Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வஞ்சிக்கப்பட்ட காவிரி, வறண்டு போன தமிழகம்: மினி தொடர்
4 posters
Page 1 of 1
வஞ்சிக்கப்பட்ட காவிரி, வறண்டு போன தமிழகம்: மினி தொடர்
வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம். விஜயகுமார், என்.ஜி.மணிகண்டன்
காவிரி ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் கர்நாடகா எல்லையில் உள்ள குடகு
மாவட்டத்தில் தலைக்காவிரி என்ற இடத்தில் கையளவு உருவாகி குடகு, ஹாசன்,
மைசூர், மாண்டியா, பெங்களூர் வழியாக தமிழகத்திற்குள் புகுந்து தர்மபுரி
மாவட்டம், ஒகேனக்கலில் ஆர்ப்பரித்து கொட்டி போக போக கடல் போல் விரிந்து
தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம்
போன்ற மாவட்டங்கள் வழியாக பயணித்து இறுதியாக பூம்புகார் என்ற இடத்தில்
வங்காள விரிகுடாவில் சங்கமம் ஆகிறது. காவிரி தமிழகத்தில் குடி தண்ணீர்,
விவசாயம் என நேரடியாகவும், மறைமுகமாகவும் பதினோரு மாவட்டங்களை
வாழ்வித்துக் கொண்டிருக்கிறது
[You must be registered and logged in to see this image.]
காவிரியின் துணை ஆறுகளும் அதன் போக்கும்...
இந்தியாவில் உள்ள பெரிய ஆறுகளில் காவிரியும் ஒன்று. இதை பொன்னி ஆறு என்றும்
அழைப்பர். காவிரியின் துணை ஆறுகளான கபினி, ஹேமாவதி, ஹாரங்கி,
லட்மணதீர்த்தம், ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி போன்றவை கர்நாடகா
மாவட்டத்திலும், பவானி, நொய்யல், அமராவதி போன்றவை தமிழகத்தின் துணை
ஆறுகள்.
தலைக்காவிரியில் உருவாகும் காவிரி குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆற்றோடு
இணைந்து மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை
அடைகிறது. அங்கு ஹேமாவதி, லட்சுமண் தீர்த்தம் ஆகிய இரண்டு ஆறுகளும்
காவிரியோடு இணைந்து கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேகத்திலிருந்து வெளி வரும்
போது ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்கி பிறகு கபினி, சொர்ணவதி ஆறுகளும்
காவிரியோடு கைக்கோர்த்து சிவசமுத்திரம் தீவை உருக்குகிறது. இந்த இடத்தில்
இருந்து காவிரி இரண்டு பிரிவுகளாக பிரிந்து சுகனசுக்கி என்ற அருவியாகவும்,
மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. சுகனசுக்கி அருவியில் தான்
ஆசியாவிலேயே முதன் முதலில் நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு
கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது.
அதன் பிறகு சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. இந்த இரண்டு
ஆறுகளும் இணைந்த பிறகு தான் காவிரி ஆழமான அதிகமான நீரோடையாக பாறை
இடுக்குகளில் புகுந்து வருகிறது. இந்த ஆழமான நீரோடைகளை ஆடு கூட தாண்டலாம்
என்பதால் இந்த பகுதியை கன்னடத்தில் மேகேதாத் என்றும் தமிழில் ஆடு தாண்டும்
பாறை அல்லது ஆடு தாண்டும் காவிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியோடு
கர்நாடகத்தின் எல்லை முடிவுற்று காவிரி பெண் தமிழகத்தில் காலடி எடுத்து
வைத்து பில்லிகுண்டு வழியாக அமைதியாக வந்து ஒகேனக்கல் ஆர்ப்பரித்து
நீர்வீழ்ச்சியாக விழுகிறாள்.
அதன் பிறகு பாய்ந்து வரும் காவிரியை மேட்டூரில் இரு மலைகளுக்கு இடையே
ஆங்கிலேயர்கள் அணைக்கட்டி தடுத்ததால் கடல் போல் தேங்கி ஸ்டாலின்
நீர்த்தேக்கத்தை உருவாக்கி வெளிவரும் காவிரி பவானி கூடுதுறை என்ற இடத்தில்
காவிரி ஆறும், பவானி ஆறும் கூடுகிறது. அதனால் இந்த இடம் பவானி கூடுதுறை
என்று அழைக்கப்படுகிறது. பிறகு ஈரோடு நகரை கடந்து செல்லும் போது கொடுமுடி
அருகே நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறும், கரூர் அருகே கட்டளை
என்னுமிடத்தில் அமராவதி ஆறும் சேர்ந்து திருச்சி மாவட்டத்துக்குள் அகண்ட
காவிரியாக பாய்கிறது.
முசிறி, குளித்தலையை தாண்டிச் செல்லும் காவிரி முக்கொம்பு என்னுமிடத்தில்
மேலணையை அடைந்து இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம்
என்றும், மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். கொள்ளிடம் செல்லும் பாதை
காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும்.
கொள்ளிடம், காவிரிக்கு நடுவே ஸ்ரீரங்கம் தீவை உருவாக்கி பின் பழமையான
கல்லணையை அடைகிறது. கல்லணையில் இருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக
பிரிந்து அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களில்
ஓடுகிறது. பிறகு தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி
தமிழகத்தின் தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்கால், திருவாரூர்,
நாகப்பட்டிணம், வழியாக சென்று இறுதியாக பூம்புகார் என்னுமிடத்தில் வங்கக்
கடலில் கலக்கிறது. இப்படி காவிரி கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா,புதுச்சேரி
யூனியன் பிரதேசம் என நான்கு மாநிலங்களை தாண்டி சுமார் 750 கிலோமீட்டர்
பயணிக்கிறது.
பார் போற்றும் பழந்தமிழர் பாசனத் திட்டம்:
தலைக்காவிரியில் உருவாகும் காவிரி எந்த ஒரு தங்கு தடையும் இல்லாமல்
மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வந்து சோழ
நாட்டிற்குள் புகுந்து பேரழிவை ஏற்படுத்தி மக்களை மிகவும்
துயரத்திற்குள்ளாக்கி விட்டு வீணாக கடலில் கலப்பதும், கோடைக் காலத்தில்
தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் மக்களுக்கு குடிநீர் கூட கிடைக்காமல்
வாடுவதையும் கருத்தில் கொண்ட சோழப் பேரரசின் தலைச் சிறந்த சோழ வள மன்னன்
கரிகாலச்சோழன் இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்தார்.
எதிர் நாட்டில் இருந்து படையெடுத்து வரும் அந்நியரை கூட அடக்கி விடலாம்.
வெள்ளப் பெருக்கெடுத்து பாய்ந்து ஓடி வரும் நதியை அவ்வளவு சுலபமாக தடுத்து
நிறுத்தி விட முடியாது. அதுவும் காவிரி ஒரு விநாடிக்கு 2 லட்சம் கன அடி
வெள்ளம் வரக்கூடியது. முயன்றால் முடியாது அல்ல, பயந்தால் சிலந்தியும் சிறை
பிடிக்கும் என்று எண்ணிய கரிகாலன் சுமார் 1900ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இலங்கை மீது படையெடுத்து கொத்தடிமைகளாக பிடித்து வந்த கைதிகளையும்,
பொதுமக்களையும், கட்டிடக் கலை வல்லுநர்களையும் சேர்த்து சுமார்
பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்களை வைத்து திருச்சி கொள்ளிடம் ஆற்றின் மீது
மணலில் அடித்தளம் அமைத்து 1080 அடி நீளத்தில், 66அடி அகலத்தில், 18 அடி
உயரத்தில், அரை வட்ட வடிவத்தில், கல்லும், களிமண்ணாலேயுமே கல்லணையை கட்டி
முடித்தார்.
2 ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இன்றளவும் கல்லணையில் நீர்தேக்கி
வைக்கப்பட்டு பாசனத்திற்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது. இது உலக அதிசயம் என்று சொல்லுவதை விட ஆங்கில கட்டிடக்
கலைப் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் சொன்னதைப் போல உலகத்திலேயே கட்டிடக்கலை
தொழில்நுட்பத்தில் தமிழர்களே தலைச்சிறந்தவர்களாக விளங்கி இருக்கிறார்கள்
என்பதற்கு உதாரணமாகவே இந்த அணையை பார்க்கப்படுகிறது. காலத்தை கடந்து
நிற்கும் இந்த அணையை ‘‘தி கிராண்ட் அணைக்கட்’’ என்றார். அணையை கட்டியது
மட்டுமல்லாமல் மழைக் காலத்தில் தண்ணீரை தேக்கி வைத்து வருடம் முழுவதும்
பாசன பகுதிகளுக்கு பகிர்ந்து கொடுத்திருப்பது, உலக வரலாற்றிலேயே பாசன
திட்டத்திற்கு வலிவகுத்தவர்களும், வழிகாட்டியாக இருந்தவர்களும் தமிழர்கள்
என்பதை யாருக்கு பறைச்சாற்றி இருக்கிறார்கள்.
இதனால் சோழ நாடு செழிப்புற்று சோழ நாடு சோறுடைத்து என்ற புகழும் பெற்றது.
இப்படி சோழ வள நாட்டை செழிப்புறச் செய்த கரிகாலனையும், கல்லணையையும்,
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்தை சேர்ந்த சங்க இலக்கியங்களான
பட்டினபாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களில் புகழாரம் சூட்டுகிறது.
தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் இதன்
சிறப்பை சொல்லுகிறது.
உழவு தொழில் அறியாத கன்னடர்கள், காவிரியை சிறு மதகுகளாக மடக்கியது பற்றி நாளை பார்க்கலாம்...
-news.vikatan.-

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: வஞ்சிக்கப்பட்ட காவிரி, வறண்டு போன தமிழகம்: மினி தொடர்
வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம். விஜயகுமார், என்.ஜி.மணிகண்டன்
மேட்டூர் அணை (ஸ்டாலின் நீர்த்தேக்கம்)
தமிழன் ஆதி காலத்தில் இருந்தே உழவுத் தொழிலை செய்து வந்தவன். இதற்கு பல
உதாரணம் இருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட திருக்குறளில்
உழவு பற்றி ஒரு அதிகாரமே இருக்கிறது. அதில் ‘‘சுழன்றும் ஏர்ப் பின்னது
உலகு’’ என்றிருக்கிறார் வள்ளுவர். ஆனால், கர்நாடகத்தை சேர்ந்த கன்னடர்கள்
உழவுத் தொழில் செய்யாதவர்கள்; உழவை பற்றி அறியாதவர்கள். ஆனாலும்,
காலப்போக்கில் காவிரியை சிறு சிறு மதகுகள் கட்டி மடக்கினார்கள். இந்தப்
பிரச்னையில் தீர்வை எட்டுவதற்காக சென்னை மாகாண அரசும், மைசூர் மாகாண அரசும்
இணைந்து 1892ல் பேச்சுவார்த்தை நடத்தின.
ஆண்டுக் கணக்கில் பல சுற்று பேச்சுக்கள்
இழுழுழுழுபட்டு, 1924 ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். அதன் படி
மைசூர் அரசு கீழ் படிநிலையை கேட்காமல் மேல் படி நிலைகளை நிரப்பக் கூடாது.
கீழ் படிநிலையை கேட்டு தான் மேல் படி நிலைகளை நிரப்ப வேண்டும் என்று
ஒப்பந்தம் போட்டார்கள். அதாவது சென்னை மாகாண அரசை கேட்காமல் மைசூர் மாகாண
அரசு காவிரியை தடுக்க கூடாது என்பதே இதன் பொருள். அந்த காலக் கட்டத்தில்
காவிரியால் மைசூரில் 1.10 லட்சம் ஏக்கரும் சென்னை மாகாணத்தில் 12 1/4
லட்சம் ஏக்கரும் பயன்படும் என்று கணக்கிடப்பட்டது.
ஆனாலும், தமிழகத்தில் காவிரி கரையோரமாக நிறைய நிலங்களும், விவசாயம்
செய்யக் கூடிய ஆட்களும் இருந்தும் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால்
விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை. இதை உணர்ந்த ஆங்கிலேயே அரசு காவிரியின்
குறுக்கே அணைக் கட்ட முடிவு செய்து இடத்தை தேடியது. 15 ஆண்டுகள் கழித்து
அன்றைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னர் ஸ்டாலின் காவிரியின் குறுக்கே
அணைக் கட்ட உத்தர விட்டார். அதன் பேரில் மேட்டூரில் கர்னல் டபிள்யூ.எம்.
எல்லீஸ் ராயல் பொறியாளர் தலை மையிலான குழு கம்பீரமான மேட்டூர் அணையை கட்டி
முடித்தது. இந்த அணையில் காவிரியே கடல் போல காட்சி யளிக்கும் அளவுக்கு
தண்ணீர் தேக்கப்பட்டது. அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை
மேட்டூர் அணையின் சிற்பி என்றும் புகழப்பட்டார்.
[You must be registered and logged in to see this image.]தற்போது
இந்த மேட்டூர் அணை தான் தமிழகத்தின் தலை யெழுத்தையே மாற்றி அமைக்கக் கூடிய
நிலையில் இருக்கிறது. இந்த அணையில் இருந்து பல மாவட்டங்களுக்கு கூட்டு
குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு செய்யப்படுகிறது.
அணைப்பற்றிய விபரம்:
மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934
அணைக் கட்ட ஆன செலவு 4.80 கோடி
அணையின் நீளம் 5.300 அடி
அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.
அணையின் உயரம் 214 அடி
அணையின் அகலம் 171 அடி
அணையின் சேமிப்பு உயரம் 120 அடி
அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு 59.25 சதுர மைல்
2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.
அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
காவிரி நடுவர் மன்றம் உதயம்:
மேட்டூர் அணை கட்டிய அதே காலகட்டத்தில் கர்நாடகத்திலும் கிருஷ்ணராஜ சாகர்
அணையும் கட்டப்பட்டது. இந்த இரு அணைகளும் கட்டிய பிறகு கர்நாடகத்தின் பாசன
பரப்பளவு சுமார் 3 1/4 லட்சம் ஏக்கராகவும், தமிழகத்தில் சுமார் 15 1/2
லட்சம் ஏக்கராகவும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1956 ல் மொழிவாரி
மாநிலங்கள் பிரிந்த பிறகு அதற்கு முன்பு போட்ட எந்த ஒரு ஒப்பந்தத்தை யும்
அதாவது, 1924 ஒப்பந்தப் படி தமிழகத்தையும், மத்திய அரசையும் கேட்காமல்
அணைகள் அனைத்தும் நிரப்பி விட்ட பிறகு வெளியேற்றப்படும் வடிகால் பகுதியாக
தமிழகத்தை மாற்றி விட்டார்கள்.
இதனால் கவலை அடைந்த தமிழக அரசு 1970 காவிரி நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க
மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசு அதைக் காதில் வாங்கவில்லை.
இந்நிலையில், 1972 ல் தமிழகம், கர்நாடகம், கேரள மூன்று மாநில
முதல்வர்களும் மத்திய அரசின் முன்னிலையில் நடத்திய பேச்சு வார்த் தையின்
படி காவிரி உண்மை அறியும் குழு நியமிக்கப்பட்டது. அது மாநிலங்கள் வாரியாக
காவிரி நீர் பயன் பாட்டையும் ஆய்வு செய்தது.
அந்த ஆய்வின்படி தமிழகத்தின் பயன்பாட்டிற்கு 489 டி.எம்.சி நீரும்,
கர்நாடகத்திற்கு 177 டி.எம்.சி நீரும், கேரளத்திற்கு 5 டி.எம்.சி எனவும்
இந்த உண்மை அறியும் குழு தெரிவித்தது. இறுதி முடிவு எடுக்கும் வரை தற்போது
பயன்படுத்தி வரும் நீர் அளவை அப்படியே அனைவரும் பயன்படுத்த வேண்டும்
என்றும் சொல்லப்பட்டது. அதன் பிறகு மாநில அரசுகளுக்கு இடையே காவிரி
நதிநீர்ப் பங்கீடு பிரச்னை குறித்து பல முறை பேச்சு வார்த்தை
நடத்தப்பட்டது. எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதனால், தமிழக விவசாய அமைப்புகள் காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும்
என்று உச்ச நீதிமன்றம் சென்றார்கள். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 1990
ஆம் ஆண்டு மே 4 ல் காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு
உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசு, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. 1970
ல் தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி
கேட்டும் மதிக்காத மத்திய அரசு, 20 ஆண்டுகள் கழித்த பிறகு உச்ச நீதிமன்ற
குட்டு வைத்த பிறகு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.
வஞ்சிக்கப்பட்ட தமிழகம்:
அதன் பிறகு தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்திடம் உண்மை அறியும் குழு
சொன்னபடி எங்களுக்கு 489 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட இடைக்கால உத்தரவு
பிறப்பிக்க வேண்டும் என்றது. ஆனால், உண்மை அறியும் குழுவின் அறிக்கை 16
ஆண்டுகள் கடந்து விட்டது என்பதால் அதை எடுத்துக் கொள்ள முடியாது. மாநில
அரசுகள் தற்போது உள்ள பயன்பாட்டின் அடிப்படையில் தான் இடைக்கால உத்தரவு
வழங்க முடியும் என்றது கோர்ட். அதன்படி மேட்டூர் அணைக்கு வருட சராசரி நீர்
வரத்தாக தமிழக அரசு தந்த ஆவணங்களின் அடிப்படையில் 205 டி.எம்.சி. நீரை
தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும்
கர்நாடக அரசு 1990 ல் பாசனம் செய்து வரும் பரப்பளவு 11.2 லட்சம் ஏக்கர்.
இதற்கு மேல் தனது பாசனப் பரப்பை எக்காரணத்தைக் கொண்டும் அதிகரிக்கக் கூடாது
எனவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
கர்நாடக அரசு 1980-90 வரையிலான 10 ஆண்டுகளில் பில்லிகுண்டு என்ற இடத்தில்
தமிழகத்திற்கு வழங்கி வந்த வருட சராசரி நீரளவு 227 டி.எம்.சி. ஆகும். இந்த
நீரளவு மத்திய நீர்வள வாரியத்தால் அளக்கப்பட்டு, கர்நாடக அரசால் நடுவர்
மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட நீரளவு ஆகும். பில்லிகுண்டு என்ற இடத்தில்
இருந்து மேட்டூர் அணை வரையிலான வருட சராசரி நீர்வளம் என்பது 25 டி.எம்சி.
ஆகும். எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கிய நீரளவு என்பது 227 +25
=252 டி.எம்சி. ஆகும்.
மேட்டூர் அணை வரையான வருட சராசரி நீர்வளம் 500 டி.எம்.சி. என்பதால் கர்நாடக
அரசு தமிழகத்திற்கு வழங்கிய 252 டி.எம்.சி போக மீதி உள்ள 248 டி.எம்.சி
நீர் என்பது தான் கர்நாடகத்தின் பயன்பாடாகும். 1972 வாக்கில் 177 டி.எம்சி.
நீரைப் பயன்படுத்தி வந்த கர்நாடகம் 1990 வாக்கில் 248 டி.எம்.சி நீரைப்
பயன்படுத்தி கொண்டு, தமிழகத்திற்கு 252 டி.எம்.சி. நீரை வழங்கி வந்துள்ளது.
எனவே நடுவர் மன்றம், தமிழகத்திற்குக் கர்நாடகம் 252 டி.எம்.சி. நீரை வழங்க
வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், நடுவர்
மன்றம் அதனைச் செய்யாது, 205 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்க
வேண்டும் என உத்தரவிட்டது. இதனால், 248 டி.எம்.சி நீரை மட்டுமே பயன்படுத்தி
வந்த கர்நாடகம், 295 டி.எம்.சி நீரை பயன்படுத்த வழிவகை செய்தது.
ஆகமொத்தத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பே தமிழகத்திற்கு
வஞ்சிக்கப்பட்ட வரலாறாகிப் போனது.
இடைக்கால உத்தரவையாவது மதித்து நடந்ததா கர்நாடகா அரசு? .... நாளை பார்க்கலாம்

[You must be registered and logged in to see this image.]ஆம்
piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
வஞ்சிக்கப்பட்ட காவிரி, வறண்டு போன தமிழகம்: மினி தொடர்: பாகம் 3
வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம். விஜயகுமார், எம்.ஜி.மணிகண்டன்
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியீடு:
வஞ்சிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கூட கர்நாடகா
அரசு மதிக்காமல் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது விட
முடியாது என்று பகிரங்கமாகவே சட்டசபையில் அறிவித்து இந்திய இறையாண்மைக்கு
எதிராக செயல்பட்டது. ஆனாலும் மத்திய அரசு மௌனமாகவே இருந்தது. இதை
எதிர்த்து மூன்றாண்டுகள் கழித்து 18.7.1993ஆம் தேதி ஆரம்பித்து 21ஆம் தேதி
வரை நான்கு நாட்கள் அன்றைய முதல்வராக இருந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா,
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று
உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் கண்துடைப்புக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து
விட்டு முறைப்படி தண்ணீர் தராமல் காவிரி நீர் வெளியேற்றப்படும் வடிகால்
பாதையாகவே பார்த்து வந்தது. அதன் பிறகு 2007ல் காவிரி நடுவர் மன்றம் தனது
இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அந்த தீர்ப்பை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிட
வேண்டிய மத்திய அரசு வெளியிடவில்லை. தமிழக அரசு பலமுறை தொடர்ந்து
வற்புறுத்தியும் கண்டுக் கொள்ளாமல் மெத்தனமாகவே இருந்தது. அதன் பிறகு தமிழக
அரசு மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்று காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை
அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த
உச்ச நீதிமன்றம், 2013ல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட
வேண்டும் என்று உத்தரவிட்டு கண்டித்த பிறகு மத்திய அரசு 2013 பிப்ரவரி
19ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது.
அதன் படி காவிரியின் மொத்த நீர்வளம் 740 டி.எம்.சி., தமிழ்நாட்டிற்கு
நீர்வளம் 419 டி.எம்.சி., கர்நாடகத்தின் நீர்வளம் 270 டி.எம்.சி., கர்நாடக
எல்லைப் பகுதியான பில்லிகுண்டு 192 டி.எம்.சி., கேரளாவுக்கு 30 டி.எம்.சி.,
புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., இதன் மூலம் கர்நாடக மேட்டூர் அணைக்கு வருடம்
தோறும் கொடுக்க வேண்டிய நீரின் அளவு 192 டி.எம்.சி.
இந்த 192 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு மாதந்தோறும் விட வேண்டிய நீரின்
அளவு ஜூனில் 12ஆம் தேதி 10 டி.எம்சி நீரும், ஜூலையில் 12ஆம் தேதி 32
டி.எம்.சி நீரும், ஆகஸ்ட்டில் 12ஆம் தேதி 50 டி.எம்.சி நீரும்,
செப்டம்பரில் 12ஆம் தேதி 40 டி.எம்.சி நீரும், அக்டோபரில் 12ஆம் தேதி 22
டி.எம்.சி நீரும், நவம்பரில் 12ஆம் தேதி 15டி.எம்.சி நீரும்,
டிசம்பரில் 12ஆம் தேதி 8 டி.எம்.சி நீரும், ஜனவரியில் 12 ஆம் தேதி 3
டி.எம்.சி நீரும், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 2.5 டி.எம்.சி.
நீரும் விட வேண்டும்.
ஆனால், இந்த இறுதி தீர்ப்பு வெளியிட்ட பிறகும் கர்நாடகா தண்ணீர் விட
போவதில்லை என்பது தான் உண்மை. வரும் 12ஆம் தேதி கர்நாடகா அரசு 10
டி.எம்.சி. தண்ணீர் விட வேண்டும். ஆனால் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ்
அரசின் முதல்வர் சித்தராமையா ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு விட
முடியாது என்று சொல்லி விட்டார்.
பருவ மழைகள்:
தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு தென் மேற்கு பருவ
மழையையாலும், வடகிழக்கு பருவ மழையாலும் தான் நீர் ஆதாரங்கள் பெறப்படுகிறது.
தென்மேற்கு பருவ மழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொட்டும்.
ஆனால், இந்த பருவ மழை தமிழகத்திற்கு குறைந்த அளவு தான் பெய்யும். ஆனால்
கேரளா, கர்நாடகத்தில் மழை கொட்டி தீர்க்கும். இந்த தென்மேற்கு பருவ மழையால்
தான் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைகள் பொழிந்து காவிரி நீர்பிடிப்பு
பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி ஆறு கரைப் புரண்டு ஓடி அணைகளை
நிரப்பும். வடகிழக்கு பருவ மழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில்
பெய்யும். இது தமிழகத்திற்கு நேரடி மழைப் பொழிவாக இருந்தாலும் தென் மேற்கு
பருவ மழையை போல நீர்நிலைகளை நிரப்பும் அளவுக்கு இருக்காது. இந்த இரண்டு
பருவ மழைகளால் தமிழ்நாட்டுக்கு 833 டி.எம்.சி. நீரும், கர்நாடகத்திற்கு
3475 டி.எம்.சி. நீரும், கேரளத்திற்கு 2000 டி.எம்.சி நீரும் கிடைக்கிறது.
சில வருடங்களாகவே தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு
பருவ மழையும் சரியான நேரத்தில் பெய்யாததாலும், அப்படி, பெய்தாலும் குறைந்த
அளவே கிடைக்கிறது நீர். குறிப்பாக கடந்த ஆண்டு இரண்டு பருவ மழையும் ஏமாற்றி
விட்டதால் கர்நாடகாவில் இருந்து துளி அளவும் தண்ணீர் திறந்து விடாமல்
போனதாலும் காவிரி டெல்டா பகுதிகளில் வழக்கமாக 1.30 லட்சம் ஹெக்டேரில்
பயிரிடும் குறுவையும், 4.10 லட்சம் ஹெக்டேரில் பயிரிடும் சம்பாவும், 1.20
லட்சம் ஹெக்டேரில் தாளடியும் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள்
தத்தளித்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் மண்ணோடு மண்ணாக பாழாகி விட்டது.
வரலாறு காணாத வறட்சி:
கர்நாடகா தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் தராததாலும், பருவ மழையும் சரியாக
பெய்யாததாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்து வரலாறு காணாத
வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 18.890 அடி, நீர்
இருப்பு 3.784 டி.எம்.சி. இது 20 ஆண்டுகளுக்கு பின்பு ஏற்பட்ட வறட்சி
தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீருக்குள் மூழ்கி இடந்த 25 அடி நந்தி
சிலை, கிருஸ்துவ இரட்டை கோபுரம் தற்போது வெளியே நிலப்பரப்புக்குள் வந்து
விட்டது.
மேட்டூரை அணையில் ஓரமாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பல்லாயிரக்கணக்கான
வன உயிரினங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. காவிரியில் கடும் வறட்சியால்
கடந்த 6 மாதத்திற்குள் 15க்கும் மேற்பட்ட யானைகள் குடிக்க தண்ணீர் இல்லாமல்
இறந்து இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட மான்கள் தண்ணீரை தேடி ஊருக்குள்
புகுந்து விடுவதால் நாய்கள் கடித்தும், கிணற்றில் விழுந்தும் இறந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டி பல தர்ணா
போராட்டங்கள் செய்தும் கர்நாடகா செவி சாய்க்காததால் விவசாயம் அழிந்து போய்
விவசாயிகள் தற்கொலை செய்தார்கள். ஆனால் தற்போது அதையும் தாண்டி நேரடியாக
குடிநீருக்கு தண்ணீர் இல்லாமல் ஊரையே காலி செய்து விட்டு போகும் அபாயமான
நிலை உருவாகி உள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிட்ட
பிறகும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறந்து
விட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வில்லை.
தற்போது ஜூன் 12ஆம் தேதி 10 டி.எம்.சி தண்ணீர் விட வேண்டும். இதை பார்த்து
தான் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதா? வேண்டாமா? என்று முடிவு
செய்வார்கள். ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செக்டம்பர் மாதத்தில் குறுவை சாகுபடி
செய்தால் பயிர்கள் நன்றாக வளரக் கூடும். இந்த சாகுபடிக்கு 134 டி.எம்.சி.
தண்ணீர் தேவை. ஆனால் மேட்டூரில் இருப்பதோ 3.784 டி.எம்.சி நீர். தற்போது
தென்மேற்கு பருவ மழையால் மழைப் பொழிந்துக் கொண்டிருந்தும் கர்நாடகாவை ஆளும்
காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட விட
முடியாது என்றிருக்கிறார். அதனால் போன ஆண்டை போல இந்த ஆண்டும், குறுவை
சாகுபடியும், சம்பா சாகுபடி செய்வது கடினம்.
சர்வதேச நதிநீர் பிரச்னை:
இந்தியாவும், பாகிஸ்தானும் பகைமை கொண்ட நாடுகளாக இருந்தாலும் சிந்து நதியை
பங்கிடுவதில் பெரிய அளவுக்கு மோதல் வருவதில்லை. அதே போல, பிரமபுத்ரா நதியை
பங்கிட்டு கொள்ளுவதில் சீனா, நேபாளம், இந்தியாவிற்குள் பெரிய அளவுக்கு
பிரச்னை கிடையாது. நேருக்கு நேராக சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் தென்
கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் நதிநீர் பங்கீட்டு பிரச்னை இருக்கிறது.
ஆனால் நதிகள் பங்கிடுவதில் அவர்களுக்குள் பெரிய பிரச்னை கிடையாது. ஒவ்வொரு
நாடுகளும் சர்வதேச நதிநீர் பங்கீட்டு விதிகளை மதித்து மனிதாபிமான
அடிப்படையில் தண்ணீரை பங்கிட்டு கொள்ளுகிறது.
ஆனால் ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கொடி, ஒரே பாடல் என்று பீத்திக்கொள்ளும்,
ஒரு தேசத்திற்குள் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தின் குடிநீர் தேவைக்கு கூட
தண்ணீர் விட தயங்குகிறது என்றால் அதை எப்படி சகோதர மாநிலமாக ஏற்றுக் கொள்ள
முடியும். இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு உந்தகம் விளைவிக்கும் வகையில்
பேசினால் ஒரு வருடம் சிறையில் அடைக்கும் இந்திய அரசு, இந்திய
ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டு வரும் ஒரு மாநில அரசின் மீது
நடவடிக்கை எடுக்காதது ஏன்? இவ்வளவுக்கும் பிறகு தற்போது வரை நெய்வேலியில்
இருந்து மின்சாரமும், காய்கறிகளும் கர்நாடகத்திற்கு கொடுத்து கொண்டு தான்
இருக்கிறோம்.
இதற்கு யார் காரணம் தமிழக அரசியல்வாதிகளிடையே ஒற்றுமை இல்லாததும், மத்திய
அரசு தமிழகத்தின் மீது காட்டும் வெறுப்புணர்வுமே காரணமாக கருத முடிகிறது.
காவிரியில் மணல் கொள்ளையும், தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளின் வெற்று அறிவிப்பும்... நாளை பார்க்கலாம்.

Similar topics
» வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1,2
» கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 1
» கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 2
» கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 3
» கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 4

Permissions in this forum:
You cannot reply to topics in this forum