TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பாம்பன் சுவாமிகள் கூறும் இனிய வாழ்விற்கு வழி

Go down

பாம்பன் சுவாமிகள் கூறும் இனிய வாழ்விற்கு வழி Empty பாம்பன் சுவாமிகள் கூறும் இனிய வாழ்விற்கு வழி

Post by mmani Sun Jun 09, 2013 2:26 pm

சண்முக கவசம்

ஓம் குமர குருதாச குருப்யோ நம:

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம்



அண்டமா யவனி யாகி யறியொணாப் பொருள தாகித்

தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி

எண்டிசை போற்ற நின்ற வென்னரு ளீச னான

திண்டிறற் சரவ ணத்தான்றினமுமென் சிரசைக் காக்க



ஆதியாங் கயிலைச் செல்வ னணிநெற்றி தன்னைக் காக்க

தாதவிழ் கடப்பந் தாரான் றானிரு நுதலைக் காக்க

சோதியாந் தணிகை யீசன் றுரிசிலா விழியைக் காக்க

நாதனாங் கார்த்தி கேய னாசியை நயந்து காக்க.



இருசெவி களையுஞ் செவ்வே ளியல்புடன் காக்க வாயை

முருகவேள் காக்க நாப்பன் முழுதுநற் குமரன் காக்க

துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க

திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க.



ஈசனாம் வாகு லேய னெனதுகந் தரத்தைக் காக்க

தேசுறு îதாள்வி லாவுந் திருமகள் மருகன் காக்க

ஆசிலா மார்பை யீரா றாயுதன் காக்க வென்றன்

ஏசிலா முழுங்கை தன்னை யெழிற்குறிஞ் சிக்கோன் காக்க.



உறுதியாய் முன்கை தன்னை யுமையிள மதலை காக்க

தறுகணே றிடவே யென்கைத் தலத்தைமா முருகன் காக்க

புறங்கையை யயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும்

பிறங்குமான் மருகன் காக்க பின்முது கைச் சேய் காக்க.



ஊணிறை வயிற்றை மஞ்ஞை யூர்தியோன் காக்க வம்புத்

தோணிமிர் சுரேச னுந்திச் சுழியினைக் காக்க குய்ய

நாணினை யங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ

ஆணியைக் கந்தன் காக்க வறுமுகன் குதத்தைக் காக்க



எஞ்சிடா திடுப்பை வேலுக் கிறைவனார் காக்க காக்க

அஞ்சக னமொரி ரண்டு மரன்மகன் காக்க காக்க

விஞ்சிடு பொருட்காங் கேயன் விளரடித் தொடையைக் காக்க

செஞ்சர ணேச வாசான் றிமிருமுன் றொடையைக் காக்க.



ஏரகத் தேவ னென்றா ளிருமுழங் காலுங் காக்க

சீருடைக் கணைக்கா றன்னைச் சீரலை வாய்த்தே காக்க

நேருடைப் பரடி ரண்டு நிகழ் பரங் கிரியன் காக்க

சீரிய குதிக்கா றன்னைத் திருச்சோலை மலையன் காக்க.



ஐயுறு மலையன் பாதத் தமர் விரலுங் காக்க

பையுறு பழநி நாத பரனகங் காலைக் காக்க

மெய்யுடன் முழுது மாதி விமலசண் முகவன் காக்க

தெய்வநா யகவி சாகன் றினமுமென் னெஞ்சைக் காக்க.



ஒலியெழ வுரத்த சத்தத் தொடுவரு பூதப் ரேதம்

பலிகொளி ராக்க தப்பேய் பலகணத் தெவையா னாலுங்

கிலிகொள வெனைவேல் காக்க கெடுபரர் செய்யுஞ் சூன்யம்

வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடா தயில்வேல் காக்க.



ஓங்கிய சீற்ற மேகொண் டுவனிவில் வேல்சூ லங்கள்

தாங்கிய தண்ட மெஃகந் தடிபர சீட்டி யாதி

பாங்குடை யாயு தங்கள் பகைவரென் மேலே யோச்சின்

தீங்குசெய் யாம லென்னைத் திருக்கைவேல் காக்க காக்க.



ஒளவிய முளரூ னுண்போ ரசடர்பே யரக்கர் புல்லர்

தெவ்வர்க கௌவரா னுèலுந் திடமுட னெனைமற் கட்டத்

தவ்வியே வருவாராயிற் சராசர மெலாம்பு ரக்குங்

கவ்வுடைச் சூர சண்டன கையயில் காக்க காக்க.



கடுவிடப் பாந்தள் சிங்கங் கரடிநாய் புலிமா யானை

கொடியகோ ணாய்கு ரங்கு கோலாமார்ச் சாலஞ் சம்பு

நடையுடை யெதனா லேனு நானிடர்ப் பட்டி டாமற்

சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க.



ஙகரமே போற்ற ழீஇ ஞானவேல் காக்க வன்புள்

சிகரிதே ணண்டுக் காலி செய்யனே றாலப் பல்லி

நகமுடை யோந்தி பூரா னளிவண்டு புலியின் பூச்சி

உகமிசை யிவையா வெற்கோ ரூறிலா தைவேல் காக்க.



சலத்திலுய் வன்மீ னேறு தண்டுடைத் திருக்கை மற்றும்

நிலத்திலுஞ் சலத்தி லுந்தா னெடுந்துயர் தரற்கே யுள்ள

குலத்தினா னான்வ ருத்தங் கொண்டிடா தவ்வவ் வேளை

பலத்துட னிருந்து காக்க பாவனி கூர்வேல் காக்க.



ஞமலியம் பரியன் கைவே னவக்கிர சுக்கோள் காக்க

சுமவிழி நோய் கடந்த சூலையாக் கிராண ரோகம்

திமிர்கழல் வாதஞ் சோகை சிரமடி கர்ண ரோகம்

எமையணு காம லேபன் னிருபுயன் சயவேல் காக்க.



டமருகத் தடிபோ னைக்குத் தலையிடி கண்ட மாலை

குமுறுவிப் புருதி குன்மங் குடல்வலி யீழை காசம்

நிமிரொணா திருத்தும் வெட்டை நீர்ப்பிர மேக மெல்லாம்

எமையடை யாம லேகுன் றெறிந்தவன் கைவேல் காக்க.



இணக்கமில் லாத பித்த வெரிவுமா சுரங்கள் கைகால்

முணக்கவே குறைக்குங் குஷ்ட மூலவெண் முளைதீ மந்தஞ்

சணத்திலே கொல்லுஞ் சன்னி சாலமென் றறையு மிந்தப்

பிணிக்குல மெனையா ளாமற் பெருஞ்சத்தி வடிவேல் காக்க.



தவனமா ரோகம் வாதஞ் சயித்திய மரோச கம்மெய்

சுவறவே செய்யு மூலச் சூடிளைப் புடற்று விக்கல்

அவதிசெய் பேதி சீழ்நோயண்டவா தங்கள் சூலை

எவையுமென் னிடத்தெய் தாம லெம்பிரான் றிணிவேல் காக்க.



நமைப்புறு கிரந்தி வீக்க நணுகிடு பாண்டு சோபம்

அமர்த்திடு கருமை யாகுபஃ றொழுநோய் கக்கல்

இமைக்குமுன் னுறுவ லிப்போ டெழுபுடைப் பகந்த ராதி

இமைப்பொழு தேனு மென்னை யெய்தாம லருள்வேல் காக்க.



பல்லது கடித்து மீசை படபடென் றேது டிக்கக்

கல்லினும் வலிய நெஞ்சக் காட்டியே யுருட்டி நோக்கி

எல்லினங் கரிய மேனி யெமபடர் வரினு மென்னை

ஒல்லையிற் றார காரி ஓம்ஐம் ரீம்வேல் காக்க.



மண்ணிலு மரத்தின் மீது மலையிலு நெருப்பின் மீதும்

தண்ணிறை ஜலத்தின் மீதுஞ் சாரிசெய்யூர்தி மீதும்

விண்ணிலும் பிலத்தி னுள்ளும் வேறெந்த விடத்து மென்னை

நண்ணிவந் தருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க.



யகரமே போற்சூ லேந்து நறும்புயன் வேல்முன் காக்க

அகரமே முதலா மீரா றம்பகன் வேல்பின் காக்க

சகரமோ டாறு மானோன் தன்கைவே னடுவிற் காக்க

சிகரமின் றேவ மோலி திகழைவேல் கீழ்மேல் காக்க



ரஞ்சித மொழிதே வானை நாயகன் வள்ளி பங்கன்

செஞ்சய வேல்கி ழக்கிற் றிடமுடன் காக்க வங்கி

விஞ்சிடு தினையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில்

எஞ்சிடாக் கதிர்கா மத்îதா னிகலுடைக் கரவேல் காக்க.



லகரமே போற்கா ளிங்க னல்லுட னௌ¨ய நின்று

தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்

றிகழெனை நிருதி திக்கி னிலைபெறக் காக்க மேற்கில்

இகலயில் காக்க வாயு வினிற்குகன் கதிர்வேல் காக்க.



வடதிடை தன்னி லீசன் மகனருட் டிருவேல் காக்க

விடையுடை யீசன் றிக்கில் வேதபோ தகன்வேல் காக்க

நடக்கையி லிருக்கு ஞான்று நவில்கையி னிமிர்கை யிற்கீழ்க்

கிடக்கையிற் றூங்கு ஞான்று கிரிதுளைத் துளவேல் காக்க.



இழந்துபோ காத வாழ்வை யீயுமுத் தையனார் கைவேல்

வழங்குநல் லூணுண் போது மால்விளை யாட்டின் போதும்

பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்துநெஞ் சடக்கம் போதுஞ்

செழுங்குணத் îதாடே காக்க திடமுடன் மயிலுங் காக்க.



இளமையில் வாலி பத்தி லேறிடு வயோதி கத்தில்

வளரறு முகச்சி வன்றான் வந்தெனைக் காக்க காக்க

ஒளியெழு காலை முன்னே லோஞ்சிவ சாமி காக்க

தௌ¨நடு பிற்ப கற்கால் சிவகுருநாதன் காக்க.



இறகுடைக் கோழித் îதாகைக் கிறைமுனி ராவிற் காக்க

திறலுடைச் சூர்ப்ப கைத்தே திகழ்பினி ராவிற் காக்க

நறவிசேர் தாட்சி லம்ப னடுநிசி தன்னிற் காக்க

மறைதொழு குழக னெங்கோன் மாறாது காக்க காக்க.



இனமெனத் தொண்ட ரோடு மினக்கிடுஞ் செட்டி காக்க

தனிமையிற் கூட்டந் தன்னிற் சரவண பவனார் காக்க

நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க வித்தைக்

கனிவொடு சொன்ன தாசன் கடவுடான் காக்க வந்தே
பாடல் விளக்கம் pdf
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

பாம்பன் சுவாமிகள் கூறும் இனிய வாழ்விற்கு வழி Empty பகைவர்கள் இல்லாத வாழ்க்கை வேண்டுமா?

Post by mmani Sun Jun 09, 2013 2:29 pm

பகை கடிதல்


"பகை கடிதல்" என்னும் "இந்தத் திருப்பத்தை காலை மாலை பூசித்துப் பத்தி
பிறங்கப் பாடுவார் திருமயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை
வெல்வர்."என பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது!



படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே
வருவது போல் உணரமுடியும். "ஏ! மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல
மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக்
கொண்டுவா!" என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும்
பதிகம் இது!






ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் கீழ்வருமாறு:

திருவளர் சுடருருவே சிவைகர மமருருவே

அருமறை புகழுருவே யறவர்க டொழுமுருவே

இருடபு மொளியுருவே யெனநினை யெனதெதிரே

குருகுகண் முதன்மயிலே கொணர்தியு னிறைவனையே.

1


திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே

அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே

இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே

குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே.


(விளக்கம்) தெய்வத்தன்மையும் அழகும்
மிகுகின்ற ஒளியுருவு உடையவனே! பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே!
அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! தவசிகள் வணங்கும் (தவ)மேனியனே!
(அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என்
எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே! உன் நாயகனைக் கொண்டு வருவாயாக!!!!!



(விசேடம்) திரு - தெய்வத்தன்மை, பேரழகு
முதலிய பல பொருளொரு சொல். அறவர்கள் - முனிவர்களுமாம். முருகவேளை
அகத்தியர், நாரதர், பராசர புத்திரர்களான ஆறு முனிவர்களும் தொழுதருள்
பெற்றனர். இருள்தபும் ஒளியுரு - புற இருள் நீக்கும் சூரியன் போலாது அக
இருளையும் ஓட்டும் ஆற்றலுடைய ஒளியுருவினன் என்க. "ஓவற இமைக்கும் சேண்
விளங்கு அவிர் ஒளி" என்பர் நக்கீரர். குருகுகள் - பறவைகள். மயில்,
முருகவேல் திருவடிகளைத் தாங்கும் தனிச்சிறப்பால் "குருகுகள் முதல்"
எனப்பட்டது. இறைவன் - எல்லா உயிர்களிலும் தங்குபவன். மயிலிறை எனவே,
மயிலுக்குத் தலைவனான செவ்வேல் என்றபடி.


மறைபுக ழிறைமுனரே மறைமுதல் பகருருவே

பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே

இறையிள முகவுருவே யெனநினை யெனதெதிரே

குறைவறு திருமயிலே கொணர்தியு னிறைவனையே.

2


மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே

பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே

இறையிள முக உருவே எனநினை எனதெதிரே

குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே.


(விளக்கம்) வேதங்களால்
துதிக்கப்படும் சிவபிரான் திருமுன்பிருந்தே மூல மந்திரப் பொருள் விரித்த
குரு வடிவே!! பொறுமை நிறைந்த உலக உருவானவனே! வள்ளியம்மை இருந்த புனத்தில்
நடந்த அழகனே! பெருமை மிக்க இளமையான திருமுகமுடையவனே என்று தியானிக்கும்
என் எதிரில் எக்குறையினையும் நீக்கும் அழகிய மயிலே! உனது இறைவனைக் கொண்டு
வருவாயாக!!!!!


இதரர்கள் பலர்பொரவே யிவணுறை யெனதெதிரே

மதிரவி பல வெனதேர் வளர்சர ணிடையெனமா

சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே

குதிதரு மொருமயிலே கொணர்தியு னிறைவனையே.

3


இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே

மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா

சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே

குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே.


(விளக்கம்) பல கீழ்மக்கள்
போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழப்படும் மிகப்பல் சூரியர்
(உதயமோ) என என்னும்படி ஒளிவளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என)
மிகுந்த திறமோடு வரும் மயிலே! பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும்
ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க!!!!!


பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே

நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால்

சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே

குவலயம் வருமயிலே கொணர்தியு னிறைவனையே.

4


பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே

நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்

சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே

குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே.


(விளக்கம்) பிறவிக்கேதுவான
பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த
அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமை
பொருந்திய திருமயிலே! ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே!
உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!


அழகுறு மலர்முகனே யமரர்கள் பணிகுகனே

மழவுரு வுடையவனே மதிநனி பெரியவனே

இழவில ரிறையவனே யெனநினை யெனதெதிரே

குழகது மிளிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.

5


அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே

மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே

இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே

குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.


(விளக்கம்) அழகிய மலர்ச்சியுள்ள
முகமுடையவனே! தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே! நீங்கா இளமைத் திருமேனியனே!
எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே! மரணமிலார் (ஞானியர்)
தலைவனே! என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன்
இறைவனைக் கொண்டு வந்து அருள்க!!!!!


இணையறு மறுமுகனே யிதசசி மருமகனே

இணரணி புரள்புயனே யெனநினை யெனதெதிரே

கணபண வரவுரமே கலைவுற வெழுதருமோர்

குணமுறு மணிமயிலே கொணர்தியு னிறைவனையே.

6


இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே

இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே

கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்

குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே.


(விளக்கம்) மற்றொப்பாரில்லாத
அறுமுகனே! இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே! கொத்தான மலர் மாலை புரளும்
திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய
(சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத
மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!


எளியவ னிறைவகுகா வெனநினை யெனதெதிரே

வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான்

பலபல வெனமினுமா பலசிறை விரிதருநீள்

குளிர்மணி விழிமயிலே கொணர்தியு னிறைவனையே.

7


எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே

வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்

பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்

குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே.


(விளக்கம்) ஏழையாகிய அடியேனது இறைவா!
குகா! என்று தியானிக்கும் என் எதிரில் வானவெளியில் சஞ்சரிக்கும்
கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று
மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும்
விழிபடைத்த மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!


இலகயின் மயின்முருகா வெனநினை யெனதெதிரே

பலபல களமணியே பலபல பதமணியே

கலகல கலவெனமா கவினொடு வருமயிலே

குலவிடு சிகைமயிலே கொணர்தியு னிறைவனையே.

8


இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே

பலபல களமணியே பலபல பதமணியே

கலகல கல எனமா கவினொடுவருமயிலே

குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே.


(விளக்கம்) மேலே விளங்கு மயூர (வாகன)
முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென
ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே! விளங்கும் கொண்டையுள்ள மயிலே! உன்
இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!


இகலறு சிவகுமரா வெனநினை யெனதெதிரே

சுகமுனி வரரெழிலார் சுரர்பலர் புகழ்செயவே

தொகுதொகு தொகுவெனவே சுரநடமிடுமயிலே

குகபதி யமர்மயிலே கொணர்தியு னிறைவனையே.

9


இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே

சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே

தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே

குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.


(விளக்கம்) சிவகுமார! என் பகையை
ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த
முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன்
தேவ நடனம் செய்யும் மயிலே! குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே! உன் இறைவனைக்
கொண்டு வந்தருள்வாயாக!!!!!


கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே

அருணைய னரனெனவே யகநினை யெனதெதிரே

மருமல ரணிபலவே மருவிடு களமயிலே

குருபல வவிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.

10


கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே

அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே

மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே

குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே.


(விளக்கம்) அருள்மழை பொழியும் கருணை
மேகமே! கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே! அருணகிரி (யை ஆண்டருள்)
அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க
மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே! மேன்மைகள் பல விளங்கு மயிலே! உன்
இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!



(விசேடம்) பாம்பனடிகள் பிரப்பன்
வலசைப் பெருந்தலத்தில் 35 நாட்கள் நிட்டை கூடியபோது காளைக் குமரேசன் அவர்
திருமுன் அகத்தியர், அருணகிரி என்ற இரு முனிவர்களுடன் காட்சி அளித்தான்.
இப்பாட்டில் அந்த இரு முனிவர்களையும் ஒருசேர அமைத்திருப்பது விசேடமாம்.
சுவாமிகள் பாடல்கள் சிலவற்றில் தான் இரு முனிவர் திருநாமங்களும் ஒரே
பாட்டில் வரும். எனவே, இப்பாடலில் தாம் பெற்ற உபதேச நினைவும் நிழலாடக்
காணலாம். இதில் பிணி நீக்கும் மருத்துவக் கலைஞர் அகத்தியரும் அருள்
நோக்குக்கு உதவும் அருணகிரியாரும் பகை நீக்க அருளும் மயூரநாதனும் வருவது
உணர்ந்து மகிழத்தக்கது.


mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

பாம்பன் சுவாமிகள் கூறும் இனிய வாழ்விற்கு வழி Empty முருகனின் அருள் கிடைக்க

Post by mmani Sun Jun 09, 2013 2:40 pm

ஸ்ரீகுமார பரமேஸ்வர சோடச நாமார்ச்சனை
பாம்பன் சுவாமிகள் கூறும் இனிய வாழ்விற்கு வழி Kumara10
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

பாம்பன் சுவாமிகள் கூறும் இனிய வாழ்விற்கு வழி Empty சிவபெருமானின் அருள் கிடைக்க

Post by mmani Sun Jun 09, 2013 2:57 pm

ஸ்ரீகுமார பரமேஸ்வர சடக்ஷர நாமார்ச்சனை
பாம்பன் சுவாமிகள் கூறும் இனிய வாழ்விற்கு வழி Kumara11
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

பாம்பன் சுவாமிகள் கூறும் இனிய வாழ்விற்கு வழி Empty Re: பாம்பன் சுவாமிகள் கூறும் இனிய வாழ்விற்கு வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum