்காகச் சொன்னதை.. தப்பாக எடுத்க்கொண்டாலோ... அவ்வளவு தான்... தன்னுடைய இந்த முயற்ச்சியும் தோல்வி அடைந்ததை எண்ணி தன்னையே நொந்து கொண்டான்..

இப்படி நினத்துக் கொண்டிருந்த சமயம்.. கீர்த்தனாவிடமிருந்து ஒரு மெயில் வந்தது..
கார்த்தி அனுப்பிய மெயிலில் இருந்த அந்த கவிதையினை பலமுறைப் படித்தாள் கீர்த்தனா.. அந்த கவிதை..


கண்கள் இரண்டும் கருவண்டு - உன்
கன்னம் இரண்டும் மதுக் கிண்ணம்
வண்ணம் சிறிதே குறைந்தாலும் - உன்
வனப்பு காண்போர் மதி இழுக்கும்
எண்ணம் ஏற்றம் கொண்டவள் நீ
எல்லோர் மனதிலும் நின்றவள் நீ
உண்மை சொல்லும் எனக்கும் - உன்
உளத்தில் கொஞ்சம் இடம் வேண்டும்.


மீண்டும் மீண்டும் படிக்க... அந்த கவிதையின் ஒவ்வொரு வரியிலும் கார்த்தி தன்னைப் பற்றி மிக அழகாகவே வர்ணித்து இருந்ததை ரசித்தவள.. உடனே அவனுடன் பேச மனம் ஒப்பினாலும்.. அந்த கடைசி இரண்டு வரிகள்..அவளை அவனிடன் பேச தயக்கம் காட்டியது.

'உண்மை சொல்லும் எனக்கும்...உன் உளத்தில் கொஞ்சம் இடம் வேண்டும்.' இதனை எந்த அர்த்தத்தில் அவன் சொல்லி இருக்கிறான்.. வெறும் நட்பாக எடுத்துக் கொள்ளலாமா . இல்லை... அவன் தன்னை விரும்புகிறான் என்று வைத்து கொள்ளலாமா எப்படி தெரிந்து கொள்வது ... மிகவும் குழம்பித்தான் போனாள்.

தான் அறிந்த வகையில்... கார்த்திக் ஒரு நல்ல பையன் என்றே பலரும் அவளிடம் கூறியுள்ளனர்.. ஏற்கனவே.. ஒரு பெண்ணிடம் காதல் தோல்வி ஏற்ப்பட்டதைத் தவிர.. மற்றபடி அவன் கெட்டவனும் இல்லை. எந்த கெட்ட பழக்கமும் கொண்டவும் இல்லை.. நல்ல கலகலப்பாக பேசக் கூடியவன் தான்.. அதைத்தவிர.. தவறு எதுவும் செய்ததாக யாரும் அவளிடம் கூறியதில்லை.

மேலும்.. ஒரு முறை அவன் அவளுக்கு உதவி உள்ளான்..அது நடந்தது... . கார்த்தியுடன் அதிகம் அறிமுகம் இல்லாத சமயத்தில்..

ஒரு நாள் அவளுடைய ஸ்கூட்டி வழியில் நிற்க... சிறிது தூரம் நடந்தே தள்ளிக் கொண்டு வந்த சமயம்... கார்த்தி அந்த வழியே பைக்கில் சென்றவன்..

'ஹலோ... நீங்க கீர்த்தனா தானே...'

'எஸ்...'

'நான் கார்த்தி... நீங்க வொர்க் பண்ற கம்பெனியில தான் வொர்க் பண்றேன்..'

'ஒ.. அப்படியா..

'என்ன ப்ராப்ளெம் வண்டியில..'

'என்ன மெக்கானிக்கல் ப்ராப்ளன்னு தெரியல ...'

பைக்கை விட்டு இறங்கியவன், தனக்கு தெரிந்த அளவுக்கு என்ன என்று பார்க்க பெட்ரோல் இல்லாமல் இருந்தது...

'வண்டியில பெட்ரோல் இல்லீங்க..'

'வரும் பொது பெட்ரோல் போடனும்னு நெனெச்சேன்.. மறந்திட்டேன்... அடுத்த பெட்ரோல் பங்க் எவ்வளவு தூரம் இருக்கு...'

'அவ்வளவு தூரம் தள்ளிட்டா வரப்போறிங்க..'

உடனே... தன்னுடன் கொண்டு வந்த வாட்டர் பாட்டில் உள்ள தண்ணீரை முழுவதும் கீழே கொட்டி.. பைக்கை துடைக்கும் துணியால் சுத்தம் செய்து..
தன்னுடைய பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்து.. அவளுடைய வண்டியில் ஊற்றி .. வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்ததை அவள் இன்றும் மறக்கவில்லை..

அப்பொழுதிலிருந்தே அவனைப் பற்றி.. மற்றவர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தாள்..

உடனே பதில் அளிக்கலாமா.. ஓரிரு நாள் மறைமுகமாக கவனித்து... கொஞ்சம் பொறுத்து.. அவன் என் பதிலை எதிர்பாற்கிறானா என்பதனை அறிந்து பதில் சொல்லலாம் என்று நினைத்து தான்.. உடனே பதில் அளிக்கவில்லை..

அதுவும் கடந்த இரண்டு நாட்களாக.. அவன் தன்னுடைய இருப்பிடத்திற்கு பல முறை வருவதும்.. ப
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty Re: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by udhayam72 Mon Jun 10, 2013 3:59 pm


கோவில்
தேர்வலம் வீதிவர
ஊர்கூடி இழுக்கிறது
நீ
வீதி வந்து
ஊர் மக்களை
தேர்வடமாய் இழுக்கிறாய்...!



அம்மாவைப் பார்த்ததுமே கீர்த்தனாவுக்கு ஒன்றும் புரியவில்லை, அதுவும் அந்த இரவில் அம்மா, அப்பா இல்லாமல் தனியாக வந்திருக்கிறார் என்றால் எதோ மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கவேண்டும்.

'என்னம்மா.. ஆச்சரியமா இருக்கு.. நீங்க போய் இந்த நேரத்தில பஸ் ஸ்டாண்ட் வந்திருக்கீங்க... அப்பா எங்கே.. முகம் எல்லாம் அழுத வீங்கின மாதிரி இருக்கு.. அப்பாவுக்கு என்னாச்சு சொல்லும்மா...'

'ஒரு அர்ஜென்ட் வேலை... டெல்லியில் இருந்து விஐபி வந்திருக்காங்களாம்.. அதனால வீட்டுக்கு வர லேட் ஆகும்னு . என்ன அனுப்பி வச்சார்... '

'இல்லம்மா என் கிட்ட நீங்க என்னமோ மறைக்கறீங்க ... என்னன்னு சொல்லும்மா..'

'ஏம்மா.. நான் சொன்னா நம்பமாட்டியா.. வேணுமின்னா... நம்ம கார் டிரைவர் வேலுவ கேட்டுக்கோ..'

'வேலு.. நீ சொல்லு... அப்பா எங்க..'

'ஐய்யா... இன்னும் ஆபீசில் இருந்து வரலம்மா...எங்கிட்ட... காரை எடுத்து வீட்டுக்கு போய் ...அம்மாவை அழைச்சிட்டு.. உங்கள பிக் அப் பண்ண சொன்னார்...'

'அம்மா... ஏற்கனவே சொல்லி வச்சதா.. அப்படியா ஒப்பிக்கிரியா...'

'இல்லம்மா.. சத்தியமா இதெல்லாம் உண்மை தான்... '

'கீர்த்தனா.. எதுக்கு... வேலுவ போய் கோவப்படர... வா வீட்டுக்கு போவலாம்.'

'அப்பாவுக்கு எதுவும் உடம்பு சரியில்லையா...'

'அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா..'

'பின்ன என்ன ரெண்டு பேருக்கும் சண்டையா...'

'வீட்டுக்கு போனப்பறம்... விவரமா சொல்றேன்... கொஞ்சம் பொறுமையா இரும்மா..' காதோரம் கிசு கிசுத்தாள் அம்மா..

காரில் வீட்டுக்கு போகும் வரையில்... இருவரும் ஒன்றும் பேசவே இல்லை.. அவளுக்கு ஒரே கவலையாக இருந்தது...

கார் வீட்டை நெருங்க... வீட்டில் உள்ளே டிவி சத்தம் கேட்க... அப்பா வீட்டுக்கு வந்து விட்டதாகத் தான் நினைத்தாள்..

அம்மா... காலின் பெல்லை அடிக்க...

'அப்பா... வீட்ல தானே இருக்கார் ... ஏம்மா..பொய் சொன்ன...'

கதவு திறந்ததும்.....

கீர்த்தனாவுக்கு தன கண்களையே நம்பமுடியவில்லை...

'ஹாய் அக்கா.. எப்பக்கா வந்தே.... என்கிட்டே சொல்லவே இல்ல... போன வாரம் என்கிட்டே போன்ல பேசனப்ப கூட நீ வரேன்னு சொல்லவே இல்ல...ஹை ஜாலி....அக்கா வந்திருக்கான்னு என்கிட்டே அப்பாவும் அம்மாவும் சொல்லிருந்தா இன்னும் ரெண்டு நாளு அதிகமா லீவ் போட்டு வந்திருப்பேனே....'

'சரி.. சரி.. உள்ள போய் பேசலாம்..'

அம்மா அவசரமாய் உள்ளே கீர்த்தனாவை அழைத்துச் சென்றாள்.

'ஹாய்.... கிருத்திகா. .. ஹொவ் ஆர் யு....'

தன் அக்காவின் மூன்று வயது மகளை... அப்படியே தூக்கி மடியில் வைத்து கொஞ்ச ஆரம்பித்தாள் கீர்த்தனா

'பைன்...ஹொவ் டூ யு..' பதிலுக்கு கிருத்திகா கேட்க...

'பைன் டா செல்லம் ...நீ வந்திருக்கேன்னு எனக்கு தெரியாதுடா... இல்லன்னா.. சாக்லேட் வாங்கிட்டு வந்திருப்பேன்.. நாளைக்கு கடைக்கு கூட்டிட்டு போய் உனக்கு எல்லாம் வாங்கித் தரேன்.. . ''

'அக்கா... எப்டிக்கா.. இருக்க...'

'ம்ம்ம் ..' என்றாள் கீர்த்தானவின் அக்கா உஷா...

'அக்கா.. மாமா எங்கே.. உள்ள இருக்காரா.. '

ஒவ்வொரு அறையாக கண்களாலே நோட்டம் விட...

'உஷா.. தனியாதான் வந்திருக்கா.. ' அம்மா பதில் சொல்ல..

'ஏங்க்கா மாமா வரலையா...'

'வரல்ல.. '

'ஏன். வரல ' பதில் சொல்லாமல் கிருதிக்காவை அழைத்துக் கொண்டு மாடியில் உள்ள தன் அறைக்குச் சென்று விட்டாள் உஷா ..
கீர்த்தனாவுக்கு எதோ தப்பு நடந்திருப்பதாக மனதில் தோன்றியது. அக்கா செல்வதையே பார்த்து கொண்டு இருக்க..
'போய் டிரஸ் சேஞ்சு பண்ணிட்டு வா கீர்த்தனா.. பசியா இருப்ப .. சாப்பிட்டு அப்புறமா பேசலாம்..'

கீர்த்தனாவுக்கு... அங்கு நடப்பது எல்லாம் புரியாத புதிராகவே இருக்க... தன் அறைக்குச் சென்றவள்.. உடைகளை மாற்றி.. நைட் டிரஸ்சுக்கு மாறி டைனிங் ஹால் சென்று..

அம்மா சுடச் சுட செய்த இட்லியை பசி தீரச் சாப்பிட்டாள்

கீர்த்தனா.. சாப்பிட்டு முடித்து கை கழுவவும்... அப்பா வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது...

'டாடி... ' என்று ஓடிச் சென்று வரவேற்க..

'சாரி கீர்த்தி... இன்னிக்கின்னு பார்த்து.. ஆபீஸ்ல வேல.. அதான் பஸ் ஸ்டாண்ட் வர முடியாமப் போச்சு.. .'

'பரவா இல்லப்ப... நீங்க வரேலேன்னு கூட எனக்கு கோபம் இல்ல ...ஆனா .. அக்கா வந்திருக்கான்னு யாருமே சொல்லாம மறைச்சிட்டிங்களே..
அத நெனெச்சா தான் ரொம்பா கோவம் கோவமா வருது...'

'அது என்னென்னா.... கீர்த்தனா...'

'என்னங்க .... வாங்க... வந்து சாப்பிடுங்க... அப்புறமா பேசலாம்...'

அம்மா. தன் கண்களாலே...எதோ.. சைகை செய்ய...

'சரி.. வாம்மா... சாப்டுட்டே பேசலாம்..'

'இப்பதான் .. நான் சாப்பிட்டு முடிச்சேன் .. எனக்கு பயங்கர பசி.. .. சரி.. அக்கா கிட்ட பேசிட்டு இருக்கேன்.. '

கீர்த்தனாவுக்கு... எல்லோரும் எதையோ மறைக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது... அது என்ன என்று யாரும் சொல்ல மறுக்கிறார்கள்.. . மாடியில் தன் அக்காவின் அறைக்குச் சென்றாள்...

அக்கா... கிருத்திக்காவை ... தூங்க வைத்துக் கொண்டு இருந்தாள்

'அக்கா... எதாவது ப்ராப்ளமா..'

'அம்மா எதாவது சொன்னாங்களா..'

'எதுவும் சொல்லல..'

'மாமா ஏன் வரல...'

'இனிமே அவர் வரவே மாட்டார்..'

'எதுனா . சண்டையா...உங்க ரெண்டு பேருக்கும்...மாமா ரொம்ப நல்லவராச்சே .'

'எல்லாம் நடிப்புடி.. நீயாவது.. ஜாதகம், அந்தஸ்து, பணம், குலம், கோத்திரம், அழகு எதுவும் பார்க்கம... உன்ன விரும்பர பையனா பாத்து கல்யாண பண்ணிக்கோ... என்ன...'

எதற்கு இதை இப்பொழுது சொல்கிறாள் என்று அவளுக்கு விளங்கவே இல்லை..கூறிவிட்டு. அழ ஆரம்பித்தவள்... அழுகையை நிறுத்தவேயில்லை.. கீர்த்தனா எவ்வளவோ கூறியும் சமாதானப்படுத்தியும் .. அழுகையை நிறுத்தாமல் இருக்க..

அழுதால் பாரம் குறையட்டும் .. காலையில் எழுந்து கேட்கலாம் என்றவள்... கிழே இறங்கிக்கொண்டே.. ...

'என்னம்மா... அக்கா வந்ததுக்கா.. என்ன உடனே வரச் சொன்னீங்க..'

'உன்ன வரச் சொன்னதே.. வேற ஒரு காரணத்திற்கு..ஆனா உஷா இந்த நேரத்தில வருவான்னு எங்களுக்கே தெரியாதே..'

'அம்மா.. அக்கா அங்க அழுதிட்டு இருக்கா...'

'என்னென்னு கேட்டா. சொல்ல மாட்டேங்கிரா..நீதான் சொல்லேம்மா.. '

'மாப்பிள்ளைக்கு... ஐம்பது லட்சம் அவசரமா வேணுமா.. '

'எதுக்குமா... '

'கலிபோர்னியாவுல.. வீடு வாங்கப் போறாராம்..'

'எதுக்கு அங்க வாங்கப் போறாராம்..'

'அவரு பிரண்டு எல்லாம் வீடு வாங்கிட்டாங்களாம்.. அவருக்கு அவமானமா இருக்காம்.. தனக்கு ஒரு வீடு இல்லாம இருக்கிறது.. அதனாலா அக்காவை அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்லிருக்கார்..'

'ஏம்மா .. அப்பா இருக்கிற பொஸிஷனுக்கும் .. அவருக்கு இருக்கிற அதிகாரத்துக்கும்.. அவர போலிஸ்ல வரதட்சனை கொடுமைன்னு கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் இல்ல...'

'அப்படி எல்லாம் கொடுத்தா.. நம்ம வீட்டு மானம் தான் போகும்.... அப்பாவே ரொம்ப இடிஞ்சி போய் இருக்கார்.. முள்ள முள்ளால எடுக்கிற மாதிரி மெதுவா தான் இத சாலவ் பண்ணனும்...அப்பாவுக்கு பணம் ஒரு பிரச்சனை இல்ல.. நேரிடைய கேட்டு இருந்தா கொடுத்து இருப்பார்.. இப்படி பொண்ண வீட்டு அனுப்பி கேக்கறது நெனச்சி தான் ரொம்ப வருத்தப்படறார். '

'சரிம்மா... அக்காவப் போய் சமாதானப்படுத்து.. காலையில பேசலாம்.. எனக்கு தூக்கம் தூக்கமா வருது...'

அப்பா.. ஹாலில் அமர்ந்து.. யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருக்க..

'டாடி... குட் நைட்... காலையில பேசலாம்.'

'குட் நைட்.. கீர்த்தி...'
மறுநாள் அதிகாலை.. சூரியன் மெல்ல கண்ணை கசக்கிக்கொண்டு தன் ஒளி இமைகளை மெதுவாக சோம்பலுடன் திறக்க.. நகரமே பரபரப்புடன் காணப்பட.. கீர்த்தனாவின் வீடு மட்டும்.. ஏதோ இழவு விழுந்த வீடாக.. ஒரே மயான அமைதியாய்..

தூக்கம் களைந்து.கண் விழித்த கீர்த்தனா.. ஹாலில் அன்றைய தினசரியை நோட்டம் விட்டபடி இருந்த அப்பாவிடம் சென்று...

'அப்பா.... இவ்வளவு நடந்திருக்கு.. என்கிட்டே ஏம்ப்பா இதச் சொல்லவே இல்ல..'

'நீ சின்ன பொண்ணுடா செல்லம்... உனக்கு எதுக்கு இதெல்லாம்.... சொன்னா ரொம்ப வருத்தப்படுவேன்னு தான் சொல்லல.. எல்லாம் சரியாப் போய்டும்.. அக்கா எழுந்திட்டு இருப்பா.. போய் அவ கூட பேசிட்டு இரு...'

'சரிப்பா.. அக்காவை பழையபடி மாமா கூட சேர்த்திடுங்கப்பா.. பாவம் நேத்து நைட் அக்கா அழுதிட்டே இருந்தத பாக்க கஷ்டமா இருந்துச்சி..'

'எனக்கு மட்டும் தெரியாம இல்லம்மா .. அத பத்தி தான் யோசனை பண்ணிட்டு இருக்கேன்.. நான் பாத்துக்கறேன்... '

'சரிப்பா..' என்றவள்.. சமையல் அறையில் இருந்த அம்மாவிடம் சென்று.. அங்கிருந்த சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு..

'அம்மா.. எனக்கு சுடச் சுட காபி வேணும்..' அதிகார தோரணையில் கேட்க..

'ஆமாண்டி... என்ன தான் அதிகாரம் பண்ண முடியும்... போற எடத்துல.. இப்படி எல்லாம் பண்ண முடியாது..'

'எனக்கு வர்ரவனே.. காபி போட்டு தருவானே...'

'தருவாண்டி... இப்படித்தான்.. ஒருநாளு நானும் சொல்லிட்டு திரிஞ்சேன்... இப்ப பாத்தியா இந்த நாலு சுவத்க்குள்ள அடப்பட்டுக்கு இருக்கேன்..'

'அது அந்தக் காலாம்... நாங்க எல்லாம். ...வேலைக்கு போறோம் இல்ல...'

'வேலைக்கு போனா.. கொம்பா மொளச்சி இருக்கு...'இருந்தாலும்... உனக்கு வாய் கொஞ்சம் நீளம் தான்'

என்றவள் காப்பியை அவளிடம் நீட்டினால்.. வாங்கி குடித்துக்கொண்டே.. மெதுவாக..

'அம்மா.. நேத்து நைட் ஒரு விஷயம் சொன்னே.. என்ன வேற ஒரு காரணத்துக்காக வரச் சொன்னோம்னு... அது எதுக்கும்மா...'

'அது வந்து.. உன் கல்யாண விஷயமா தான்.. '

'எனக்கு எதுக்குமா..இப்ப கல்யாணம்.. இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்..'

'ஏண்டி .. எதுக்கு ரெண்டு வருஷம்..'

'ரெண்டு வருஷம் ஜாலியா இருப்பேன்.. ப்ரீயா இருப்பேன்...'

'இரேன்.. யார் வானான்னு சொன்னது... கல்யாணம் பணிக்கிட்டு... உன் புருஷன் கூட ஜாலியா இரு.. நான் வேணான்ன சொல்லப் போறேன்..'

'கல்யாணம் பண்ணிக்கிட்டா.. அது ஒரு இம்சை '

'ஆமாண்டி.. நீ சென்னையில ஒவ்வொரு நாளும் ஆபீஸ் போயிட்டு வர்றது.. எங்களுக்கு வயித்தில நெருப்ப கட்டிக்கு இருக்கிற மாதிரி இருக்கு...'

'என்னம்மா... இந்த காலத்தில போயி..'

'எல்லா காலத்திலேயும் இப்படித்தான்... பையனா இருந்தா கவலை இல்ல.. போண்ணுன்னா நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்...'

'போதும்... உன்னோட கதா காலட்சேபம்.. விசயத்த சொல்லு... எதுக்கு இப்ப கல்யாணம்.. .''

'அதுக்கில்ல.. ஒரு நல்ல வரன் வந்தது... பையன் அமெரிக்காவில வேலை செய்யறான்னு சொன்னாங்க.. ஆனா இப்ப நம்ம வீட்ல நடந்தத பார்த்துக்கு அப்புறம்... அமெரிக்க மாப்பிளையே வேணாம்னு தோணுது...'

'அமெரிக்க மாபிள்ளையே வேண்டாம்மா.. அதுமில்லாமா இப்ப கல்யாணமே வேண்டாம்மா..'

'ஏண்டி... யாரையோ லவ் பண்றீயா..'

'அது வந்து... இல்ல....அதெல்லாம் இல்லம்மா... நானே சொல்லாம்ம்னு நெனெச்சேன்... இப்ப வேண்டாம்னு தோணுது.. '

'சொல்லிடு கீர்த்தனா.. பையன் நல்லவனா இருந்தா.. நான் அப்பாகிட்டச் சொல்லி.. முடிச்சி வைக்கேறேன்.. அவசப்பட்டு.. தப்பு எதுவும் பண்ணிடாத...'

'உங்க பொண்ணும்மா நான்.. அதெல்லாம் எதுவும் தப்பு பண்ணமாட்டேன்..'

'அப்ப.. சொல்லு யாரு அந்த பையன்..'

'அது வந்து... என் கூட ஆபீஸ்ல வேல செய்றான்.. பேரு கார்த்தி..'

'பையன் நல்ல பையன் தானே.. இப்ப.. அப்பா கிட்ட.. எதுவும் சொல்லாத.. அக்கா பிரச்சனை முடியட்டும் நானே சமயம் பார்த்து சொல்றேன்.. என்ன...'

'தேங்க்ஸ்மா..அம்மான்னா அம்மா தான்'

அம்மாவை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு மாடி ஏறிச்சென்றாள் தன அக்காவிடம் பொழுதைக் கழிக்க.. .

கார்த்திக்கு அன்றைய பொழுது நகரவே இல்லை.. ஆபீசியில் ஒவ்வொரு நொடியும் நொண்டிக் கொண்டே செல்ல.. கீறத்தான் இல்லாமல் வேலையே ஓடவில்லை.. அவள் முகத்தை பார்த்தாவாவது அல்லது பேசினாலும் பொழுது போவது தெரியாமல் இருக்கும்.. எனவே... ஆபீஸ் முடிந்ததும் சீக்கிரமாகவே வீடு திரும்பினான்..

'என்னடா.. கார்த்தி.. உடம்பு எதுவும் சரியில்லையா... சீக்கிரமா வந்திட்டே..'

'இன்னிக்கு... ஆபீஸ்ல அதிகமா வேல இல்லம்மா.. அதான் நேர வீட்டுக்கு வந்திட்டேன்..'

'சரிடா.. காபி வேணும்மா.. இப்பவே சாப்பாடு சாப்பிடரியா..அப்பா வந்தப்புரம் சாப்பிடரியா.. '

'அப்பா தான்.. லேட்டா வரேன்னு சொன்னாரே... '

'ஆமாமாம்.. மறந்திட்டேன்.. இப்பவெல்லாம் எல்லாம் மறந்து போகுது.. '

'சரி... ஒரு அஞ்சு நிமிஷம் இரேன்.. மிக்ஸில சட்னி போட்டுட்டு... தோசை ஊத்தறேன்'

'ஏம்மா .. இன்னும் நீயே சமையல் ரூமல் வெந்திட்டு இருக்க... ஒரு நல்ல வேலைக்காரியா பாத்து வச்சிக்க கூடாதா ..'

'அவங்க எல்லாம் .. சுத்தமா செய்யமாட்டாங்க.. அப்படியே செஞ்சாலும் அதில ஒரு கடமை தான் இருக்கும்...பாசம் இருக்காது.. '

'அப்படி எல்லாம் பார்த்த... யாரும் வேலைக்காரிய வச்சுக்க முடியாது...'நீ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துப்பேன்னு சொன்னா.... '

'அதுக்கு தான் .. நீ சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோடா..மருமக வந்தா கூட மாட ஒத்தாசையா இருப்பாள்ல '

'அதுக்கெல்லாம் பொண்ணு ரெடி.. நீங்க ரெண்டு பெரும் ஓகே சொன்னா போதும் '

'அன்னிக்கு போன் பேசின பொண்ணா...'

'அம்மா... உனக்கு எப்படி..'

'எனக்கு தெரியும்டா.. ஒரு நாள் நீ குளிக்கும் பொது... அந்த பொண்ணு தான் பேசிச்சு.. நான் போன எடுத்து பதில் பேசின உடனே... ராங் நம்பர்ன்னு சொல்லிடுச்சி..அவ.. தானே..நல்ல பொண்ணு தானே.. ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வாயேன்... முடிச்சிடலாம்..'

'சரிம்மா...'

இரு வீட்டு பக்கமும் காதலுக்கு பச்சை கொடி அசைக்க, விதி எந்த பக்கம் எந்தக் கொடியை அசைக்கப் போகிறது என்று போகப் போகத் தான் தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம்..


இனி...
பறக்கும் முத்தத்தை எல்லாம்
மறந்தும் தந்துவிடாதே
அது
காற்றிலே கலந்து
யார்யாரோ கொடுத்த முத்தத்தோடு
என்னைத் தீண்டிச் செல்கிறது


மறுநாள் பொழுதும் வெறுமையாய்க் கழிய, அன்றும் தனலில் இட்ட புழுவாய்த் தவித்தான் கார்த்தி, பிரிவு என்பதன் அர்த்தத்தை முழுமையாய் உணர்ந்தான். ஓரிரண்டு நாள் பிரிவையே தாங்க முடியாமல் தவிப்பவனால் எப்படி ஒன்றரை வருடம் கீர்த்தனாவைப் பிரிந்து இருக்க இயலும்.

நினைத்து பார்க்கவே அவனுக்கு தலையைச் சுற்றியது, ஒரு எஸ்ம்எஸ் அனுப்பி இருந்தாலாவது ஆறுதலாய் இருந்திருக்கும், எப்பொழுது திரும்புவாள்
என்பதை அறிந்தாலாவது மனது கொஞ்சம் ஆறுதல் அடையும்.

அன்றும் ஆபீசில் வேலை செய்யவே பிடிக்கவில்லை, தலை வேறு வலிக்க, கான்டீன் சென்று ஒரு காபி குடிக்கலாமென்று காபியை ஆர்டர் செய்து ஒரு டேபிளில் அமர்ந்து இருக்க..

'என்னடா...ரொம்ப டல்லா இருக்கே.. நேத்து அனுப்பன டெலிவரில எதோ மிஸ்டேக் பண்ணிட்டியாம்.. ஆன்சைட்டிலிருந்து மெயில் மேல மெயில் வந்திட்டிருக்கு...' அவனுடைய டீமில் இருக்கும் சுமதி கேட்க..

'ம்ம்ம்...'

'என்னடா.. ம்ம்ன்னு .. பதில் சொல்ற.. கீர்த்தனா வரலன்னு ரொம்ப பீல் பண்றியா..'

'ம்ம்ம்... எப்ப வரேன்னு ஒரு எஸ்ம்எஸ் அனுப்பி இருக்கலாம்.. '

'வராம எங்க போவ.. ஒரு நாள் தானே ஆச்சி.. கண்டிப்பா வருவா.. கவனத்த வேலையில காமி.. அவ வீட்ல இருந்து எஸ்ம்எஸ் கூட அனுப்ப முடியாம நிலமா கூட இருக்கலாம்.. வேற ஏதாவது பிரச்சினை இருக்கலாம்...பொண்ண இருந்தா தான் அதெல்லாம் உனக்கு தெரியும்.. நீ போன் பண்ணி ..இல்லானா எஸ்ம்எஸ் எதாவது அனுப்பி தொலச்சியா...'

'அதெல்லாம் ஒன்னும் இல்ல..'

'போண்ணுன்னாவே எல்லா வீட்டிலேயும் ஏதோவொரு கட்டுப்பாடு இருக்கும்.. எதோ... ஆபீஸ் இருக்கிற வரைக்கும் தான் எங்களால ப்ரீயா பேசமுடியும்.. நீங்களெல்லாம் நெனச்சா, மனசு சரியில்லன்னு தோனுச்சினா.. வெளியே போய் ஒரு தம் அடீக்கிரீங்க.. இல்லன்ன பிரெண்ட்ஸ் கூட பார் போய்டறீங்க.. நாங்கெல்லாம் வீட்டுக்கு போய்ட்டா.. அவ்வளவுதான் எல்லாத்தையும் மனசுல பூட்டி வச்சிக்கிட்டு இருக்க முடியுமே தவிர.. எங்களால வேற ஒண்ணும் பண்ணமுடியாது..'

சுமதி சொல்வதிலும் உண்மை இருந்தது.. சுமதி என்ன தான் ஆறுதல் படுத்தினாலும்... எதோ அவள் வீட்டில் விபரீதம் நடந்திருப்பதை அவன் உள்ளுணர்வு உணர்த்தியது.
வேலை முடிந்து வீடு திரும்பியவுடன்..

'அம்மா.. அப்பா என்ன சொன்னார்.. '

'என்ன சொல்வார்.. ஒரே தாம் தூம்னு குதிச்சார்.... முடியாதுன்னு சொன்னார்... படிக்கப் போறானே.. அதுவரைக்கும் அந்த பொண்ணு வீட்ல சும்மா இருப்பாங்களா... பொண்ணும மறக்காம இருக்குமா.. இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டார்...'

'அப்பா... முடியாதுன்னு சொல்லிட்டாரா..' வருத்தமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் ..

'அதெப்படி சொல்வார்... கடைசியில எப்பவும் போல.. சரின்னு சொல்லிட்டார்..'

கார்த்திக்கு அப்பொழுதான் முகம் மலர்ச்சி அடைந்தது.

அது போகட்டும்.. அதப்பத்தி கவலைப் படாதே.. பொண்ணு பேரு என்னாடா.. எப்படிடா இருப்பா .. '

'பேரு கீர்த்தானா ... நல்ல பொண்ணும்மா... அழாகா இருப்பா. நல்ல குடும்பம்...'

'வீடு சென்னையிலா...'

'இல்லம்மா.... சொந்த ஊரு புதுச்சேரி... இவ மட்டும் ஒரு லேடீஸ்
ஹொஸ்டலிருந்து ஆபீஸ் வந்திட்டு போறா.. ஒரு அக்கா இருக்காம்.. அமெரிக்காவில் இருக்கிறதா சொன்னா..'

'சரிடா.. ஒரு நாளைக்கு .. வடபழனி கோயிலுக்கு வரச்சொல்லு... நானும் கோவிலுக்கு வரேன்.. அப்ப பாத்துக்கறேன்.. அந்த பொண்ணு கிட்ட கேட்டு சொல்லு.. .உனக்கு சந்தோசம் தானே...'

'மொதல்ல.. வீட்டுக்கு கூப்பிட்டு வரச் சொன்ன.. இப்ப கோவிலுக்குன்னு சொல்ற..'

'அப்படித் தான் சொன்னேன்.. திடீர்னு... அந்த பொண்ணு வீட்டுக்கு வந்தா.. அக்கம் பக்கம் இருக்கிறவங்க.. என்ன ஏதுன்னு கேப்பாங்க.. அதுவும் இல்லாம... அப்படி எல்லாம் வரக் கூடாதுடா.. அது மரபும் இல்ல.. கோவில்ல பார்த்தா யாருக்கும் தெரியாது.. மங்களகரமா இருக்கும்..'

தன்னுடைய ஆசை நிறைவேற்றப்படும் என்பது அவனுக்குத் தெரியும் ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் தனக்கு சாதகமாய் நடைபெறுவது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியத் தந்தது.

'தேங்க்ஸ்ம்மா... நான் விசா இண்டர்வியு போறதுக்கு வேண்டியா டாகுமென்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணனும்.. அப்பா வந்தப்புறம் சாப்பிட கூப்பிடும்மா ..'

தன் அறைக்குச் சென்றவன் தன் லேப்டாப்பில் வேண்டிய தகவல்களை சேகரித்தான் ..

சிறிது நேரத்திற்கு பிறகு...அவனுடைய மொபைல் போனில் இருந்து அலாரம் சத்தம் கேட்கவே... என்வென்று பார்க்க...

மறுநாள் ரம்யாவுக்கு பிறந்த நாள் என்பதை நினைவூட்டவே அந்த அலாரம் அடித்ததை, மொபைல் பார்த்து தெரிந்து கொண்டான்.

சென்ற ஆண்டு ரம்யாவின் பிறந்த நாளில் அவளுடன் இருந்ததை நினைத்துப் பார்த்தான்.. அவனுடைய நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

பெங்களூரில் அவளுடன் பழகிய சமயம், அவள் பிறந்த நாளுக்கு ஒரு சர்பிரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக ..

அவளின் பிறந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு மாலைப்பொழுதில்,

'ரம்யா.. ஷாப்பிங் போறேன்.. கொஞ்சம் என் கூட வர்யா.."

'விசேஷமா ஏதாவது வாங்கப்போறீய..'

'ஆமாம்... ஒரு சாரி எடுக்கணும்... எனக்கு எப்படி எடுக்கறதுன்னு தெரியாது... நீ வந்தையினா செலக்ட் பண்ண வசதியா இருக்கும். .'

'என்னபபா.. சாரி எல்லாம் எடுக்க போறே... யாருக்கு.. சாரி..'

'அது வந்து....அம்மா எடுத்திட்டு வரச் சொன்னாங்கா... பெங்களூர்ல காட்டன் சாரி நல்லா இருக்கும்ன்னு... எதுக்குன்னு சொல்லல.. யாருக்குன்னு சொல்லல ..'

இருவரும் சேர்ந்து.. பெங்களூரில் எம் ஜி ரோடில் உள்ள ஒரு பிரபலமானா துணிக்கடைக்குச் சென்று... சேலைகளை பார்த்துக் கொண்டு இருக்க..

'ரம்யா.. உனக்கு பிடிச்ச மாதிரி. நல்ல சாரியா எடு.. பணத்த பத்தி கவலைப்படாதா... '

'பொண்ணு எப்டி இருப்பான்னு தெரிஞ்சா தானே... மாட்சிங்கா செலக்ட் பண்ண முடியும்..'

'ஏறக்குறையா.. உன்ன மாதிரின்னு நேனேச்சிக்கோ...'

அவள் இரண்டு காட்டன் சேலைகளை செலக்ட் செய்தாள் , ஒன்று வெள்ளை நிறத்தில் அழகாக கை வேலைபாடுகளுடன் இருக்க... மற்றொன்று.. அதே வேலைபாடுகளுடன் பச்சை நிறத்தில் இருக்க..

'இந்த ரெண்டும் எனக்கு பிடிச்சிருக்கு..'

'வெள்ளை வேண்டாம் ரம்யா.. செண்டிமெண்டா முதல் முதலா எடுக்கறேன்...'

'நீ கூட செண்டிமெண்ட் எல்லாம் பாக்க ஆரம்பிச்சிட்டியா.. சரி உன் இஷ்டம்..'

பச்சை சேலையை எடுத்துக் கொண்டு... பணத்தை கொடுத்து விட்டு.. அவளுக்கு பிடித்த.. அவளுக்குத் தர வேண்டிய சாரியை.. அவளை வைத்தே எடுத்த தன் சாமர்த்தியை எண்ணி வியந்தவனாய்.. கடையை விட்டு இறங்கினான்.

'தேங்க்ஸ் ரம்யா.. சாரிய செலக்ட் பண்ணதுக்கு..'

'தட்ஸ் ஓகே.. கார்த்தி .. '

ரம்யாவின் பிறந்த நாள் அன்றைக்கு... அவளுக்கு விஷ் செய்ய.. அவள் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. மாலை முழுவதும் முயற்சி செய்து பலனளிக்காமல் போகவே.. . அவள் தங்கி இருக்கும் வீட் டிற்குச் சென்று பார்க்க. ரம்யா இருந்தாள்..

'ஹாப்பி பர்த்டே ரம்யா.. '

'தேங்க்ஸ் கார்த்தி..'

'காலையிலிருந்து உன் மொபைல் போனுக்கு ட்ரை பண்றேன்.. எங்க போயிட்டே... '

'அதுவா.. நான் எப்பொழுதும் பர்த்டே அன்னிக்கு.. ஏதாவது அநாதை ஆசிரமம் போயிட்டு .. அங்கேயே தங்கி... அவங்களுக்கு தேவையான உதவி பண்ணிட்டு.. ஒரு நாள் முழுதும் அவங்க கூட இருந்திட்டு வருவேன்...'

'ஒ... கேக்கவே ரொம்ப சந்சோஷமா இருக்கு .. நல்ல பழக்கம்..'

பின்னர், தனது பிறந்த நாள் பரிசைத் தந்தான்.. பிரித்து பார்த்தவள்.. ஆச்சரியத்தில் அசந்து விட்டாள்..
'வாவ்.. தேங்க்ஸ் கார்த்தி.. எனக்கு பிடிச்ச சாரியை.. எனக்குன்னு சொல்லாம என்னையே எடுக்க வச்சி... எனக்கே ப்ரெசென்ட் பண்ணி . கார்த்தி.. ரியலி யு ஆர் கிரேட்'

'அய்யாவோட ஐடியா எப்படி.. எனக்கு.. வெறும் தேங்க்ஸ் மட்டுமா..'

'வேற என்ன வேணும்... தரேன்...'

'இந்த சாரியா ... இப்பவே இங்கேயா நீ கட்டி.. அத நான் பார்க்கணும்....'

'சீ.. போ.. கார்த்தி ... உன் எதிர்ல எப்படி நான் கட்ட முடியும்...'

அதிசியமாய் ரம்யா வெட்கப்பட்டாள்..

'அந்த அர்த்ததுல சொல்லல.. உள்ள போய் கட்டிட்டு வா.. நான் பார்க்கணும்..'

உள்ளே சென்றவள்.. அந்த சாரியை கட்டிக்கொண்டு வர.. அவன் அசந்து போனான்..

'புடைவையால நீ அழகா... இல்ல.. நீ கட்டினதால புடைவை அழாகான்னு எனக்குத் தெரியல.. என்ன ஒரு அழகு.. நீயே அழகு.. அதுவும் இந்த சாரீயில... நீ அழகு தேவதையாய் இருக்கே .. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. '

'போதும்... போதும்.. கார்த்தி.. என்ன நீ ஓவரா புகழரா.. ரொம்ப கண் வச்சிடப் போற .. நான் இந்த மாதிரி சேலைய கட்டினதே இல்ல..அதுவும்.. நான் செலக்ட் பண்ணி.. அத நீ எனக்கு கொடுப்பேன்னு... நான் நினைக்கவே இல்ல.' என்றவள்.. அவனே எதிபாரத ஷணத்தில் அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து..

'தேங்க்ஸ்.. கார்த்தி' என்றாள்..

அவனுக்கு நாடி நரம்புகள் எல்லாம் ஒரு கணம் மரத்து போனது.. .உடம்பில் உள்ள ரத்தம் எல்லாம் உறைந்து போனது மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது.. உடம்பு லேசாகி.. சிறகில்லாமல் பறக்கத் தொடங்கினான்..

தன்னை நேசிப்பதாக அவன் நினைத்து இருக்க.. இறுதியில் தன காதலை வெளிப்படுத்திய பொழுது .. அவள் அப்படி சொன்னது.. இப்பொழுதும் அவன் மனதில் பசு மரத்து ஆணி போல அப்படியே நினைவில் இருக்கிறது..

'கார்த்தி.. நான் உன் கூட பிரெண்ட் மாதிரி தான் பழகினேன்.. எனக்கு லவ் பண்ற எண்ணமெல்லாம் உன் கிட்ட வரல ..'

'அப்ப.. அந்த சாரி கட்டி எனக்கு காமிச்சது.. எனக்கு கிஸ் கொடுத்தது...'

'நீ ஆசையாய் வாங்கி கொடுத்த. அதனாலா உனக்கு கட்டி காமிச்சேன்...
பிரெண்ட்ஸ்ககுள்ள . கிஸ் கொடுக்கறது எனக்கு தப்பா தோனல.. அப்புறம்.. நான் தீபக்கத்தான் கல்யாணமே செஞ்சுக்க முடிவு பண்ணிருக்கேன் ... அவனைத் தவிர என்னால உன்ன நெனெச்சி பாக்க முடியல .. கார்த்தி .. '

ரம்யா சொன்னது அவளுக்கு சரியாய் பட்டதோ என்னவோ.. அவனுக்கு ஏற்பட்ட மன வலி இன்னும் ஆறவே இல்லை.. இருந்தாலும் இன்னமும் தன்னுடன் தொடர்பில் இருப்பது மட்டும் அந்த மன வலிக்கு சற்று ஆறுதலாய்... ஒத்தடம் கொடுத்தபடி தொடர்கிறது..

கடந்த காலத்தை நினைத்தபடி... அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து ஒன்றை அனுப்பி வைத்தான்..
மறு நாள்..

வழகத்திற்கு மாறாய் உற்சாகத்துடன் ஆபீஸ் கிளம்பினான் கார்த்தி.. அதிகாலையிலே கீர்த்தனா அவனுக்கு ஒரு எஸ்ம்எஸ் அனுப்பி இருந்தாள் .. தான் அதிகாலை பஸ்சில் புதுச்சேரிலிருந்து கிளம்பி விட்டதாகவும்.. இன்று ஆபீஸ் சந்திக்கலாமென்று ..

ஆபீஸ் நுழைந்தவுடன், கீர்த்தனா அமரும் சீட்டில் அவள் இருக்கிறாளா என்று நோட்டம் விட்டபடியே சென்றான்.. அங்கு அவள் காணாததைக் கண்டு.. அவளுக்கு போன் செய்ய.. ஆபீஸ் வந்து கொண்டிருப்பதாகவும்.. பதினோரு மணிக்கு சந்திக்கலாம் என்று கூறவே.. உற்ச்சாகமாய் வேலை செய்ய ஆரம்பித்தான்...

சரியாக பதினோரு மணிக்கு.. கான்டீன் சென்றவன்.. அதற்கு முன்பே கீர்த்தனா அமர்ந்திருப்பதைக் கண்டவுடன்.. அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..

'ஹை கீர்த்தி... ரெண்டு நாளா உன்ன பாக்காம ரொம்ப தவிச்சி போயிட்டேன் தெரியுமா..'

'தெரியும்... என்ன பண்றது.. வீட்ல ஒரு ப்ராப்ளம் .. என்னால போன் பண்ணி சொல்ல முடியல..'

அங்கு நடந்ததை ஒரு வரி விடாமல் சொல்லி முடிக்க.. கார்த்தி மிகவும் வருத்தப்பட்டான்..

'சாரி.. கீர்த்தனா... '

'பரவா இல்லடா.. அதெல்லாம் எங்கப்பா பாத்துக்குவாரு. கொஞ்ச நாள்ல சரியாகிடும்.. இவ்வளவு கெட்ட விஷயத்திலும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு தெரியுமா'

'என்ன..'

'நம்மளோட லவ் பத்தி.. எங்கம்மா கிட்ட சொல்லிட்டேன்... அவங்களும் ஓகேன்னு சொல்லிட்டாங்க...'

'நானே சொல்லன்னும்னு நெனெச்சேன்.. எங்க வீட்லேயும் சம்மதிசித்தாங்க.. அதுவும் இல்லாம.. எங்கம்மா ஒரு படி மேலே போய் .. உன்ன நேர்ல பாக்கணும் வேற சொன்னங்க..'

'அப்படியா..'

'ஒரு லீவ் அன்னிக்கு.. நீ வடபழனி முருகன் கோயிலுக்கு வந்தியன. நானே எங்கம்மா உனக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்'

'ஆனா... வரும் போது.. சல்வார் போட்டு வராதே.. ஒரு சாரி கட்டிக்கிட்டு வந்த நல்லா இருக்கும்..'

'எனக்கு சாரி .. நல்லா கட்ட வராது.... எனக்கு சல்வார் தான் வசதியா இருக்கும்..'

'எனக்காக .. கட்டிக்கிட்டி வாயேன்..'

'என்னடா... இன்னும் கல்யாணமே ஆகல.. அதுக்குள்ளே.. என்ன... ரொம்பத்தான் கண்ட்ரோல் பண்ற..'

'இது கண்ட்ரோல் இல்ல.. ஒரு விண்ணப்பம் தான்..'

'அதெல்லாம் முடியாது.. நான்... எப்படி வர முடியுமோ அப்படித் தான் வருவேன்..'

அதற்கு மேல அவனால் ஒன்றும சொல்ல முடியவில்லை .. எப்படியோ அவள் வந்தால் போதும் .என்று விட்டுவிட்டான்..

'சரி.. உன் இஷ்டம்.. எப்படியோ வா..'

அவன் முகம் ஒரு மாதிரி போனதை ஓரக்கண்ணால் ரசித்தபடி..

'கண்டிப்பா வரேன்.. என்னிக்குன்னு சொல்லு.. '

வர சனிக்கிழமை.. சாயந்திரம் ஐந்து மணிக்கு வந்திடு.. '

'அப்புறம் ஒரு விஷயம்' என்றவன் தன் அப்பாவின் ஆசையையும், அமெரிக்கப் பயணத்தின் அவசியத்தையும் ஒன்று விடாமல் கூறி, கூடிய சீக்கிரம் அங்கு செல்ல இருப்பதாகவும், விசா கிடைத்து விட்டால், இன்னும் இரண்டு மாதத்திற்குள் செல்வதாகும் அவளிடம் தெரிவிக்க..

கீர்த்தான முதலில் தயங்கினாள், மனதிற்குள் முனகினாள், மிகவும் வருதப்பட்டாள், கண்களில் கண்ணீர் துளிர்க்க, அவனில் பிரிவை எண்ணி முதலில் மிகவம் கவலைபட்டாலும், எதிர் காலத்திற்கு நல்லது என்றெண்ணி தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டாள், கார்த்தி செல்வதில் அவளுக்கு ஒன்று ஆட்சேபனை இல்லை தான் , ஆனால் அவனைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்ற கவலை அவள் மனதில் குடி கொண்டது..
அன்று முழுவதும்.. கடந்த இரண்டு நாட்களில் பேச முடியாத... நடந்த நிகச்சிகளை எல்லாம் பேசி முடித்து வழக்கம் போல பிரிந்தனர்.

அந்த சனிக்கிழமை.. தன் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நிகழ்வு ஒன்று நடக்கப் போவதை அறியாதவளாய் கோவிலுக்கு வரச் சம்மதித்தாள்.

உணர்வின் ஒத்திகை
உதடு ஒத்தடம்..

முன்னுரைப் பார்வைக்குப்பின்
முத்திரை ஒப்புதல்...

சங்கமத்துக்கு முன்
மங்கல இசை..
கூடிக் கலப்பதற்கு முன்
பத்திரப்பதிவு..
முத்தம்.



வாழ்க்கையில் தோல்வி அதிகரிக்க அதிகரிக்க... வெற்றியின் எல்லையை நெருங்குகிறோம் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. ஒரு சிலர். தோல்வியைக் கண்டவுடன் சோர்ந்து விடுகின்றனர்.... ஒரு சிலரோ ஓரிரண்டு முறை முயற்சி செய்து... வெற்றி கிடைக்கவில்லை என்றால்.. அந்த முயற்சியை முழுவதும் மறந்து விடுகின்றனர்... மிகச் சிலரே.. வெற்றி கிடைக்கும் வரையில் முயற்சி செய்து... வெற்றியை அடைகின்றனர்.. அந்த வகையில் கார்த்திக் ஒரு அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும்...

ஒரு மாலைப்பொழுதில் வீட்டிற்கு வரும் வழியில், தன் ஆருயிர் நண்பன் குமாரைச் சந்தித்தான்.. கார்த்தி தன் அந்தரங்க விஷயங்களை எல்லாம் தன்னுடன் ஒன்றாய் படித்த குமாரிடம் மட்டும் எப்பொழுதும் பகிர்ந்து கொள்வான், குமாரிடம் ஏற்கனவே தான் அமெரிக்கா செல்லப் போவதை கூறி இருப்பதால்

'அமெரிக்க போகப் போரேன்னு சொன்னியே .. எப்ப போகப் போற.. கார்த்தி..'

'அதுக்கு தான் ரெடி பண்ணிட்டு இருக்கேன்.. நாளைக்கு விசா இன்டெர்வியு போகணும்.. விசா வாங்கிட்டேனா. அப்புறம்.. ரெண்டு மாசத்துக்குள்ள..
கிளம்பிடனும்...'

'அது சரி.. அப்புறம். கீர்த்தனா.. நீ வரவரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருக்கணுமே... அவ ஓகே சொல்லியாச்சா.. '

'சொல்லிட்டேன்.. முதல்ல வருத்தப்பட்டா... அப்புறம்.. சரின்னு சம்மதிச்சிட்டா..'

'நான் ஒண்ணு சொல்லவா. நீ கிளம்பறதுக்கு முன்னாடி.. . ரெண்டு குடும்பமும் முறைப்படி கல்யாணம் பேசி ஒரு முடிவு எடுத்திட்டிங்க வச்சுக்கோ.. அப்புறம்.. அவளுக்கும் உன் மேல நம்பிக்க வரும்.. அவளுக்கு மட்டும் இல்லா.. அவங்க வீட்ல இருக்கிற வங்களுக்கும்..

படிப்ப முடிச்ட்டு வந்தப்புறம் மேரேஜ் பண்ண வசதியாயிருக்கும்.. என்ன நான் சொல்றது கரெக்ட் தானே.'

இப்படி ஒரு யோசனை அவனுக்கு கூட வரவே இல்லை... இது கூட நல்ல யோசைனையாக அவனுக்குப்பட்டது.. கீர்த்தனாவுக்கும், அவள் குடும்பத்திற்கும் என் மேல் நல்ல அபிப்ராயமும், நல்ல நம்பிக்கையும் வரும்.

'குமார்.. நீ சொன்னது நல்ல யோசனையா இருக்கு.. எனக்கு கூட இந்த யோசனை வரல.. தேங்க்ஸ்டா குமார்..'
அமெரிக்கன் எம்பசி..சென்னை, மவுண்ட் ரோடு..
காலையிலே கூட்டம் அலைமோதியது..அவனுக்கு காலை 8.45 மணிக்கு விசா இன்டெர்வியு.. கையில் கொண்டு வந்த டாகுமென்ட்ஸ் எல்லாவற்றையும் மறுபடியும் ஒரு தடவை சரி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான்..

அமெரிக்காவில் வேலை செய்வதற்கு விசா வாங்க.. கண்களில் டாலர் கனவுகளுடனும்.. மனதில் எதிர்ப்பார்ப்புடனும்...கடவுளைப் பிறாத்தித்தப்படியும்.. ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று கொண்டிருக்க.... மற்றொருபுறம் . விசாவை நீடிப்பதற்கு ஒரு கூட்டமும்.. .
திருமண ஆனா புது மணத்தம்பதிகள்.. புது மனைவியை அழைத்து கொண்டு.. மனைவியிடம் தன அமெரிக்கத்தனத்தைக் காட்டிக் கொண்டு... ஒருபுறமும்.. தன் மகனையோ .. மகளையோ.. பார்பதற்கான ஆர்வத்துடன் வயோதிக தம்பதிகளும் வரிசையில் நிற்க..

கவுன்டரில் அருகே செல்லச் செல்ல.. விசா கிடைக்க வேண்டும் என்று கார்த்தியும் ஆண்டவனை வேண்டிக் கொண்டிருக்க.. .

' ஏன்னா.. சிக்காகோ போனா . அங்க பெருமாள் கோவிலுக்கு கண்டிப்பா போகணும்..'

வயதான பாட்டி... தன கணவனிடம கிசுகிசுக்க..

'கணேஷ்... யூஸ் நாப்கின்ஸ்... டோன்ட் பீ டர்டி...' அமெரிக்க கலாச்சாரத்தை கற்பித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி...

'அங்க பாருங்கோனா ... அவ கழுத்தில.. அந்த மூணு பட்டை செயின் நன்னா இருக்கோனா..'

அந்த டென்ஷன் நேரத்திலும்.. தன் கணவனுக்கு காண்பித்துக் கொண்டிருந்தாள் மற்றொருத்தி. ..

இவனுக்கு முன்புறம் சென்றவனை... விசா ஆபீசர் எதோ கேள்வி கேட்க . அவன் முழிக்க... பாஸ்போர்ட்டை அவனிடம் திருப்பி கொடுக்க..

கார்த்திக்கு புரிந்த
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty Re: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by udhayam72 Mon Jun 10, 2013 4:02 pm

கார்த்தி வண்டியை விரட்ட.. கோவில் மறையும் வரை பொறுமை காத்தவன்..

'கீர்த்தனா.. போற வழியில... எலியட்ஸ் பீச் போயிட்டு .. அப்புறம் ஹச்டேல் கொண்டு போய் விடரேனே..'

'சரி.. பீச்ல கொஞ்ச நேரம் தான் இருக்கணும்...'

'சரி..' என்றவன்..எலியட்ஸ் பீச் என்றழைக்கப்படும் தற்போதைய திருவான்மியூர் பீச்சை அடைந்தான். .

சனிக்கிழமை ஆனதால்.. ஒரே கூட்டம்.. பைக்கை ஓரிடத்தில் நிறுத்தி...அவளுடன் கை கோர்த்தபடி நடக்க.. கடல் காற்றும்... புடவை அணிந்து பழக்க மில்லாத காரணத்தினால்.. சேலையும் காலில் அடிக்கடி சிக்க.. நடக்க சிரமமாப்பட்டாள்.. அவளின் கால் செருப்பில் சிக்கிய மணல்... சேலையிலும்.. அவன் மேலும் விழ...

'அப்பா. எனக்கு அந்த பலூன் வேணும்..' குழந்தை ஒன்று தன் அப்பாவை நச்சரிக்க..

'உங்க அம்மா பண்றது கொஞ்சம் கூட நால்லாவே இல்ல.. எனக்கு தனிக் குடித்தனம் போயடலாம்ம்னு தோணுது..' மனைவி தன் கணவனிடம் வற்புறுத்த..

'கார்த்தி... உன்ன விட்டு பதினெட்டு மாசம் எப்படி இருக்கப் போறேனோ...'

'ஒன்னு.. ரெண்டு..மூணு..இப்படி எண்ணிட்டே இரு... பதினெட்டு மாசமும் தன்னால போய்டும்...'

'வீட்ல தான் பசங்க தொந்தரவுன்னா.. இங்க நீங்க வேறையா.. ' சுண்டல் காரனை ஒருவன் விரட்டிக் கொண்டிருந்தான்...

'விளையாடதடா... தினமும் உன்ன பார்த்த்து .. சண்டை போட்டு... பேசிட்டு.. பாக்காம இருக்கிறது... எவ்வளவு கஷ்டம் தெரியுமா..'

'இன்னிக்கு ஷேவ் பண்ணலையா.. குத்துது...' பக்கத்திலிருந்து ஒரு பெண் குரல் .

'அமெரிக்காவில் இருந்து வந்ததும்.. ஏர்போர்ட்லே... உனக்கு தாலி கட்ட நான் ரெடி..... காதல்ன்னு ஒண்ணு இருந்தா பிரிவு இருக்கும்.. பிரிவு இருந்தா தான் பழசு எல்லாம் நினைவுக்கு வரும்.. அப்பத்தான்.. ஒருத்தர் இன்னொருத்தர் மேல வச்சிருக்கிற பாசம் உறுதிபடும்.. ...'

'அய்யா...சாமி.. போதும்..உங்க பிரசங்கம்... '

'கரை மேல் பிறக்க வைத்தாய்... எங்களை... கண்ணீரில் மிதக்க வைத்தாய்... .. கட்டிய மனைவி... தொட்டிலில் பிள்ளை.. உறவை கொடுத்தவன் எங்கோகோகோகோ ........ ' தூரத்தில் எங்கோ டிஎம்ஸ் பாடிக்கொண்டிருந்தார்.. . ..

'எப்ப... வேலைய ரெசின் பண்ணபோற..'

'இன்னிக்கு இது போதும்.... வீட்டுக்கு போகணும்...அவர் வீட்டுக்கு வந்திடப் போறாரு...' ஒரு குரல்..

'நாளைக்கே கொடுத்திடலாம்னு இருக்கேன்...'

'மாமி.. ரசம் வக்கரச்சே.. ரெண்டு சொட்டு... எலுமிச்சம் சாறு பிழிஞ்சி விட்டேள்ன்னு வச்சுக்கோங்க... ஊரே கமகமக்கும்..'

'உங்க அம்மா... நல்லா பேசினாங்க.. எனக்கு பிடிச்சிருக்கு..'

'ம்ம்ம்..'

'உனக்கு யாரைப் பிடிக்கும்... மம்மியையா... டாடியையா.. கையைக் காட்டு...'
ஒரு தம்பதியினர் குழந்தையை நச்சரிக்க .. குழந்தையோ .. ஐஸ் வண்டியை நோக்கி தன கையைக் காட்டியது...

'உங்க அப்பா.. எப்படி... '

'அப்பாவும் நல்லவரு தான்.. பாக்க முரட்டு தனமா தான் இருப்பாரு... ஆனா மனசு குழந்த மாதிரி..'

'சிக்னல் சரியா கேக்கல... இன்னும் ஒரு மணி நேரத்தில ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சிடும்... நேரா வீட்டுக்கு வரேன்..' தன் மடியில் சாய்ந்திருக்கும் வாலிபனின் கன்னத்தைத் தடவியபடி.. .துப்பட்டாவால் முகத்தை மூடிய இளம்பெண் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.

பேசிக்கொண்டே . கடல் அலை வரை வந்து விட...

சிறிது நேரம் காலை நனைத்தவாறு.. இருவரும் ஓடிப் பிடித்து விளையாட..

'கீர்த்தனா.. இன்னிக்கு... பௌனர்ணமின்னு நெனக்கறேன்..'

'எப்படி சொல்ற...'

'அலை ரொம்ப மேலே எழும்பி வீசுதே..'

'பௌர்ணமின்னா அலை ரொம்ப வீசும்மா..'

'இது தெரியாதா.. பௌர்ணமி அன்னிக்கு நிலா.. பூமி கிட்ட வரதால... கிராவிடி அதிகமாகி... அது பூமியை இழுக்கும்.. அதனாலா. எப்பவும் வீசுற அலையை விட..பௌர்ணமி அன்னிக்கு அலை ரொம்ப மேல எழும்பும்...'

'ஒ.. அப்படியா... கொஞ்சம் தலை திருப்பி... இந்த பக்கம் பாரேன்..'
என்றவள்.. அவன் தலை திருப்பி வானத்தைக் காண்பிக்க.. மேல ஒரு அரை நிலா வானத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தது...

'கீர்த்தனா. அது வந்து... நான் .. முழு நிலவுன்னு சொன்னது... உன்னதான்.. பௌர்ணமியா.. நீ இங்க இருக்கறச்சே..... அதான் உன்னோட கிராவிடியால.. அலை எல்லாம் மேலே எழறது..'

'ஹலோ.. போதும்...துடைச்சிக்குங்க.. ரொம்ப வழியது....'

ஒரு பெரிய அலை வர.. அவள் மார்பு வரை அலை எழும்பி.. ஆடை முழுவதையும் நனைத்துவிட்டது.. ..

'போதும்.. கார்த்தி.. டிரஸ் எல்லாம் நனஞ்சிப் போச்சு... கொஞ்ச நேரம் உக்காந்து பேசிட்டு போகலாம்... '

இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டே.. ஒரு படகின் அருகில் சாய்ந்தவாறு மிக நெருக்கத்தில் அமர...

கடல் காற்று... நனைந்த துணிகளில் பட்டு.. உடம்பெங்கும் ஈரத்தையும் குளிச்சியையும் உண்டாக்க..


'கீர்த்தி.. இடுப்புக்கும் துடுப்புக்கும்... என்ன வித்தியாசம்..என்ன ஒத்துமை. இருக்கு .

'ரெண்டுக்கும் என்னடா சம்பந்தம் இருக்கு.. வித்தியாசப் பட..'

'இருக்கு சொல்லேன்...'

சிறிது நேர யோசிப்புக்கு பின்

'எனக்கு ஒண்ணும் தெரியல.'

'சொல்லவா..'

'சொல்லேன்... மொக்கையா இருந்தது... அப்படியே.. உன்ன கடலல தூக்கி போட்டுடுவேன்..'

'அம்மா.. தாயே.. நீ போட்டாலும் போட்டுடுவே.. நான் சொல்லல.'

'அட .. சரியான தொடை நடுங்கியா இருக்கே.. சும்மா சொல்லுடா..'

'துடுப்புக்கு.. மடிப்பு இருக்காது.. இடுப்புக்கு.. மடிப்பு இருக்கும்...'

'ரொம்பத்தான் மொக்க போற... அப்புறம்.. என்ன ஒத்தும இருக்கு..'

ஒத்துமையா.. என்றவன்...

'ஏய். கை ஏன் இடுப்புக்கிட்ட வருது..... ' இடுப்பிலிருந்த அவன் கையை விலக்க..

அதற்குள்... அவன் அவளின் இடுப்பைச் சுற்றி வளைத்து.. அவள் கன்னத்தில் அருகே... தன் கன்னத்தை உரசி.. அவனின் மூச்சு காற்று.. அவளின் மூச்சு காற்றுடன் கலந்து... அவளுக்கு கிறக்கத்தை உண்டாக்கி.. உடம்பு சூடாகி.. உணர்ச்சிகள் மேலோங்கி.. உணர்வின் ஆசியுடன். இதழும் இதழும் இணைந்து கவிதை எழுதத் துவங்க.. முத்தம் என்ற மௌனயுத்தம் சத்தமில்லாமல் அங்கு நிறைவேறியது.. கீர்த்தனாவுக்கு அந்த முதல் ஸ்பரிசம்.. ஒரு இனம் புரியாத இன்பத்தை தர.. அவளால் மறுக்கவோ.. தூர விலகவோ தோன்றாமல்..

அன்று தியேட்டரில் தவற விட்ட முத்தத்தை.. இன்று அவளின் சம்மதத்துடன்.. கடல் காற்றின் குளிருக்கு ஏற்ப வெப்ப ஒத்தடமாய்.. சங்கமத்திற்கு முன் . மங்கள இசையாய்.. ஒரு அழகிய காதல் விளையாட்டிற்கான ஒப்பந்தம்.. முத்த கையொப்பம்மிட்டு நிறைவேற்றப்படுகிறது..

உலகில்.. கூடல் இல்லாத காதல் இருக்கிறது... ஊடல் இல்லாத காதல் இருப்பதாய் சரித்திரம் இல்லை.. கார்த்தியும் .. கீர்த்தியும்... இந்த கூடலுக்கு பிறகு... ஊர் கண் பாட்டதோ.. யார் கண் பட்டதோ.. அடுத்த இரண்டு நாட்களில் ... இருவரும் ஒரு உப்பு பெறாத விஷ்யத்திற்காக ஊடல் வந்தது என்றால் ஆச்சிரியமாய் இருக்கிறதல்லவா.. அது என்னவென்று பார்ப்போம்...

உன் சமையலறைக்குள் நுழைந்து
இடுப்பை சுற்றி வளைத்து
முத்தமழை பொழியும்போது
சுற்றும் முற்றும் பார்த்தாயே ஒழிய
சத்தம் போடவில்லையே
உனக்கும் காதல் தீ
பற்றிக்கொண்டதோ!


புதுச்சேரி... கீர்த்தனாவின் வீடு...

கீர்த்தனாவின் அப்பா... அம்மா..அக்கா உஷா.... ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு ஹாலில் அமர்ந்திருக்க... குழந்தை கிருத்திகா .. பார்பி பொம்மைக்கு தலை வாரி விட்டுக் கொண்டு ஒருபுறம் அமைதியாய் விளையாடிக் கொண்டிருந்தாள்..

'அது தான் சம்மந்தி வீட்டுல பேசி.. சமாதானம் ஆயிடுச்சே.. இன்னும் என்ன யோசனை உங்களுக்கு... மாப்பிள்ளை தான் பொண்ண அனுப்பச் சொல்லிட்டாரே.. சீக்கிரம் ஆகா வேண்டியத பாருங்க..'


அனைவரின் மௌனத்தையும் கலைத்தாள் கீர்த்தனாவின் அம்மா..


'அம்மா.. இனிமே நான் அவர் கூட போய் குடும்ப நடத்த முடியாதும்மா...அவர் நம்ம குடும்பத்த பத்தி என்னென்ன பேசினாருன்னு உனக்கு தெரியுமா.. எனக்கு சொல்லவே கூசுது...'

உஷா.. கோப கனலைக் கொட்ட..

'உஷா... கொஞ்சம் அமைதியா இரு... குடும்பமும் ஒண்ணு இருந்தா பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.. அதுக்காக... இப்படி.. ஒரு பொண்ணு பொறந்த வீட்டிலே நீ இருந்தா.. ஊர் உலகத்தில என்ன பேசுவாங்க.. '

'எவ்வளவு கேவலாமா நடந்துக்கிட்டாறு தெரியுமா.. '

'நாம பொண்ணு வீட்டுக்காரங்க... கொஞ்சம் அனுசரிச்சித் தான் போகணும்.. என்னங்க.. அவ பேசிட்டே போறா.. நீங்களாவது கொஞ்சம் எடுத்து சொல்லக்கூடாதா...'

'நான் என்ன சொல்றது பங்கஜம்.... எனக்கு கூட மாப்பிள்ளை மேல கோவம்தான்... இன்னிக்கு விரட்டி அனுப்பிச்சவரு.. நாளைக்கு வேறேதும் செய்ய மாட்டருன்னு என்ன நிச்சியம்.. அதான் கொஞ்சம் யோசிக்கிறேன்..'

'அதுக்காக.. இப்படியே... பொண்ண வீட்லே வச்சிட்டு இருப்பிங்களா.. அதான் அனுப்பி வையுங்கன்னு சொல்லிட்டாரே.. டிக்கெட் எடுத்து சீக்கிரம் அனுப்பி வைக்கிற வழியப் பாருங்க..'

'அம்மா.... நான் போக மாட்டேன்...'

'ஏண்டி.. போகமாட்ட.. நீ இதுக்கே இப்படி சொல்றியே... அந்த காலத்திலே... உங்கப்பா செய்யாததாயா .. மாப்பிள்ள செஞ்சிட்டாரு...'

'எதுக்கு இப்ப.. பழைய கதைய எல்லாம் நோண்டற.. ' அப்பா தன குட்டு வெளிப்பட்டு விடும் என்று பயந்து ..

'பழச சொன்னா உங்களுக்கு பொத்துக்கிட்டு வருதா.. என் தம்பி கல்யாண பத்திரிக்கையில .. இவரு பேரு போடும்போது... அவர் படிப்புல.. ஒரு டிகிரி மறந்திட்டாங்கன்னு... என்ன அப்பவே பொறந்த வீட்டுக்குப் போடின்னு அனுப்பினவராச்சே ..'

'அம்மா... இந்த கதையே கேட்டு கேட்டு எனக்கு காதே புளிச்சுப் போச்சு..'

'நான் சொல்றது கேளு உஷா.. உனக்கு அடுத்து கீர்த்தனா இருக்கா.. நீ இப்படியே அடம் பிடிச்சி இருந்தா.. அவள பொண்ணு பாக்க வரவங்க என்ன நினைப்பாங்க...'


'அம்மா.. ஊருக்கு போலாமா. . எனக்கு இங்க போர் அடிக்குது.. அப்பா எனக்கு பர்கர், ஹாட் டாக்.. அப்புறம் பார்பி டால்ஸ எல்லாம் வாங்கித் தருவரு..'

குழந்தை கிருத்திகா... அம்மாவிடம் சொல்ல..

'பாரு... கொழந்த கூட அப்பாவ பாக்கணும்ன்னு சொல்லுது... '


'சரி .. உன் இஷ்டப்படியே ஆகட்டும்.. டிராவல் ஏஜேன்ட் கிட்டச் சொல்லி டிக்கெட் புக் பண்ணச் சொல்றேன்...'

வேண்டா வெறுப்பாக சம்மதித்தாள் உஷா..

'அப்பா..எனக்கு ஒரு ஆசை... .'

'சொல்லும்மா..'

'கீர்த்தானவுக்காவது... அந்தஸ்து... பணம்.. வசதி பாக்காம... அவ விருப்பட்ட மாப்பிள்ளையா பாருப்பா..'

'அமாங்க... இவளுக்கு சொந்தத்தில கொடுத்தும்.. இப்படி ஆயிடுச்சே... '

'என்னது.. ஆள் ஆளுக்கு சொல்றத பார்த்த... அவ எவனையோ காதலிக்கிற மாதிரி தெரியுது...'

'அப்படி சொல்லலீங்க.. '

'பின்ன... அவளே எனக்கு இந்த பையன் தான் வேணும் சொல்லட்டும்.. அவன் ஒழுங்காணவனா இருந்தா போதும்.. முடிச்சிடலாம்..'

பங்கஜத்துக்கு... இப்பொழுதான் நிம்மதி வந்தது..எப்படியோ.. சொல்லவேண்டியதை சொல்லி.. அவரிடமே சம்மதம் வாங்கியாகிவிட்டது...

'அப்புறம் ஒரு விஷயம்..'
என்ன சொல்லு...

'இவ அமெரிக்கா போறதுக்குள்ள ஒரு தடவ சென்னைக்கு போயி.. பேத்திக்கும் உஷாவுக்கும் நகையும்... துணிமணியும் எடுத்திட்டு வரலாமுங்க.. '


'இங்க இல்லாததா.... சென்னைக்கு ஏன் போகணும்...'


'சின்னவ... அங்க இருக்கா... அப்படியே.. அவள பார்த்த மாதிரியும் இருக்கும்.. அப்புறம் திநகர் போனா.. ஒரே எடத்துல எல்லாத்தையும் எடுத்திட்டு வந்திடலாம்..'

'சரி.. சரி... நீங்களே போயிட்டு வந்திடுங்க... '


'அப்பா நீங்க வரலையா..'


'நான் எதுக்கு... எனக்கு ஏகப்பட்ட வேல இருக்கு..'


பங்கஜம் எதிர்பார்த்த மாதிரியே.... அவரும் வரவில்லை... சென்னைக்கு சென்ற மாதிரியும் ஆச்சு... கார்த்தியைப் பார்த்த மாதிரியும் ஆச்சு.. அப்படியே உஷாவும் பார்த்து விட்டாள்.. அடுத்து இவரை எப்படியும் சமாளித்து விடலாம்.

கார்த்தியின் அம்மாவை தான் பார்த்ததை கீர்த்தனா ஏற்கனவே அம்மாவிடம் கூறியிருந்தாள்.

தாங்கள் போட்டத் திட்டம் வெற்றியடந்ததை நினைத்து பங்கஜமும் உஷாவும் தங்களுக்கு மகிழ்ந்தனர்.


அந்த கடற்கரை நிகழ்வுக்குப் பிறகு..அடுத்த இரண்டு தினங்கள் அவனிடம் பேசவே கூச்சப்பட்டாள் கீர்த்தனா.. கொஞ்சம் தலையை தாழ்த்தியும்... நேரில் பார்க்க அச்சப்பட்டும் இருக்க... இது தான் அச்சம், மடம், நாணம்.. பயிர்ப்பு என்ற குனாதிசியங்களோ.. என்று நினைத்துக் கொண்டு கார்த்தி இருக்க..


கீர்த்தனாவிடம் கூறியபடியே... மறுநாள் தன் ராஜினாமா கடிதத்தை ஆபீசில் கொடுத்துவிட்டான்...


'மாப்ள.. எப்படா . எங்களுக்கெல்லாம் ட்ரீட் வைக்கப்போறே..'

'வெறும் லஞ்ச்.. டின்னெர் மட்டும் பத்தாது... சரக்கும் வேணும்... '


'மச்சான்... என்னோட கார்ல... பாண்டிச்சேரி போயடுலாம...'

'பெரிய ட்ரீட்டா இருக்கணும்... கீர்த்தனாவே வேற கரெக்ட் பண்ணிருக்க...'

'இந்தியாவில கீர்த்தானா... அமெரிக்காவில கிறிஸ்டியானாவா.. . .உனக்கு உடம்பெல்லாம் மச்சம்ம்டா..'



நண்பர்களின் கேலியும், கிண்டலும், அன்புத்தொல்லைக்கும் ...

'கண்டிப்பா... தரேண்டா..'

நண்பர்களின் கலாட்டக்கள் ஒருபுறம் இருக்க..

மறுநாள்... அப்படி ஒரு ஆவேசம் கீர்த்தனாவிடம் வெளிப்படும் என்று அவன் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை..

'கார்த்தி.. யாரு அந்த ரம்யா..'

'ரம்யாவா.. அதுவா.. என்னோட...' வாய் திறப்பதற்கு முன் ...

'பேஸ்புக்ல ரம்யான்னு ஒரு பொண்ணு.. உன்னோட போட்டவ பாத்து அடிக்கடி கமெண்ட் பண்றா'

'அது வந்து.. பெங்களூர்ல ஒண்ணா வேலை செஞ்ச பொண்ணு'

' உன்னோட பழைய காதலியா..'

'அப்படி எல்லாம் இல்ல...'

'என்கிட்டேயே... பொய் வேற சொல்றியா.. ஏற்கனவே...ஜெனி.. இப்ப ரம்யாவா..'

'சொன்னாக கேளு... ஜஸ்ட் பிரெண்ட்ஷிப் தான்..'

'என்ன நம்பச் சொல்றியா.. உன்னபத்தி எனக்கு தெரியாது....நானும் கவனிச்ட்டு தான் வரேன்.. எத்தன தடவ உன்னோட போடடோவ பாத்து.. கமெண்ட் பண்ணி இருக்கா தெரியுமா ...'

'உன்னோட பேஸ்புக்ல மட்டும்... 45 பொண்ணுங்க... 22 பையனுக .. இதுவும் இல்லையின்னு சொல்லி .. என்ன நம்பச் சொல்றியா...'

'கீர்த்தி.. அதெல்லாம் முன்னாடி இருந்தே என்னோட பிரெண்ட்ஸ்ஸா இருக்காங்க..'

'போதும்.. உன்ன போய் நல்லவன்னு நெனெச்சேன் பாரு.. நீயும் மோசமானவன்னு தெரிஞ்சிபோச்சு... என கூட இனி பேசாத...'

'அதெல்லாம் ஒண்ணும் இல்ல கீர்த்தனா. என்ன நம்பு...'

அவன் பேசப் பேச... அவள் விடுவிடுவென்று.. சென்று விட்டாள்... அதற்குப் பிறகு.. அவன் பேச முயறசசித்தும் . அவள் பேசவே இல்லை...

இரண்டு நாள்.. மூன்று நாள்.. ஒரு வாரம்... அவள் ஆபீஸ் வருவதும்... கார்த்தி அவளிடம் போய் பேசுவதும் ... அவள் முகத்தை திருப்பி கொள்வதுமாய் சென்று கொண்டிருந்ததே தவிர... பேசுவதாய் தெரியவில்லை...

கார்த்தியும்... எவ்வளவோ சொல்லிப் பார்த்தும்.. அவள் கேட்பதாய் இல்லை...கடைசியில் அவளிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவுக்கு வந்தவன்

எதற்கும் இருக்கட்டும் என்றெண்ணி சுமதியிடம் பேசி.. இதை சொல்ல வைக்க வேண்டும் என்று தோன்ற.. அவளைத் தூது அனுப்ப நினைத்து ... சுமதியிடம் நடந்தவற்றைக் கூறி...

'சுமதி.. நீதான்.. கீர்த்தனாகிட்ட சொல்லிப் புரிய வைக்கணும்..'

'அதுக்கென்ன.. நானே சொல்றேன்... ஆனா நீ சொன்ன மாதிரி இல்லாம . கொஞ்சம் மாத்தி சொல்றேன்.. அப்பத்தான் அவ நம்புவா..'

'என்ன சொல்லப்போற..'


'கீர்த்தனா கிட்ட பேசிட்டு அப்புறம் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி அவசப்பட்டு அவகிட்ட ஏதும் சொல்லிவிடாதே...'
சுமதி என்ன மாய மந்திரம் செய்தாளோ தெரியவில்லை.. மறுநாள்...

'சாரி..கார்த்தி.. உன்ன பத்தி.. தப்பா புரிஞ்சிக்கிட்டேன்..'

'நான் தான் அப்பவே சொன்னேனே.. நீதான் நம்பள...'

'என்னமோ தெரியல.. நீ வேற அமெரிக்கா போகப் போற.. இதுக்கு முன்னாடி உனக்கு லவ் பெயில்.. எல்லாம் போட்டு கொழம்பிப் போய் தான்.. அப்படி பேசிட்டேன்..'

'ஒரு வாரமா எதிர் எதிர் பாத்துக்கிட்டும்... பேசமா இருந்தது ..அப்பப்பா. . எதிரிக்கும் இந்த சோதனை வரக்கூடாது '

'ஆமாம் கார்த்தி.. பாவம் ரம்யா.. அவ வேலைக்கு சேர்ந்ததுமே . அப்பாவும் அம்மாவும் ஆக்சிடென்ட் ஆகி இறந்ததும்... யாரும் அவளுக்கு உதவாம இருந்தப்ப.. நீதான் ஆறுதலா இருந்தாயாம்.. '

'பாவம்.. எப்படி துடிச்சி இருந்திருப்பா ..'

கார்த்தி மனதுக்குள் சிரித்துக் கொண்டான். கீர்த்தனா என்னிடம் பேசியதுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பொய் சொல்லாம.. தேங்க்ஸ் சுமதி..

'ஆனாலும் ஒரு கண்டிஷன்..அப்பத்தான் உன்ன நம்புவேன்.'

'மறுபடியுமா .' அதிர்ந்தான்..
.
'நீ பேஸ்புக் அக்கௌன்ட் குலோஸ் பண்ணிடனும்...'

'நீ என்கிட்டே பேசினதே போதும்... பேஸ்புக் , ட்விட்டர், இன்னும் யாகூ, கூகுள் . எல்லா அககவுன்ட்டையும் குலோஸ் பண்ணிடறேன்.. .'

கீர்த்தனா சிரித்தே விட்டாள்...

'இந்த ஒரு வாரம் உன்கிட்ட.. பேசாம இருந்ததுல.. ஒரு விஷயத்தை சொல்ல மறந்திட்டேன்...'

'என்ன ..'

'மாமா கூட சமாதானம் ஆகி.. அக்கா.. கூடிய சீக்கிரம்.. அமெரிக்கா போகப் போறா..'

'நல்ல விஷயம் ... ரொம்ப சந்தோஷமா இருக்கு..'

'இன்னொரு விஷயம் .. அம்மாவும்.. அக்காவும்.. சென்னைக்கு வராங்க...'

'ஏன்...'

'ஷாப்பிங் பண்ண.. அப்ப.... அம்மாவையும்.. அக்காவையும் உனக்கு அறிமுகப் படுத்தப்போறேன்...'

'சரி கீர்த்தி.. உங்கப்பா வரலையா...அவருக்கு தெரியுமா...என்னப்பத்தி.. .'

'அவருக்கு தெரியாது.. ஆனா... என்னோட காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாருன்னு அம்மா சொன்னாங்க...'

அப்படியே அவளை தூக்கி தட்டாமாலை சுற்ற வேண்டும் என்று தோன்றியது... ஆபீஸ் என்பதால்... கையைக் கட்டிக் கொண்டான்..

சனிக்கிழமை... விடுமுறை...தூங்கிக்கொண்டு இருந்தான்... மொபைல் போன் சிணுங்க..

'கார்த்தி..அம்மாவும்.. அக்காவும்.. சென்னைக்கு வந்திருக்காங்க... ஒரு பத்து மணிக்கு திநகர் வாயேன்...'

'சரி..வரேன்..'

அவசர அவசரமாய் குளித்து... கிளம்ப..

'இன்னிக்கு சனிக்கிழமை.... மறந்திட்டு ஆபீஸ் கிளம்பிட்டியா..'

'இல்லம்மா... ஆபீஸ்ல வேல இருக்கு.. புதுசா.. என்னோட இடத்துக்கு ஒருத்தர் வந்திருக்கார் .. அவர்கிட்ட என்னோட பொறுப்ப ஒப்படைக்கணும் இல்ல.. அதான்.. '

மறுபடியும் பொய்... காதல் வந்தால்.. பொய்யும் பெய்யனப் பெய்யும்... மழையாய் போல..

நல்லியில் இருப்பதாய் கீர்த்தனா சொல்ல.. நல்லியில்.. பட்டு புடைவைகளின் நடுவில்.. பட்டாம்பூச்சியாய் அவளைக் கண்டான்..

'அம்மா.. இவர்தான் கார்த்தி..'

'வணக்கம்..' கைகூப்பினான்... புடவை தலைப்பை சரிசெய்தாள் பங்கஜம்...

'எப்படி இருக்கீங்க..'

'நல்ல இருக்கேன்...'

'என்னோட அக்கா .. உஷா.. கிருத்திகா.. அக்கா பொண்ணு..'

மறுபடியம் வணக்கம்.. மறுபடியும் எப்படி இருக்கீங்க...மறுபடியும்.....

'கீர்த்தனா சொன்னா .. உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்..'

'எனக்கும் தான்... ' சொல்ல நினைத்து வெறும் ம்ம்ம மட்டும் சொன்னான்.

'எப்ப அமெரிக்கா கிளம்பப் போறீங்க..'

'டிக்கெட் கன்பார்ம் ஆனதும் கிளம்பிடனும்..'
.
அவர்கள் புடைவை செலக்ட் செய்ய.. கீர்த்தனாவும் கார்த்தியும் ஓரப் பார்வையிலும் சைகை மொழியிலும் கொஞ்சம் உரசலிலும் உரையாடிக் கொண்டிருந்தனர்..

நல்லி... போத்திஸ்.. குமரன்.. சென்னை சில்க்ஸ்.. ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்க..

அடுத்து.. ஜி ஆர் டி தங்க மாளிகை..

'அம்மா.. இந்த நெக்லஸ் நல்ல இருக்கில்ல..'

'நல்லா இருந்தா எடுதுக்கோம்மா..'

'கிருத்திகாவுக்கு.. வெள்ளி கொலுசு..எடுத்துக்கோ..'

'எதுக்கும்மா அவளுக்கு.. அவ அங்க போனா போடவே மாட்ட...'

தேவையானதை எடுத்து முடிக்கும் தருவாயில்...

'மம்மி.. எனக்கு பாத்ரூம் வருது.. ' கிருத்திகா சொல்ல..

உஷா அவளை அழைத்து கொண்டு பின்னாடி போகா..

'உஷா.. நானும் வரேன்... தனியா போகாதே...' அம்மாவும் உடன் செல்ல..

'கீர்த்தனா.. உனக்கு ஏதாவது வேணுமா..வாங்கித்தரேன்..'

'எதுவும் வேண்டாம்...'

'அந்த ஹாடடின் போட்ட சின்ன செயின் எனக்கு பிடிச்சிருக்கு.. எடுத்துக்கோயேன்..'

'வேணாம்பா.. அம்மா பார்த்தா திட்டுவாங்க...'

'இப்ப போட்டுக வேண்டாம்..அப்புறமா போட்டுக்கோயேன்...'

சேல்ஸ்மேனிடம் .. செயினை எடுக்கச் சொல்லி...

'போட்டு பாரேன்.. எப்படி இருக்குதுன்னு..'

கீர்த்தனா அந்த சின்ன செயினின் கொக்கி போடா முடியாமல் தவிக்க..

'இரு.. நானே போட்டு உடறேன்..'

அவன் செயினின் கொக்கியை கீர்த்தனாவின் கழத்தில் பூட்ட...

தேவ லோகபுரியில்.. வானத்து தேவர்கள் எல்லோரும் பூமாலை தூவ... பரமசிவனும்.. பார்வதியும்... விஷ்ணுவும் லஷ்மியும்... பிரம்மாவும் சரஸ்வதியும் தம்பதிகள் சமேதரராய். சூழ்ந்து வாழ்த்த... நாரதர் மந்திரங்களை ஓத... துந்துபிகள் இசைக்கீதங்களை இசைக்க.. கார்த்தி.. கீர்த்தனாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்..

கீர்த்தனாவின் மனம் ஒரு கணம் நினைத்து மகிழ்ந்தது....

ஒரு காந்தர்வ திருமணம் அமைதியாய் நடந்து முடிந்தது..
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty Re: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by udhayam72 Mon Jun 10, 2013 4:04 pm


பிறந்தநாள் பரிசாக
பச்சை புடவையை
பரிசளித்தேன்
'அய்... எனக்கா இந்த புடவை'
ஆச்சரியத்துடன் வினவினாய்
'அய்... எனக்கே இந்த தேவதை'
அகங்காரத்துடன் சொன்னது புடவை.



சென்னை பன்னாட்டு விமான நிலையம்...

கொண்டுவந்த லக்கேஜை எல்லாம் கிலியெரென்ஸ் செக் செய்து.. போர்டிங் பாஸ் வாங்கி... மறுபடியும் வரிசையில் நின்று... விசா கிலியெரென்ஸ் எல்லாம் முடித்து .. ஒரு வழியாய்.. போர்டிங் ரூமில் சென்று அமர்ந்து கொண்டான்..

கண்களில் புதிய தேசம் போகப்போகிறோம் என்ற எதிர்ப்பார்ப்பும்.. புது கலாச்சாரம்.. புதிய முகங்கள்... புதிய படிப்பு ...இப்படி எல்லாமே புதிது புதிதாக இருக்கப் போவதை எண்ணி ஒரு கணம் பயந்தான்.. திகைத்தான்.. மகிழ்ந்தான்..

போர்டிங் ரூமில் எல்லா வசதியும் இருந்தது.. காபி, டீ, கூல்ட்ரிங்க்ஸ், பீர் எல்லாமும் கிடைத்தது.. விலையும் அதிகமாய்...

மணித்துளிகள் கரையக் கரைய... கோட் சூட் அணிந்த, பட்டு சேலைப் பளபளக்க..ஜீன்ஸ் பண்ட அணிந்த.. நுனி நாக்கில் ஆங்கிலத்தில் பேசி.. தன் ஆங்கிலப் புலமையைக் காட்டிக் கொண்ட.. ஆண்களும் பெண்களும் ஒவ்வோராக வந்து கொண்டு இருந்தனர்..

சிகரட் பிடிப்பதற்கு என்று தனிக கண்ணாடி கூண்டு இருந்தது.. அதில் ஆண்களும்... ஒரு சில பெண்களும் புகையை ஊதியபடி .. கண்ணாடி கூண்டே புகை மண்டலமாய்...

அழகான ஆங்கிலத்தில் . ஒரு பெண் விமானத்திற்குள் ஏறுவதற்கு... எண் வரிசைப்படி அழைத்துக் கொண்டு இருக்க.. ஒவ்வொருவராக விமான காபின் வழியாக சென்று கொண்டிருந்தனர்...

கார்த்தியின் எண் அழைக்கப்பட... உள்ளே சென்றேன்.. மறுபடியும் செக்கிங்... உள்ளே... விமான ஒட்டியும்... ஏர்ஹோஸ்டஸ்.. வரிசையில் நின்று வரவேற்று... அவரவர் அமரும் இடங்களை காட்டிக் கொண்டிருக்க...

எனக்கு விண்டோ இருக்கை கிடைத்தது... கையில் கொண்டு சென்ற சின்ன பாக்கை. ஏர்ஹோஸ்டஸ்.. எடுத்து தலைக்கு மேலே இருந்த காபின் பெட்டியில் வைக்க...அமர்ந்தான்...

ஒவ்வொருவராய் அவரவர் சீட்டில் அமர்ந்து கொள்ள... விமானத்தில்.. காபின் கதவை மூடுவதும் திறப்பதுமாய் சத்தம் கேட்டு கொண்டிருந்தது.. தனக்கு முன் இருக்கையின் பின்புறத்தில் .. சில செய்தி தாள்கள் இருந்தது... ஏனோ மனம் அதில் நாட்டம் கொள்ளவில்லை..

ஒருவழியாக அனைவரும் அமர்ந்த பின்னர்...

அவசர கால நேரத்தில்.. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை.. ஒலிபெருக்கியில் ஏற்க்னவே பதிவு செய்த பேச்சு ஒலிப்பரப்ப.. . ஒரு அழகான ஏர்ஹோஸ்டஸ் ... பேச்சுக்கு ஏற்ப பரத நாட்டிய முத்திரை பதித்தபடி ... நடித்துக் கொண்டு காட்டிக் கொண்டு இருந்தாள் ..

ஏதோ அழகிப் போட்டியில் கலந்து கொண்டு கேட் வாக் செல்லும் பெண்களைப் போல்.. ஏர்ஹோஸ்டஸ் இங்கும் அங்கும் நடந்த வண்ணம்.. அனைவரின் சீட் பெல்ட்டை சரி செய்து...பெட்டிகளை ஒழுங்காய் அடுக்க உதவியும்.. அடுக்கிக் கொண்டும் இருக்க.. அவர்கள் பேசிய ஆங்கிலத்தில் ஒரு செயற்க்கைத் தன்மையும்..கடைமையும் இருந்ததே தவிர.. முழு ஈடுபாடு இருந்ததாகாக தெரியவில்லை..

பைலட் அனைவரையும் வரவேற்று ... இன்னும் சில நொடிகளில்... விமானம் புறப்படப் போவதை அறிவித்ததுக்கு கொண்டிருக்க...

விமானம் கிளம்பியது... மிக மெதுவாக.. ஒரு நேர்கோட்டில் ஓடி... கொஞ்சம் வேகம் பிடித்தது.. இன்னும் கொஞ்சம் அதிகம் வேகம் பிடித்து... அதிக வேகம் பிடித்து... மெதுவாய் மேலே எழும்ப.. ஒரு பறக்கும் உணர்வு தோன்றியது...

அந்தரத்தில்... மேலே எழும்ப. . சென்னை விமான நிலையத்தின் விளக்குகள்... மேலே இருந்து நட்சத்திரங்களாய்த் தெரிய.. சென்னை சிறிதாகியது.. மேலே எழும்ப எழும்ப... அனைத்தும் மறைந்து... கிழே ஒன்றும் தெரியவில்லை...
'கார்த்தி... எல்லாம் சரியா பேக் பண்ணிட்டியா...பாஸ்போர்ட்.. அட்மிஷ்ன் லெட்டர், அட்ரஸ், ஈமெயில், போன் நம்பர்ஸ் எல்லாம் பத்திரமா..கையோடு வச்சிக்க...எதுக்கும் ரெண்டு மூணு காப்பி எடுத்து.. ஒவ்வொரு பையிலும் ஒரு காபி வச்சுக்க ''

'சரிப்பா...'

'அப்படியே எல்லாத்தையும் எனக்கு ஒரு ஜிராக்ஸ் காபி கொடுத்துடு..'

'சரிப்பா..'

'கார்த்தி.. பெட்டியில... பருப்பு பொடி.. நூடுலஸ்... வத்தகொழம்பு பொடி ... லெமன் ரைஸ் பொடி .. புளியோதரை பொடி .எல்லாம் பாக்கெட்ல வச்சியிருக்கேன்... ஒரு மாசத்துக்கு வரும்...'

'அம்மா.. இதெல்லாம் எதுக்கும்மா... அங்கே எல்லாமே கிடைக்கும்ன்னு .. சொல்றாங்க...'

'அங்க.. வெல அதிகமா இருக்கும்... நீ வேற எதுக்காவது அந்த பணத்த யூஸ் பண்ணிக்கலாமில்லா..'

கார்த்தியை விட.. பெற்றவர்களின் ஆர்வமும்.. அன்பும் .. ஆதரவும் அவனை திக்கு முக்காடச் செய்ய...

புறப்படுவதற்கு முன்.. கீர்த்தனாவை ஒரு முறை பார்த்து விட வேண்டும் .. யோசனை தோன்ற..

சட்டென்று.. பைக்கை எடுத்துக்கொண்டு .. அவளின் ஹாஸ்டலை நோக்கி விரைந்தான்..

ஹாஸ்டல் வார்டனிடன்...கீர்த்தனைப் பார்க்க அனுமதிப் பெற்று காத்திருக்க...

கீர்த்தானா நைட்டியில் இருந்தாள்... எதோ உற்சாகம் குன்றி.. வயிற்றில் கையை வைத்தபடி.. கடினப்பட்டு முகத்தை சிரிக்கச் செய்தாள்..

'கார்த்தி... என்ன இந்த நேரத்தில... இன்னும் பிளைட்க்கு நேரமாகல... சாயந்தரம் தான் பேசிட்டு வந்தோம் ..என்ன அதுக்குள்ள.. '

'பாக்கணும் போல இருந்தது...என்ன .. ஒரே டல்லா இருக்கே...'

'கொஞ்சம் வயித்து வலி.... ரெண்டு மணி நேரம் முன்னாடி பாத்துட்டு போன.. அதுக்குள்ளே வந்திட்ட... இப்படி இருந்தா.. எப்படி அங்க போய் இருப்ப...'

மூன்று விரலைக் காண்பித்து... 'அந்த நாள் வலியா'

'அதெல்லாம் இல்ல.. எப்பவாவுது வயித்த வலிக்கும்.. கொஞ்ச நேரத்தில சரியாகிடும்... இப்ப வலிக்கிறது....'

'என்ன கீர்த்தனா.. ஈசியா சொல்ற.. நீ துடிக்கறது பாத்தா எனக்கு கஷ்டமா இருக்கு.. பெரிய டாக்டர போய் பாக்கவேண்டியது தானே...'

'கொஞ்ச நேரம் தான் வலிக்கும் கார்த்தி... ஒரு மாத்திரை போட்டா சரியாகிடும்..'

'எதுக்கும் கொஞ்சம் உடம்ப பாத்துக்கோ... கீர்த்தி..அது என்னமோ தெரியல .. மனசு எல்லாம் இங்க தான் இருக்கு...'

'சரி...நல்ல படிச்சி..டிகிரியோடா வா.. காத்திருக்கேன்...' ..

'அதுவரைக்கும்....'

'என்ன வேண்டும்....கொஞ்சம் இரு...' செல்பேசி யில் எண்களை அழுத்தி...

'அம்மா பேசணுமா.. ம்ம்ம்... பேசு..'

'நல்லபடியா. பத்திரமா போயிட்டு வாங்க...'

நீங்களும் பத்திரமா கீர்த்தியைப் பார்த்துக்கோங்க என்று சொல்ல நினைத்து
'சரி.. ஆன்ட்டி' என்றான்

'ஆல் தி பெஸ்ட்.. ஹவே எ நைஸ் ஜர்னி' அக்கா உஷா சொல்ல

'தேங்க்ஸ்..'

செல்போனை கீர்த்தனாவிடம் கொடுத்தான்...

'சரிம்மா... நான் வச்சிடறேன்..'

செல்பேசியை அணைத்தாள்.. . அவனையும் ...

'எனக்கும் மனசு கஷ்டமா இருக்கு...கார்த்தி '

அந்த நெருக்கம்.. அவளின் இறுக்கம்... வேறு ஏதாவது நேரமாயிருந்தால்.. நடப்பது வேறொன்றாய் இருந்திருக்கும்.. ஆனால்... இப்பொழுது...

'கார்த்தி.. உனக்காக காத்திருக்கேன்... '

சட்டென்று அவனை மேலும் இறுக்கி...அவன் இரு கன்னத்திலும்... .மாறி மாறி.. மொத்தமாய் முத்த மழை பொழிய.. இறுதியில் அவன் உதட்டில் ...

அன்று அவன் கொடுத்த முத்தம் இனித்தது. .. இன்று அவள் கொடுத்த முத்தம் கரித்தது... அவளை மெதுவாய் விலக்கி முகத்தைப் பார்க்க.. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது... ...

'எக்ஸ்கியுஸ்மீ சார் . வெஜ் ஆர் நான் வெஜ் '.

ஏர்ஹோஸ்டஸ் அவனின் தோளைக் குலுக்கி கேட்க...

விழித்து பார்க்க.. விமானமோ... 32000 அடி மேலே பறந்து கொண்டிருந்தது..

'நான் வெஜ்.. '

ஒரு பிளேட்டில் எதையோ அவள் கொடுத்ததை வாங்கிக்கொண்டான்...
அமெரிக்கா.. ..போஸ்டன் நகரம்..

அலுமினியப் பறவை மெதுவாக... மிக மிக மெதுவாக... தன் இறக்கையை சுருக்கி...தரையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது..

இருபத்தைந்து மணி நேரப் பயணம்.. சரியான தூக்கமின்மை... சரியில்லாத சாப்பாடு. கொடுத்த இலை தழை உணவு.. வயிற்றை எதோ செய்தது..

விமானம் தரை இறங்கியது... மறுபடியும் குடியுரிமை செக்கிங்... கன்வேயர் பெல்ட்டில் வந்த தன் பெட்டிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு.. எர்ப்போர்ட்டை விட்டு வெளியே வந்தான்... சூரிய வெளிச்சம் சுளீர் என்று உடம்பில் பட்டது... மணி என்ன என்று பார்க்க... இரவு எட்டு மணி ஆகிவிட்டது.. இரவு எட்டு மணியே மாலை நான்கு மணி போல் பிரகாசித்தது.. அவனுக்கு விசித்திரமாய் இருந்தது..

அருகில் உள்ள டெலிபோன் பூத்தில்.. இந்தியாவுக்கு அழைத்து.. தன் பெற்றோருக்கும் கீர்த்தனாவுக்கும் தான் அமெரிக்கா வந்தடைந்ததை தெரிவித்தான்..

அடுத்து ஒரு மஞ்சள் நிற டாக்ஸியை அழைக்க... அதிலிருந்தது ஒரு இந்திய சர்தாரி.. இந்திய பஞ்சாபிகள் அமெரிக்காவில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை முதலிலே அவன் அறிந்ததால்... அவனுக்கு அதிலொன்றும் ஆச்சிரியம் இல்லை..

'எங்கே சார் போகணும்... '

'ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் பக்கத்தில் ஏதாவது சிறிய தங்கும் ஹோட்டல் '

'ஒ.. நீங்கள் ஸ்டுடென்ட்டா...'

'ஆமாம்.. அது.. ஆல்லிச்டன் டவுனில் இருக்கிறது... சார்லஸ் ஆறுக்கு அருகமையில்... ...'

காரில் ஏறிக்கொண்டான்.. சர்தாரி அவன் உடமைகளை எடுத்து காரில் வைக்க உதவினார்..

'இது தான் முதல் முறை அமெரிக்க பயணமா'

'ஆமாம்'

'எத்தனை வருடப் படிப்பு ..'

'இரண்டு வருடங்களுக்கு குறைவு தான்'

'ஒ... படித்த முடித்த பின்பு... இங்கேயா தங்குவதாகா உத்தேசமா..'

இது அதிகபடியான அதேசமயம் அனாவசியமான் கேள்வியாக அவனுக்குத் தோன்றியது..

'இல்லை.. படிப்பு முடித்தவுடன் உடனே திரும்பிப் போகவேண்டும்...'

மடையனே... எனக்காக கீர்த்தனா என்ற தேவதை அங்கு காத்திருக்கிறாள்.. மனதிற்குள் சொல்லிக்கொண்டான்..

'இங்கு வந்தவர்கள்... 99 சதவிகிதம் திரும்பியதாகா எனக்கு நினைவில்லை...'
அனுபவத்திலும் அனுமானத்திலும் சர்தாரி சொல்ல..

'எனக்கு அங்கு பிசினஸ் உள்ளது..'

அதற்குள்.. ஒரு சிறிய ஹோட்டலின் வாசலில் காரை நிறுத்தினான்... இங்கிருந்து உங்கள் காலேஜ் நடக்கிற தூரத்தில் இருக்கிறது.. மேலும் இந்த ஹோட்டலில் வாடகையும் குறைவு தான்..'

அவரே அவனுக்கு அங்குள்ள ஹோட்டல் ரிசெப்னிஸ்டம் பேசி .. ஒரு ரூமை எடுத்து கொடுக்க.. நன்றி தெரிவித்துவிட்டு.. அவருக்கு வேண்டிய வாடகையையும் டிப்ஸ்சும் கொடுத்து அனுப்பினான்..

ஒரே ஒரு ரூம் நன்றாகவும் வசதியாகவும் இருந்தது.. டிவி , பிரிட்ஜ , குளியல் அறை, சமையல் செய்ய எலெக்ட்ரிக் அடுப்பு .. அறை முழுவதும் ஏசி செய்யப்படிருந்தது. . அன்று சனிக்கிழமை.. இன்று இரவும் , நாளை இரவும் தங்கி விட்டால், வரும் திங்கள் கிழமையிலிருந்து காலேஜ் கேம்பசில் தங்கிக்கொள்ளலாம்..

பசி வயிற்றைக் கிள்ள... தூக்க மயக்குமும்... ஜெட்லாக்கும் .. பயண களைப்பும் ஒரே நேரத்தில் அவனுக்குத் தோன்ற..

குளியல் அறைக்குச் சென்று... ஒரு நல்ல குளியல் போட்டப் பிறகு தான்... கொஞ்சம் களைப்பு குறைந்தது. .அடுத்தது பசி.. அருகில் ஏதாவது ரெஸ்டாரென்ட் இருக்கிறதா என்று ரிசெப்னிஸ்டம் கேட்க.. பக்கத்தில் ஒரு பிட்சா கடை இருப்பதை அவள் சொல்ல..

சாப்பிட்டு விட்டு... ரூமில் படுத்தது மட்டும் தான் தெரியும்.. மறுநாள்.. சண்டே அதிகம் தூங்கிவிட்டான்.. காலை எழுந்தவுடன் நேரத்தைப் பார்க்க மணி பகல் பதினொன்று காட்டியது..

இன்னும் பயணத்தின் களைப்பு போகவில்லை... எழுந்தவன்... சிறிது நேரம், டிவியைப் பார்க்க..

எல்லா சானல்களிலும் ... யாரோ ஒருத்தர் யாருடனோ பேசிக்கொண்டே இருந்தனர் ... விளம்பரமும் மகா மட்டம்.. மார்பை திறந்தபடி பெண்கள் ... உதட்தோடு முத்தம் கொடுத்தபடி .. சீரியல்களும்.. நம்மூர் சானங்களுக்கு ஒன்றும் குறைந்ததில்லை... கார்களின் விளம்பரமும்...எப்படி பணக்காராவது என்பதைப் பற்றி ஐடியா சொல்ல ஒவ்வொருவரும் இருபது டாலர் அனுப்புமாறு ஒருவர் கேட்டுக்கொண்டு இருந்தார்.. . வின்பிரே ஓபராய்.. டாக் ஷோ.. ஓரளவு பரவாயில்லை.. நம்மூரில் தான் ஜாதகம், ராசிபலன் என்றால் அங்கே... தரோட். என்ற பெயரில்... ஜோசியம் சொல்ல... .

குளித்து .. பக்கத்தில் உள்ள சீனா ரெஸ்டாரென்ட் சென்று . பிரைடு ரைஸ் வாங்கிச் சாப்பிட்டான்.. அப்படியே ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோருக்குச் சென்று.. பால், பிரட், முட்டை மற்றும் தனக்கு எளிதில் சமைக்க முடிந்த பொருள்களை . இரவு தானே எதாவது சமைத்துக் கொள்ளலாம் என்று எண்ணத்தில் வாங்கிக்கொண்டான்.

அன்று இரவு.. நல்ல தூக்கத்துடன் கடந்தது.. கனவில் கீர்த்தனா வந்து போனாள்..
ஹார்வர்ட் யுனிவேர்சிட்டி.. பெயர் பலகை மின்னியது.. உள்ளே நுழைந்தான் ..ஒரே சீராக வளர்க்கப்பட்ட மரங்கள்.. மரத்தின் அடியில் உட்கார பெஞ்சுகள்.. பறவைகளின் இசைக் கச்சேரிகள், ஜோடி ஜோடியாகவும்... கும்பலாகவும் மாணவர்களும் மாணவிகளும் ஆங்காங்கே அமர்ந்து கொண்டும் .. நின்று கொண்டும் பேசிக்கொண்டு .உரசிக்கொண்டும்.. ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்டும்..

எங்கு பார்த்தாலும் வெள்ளைப் பெண்கள்.. .. எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியாய் தெரிந்தார்கள்.. பாதி திறந்த மார்புடன்.. ஏனோ வித்தியாசம் தெரியவில்லை..

அவனுக்கு நினைத்துப் பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது... நம் நாட்டு ராகுல் பஜாஜ், ரத்தன் டாடா, .நியூயார்க் மேயர் மைக்கல் ப்ளூம்பெர்க், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் ஜார்ஜ் புஷ், ஜான் கென்னெடி.. இவர்களுடன் தற்போதைய அமைச்சர் ப. சிதம்பரம் படித்த கல்லூரியில் தானும் படிக்கப்போவதை நினைத்து பெருமை அடைந்தான்.

தன் தந்தைக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தான்.. அப்படியே தனக்கு தூண்டுகோலாக இருந்த தன் முன்னாள் காதலி ஜெனிக்கும் நன்றி சொல்லத் தவறவில்லை..

மெயின் ஹாலில் காலடி வைத்து நடந்தபடியே... கால்லூரியைத் தோற்றுவித்தவரின் தலை வெண்கல சிலை வடிவில் இருக்க... அங்கு படித்த முன்னாள் மாணவர்களில் புகழ் பெற்றவர்களின் படங்கள் வரிசையாக இருந்தது, அவற்ற்றை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்ட நடந்து கொண்டிருந்தான்..

எல்லா இடமும், கட்டிடமும் ஒரே மாதிர்யாய் இருந்ததால் புரபசர் ஹென்றி பால்சன் ,ஹமில்டன் ஹால்.. எங்கே இருக்கிறது என்பது அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே சென்று கொண்டிருந்தவர்களிடம் கேட்ட..

அவர்கள் தோளைக்குலுக்கி.. எனக்கு தெரியாது என்றனர்..

சுற்றி சுற்றி வந்தவன்.. கைக்காட்டியைப் பார்க்க . ஹமில்டன் ஹால்... மேற்கு நோக்கி செல்லச் சொல்ல.. சென்றான்..

ஹமில்டன் ஹாலில் நுழைந்து.. அது புரபசர் அறையாய் இருக்கும் என்று நினைக்க.. அங்கு முப்பது பேர் அமர்ந்திருக்க.. அது தான் தான் படிக்கப் போகும் கிளாஸ் ரூம் என்பதை உணர்ந்தான்..

வழுக்கை தலையுடன்.. கண்ணாடி அணிந்ததே தெரியாமல்.. நரைத்த தாடியுடன் . .புரபசர் ஹென்றி பால்சன் இருந்தார் .தன்னுடைய அட்மிஷன் கார்டை காண்பிக்க .உள்ளே வந்து அமரச்சொன்னார்..

சீனா, இத்தாலி, யோகோச்லோவியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல நாட்டு மாணவர்கள் அமர்ந்திருக்க..

'உன் பெயர் என்ன ' என்றான் ஒருத்தன்..

'கார்த்தி.பிரம் இந்தியா '

'ஒ காட்டி..' அவர்கள் வாயில் என் பெயர் நுழையவேயில்லை..

'ஏன் உனக்கு தலையில் தலைப்பாகை இல்லை...' அவன் பஞ்சாபி என்று நினைத்து கேட்க..

'நான் சவுத் இந்தியன்.'

'உங்கள் நாட்டில் பாம்புகள் அதிகமாமே...'

'அது முன்பு .'

'இந்தியர்கள்... பாத்ரூம் சென்று... தன் கையாலே கழ்விக்கொள்வார்களாமே ஏன் அங்கு பேப்பர் யூஸ் பண்ணுவதில்லையா...'

கார்த்திக்கு கோபம் கோபமாய் வந்தது.. முதல் நாள் என்பதால் அடக்கிக் கொண்டான்.

முதல் நாளிலே.. அந்த முப்பது பெரும் ஆறு ஆறாக பிரிக்கப் பட்டனர்.. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.. இவனுடைய குழுவில்.. ஜார்ஜ் டிச்சொன், எட்வின் கனான்.. க்ரோவர் நோர்கஸ்ட் ..கெயில் மாடரிஸ் என்ற வெள்ளைககார பெண்ணும் ... பல பெயர்கள் அவனுக்கு புரியவேயில்லை.. .

அந்த அசைன்மென்ட் ...

ஒரு எலேக்ட்ரானிக் தயாரிக்கும் கம்பனியில் 500 பேர் வேலை செய்கிறார்கள்.. ஒரு பிரிவு மட்டும் நஷ்டத்தில் இருக்கிறது.. அந்தப் பிரிவில் மட்டும் 50 பேர இருக்கிறார்கள். அந்த பிரிவில் உற்பத்தி செய்த பொருள்கள் எல்லாம் குடோனில் அப்படியே விற்காமல் இருக்கிறது.. என்ன செய்தால் அந்த கம்பனியை நஷ்டத்தில் இருந்து ஈடுகட்டலாம்... எப்படி அந்த கம்பனியை லாபத்தில் கொண்டு வருவது.. தாங்கள் ஆலோசகராக இருந்தால் எப்படி அறிவுரை கூறுவீர்கள்...

இன்னும் ஒரு வாரத்திற்குள் ரிப்போர்ட் முடித்து .. கொடுத்து விட வேண்டும் என்று முடிவு தேதி அறிவிக்க... .

முதல் நாளிலே.. பாடமே நடத்தாமல்.. ஒன்றுமே தெரியாமல்...இப்படி ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதை நினைத்து .. கார்த்தி அதிர்ந்தான்...

கட்டுரை எழுத .. அங்குள்ள லைப்ரரிக்கு சென்று சில புத்தகங்ளைப் புரட்டி படித்து கொண்டு இருக்க...

'ஹாய் .. ' சத்தம் கேட்க... தலையை உயர்த்தி பார்க்க..

தன் குழுவில் இருந்த .. கெயில் மாடரிஸ்... வெள்ளைக்காரி தான்.. குனிந்து அவனைப் பார்க்க..அவளிடமிருந்து வந்த சென்ட் வாசனை மூக்கைத் துளைத்தது.. சட்டை அணிந்து இருந்தாள்.. அவள் நின்ற விதமும் உடையும் அவனுக்கு ஒரு வித கிளச்சியைத் தூண்டியது. அவன் பார்வை மார்பின் மேல் பதிய .. ஒரு கணம் கீர்த்தனா மனதிற்குள் வந்து போக.. கண்களை வலுக்கட்டமாய் வேறு பக்கம் திருப்பினான்.. அருகில் வந்தவள்...

'உன் பெயர் என்ன ...'

'கார்த்தி.. இந்தியா '

'ஒ காட்டி..'

கெயில் மாடரிஸ் மூலம் தன் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை நிகழும் என்பதை அறியாதவனாய் அவளுடன் நண்பனானான்.

கண்ணை மூடினேன்
கனவில் நீ
உன்னைக் கண்டேன்
என் இதயத்தைத் தொலைத்தேன்
தொலைந்த இதயத்தைத் தேடினேன்
கிடைத்தது உன் இதயம்..!



கெயில் மாடரிஸ் என்ற பெயரை உச்சரிக்க சற்று சிரமப்பட்டான் ..

'எப்படி அசைன்மென்ட் போகிறது..'

'படித்துக் கொண்டு இருக்கிறேன்...பாக்கலாம் '

'வாயேன் .. வெளியில் மரத்தடியில் டிஸ்கஸ் பண்ணலாம்... நம் குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் அங்கேதான் இருக்கிறார்கள்...'

சரி.. என்றவன்.. அவளுடன் வரண்டாவில் நடந்து கொண்டே வர... வழியில் உள்ள வெண்டிங் மெஷினில்.. டாலர்களைச் செலுத்தி.. இரண்டு கோக் கேன்களை எடுத்து... அவனுக்கு ஒன்றைக் கொடுத்தாள்..

குடித்துக் கொண்டே.. பேசிக்கொண்டும் .. பேசிக்கொண்டே... குடித்துக்கொண்டும்... நடந்துகொண்டே....

'அமெரிக்கா.. பிடித்திருக்கிறதா...'

'வந்து இரண்டு நாள் தான் ஆகிறது.. இன்னும் எதுவும் பார்க்கவில்லை...'

'அப்படியா.. எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது உன்னை கண்டிப்பாக வெளியே அழைத்துச் செல்கிறேன்.. எங்கே தங்கி இருக்கிறாய்..

'காலேஜ் காம்பசில்.'

'நீ...'

'வெளியே ... ஒரு தனி அபார்ட்மென்ட் எடுத்து தங்கி இருக்கிறேன்..'

'ஏன்...உன் அப்பா... அம்மா. உடன் தங்கவில்லையா...'

'ப்ச்... அப்பா.. அம்மாவைப் பிரிந்து வேறோருத்தியுடன் இருக்கிறார்.. அம்மா.. வேறோருவருடன் இப்பொழுது இருக்கிறார்.. அம்மாவுடன் தான் தங்கி இருந்தேன்... அந்த விபரீதம் நடக்கும் வரையில்..'

'என்ன விபரீதம்...' ஆர்வமுடன் நான் கேட்க..

'அம்மா.. என் பாய்பிரெண்டுடன் உறவு கொள்வதைப் பார்த்ததிலிருந்து...'

கேட்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை.. குமட்டியது.. என்ன ஒரு அமெரிக்க கலாச்சாரம்...

'அப்பொழுதே.. வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன்.. அதிலிருந்து அவன் என்னுடன் மறுபடியும் இணைய முயற்சித்துக் கொண்டே இருக்கிறான்..'

'செலவுக்கு.. என்ன செய்வாய்..'

'பார்ட் டைம் வேலை செய்கிறேன்.. என்னுடைய அப்பா உதவி செய்கிறார்...'

பேசிக்கொண்டே மரத்தடி வந்துவிட ...

'ஹாய்.. ஹாய் ' என்றனர் அவனுடைய குழுவைச் சேர்ந்தவர்கள்..

அந்த அசைன்மென்ட் டைப் பற்றி கூடி விவாதித்தோம்..

'எனக்கு என்னமோ.. அந்த ஐம்பது பேரை வேலையில் இருந்து நீக்கி விடலாம்...கம்பனிக்கும் லாபம்.. நஷ்டமும் இருக்காது...'

கெயில்.. தன் அமெரிக்கா நாட்டுக்கே உரிய.. 'Hire and Fire' பாலிசியைச் சொல்ல...

ஒரு சிலர் .அதை ஆமோதிக்க...

'அதெப்படி முடியும்.. அப்புறம் .. அந்த குடோனில் இருக்கும் விலை போகாத பொருள்களை எப்படி விற்பது.. அதனால் நஷ்டம் இல்லையா. அதை எப்படி சரிக்கட்டுவது.. .'

கார்த்தி கேள்வியை எழுப்ப..

'அட.. ஆமாம்.. அதை மறந்து விட்டோமே..'

'அப்படி என்றால் . இப்படி செய்யாலாமே.. பேசாமல்.... அந்த குடோனை தீயிட்டு கொளுத்திவிட்டு.. வரும் இன்சூரன்ஸ் பணத்தை கொண்டு நஷ்டத்தை மீட்டு விடலாமே.. அதே சமயம் அந்த ஐம்பது பேரையும் வேலையில் இருந்து நீக்கியும் விடலாம்'

என்று கானன் சொல்ல... அந்த யோசனை நியாயமற்ற முறையிலும் நேர்மை இல்லாததாலும் .மேலும் ஒரு நல்ல ஆலோசகர் கூறும் ஆலோசனையாக இல்லாததாலும்..அதுவும் நிராகரிக்கப்பட்டது...

இப்படியாக ஒவ்வொருவரும் .. ஒரு யோசனை சொல்ல.. எதுவும் சரிவராமல்... மீண்டும் சந்திக்கலாம்.. என்று கூறிப் பிரிந்ததோம் .

மாலை காம்பஸ் ஹாஸ்டல் வந்ததான்.. அன்று நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தான்.. புதிய ப்ரபுசர்.. கெயில். அசைன்மென்ட்... புதிய நண்பர்கள்... அமெரிக்காவின் புதிய கலாச்சாரம்... புதிய சூழல் .. தனிமை... பிரிவு... மனம் போன போக்கில் எல்லாவற்றையும் நினைக்க ....

கீர்த்தனா வந்தாள்...
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty Re: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by udhayam72 Mon Jun 10, 2013 4:07 pm

'என்ன.. கார்த்தி.. இன்னும் தூக்கம் வரலையா...'

'உன்னதான் நெனச்சிட்டு இருந்தேன்...'

'என்னையே நெனெச்சிட்டு இருந்தா எப்படி... நல்லா தூங்கு... நல்லா படி.. நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்... '

தலையைத் தடவி... கன்னத்தை திருகி... கனவில் வந்து.. காணமல் போனாள்..

அப்பொழுதுதான்... அவனுக்கு நினைவுக்கு வந்தது.. இன்றைக்கு மொபைல் போன் வாங்க மறந்ததை.. நாளைக்காவது எப்படியும் ஒரு புது மொபைல் வாங்க வேண்டும்.. லேப்டாப் இருந்தாலாவது மெயில் மூலமாகவது அல்லது சாட் செய்தாவது பேசியிருக்கலாம் என்று நினைத்தவாறு .. அப்படியே உறங்கிப்போனான்..

கல்லூரி வாழ்க்கை இனிமையாகவும் .மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருந்தது.. ஒவ்வொரு நாளும் கிளாஸ் முடிந்ததும் லைப்ரரி செல்வதும்... பல புதிய புத்தகங்ளைப் படிப்பதுமாய் பொழுது கழிய.. கடைசியில் அந்த அசைன்மென்ட்டை ஒருவழியாய் முடித்து விட்டு.. தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான்... ..

'அந்த கம்பெனியில் விற்கும் நல்ல தரமான பொருள்களின் விலையை சற்றே உயர்த்தி.. அதனை வாங்குவோருக்கு, வாங்கும் பொருளுடன் கொடோனில் விற்பனை ஆகாமல் இருக்கும் பொருளை இலவசமாக கொடுக்கும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால். கொடோனில் இருக்கும் பொருள்கள் காலியாகிவிடும்.. இதனால்.. கொடோனின் வாடகை செலவும் மிச்சமாகும்..

அதனோடு மட்டும் இல்லாமல் அந்த இலவச பொருளுக்கு வழக்கமாய்த் தரும் ஒரு வருடத்திற்கான இலவச சர்விசை சற்றே மாற்றி.. இரண்டு வருட சர்விஸ் இலவசம் என்று அறிவித்து விட்டால்.. மக்கள் கண்டிப்பாக பொருளை வாங்குவார்கள்.. அதே சமயத்தில் அதற்கான உதிரி பாகங்கள் விலையையும் சற்றே கூடுதலாக்கி விடவேண்டும் .. இதனால் ஓரளவு நஷ்டத்தை குறைக்கலாம்..'

'அதெப்படி ஆள் குறைப்பு இல்லாமல் சாத்தியமாகும்..'

'அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறேன்.. விற்பனை ஆகாத பிரிவில் இருக்கும் ஐம்பது பேரில்.. ஒரு இருபது பேரை.. அந்த இலவச சர்வீஸ் பிரிவில் சேர்த்து விட்டால்.. அவர்களுக்கு வேலையும் போகாமல் இருக்கும்.. சர்வீஸும் நல்ல முறையில் நடக்கும்.. நல்ல பெயரும் கிடைக்கும்... மேலும் பத்து பேரை.. உதிரி பாகங்கள் உற்பத்தி பிரிவில் சேர்த்து விட்டால் பொருள்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.. '

'அடுத்த இருபது பேரை என்ன செய்வது..'

'அதில் இருக்கும் பத்து பேரைக்கொண்டு... பொருளின் தரத்தை கண்டறிந்து உயர்த்தும் குவாலிட்டி பிரிவில் சேர்த்து விட்டால்.. தரம் குறையாத வகையில் பார்த்துக் கொள்ளலாம்.. கடைசியாக இருக்கும் பத்து பேரைக் கொண்டே.. விற்கும் பொருள் குறையக் குறைய.. மிகக் குறைந்த அளவில்.. தரம் மேம்படுத்தப்பட்ட அதே பொருளை உற்பத்தி செய்யலாம்.

இதன் மூலம்... ஆள் குறைப்பு என்பது இல்லாமலும்.. பொருள் தேக்கம் இல்லாமலும்...தரமான பொருளையும் உற்பத்தி செய்யலாம்.. ஒருவேளை விற்பனை அதிகரித்தால், மற்ற பிரிவிலிருந்து பழையபடி அவர்களை அதே பிரிவில் வைத்துக் கொள்ளாலாம்..'

இப்படி கார்த்தி விவரித்துப் போக.. அந்த குழுவைச் சேர்ந்தவர்கள்.. கைதட்டி ஆராவாரம் செய்தனர்...

'வெல்டன்...'

'எச்செலேன்ட்..'

எதிர்ப்பர்ர்த்தபடியே.. கார்த்தியின் குழுவே மிக அதிக பாய்ண்ட்டுகளைப் பெற்று முதலாவதாக வென்றது..

'யு ஆர் கிரேட்..' கெயில்அவன் தோலைத் தட்டி... அணைத்துக் கொண்டாள்.

அன்று மாலை ஹாஸ்டலுக்கு வந்தவன்.. கீர்த்தனாவுக்கு போன் செய்து.. தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான்..

'கீர்த்தி.. எப்டி இருக்கே...'

'நான்.. நல்ல இருக்கேன்..' நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் ஒப்புவித்தான்...

'அப்புறம்.. உன் வயித்து வலி எப்படி இருக்கு..'

'இட்ஸ் கான்..' சொல்லிச் சிரித்தாள்..

'எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு கீர்த்தி.. இனிமே பாடத்த பத்தி எனக்கு கவலை இல்ல..'

'நீ சாதிப்பேன்னு எனக்கு தெரியும் கார்த்தி.. குட் லக்... நீ போனதிலிருந்து எனக்கு ரொம்ப போர் அடிக்கிறது... ரொம்ப நாளாச்சி.. ஒரு ஜோக் சொல்லேன்...'

'சொல்வேன் . ஆனா அப்புறம் மொக்கப் போடரேன்னு சொல்லிடுவியே..'..

'ஏய்.. நீ மொக்கப் போட்டு தானே.. என்ன பிக்கப் பண்ணே...'

'அட.. நீ கூட என்ன மாதிரியே பேசற..'

'பின்ன பூவோட சேர்ந்தா நாறும் மணக்கும் இல்ல..'

'உலகத்திலே ஒரு அழகான பூவே.. தன்னை நாறுன்னு சொன்னது இன்னிக்கு தான்.. ஆமா இதுல யாரு பூவு .. யாரு நாறு..'

'நீயே பூவ வச்சுக்கோயேன்..'

'நான்தானே.. வாழ்க்கை பூர கீர்த்தனாங்கற பூவ வச்சுக்கப்போறேன்..

'அய்யே.. போதும்... போதும்... சரி... சொல்லு '

'ஒருத்தன் செத்ததுக்கு அப்புறம்.. மேல் உலகத்துக்கு போனானாம்.. அங்க இருந்த காவலாளி.. இங்க ஜோடி ஜோடியாக நிர்வாணமா இருக்கிற ஜோடியில.. யாரு ஆதாம்.. ஏவாள்ன்னு சரியாச் சொன்னா.. நீ சொர்க்கத்துக்கு போவ.. இல்லனா.. உனக்கு நரகம் தான் கிடைக்கும் சொன்னான் '

'அப்புறம்.. '
'அவன் கரெக்டா சொல்லிட்டு சொர்க்கத்துக்கு போயிட்டானாம்.... எப்படி சொல்லு..'

'அது.. அது வந்து.. அதாம் ஏவாள்.. கடவ்ளால உருவானவங்க இல்ல..அதனால அவங்க தான் அங்க இருக்கிரவங்களுக்குள்ளே இளைமையா இருந்திருப்பாங்க . ஈசியா கண்டுபிடிச்சிட்டான் . கரெக்டா..'

'அது தான் இல்ல.. நல்லா யோசி.. '

'வேற என்ன.... ஏய். அசிங்கமா சொன்னா.. அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்.'

'அப்படி எல்லாம் இல்ல..கொஞ்சம் ட்ரை பண்ணா... சொல்லிடலாம் '

'தெரியல எப்பவும் போல நீயே சொல்லிடேன்...'

'ஏன்னா.. அதாம் ஏவாள்.. கடவுள் உருவாக்கினதால.. அவங்களுக்கு....தொப்புளே இருக்காது.. அதனால ஈஸியா கண்டுபிடிசிட்டான்..'
.
'ஒ.. நான் இத யோசிக்கவே இல்ல... சரி.. கார்த்தி . உன் கிட்ட இப்படி பேசி ரொம்ப நாளாச்சி..எப்பதான் நாள் சீக்கிரம் போகும்ன்னு தோணுது..'

'இப்படியே பேசிட்டு இருந்தா.. நாள் போகுமோ இல்லையோ... எனக்கு போன் பில் அதிகமாகும்..'

'சரிடா.. நீ எப்பவும் கவித சொல்லுவியே .. இன்னிக்கு ஏதாவது சொல்லேன்..'

'எனக்கு மூட் இல்ல.. '

'ஐயாவுக்கு மூட் வேற வேணுமா.. அதான் நான் பேசிட்டு இருக்கிறேனே.. அது போதாதா..'

'சும்மா பேசிட்டு இருந்தா போதுமா . எதாவது கொடேன் கன்னத்துல.. மூட் தானே வந்திடும்..'

'ப்ச்.. ப்ச்..ப்ச்.. போதுமா. இன்னும் வேணுமா..'

'போதும்.. போதும்.. இது இன்னும் ஒரு வாரத்துக்கு தாங்கும்.. சொல்றேன் கேட்டுக்கோ... வந்து... ஆங்.. வந்துடுச்சி...


நீ
கொடுத்த முத்தங்களை
தொலைபேசியும்
கைபேசியும்
ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு
தூரத்தே என்னிடம்
சத்த சுரங்களுடன்
வெப்ப காற்றையே
முத்தமாய்த் தருகிறது...!


'எப்படி இருக்கு...'

'கார்த்தி.. கலக்கிட்ட போ... இப்ப ரொம்ப பீல் பண்றேண்டா.. உன்ன மிஸ் பண்ணத நெனெச்சி.. ஐ லவ் யு அண்ட் ஐ மிஸ் யு சோ மச்.. '

பேசிமுடித்தவுடன் ... சிறிது நேரம் வாக்கிங் போகலாம் என்று காலாற காம்பசின் உள்ளே நடந்து வர.. கெயில் அவன் எதிரில் வந்தாள் ..

'ஹாய்.. வெளிய எங்கே செல்கிறாய்..'

'சும்மா . வாக் போகலாம் என்று வந்தேன்..'

'நானும் ..உன்னைத்தான் தேடி வந்தேன்...எனக்கு இன்றைக்கு வேலை இல்லை ரூமில் போர் அடித்ததால். உன்னை வெளியே அழைத்துச் செல்லாம்மென்று வந்தேன்..'

இருவரும்.. ஒன்றாகச் செல்ல.. இன்று அவள் புதிய ஹேர் ஸ்டைலுடன்.. தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தாள்..உடம்பிலிருந்து புது வித சென்ட் மனம் வீசியது.. வாயில் சூயிங்கம் மென்றபடி இருந்தாள்..

'உனக்கு என்னுடன் வரச் சம்மதம் தானே..'

'கண்டிப்பாக.. எனக்கு இங்கேயா சுற்றி சுற்றி போர் அடிக்கிறது....'

அவள் முன் செல்ல . அவன் பின் தொடர்ந்தான்...

அவள் காரில் அமர்ந்து டிரைவ் செய்ய.... அவள் பக்கத்தில் கார்த்தி அமர.. கார் புறப்பட்டது..

'அப்புறம்... இந்தியா எப்படி இருக்கிறது..'

'மிக நன்றாக...'

அவள், அவனை டௌன்டவுன் என்று அழைக்கப்படும் கடைவீதிக்கு அழைத்துச் சென்று.. பல கடைகளைக் காண்பித்தாள்.. ஸ்டோர்களிலும்.. காஸ் ஸ்டேஷன் என்றழைக்கப்படுகிற பெட்ரோல் பங்க்குகளிலும் இந்தியர்கள் நிறைய பேர் வேலை செய்து வந்தனர்.

இப்படி அயல் நாட்டினர் கடுமையாக உழைக்க.. அவர்களோ நன்றாக கொழுத்து வாழ்ந்து வருகின்றனர்..
அருகில் உள்ள.. ஒரு பார்க்கில்.. சற்று நேரம் அமர்ந்து.. இந்திய கலாசாரத்தையும் .. மற்றும் உலக நடப்புகளையும் பேசிக் கொண்டோம்.

'உங்கள் நாட்டு .. யோகா எனக்கு மிகவும் பிடிக்கும்...'

'தாஜ் மஹால் இன்னும் இருக்கிறதா.. எனக்கு நீண்ட நாளைய ஆசையுள் அதுவும் ஒன்று..அதனைக் காணவேண்டும் என்ற ஆசை..'

'இருக்கிறது...'

'ஏன் உங்கள் நாட்டில் மட்டும் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது..மக்கள் எப்பொழுதும் செக்ஸ் வைத்துக் கொண்டு இருப்பார்களா என்ன...'

முட்டாள் பெண்ணே... செக்ஸ்க்கும் ... குழந்தை பெற்று கொள்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.. கோபம் வந்தது...

'இந்தியா.. அமெரிக்காவின் மொத்த பரப்பளவில் நான்கில் ஒரு பகுதி என்பதால்.... அதிக மக்கள் தொகை இருப்பதாகத் தெரிகிறது...'

எதோ சமாளித்தான்...

'அதுவும் சரிதான்..' அவள் நம்பினாள்.

'அப்புறம்.. உனக்கு கேர்ள் பிரண்டு இருக்கிறாளா..'

'ம்ம்ம்.. இந்தியாவில்..' என்றேன்...

'எப்படி இருப்பாள்..'

'மிக அழகாக..'

'டுட் யு ஹேவ் செக்ஸ் வித் ஹெர்... '

இந்த கேள்வியை நான் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை..

'இல்லை.. எங்கள் இந்திய வழக்கப்படி.. திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்வதில்லை.. .'

'ஒ.. அமேஜிங்..' என்றாள்...

'நான் பதிமூன்று வயதிலே.. என்னுடைய முதல் பாய் பிரெண்டுடன்...'

போதும்.. நாம் கிளம்பலாம்... அதற்கு மேல் எனக்கு என்னமோ இந்த விசயத்தை தொடர விருப்பமில்லை..

பல சந்தர்ப்பங்களில்.. அவளின் நட்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. அந்த நட்பு.. செமஸ்டர் தேர்வு வரை நீடிக்க.. அந்த கொடூரமான் நிகழ்வு.. என் வாழ்க்கையையே திசை மாற்றி போட்டு விட்டது..

அது.. கெயிலின் துர் மரணம்...


அந்த சிறிய கன்வீனியஸ் ஸ்டோரில்... எப்பொழுதும் மக்கள் வருவதும் போவதுமாய் இருந்து வந்தது..

ஒரு கஸ்டமர் கொடுத்த பொருள்களை ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து எடுக்க.. அது அந்த பொருளுக்கான விலையை.. கம்ப்யூட்டர் மானிட்டரில் காண்பித்தது.. இறுதியாக..

'இருப்பத்ரெண்டு டாலர்.. நாற்பது சென்ட்ஸ் சார்..'

கஸ்டமர் இருப்பத்தைந்து டாலர் கொடுக்க.. காஷ் ரெஜிஸ்டரில் இருபத்தைந்து என்று என்ட்ரி போடா.. .மானிட்டர்.. மீதி.. இரண்டு டாலர் அறுபது சென்ட்ஸ் என்று காண்பித்தது..

கார்த்தி.. காஷ் கவுன்டரில் இருந்து.. மீதி சில்லறையைக் கொடுத்து..

'தேங்கயு ...ஹாவ் ஏ நைஸ் டே.. ' என்றான்..

வரிசையில் ஒவ்வொரும் வருவதும்.. அவர்களின் பொருள்களை ஸ்கேன் செய்து.. பணம் வாங்கி .. மீதி சில்லறைத் தருவதுமாய்.. மிகவும் பிசியாக இருந்தான்..

கடந்த இரண்டு மாதங்களாக இந்த ஸ்டோரில் கார்த்தி காஷ் ரெஜிஸ்டர் கிளார்க்காக பார்ட் டைம் வேலை செய்து வருகிறான்..

ஒரு நாள்... நான்கு இந்தியப் பெண்கள்.. அந்த கடைக்கு வர..

அவர்களும் தமக்கு தேவையான பொருள்களை எடுத்து வரிசையில் நிற்க.. அப்பொழுதான் கவனித்தான்.. அந்த நான்கு பெண்களில் ரம்யாவும் ஒருத்தியாக..

'ஹாய்.. ரம்யா.. எப்படி இருக்கே..'

'கார்த்தி.. நீயா.. நீ எப்படி இங்க..'

'நானும் அதே கேள்விதான் கேக்க நெனெச்சேன்..'

'கொஞ்சம் இரு...' என்றவன்

வந்த கஸ்டமரை முடித்து அனுப்பி விட்டு.. தன்னுடன் வேலை பார்க்கும் மற்றோரு வெள்ளைக்காரனிடம் கொஞ்சம் பார்த்துக் கொள் என்று கூறி விட்டு.. ரம்யாவுடன் வெளியே வந்தான்..

'என்ன ரம்யா.. நீ இங்க..'

'எனக்கு ஆன்சைட் வேல இங்க கெடச்சிருக்கு ...வந்து மூணு மாசம் ஆச்சு..'

'ஆமா.. நீ எப்டி..'

'நான் படிக்க வந்தேன்..' விபரத்தைக் கூறினான்..

'ரொம்ப சந்தோசமா இருக்கு.. இங்க உன்ன பார்த்தது.. '

'ஆமா. உனக்கும் தீபக்கும் கல்யாணம்னு சொன்ன.. அவரும் வந்திருக்காரா..'

'நீ வேற.. கல்யாணமே ஆகல... அது ஒரு சோககதை.. அத அப்புறமா சொல்றேனே..'

என்றவள் தன்னுடைய செல்போன் நம்பரைக் கொடுத்தாள்..

'சோ.. வர்ற சண்டே மீட் பண்ணலாமா..'

'சண்டே.. நான் சர்ச் போக வேண்டி இருக்கும் .'

'சர்ச்ல உனக்கு என்ன வேல..'

'உனக்கு தான் தெரியுமே கார்த்தி.. எனக்கு சோசியல் சர்வீஸ் பண்றதுல விருப்பம்னு... அங்க போனாவாவுது.. கொஞ்சம் நிம்மதி கிடைக்கட்டுமேன்னு தான்..'

வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தவள போல அவள் சொல்ல..

'நீ.. இன்னும் மாறவே இல்ல ரம்யா...சனிக்கிழமை கால் பண்றேன்.. மீட் பண்ணலாம்..'

நீ
அணிந்துகொள்ள
அலமாரியில்
ஆடையைத்
தேடிக்கொண்டிருக்கிறாய்
உடுத்திக்கொண்டிருந்த ஆடையோ
வருந்திக் கொண்டிருக்கிறது
மறுமுறை கட்டிக்கொள்ள
முடியுமாவென்று...!.


அதிகாலை எழுவதும் அரக்க பறக்க குளித்து கல்லூரி செல்வதும், மாலை கல்லூரி விட்டவுடன், வேலைக்கு செல்வதுமாய், நாட்கள் செல்ல.. வார நாட்களும் வேகாமாய் ஓடியது... மறுநாள் வார விடுமுறை என்பதால் அடித்து போட்டாற் போல அசதியில் தூங்கி விட்டான்.

அன்று அதிகாலையிலே அலாரம் அடிப்பது போல செல்போன் அலற.. தூக்க கலக்கத்தில் தலையணை அருகில் வைத்திருந்த செல்போனை எடுத்து...யார் இந்த நேரத்தில் போன் செய்வது என்று பார்க்க...

செல்போன் காலர் ஐடியில் இந்திய எண்ணைக் காண்பிக்க... அவசரமாய் காதில் வைத்து..

'ஹலோ.. '

'கார்த்தி... நான் அம்மா பேசறேன்பா..'

'என்னம்மா .. நானே போன் பண்ணி இருக்க மாட்டேனா..'

'யார் பண்ணா என்ன.. திடீர்னு தோணுச்சி...அதான்.. எப்படி இருக்க..'

'நான் நல்லா இருக்கேன்மா... நீங்களும் அப்பாவும் எப்படி இருக்கீங்க..'

'நல்லா இருக்கோம்பா.. அப்பாவுக்குத்தான் உடம்பு சரியில்ல..'

'என்னாச்சி அப்பாவுக்கு...'

'வேறென்ன அவருக்கு வயசாயுடுச்சி.. அவரால முன்ன மாதிரி கம்பனியைப் பார்த்துக்க முடியல...நீ எப்ப படிப்பு முடிச்சிட்டு வருவேன்னு பாத்திட்டு இருக்கார்... பொறுப்ப உன்கிட்ட கொடுத்துடலாம்னு..'

'அப்பாவ நல்லா பாத்துக்கோமா.. இன்னும் கொஞ்சம் நாள் தானே.. வந்துடறேன்'

'நல்லா சாப்ட்ரியா... உடம்ப நல்லா பார்த்துக்கோபா..'

'சரிம்மா..'

'அப்புறம் .. கீர்த்தனாகிட்ட பேசறியா.. எப்படி இருக்காளாம்..'

'ம்ம் ... நல்லா இருக்காமா.'

'நீ இங்க வர்றதுக்கு முன்னாடியே.. அவங்க வீட்ல பேசி.. கல்யாண தேதி குறிச்சிடலாம்னு நாங்க நெனேக்கறோம்.. . அப்பத்தான் .. நீ வந்து ஒரு மசாத்துக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலான்னு..'

'அதுக்கு என்னம்மா .. இப்பவே அவசரம்.. '

'உனக்கு அவசரம் இல்லானாலும்.. நம்ம வீட்டுக்கு மருமக வரனுன்னுமின்னு எங்களுக்கு ஆசை இருக்காதா..'

'உங்க இஷ்டப்படியே செய்யுங்க..'

பேசி முடித்தவுடன் ... கண்ணில் இருந்த கொஞ்சம் நஞ்ச தூக்கமும் அடியோடு போய் விட்டது.. அப்பொழுதுதான் ரம்யாவை இன்று சந்திக்க இருப்பது நினைவுக்கு வந்தது.. நேரத்தைப் பார்க்க.. காலை ஏழு மணி...ரம்யாவுக்கு போன் செய்து அவளுக்கு நினைவு படுத்த..

'ஹலோ.. ரம்யாவா ..'

'ஹலோ.. யார் நீங்க..'

'ரம்யா.. நான் கார்த்தி..'

'ஒ.. கார்த்தி.. நீயா எப்படி இருக்க... இன்னிக்கு மீட் பண்ணாலாம்ன்னு சொல்லிருந்தோம் இல்ல.. '

'ஆமா.. அதுக்குத்தான்.. போன் பண்ணேன்..'

'நீ எங்க தங்கிருக்க.. அட்ரஸ் சொல்லு.. நானே வரேன்..'

சொன்னான்..

'சரி.. ஒரு பத்து மணிக்கு வரேன்..சரியா...'

'ஓகே.'

'பாய் கார்த்தி..'

'பாய்..'

ரம்யா.. அவன் மனது பழைய நினைவுகளில் மூழ்கி போனது... ஒரு அற்புதமான தோழி.. காதலை ஜெனியிடம் தோற்று.. வாழ்க்கையே வெறுத்துப் போய் இருந்த சமயம் .. பெங்களூரில் வேலை கிடைக்க.. அங்கு சென்ற பிறகு.. ரம்யாவின் நட்பு கிடைத்தது.. அழகு தேவதையாய் இல்லாமல் போனாலும்.. அவளின் கரிசனமா பேச்சு.. அன்பு.. பாசம்.. கோபமே வராத தன்மை.. உதவும் குணம்.. இரக்கப் பார்வை.. அவனை அவள் பால் ஈர்த்தது..
ஒரு தலைக் காதல்.. மறு தலை அறியாததால்.. இரு தலைக் கொள்ளியாய் தவித்த நாட்கள்..

நட்பு என்ற விதை.. அவனின் மனதில் காதல் என்ற செடியாகாக சிறுகச் சிறுக வளர்ந்து .. மொட்டாகி.. பூவாகி.. காயாகி.. பழம் தரும் சமயத்தில் ...

ஆசை பட்டதெல்லாம்.. நிராசை ஆனாலும்.. ஓசை இல்லாமல்.. அவளுடனான நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது, கொஞ்சம் ஆறுதல் தந்தது.
வெளியே வெள்ளிப் பனி மழை பெய்ய.. உள்ளே அவன் மனமோ மூடுபனியாய்.. அள்ளித் தெளித்திடத் துடித்தது அனைத்தையும்... துள்ளி எழுந்தான் தூக்கத்தைக் கலைத்து..

அறையைச் சுத்தம் செய்தான்.. அவனும் சுத்தமாய் குளித்து... அவள் வருகையை சித்தமாய் எதிர்பார்த்து...

நேரம் சமயம் சந்தர்ப்பம் தெரியாமல் மெதுவாகச் செல்ல.. காரணம் தெரியாமல் காலத்தைக் கோபித்தான்..

சந்தித்த நாட்களை.. சிந்தித்துக் கொண்டே.. நேரத்தையும் நிந்தித்தான். .

அவள் வரும் வழியை.. வழிமேல் விழி வைத்து வரவேற்க..

நொடிப் பொழுதும் .. நீண்ட பொழுதாய்ச் சென்றது...

நீண்ட நாள் பிரிவு... மீண்டு நெருங்கி வருவதை எண்ணி உள்ளம் மகிழ்ந்தான்...

காலிங் பெல் அடித்தது.. கதவைத் திறந்தான்...

'வா... ரம்யா ...'

வந்தவள்... அறையை பார்த்தாள்.. அவனையும்.. அன்று பார்த்த அதே நிலவாய்.. அதே பார்வை... அதே கனிவு.. அவன் கண்களுக்குத் தெரிய..

'கார்த்தி... ரூமா அழகா நீட்டா தான் வச்சிருக்க... நீ மட்டுமா தங்கி இருக்கே..'

'ஆமாம்... . வந்து உக்கார்... பாத்து ரொம்ப நாளாச்சி.. அன்னிக்கே ரொம்பவும்
பேச ஆசைப்பட்டேன்.. ஆனா.. வேலையில இருந்ததால பேச முடியல..'

'நானும் உன்ன.. அங்க பார்த்ததுமே ரொம்ப ஷாக் ஆயிட்டேன் தெரியுமா...'

'சரி.. என்ன சாப்ட்ர காபி . கூல்ட்ரிங்க்ஸ்.. என்ன வேணும்'

'வெளிய பனியா கொட்டுது.. சூடா குடிச்சா நல்ல இருக்கும்.' சொன்னவள்..

'கார்த்தி.. நீ ஒண்ணும் பண்ண வேணாம்.. நானே உனக்கு .. காபி போட்டுட்டு எடுத்து வரேன்.. இன்னிக்கு நானே உனக்கு சமையல் பண்ணி தரப்போறேன்.. பாவம் ஹோட்டெல சாப்பிட்டு சாப்பிட்டு உனக்கு நாக்கு செத்து போய் இருக்கும்'

'எதுக்கு ரம்யா.. உனக்கு கஷ்டம்.. நாம ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம் '

'அய்ய.. இதுல என்ன கஷ்டம்.. இஷ்டப்பட்டு செஞ்சா.. எதுவும் கஷ்டமே இல்ல.. நீ பேசிட்டே இரு.. சமைக்கறது என்ன பெரிய கம்ப சூத்திரமா.. டெயிலியா சமைச்சு போடப்போறேன்.. இன்னிக்கு ஒரு நாள்.. அது கூட உனக்காக செய்யமாட்டேனா..'

சொன்னதோடு நில்லாமல் சமயலறைக்குச் சென்று.. காபி போடத் தயாரானாள்..

'எதுக்கு ரூம் எடுத்திட்டு கஷ்டப்படற கார்த்தி... பேசாம காலேஜ் ஹாஸ்டல்லே இருந்திடவேண்டியது தானே...'

'நீ சொல்றது கரெக்ட் தான்.. அங்க இருந்தபோது தான் ஒரு மோசமான விபத்து நடந்து போச்சு.. அத மறக்கத் தான் காம்பஸ் விட்டு வெளிய வந்திட்டேன்..'

'ஒ.. என்ன அப்படி நடந்தது..'

அவனுக்கு அன்று நடந்தவை எல்லாம் அவன் மனக்கண் முன் தோன்றி மறைந்தது.. கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு.. பேசத் தொடங்கினான்..

அதற்குள் .. ரம்யா காப்பியைப் போட்டு.. அவனுக்கும் தனக்கும் எடுத்து வர..

'சொல்ல வேணாம்னு நெனெச்சா சொல்லவேண்டாம்.. முதல்ல காபியை சாப்பிடு..'
கல்லூரி சேர்ந்தது... கெயிலை சந்தித்தது .. அனைத்தையும் வரி பிசகாமல் சொன்னான்.

அன்று ஒரு நாள்.. கல்லுரி முடிந்தவுடன்.. காலேஜ் காம்பசின் உள்ளே புல்வெளியில் நடந்து ஹாஸ்டல் நோக்கி வந்து கொண்டு இருந்தான்..

திடீரென்று கல்லூரி மாணவனைப் போன்ற தோற்றமளித்த வெள்ளைக்காரன்.. கார்த்தியின் எதிரில் தோன்றி..

'உன் நாட்டுக்கு உயிரோடு திரும்பும் எண்ணம் உனக்கு இல்லையா..'

'யார் நீ .. உனக்கு என்ன வேண்டும்...'

'என்னைப் பற்றி உனக்கு எதற்கு.. நீ கெயில் உடன் சுற்றுவதாக கேள்விப்பட்டேன்.. மறுமுறை உன்னைப் பார்த்தால்.. அப்புறம் நடப்பதே வேறு..'

'ஏய் ... அவள் என்னுடைய கல்லூரித் தோழி.. வேற எந்த தொடர்பும் இல்லை..'

பதில் சொல்வதற்குள் .. காணாமல் போய்விட்டான்..

இந்த விஷயத்தை கெயிலிடம் சொல்ல நினைத்து.. பின்னர்... மறந்து போய்விட... அந்த சின்ன அலட்சியம் ... அவள் உயிரையே பறித்து விட்டது..

'அவன் யார்... தெரிஞ்சிதா...'

'சொல்றேன்.. அதற்கு அப்புறம் ஒரு நாள்.. நான் மரத்தடியில் உள்ள பெஞ்ச்சில் உக்காந்து படிச்சிட்டு இருந்தேன்... அப்ப கெயில் வந்தா... எதோ பாடத்தில சந்தேகம் இருக்குதுன்னு என்கிட்டே பேசிட்டு இருந்தா.

அவ பேசிட்டு இருக்கும் போதே... அந்த மரத்தில் இருந்து.. எதோ பூச்சி.. என் கண்ணு விழுந்து... எனக்கு ஒரே கண் எரிச்சல் ஆயிடுச்சி...
கெயில் என் கிட்ட வந்து.. என் கண்ண திறந்து.. என்னன்னு பார்த்திருக்கா... அப்படியே என் தலையை சாய்த்து.. தன வாயால் ஊதா.. அது தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு வேறு விதமாய் தெரிந்து இருக்கு வேண்டும்.. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.. டுமீல்.. டுமீல்.. சத்தம்.. அப்படியே சுருண்டு என் மடியிலே விழுந்திட்டா.... அவ முதுல இருந்து ஒரே ரத்தம்.. அவளே அப்படியே பெஞ்ச்சுல படுக்க வச்சி.. யாருன்னு பாக்கறதுக்குள்ள..அன்னிக்கு என்ன மிரட்னவன் ஓடிட்டு இருந்தான்.. அவன பிடிக்கவா... கெயில தூக்கரதான்னு ஒரே குழப்பம்... அதுக்குள்ளே.. மறுபடியும் டுமீல்ல்னு சத்தம்..

அவனும்.. தன்னையே சுட்டுக்கிட்டான்..

கெயில தூக்கி..ஹாஸ்பிட்டல் கொண்டு போறத்துக்குள்ள .. அவ இறந்திட்டா

இப்படி ரெண்டு உயிர்.. என்னால தான் போச்சி நெனெச்சா.. எனக்கு தூக்கமே வரல..

'அவன் யாருன்னு தெரிஞ்சுதா..'

'கெயில் ஏற்கனவே சொல்லிருக்கா.. அவளோட பாய் பிரெண்டு தன்னுடன் மறுபடியும் இணைய முயற்சி பண்றான்னு.. '

அவ செத்த ஒரு வாரம் வரைக்கும்.. எனக்கு ஒண்ணுமே பிடிக்கல.. அப்புறம்.. அங்க இருந்தா அவ நினைப்பு அந்த பயங்கர நிகழ்ச்சி படிக்கும் போது, நடக்கும் போது, கனவுல.. வந்து கிட்டே இருந்தது . காம்பஸ் விட்டு வெளியே போனா.. கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகட்டுமேன்னு இங்க வந்தேன்... அப்படியே பார்ட் டைம் வேல செஞ்சா.. நாலு பேர பார்த்த மாதிரி இருக்கும்னு தான் வேலைக்கு போயிட்டு வரேன்..'

இங்க இருக்கவங்க எல்லாம் .. ரொம்ப கிரேசி இல்ல... '

'ஆமா.. கார்த்தி.. இங்க இருக்கறவங்க கொஞ்சம் பயித்தியம் பிடிச்சவங்க தான்... ஆசைப்பட்டது கெடைக்கலான. உடனே.. துப்பாகியால சுடறது .. இங்க சர்வ சாதாரணம்..'

'என் சோகக் கதையை சொல்லி உன்ன போர் அடிச்சிட்டேனா..'

அவன் பேசிக்கொண்டே இருக்க.. சமையலை செய்து கொண்டு இருந்தாள்..

'கார்த்தி உனக்கு என்ன பிடிக்கும்.. சொல்லேன் .. இன்னிக்கு உனக்கு பிடிச்சத மட்டும் செய்யப் போறேன்.. '
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty Re: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by udhayam72 Mon Jun 10, 2013 4:09 pm

'அப்புறம்.. உங்க வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க..'

'எல்லாம் சௌக்கியம் தான்...'

அனைத்தையும் சொன்னவன்.. கீர்த்தனை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை..

'எனக்கு உன்னோட கல்யாணம் நின்னது தெரிஞ்சதும் ரொம்ப வேதனைப்பட்டேன். ஏன் என்னாச்சி ரம்யா .'

'இதுக்கு போய் ஏன்.. வேதனப்படரே... போகட்டும்... எனக்கு அவன பிடிக்கல..'

'நல்லாதானே இருந்தீங்கன்னு சொன்னே..'

'அவன் ஆரம்பத்துல நல்லவனாதான் இருந்தான்... போகப் போகா.. என்ன ரொம்ப கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சிட்டுட்டான்..

அவன் கூப்பிட்டா... நான் உடனே அவன் இருக்கிற எடத்துக்கு போகணுமாம்.. கொஞ்சம் லேட்டானாலோ . இல்ல.. போகமா இருந்தாலோ..

அசிங்கமா பேசிடுவான்.. பொறுத்து.. பொறுத்து... அப்புறம் தான் வேண்டாம்னு
விட்டுட்டேன்...

சமயத்தில.. கொஞ்சம் லேட்டா வந்தா.. எவன் கூட கொஞ்சிட்டு வருவேன்னு கேப்பான்.. அது கூட பராவாயில்ல... உனக்கு தான் தெரியுமே.. நான் சோசியல் சர்வீஸ் பண்ணறதுல இஷ்டம்னு .. எங்கயாவது வெளியே போயிட்டு வந்தா.. எவன் கூட படுத்து எழுந்திட்டு வரேன்னு கேப்பான்..

இதுக்கு மேல.. அவன் கூட பழகறதையே நிறுத்திட்டேன்.. நல்ல காலம் கல்யாணத்துக்கு முந்தியே தெரிஞ்சதுன்னு ... தலையை முழுகிட்டேன்... அதனாலதான்.. பெங்கலூரில் இருக்க பிடிக்காம.. இங்க வந்திட்டேன்..

'கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.. ரம்யா..அடுத்து என்ன பண்ணப் போற.. '

'எனக்கு வாழ்க்கை மேலே ஒரு வெறுப்பு வந்திடுச்சி.. தனியாவே இப்ப இருக்கிற மாதிரியே இருந்திட்டு போய்டலாம்னு தோணுது...'

பேசிக்கொண்டே.. சமைத்து முடித்து விட்டாள்..

இருவரும் அமர்ந்து சாப்பிட்டு.. அன்று முழுவதும் நடந்தவைகளை எல்லாம் பேசி..
'சரி.. கார்த்தி.. உன்கிட்டே பேசினதால .. கொஞ்சம் மனசு லேசாகிப்போச்சு.. இங்க தானே இருக்கப் போற.. அடிக்கடி மீட் பண்ணலாம்.. நான் கெளம்பறேன்.. பழச எல்லாம் நெனெச்சா.. மனசு கஷ்டமா இருக்கு...

இறந்ததை மறப்போம்
இழந்ததை உயிர்ப்போம்
நிகழ்வை நினைப்போம்
நடப்பவை கொள்வோம்
இனி
இதுவும் கடந்து போகும்...!

கார்த்தி சொல்லச் சொல்ல..

'என்ன கார்த்தி.. பிலாசபி எல்லாம் சொல்ற.. '

'இது பிலாசபி இல்ல..இது தான் வாழ்க்கை..'

'ஒண்ணு சொல்லவா. ..கார்த்தி..'

'என்ன..'

'கார்த்தி.. சில சமயத்துல... உன்ன மிஸ் பண்ணிட்டேனோன்னு என் மனசுக்குத் தோணுது...' சொன்னவள்..

'பாய்... சி யு நெக்ஸ்ட் டைம்..' கை அசைத்து விடைபெற்றுச் சென்றாள்.

அவள் எதற்காகச் சொன்னாள்.. மனதில் குழப்பம் உண்டாயிற்று... ஒரு வேலை நான் கீர்த்தானவை பற்றி சொல்லாமல் விட்டது தப்போ..

அன்று பிரிந்த நட்பு.. இன்று முதல் மீண்டும் பூக்கத் தொடங்கியது... காலச்சக்கரம் உருண்டு ஓடியது.. சக்கரம் இல்லாமலே..

நட்பாய் ஆரம்பித்த காதல் முறிந்து.... மறந்து.. பிரிந்து ... மீண்டும் என் மனதில் காதல் துளிர் விடுகிறதோ... மனமோ புட்பால் ஆடத் தொடங்கியது..

மதியோ மனதில் வேறு கணக்கு போட.. வாழ்க்கையில் விதி விளையாடத் தொடங்கியது.. விதியை மதியால் வெல்லலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டான்.. ஆனால் அந்த மதியை நடத்துவதே விதி என்பது அறியாமல்..

அங்கே பார்
காதலும் நட்பும்
கைகொட்டிச் சிரிப்பதை - நாம்
உரையாடிக் கொண்டிருக்கிறோமாம்
மௌனமொழியால்
யார் அதிக நேரம்
மௌனத்தில் இருப்பதென்று



நட்பும் காதலும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை, ஒரு நூலிழை அளவு தான் வித்தியாசம். தொடங்கப்பட்ட நட்பு சில சமயம் காதலாகலாம், காதலித்த பின்னர் சில சமயம், பல காரணங்களால் நட்பாய் தொடரலாம்.

இரண்டும் அன்பின் வெளிப்பாடு, பாசத்தின் உச்சம், நேசத்தின் எச்சம், உணர்வுகளின் ஒரு வடிவம்.

ஒரு கவிஞர் சொல்வார்..

"நட்பையும் மகிழ்ச்சியையும்
இரட்டிப்பாக்க அதை
அடுத்தவர்களிடம் கொடுத்துவிடுங்கள்"

ஆம்.. உண்மைதான்.. அதுவே ஒரு பெண்ணிடம் நட்பு கொள்வது.. மயில் இறகை போன்று மென்மையானது..


பார்த்தவுடன் வருவது காதல் அல்ல... அது ஒரு இனக்கவர்ச்சி.. நிலையானதும் அல்ல... பழகி.. இருவரும் ஒருத்தரை ஒருத்தர் மனம் விட்டு பேசி.. புரிந்து.. நிறை குறைகளை ஆராய்ந்து.. விட்டுக் கொடுத்து.. இரு மனம் இணைந்து...ஒரே மனமாய் ஆகும் காதலே... நிலையான காதல்.. அதுவே என்றும் அழிவில்லாத காதல்.

உணர்ச்சியால் வரும் காதலும் காதல் அல்ல.. புணர்ச்சியை மட்டுமே விரும்பி காதல் கொள்வதும் காதல் அல்ல.. காதல், உணர்ச்சியும் விவேகமும் சேர்ந்து வெளிப்படுத்துவதே.

ஒரு பெண்ணை கண்டவுடன் கண்ட இடங்களில் கண் மேய்வதும், அவள் மேல் கை வைக்க வேண்டும் என்று மனதில் தோன்றுவதும் ஒரு உணர்ச்சியின் உந்துதல் தானே ஒழிய .. அது உண்மையான காதலும் அல்ல.. அது தோல்வியையே தழுவும்.

சுய நலனை மட்டுமே குறிக்கோளைக் கொண்டு இருக்கும் எந்த ஒரு ஆண் மகனையும் பெண்கள் விரும்புவதில்லை, எவன் ஒருவன் பெண்ணிற்கு மதிப்பு அளித்து அவளுடைய உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் மரியாதை கொடுக்கிறானோ, அவனையே எந்த பெண்ணும் விரும்புவாள்.

முதல் சந்திப்புக்கு பிறகு, கார்த்தியும் ரம்யாவும் பல தருணங்களில் சந்தித்துக் கொண்டனர், அந்த சந்திப்பு எல்லாம், இருவர் உள்ளங்களின்... ஏக்கங்களின்.. தோல்விகளின் .. வடிகாலக அமைந்ததே தவிர, முடிவுகளின் தீர்வாக அமையவில்லை.

'ரம்யா... இன்னும் ஒரு மாசத்தில இந்தியா திரும்பப்போறேன்...'

'ரொம்ப சந்தோஷமா இருக்கு கார்த்தி... இந்தியாவில இருந்து வந்து .. படிச்சி.. இங்கேயே தங்காம.. மறுபடியும் இந்தியா போய்த் தன் திறமையை உபயோகப்படுதிக்கப் போறேன்னு சொன்னது"

'அது தான் சரியான முடிவு... நெறைய பேரு இங்க படிச்சிட்டு .. அந்த திறமையை பணத்துக்கும், வசதிக்கும் ஆசைப்பட்டு இங்க பயன்படுத்திக்கரதுல என்ன பிரயோஜனம்.. நம்ம நாட்டுக்கு அத உபயோகித்தா, நாடு முன்னேற்றத்துக்கு பயன்படும் இல்ல..'

'கார்த்தி.. நான் உன்ன நெனெச்சி ரொம்பப் பெருமைப் படறேன்... உன்னமாதிரி எல்லாரும் இருந்தா .. நம்ம இந்தியா எப்பவோ வல்லரசு ஆகி இருக்கும்...'

'உண்மை தான்.. நம்ம நாட்டை பத்தி நாம குறையை சொல்றேம்மே தவிர... நாம் அத சரியா பயன்படுத்தி இருக்கமோன்னு நெனெச்சி பாக்கானும்..'

நம்ம திறமையை அமெரிக்காவுக்கு உபயோகப்படுத்துகிறோமே தவிர.. நம்மால் ஒரு கண்டுபிடிப்பையும் ஒரு புதிய பொருளையும் கண்டுபிடிக்க முடிஞ்சுதா.. எந்தப் பொருளாவது இந்திய கண்டுபிடிப்பா இருக்கா... அவனுக்கு அடிமையா வேலை செஞ்சி செஞ்சி நாம நம்ம மூளையை அவனுக்கும் அடமானம் வச்சிட்டோமொன்னு தோணுது..நாமா தான் அத மாத்தணும்.. '

அவன் பேசப் பேச அவனையே வியப்புடன் பார்த்தாள் ரம்யா..
'கார்த்தி.. மறுபடியும் சொல்றேன்.. உன்ன நெனெச்சி பெருமைப்படறேன்.. உன் கூட நட்பா இருக்கிறது பெருமையாவும் இருக்கு'

அது என்னமோ தெரியவில்லை, தான் விரும்பும் பெண்ணோ அல்லது தன்னை விரும்பும் ஒரு பெண்ணுடனோ தன் கவலைகளையும் வெற்றிகளையும் பகிரும் போது.. அதற்கு அவர்கள் ஊக்குவிப்பதும் பாராட்டுவதும் ஒரு வித உந்து சக்தி தருகிறது..மென் மேலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் தோன்றத்தான் செய்கிறது.. இதையே ஒரு ஆணுடன் பகிர்ந்து கொண்டால்.. அவனின் பொறாமை என்ற கண் விழுவது மட்டும் அல்ல. மேலும் எப்பொழுது இவன் வீழ்வான், பார்த்து ரசிக்கலாம், கை கொட்டி சிரிக்கலாம் என்ற எண்ணமே அந்த ஆண் மகனின் மனதில் தோன்றி மறையும்.. வளரவோ வாழ்த்தவோ உயர்த்தவோ அது உதவாது...

அந்த சக்தி பெண்களுக்கு தான் இருக்கிறது.. அதை கார்த்தி நன்கு அறிந்திருந்தான்.

'நீ என்ன முடிவு எடுத்திருக்க... எப்ப இந்தியா திரும்பப் போற.. '

'எனக்கு ப்ராஜெக்ட் இருக்கிற வரைக்கும் இருப்பேன்.. அப்புறம் மறுபடியும் பெங்களூர் தான்..'

'உன் கல்யாணத்த பத்தி...'

'அது முடிஞ்சு போன ஒண்ணு.. இனிமே எனக்கு கல்யாணம் காட்சி எதுவும் நம்பிக்கை இல்ல.. ஆசையும் இல்ல.. இருக்கிற வரைக்கும் எல்லார்க்கும் நல்லது பண்ணனும்னு ஆசை... அதான்..'

'நம்ம பிரெண்ட்ஸ்ஸா இருக்கலாம் இல்ல..'

'அதுல என்ன தப்பு இருக்கு..'
கடைசிவரைக்கும் பிடி கொடுக்காமல் அவள் கூற..

கார்த்தியின் மனமோ மறுபடியும் ரம்யாவுடன் இணைவதை நினைக்க, மறுபுறமோ கீர்த்தனா அவனையே கணவனாய் நினைத்து திளைக்க..

ரம்யாவின் மனது என்ன நினைக்கிறது என்பதை யாரும் அறிய முடியவில்லை.

ஒரு நிலையின்றி கார்த்தி தவிக்க... காலதேவனும் .. தன் கடமையை வேகாமாய் செலுத்த..

காலமும் ஓடியது.. கடைசி செமஸ்டர் தேர்வும் வந்தது.. அனைத்தையும் மறந்து கவனத்தை பாடத்தில் மட்டும் கார்த்தி செலுத்த.. இன்னும் ஒரே மாதம் ... தன் படிப்பு முடிந்து இந்தியா திரும்ப இருக்கையில்...

மறுபுறம் புதுச்சேரியில்...

கிச்சனில் கீர்த்தனாவின் அம்மா மிகவும் சுறுசுறுப்பாக சமையலில் ஈடுபட்டிருக்க.. அங்கிருந்து வரும் வாசனை கீர்த்தனாவின் மூக்கைத் துளைத்தது.. அந்த வாசனை அவளை சமையல் அறைக்குள் இழுத்தது..

'அம்மா... உன்னோட கேசரி வாசனை அப்படியே அள்ளிட்டு போகுது'

சொன்னவள்.. தட்டில் வைத்திருந்த கேசரியை எடுத்து சாப்பிடத் தொடங்கினாள்.

'போகும் போகும்டி .. நான் ஒருத்தி மட்டும் இங்க தனியா கிச்சனில வெந்திட்டு இருக்கேன்... கொஞ்சம் கூட மாட வந்து ஒத்தாசைப் பண்ணக்கூடாதா..பின்னாடி உனக்கும் உபயோகமா இருக்கும் இல்ல.. '

'என் வயசுல.. நீ இந்த மாதிரி வேல செஞ்சியா என்ன..'

'ஒத்தாசைக்கு வாடின்னு சொன்னா... பதிலுக்கு கேள்வியா கேக்கற.. அம்மா தாயே.. நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்.. சீக்கிரம் குளிச்சிட்டு.. போய் நல்ல சேலையா கட்டிட்டு வா.. கார்த்தி வீட்ல இருந்து வரப்போறாங்க..'

'வரட்டுமே அதுக்கு என்ன.. நான் இப்படியே இருந்திட்டு போறேனே..'

'இந்த டிரஸ்ஸிலா.. '

அவள் போட்டிருந்த முக்கால் பாண்ட்டும் ... ஸிலீவ்லெஸ் பனியனைனும் பார்த்து கேட்க...

'இதுக்கு என்ன குறைச்சல்..நான் ஏற்கனவே கார்த்தி அம்மாவ பார்த்திட்டேனே...இது சும்மா பார்மாலிடிக்குத் தானே..'

'நீ நான் சொன்னா கேக்க மாட்ட.. இரு அப்பாவ கூப்பிடறேன். '

அதற்குள் கீர்த்தானவின் அப்பா.. சமையல் அறையில் அம்மாவும் பெண்ணும் பேசும் சத்தத்தை கேட்டு உள்ளே வர..

'என்ன இங்க சத்தம்..'

'உங்க சீமந்திர புத்திரி.. அவுங்க வரும் பொது.. இப்படியே தான் இருப்பாளாம்..'

'என்னம்மா அம்மா சொல்றது உண்மையா..'

'நான் சொல்றேன்.. அவ கிட்ட போய் கேக்கறிங்க... ஒரு சேலைய கட்டிட்டு வாடின்னு சொன்னா.. கட்ட மாட்டாளாம்'

'சரி..குழந்த தானே.. அப்படியே விட்டுப் போயேன்..'

'குழந்த மாதிரியா காரியம் பண்ணி இருக்கா..ஏங்க அவ தான் தெரியாம பேசறா.. உங்களுக்கு அறிவே இல்லையா..'
இதற்கு மேல் ஏதாவது பேச.. தன்னையும் ஒரு பிடி பிடித்து விடுவாள் என்று நினைத்தவர்

'அம்மா சொல்றதும் கரெக்ட் தான்.. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் .. அவுங்க வந்து போறவரைக்கும் சேல கட்டிக்கொம்மா..'

'என்னப்பா... சேம் சைடு கோல் போடறிங்க..'

'பார்த்திங்கிலா. உங்க பொண்ண.. ' தன் கையில் வைத்திருந்த கரண்டியால் கீர்த்தனாவை அடிப்பது போல கையை ஓங்க... இப்படியும் அப்படியும் அம்மாவுக்கு போக்கு காட்டி ஓடி தன் அறைக்குச் சென்று மறைந்தாள்.

'ஏங்க.. அவங்க வர்ர நேரம்... எதுக்கும் எங்க வந்திட்டு இருக்காங்கன்னு போன் போட்டு கேளுங்க.. '

கீர்த்தனாவின் அம்மா சொல்ல...

கார்த்தியின் பெற்றோர்.. முறைப்படி பெண் கேட்டு புதுச்சேரி செல்கின்றனர். இன்னும் ஒரு மாதத்திற்குள் கார்த்தி அமெரிக்காவில் இருந்து திரும்புவதால் திருமணத்திற்கான முன்னேறப்பாடுகளை முடுக்கி, அவன் வருவதற்கும் திருமணம் நெருங்குவதற்கும் சரியாக இருக்கும் என்று திட்டம் போட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.


'நேரா நம்ம வீட்டுக்குத் தானே வரப்போறாங்க...எதுக்கு அவசப் படர..'

'அவுங்களுக்கு வழி தெரியுமோ இல்லையோ.. இல்ல தெரியாம எங்கயாவது சுத்திட்டு இருக்கப் போறாங்க.. சும்மா கேளுங்க..'

'சரி..'


கேட்டார்.. வந்து கொண்டிருப்பதகாவும்.. இன்னும் சில நிமிடங்களின் அங்கு இருப்பதாவும் தெரிவித்தார் கார்த்தியின் அப்பா.

சொன்னது போல ... அடுத்த அரை மணி நேரத்திற்குள்.. வீட்டின் எதிரே கார் வந்து நிற்க...

காரிலிருந்து கார்த்தியின் அப்பாவும்.. அம்மாவும் காரிலிருந்து இறங்கி வந்தனர்..


'வாங்க.. வாங்க. ' கையைக்கூப்பி வரவேற்றார் கீர்த்தனாவின் அப்பா.. பின்...


'தனம்.. அவங்க வந்திட்டாங்க.. ' சமையல் அறையிலிருந்து வெளிய வந்த கீர்த்தனாவின் அம்மா..


'வாங்க.. வாங்க.. ' வரவேற்க..


வந்தவர்கள் சோபாவில் அமர.. நான்கு பெரும் ஒருவர் முகத்தை பார்த்தபடி இருக்க...

'பயணம் எல்லாம் சௌகரியா இருந்ததா.. ' முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று கீர்த்தனாவின் அப்பா ஆரம்பிக்க..

'எல்லாம் நல்லபடியா இருந்தது.. வர்ற வழியில பூ, பழம் வாங்கற எடத்துல தான் கொஞ்சம் டைம் ஆயிடுச்சி..'

கார்த்தியின் அப்பா கூறி, தன் மனைவியைப் பார்த்து..

'பையிலிருந்து.. அந்த பூ, பழம், ஸ்வீட் எல்லாம் எடுத்து தட்டில வச்சு கொடு'

'எதுக்குங்க ... இதெல்லாம்..'

'சம்பிராதயம்ன்னு ஒண்ணு இருக்குதில்ல.. '

கார்த்தியின் அம்மா தட்டை கீர்த்தனாவின் அம்மாவிடம் கொடுக்க.. பெற்றுக்கொண்டார்..

'எனக்கு ஒரே பையன் கார்த்தி, சென்னையில தான் ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேல செஞ்சான்.. இப்ப எம்பிஏ படிக்க அமெரிக்கா போய் இருக்கான்... இன்னும் ஒரு மாசத்தில படிப்ப முடிச்சிட்டு திரும்ப போறான்..

எனக்கு சென்னையில சொந்தமா ஒரு கம்பனி இருக்கு .. அவன் வந்ததுக்கு அப்புறம் அந்த கம்பனியின் பொறுப்ப எல்லாம் அவன் கிட்டத்தான் ஒப்படைக்கப் போறேன் ..'

சுருக்கமாக ஆனால் நறுக்கு தெரித்தால் போல தன் குடும்பத்தைப் பற்றி கூறினார்..

'ரொம்ப சந்தோசம்.. ' என்றவர் தன் குடும்பத்தைப் பற்றியும் கீர்த்தனா அப்பா கூற..

'கார்த்தி - கீர்த்தனாவின் கல்யாணத்திற்கு உங்களுக்கு சம்மதம் தானே..'

'குடும்பம் நடத்தப் போறவங்க அவங்க ரெண்டு பேரும் தான் .. அவுங்களுக்கே பிடிச்சு. போச்சு.. அடுத்து நடக்க வேண்டியத பார்க்க வேண்டியது மட்டும் தான் நம்ம வேல..' என்றவர்.
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty Re: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by udhayam72 Mon Jun 10, 2013 4:14 pm

தனம்... கீர்த்தனவா அழைச்சிட்டு வா'

தனம் மாடிக்கு சென்று கீர்த்தனாவைப் பார்க்க... பட்டு சேலை உடுத்தி. தன்னை அலங்கரித்துக் கொண்டு, அளவான மேக்கப் போட்டு, கண்ணுக்கு மை வைத்து , தலை நிறைய பூவும், புடவைக்கு மாட்ச்சாக பொட்டும், இடையில் ஒட்டியாணமும், கழுத்தில் சின்ன நெக்கலஸ் அணிந்து அழகு பதுமையாய் இருக்க... தன் கண்ணே பட்டு விடும் என்று கையாலே அவளுக்கு திருஷ்டி சுற்றி... ஒரு சின்ன கருப்பு மையை தன் கையில் எடுத்து அவளின் கன்னத்தில் ஓரத்தில் இட்டாள்..

'கீழ அவங்க வந்திருக்காங்க... வந்தவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு'


'சரிம்மா'


கீழே வந்தவள்.. அவர்களுக்கு வணக்கம் சொல்ல..

'வாம்மா கீர்த்தனா .. இங்க வந்து பக்கத்துல உக்கார்'


கீர்த்தனாவை அருகில் அழைத்து தன் அருகே அமரச் செய்தாள் கார்த்தியின் அம்மா..

பின்னர் சம்பிரதாயமாக... பேச்சு கொடுக்க..

அதற்குள்.. தனம் ஒரு தட்டில் காபியை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்து, பின்னர் தனித்தனி தட்டில் கேசரி, மிச்சர் கொண்டு வந்து கொடுத்தாள்.

சிறிது நேரம் மற்ற விவரங்களைப் பேசிவிட்டு..

'ஒரு நல்ல நாள் பார்த்து.. கல்யாண நிச்சியத்தையும்.. கல்யாண நாளையும் குறித்து சொல்லுங்க.. ஒரே சமயத்து வச்சிகிட்டாலும் எங்களுக்கு சம்மதம் தான்.. உங்க சௌகரியப் படி செய்யுங்க..'


'அதுக்கென்ன.. இன்னிக்கே ஜோசியர பாத்து நாள் குறிச்சி தகவல் சொல்றேன்..'


'சரிங்க.. அப்பா நாங்க கெளம்பறோம்..'

'சாப்பிட்டு போங்க...'

'கண்டிப்பா. பையன் வந்தப்பறம் ஒரு நாள் வந்து சாப்பிட்டு போறோம்'

அவர்களை கார் வரை கீர்த்தனாவின் அப்பாவும் அம்மாவும் வந்து வழி வழியனுப்பி வைத்தனர்...

அவர்கள் சென்ற பிறகு.. அன்று இரவு கீர்த்தனாவுக்கு தூங்கவே பிடிக்கவில்லை... மனம் கார்த்தியையே சுற்றி சுற்றி வந்தது. இன்னும் சொல்லப் போனால் தூக்கமே வரவில்லை.. மிகுந்த நேரத்திற்கு பிறகு... தூங்கிப் போகிறாள்.

தூக்கத்தில் கனவு..

கனவு ஆசையின் விரிவு, அது ஒரு அதி அற்புதமான உணர்வு, ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் காணுகின்ற கனவு, நிறைவேறாத ஆசைகளை கனவு மூலம் தீர்வு காணுவதில் தான் என்ன ஒரு சுகம்.
கீர்த்தானவின் கனவோ அரைகுறைத் தூக்கத்தில் வரும் கனவல்ல... அது நினைவின் எதிரொலி, ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவு என்றுமே பலிக்கும், அது எப்பொழுதும் அதிகாலை வருவதால் தான் அதிகாலை கனவு பலிக்கும் என்றும் மேலும் ஆழ்மன நினைவுகளுக்கும் கேள்விகளுக்கும், கனவு சொல்லும் பதில் என்றார்கள்.


கீர்த்தானவின் கனவோ ஆசையின் உச்சம், கார்த்தியை மணவாளனாக் காண்கிறாள், தன் கனவை தோழியிடம் இப்படி கூறுகிறாள்.. கலியுக ஆண்டாளாய்.. கார்த்தியை ஆளப்போகிறவள்.. எப்படி...

ஆயிரம் யானைகள் சூழ
பாயிரம் பாடி பருவமங்கையர்
தீஒளி கையில் ஏந்தி
பூரண பொற்குடம் நேர்கொள்ள
மாயக் கண்ணன் மதுரை மன்னன்
நாரண நம்பி - என் அடிதொட்டு
முடி வரை அதிர்ந்து போக
அதிரடியாய் என்னுள் புகுந்து - என்
கைத்தலம் பற்றக்
கனாக் கண்டேன் தோழி...!

ஆம், அன்றைய ஆண்டாளின் கனவு, பக்தியின் வெளிப்பாடு, அது ஒரு இலக்கியம், ஏக்கங்களின் விரிவு.. கீர்த்தனாவின் கனவோ... உண்மையின் உரைகல்.. நிகழ்காலத்தின் நிதர்சனம்.

தலைவனின் பிரிவை எண்ணி தலைவி பசலை நோயால் துன்புருவாலாம்... அது சங்க காலம்... இங்கு மாலை சூட வரும் மணாளனை எண்ணி காதல் நோயால் துன்புறுகிறாள் தலைவி..
இன்னும் இரண்டு வாரங்களின் கீர்த்தனாவின் கைத்தலம் பற்ற மாயக் கண்ணன் வருவதை அனைவரும் எதிர் நோக்கி காத்திருக்க... கார்த்தி திரும்பும் நாளும் வந்தது...

பூச்செடிக்கு அருகில்
செல்லவேண்டாம் என்றேன்
கேட்டாயா ... பார்....
எல்லா பூக்களும் உன்னையே
முறைக்கிறது
தங்களை யாரும் இனி
கவனிக்க மாட்டார்கள் என்ற
ஏக்கத்தோடு


கார்த்தி.. தன்னுடைய படிப்பை முடித்து அன்று மாலை இந்தியா புறப்படத் தயாரானான். அதற்கு முன், ரம்யாவுக்கு ஒரு போன் செய்ய விரும்பி, இன்று எப்படியும் தன் திருமண விஷயத்தை கூறிவிடவேண்டும் என்று நினைத்தவனாய்.. .

'ஹலோ.. ரம்யா...'

'ஹாய். கார்த்தி.. .'

'ரம்யா. .. இன்னிக்கு ஈவனிங் பிளைட்ல இந்தியாவுக்கு கெளம்பறேன்..'

'சரி.. கார்த்தி.. ஹாவ் எ நைஸ் ஜர்னி .'

'தேங்க்ஸ் .. ரம்யா.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...'

'என்ன ...'

'எங்க வீட்ல எனக்கு பொண்ணு பார்த்திருக்காங்க.. அடுத்த மாசம் கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு'

'ஒ.. கங்ராட்ஸ். . என்ன திடீர்ன்னு.. எனக்கு சொல்லவேயில்ல'

'எனக்கே தெரியாது... நேத்து தான் அப்பாவும் அம்மாவும் சொன்னாங்க'

பொய் சொன்னான்.. இதுவரைக்கும் அவளிடம் சொல்லக்கூடதேன்றும்.. தெரியக்கூடாதென்றும் நினைத்த ரகசியத்தை இன்று சொன்னான்..

'பொண்ணு என்ன பண்றா .'

'பொண்ணு பேரு கீர்த்தனா.. சாப்ட்வேர் கம்பெனியில வொர்க் பண்றா.... நான் இன்விடடேஷன் அனுப்பறேன்.. அவசியம் வந்திடனும்.'

'கண்டிப்பா. . உன்னோட மேரேஜ்க்கெல்லாம் இங்க தான் இருப்பேன்..'

'ஓகே. . ரம்யா..'

'பெங்களூர் வந்த மீட் பண்ணலாம்'

'கண்டிப்பா ... மீட் பண்றேன்..'என்ன மறந்திடாதா...'

'அதெப்படி மறக்க முடியும்.. '

'ஓகே பாய் ரம்யா..'

'பாய்..கார்த்தி'

போனை வைத்தவனுக்கு அப்பொழுதுதான் நிம்மதி வந்தது. ரம்யாவுடனான் நட்பு மீண்டும் தொடரவே விரும்பினான் கார்த்தி.

எனக்காக நீ பேச
உனக்காக நான் பேச
நமக்காக பேசியது
நம் நட்பு...!

ரம்யாயுடனான நட்பு .. தன் திருமணத்திற்குப் பின் பெரிய சிக்கலை உண்டு பண்ணும் என்பதை அவன் உணரவில்லை.

சென்னை பன்னாட்டு விமான முனையம்.. அதிகாலையிலே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது... வெளிநாட்டு விமானங்களின் வருகையால் எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம்.

கார்த்தியின் அம்மாவும் அப்பாவும்... தங்கள் மகனை இரண்டு வருடப் பிரிவுக்குப் பின் காண வெளியே காத்திருந்தனர்.. கண்களில் பூ பூத்திருந்தனர்.. வரும் வழியை நோக்கி விழியை வைத்திருந்தனர்.. .

இமிக்ரேஷன் செக்கிங் லக்கேஜ் செக்கிங் அனைத்தும் முடித்து கார்த்தி தன் லக்கேஜ்யுடன் வெளியே வர..

அம்மாவும் அப்பாவும் அவனை அழைத்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

'என்ன கார்த்தி... ரொம்ப எலச்சி போய்ட்ட.'

'அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா... பாத்து ரெண்டு வருஷம் ஆகுதில்ல . . அதனால அப்படித் தோணுது..'

'கார்த்தி... எனக்கு ரொம்பா சந்தோஷமா இருக்குப்பா.. நான் படிக்கனும்னு ஆசைப்பட்டத... நீ படிச்சி முடிச்சிட்டு வந்திட்டியேன்னு நெனெச்சு... . எனக்கு பெருமையா இருக்கு.. '

பெற்றோரின் வரவேற்பில் அவன் திக்கு முக்காடிப் போனான்.

'சரி.. சரி... போய்.. குளிச்சிட்டு வா... உனக்கு பிடிச்ச .. டிபன் பண்ணி எல்லாம் வச்சிருக்கேன்..'

நீண்ட நாளைக்குப் பிறகு.. தன் அம்மாவின் கையால் செய்த உணவைச் சாப்பிட்டு.. சிறிது நேரம் தன் அமெரிக்கா அனுவபவங்களை எல்லாம் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டு.. தன் அறைக்குச் சென்று தூங்கச் சென்றான்..

நீண்ட நேரம் அசதியிலும் பயண களைப்பிலும் தூங்க... மாலை ஆகி இருந்தது.. கீர்த்தனா நினைவு வர... அவளை சந்திக்க மனம் விரும்பியது.. அவளுக்கு என்று பிரத்தியேகமாக ஒரு சில பொருள்களை அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்துள்ளான் அதை கொடுத்து மகிழ்விக்கவேன்று என்ற ஆசையும் தோன்றி.. அதனை மறக்காமல் தன்னுடன் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.. அவளை எப்பொழுதும் சந்திக்கும் இடத்திலே சந்திக்க வருவதாக ஏற்கனவே போனில் கூறி இருந்தான்.

இரண்டு வருட பிரிவுக்குப் பின் கீர்த்தனா அவளைப் பார்க்க.. அவனும் பார்க்க..
பிரிந்தவர்கள் கூடியதால் பேச வார்த்தையே வரவில்லை... அவள் கண்கள் கலங்கியது..

'கீர்த்தி... எப்டி இருக்க.. '

''ம்ம்...இருக்கேன்..' என்றவள்... தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள், அவளை சமாதானம் செய்வதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

'அதான் .. வந்திட்டேன் இல்ல.. எதுக்கு அழுவுற...'

'அப்ப பார்த்தா கீர்த்தனாவ நீ.. எப்படி பேசுவா.. நீயா இப்படி அழுமூஞ்சியா மாறிட்ட'


கார்த்தியும் முயன்ற அளவுக்கு தனக்கு தெரிந்த ஜோகுக்களை சொல்லியும்.. அவளை பழைய படி கொண்டு வர முடியவில்லை...'

'இனிமே.. என்ன விட்டு போகதடா... போதும்... இந்த ரெண்டு வருஷம்..'
'சரி.. சரி.. கல்யாணத்துக்கு . அப்புறம் உன் கூடத்தான் இருக்கப்போறேன் .'
ஒருவாறு சமாதான் செய்து கொஞ்சம் கொஞ்சமாக அவளை தேற்றினான்.

ஒரு வார ஓய்வுக்குப் பிறகு... ஒரு நாள் கார்த்தியின் அப்பா...

'கார்த்தி.. வர்ற புதன் கிழமை.. நல்லா நாள்... அன்னிலிருந்து நம்ம கம்பெனிக்கு உன்ன கூட்டிட்டு போய்... உனக்கு என்னோட பொறுப்ப ஒப்படைக்கலாம்ன்னு இருக்கேன்.. என்ன சொல்ற..'

'சரிப்பா.. ஆனா.. நீங்களும் என் கூட இருக்கனும்பா.. நீங்க எப்படி கம்பெனிய நடத்துரிங்கன்னு கொஞ்ச நாள் நானும் பாக்கறேனே.. உங்க அனுபவம் எனக்கு ஹெல்பா இருக்கும்..'
'கண்டிப்பா.. நீ தனியா நடத்தற வரை.. நான் உன் கூட வரேன்.'
அந்த புதன் கிழமையும் வந்தது... தன் கம்பெனிக்கு அவனை அழைத்து சென்று..
கம்பனி நடக்கும் வித்தையும்.. அதன் நெளிவு சுளிவுகளை ஒவ்வோன்றாய் கற்று கொடுக்க... கார்த்தியும் கற்க ஆரம்பித்தான்.
அதே சமயம்.. கீர்த்தான்வின் அப்பாவும் திருமணத்திற்கு நாள் குறித்து விட்டதையும் கார்த்தியின் பெற்றோரிடம் தெரிவிக்க.. மகனிடம் கம்பனி வேலையை ஒப்படைத்து விட்டு, கார்த்தியின் அப்பாவும் அம்மாவாவும் கல்யாண வேளையில் மும்முரமாயினர்.
திருமண நாளும் வந்தது.. புதுச்சேரியிலே ஒரு பிரபலமான திருமண மண்டபத்தில் மிகவும் ஆடம்பரமாக நடந்தது, இருவீட்டாரின் சார்பிலும் அனைவரும் திரண்டு வந்து கார்த்தி - கீர்த்தனாவை வாழ்த்தினர்.

தோழியான கீர்த்தனா, காதாலியாகி . இறுதியில் அவன் மனைவியும் ஆனாள் . இந்த அருமையான வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும், இந்த அரிய வாய்ப்பைக் கொடுத்த ஆண்டவனுக்கு கார்த்தி நன்றி தெரிவித்தான்.

முதல் இரவு... கார்த்தியும் கீர்த்தனாவும் தனி அறையில்.. நெடுங்காலம் மனதில் இருந்த கனவுகளை.. மெல்ல மெல்ல கட்டிலில் இறக்கி வைத்து... ஒருவர் பார்வையை ஒருவர் விழுங்கினர்... நெஞ்சுக் கூட்டின் எச்சிலை முழுங்கினர்.. இரு மனமும் ஒரு மணமாகி.. திருமண மாலை விழுந்த பிறகு... கனவு மாலை கழற்றியாகி விட்டது.. நிஜத்தை காண இருமனமும் துடித்தது..

'கார்த்தி.. ஏதாவது பேசேன்..'

'இது பேசற நேரமா..'

'பின்ன.. '

அவள் அருகில் வந்தது... அவன் கையால் அவள் இடை அணைத்து... மெய் அணைக்க... மெய்யாலுமே விலகினாள்..

'அதுக்குள்ள என்ன அவசரம்.. கொஞ்சம் பேசிட்டு இருப்போமே..'

'பேச வேண்டியது எல்லாம் நாமா காதலிக்கும் போதே பேசியாச்சே.. இனிமே பேச என்ன இருக்கு... கீர்த்தி... நீ முதல் முதலா என்ன பிடிச்சிருக்கான்னு கேட்டியே நெனவிருக்கா .. அது இப்பத்தான் நடந்த மாதிரி இருக்கு.. '


'அதெப்படி மறக்க முடியும்.. அப்பவெல்லாம் என்ன பாக்கனுமுன்னு விடாப்பிடியா சைட் அடீப்பியே..'

'ஒ... அதெல்லாம் கவனிச்சி இருக்கியா..'

'பின்ன... அப்பவெல்லாம் உன்ன பாக்க பாவாமா இருக்கும்.. போனாப் போகுதுன்னு தான் அப்படி கேட்டேன்..'

'ஒ.. பரிதாப்பட்டு தான் என்ன காதலிச்சியா..'

'அப்படின்னு சொல்ல முடியாது.. '

என்றும் இல்லாத திருநாளாய்.. அன்று கீர்த்தனாவும் வெட்கப்பட்டாள்... அவள் முகம் சிவந்தது...

கார்த்தி.. தன பாக்கெட்டில் இருந்த அந்த பேப்பரை எடுத்து.. அவளிடம் கொடுத்து.. படிக்கச் சொன்னான்...

'என்ன இது...'

'படிச்சு பாரேன்..'

'கண்கள் இரண்டு கருவண்டு...' படித்தவள்.. 'இது எனக்காக, என்னப் பத்தி நீ எழுதின முதல் கவிதை இல்ல..'

'ஆமாம்... அதுக்கு கீழு இருக்கிற ரெண்டாவது பகுதியைப் படியேன்..'

கொஞ்சும் மொழி பேசி - என்
உள்ளம் கொள்ளை கொள்ளும்
பஞ்சு போன்ற மேனியாலே - என்
நெஞ்சைப் பற்றிக் கொண்டாய்!
கொஞ்சி மகிழ ஆசை - உன்
கோவைப் பழ இதழில்
வஞ்சிக் கொடியே! வனதேவதையே ! - என்
வாலிபம் அழைக்குது வாராயோ..!
'அட அவ்வளவு ஆசையா .. '

'அந்த ஆசை இப்ப இல்ல... அப்பவே இத எழுதிட்டேன்.. ஆனா .. அப்ப உனக்கு காட்டல..'

'ஒ..' என்றவள் அவள் கன்னத்தை மெல்ல ஒரு கிள்ளு கிள்ளினாள்.
'அந்த அசை தான் இப்ப நிறைவேறப்போகுதே' சொன்னவாறே அவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டான்.


'கார்த்தி.. உனக்கு பையன் பிடிக்குமா... பொண்ணு பிடிக்குமா...'

'அதுக்குள்ள என்ன அவசரம்.. இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே..'

'சொல்லேன்...'

'முதல்ல உனக்கு யாரை பிடிக்கும்னு சொல்லு..'

'எனக்கு பையன்தான் பிடிக்கும்..'

'உனக்கு..'

'பொண்ணுதான்...'

'நான் பையனுக்கு பேர கூட செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்..'


'அதுக்குள்ளேவா..'

'ம்ம்... '

'என்ன பேரு..'

'ரிஷ்வன்... பையன் பொறந்தா ரிஷ்வன்னு பேரத்தான் வைக்கணும்..'
நான் அந்த பேர கேள்வி பட்டதே இல்லையே...'

'இனிமே அந்த பேரத்தானே எல்லாரும் சொல்லப்போறாங்க..'

'எப்படி..'

'அதான் நம்ம பையனுக்கு அந்த பேர வைக்கப்போறேமே...'

'ஒ... அவ்வளவு நம்பிக்கையா..'

'ம்ம்ம்... நீ என்ன பேர செலக்ட் பண்ணி இருக்க...'

'இன்னும் முடிவு பண்ணல...'

'யோசனை பண்ணி சொல்லேன் ..'

'ஆங்... வந்து.. ரம்யா.. சுகன்யா.. இதில எதுனா வச்சுக்கலாம்..'

'அது ஏன் ரம்யா, சுகன்யா... '

'நீ ஆர்ல ஸ்டார்ட் பண்ற மாதிரி சொன்னியா... எனக்கும் ஆர்ல ஸ்டார்ட் பண்றமாதிரி சொல்லணும் தோணுச்சி... இதுல போய் என்ன ஆராய்ச்சி...சரி.. கிட்ட வா நேரமாச்சி... ' என்று ரைமிங்காய் பேசியபடி அவளை அணைத்து மேலும் இறுக்க... அவள் தன்னிலை மறக்க..

அவள் மேனியில் இருந்த ஆடை மெல்ல நழுவ... .

நடுசாம இரவு..வெளியில் பனி பெய்தது.. வானத்தில் நிலா மேகக்கூட்டத்தில் மறைந்து மறைந்து கண்ணா மூச்சி காட்டியது.. ஓடி ஓடி களைத்த மேகத்திற்கு மூச்சு முட்டியது... பின்னர் ஒரே இடத்திலே நிற்க.. வானம் இருட்டியது. .. நட்சத்திர விளக்குகளோ இங்கு நடப்பதைக் கண்டு .. நாணிக் கோணி கண் சிமிட்டியது.... வெளிச்சத்தைக் கம்மியது.. .

அறையின் ஏசி காற்றோ . இவர்கள் இருவர் விட்ட மூச்சுக் காற்றால் சூடாகி.. வெப்பக் காற்றையே வீசியது...

சுவற்றில் இருந்த கடிகாரமோ தன முகத்தை மூடி.. மணி அடிப்பதையே நிறுத்தி..
புரியாத புதிர்கள் புரியும் நேரம் நெருங்கி விட்டதை உணர்த்தியது.... எரிந்த விளக்கும் சரிந்து மௌனமாகி ஓளியைக் கம்மியது..

அதற்கு பிறகு...

விரகம் உச்சந்தலைக்கு ஏறி -
கரகம் ஆடியது;
இச்சை உணர்வு உட்புகுந்து -
பச்சை நரம்புகளில் ஓடியது;
இடையும் இடையும் -
இடைவெளியின்றி கூடியது;
இருவரும் விட்ட மூச்சுக் காற்று
அறைக்கதவை மூடியது..
அவர்களே ஒருவருக்கொருவர்
ஆடை யாகினர்!
நன்றி:கவிஞர் வாலி

இனிய இரவு கனியக் கனிய இன்பத்தை தந்தது.. இருள் மெல்ல மெல்ல விலகி பொழுது புலர... இருவருக்கும் கண் இருளத தொடங்கியது.. இரவு இன்னும் நீள வில்லையே என்ற ஆதங்கத்துடன்.
அனைத்து திருமண சம்பிராதயங்களும் முடிய இரண்டு வாரங்கள் மேலாகிவிட்டது, கீர்த்தனா பிறந்த வீட்டைப் பிரிந்து புகுந்த வீட்டிற்கு சென்று தன்னைப் பழகிக்கொண்டாள்.

அவள் திருமணத்திற்கு எடுத்த விடுமுறையும் முடிந்துவிட்டது, திருமணத்திற்குப் பிறகு முதல் முதலாய் ஆபீஸ் செல்கிறாள்.

'கீர்த்தி.. நீ வேலைக்கு போய்த்தான் ஆகணுமா..'

'ஏன் ..'

'வீட்டிலே அம்மாவுக்கு ஒத்தாசையாய் இரேன்.. எதுக்கு ஆபீஸ் எல்லாம் போய் கஷ்டப்படற..'

'வீட்ல எனக்கு ரொம்ப போர் அடிக்கும்..'

'ஒண்ணு செய்.. நம்ம கம்பெனிக்கே வந்திடேன்.. அங்க அக்கௌன்ட்ஸ் எல்லாம் பாத்துக்கலாம் இல்லையா..'

'நானே இப்பத்தான் ... எல்லாம் கத்துக்கிட்டு இருக்கேன்.. அங்க வந்தா.. எல்லாரும் முதாலாளி அம்மான்னு எனக்கு மதிப்பு கொடுப்பாங்களே தவிர.. என்னால புதுசா கத்துக்க முடியாது... கொஞ்ச நாள் இங்கேயே வேலைக்கு போறேனே.. நிறைய கத்துக்கறேன் .அப்புறம் பாக்கலாம்..'

அவள் சொல்வதிலும் நியாயம் இருந்தது..

'சரி.. அப்ப உன் இஷ்டம்...'

காரிலே அவளை ஆபீசில் ட்ராப் செய்து.. தன ஆபீசிக்குச் சென்றான்..

வாரங்கள பல செல்ல.. ஒரு விடுமுறை நாளில்.. கார்த்தி எதோ வேலையாக வெளியில் சென்றிருக்க .. கீர்த்தனா வீட்டில் இருந்தாள்..

சமையல் அறை சென்று..

'அத்தே.. நான் எதாவது ஹெல்ப் பண்ணட்டுமா..'

சமையல் வேலையை மட்டும் செய்யாமல், மற்ற சிறு சிறு .வேலைகளை மட்டும் செய்து வந்தவள், முதன் முதலாய் அப்படி கேட்டட்துமே.. கார்த்தியின் அம்மாவுக்கு மனது குளிர்ந்து விட்டது..

'உனக்கு சமைக்க தெரியுமாம்மா ...'

'நீங்க கத்து கொடுத்தா ... தெரிஞ்சிக்கறேன்..'

சாமர்த்தியமாய் பதில் அளித்தாள் கீர்த்தனா..

'காய்கறி கூடையில கேரெட், கத்திரிக்காய இருக்கு.. நறுக்கி கொடும்மா.. சாம்பார் வச்சிடலாம்.. அப்படியே கோஸ்ஸ பொடிப் பொடியா நறுக்கிடு.. பொரியல் செய்திடுலாம்.. .'

மாமியார் சொன்னபடியே நறுக்கி கொடுக்க... சமையல் தயார் ஆனது..

மதியம் சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வந்த கார்த்தி..

'அம்மா பசிக்குது... ' என்று கூற..

'கீர்த்தனா.. கார்த்திக்கு சாப்பாடு போடு.. நான் மாடியில காயப்போட்ட துணிய எடுத்திட்டு வரேன்.. இன்னிக்கு கீர்த்தனாவோட சமையல்டா ' என்று செல்ல..

'கீர்த்தி .. நீயா சமைச்சே..'

'சமைக்கல... சமைக்க உதவினேன்..'

'ரொம்பா. ஆச்சரியமா இருக்கே...'

அவள் பரிமாற...

'என்ன.. ஆடு, கோழி, மீன் எதுவுமே இல்லையா... ஒரே வெஜ் அயிட்டமா இருக்கு..'

'இது நான்-வெஜ் ஐட்டம் தான்'

'இல்லியே..'

'நான் காய் நறுக்கும் பொது.. என்னோட கையை கட் பண்ணிக்கிட்டேன்... என் கை ரத்தம் இதுல இருக்கு.. அப்ப.. நான்-வெஜ் ஐட்டம் தானே..'

அவள் சிரித்துக்க் கொண்டே சொல்ல.. அப்பொழுதான் கவனித்தான்.. அவன் கை விரலில் பேண்டேஜ் இருந்ததை..

'உனக்கு தெரியாத வேலை எல்லாம் ஏன் செய்யிற..'

'அப்ப.. எப்பத்தான் கத்துக்கிறது..'

சொன்னவள்... அப்படியே தான் வயிற்றைப் பிடித்து அமர்ந்து விட்டாள்

'என்னாச்சி.. கீர்த்தனா..'

'ஒண்ணும் இல்ல... எப்பவும் வர்ற வயித்து வலி தான்'

'இன்னுமா அந்த வலி இருக்கு... '

'எப்பாவது வரும்... இப்ப கொஞ்ச நாளா.. அடிக்கடி வருது...'

அதற்கு மேல் தாங்கமாட்டாமல் சுருண்டு விழுந்து விட்டாள்..

கார்த்தி.. அவளை அவசர அவசரமாய் தான் காரிலே நர்சிங் ஹோம் அழைத்து சென்றான்.. உடன் அம்மாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு...

சாதாரண ஜுரத்துக்கே.. ப்ளட், யூரின் டெஸ்ட் எடுக்கச் சொல்பவர்கள்.. இதற்கு சும்மா இருப்பார்களா.. ஸ்கேன். அல்ட்ர சோனிக் டெஸ்ட் என்று பல டெஸ்ட்களை எடுக்க வைத்து விட்டார்கள்..

எல்லா டெஸ்ட்டும் முடிய மாலை ஆகிவிட்டது... கீர்த்தனாவோ வலியால் துடி துடித்தபடி இருக்க..

அவளுடைய ரிப்போர்ட் எல்லாவற்றையும் படித்து பார்த்த டாக்டர்..

அந்த விஷயத்தைக் சொல்ல... அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்..

நீ
களவும்...
கற்று மறந்தாய் - என்
இதயத்தைத் திருடி
நான்
களவும்...
கற்றேன் - உன்
இதயத்தைத் திருடி
மறக்கத்தெரியாமல்...!



கீர்த்தனா துடிப்பதை காண கார்த்தியால் சகிக்க முடியவில்லை, மிகவும் மன வேதனை அடைந்தான்.

'கீர்த்தி.. நான் அப்பவே சொன்னனே கேட்டியா..ஒரு நல்ல டாக்டரா பார்த்து இருக்கலாம்..'

'இப்ப.. எதுக்கு அதையெல்லாம் பேசிட்டு... அவளே முடியாம துடிச்சிட்டு இருக்கா... அவள போய் பேசிட்டு இருக்க...'கார்த்தியின் அம்மா அவனை கொஞ்சம் கடிந்து பேச ..

அந்த நர்சிங் ஹோம் பார்ப்பதற்க்கு படு சுத்தமாகவும்... அழகாகவும் ... மருந்து வாசனை இல்லாமலும் இருந்தது. அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் நோயாளிகள் இங்கும் அங்கும் நடந்த வண்ணம் மிகவும் பரபரபபுடன் காணப்பட்டனர். எல்லார் முகத்திலும் எதோ ஒரு வேதனை நிழல் ஆடியது.

ஆனால்..எதையும் ரசிக்கும் மூடில் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலைகள். எதுவும் அழகாக இருந்தாலும் மனதில் கவலை இல்லாமல் இருந்தால் தான் எதையும் ரசிக்க முடியும்.

'சிஸ்டர்... என் வைப் ரொம்ப துடிச்சிட்டு இருக்க.. உடனடியா டாக்டர பாக்க முடியுமா..'

'கொஞ்சம் பொறுங்க சார்... டாக்டர் நம்பர் வரிசைப்படி தான் பார்த்திட்டு வரார்.. எல்லாருக்கும் அவசரம் தான்... எதுக்கும் நான் உள்ள போய் கேட்டு பாக்கறேன்..'

'கொஞ்சம் கேட்டு பாருங்க... சிஸ்டர்.. ப்ளீஸ்..'

அவள் டாக்டர் அறைக்குச் சென்று .... சிறிது நேரம் கழித்து வெளியே வந்து..

'சார்.. அந்த பேஷன்ட் உள்ளே போய் வந்ததும்.. அடுத்து நீங்க உள்ளே போகலாம்.. எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்டும் கையில் வச்சிக்கோங்க..'

'தேங்க்ஸ்.. சிஸ்டர்.'

ஒரு பத்து நிமிட அவகாசத்துக்குப் பிறகு..

'அடுத்து நீங்க உள்ளே போங்க..' நர்ஸ் சொல்ல..

டாக்டர் விஜயலட்சுமி என்ற எழுத்து கதவில் பளிச்சிட... கதவை மெதுவாய் தள்ளிக்கொண்டு கீர்த்தியும், கார்த்தியும் உள்ளே சென்றனர்.

டாக்டருக்கு நாற்பது வயது இருக்கும். கண்ணில் கண்ணாடி அணிந்து இருந்தார்.
காதோரோம் கொஞ்சம் நரை எட்டிப்பார்த்தது..நெற்றியில் சுருக்கம் விழுந்து.. பார்ப்பதற்கு பாந்தமாய், கண்களில் கருணை எட்டிப் பார்த்தது.

கார்த்தி.. அவளுடையே ரிப்போர்ட் அடங்கிய பைலை டாக்டரிடம் கொடுத்தான்.

'உக்காருங்க..'இருவரும் அமர்ந்தனர்

மெதுவாக அந்த பைலின் பக்கங்களை ஒவ்வொன்றாக படிப்பதும், பின்னர் கீர்த்தனாவைப் பார்ப்பதுமாய் அவர் செய்கை இருக்க...

கீர்த்தனாவுக்கு மனதில் கிலி பிடிக்க ஆரம்பித்துவிட்டது..

'என்ன வயாசாகுது...' சொன்னாள்.

'எத்தன நாளா இந்த ப்ராப்லெம் இருக்கு...'

'கொஞ்ச நாளாவே இருக்கு..'

'அப்பவே பார்த்து இருக்கலாமே...'

'அது வந்து டாக்டர்... அப்பவெல்லாம் எப்போவவாவது வரும்.. ஆனா மாத்திரை சாப்பிட்டா கொஞ்ச நேரத்தில வலி போய்டும்.. அதனால அத பெரிசா எடுத்துக்கல..இப்ப கொஞ்ச நாளா தான் அடிக்கடி வருது.. '

'அடிக்கடி வருதுன்னு சொல்ற... முன்னாடியே கவனிச்சு இருக்கணும்.. படிச்ச பொண்ணா வேற இருக்க.. எங்க வொர்க் பண்ற .'சொன்னாள்..

'அது வந்து டாக்டர்..அந்த நாளுக்கு முன்னாடி வர்ற வலின்னு நெனெச்சி கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்த் திட்டேன்..'


'கொஞ்சம் நஞ்ச அஜாகிரதையா இது... இங்க பாரு'


என்றவர்..ஸ்கேன் எடுத்த ரிப்போர்ட்டை காண்பித்து...
வயித்துக்குள்ள . இங்க தெரியுதே இந்த அளவுக்கு கட்டியா வளர்ந்திருக்கு ... இந்த கட்டிக்கு பக்கத்துல இருக்கிற்து தான்... கருப்பை.. இன்னும் கொஞ்சம் நாள் ஆகி வந்திருந்திங்கன்னு வச்சுக்கோங்க.. அப்புறம் கருப்பையையும் சேர்த்து எடுக்க வேண்டி இருக்கும்... இப்பவாவது வந்தீங்களே..'


டாக்டர் சொல்லச் சொல்ல.. கீர்த்தனாவுக்கு கண்ணில் அழுகை அழுகையாய் வந்தது... வயிற்று வலியை விட... அவர் சொன்ன இந்த விஷயம் தான் இப்பொழுது அவளுக்கு மிகவும் வேதனை தந்தது..

'டாக்டர்.. இப்ப என்ன பண்றது...'

'உடனே ஆபரேஷன் பண்ணி அந்த கட்டியை எடுத்திடமும்.. அப்புறம் தான் தெரியும்...அதனால கருப்பைக்கு ஏதாவது ஆபத்தான்னு....'

'எனக்கு பயமா இருக்கு டாக்டர்...'

'ஆபரேஷன் கொஞ்சம் நேரம் தான்.. வலியே இருக்காது.. ரெண்டு நாள் பெட் ரெஸ்ட் எடுத்தா போதும் .... வீட்டுக்குப் போயிடலாம்..அப்புறம் பழையபடி வேலைக்கும் போகலாம்.. '

'ஆபரேஷன் பத்தி கவலைப் படல டாக்டர்.. கருப்பைக்கு எதாவது ஆகி இருக்குமோன்னு தான் கவலையா இருக்கு..'

' ஸ்கேன் ரிப்போர்ட் படி அப்படி ஒண்ணும் ஆகி இருக்காதுன்னு தான் தோணுது..'

'அதனால கொழந்த பொறக்காம போய்டுமா டாக்டர்..'

'அப்படி எல்லாம் இல்ல .. இப்பவெல்லாம் நெறைய மெடிசின், மாடர்ன் டெக்னாலஜி வந்திருக்கு.. அதையெல்லாம் சரிபண்ணிடலாம்.. சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும்.. அத முதல்ல தெரிஞ்சிக்கொம்மா..
மத்தத அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல அந்த கட்டி சரிஆகனும்.. அப்புறம் உன்னோட பாடி வீக்னெஸ் கொறஞ்சி.. நீ பழையபடி ஆகணும்.. அதுக்கப்புறம் அத பத்தி யோசியுங்கா...'

'டாக்டர்... நீங்க ஆபரேஷன் பண்றதுக்கு டேட் பிக்ஸ் பண்ணுங்க .' கார்த்தி சொல்ல...

'நாங்க எப்பவும் ரெடி.. நாளைக்கு வேற ஒரு ஆபரேஷன் இருக்கு.. நாளை மறு நாள்... காலையில வச்சுக்கலாம்.. நீங்க இன்னிக்கே பெட்ல அட்மிட் ஆகிடுங்க.. மத்ததெல்லாம் நர்ஸ் சொல்லுவாங்க..'

'சரி டாக்டர்.. பயப்படும் படியா ஒண்ணும் இல்லையே..'

'அதெல்லாம் ஒண்ணும் இல்ல...'

இருவரும்... ஒருவர் முகத்தை பார்த்தபடி வெளியே வந்தனர்.. கீர்த்தான்வில் கண்கள் கலங்கிய வண்ணம் இருந்தது..

கார்த்தியின் அம்மாவும் ஒரு தவிப்போடு வெளியே காத்திருக்க..

நடந்தவற்றை எல்லாம் கூறினார்... கீர்த்தனாவோ கண்ணீர் வழிந்தபடி சோகமயமாய் அமர்ந்திருந்தாள்.

'அம்மா... கீர்த்தனாவ பாத்துக்கோங்க.. நான் ஆபரேஷனுக்கு வேண்டிய பணத்தை கட்டிட்டு வரேன்..'

கவுன்ட்டர் செல்லும் வழியிலேயே.. தன் அப்பாவுக்கும் கீர்த்தனாவின் பெற்றோருக்கும் தகவலை சொன்னான்.

ஆபரேஷன் நாளும் வந்தது.. ஒருபுறம் கீர்த்தனாவின் அம்மாவும், அப்பாவும்... மறுபுறம் கார்த்தியும் , அவன் அப்பாவும் அப்பாவும்.. கீர்த்தனாவை ஆபரேஷன் தியேட்டர் வரை அவளுக்கு ஆறுதல் கூறிச் சென்றனர். .

ஆபரேஷன் முடிந்த இரண்டாம் நாள்.. அவளை டிஸ்சார்ஜ் செய்தபோது..

'ஆபரேஷன் நல்ல படியா முடிந்தது. . இனிமேதான் நீ ஜாக்கிரதையா இருக்கனும்.'

டாக்டர் அப்படி கூற.. இருவரும் திகைத்தனர்..

'என்ன டாக்டர்..'

'நாம எதிர்பார்த்தமாதிரி ஒரு பயமும் இல்ல .. ஆனா.. உள்ள இருக்கிற புண் ஆறதுக்கு... எப்படியும் ரெண்டு மாசம் ஆகும்.. அதுவரைக்கும்... நீங்கதான் கட்டுப்பாடோட இருக்கணும்.. '
சரி.. ' என்பது போல.. கீர்த்தனா தலை ஆட்டியவாறு.. கார்த்தியை பார்த்தாள் ..


ஒரு வழியாக ஆபரேஷன் முடிந்து இரண்டு வார ரெஸ்ட் எடுத்த பிறகு .. கீர்த்தனாவை அவள் ஆபீஸ் வரை விட்டு வர கார்த்தி சென்றான்..

'கார்த்தி.. என் மேல கோவமா..'

'ச்சே ச்சே அதெல்லாம் இல்ல...'

'அப்பவே நீ சொல்லும் போதே நான் பார்த்து இருந்தா.. இப்படி எல்லாம் நடந்து இருக்காது இல்ல...'

'என்ன பண்றது.. விதின்னு ஒன்னு இருந்த.. நடந்து தானே ஆகும்.. நம்மால மாத்த முடியும்மா .'

'என்ன . நீ தத்துவேல்லாம் பேச ஆரம்பிச்சிட்ட..'

'அப்ப.. சொன்னேன் . நீ கேக்கல..'

'சாரி... கார்த்தி.. என்னால தானே உனக்கு சிரமம்... உன்ன பார்த்த பாவமா இருக்கு..'

'சரி சரி.. விடு... எல்லாம் நல்லதுக்கேன்னு நேனேப்போம்..'

நாட்கள் ஓட.. வாரங்கள் ஓட.. மாதங்களும் சென்றவண்ணம் இருந்தது.. ஒருநாள்.. கார்த்தியின் ஆபீசில்..

'அப்பா.. நம்ம ப்ராடக்ட் அதிகமா பெங்களூர்ல தான் சேல்ஸ் ஆகுது... கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம்.. '


'ஆமாம் .. எனக்கு தெரியும்..'


'எனக்கு ஒரு யோசனை தோணுதுப்ப..'


'என்ன..'


'நம் ஏன்... பெங்களூர்ல . ஒரு சின்ன பிளான்ட் ஓபன் பண்ணக் கூடாது.. அங்கேயே.. உற்பத்தி பண்ணி... அங்கேயே வித்த.. போக்குவரத்து செலவும் மிச்சமாகும்.. அதனால விலையும் கொறச்சா... அதன் மூலமா அங்க அதிகமா மார்கெட் பிடிக்க முடியும்..'


'நீ சொல்றது நல்ல யோசனையா தான் இருக்கு..ஆனா.. அங்க பிளான்ட்ட யார் கவனிச்சுப்ப..'

'நல்ல தகுதியான ஒருத்தர் அங்க வச்சிட்ட.. அவர் பார்த்திட்டு போறாரு.. நானும் அடிக்கடி போய் பார்த்திட்டு வரேன்.. என்ன சொல்றீங்க..'


'ஆரம்பிக்கறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.. உன்னால முடியும்மான்னு பாத்துக்கோ.. எதுக்கும் முதல்ல.. சின்னதா ஆரம்பி.. எடுத்த உடனே.. அகலக்கால் வச்சிடாதே.. என்ன..'

'அத நான் பாத்துக்கறேன் பா..'

கார்த்தி.. சொன்ன திட்டம் அவருக்கு பிடித்திருந்தது.. தன பையன் கம்பனியை நன்றாக முன்னேற்றுவான் என்ற நம்பிக்கையும் அவருக்கு வந்தது..

'சரிப்பா. .நான் அடுத்த வாரம் பெங்களூர் போயிட்டு.. அங்க பிளான்ட் ஆரம்பிக்க வேண்டிய எடம், அப்புறம் மத்த பார்மாலிடீஸ் என்னென்னன்னு தெரிஞ்சிக்கு வரேன்..'

'சரி.. போயிட்டு வா..'
ஒரு நாள் மாலை.. கார்த்தியின் அம்மா... தோட்டத்தில் செடியிலிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டிருக்க...

'என்ன.. கௌரி.. ஆளையே பாக்க முடியதில்ல..'


யார்.. என்னை பெயர் சொல்லி அழைப்பது.. திரும்பிப் பார்க்க...

'என் குரல் கூட உனக்கு மறந்து போச்சா..'

'அடடே.. மல்லிகாவா... நீ எப்ப அமெரிக்காவில் இருந்து வந்த...'

மல்லிகா.. பக்கத்து வீடு, கார்த்தி அம்மாவின் தோழி ... கடந்த ஒரு வருடமாய் அமெரிக்காவில் இருக்கும் தன மகன் வீட்டுக்குச் சென்று இரண்டு நாளுக்கு முன் தான் திரும்பி இருந்தாள்..

'நான் வந்து ரெண்டு நாள் ஆச்சு.. வந்ததில் இருந்து ஒரே உடம்பு வலி... அப்படியே படுத்தவ தான்... இன்னிக்கு தான் எழுந்து கொஞ்சம் நடமாடறேன்..'

'சரி.. வா வா. உள்ள உக்காந்து பேசலாம்.. எப்படி இருக்காங்க.. மகன் , மருமகன், பேரக் கொழந்தைங்க.. '

'எல்லாம் சௌக்கியம் தான்..ஆமா.. உன் பையனுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் இருக்கும் இல்ல..'

'ஆமா..எப்படி இருக்கா மருமக..'

'நல்லா இருக்கா.'

கையேடு கொண்டு வந்த அமெரிக்கன் சாக்லேட்டை தந்தாள்.

'அப்புறம்... மருமக விசேஷமா இருக்காளா... ..'

'இன்னும் இல்ல..மல்லிகா..'

'என்னடி அப்படி சொல்ற.. இப்பவெல்லாம்.. கல்யாணம் ஆனா.. ஏழாவது மாசமே... கொழந்தையோட இருக்காங்க.... கேட்ட... கல்யாணத்துக்கு முந்தின்னு... ம்ம்ம்ம்.... காலம் மாறிப்போச்சு.. .. உன் பையன் லவ் வேற பண்ணிருக்கான்...இப்படி ஒண்ணும் இல்ல வேற சொல்ற..'

'இப்ப என்ன அவசரம் ..பொறுமையா பெத்துக்கறாங்க..'

'அவங்களுக்கு அவசரம் இல்லாம இருக்கலாம்.. நமக்கு பேரனோ... பேத்தியோ.. இருந்தா நல்லா பொழுது போகும்.. '


'எதுக்கு அவசரமா பெத்துக்கவானேன் ...அப்புறம் அவஸ்தை படனும்னு.. தள்ளி போட்டு இருப்பாங்க.. கொஞ்சம் நாள் ப்ரீயா தான் இருக்கட்டுமே ..'

'உன் மருமக கிட்ட பேசிப் பார்த்தியா..'

'அவளே படிச்சவ.. அவளுக்கு தெரியாததா... நான் சொல்ல..'

'ரெண்டாவது கொழந்தைய வேணா.. தள்ளி போடலாம்.. முதல் கொழந்தைய உடனே பெதுக்கனும்... என்ன நாள் சொல்றது.'

'நீ சொல்றது வாஸ்தவமான பேச்சு தான்..'

'இந்த காலத்து பொண்ணுங்க.. எங்க சொல்றது கேக்கறாங்க.. படிக்கறது என்னமோ.. வேலைக்கு போறதே பெரிசா நேனேக்கிறாங்க.. அப்பன விட அதிகம் சம்பாதிக்கிறோம்ம்னு திமிரு வேற.. கையில காசு வந்ததுனா .. கண்டத எல்லாம் வெளியே இஷ்டத்துக்கு வாங்கி சாப்பிடறது.. அதுவும் இப்பவெல்லாம்.. எப்படி கொழந்த நிக்கும்.. முன்ன மாதிரியா.. ஒரு அடக்கம் ஒழுக்கம் எதுவும் இப்ப எந்த பொண்ணுகிட்ட பாக்க முடியுதா. '

'அப்படியும் சொல்ல முடியாது மல்லிகா.. எல்லாரும் அப்ப்டியா இருக்காங்க.. வீட்டுக்கு படிஞ்சி... சொன்னத கேக்கறவங்களும் இருக்கத்தான் செய்யிறாங்க..'

'பாத்து.. கௌரி.. நீதான் பக்குமா சொல்லி.. பேரனோ ... பேத்தியோ சீக்கிரம் பெத்து கொடுக்கச் சொல்லு...வீட்டில அது அது வச்ச எடத்துல வச்சபடியே இருந்தாலும் கட்டில் மெத்தையும் கசங்காம இருந்தாலும்.. பாக்க அழகா இருக்கிற மாதிரி தான் இருக்கும்.. ஆனா கொழந்தைங்க இருந்து.. அலங்கோல படுத்தும் போது தான் .. அதுல ஒரு பூரணத்துவம் வரும்.. என்ன நான் சொல்றது புரியுதா.. '

'சரி மல்லிகா... எனக்கு அடுப்படியில வேல இருக்கு.. அப்புறம் ஒரு நாள் பொறுமையா உக்காந்து பேசலாம்..'
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty Re: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by udhayam72 Mon Jun 10, 2013 4:16 pm

இரவு... 'கீர்த்தி.. வர்ற புதன் கிழமை.. பெங்களூர் போறேன்..'

'அப்படியா.. யாரையாவது மீட் பண்ணப் போறிங்களா..'

தான் அப்பாவுடன் அன்று காலை கூறிய திட்டத்தை அவளிடம் கூறினான்..

'நல்லா யோசனை..தான்.. ஆல் தி பெஸ்ட் '

'என்னுடைய கனவு இது கீர்த்தி.. இப்ப ஆரம்பிச்சா தான்.. . வொர்க் ஸ்டார்ட் பண்ணி.. பிளான்ட் திறக்கறதுக்கு... எப்படியும் ஒரு வருஷம் ஆகும் இல்ல..'

'கண்டிப்பா... அதுக்கு மேலேயே ஆகும்ன்னு நேநேக்கறேன்..'

'அதுக்குள்ளே... நமக்கு ஒரு கொழந்து பொறந்த.. கொழந்தையோட பிளான்ட் திறக்கனும் எனக்கு ஆசை..'

கார்த்தி குழந்தை என்றவுடன்... கீர்த்தனாவுக்கு டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது.. டாக்டர் ஒன்று இல்லை என்று கூறியும் .. நமக்கு என் இதுவரைக்கும்... எதுவும் நடக்கவில்லை.. மிகவும் பயந்தாள்..

'கார்த்தி ..நீ கொழந்தைன்னு சொன்னவுடனே.. எனக்கு பயமா இருக்கு'

'எதுக்கு பயப்படற.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..'

'அது தான் பயமா இருக்கு.. ரொம்ப நாளாச்சினா. மத்தவங்க எல்லாம் நம்மள பத்தி தப்பா பேசுவாங்களோன்னு தான்.. '

'அதெல்லாம் பத்தி பயப்படாதே.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்..'

கார்த்தி அப்படி சொன்னாலும்... அவன் மனசிலும் அந்த கவலை இருக்கத் தான் செய்தது.

'சரி. சரி.. நேரமாச்சி.. எனக்கு தூக்கம் வருது' அவன் படுத்துக் கொள்ள.. கீர்த்தனா அவனுக்கு முதுகை காண்பித்தபடி ஒருக்களித்து படுத்தால்... கண்ணில் வழியும் கண்ணீருடன்..

மறுநாள்.. கார்த்திக்கு ரம்யா நினைவு வர... அவளுக்கு மெயில் அனுப்பி.. தான் பெங்களூர் வருவதைச் சொல்ல..

பெங்களூரில் ரம்யாவை கார்த்தி சந்தித்த போது... அவள் சொன்ன விஷயம்..அவனுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்தது...

சூரியனை சந்திரன் மறைப்பதால்
சூரியகிரகணம் வருவதாக
வானவியல் கூறுகிறது
எனக்கென்னமோ
நீ
அருகில் வரும் சமயமெல்லாம்
சூரியகிரகணம் தோன்றுகிறது



அன்று பெங்களூர் செல்வதற்காக அதிகாலையிலே கார்த்தி எழுந்துவிட, கீர்த்தியும் அவனுக்கு வேண்டிய காலை உணவை தயார் செய்து கொண்டும், மறுபுறம் அவன் துணிமணிகளை எல்லாம் ஒரு பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டும் இருந்தாள். இப்பொழுதெல்லாம் கீர்த்தியே ஓரளவு சமையல் கற்று விட, மாமியாரின் தயவு இல்லாமலே அன்று சமைத்துக் கொண்டு இருந்தாள். இருவரின் திருமணத்திற்குப் பிறகு, கார்த்தி முதன் முதலில் அவளை விட்டுச் செல்வதால், தனியாக இருப்பது என்பது அவளுக்கு பிரிவுத் துயரமாய் தோன்ற...

அவன் குளித்து முடித்து, தன் உடைகளை அணிந்து கொண்டு இருந்த சமயம்
அவனருகில் சென்றவள்,

'கார்த்தி... எத்தன நாள் ஆகும்... திரும்ப'

'எப்படியும் ரெண்டு மூணு நாள் ஆகும்'

'உன்ன விட்டு எப்படி இருக்கறதாம்'

'வேணுமின்னா ஒண்ணு செய்யறேன்..' என்றவன்..

அவள் கைகள் இரண்டையும் தன் தோள் மீது மாலையாக்கி, தன் கையால் அவள் இடுப்பணைத்து.. மெல்ல அவளை தன் மார்புடன் இறுக்கி, முகத்தை அவள் கழுத்தில் பதித்து, அவள் காதுமடலில் அவன் விட்ட மூச்சு காற்றால், அவள் கொஞ்சம் சிலிர்த்து தான் போனாள், மெதுவாக கழுத்தில் இருந்து கன்னம், இதழ், நெற்றி, உச்சந்தலை வரை முத்த மழை பொழிய, கீர்த்தியும் தன்னிலை இழந்தாள்.அவன் கைகளோ அவள் உடம்பில் எங்கெங்கோ பட்டு, கூச்சத்தை உண்டு பண்ணிய தோடு இல்லாமல் அவளை கொஞ்சம் கிறுகிறுக்க வைத்தது.. .

'இது வர்ற வரைக்கும் போதுமா.. இல்ல ..'

அவளை அப்படியே கட்டிலில் தள்ள..ஒருவாறு அவனை மெதுவாக விடுவித்து,

'போதும்... போதும்... அத்தை வந்திடப் போறாங்க.. இவ்வளவு ஆசையை மனசில வச்சிக்கிட்டு... என்ன தனிய விட்டுட்டு.. எப்படி.. '

'எனக்கும் கஷ்டமா தான் இருக்கு.. என்ன செய்ய. உன்னையும் அழைச்சிட்டு போகலாம்னு நெனெச்சா.. அங்க நீ மட்டும் தனியா ஹோட்டல் ரூம்ல தான் இருக்கணும், அதுக்கு தான், இந்த பிசினஸ் ட்ரிப் வெற்றிகரமா முடியட்டும், ஒரு வாரம் பெங்களூர் போயிட்டு, மறுபடியும் ஒரு ஹனி மூன் கொண்டாடலாம்.. என்ன..'

அவன் கண்ணடித்து சிரிக்க, அவள் தலை கவிழ்ந்தாள், இந்த சிரிப்பு தானே அவளை அவனிடம் விழ வைத்தது.

மணி அப்பொழுது காலை ஏழு மணி, பெங்களூர் செல்ல பிளைட் ஒன்பது மணி என்பதால்,

'போதும் கொஞ்சினது.. டைம் ஆச்சு டிபன் சாப்பிட்டு சீக்கிரம் கெளம்புங்க..'

உதடு என்னவோ கிளம்பு என்று சொன்னாலும், அவன் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கக் கூடாதோ, இன்னும் இறுக்கி அணைத்து கொள்ளக் கூடாதோ அவள் மனம் ஏங்கியது.

வேண்டா வெறுப்பாக கார்த்தி டைனிங் டேபிள் செல்ல, போகிற போக்கில், மறுபடியும் அவளை இறுக்க அணைத்து, அவள் இதழில் இதழ் பதிக்க, கை விரல்களோ அவள் உடம்பில் நர்த்தனம் புரிந்தது, இந்த குறும்பு அவளுக்கு பிடிக்கும் என்றாலும், பிடிக்காதமாதிரியே நடந்து கொள்வது தானே, பெண்களின் மன இயல்பு, அந்த வரையறைக் உட்பட்டே கீர்த்தியும் இருந்தாள்.

பெங்களூர் ட்ரிப் அப்படி இப்படி என்று ஐந்து நாட்களை விழுங்கி விட்டது, வார விடுமுறை அன்று தான் சென்னை திரும்பினான் கார்த்தி, கடந்த ஐந்து நாட்களாக தினம் ஒரு நில ப்ரோககரை சந்திப்பதற்கும், தன்னுடைய கம்பனியின் பொருள்களுக்கு ஆதரவு தரும் டீலர்களை சென்று தனது கம்பெனி பெங்களூரிலே ஒரு உற்பத்தி தொழிச்சாலை துவங்கப் போகவதாவும் தெரிவித்து, அதற்ககான இடத்தை பார்ப்பதற்ககாக வந்ததாகும் கூறினான்.

அவர்களும் அவனுக்கு பூரண ஒத்துழைப்பு தருவதாகாவும், அவர்களும் புதிய தொழிச்சாலைக்கான இடங்கள் சிலவற்றைக் கூறி தாங்களும் அவன் முன்னேற்றத்தில் அக்கறை இருப்பதைக் காட்டிக் கொண்டனர்.

காலை முதல் மாலை வரை இப்படியே அலைவதும், மாலை ஹோட்டலில் திரும்பியவுடன், அலைந்த அசதியில் தூங்குவதுமாய் ஒவ்வொரு நாளும் கழிந்தது.

கடைசி வரை எந்த இடமும் திருப்திகரமாக அவனுக்கு அமையவில்லை, ஒவ்வொரு இடத்திலும் ஒரு குறை இருந்த வண்ணமே இருந்தது. இருந்தாலும் தன முயற்சியை கைவிடாமல், நல்ல இடங்களை நில ப்ரோக்கர்களிடம் பார்க்கச் சொல்லி, தனக்கு தகவலை சொல்லுமாறும் அடுத்த முறை எப்படியும் முடித்து விடலாம் என்ற திருப்தியுடன் சென்னை திரும்பினான்.
இப்படியாக, அவன் அலைந்ததில், ரம்யாவை சந்திக்க நினைத்ததை திரும்பும் நாள் வரை நினைவுக்கு வரவில்லை, கடைசி நாளில், அவளுக்கு போன் செய்து அவள் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.

ரம்யாவை, முன்னர் பெங்களூரில் பார்த்தற்கும், அமெரிக்காவில் பார்த்ததுக்கும், இப்பொழுது பார்ப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருந்தது, மிகச் சாதரணமாய் காணப்பட்டாள், முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அவனை வரவேற்றாள், எதோ ஒரு அயர்ச்சி அவள் முகத்தில் தென்பட்டது, கொஞ்சம் சதை போட்டிருந்தாள் மற்றபடி அதே பார்வை, அதே கரிசனம், அதே உபசரிப்பு.. .

'வா... கார்த்தி.. எப்படி இருக்கே..'

'நான் நல்லா இருக்கேன்.. நீ..'

'உன் கல்யாணம் எப்படி நடந்தது, வாழ்க்கை எப்படி போயிட்டிருக்கு'

தன் கல்யாணம் ஆனதிலிருந்து நடந்தவற்றை எல்லாம் அவளிடம் கூறியவாறே, தன்னுடைய பெங்களூர் விஜயத்தையும் சேர்த்து கூறினான்.
'நீ வரும்போதே கீர்த்தனா அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல.. பாவம் அவ எப்படி உன்ன விட்டு தனியா இருப்ப..'
இதை கரிசனத்தோட கேட்டாளா.. இலை. எதோ கேட்கவேண்டும் என்று கேட்டாலோ தெரியவில்லை, கீர்த்தனாவுக்கு உன்னைப்பற்றியும் நம் நட்பை பற்றியும் தெரியாது என்பதை அவளிடம் எப்படி கூறுவது.

'அம்மாவும் அப்பவும அங்க இருக்காங்களே.. அவுங்க பாத்துக்குவாங்க.. இப்ப பிசினஸ் விஷயமா வந்தேன்... அடுத்த முறை வரும் போது கண்டிப்பா அழைச்சிட்டு வரேன்.' பொத்தாம் பொதுவாக சொல்லிவைத்தான்.

'கீர்த்தனா எதாவது விசேஷமா இருக்காளா...'

அவள் கேட்டதும்... அவன் முகம் மாறியது.. ஏன் தான் எல்லோரும் இதையே கேட்டகிறார்களோ என்று அவனுக்குத் தோன்றியது. திருமணமான் உடன், அடுத்த ஒரு வருடங்களுக்குள் கையில் குழந்தையோடு இருக்க வேண்டும் என்றே சொல்லிவைத்தாற் போல் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஆசைப்படுகிறார்கள், சிறிது காலம் சந்தோசமாக இருந்து விட்டு போகட்டும் என்பதே அவர்கள் மனதில் தோன்றுவதில்லை, இதற்கு ரம்யாவும் விதி விலக்கு இல்லை.
.
'ஆங்.. அதுக்கு என்ன இப்ப அவசரம்.. ஆமா...உன்னோட கல்யாணத்த பத்தி என்னதான் முடிவு எடுத்திருக்கே..'

'நான் தான் முன்னாடியே சொன்னேனேன் இல்லையா... எனக்கு கல்யாண ஆசையெல்லாம் முடிஞ்சுப்போச்சு.. இப்பவெல்லாம் மனசு வேற விதமா ஆசைப் படுது..'

'என்ன இப்படி சொல்லிட்டே... அப்ப சும்மா விரக்தில சொன்னேன்னு நெனெச்சேன்.. ஆனா இப்படி உறுதியா இருப்பேன்னு எனக்கு தோனல.. .'

'ஆமா கார்த்தி. எனக்கு இப்ப ஒரு ஆசை இருக்கு..'

'என்ன...'

அவள் சொல்லச் சொல்ல... அவன் கண்கள் விரிந்தது... இப்படி ஒரு முடிவுக்கு அவள் வருவாள் என்பதை அவன் கனவிலும் நினைக்கவில்லை. ஆம்.. ஒரு அநாதை ஆசிரம் தொடங்கப் போகிறாளாம், தெருவில் அனாதையாய் இருக்கும் குழந்தைகளை எல்லாம் சேர்த்து...ஒரு பள்ளி தொடங்கும் எண்ணமும் உள்ளதாம்.

'நல்ல விஷயம் தான்.. எனக்கும் கொழந்தைங்கன்ன ரொம்ப பிடிக்கும்..இதுக்கெல்லாம்.. பணத்துக்கு என்ன பண்ணுவே..'

நான் அமெரிக்காவில் சேர்த்த பணம் கொஞ்சம் இருக்கு.. அப்புறம் ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சி அதுல வர்ற பணத்த வச்சி.. கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கப் போறேன்.

'கார்த்தி.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா... '

'என்ன சொல்லு..'

'நீ தான் பிசினஸ்மென் ஆகா இருக்கிறீயே.. உன்னால முடிஞ்ச உதவி பண்ணலாமே..' என்று கூற...

'அதுக்கென்ன.. எவ்வளவு பணம் வேணும் சொல்லு.' என்றவன் தன்னுடைய நிதியாக.. ஒரு குறிப்பிட்ட பணத்தை ஒரு செக்கில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்துவிட்டான்.

'இது அட்வான்ஸ் தான்... உனக்கு எப்ப எப்ப பணம் தேவையோ.. என்ன தயங்காம கேளு.. உனக்கு கண்டிப்பா நான் உதவி செய்றேன்..எனக்கு தெரிஞ்ச பிசினஸ்மென் எல்லாரையும் அறிமுகப் படுத்தறேன் '

'ரொம்ப சந்தோசம் கார்த்தி... அத விட ஒரு முக்கியாமான விஷயம் இருக்கு..'

என்றவள் அந்த விஷயத்தைக் கூற... அவனுக்கு சப்த நாடியும் அடங்கிப் போயிற்று. ரம்யாவா இந்த முடிவுக்கு வந்தாள்... இவளால் எப்படி சத்தியாம் ஆயிற்று.. எப்படி இதை ஏற்கத் துணிந்தாள்.. தன மனதிற்குள் நினைத்தவாறே சென்னையை அடைந்தான்.

'எனனப்ப கார்த்தி.. பெங்களூர் ட்ரிப் எப்படி இருந்தது..'

அப்பா அவனிடம் கேட்க..

'சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும நடக்கல அப்பா. இந்த ட்ரிப் வெற்றிகரமா அமையலே தவிர... ஆனா.. வெற்றிக்கான அடித்தளம் அமைச்சிட்டு வந்திருக்கேன்.'

'என்னப்பா சொல்ற. ஒண்ணுமே புரியல.. .'

' இடத்த எல்லாம் பார்த்திட்டு வந்திருக்கேன்.... கொஞ்சம் பணம் தான் அதிகமா கேக்கறாங்க... பேசிட்டு வந்திருக்கேன்... வேற நல்ல இடம் கெடைச்ச உடனே ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..'

வெற்றி என்பது ஒரே முயற்சியில் அனைவருக்கும் கிடைத்து விடுமா என்ன... அப்படியே கிடைத்தாலும் அந்த வெற்றியில் என்ன பெருமை இருக்கிறது.. உடனே தலைகனம் ஏறுவது.. அந்த தலைகனத்தால் . சுவைத்த வெற்றியை கூடியே விரைவிலே இழந்துவிடுவது தான் உலகில் பெரும்பாலும் நடந்து வருகிறது.

அதே சமயம் அதிக தோல்விக்கு பிறகு.. போராடி கிடைக்கும் வெற்றி தான் நீடித்து நிலைத்து மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.. அது தவறு செய்யாமல் தோல்வியின் மூலம் கற்று கொண்ட பாடங்களால் மென்மேலும் முன்னேற வழி வகுக்குகிறது.இது அனைவருக்கும் பொருந்தும் வாழ்வியல் உண்மையாகும் .

உலகில் எதுதான் சரியாக நடக்கிறது யார் தான் கடைமையை சரியாகச் செய்கிறார்கள் காலத்தை தவிர.. ஆம்.. காலம் ஒன்று மட்டும் தான் எப்பொழுதும் ஓயாமல் தன கடமையை சரியாகச் செய்கிறது.. எப்படித்தான் நாட்கள் செல்கிறதோ.. மாதங்கள், வருடங்கள் என ஓடிக்கொண்டு தான் இருக்கிறது...

அடுத்த ஆறு மாதங்கள் பல முறை கார்த்தி பெங்களூர் சென்று வருவதும்.. முயற்சி செய்வதுமாய் இருக்க..பலன் தான் பூஜ்யமாக இருந்தது.. கஜினி முஹம்மது போல திரும்ப திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்க...

அன்றைய நாள் ... தன்னுடைய ஆபீசில் வேலை மும்மரமாய் இருக்க.. பெங்களூர் இருந்து போன் வந்தது, அந்த செயதியைக் கேட்டதில் இருந்து அவன் அப்படியே துள்ளி குதிக்க வேண்டும் போல இருந்தது... ஆபீஸ் என்பதால் அமைதியாக தன்னுள் மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டான்.

அது.. தான் மிகவும் எதிர்பார்த்த, தன்னுடைய கனவு தொழிச்சாலை தொடங்க சரியான இடம் கிடைத்து விட்டதாகவும், அந்த நிலத்தின் உரிமையாளரும் பேசிய தொகைக்கு சம்மதம் தெரிவித்தாகவும், தாங்கள் எவ்வளவு சீக்கிரம் நிலத்தை பதிவு செய்து விடுவது நல்லது என்று தன்னுடைய டீலர் ஒருவர் தெரிவிக்க..
உடனே தன்னுடைய மகிழ்ச்சியை அப்பாவிடமும், அம்மாவிடமும், கீர்த்தானாவிடும் பகிர்ந்து கொண்டான். அடுத்து, பெங்களூர் செல்வதற்காக ஏற்பாடுகளை செய்யுமாறு தன உதவியாளரிடம் தெரிவித்து.. மாலை வெகு சீக்கிரமாகவே வீட்டிக்கு தன் காரை எடுத்துக் கிளம்பினான்.

போகும் வழியில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.. இந்த மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் சொல்வதை விட.. ஒரு பொருளாய் வாங்கி கீர்த்தான்விடம் கொடுத்து அவளை சர்பிரைஸ் செய்து இந்த இரவை மகிழச்சியாய் அவளுடன் செலவிட எண்ணியவாறு வழியில் இருந்த ஒரு பிரபலமான பட்டு துணிக்கடைக்குச் சென்று..கீர்த்தனாவுக்கு பிடித்த. சந்தன நிறத்தில் ஒரு பட்டு புடைவையை மிகவும் சிரத்தையாய் தேர்ந்து எடுத்து . அதற்கான பணத்தை கவுன்டரிடம் கட்டி விட்டு.. காரை எடுத்து வீட்டிற்க்குச் செல்ல.. .

கார் ஒரு வளைவில் திரும்பும் சமயம்.. ஒரு குழந்தை குறுக்கே வேகமாக கடக்க... சடாரென்று பிரேக் அடித்து.. காரை நிறுத்தி.. குழந்தைக்கு என்னானது என்று பார்க்க.. ஆண்டவன் புண்ணியத்தில்.. குழந்தை ரோட்டை கடந்து அந்த பக்கம் சென்று விட்டது.. அதற்குள்.. அந்த குழந்தையின் அம்மா ஓடிவர.. நன்றாக கூர்ந்து கவனிக்க... அது ஜெனி என்று உறுதி செய்து... அவளிடம் செல்ல..

'ரொம்ப தேங்க்ஸ் சார்... சொல்லச் சொல்ல கேக்காம ஓடிவந்திட்டா.. '

அப்பொழுதான் அவனை நிமிர்ந்து பார்க்க..

'நீ.. நீ.. கார்த்தி தானே.'

'என்ன ஜெனி.. என்ன அதுக்குள்ள மறந்திட்டே.. இப்படியா கொழந்தைய அஜாக்கிரதைய விடறது.. கொஞ்சம் நேரத்தில என்னனமோ ஆகிருக்குமே.'

'அவ ரொம்ப சுட்டி கார்த்தி.. கையை பிடிச்சிட்டே வந்தா. அந்த கடையில பேசிட்டு இருக்கும் போதே ஓடி வந்திட்டா..'

தன்னை உதாசீனம் படுத்திய அதே ஜெனி தான், தன் காதலை அற்ப பணத்திற்காக வேண்டாம் என்றவள், இன்று ஒரு குழந்தைக்கு தாயாக.. ஏனோ முகத்தில் போலிவில்லாமல், உடல் மெலிந்து, முகத்தில் சோகத்தை சுமந்தபடி.. கண்ணுக்கு கீழே லேசாக கருவளையம் எதிர்பார்க்க... ஏன்.. அதற்குள் இந்த மாதிரி ஆகிவிட்டாள்.. மனம் கேட்க நினைத்தது..

'எப்டி இருக்கே ஜெனி. ' மனம் பழைய நினைவுகளை ஒரு கணம் தோன்றி மறைந்தது.

'இருக்கேன்...'

அந்த ஒற்றை வார்த்தை அவள் சோகத்தையே சொல்லாமல் சொல்லியது.

'உன் பேரு என்னம்மா .. ' குழந்தையை கேட்டான்.

'ஜெசி.' என்றால் மழலையாக..

குழந்தை அழகாக கல்லூரி நாட்களில் பார்த்த ஜெனியைப் போல.. கன்னம் இரண்டு உப்பி, கூந்தலை பறக்க விட்டபடி.. கண்கள் மிக கச்சிதமாக இங்கும் அங்கும் அலை பாய்ந்தபடி, தளிர் நடை நடந்து, பிங்க் கலர் பிராக் அணிநதபடி... பார்ப்பதற்கு ஒரு குட்டி ஏஞ்ஜலாய் இருந்தாள்.

குழந்தைப் பார்த்தவுடன்.. அதை அப்படியே தூக்கி.. தன் மார்போடு அணைத்தபடி தூக்கி கொண்டான், குழந்தை என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம், அதுவும் தான் ஆசை ஆசையாய் காதலித்தவளின் குழந்தை என்றால் கேட்கவா வேண்டும்...

'வா.. ஜெனி.. காரிலே உன்ன வீட்ல ட்ராப் பண்றேன்.'

'வேண்டாம்... கார்த்தி... நான் நடந்தே போறேன்..'

'சரி.. அப்ப... ஒரு காபி யாவது சாப்பிட்டு போகலாமே..'

'சரி..'
காரை ஒரு ஓரமாக நிறுத்து விட்டு... குழந்தையை தன் தோளில் சுமந்தபடி.. பக்கத்தில் உள்ள ஒரு காபி ஷாப்புக்கு சென்றனர்.

போகும் வழியிலே... அருகில் உள்ள கடையில்... குழந்தைக்கு பிஸ்கட் மற்றும் சாக்லட்டை வாங்கிக் கொடுத்தபடி காபி ஷாப்பில் நுழைந்து..

'அப்படி உக்கார் ஜெனி .. உன்னோட வீட்டுக்காரர் என்ன பண்றார். எப்படி லைப் போயட்டிருக்கு ...பார்த்து ரொம்ப நாளாச்சி இல்ல..'

குழந்தையை தன மடியிலே வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்க.. .

'ஜெசி யார் கூப்டாலும் போகமாட்ட.. அது என்னமோ தெரியல.. உன் கிட்ட ஒட்டிக்கிச்சி..'

நீ தான் என்ன வெறுத்திட்ட....கொழந்தைக்காவது என்ன பிடிச்சிருக்கே... சொல்ல நினைத்து ...சொல்லாமல் மனதில் நினைத்து கொண்டான்..

'கொழந்த தானே.. வித்தியாசமா இருக்கேன்னு என் கிட்ட வந்திருக்கும்... அத விடு.. நான் கேட்டனே பதிலே சொல்லல..'

'அது வந்து.. நான் நேனேச்சமாதிரி என் லைப் எனக்கு அமையல கார்த்தி.....பணம் தான் பெரிசுன்னு நெனெச்சி... வசதியான ஒருத்தனை கல்யாணம் பண்ணி... அவன் கொஞ்ச நாள் என் கூட இருந்திட்டு... என்ன விட வசதியான பொண்ண பார்த்த உடனே என்ன டிவர்ஸ் பண்ணிட்டு போய்ட்டான்... இப்ப.. தனியா அம்மா வீட்ல கொழந்தையோட இருக்கேன்..

சுருக்கமாக கதையை சொல்ல.. அவள் கண்களைப் பார்த்தான்.. கண் கலங்கி இருந்தது.. காலேஜ்ல் பார்த்த ஜெனியா.. அந்த கம்பீரம், அந்த திமிர், எல்லோரையும் எடுத்தெறிஞ்சி பேசும் குணம்... நிமிர்ந்த நடை.. எதுவும் இல்லாமல், அனைத்து இழந்து அவளை பார்க்கவே அவனுக்கு பரிதாபமாய் இருந்தது..

'சரி.. எல்லாம் விதி காத்தி.. நாம் ஆசைப்பட்டதெல்லாம் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது இல்ல.. நீ எப்டி இருக்க..'

'ரொம்ப சாரி ஜெனி.. எனக்கு கேக்கவே கஷ்டமா இருக்கு.. உனக்கு இப்படி ஆகுமுன்னு நான் நேனேக்கவே இல்ல..'

' அது முடிஞ்சா போன கதை... அத விடு... எதோ எனக்கு நல்ல வேலை இருகிறதால ... எனக்கு கஷ்டமெல்லாம் பெரிசா தெரியல... உன்ன பத்தி சொல்லு.. '
தான் அமெரிக்கா சென்றதையும்.. படிப்பை முடித்ததையும் ... கீர்த்தனாவை திருமணம் முடித்ததையும்... அப்பாவின் கம்பனியை நடத்துவதையும் ... ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்..

பேரர் காபி கொண்டு வர... இருவரும் குடிக்க.. குழந்தை சாக்லட்டை வாயில் குதப்பி.. முகமெல்லாம் பூசிக்கொண்டது..

'சரி.. கார்த்தி.. அம்மா. . தேடுவாங்க.. நான் என் கதையை சொல்லி... ரொம்ப போர் அடிச்சிட்டேன்....'

'அப்படி எல்லாம் இல்ல... எனக்கு கஷ்டமா இருக்கு... ஜெனி..'

ஒவ்வொருவருக்கும் ஒரு கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது வாழ்வில்.. அவள் கிளம்ப.. தன காரை ஸ்டார்ட் செய்தான். கார் கண்ணாடியில் அவள் தன்னை திரும்பி பார்த்த பார்வையை கவனித்தான்.. அந்த பார்வையில்.. எதோ தன் மனபாரத்தை இறக்கி விட்ட திருப்தியா... அல்லது ... அவனை தவற விட்டதை நினைத்து வருத்தமோ .. எதோ ஒன்று அவள் கண்களில் தெரிந்தது....

அன்று..
காதல் சொல்ல
கண்ணீரை பரிசளித்தாய்
இன்று
உன் வாழ்வே
கண்ணீரில் மிதந்தபடி
நெஞ்சுதான் விம்முதடி ..!


அடுத்த சில தினங்களில்...

கார்த்தி நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய பெங்களூர் சென்றிருந்த சமயம், கார்த்தியின் ஆபீசில் ஆடிட்டிங இருக்க.. அந்த நேரத்தில் கார்த்தி வேறு இல்லாததால், என்ன செய்வது என்று கார்த்தியின் அப்பா கையை பிசைந்து கொண்டிருக்க ... திடீர் என்று அவர் மனசில் அந்த யோசனை தோன்றியது.. உடனே கீர்த்தனாவுக்கு போன் செய்து விபரத்தைக் கூறினார்.

'ஏம்மா...நம்ம கம்பெனியில ஆடிட்டிங் நடக்கப் போவுது.. உனக்கு தான் பைனான்ஸ் அக்கௌன்ட்ஸ் எல்லாம் தெரியுமே... கொஞ்சம் பாக்கறியாம்மா .. '

'பாக்கறேன் மாமா ..'

'நான் ஒண்ணு செய்யறேன்.. நம்ம கம்பெனி அக்கௌன்டன்ட் கிட்ட சொல்லி.. அக்கௌன்ட்ஸ் புக்ஸ் எல்லாம் வீட்டுக்கே கொண்டு வரச் சொல்றேன்... கொஞ்சம் சரியா இருக்கான்னு பாரேன்..'

'சரி என்றவள்..' மறுநாள் ஆபீசிக்கு விடுமுறைச் சொல்லி..

அக்கௌன்ட்சை சரிபார்த்துக் கொண்டிருக்க..

கம்பனியின் வரவு செலவு கணக்கில் சில தவறுகள் இருப்பதையும்.. தவறுக்கு கார்த்தியும் காரணமாக இருந்ததை அக்கௌன்ட்டென்ட் மூலம் அறிய.. அதனால் அவள் இருவருக்கும் மனஸ்தாபம் வந்து சண்டையாகி கீர்த்தனா அவனை விட்டு பிரிந்து செல்லும் அளவுக்கு அது கொண்டு செல்லும் என்பதை அறியாமல்... கார்த்தி பெங்களூரில் நிலத்தை பதிவு செய்துவிட்ட மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தான்.
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty Re: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by udhayam72 Mon Jun 10, 2013 4:18 pm


நீ
கறுப்புக் கண்ணாடி
எல்லாம் அணியாதே
அங்கே பார்
சுட்டெரிக்கும் சூரியனும்
தட்டுத் தடுமாறி மேகத்திற்குள்
மறைகிறான்
உன் அழகை
ஒளிந்திருந்து பார்க்க...!



அது ஒரு அழகான கிராமம்.. எங்கு நோக்கிலும் பசுமை... அழகிய மா, வேம்பு மரங்கள்... ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள்.. விரிந்து பரந்த ஆலமரங்கள்.. கடலைப் போன்ற பெரிய ஏரி.. துள்ளி விளையாடும் மீன்கள்.. வானைத் தொடும் கோவில் கோபுரங்கள்.. கவலை இன்றி பரந்த வானில் பறந்து திரியும் பறவைகள்.. புல்வெளியில் சுதந்திரமாக மேயும் மாடுகள், ஆடுகள்.

பூத்து குலுங்கும் மலர்கள்.. அழகிய வண்ண வண்ண பட்டாம் பூச்சிகள் .. சுத்தமான தென்றல் காற்று.. ஊரைச் சுற்றி அரண்களாக மலைகள்.. மலையிலிருந்து விழும் அருவி. பார்பதற்கே மிக ரம்மியமாய்..

அங்கே..ஒரு குடில்.. அந்த குடிலில் கணவன் மனைவி . சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்...மிக அன்னியோன்னியமாக.. ஆதர்ச தம்பதிகளாக...ஊரே கண் படும் அளவிற்கு...

கணவன் அதிகாலை எழுந்து வேலைக்கு செல்வதும்.. அவள் அவனுக்கு பணிவிடை செய்வதோடு... வீட்டு வேலைகளை முடித்து அவன் பொழுது சாயும் போது கணவனின் வருகைக்காக வாசலில் காத்திருப்பதும்.. இரவை இன்பமாய் கழிப்பதும்.. வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்க..

ஒரு நாள்... அவளும் அவனும் இரவில்.. .வீட்டின் வெளியே கயிற்று கட்டிலில் .. தென்றல் காற்று வீச..வெண்நிலவு வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்க.. நட்சத்திரங்கள் இவர்களின் நெருக்கத்தை கண்டு கண் சிமிட்ட . அவன் அவளை விரக தாபத்தில் கட்டி அணைத்து கொஞ்சியபடி இருக்க...

வானத்தில் இருந்து ஒரு நட்சத்திரம் மிக மெதுவாக கீழிறங்கி... தரையை தொட்டதும், மிகப் பிரகாசமான ஒளியுடன் ஒரு அழகிய இளமங்கையாக மாறி . அவர்கள் அருகில் வந்து.. அவனை தன்னுடன் வருமாறு அழைத்து.. தன் கையை நீட்ட..

அவன்.. தான் கட்டியவளை விடுவித்து... பாம்பாட்டிக்கு கட்டுண்ட பாம்பைப் போல.. அந்த மங்கையின் கையைப் பற்றியபடி கட்டியவள் கண்ணெதிரே நடக்க.. சிறிது தூரம் சென்றவர்கள்... அப்படியே அந்தரத்தில் மிதந்தபடி... வானை நோக்கி மேலே சென்று இறுதியில் மறைந்தே போனார்கள்...

'கார்த்தி... கார்த்தி.. என்ன விட்டுப் போகாதே... ' திடுக்கிட்டு எழுந்த கீர்த்தனா.. சுற்றும் முற்றும் பார்க்க... அருகில் கார்த்தியை காணாமல் தவிக்க.. அவன் பெங்களூர் சென்றிருப்பது அப்பொழுதான் அவள் நினைவுக்கு வந்தது.

ச்சே... என்ன ஒரு கெட்ட கனவு. அதுவும் கார்த்தி அருகில் இல்லாத பொழுது.... கணவனை அழைத்து சென்ற பெண் ...யோசித்து யோசித்து பார்க்க... அந்த முகம் அவளுக்கு சரியாக நினைவுக்கு வரவில்லை

அதற்கு மேல் அவளுக்கு தூக்கம் வராமல் போகவே.. புரண்டு புரண்டு படுத்தவள்... எப்பொழுது உறங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.
மறுநாள்...

இரவில் வந்த கனவு மனதில் வந்து போயிற்று.. எதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்று அவள் உள்மனது கூறியது. ஒருவேளை கார்த்தி ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டானோ என்று தோன்ற... உடனே அவனுக்கு போன் செய்து.. தான் இரவு கண்ட கனவைப் பற்றிக் கூற..

'எதையாவது பார்த்து பயந்து இருப்ப... நான் நல்லா தான் இருக்கேன் பயப்படாதே..'

'இல்ல கார்த்தி... எனக்கு எதோ விபரீதம் நடக்கும் போல உள்மனசுல தோணுது..'

'அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது.. பயப்படாம இரு..'

ஆறுதல் கூறினான்..அவன் நலமாய் இருப்பதை அறிந்த உடன் நிம்மதி பெருமூச்சு விட்டாள், இருந்தாலும் அந்த கனவு அவளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது என்னோவோ உண்மைதான்.

அன்று ஆபீஸ் விடுமுறை எடுத்து...

மாமனார் சொன்னபடி கம்பனியின் கணக்கு புத்தங்களை புரட்டி... எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்க..

கணக்கில் வராத செலவுகள் செய்யப்பட்டிருந்ததை அறிந்தவள். அந்த செலவு விபரத்தை ஆராய்ந்து பார்க்க...

அந்த செலவுகள் எல்லாம் பெங்களூர் சென்று வருவதற்கும் அங்கு தங்கி இருந்த செலவாவகவும் இருந்தது.. ஆனால் அதற்கான சரியான விளக்கமும் காரணமும் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டாள்.. உடனே அக்கௌன்டன்ட்டுக்கு போன் செய்து அதற்கான விளக்கம் கேட்க..

'சார் தான்.. அப்படி எழுதச் சொன்னார் .. என்ன செலவுன்னு சொல்லல.. ' என்று கூற..

'தேங்க்ஸ் சார்' என்று கூறி போனை வைத்தாள்.

கார்த்தியின் பெங்களூர் செலவுகள் எல்லாம் எந்த விதமான வரைமுறைக்கும் வழி முறைக்கும் இல்லாமல் எழுதப்பட்டிருந்தைக் கண்டு திடுக்கிட்டாள்..

மேலும் ஐந்து லட்சம் ரூபாய் ரம்யா பெயரில் செக் கொடுக்கப் பட்டிருந்ததை கண்டதும்... அதிர்ந்தே போனாள்.

ரம்யா என்றதும் அவளுக்கு கார்த்தியின் பெங்களூர் தோழி தான் நினைவுக்கு வந்து போனது, மேலும் ரம்யாவுக்காக, தான் கார்த்தியுடன் சண்டை போட்டதை நினைவு கூர்ந்தாள்.

ரம்யாவைக் காண்பதற்கு தான் அடிக்கடி பெங்களூர் செல்கிறானோ என்ற ஐயப்பாடும் அவள் மனதில் தோன்றி மறைந்தது..

அவளுக்கு கார்த்தியும் மேல் சந்தேகம் தோன்றியது. அதத சந்தேகம் படிப்படியாக வெறுப்பாக மாறியது. கார்த்தி பெங்களூரில் இருந்து சென்னை வந்ததும், இதைப்பற்றி தீர விசாரிக்க வேண்டும் என்று நினைத்தவளாய் இருக்க..

ஒருவேளை தான் நினைப்பது உறுதியானால்... நினைக்கவே அவளுக்கு தலை சுற்றியது... தான் நினைத்த மாதிரி இருக்கக்கூடாது என்று இல்லா கடவுளை எல்லாம் வேண்டினாள்.

சந்தேகம் என்ற கொடிய நோய் அவளுள் ஆணிவேராக ஊன்றி.. அது அவள் உடம்பு முழுவதும் தன கிளைகளைப் பரப்பி விட்டது.

அன்று இரவு..

கார்த்தி முகமெல்லாம் மகிழ்ச்சியாய் பெங்களூரில் இருந்து சென்னை வந்தடைந்தான். அப்பாவிடமும் அம்மாவிடமும் தன மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு.. கீர்த்தனாவைத் கண்கள் தேட .. அதைப் புரிந்து கொண்ட அம்மா..

'கார்த்தி... கீர்த்தனாவுக்கு தலைவலியாம் ரூம்ல இருக்கா.. போய்ப் பாரு..'


பூனை போல அடிஎடுத்து வைத்து பெட்ரூமை அடைய ... அங்கே கீர்த்தனா ஒருகளித்து படுத்தவாறு இருந்தாள், மெதுவாக கிட்டே நெருங்கி... அவள் தோளை தன பக்கம் இழுத்து கட்டி அணைத்து முத்தம் கொடுக்க..

சடாரென்று அவன் கையை தட்டி விட்டாள் . இந்த செய்கை கார்த்திக்கு விநோதமாய் தெரிய... இதுவரைக்கும் அவன் செய்யும் குறும்புகளை ரசித்தவள், முதன் முதலாய் அப்படி செய்ய அவன் துணுக்குற்றான்.


'என்ன கீர்த்தி . ஆசை ஆசையாய் வந்தேன்... இப்படி தள்ளிட்டியே..'

'என்ன தொடாதிங்க... கண்டவள தொட்ட கையை வச்சு என்ன தொடவேண்டாம்..'

யாரைக் கண்டவள் என்கிறாள்.. என்னாச்சு இவளுக்கு..ஏன் இப்படி எல்லாம் பிதத்றுகிறாள்.

என்னாச்சு.. அம்மா தலைவலின்னு சொன்னாங்க... மெடிசின் எடுத்துக்க வேண்டியதானே...'

'இப்ப ... மருந்து ஒண்ணு தான் கொறைச்சல்...அப்படியே கொஞ்சம் விஷத்தையும் கொடுத்துடுங்க... ஒரேடியாய் போய் செர்ந்திடறேன்... நீங்க ஜாலியா இருக்கலாம்.. என்னோட தொந்தரவு எதுவும் இல்லாம..'

'உனக்கு மூளை ஏதாவது கொழம்பிப் போச்சா. ..இப்படி எல்லாம் பேசற...என்ன பேசரோம்ன்னு தெரிஞ்சி தான் பேசறியா..'

'எல்லாம் தெரிஞ்க்கிட்தால தான் பேசறேன்..'

'எதோ உள்ளர்த்தோட பேசற மாதிரி இருக்கு..'

'உள்ள ஒண்ணு.. வெளிய ஒண்ணுன்னு எனக்கு பேசத் தெரியாது...'

'என்னதான் சொல்லவர்ற... ஏடா கூடாம பேசிட்டு இருக்க.. புரியும் படியா தான் பேசேன்..'

அவன் மிகவும் பொறுமையாய் பேச.. அவளோ.. ஏறு மாறாகவே பதில் அளித்தாள்.

கம்பனியின் அக்கௌன்ட்ட்ஸ் எல்லாம் எடுத்து அவனுக்கு காண்பித்து ..

இது தான் நீங்க பெங்களூர் போயிட்டு வர்ற லட்சனமா.. ஒவ்வொரு தடவையும்... யாருக்கோ பணம் கொடுத்திட்டு வரீங்க்..

'அது வந்து.. கீர்த்தி.. ஒரு சாரிடபிள் டிரஸ்ட் இருக்கு.. அனாத ஆசிரமம்.. நாம தான் கொழந்த இல்லாம ஏங்கிட்டு இருக்கேமே.. அங்க இருக்கிற கொழந்தைங்கள தத்து எடுத்து ... அவங்களுக்கு மாசம் மாசம் ஆகிற செலவ நான் ஏத்துக்கிட்டு இருக்கேன்.. இப்படி புண்ணியம் செஞ்சாவது.. நமக்கு கொழந்த பொறக்கும் இல்லையா.. அதான் டோநேஷன் கொடுத்தேன்.. அத வெளியே சொல்லக் கூடாதுன்னு .. கணக்க மாத்தி எழுதச் சொன்னேன்..'

'நல்ல காரியத்த ஏன் மறைக்கணும்... எதோ தப்பு பண்றதால தான் உங்களுக்கு மறைக்கனும்ன்னு தோணுது..'

'அப்படி ஏதும் தப்பு பண்ணல .. கீரத்தி .. என்ன நம்பு...'
'சரி.. இத நம்பறேன்... இது என்ன ரம்யா பேர்ல செக் ஐந்து லட்சம் கொடுத்து இருக்கீங்க... யார் அந்த ரம்யா.. உங்க பழைய பிரெண்டா.. காதலிக்கும் பொது. எனக்காக பேஸ்புக் இருந்தது அக்கவுன்ட்டை கிளோஸ் பன்னல.. அது பொய்யா.. என்ன ஏமாத்தி . அவ கூட இன்னும் பழகிட்டு இருக்கீங்க..'

'அது வந்து...அது வந்து..அவள நான் பார்த்தே நெறைய மாசம் ஆயிற்று..''

'ஒ .... அப்ப பார்த்ததா ஒத்துக்கிறீங்க இல்ல. அது போதும்...'

'வந்து.. அத வந்து...'

'ஏன்... முழுங்கிரீங்க.. பணம் மட்டும் தான் தந்தீங்களா ... இல்ல உங்களையும்...'

'ஸ்டாப் இட்.. கீரத்தி... நீ அளவுக்கு மீறி பேசற .'

'ஒ ... அவள பத்தி சொன்னா... உங்களுக்கு ஏன் பொத்துகிட்டு வருது..'

'என்ன எதாவது சொல்லு . ரம்யா பத்தி எதுவும் சொல்லாத...அவ என்னோட பெஸ்ட் பிரண்டு.. '

அவன் கடையிசியாக சில மாதங்கள் முன்பு தான் அவளைப் பார்த்தான்.. அதற்கு பிறகு அவள் எதோ ட்ரைனிங் போவதாக கூறிவிட... பிறகு சந்திக்கவே இல்லை.. ஆனால் அந்த டிரஸ்ட் பெயரில் மாத மாதம் பணம் மட்டும் அனுப்பி வைத்தான்.

சரியாக மாட்டிக்க்கொண்டோம் என்பதை அப்பொழுதான் உணர்ந்தான்.. எப்படி இவளுக்கு தங்களின் நட்பை உணர்த்துவது என்றே தெரியவில்லை..

'அந்த அளவுக்கு முத்தி போச்சா.. சோ... உங்கள் நல்லா முந்தானையில் முடிச்சி வச்சிருக்கா .. அப்படி என்ன அவ கிட்ட பார்த்துட்டிங்க...'

'ரம்யாவைப் பத்தி பேச உனக்கு என்ன அருகதை இருக்கு....ஒரு நல்ல பிரென்ஷிப்ப பத்தி உனக்கு என்ன தெரியும்..'

கார்த்தியும் மதி இழந்து இப்படி பேசி விட..

'ஒ.. நாமளும் ஆரம்பத்தில ப்ரெண்டா தானே பழகினோம்.. எனக்கு உங்கள பத்தி தெரியாதா.. '


'அது கல்யாணத்துக்கு முந்தி..'


'அப்ப நான் தேவையா இருந்தேன்.. இப்ப உங்களுக்கு சலிச்சுப் போச்சி.. அதனால அவ தேவையாயிட்டா.. அதானே..'


'அறிவிருக்கா.. மூளையோட தான் பேசறியா..'


இப்படி அவன் கூறியவுடன் . பெண்களின் கடைசி ஆயுதத்தை பிரயோகித்தாள். அவள் கண்களில் இருந்து தரை தாரையாய் கண்ணீர் வந்தது.. வழிந்தோடும் கண்ணீரின் ஊடே ...

'ஒ.. அந்தளவுக்கு போயிட்டிங்களா .. இதுக்குதான் அடிக்கடி..பெங்களூர் போறீங்களா... பெங்களூர் ஆபீஸ் திறக்கறேன்னு... அங்கேயே ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணிட்டிங்க..'

அவள் வாய்க்கு வந்தபடி பேச.. இனி இவளிடம் பேசி ஒரு பிரயோசனும் இல்லை .
அவள் அப்படி கோபத்தோடு பேசுவது புதிதாக மட்டும் அல்ல புதிராகவும் இருந்தது. எந்த ஒரு விசயத்தையும் அலசி ஆராய்பவள்.. ஏன் இந்த விசயத்தில்..இவ்வளவு அவசப்படுகிறாள். . ஆவேசப்படுகிறாள்..


வாய்ச் சண்டை பெரிதாக..அவளின்..

நாணத்தால் சிவந்த கன்னம்
கோவத்தால் சிவந்தது
சந்திர வதனம்
சூரியப் பார்வையை வீசியது
தாமரைக் கண்கள்
தீயைக் கக்கின
தென்றல் தவழும் முகத்தில்
புயல் வீசியது
நெற்றிப் புருவங்கள்
வில்லாய் மாறி
வார்த்தை கணைகளை
அள்ளித் தெளித்தன.
பூக்காத பூவொன்று சருகானது
வீசும் காற்றில்
தீயாய் மாறி
அனலைக் கக்கியது
துடித்த உதடுகள்
தடித்த வார்த்தைகளை
தொடுத்தன
இறுதியில்...
தென்றல் புயலாகி
புகுந்த வீட்டை விட்டுப்
பறந்து போனது...


ஆம்... அன்று இரவு.. அழுது அழுது அவள் கண்கள் வீங்கி... இனி எதற்காக அவனிடம் குடும்பம் நடத்த வேண்டும் ... கண்ணெதிரே ஆதாரம் இருந்தும்.. பொய் சொல்கிறான் என்றால்.. எதோ உண்மையை மறைக்கிறான் என்று தானே அர்த்தம். இதை விட... எங்கேயாவது சென்று விடலாம்...

உண்மையை மறைப்பது கூட பொய் சொல்வதற்குச் சமானம் தான்.. உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல ...ரம்யா விஷயம் தெரிந்தும்.. ஏன் இப்படி ... எனக்கா இந்த வேதனை.. காதலித்த போது பார்த்த கார்த்தியா இவ்வாறு செய்கிறான்..

கனவில் வந்தது நனவில் நடந்து விட்டது..கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு.. தான் கணக்கை பார்த்தவுடன் அவனை விட்டு பிரிந்து இருக்க வேண்டும்.. காதலித்தவனாயிற்றே என்பதால் தீர விசாரிக்க அதுவே தனக்கு தீங்காய் வந்து விட்டது..

எங்கே செல்வது ..புதுச்சேரி சென்று பெற்றோரிடம் இருக்கலாமா ஒரு மனம் கூற... வேண்டாம் ...ஏற்கனவே அக்காள் வாழ்க்கையிலும் இந்த சிக்கல் வர.. அவர்கள் பட்ட கஷ்டம் போதும்.. மறுபடியும் அவர்களுக்கு கஷ்டம் தர மனம் ஒப்பவில்லை..

அந்த திருமணமோ.. பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த திருமணம்.. இது தானாகவே தேடிக்கொண்ட பந்தம்.. எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது..
என முகத்தில் காரி உமிழ மாட்டார்களா . நீதானே இதற்கு ஆசைப்பட்டாய்.. நீயே அனுபவி என்று..

இப்படி பலவாறு மனதில் தோன்ற.. இறுதியில் அந்த முடிவுக்கு வந்தாள. .


அன்று...
இரு மனம்
ஒரு மனமானது
திருமணத்தில்
இன்று...
ஒரு மனம்
இரு மனமானது
இல்லற வாழ்வில்
இடைவெளியும் விழுந்தது..
நாளை...
இடைவெளி இணையுமா
நடைமுறை ஆகுமா..?


கண்ணை மூடினேன்
கனவில் நீ
உன்னைக் கண்டேன்
என் இதயத்தை தொலைத்தேன்
தொலைத்த இதயத்தை தேடினேன்
கிடைத்தது உன் இதயம்..!




மறுநாள்... பொழுது புலர்ந்தது.. அவரவர் செய்த புண்ணியத்தால்.. கார்த்திக்கு அந்த விடியல் தன் வாழ்நாளில் மிகப் பெரிய சோகத்தைக் கொடுக்கும் என்பதை அவன் அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பில்லை.

யாரோ தன்னை உலுக்குவது போல தோன்ற.. திடுக்கிட்டு எழுந்தவன்
'கார்த்தி... கீர்த்தனாவ எங்கேயும் காணலாடா'

'என்ன சொல்றம்மா.. பக்கத்துல தானே படுத்திருந்தா..நல்லா தேடிப்பாரும்மா... பாத்ரூம்ல இருக்கப் போறா. '

'எல்லா எடத்துல தேடிப் பார்த்திட்டு தான் சொல்றேன்.. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனயா '

நேற்று இரவு நடந்த சண்டையினை நினைத்து பார்த்தவன் விருட்டென்று எழுந்து.. வீட்டைச் சுற்றித் தேட... எங்கும் காணவில்லை... பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன.. அவளுடைய பெட்டியும் காணவில்லை..எங்கே சென்று இருப்பாள் ...

'சொல்லுடா.. என்ன நடந்தது..'

சொன்னான்.

'இதையெல்லாம் முன்னாடியே அவகிட்ட சொல்லிருக்கக் கூடாதா.. அவ என்ன பண்ணிக்கிட்டாளோ.. நம்ம குடும்பத்துல இப்படி எல்லாம் நடந்தது இல்லாடா..முதல்ல அவ எங்க போயிருக்கான்னு தேடிப்பார்..'

ஒருவேளை புதுச்சேரி சென்று இருப்பாளோ.. எப்பொழுது கிளம்பி இருப்பாள்... இங்கிருந்து அங்கு செல்ல எப்படியும் நான்கு மணி நேரம் ஆகும்.

'எதுக்கும் அவ செல்போனுக்கு ட்ரை பண்ணிப் பாரேன்..'
போன் செய்தான். அவள் எடுத்தால் தானே .. மறுபடியும் மறுபடியும் போன் செய்ய... போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

'அம்மா.. அவ புதுச்சேரிக்கு தான் போயிருப்பா .. கொஞ்சம் நேரம் கழிச்சி நான் போன் பண்ணி கேக்கறேன்.

'என்னடா இது.. நம்ம வீட்ல போய் இப்படி நடந்திருக்கு.. யாரோ கண்ணு பட்டிருப்பாங்கன்னு நேனேக்கறேன்..'

'அம்மா இங்க நடந்தத நீ யார் கிட்டேயும் சொல்லாதே...நான் பாத்துக்கறேன்.. '

'சரிடா. முதல்ல அவள கண்டுபிடிடா.. அவ மட்டும் நம்ம வீட்டுக்கு திரும்பி வரட்டும்..மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு நாம குடும்பத்தோட போய் பொங்க வச்சி கும்பிடனும்... அம்மா.. அங்காள பரமேஸ்வரி தாயே .. மறுமகள நல்லபடியா திரும்ப கொண்டாந்து விட்டுடு..'

அம்மா கடவுளை வேண்டிக் கொண்டாள்.

பெட்ரூமை இன்ச் பை இஞ்சாக அலசி.. கீர்த்தனா ஏதாவது கடிதம் வைத்து விட்டுச் சென்றாளா என்று ஆராய்ந்தான்.

கடிதம் எதுவும் கிடைக்கவில்லை.. ஒருவேளை நாம் தான் இரவு அதிகமாக பேசி விட்டோமோ... இல்லையே ..எல்லாவற்றையும் பேசியவள் அவள் தான்.

மனசு படபடத்தது. எதுவும் செய்யப் பிடிக்கவில்லை.. நேரம் சென்று கொண்டே இருந்தது..

அவள் ஆபீசில் போன் செய்து கேட்க.. கீர்த்தனா இன்னும் ஆபீஸ் வரவில்லை என்ற பதில் தான் வந்தது.

அவள் கண்டிப்பாக புதுச்சேரி தான் சென்றிருக்க வேண்டும்.. மனதில் தோன்றியது... போன் செய்தான்.

'ஹலோ.. '

கார்த்தியின் குரலை அறிந்த கீர்த்தனாவின் அம்மா.

'எப்படி இருக்கீங்க மாப்பிள்ள ...கீர்த்தனா எப்டி இருக்கா..'

பதில் இவ்வாறு இருக்க .. அவனுக்கு புரிந்து விட்டது... கீர்த்தனா அங்கு செல்லவில்லை.. என்ன பதில் சொல்வது .. அவரிடம் தங்கள் மகள் காணவில்லை என்று சொல்லலாமா.. வேண்டாமா.. ஒரு கணம் யோசித்தான்..

'ஒண்ணும் இல்ல அத்தை.. பெங்களூர்லா ஒரு பிளான்ட் ஓபன் பண்ணலாமுன்னு சொல்லிருந்தேன் இல்ல.. அதுக்கான இடம் முடிவாகி.. கூடிய சீக்கிரம் அங்க ஒரு பாக்டரி ஆரம்பிக்க போறேன்.. அத சொல்லாம்னு தான் போன் பண்ணேன் '

'ரொம்ப சந்தோசம்.. உங்க திறமைக்கு நீங்க கண்டிப்பா இத விட மேல வருவீங்க.. கீர்த்தனா அப்பா.. வீட்ல இல்ல.. அவர் வந்தா உடனே இந்த விசயத்தைச் சொல்றேன்..'

'தேங்க்ஸ் அத்தை.. நான் அப்புறமா மாமா கிட்ட பேசறேன்..'

எப்படியோ அவர்களை சமாளித்து விட்டான்.. அடுத்து.. எங்கே அவளைத் தேடுவது... மனம் குழம்ப.. கீர்த்தானவுக்கு மிக நெருங்கிய தோழிகளை எல்லாம் போனில் பிடித்து கேட்க...
இறுதியில்..

அவள் தன் நெருங்கிய தோழியின் வீட்டில் இருந்ததை அறிந்தான்.

மேலும்.. கீர்த்தனா ஆபீஸ் செல்லவில்லை என்றும்... போனையும் சுவிட்ச் ஆப் செய்து உள்ளாள் என்றும் தெரிவித்தாள்.

அவனுக்கு அவள் இருப்பதே மிக மகிழ்ச்சியாய் இருந்தது.. இனி.. அவளை எப்படியாவது சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுவது வெகு சுலபம்... தனக்குள் நினைத்துக் கொண்டான்.

அந்த தோழியிடம் அட்ரஸ் கேட்டு.. அவள் வீட்டுக்குச் சென்றான்.. அவள் தான் அவனை வரவேற்றாள்... தன் வருகையைக் கூறி கீர்த்தனாவை அழைத்து வரக் கூற..

கார்த்தியை பார்ப்பதே அவமானமாய் நினைத்தாள்.. எவ்வளவோ சொல்லியும் அவள் அவனைக் காண மறுத்தாள்

அவனும் கெஞ்சி கேட்டும்.. தன் நிலை தாழ்ந்தும் அவள் பிடிவாதமாகவே இருக்கவே .. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை..

எப்படி அவளை சமாதானம் செய்வது.. மூளையைக் கசக்கினான்.. கடைசியாய்... அதைத் தான் செய்ய வேண்டும்.. வேறு வழி அவனுக்கு தெரியவில்லை.. அதற்கான முயற்சியில் உடனடியாக இறங்கினான்.

கீர்த்தனா கண்விழித்து பார்க்க..

தான் ஒரு கட்டிலில் படுத்து உறங்குவதை உணர்ந்தாள்.. கண்ணை மெதுவாக திறக்க.. லேசான மருந்து வாடை வீசியது... சுற்றும் முற்றும் பார்த்தாள்.. அது ஒரு மருத்துவ மனையின் அறையாய் தெரிய... எதற்கு இங்கு வந்தோம்.. என்னாயிற்று எனக்கு.. எழுந்திருக்க முயற்சி செய்தாள் ... உடம்பெல்லாம் அடித்து போட்டாற் போல இருந்தது.. ஒரு கையில் குளுகோஸ் ஏறிக்கொண்டு இருந்தது.

எப்படி இங்கு வந்தோம்... ஏன் வந்தோம்.. என்ன தான் நடந்தது.. அருகில் யாரும் இல்லாதால்...எதுவும் கேக்க முடியவில்லை.. கண்ணை மூடினாள்.. .நேற்று நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தாள்..

கார்த்தியிடம் சண்டை போட்டது .. அன்றைய இரவு தூங்காமல் கண்ணீர் விட்டபடி அழுது அழுது கன்னமெல்லாம் வீங்கியது.. எல்லாம் நினைவுக்கு வந்து போனது.

ஒரு பக்கம் அசதி. மறுபக்கம் மனதளவில் பாதிப்பு. என்ன செய்வது.. ஒன்றும் தோன்றாமல்.. இறுதியாக... அனைவரும் நன்கு உறங்கும் சமயம்.. தன உடைகளை எல்லாம் ஒரு பெட்டியில் போட்டு.. அதிகாலை நான்கு மணிக்கே வீட்டை விட்டு கிளம்பினாள்..

எங்கு செல்வது என்று மறுபடியும் குழம்ப.. சிறிது தூரம் நடந்தவள் . இறுதியில் தன தோழியிடம் செல்லலாம் என்ற முடிவுக்கு வர.. நேரே அவள் வீட்டுக்குச் சென்று... நடந்ததைக் கூறினாள்..

தோழியும் எவ்வளவோ சமாதானப் படுத்தியும்... அவள் சமாதானம் ஆகவில்லை.
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty Re: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by udhayam72 Mon Jun 10, 2013 4:20 pm

அன்று காலையிலிருந்து எதுவும் சாப்டிட மறுத்து.. இரவு தூக்கமும் இல்லாதாதால்..வயிற்றில் எதோ புரள்வதைப் போல உணர்ந்தாள்... அழு அழுது துக்கம் தொண்டையை அடைத்தது, தோழியின் அறையிலே தனக்கு நடந்ததை நினைத்து வருந்தினாள்.. இனி தன வாழ்க்கை என்னவாகும்.. . எதிர்காலம் எப்படி இருக்கும் கவலை வேறு..

அப்பொழுதான் கார்த்தி அங்கு வர.. கொஞ்சம் மறந்திருந்த துக்கமும் அவன் வந்ததை அறிந்து அதிகம் ஆனதே தவிர குறையவில்லை...

அப்படியே பசியிலும் அசதியிலும் அயர்ந்து தூங்க.. அன்று இரவு... தன் தோழி வந்து.. தன்னை சந்தித்து.. தன்னை பார்க்க ரம்யா வந்திருப்பதாகக் கூற..

கீர்த்தனாவின் ஆத்திரம் இன்னும் அதிகம் ஆயிற்று.. இவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள்.. எல்லாம் கார்த்தியின் ஏற்பாடாய் இருக்க வேண்டும்..
அவளை சந்திக்கலாமா இல்லை வேண்டாமா .. குழம்பினாள்... இறுதியில்.. அவளை சந்தித்து கத்த வேண்டும் போல தோன்ற.. நடத்தைக் கூறி நியாயம் கேட்க நினைத்தாள்.

மாடியிலிருந்து கீழே வந்த கீர்த்தனா... கிழே சோபாவில் ரம்யா அமர்ந்திருப்பதைக் கண்டதும்..

ஒரு கணம் திகைத்து தான் போனாள். ரம்யாவா இவள்.. அவளுக்கு ஒரு கணம் திகைப்பாய் இருந்தது..

அசதி, பசி மயக்கம், உடம்பு வலி.துக்கம்..ரம்யாவின் தோற்றம்.. வயிற்றில் குமட்டல் எல்லாம் ஒன்றாய் தோன்ற.. அப்படியே படியைப் பிடித்தவாறு மயங்கி சரிந்தாள்.

அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது அவளுக்கே நினைவில்லை..

சிறிது நேரம் சுற்றும் முற்றும் பார்த்த பிறகு... ஒரு நர்ஸ் உள்ளே வர..

'சிஸ்டர் ' அழைத்தாள்..

'நான் எப்படி இங்கே..'

'நேத்து நைட் நீங்க மயக்கத்தோட இங்க வந்தீங்க.. அப்ப அவங்க தான் உங்கள அழைச்சிட்டு வந்து அட்மிட் பண்ணீனாங்க..'

'யார் அது..'

'கொஞ்சம் இருங்க..'

வெளியே சென்றவள்... ரம்யாவை அழைத்து வந்தாள் ..

அதே தோற்றம்.. இவாளா ரம்யா... ஒரு அழகான் பெண்ணாக அவளை எதிர்பார்க்க... ரம்யாவோ..

தூய வெள்ளாடையை தலை முதல் கால் வரை உடுத்தி... .உதட்டில் அன்பையும்...கண்களில் கருணையும்....நெஞ்சில் சிலுவையையும் அணிந்து.. . ஒரு வெள்ளைப் புறாவாய் .ஆம்....ஒரு கன்னியாஸ்த்ரியாய் இருந்தாள்.

'நீங்களா ரம்யா..'

'ஆமாம் கீர்த்தனா... நான் தான் ரம்யா.. கார்த்தியோட பிரென்ட்'

'நான் உங்கள இந்த கோலத்தில பார்ப்பேன்னு நேனேக்கல ..'
.
'கார்த்தி சொல்லலையா..'

அன்று இரவு சண்டையில்.. அவள் எங்கே அவனை பெசவிட்டாள்.. அவன் வாய் எடுத்து சொல்லச் சொல்ல... இவள் தான் பதில் பேச்சால் அவன் வாயை அடைத்து விட்டாலே..

'சொன்னார்... அனாத ஆசிரம் நடத்தரீங்கன்னு...ஆனா...'



'ரம்யா தான் என்னோய பழைய பெயர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தான் கிறிஸ்டியனாக மாறிட்டேன்.. இப்ப என்டோட பேர் மேரி' என்றாள்
'எப்ப நீங்க கன்னியாஸ்த்ரியாய் மாறீனீங்க.....'

'நான் நன் ஆகி ஆறு மாசம் ஆகுது.. நேத்து தான் கார்த்தி போன் செய்து சொன்னான்.. என்னால உங்களுக்குள்ள பிரச்சினைன்னு .. அதான் உடனே பெங்களூர் லிருந்து வந்திருக்கேன்..'

ரம்யா என்ற மேரி சொன்ன பதிலில் அவள் திருப்தி அடைந்தாள், தான் ஒரு பெரிய தவறை செய்து விட்டோமே என்று மனம் வருத்தப்பட்டாள். ..

'உங்கள பத்தி தெரியாம... தப்பு தப்பா பேசிட்டேன்.. என்ன மன்னிச்சுடுங்க..'


கட்டிலில் இருந்து எழ முயற்சிக்க..


'எழுந்திருக்க வேண்டாம்.. நீ ரொம்ப பலகீனாமா இருக்க கீர்த்தனா...அப்படியே படுத்திரு..தெரியாம தப்பு செஞ்சா..அது தப்பு இல்ல.. தப்ப உணர்ந்திட்டாவே போதும்.. ஆண்டவன உன்ன மன்னிச்சிடுவார்..'


'தேங்க்ஸ் ரம்யா.. என்னால தான் உங்களுக்கு வீண் சிரமம்.. எனக்காக பெங்களூர் இருந்து வந்து... உங்களுக்கு ரொம்ப தொந்திரவு பண்ணிட்டேன்...'


'எனக்கு எதுக்கு தேங்க்ஸ் ரம்யா.. . ஆண்டவன் என் மூலமா உங்கள இணைக்கணும் நெனெச்சி இருக்கார்.. அது நடந்திருக்கு..இதுல என்ன சிரமம்.. என்னோட வேலை முடிஞ்சு போச்சு.. நான் கிளம்பறேன் கீர்த்தனா... காட் ப்லெஸ் யு ..'


'தேங்க்ஸ் ரம்யா...'


'அடுத்த முறை வரும் பொழுது கண்டிப்பா எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தான் போகணும் ...'

'கண்டிப்பா வரேன்.. உடம்ப நல்ல பாத்துக்கோ... '


ரம்யா வெளியே வர.. அதுவரை கார்த்தி வெளியில் அவளுக்காக காத்திருந்தான்..

'தேங்க்ஸ் .கீர்த்தனாவுக்கு உடம்பு எப்டி இருக்கு..'

'அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சி..நடந்தத புரிஞ்சிகிட்டா.. கொஞ்சம் உடம்பு பலகீனமா இருக்கு... பெட் ரெஸ்ட் எடுத்ததும் வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடலாம்.. . அப்ப நான் கெளம்பறேன்..'

ரம்யா என்ற மேரியை பெங்களூர் செல்ல வழி அனுப்பி வைத்தான் கார்த்தி.


அன்பிற்கு அன்பாகி
நட்புக்கு நட்பாகி
பண்புக்கு இலக்கணமாய்
கருணைக்கே கருணையாய்
கர்த்தர் காலடி தொழுது
காலமெல்லாம் அவர் வழி நடந்து
வாழ்ந்து மறைந்தால் அந்த காரிகை.
ரம்யா சென்ற சிறிது நேரத்தில்... பெரிய டாக்டர்.. ரௌண்ட்ஸ் வர..அவரை வழியிலே நிறுத்தி...

'கீர்த்தனாவுக்கு எப்படி இருக்கு டாக்டர்..' கார்த்தி கேட்க.. .


'நீங்க அவங்களுக்கு என்ன வேண்டும் ..'

'நான் கீர்த்தனாவோட ஹஸ்பண்ட '

'என்ன சார்... பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க.. இந்த மாதிரி சமயத்தில.. சண்ட போட்டு.... அவுங்கள டென்ஷன் ஆக்கி இருக்கீங்க.. '

'டாக்டர் என்ன சொல்றீங்க..'

'எஸ், ஷி இஸ் ப்ரெக்னன்ட் நொவ்'
டாக்டர் சொன்னதும்... கார்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்.
'இந்த விஷயம் கீர்த்தனாவுக்கு தெரியுமா டாக்டர்'
'இன்னும் சொல்லல.. இப்ப தான் சொல்லப் போறேன் '
'அவுங்க... கொஞ்சம் வீக்கா இருக்காங்க.. நீங்க தான் ஜாக்கிரதையா பாத்துக்கணும்..'

டாக்டர் கீர்த்தனாவின் அறைக்குச் சென்று.. கீர்த்தாவிடமும் சொல்ல...
டாக்டர் சொன்ன வார்த்தையை கேட்க கேட்க... கீர்த்தனாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.. அவளுக்கு உடனே கார்த்தியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது..

'டாக்டர் .. நான் என்னுடைய ஹஸ்பண்ட உடனே பாக்கணும்...'

'அவர் வெளிய தான் உக்காந்து இருக்கார்.. ' டாக்டர் சொல்ல..
'நர்ஸ் இவங்க ஹஸ்பண்ட வெளிய உக்காந்து இருக்கார்.. அவர கொஞ்சம் உள்ள அனுப்புங்க..'
சொன்ன டாக்டர் அங்கிருந்து நகர..

கார்த்தியும் இரவு முதல் இங்கு தான் இருப்பதையும்.. நான் நேற்று கோபப்பட்டதால் தான் அவன் உள்ளே வந்து தன்னை சந்திக்கவில்லை என்பதை அறிந்தாள்..

கார்த்தி மனதில் மகிழ்ச்சியுடனும்... அதே சமயம் தயங்கிய படியும் உள்ளே வர.. அவனைப் பார்க்க அவளும் தயங்க...ஒரு சின்ன பிரிவுக்குப் பிறகு.. இருவரும் சந்திக்க..

'கார்த்தி...ஐ ஆம் வெரி சாரி...உங்கள பத்தி தப்பா பேசிட்டேன் .. தப்பாவும் நேநேச்சிட்டேன்..'

'நானும் தான் உன்ன அதிகம் பேசிட்டேன்.. சாரி கீர்த்தனா '

'நீங்க அப்பவே ரம்யாவ பத்தி முழசா சொல்லி இருக்கலாம் இல்ல ....'

'நீ எங்க என்ன சொல்ல விட்ட..'

அவன் மெல்ல அவளை நெருங்க..

'இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. நான் வணங்கின ஆண்டவன் என்ன கைவிடல..'

'ஆமா. .. நான் செய்த புண்ணியம் தான்..'

ஆம்... நாம் செய்யும் புண்ணியங்களும்.. பிராத்தனைகளும் தான் நமக்குப் பிறகு நம் குழந்தைகளுக்கு வாழக்கை நல்லபடியாய் அமைய வழி கொடுக்கும், குழந்தைப் பேறு என்பதும் அப்படித்தான்.. தம் பெற்றோர்கள் செய்த புண்ணியங்களும் பாவங்களும் தான் அதன் பலனை நமக்கு நிர்ணயிக்கின்றன.


'ஒண்ணு செய்யாலாம கார்த்தி.. அந்த அனாத ஆசிரமத்தை நாமலே நடத்தலாம் .'

கீர்த்தனா சொன்ன யோசனை அவனுக்கு பிடித்து விட..

'அப்படியே நடத்திடலாம் ... உத்தரவு மகாராணி...'

கார்த்தி தலை கவிழ்ந்து அவளை வணங்க...

'போதும்... போதும்..' அவன் தலையை தூக்க .

'சரி.. சரி... நீ ஆசை பட்ட மாதிரியே... பையனே பொறக்கட்டும்..'

'அன்பு, பண்பு, பொறுமை, கருணை எல்லாம் இருக்கிற ரம்யா போல நல்ல பொண்ணு தான் வேணும் கார்த்தி..'

'சரி.. ரெண்டுமே பெத்துக் கொடேன்....'

'ஆசை தான்...'

கீர்த்தனாவை நெருங்கி சேர்த்து அணைக்க...

'மெதுவா... மெதுவா.. கொழந்தைக்கு வலிக்கப் போவுது...'

தன வயிற்றை சுட்டிக் காட்டியபடி கீர்த்தனா கூற.. அவள் கன்னத்தில் ஆசையாய் முத்த மிட்டான் கார்த்தி.

அன்பிலே விளைந்த நட்பும்
ஆசையிலே விளைந்த காதலும்
இன்பத்திலே விளைந்த மழலையுடன்
இனிதே வாழ்ந்தனர் களிப்புடனே..!

(முற்றும்)
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty Re: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by ஜனனி Mon Jun 10, 2013 6:20 pm

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி 28284 கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி Empty Re: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum