Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பாட்டிவைத்தியம் -இயற்கை மருத்துவ குறிப்புகள்
+2
அருள்
mmani
6 posters
Page 1 of 1
பாட்டிவைத்தியம் -இயற்கை மருத்துவ குறிப்புகள்
பாட்டிவைத்தியம் -இயற்கை மருத்துவ குறிப்புகள்
[You must be registered and logged in to see this image.]குப்பைமேனி,பாட்டிவைத்தியம்">
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
[You must be registered and logged in to see this image.]குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு
நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட
பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும்
குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து
இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில்
வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1
குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு
படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை
பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால்
வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள்
செய்ய பால் சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை
இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம்
வெளியேறும்.
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு
எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில்
சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி
வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி
வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில்
மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க
கிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து
உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம்
தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5
கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த
கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில்
விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித்
துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக்
கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து
வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில்
எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து
பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து
சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு
வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில்
பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட
தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி
வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர
கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து,
வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின்
பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது
வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி
இறக்கும்.
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து
நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
--------------------------------------------------------------------------------
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
--------------------------------------------------------------------------------
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
--------------------------------------------------------------------------------
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
--------------------------------------------------------------------------------
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
--------------------------------------------------------------------------------
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
--------------------------------------------------------------------------------
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து
சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு
உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக்
காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு
விரைவில் நீங்கும்.
--------------------------
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாக
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: பாட்டிவைத்தியம் -இயற்கை மருத்துவ குறிப்புகள்
[You must be registered and logged in to see this image.]
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: பாட்டிவைத்தியம் -இயற்கை மருத்துவ குறிப்புகள்
[You must be registered and logged in to see this image.]
உணவே மருந்து: இயற்கை உணவுப் பொருட்களில் உள்ள மருத்து குணங்கள்!

மாங்காய்
என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ
யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.
அவரைக்காய்
என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.
யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல்உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.
பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.
அத்திக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.
பீர்க்கங்காய்
என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்
யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல்,தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
கோவைக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ.
யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.
பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.
புடலங்காய்
என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து,கந்தகச் சத்து.

யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பாகற்காய்
என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.
யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடிசாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.
சுரைக்காய்
என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.
இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப்பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.
யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.
யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.
பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும்,பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.
பூசணிக்காய்
என்ன இருக்கு: புரதம், கொழுப்பு
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல்பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.
யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.
கொத்தவரைக்காய்
என்ன இருக்கு : நார்ச்சத்து
யாருக்கு நல்லது : நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை,லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.
பலன்கள்: ருசி மட்டுமே
வாழைக்காய்
என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் இ.
யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்.
யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள்சாப்பிடக்கூடாது.
பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.
வெள்ளரிக்காய்
என்ன இருக்கு: விட்டமின் ஏ, பொட்டாசியம்
யாருக்கு நல்லது: சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவுநோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள்: உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.
சுண்டைக்காய்
என்ன இருக்கு: விட்டமின் சி
யாருக்கு நல்லது : சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல்குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்.
பலன்கள்: கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.
பலாக்காய்
என்ன இருக்கு : சுண்ணாம்புச்சத்து
யாருக்கு வேண்டாம் : வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு.
பலன்கள் : செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.
பப்பாளிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.
யாருக்கு நல்லது : மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையைகுறைக்க
விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.
யாருக்கு வேண்டாம் : கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
பலன்கள் :சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி§ துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக§ செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து§ உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
ந§ன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி,ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட§ நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள்§ மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப்§ புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில்§ ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல்§ போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல்§ பூசி வர வீக்கம் கரையும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச§ வலி,விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில்§ சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
களாக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, சி.
யாருக்கு நல்லது : மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல்,பித்த
மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : தொண்டைவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து, பித்தத்தை கட்டுப்படுத்தும்.
நெல்லிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, செல்லுலோஸ், கார்போ ஹைட்ரேட்,கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் நிகோடினிக் ஆசிட்
யாருக்கு நல்லது : பிளட் பிரஷர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
எல்லோருக்கும் உகந்த அமிர்தக்கனி.
பலன்கள் : இளமையை நீடிக்கச் செய்யும். தலைமுடி, தோல், கண் பார்வையை
பாதுகாக்கும். இதயம் நுரையீரலை வலுவூட்டும். காரட்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள்,மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.
யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வைக்கு உகந்தது. உடல் பருமனாகாமல் காக்கும்.காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள்வெளியேறும்.
பீன்ஸ்
என்ன இருக்கு : புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள்.
யாருக்கு நல்லது : ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
யாருக்கு வேண்டாம் : குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும்.
பலன்கள் : பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பளபளப்புக்கு உதவும். வாயு நீக்கும்.

பீட்ரூட்
என்ன இருக்கு: க்ளூகோஸ்
யாருக்கு நல்லது : ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும்.
யாருக்கு வேண்டாம் : சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : ரத்தத்தை வளப்படுத்தும். சுறுசுறுப்பை அளிக்கும். மேனி நிறம்பெறும்.
நூல்கோல்
என்ன இருக்கு : சுண்ணாம்புச் சத்து
யாருக்கு நல்லது : ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம் : உப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.
முள்ளங்கி (வெள்ளை)
என்ன இருக்கு : நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு,இரும்புச் சத்து.
யாருக்கு நல்லது : சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள் : அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.
முள்ளங்கி (சிவப்பு)
என்ன இருக்கு : கந்தகம், கால்சியம், விட்டமின் சி.
யாருக்கு நல்லது : ஹைபர் அசிடிட்டி உள்ளவர்களுக்கு.
பலன்கள்: கை, கால், மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும். சிறுநீரைவெளியேற்றும்.
காலிஃபிளவர்
என்ன இருக்கு : பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ்,மெக்னீசியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது : புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
பலன்கள் : மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.
முட்டைக்கோஸ்
என்ன இருக்கு : சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ,இ.
யாருக்கு நல்லது : சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.
யாருக்கு வேண்டாம் : பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.
நார்த்தங்காய்
என்ன இருக்கு : சிட்ரஸ் ஆசிட்
யாருக்கு நல்லது : அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும்
ஆல்ரவுண்டர் திராட்சை:
திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில்தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலுள்ள 'குளுக்கோஸ்' விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது. இரத்த உற்பத்தியையும் செய்கிறது. மேலும்,மலச்சிக்கல்,ஆஸ்துமா,ஒற்றைத்தலைவலி என பல்முக குண ஊக்கியாய்பணிபுரிகிறது.
மருத்துவமனையாகும் எலுமிச்சை: எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கியசேர்க்கை 'சிட்ரிக் அமிலமும்', 'வைட்டமின் சி' யும் தான். இரத்த வாந்தியை இது நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம்,காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது.
அத்தி தரும் ஆரோக்கியம்: இந்தப் பழம் இறைமறை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஹோமரின் காவியம் பேசுகிறது. பைபிளிலும் இதன் வாசம் வீசுகிறது. இதில் விட்டமின் 'சி' இரும்புச் சத்து, புரதம், கொழுப்பு,மாவுச்சத்து இதிலுண்டு. தேயும் எலும்புக்கு வேண்டிய கால்சியம் இதில் உள்ளது. பத்தே நாளில் வீரியம் தரும் சுவரொட்டிகளுக்கு மத்தியில்,இப்பழம் உண்மையிலேயே ஆண்மையைத் தட்டியெழுப்புகிறது. மூலநோய்க்கும், மூளைச் சோர்வுக்கும் இது அருமருந்து. முதுமையிலும் வேகமாக நடந்த காந்திஜி இளமையில் சாப்பிட்டது இதைத்தான்.
ஆரஞ்சும் இன்னொரு தாய்ப்பாலே: தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது. ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்டஆயுள் உறுதியாகும்.
வயிற்றைப் பேனும் மாதுளை: பாபிலோனியாவின் தொங்கும்தோட்டத்தில் மாதுளை இருந்திருக்கிறது. இது மஞ்சள் காமாலையைப் போக்கி, கல்லீரல், இதயம், சிறுநீரகம் இவைகளையும் பாதுகாக்கிறது. பித்த வாந்தி உள்ளோர் இதைத் தேனுடன் சாப்பிட உடனடி நிவாரணம் உண்டு. மலத்துடன் ரத்தம் வெளியேறுவதை இது தடுக்கிறது. அறிவுத்திறனை அதிகரிக்கும் பழமாகவும் இது முதலிடம் பெறுகிறது.
ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை.
ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது. மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது.
ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை,பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.
தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிகஇரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.
ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள்.சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு இன்ஷா அல்லாஹ் குணமாகும். வலிப்பு நோய் உள்ளவர்கள ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப் பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் இன்ஷா அல்லாஹ் குறைந்துவிடும்.
மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள்,தினசரி ஆப்பிள் பழம் சாப்பிடும் பலக்கத்தைக் கொண்டுள்ளதால் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள். இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய, இரவில்இரண்டு ஆப்பிள் பழங்களைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதிகாலையில் இதன் சாற்றைப் பிழிந்து கொடுத்துவந்தால் தூக்கத்தில் எழுந்து நடக்கும் ஆபத்தான நிலையில் இருந்து, ஆச்சரியப்படும்படியான நிவாரணத்தைப் இன்ஷா அல்லாஹ் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப் பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடைவார்கள்.
குடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் குடற் கிருமிகள் இன்ஷா அல்லாஹ் அழிந்துவிடும்.
திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.
உடம்பில் சிலருக்கு கெட்டவாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படி உள்ளவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள செண்ட்டுகளையும்,பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் இரத்தம்சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.
ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்துவைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து, வயதுக்கு ஏற்ற அளவில் செயல்படும். இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்லபலனைக் கொடுக்கும். குதிகால் வாதம் உள்ளவர்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் குதிகால் வாதம் இன்ஷா அல்லாஹ் படிப்படியாகக் குறைந்து குணமாகும்.
சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம்,இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து இன்ஷா அல்லாஹ் பூரண குணம் ஏற்படும். தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டுதேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது. பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.

ஆப்பிள் ஜூஸ் :
ஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும்தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும். இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்கஉதவுகிறது.
ஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதை நாட்டுமருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்குச் சமமாய்ச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலவை செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து துணியால் வேடுகட்டி ஒரு மண்டலம் வெய்யிலில் வைத்து எடுத்துக் கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கி ஆண் தன்மை அதிகரிக்கும். இதயம் பலப்படும். மூளைக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள்
உள்ளன.
இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும்
பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை
அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப்போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களைஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம்,நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம் முத்துக்களில் சிறிதளவு …. மிளகுப் பொடியும் சேர்த்துச்சாப்பிட்டால் அனைத்து வகையான பித்தரோகமும் இனஷா அல்லாஹ்தீரும்.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிகதாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும்,எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.
மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி இனஷா அல்லாஹ் நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.
பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால்,பித்தநோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.
பொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும்
சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும்
உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்திஉண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தைமூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும்,உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் இனஷா அல்லாஹ் தீரும்.
மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.
மலராத மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில் சிறிதளவு ஏலம், கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் இனஷா அல்லாஹ் குணமாகும். உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம்சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி,வாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு இனஷா அல்லாஹ் நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம்அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை இனஷா அல்லாஹ் நீங்கும். அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் இனஷா அல்லாஹ் நிவர்த்தியாகும்.
மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் இனஷா அல்லாஹ் தீரும்.
மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம்நீடிக்குமாம்.
புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக்கொண்டு தினசரி 2_5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் இனஷா அல்லாஹ் குணமாகும்.
துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் 'பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது
.

Similar topics
» ஆரோக்கியமான இயற்கை மருத்துவ குறிப்புகள் :-
» எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்:-
» எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்
» பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum