Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சோக்காலி - விமர்சனம்! || சோக்காலி - மெசேஜ் சொல்லும் முயற்சி!
2 posters
Page 1 of 1
சோக்காலி - விமர்சனம்! || சோக்காலி - மெசேஜ் சொல்லும் முயற்சி!
படத்தின் டைட்டிலை வைத்தே கதை என்னவாக இருக்கும் என்பதை கணிக்க முடியும்.
பெண்களை கரெக்ட் பண்ணி பின்னர் கல்தா கொடுக்கும் ஒரு ப்ளே-பாயின் கதை தான்
சோக்காலி.
டி.வி தொகுப்பாளராக இருக்கும் புதுமுக ஹீரோ சைதன்யா. இவருக்கு போன் பண்ணி
பிடித்தபாடலை போடச்சொல்வதும், அந்த பாடலை அவருக்கே டெடிகேட் பண்ணுவதும்
தான் தமிழ்நாட்டில் பாதி பெண்களின் வேலையாக படத்தில் காட்டுகிறார்கள்.
தனக்கு பெண் விசிரிகள் அதிகமாக இருப்பதால் அதை பல வழிகளில் தன் ஆசைகளை
தீர்த்துக்கொள்ள நினைக்கிறார் ஹீரோ.
அப்படி இவர் மேல் ஆசைப்படும் ஒரு இளம் பெண் தான் படத்தின் ஹீரோயின்
சுவாசிகா. ஹீரோவின் மொபைல் நம்பரை தேடி பல பெண்கள் ஏங்கிக்கொண்டிருக்க.
அந்த அபூர்வ நம்பர் ஹீரோயின் கைக்கு கிடைக்கிறது. ஹீரோயின் இருக்கும்
இடத்தைத் தேடி ஹீரோ ஓடிவர. சுவாசிகாவை உண்மையாகவே காதலிப்பது போல ஏகப்பட்ட
புருடா விடுகிறார் சைதன்யா.வழக்கமாக எல்லா பெண்களிடத்திலும் தன் வேலையை
காட்டுவது போல, இங்கேயும் தன் லீலைகளை அரங்கேற்றிவிடுகிறார். பிறகென்ன...
எல்லாம் முடிந்த பிறகு டாடா பை-பை தான்!
இது ஒருபுறம் இருக்க, சோனாவிடம் ஒரு அடிமையாய் கிடக்கிறார் ஹீரோ சைதன்யா.
சோனாவுக்கு கொஞ்சம் தாகமெடுத்தால், அந்த தாகத்தை தணிக்க ஹீரோ உதவி
செய்கிறார் என்றே சொல்லலாம். திடீரென ஒருநாள் ஹீரோவை ஆள்வைத்து அடிக்க
சொல்கிறார் சோனா. என்னடா இதுன்னு? ஒரு கேள்வி வரும்போது, சோனாவின் தங்கையை
ஹீரோ நாசம் செய்திருப்பது ஃப்ளாஷ் பேக்காக வந்து போகிறது. ஆக
பாதிக்கபட்ட பெண்களெல்லாம் ப்ளே-பாய் ஹீரோவை ரவுண்டுகட்ட... என்ன ஆகிறது
என்பதே க்ளைமாக்ஸ்.
சோனாவின் காட்சிகளில் கவர்ச்சி தலைதெரிக்க ஆடுவதால், அந்த காட்சிகளை
சென்சார் கத்தரித்துவிட்டது என்பது தான் பலருக்கும் ஏமாற்றம். இருந்தாலும்
கிடைக்கிற கேப்பில் சிக்ஸர் அடிக்கிறார் சோனா. ஒரு பெரிய நடிகை என பில்டப்
கொடுத்து பாபிலோனாவை காட்டுவது நல்ல காமெடி. நான் குள்ளமான ஆண்கள் முதல்
உயரமான ஆண்கள் வரை எல்லாவித ஆண்களையும் பார்த்திருக்கேன் என்று
ஹீரோவைப் பார்த்து பாபிலோனா சொல்கிற வசனம் ஜாலி டைம்ஸ்! சிரிக்க வைக்க
சொன்னால், கஞ்சா கருப்பு கடுப்பேற்றுகிறார்... ஷ்ஷ்ஷபா... முடியல!
பாடல்கள் எல்லாமே சுமார் ரகம் தான். சில காட்சிகள் ஓவர் செண்டிமெண்ட்
காட்டி நம் பொருமையை ரொம்பவே சோதிக்கிறது. அப்பாவித்தனமாக ஆண்களை நம்பி
ஏமாறவேண்டாம் என்கிற ஒரு நல்ல மெசேஜ் சொல்ல முயன்ற இயக்குனர் ஏ.சரணாவை
பாராட்டலாம்.
சோக்காலி - மெசேஜ் சொல்லும் முயற்சி!
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: சோக்காலி - விமர்சனம்! || சோக்காலி - மெசேஜ் சொல்லும் முயற்சி!
தினமலர் விமர்சனம்
ரோஜா டி.வி.
எனும் தனியார் சாட்டிலைட் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை
பார்க்கும் சைதன்யா செம சோக்கு பேர்வழி! பிரேம் எனும் சைதன்யாவால்
எக்கச்சக்க இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பெரும் செல்வந்தரும்
தொழில் அதிபருமான கவர்ச்சி நடிகை சோனா, தன் தங்கையை பிரேம் எனும்
சைதன்யாவால் பறி கொடுத்து அவரை பழிவாங்க துடிக்கிறார். அதேமாதிரி
சோனாவுடன் வேலை பார்க்கும் கராத்தே ராஜாவும் இதுமாதிரி சொந்தத்தை
பறிகொடுத்து பிரேமை சொர்க்கத்திற்கு அனுப்ப துடிக்கிறார்.
பிரேமின்
தீவிர ரசிகையான நாமக்கல் பரமத்தி வேலூரை சார்ந்த மலர்கொடி எனும்
சுவாசிகாவோ தன்னை விரும்பும் அறிவழகன் எனும் ஜெயராமை ஒதுக்கி தள்ளிவிட்டு,
பிரேமின் இச்சைக்கு இரையாகிறார். ஒருகட்டத்தில் வயிற்றில் பிரேமின்
வாரிசுடன் அவரைத்தேடி சென்னை வரும் சுவாசிகாவிற்கு, பிரேம் வாழ்க்கை
கொடுத்தாரா? அல்லது சோனா, கராத்தே ராஜாவின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு
இரையானாரா? என்பது க்ளைமாக்ஸ்!!
சைதன்யா, சுவாசிகா, ஜெயராம்,
சிட்டிபாபு, கஞ்சா கருப்பு, சோனா, அல்வா வாசு, முத்துக்காளை, கிரேன் மனோகர்
என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் எல்லோரும் சோக்காலி சினிமாவை நிறைய நடித்து
டிராமா ஆக்கி விடுகின்றனர்!
எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை பலம்! ஜே.
மோகனின் ஒளிப்பதிவும், ஏ.சரணாவின் எழுத்து, இயக்கமும் பழைய பாணியில்
இருப்பது "சோக்காலி"யை பாதி "சீக்காலி"யாகவும் மீதி "ஜாலி"யாகவும்
காட்டியிருக்கிறது!
ஆக மொத்தத்தில், "சோக்காலி" பாதி ஜாலி! மீதி...?!"
- நடிகர் : சைதன்யா
- நடிகை : சோனா
- இயக்குனர் :சரணா
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: சோக்காலி - விமர்சனம்! || சோக்காலி - மெசேஜ் சொல்லும் முயற்சி!
மீடியாவில் பணியாற்றும் சைதன்யா, விளம்பரப் பட நடிகராகவும் இருக்கிறார்.
எந்தப் பொறுப்பும் இல்லாமல், எல்லாவற்றையும் அனுபவிக்கின்ற சோக்காலி.
அதுவும் தனக்கு இருக்கும் பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி, பெண்களை தன்
வலையில் வீழ்த்துபவர். ஜவுளிக்கடை விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக பரமத்தி
வேலூர் செல்லும் அவர், தன்னை செல்போனிலேயே காதலிக்கும் சுவாசிகாவை அந்த
ஊரில் சந்திக்கிறார். அவருக்கு திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கி விட்டு,
சென்னைக்கு சென்று விடுகிறார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, அவரைப்
பார்ப்பதற்காக சென்னை வரும் சுவாசிகா, அங்கு சைதன்யா தன்னைப்போல் பல
பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி இருப்பதை அறிகிறார். அதேநேரத்தில், தனது
தங்கையை நாசப்படுத்திய சைதன்யாவைப் பழிவாங்க, பெண் தொழிலதிபர் சோனா தகுந்த
நேரம் பார்த்து காத்திருக்கிறார். இறுதியில் சைதன்யா திருந்தினாரா?
சுவாசிகாவும், சோனாவும் அவரைப் பழிவாங்கினார்களா என்பது கதை.
நெகட்டிவ்
ஹீரோ கேரக்டருக்கு சைதன்யா பொருந்தவில்லை. அவர் முகத்தில் இருக்கும்
அப்பாவித்தனம், அவரை கெட்டவராக ஏற்க மறுக்கிறது. என்றாலும், கொஞ்சம்
நடித்து சமாளிக்கிறார். சுவாசிகா தன் குடும்பப்பாங்கான முகத்தில் சோகம்
காட்டுவதால், நடிப்பிலும் தேறிவிடுகிறார். காதலன் முகத்தை டி.வியில்
மட்டும் பார்த்துவிட்டு, செல்போனிலேயே காதல் வளர்த்து, விளம்பர
வெளிச்சத்தில் இருப்பவர்களை அப்பாவித்தனமாக விரும்பும் இளம்பெண்களை
பிரதிபலிக்கிறார். கடைசியில் கர்ப்பத்தையும், சோகத்தையும் சேர்த்துச்
சுமந்து மனதில் நிறைகிறார். சுவாசிகாவை ஒருதலையாகக் காதலிக்கும் கிராமத்து
ஜெயராம் பரவாயில்லை.
ஒரு அறைக்குள் வைத்து, கஞ்சா கருப்புவை காமெடி
செய்ய வைத்திருக்கிறார்கள். சிரிப்பு வரவில்லை. சிட்டிபாபு, அல்வா வாசு,
முத்துக்காளை, கிரேன் மனோகர் ஆங்காங்கே வந்து கிச்சுகிச்சு மூட்டிவிட்டுச்
செல்கின்றனர். சோனா நீச்சல் உடையில் வந்து, முழு அழகையும் காட்டி
நடித்திருக்கிறார்.
மோகனின் ஒளிப்பதிவு பரவாயில்லை.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்களில் பழைய வாசனை அடிக்கிறது. ‘வாராவதி
ஓரம்’, மனதில் தங்குகிறது. கமர்ஷியல் படமாக உருவாக்க கிளாமர், சண்டை,
காமெடியை திணித்து இருக்கிறார்கள். ‘நீ விரும்புகின்ற ஆணை விட, உன்னை
விரும்புகின்ற ஆணை நேசி’ என்று பெண்களுக்கு மெசேஜ் சொல்வதற்காகவும்,
புகழ்பெற்றவர்கள் சிலருக்கு தனிப்பட்ட இன்னொரு முகம் உண்டு. அதனால்,
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் தரும் வகையில்
படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சரணா. நேர்த்தி இல்லாத
திரைக்கதை, அமெச்சூர்த்தனமான காட்சிகளால், சொல்ல வந்த மெசேஜை, சொல்ல
முடியாமல் திணறியிருக்கிறார்.

ரோஜா டி.வி. எனும் தனியார் சாட்டிலைட் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை
பார்க்கும் சைதன்யா செம சோக்கு பேர்வழி! பிரேம் எனும் சைதன்யாவால்
எக்கச்சக்க இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பெரும் செல்வந்தரும்
தொழில் அதிபருமான கவர்ச்சி நடிகை சோனா, தன் தங்கையை பிரேம் எனும்
சைதன்யாவால் பறி கொடுத்து அவரை பழிவாங்க துடிக்கிறார். அதேமாதிரி
சோனாவுடன் வேலை பார்க்கும் கராத்தே ராஜாவும் இதுமாதிரி சொந்தத்தை
பறிகொடுத்து பிரேமை சொர்க்கத்திற்கு அனுப்ப துடிக்கிறார்.
பிரேமின்
தீவிர ரசிகையான நாமக்கல் பரமத்தி வேலூரை சார்ந்த மலர்கொடி எனும்
சுவாசிகாவோ தன்னை விரும்பும் அறிவழகன் எனும் ஜெயராமை ஒதுக்கி தள்ளிவிட்டு,
பிரேமின் இச்சைக்கு இரையாகிறார். ஒருகட்டத்தில் வயிற்றில் பிரேமின்
வாரிசுடன் அவரைத்தேடி சென்னை வரும் சுவாசிகாவிற்கு, பிரேம் வாழ்க்கை
கொடுத்தாரா? அல்லது சோனா, கராத்தே ராஜாவின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு
இரையானாரா? என்பது க்ளைமாக்ஸ்!!
சைதன்யா, சுவாசிகா, ஜெயராம்,
சிட்டிபாபு, கஞ்சா கருப்பு, சோனா, அல்வா வாசு, முத்துக்காளை, கிரேன் மனோகர்
என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் எல்லோரும் சோக்காலி சினிமாவை நிறைய நடித்து
டிராமா ஆக்கி விடுகின்றனர்!
எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை பலம்! ஜே.
மோகனின் ஒளிப்பதிவும், ஏ.சரணாவின் எழுத்து, இயக்கமும் பழைய பாணியில்
இருப்பது "சோக்காலி"யை பாதி "சீக்காலி"யாகவும் மீதி "ஜாலி"யாகவும்
காட்டியிருக்கிறது!
ஆக மொத்தத்தில், "சோக்காலி" பாதி ஜாலி! மீதி...?!"
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தமிழில் எந்த ஒரு சொல்லும் இல்லை தமிழீழத்தில், புகைப்படம் சொல்லும் செய்தி..... Tamil name boards removed
» சினிமா கேலரி சோக்காலி
» மசாஜ் பற்றிய மெசேஜ்
» இந்திய ஜனாதிபதி பிரணாப் மெசேஜ்!.
» விண்டோஸ் XP இல் வெல்கம் மெசேஜ் ஐ மாற்றுவது எப்படி?
» சினிமா கேலரி சோக்காலி
» மசாஜ் பற்றிய மெசேஜ்
» இந்திய ஜனாதிபதி பிரணாப் மெசேஜ்!.
» விண்டோஸ் XP இல் வெல்கம் மெசேஜ் ஐ மாற்றுவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum