TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஒரு கவிஞர் சித்தரான கதை… ..

2 posters

Go down

ஒரு கவிஞர் சித்தரான கதை… .. Empty ஒரு கவிஞர் சித்தரான கதை… ..

Post by மாலதி Thu Jun 06, 2013 7:14 am

சித்தர்கள் என்பவர்கள் மரபை உடைத்தவர்கள் என்று தமிழ் வரலாற்றில் அறியப்படுகிறார்கள். ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு வகைப்பட்டவர்.

[You must be registered and logged in to see this image.]


ஏராளமான சித்தர்கள் இருந்தாலும், அகப்பேய்ச் சித்தர், அழுகணிச் சித்தர்,
குதம்பைச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கஞ்சமலைச் சித்தர், கடுவெளிச்
சித்தர் போன்ற சித்தர்கள் பிரபலமானவர்கள். பட்டினத்தார், சிவவாக்கியர்
போன்றோர் தனித்து நிற்பவர்கள்.

உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ ?

உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது ?

உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே ?

கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே ?

என்று பாடிய சிவவாக்கியர் போல பல தத்துவார்த்த ரீதியான தர்க்கங்களைப் புரிந்தவர்கள் சித்தர்கள்.

நிற்க. இது கடந்த கால சித்தர்கள் வரலாறு அல்ல. நாம் வாழ்ந்த
காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும், நாம் எல்லோரும் அதை நினைத்துப்
பெருமை படக்கூடிய ஒரு நவீன கால சித்தர் பற்றியதே இந்தக் கட்டுரை. இது
ஆராய்ச்சிக் கட்டுரையா…. ஆயாசம் வரவைக்கும் கட்டுரையா என்பது குறித்து 90
கவிஞர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.

இந்த சித்தரின் இயற்பெயர் எஸ். அப்துல் ஹமீது. சொந்த ஊர் திருச்சி
மாவட்டம் துவரங்குறிச்சி. இந்த அப்துல் ஹமீது. கவிதை எழுதுதல், இலக்கியம்
போன்றவற்றில் இவருக்கு இயல்பாகவே ஈடுபாடு உண்டு. தொடக்க காலத்தில் சிறு
சிறு பத்திரிக்கைகளுக்கு இவர் மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் கவிதை எழுதி
அனுப்புவது வழக்கம். கவிதைகள் எழுதினாலும் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே
முடங்கிக் கிடப்பார். ராணி, குமுதம், போன்ற பத்திரிக்கைகளுக்கு கவிதைகள்
எழுதி அனுப்புவார். திருச்சி மாவட்டத்தில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த
சிறு பத்திரிக்கைகளில் இவரது கவிதைகள் வெளியிடப்படும். “சுட்டும்
விழிச்சுடர்” ”சோலைக் குயில்” போன்ற சிறு பத்திரிக்கைகளில் இவரது கவிதைகள்
வெளி வந்து கொண்டிருக்கும்.

சிறு பத்திரிக்கைகளில் வரும் நல்ல கவிதைகளை அடையாளம் காட்டுவது வழக்கம்.
இப்படி ஒரு நாள் கணையாழி இதழில், மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் ஒன்றை சுஜாதா
அறிமுகப்படுத்தி எழுதியதும் அவர் பரவலாக அறிமுகமாகிறார். கணையாழி
அறிமுகத்துக்குப் பிறகு, இவர் அந்தப் பகுதியில் மட்டுமல்லாமல் தமிழகம்
எங்கும் பரவலாக பேசப்படுகிறார்.

[You must be registered and logged in to see this image.]

அப்போது இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட லேனா தமிழ்வாணன், திருச்சி
வருகையில் இவரை சந்திக்கிறார். இவரைச் சந்தித்து, மணிமேகலை பிரசுரம்
சார்பில் இவரது ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது. இந்த கவிதைத்
தொகுப்பும் இவரை பிரபலப்படுத்துகிறது. தமிழ்ச் சூழலில் புகழ் பெற்ற
எழுத்தாளர்களோடும் அறிமுகம் கிடைக்கிறது. இளம் எழுத்தாளரான மனுஷ்யபுத்திரனை
பலரும் ஊக்கப்படுத்துகிறார்கள். காலச்சுவடு இதழ் குழுவினரோடும் அறிமுகம்
கிடைக்கிறது

1994ம் ஆண்டுவாக்கில், காலச்சுவடு இதழில் இணைகிறார். ஆசிரியர் பொறுப்பு
வழங்கப்பட்டதும் இவரது வீச்சு அதிகமாகிறது. 1997ம் ஆண்டில் மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படிக்கிறார். 1999ல் படிப்பை
முடிக்கிறார்.

2000ம் ஆண்டில் “தமிழினி” என்று நவீன இலக்கியத்துக்கான ஒரு மாநாடு
நடைபெறுகிறது. உலகெங்கும் உள்ள பல இலக்கியவாதிகள் பங்கு பெறுகின்றனர்.
அந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. அந்த மாநாட்டின் முகமாக
மனுஷ்யபுத்திரன் அறிமுகப்படுத்தப்படுகிறார். மாநாட்டு நிகழ்ச்சிகளை
தொகுத்து வழங்குவது, வந்திருப்பவர்களோடு உரையாடுவது என்று அவரின்
செயல்பாடுகள் அவரை பிரபலப்படுத்துகின்றன. இந்த நிகழ்ச்சியை முன்னின்று
நடத்தியவர்களுள் ஒருவர் சேரன். அவர் ஏற்கனவே மிகப் புகழ்பெற்ற கவிஞர்
என்பதால், புலம் பெயர்ந்த தமிழர்கள் அவரோடு சிலாகித்துப் பேசுகிறார்கள்.
இது மனுஷ்ய புத்திரனுக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

இந்த விழாவுக்கு கனிமொழி மற்றும் அவர் கணவன் அரவிந்தன் வருகை
தந்திருந்தனர். இந்த விழாவில் அரவிந்தனோடு நல்ல நட்பு ஏற்படுகிறது
மனுஷ்யபுத்திரனுக்கு. அவ்வளவு நாள் காலச்சுவட்டின் ஆசிரியராகப் பணியாற்றி,
தன்னை வளர்த்துக் கொண்ட மனுஷ்யபுத்திரனுக்கு, நாம் எவ்வளவு பெரிய கவிஞர்…
நாம் போய் இன்னொரு இதழில் வேலை பார்ப்பதா…. நாமே ஏன் முதலாளி ஆகக்கூடாது
என்ற கனவு வருகிறது… யாருக்குத்தான் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்காது ?

[You must be registered and logged in to see this image.]

அந்த நேரத்தில் கனிமொழியின் கணவர் அரவிந்தன், இணையத்தில் தமிழ்
அறிமுகமாகி வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் தொழில் அதிபர் ஷிவ் நாடார்,
மின்அம்பலம் என்ற இணைய இதழை நடத்தி வந்தார். அந்த இணைய இதழில் அரவிந்தன்
பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அரவிந்தனுக்கு அந்த இணைய தளத்தில்
வேலையெல்லாம் கிடையாது. ஷிவ் நாடார் யாராவது முக்கிய அரசில் தலைவர்களைப்
பார்க்க வேண்டுமென்றால் அரவிந்தனிடம் சொல்லுவார், அரவிந்தன் உடனே
அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தருவார். சாதாரணமாக ஷிவ் நாடார் முதல்வர்
கருணாநிதியைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்பதற்கும், கருணாநிதியின்
மருமகன் மூலமாக அப்பாயின்ட்மென்ட் கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது அல்லவா ?

இப்படி “சிறப்பாக” மின் அம்பலம் இணைய இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார்
அரவிந்தன். இந்த இணைய இதழை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக சுஜாதா
கணையாழியில் எழுதும் தொடரை மின் அம்லபத்தில் அறிமுகப்படுத்தி, அந்தத் தளம்
பிரபலமாவதற்கு முயற்சி செய்தார். அப்போதெல்லாம் இப்போது போல யூனிகோடு
கிடையாது. எதைப் பார்க்க வேண்டும் என்றாலும், தனியோ எழுத்துரு தரவிரக்கம்
செய்ய வேண்டும்.

2001 தேர்தல் முடிவுகள் வெளியாகி, நாளை ஜெயலலிதா முதல்வராக
பதவியேற்கிறார் என்றால், இன்று இரவே அரவிந்தனை வேலையை விட்டு நீக்குகிறார்
ஷிவ் நாடார். அரவிந்தனுக்கு அடுத்து என்ன செய்வது என்று யோசனை.. கவிஞர்
மனுஷ்யபுத்திரனோடு இணைந்து பணியாற்றலாமே… இருவரும் இணைந்து ஒரு பதிப்பகம்
தொடங்கினால் நமக்கும் ஒரு இலக்கிய புரவலர் என்ற பெயர் கிடைக்கும்,
மனுஷ்யபுத்திரனுக்கும் உதவி செய்தது போலிருக்கும் என்று யோசித்து,
மனுஷ்யபுத்திரனிடம் பேசுகிறார்.

ஏற்கனவே காலச்சுவட்டில், தன்னைப் போன்ற உலகக் கவிஞர்களுக்கு உரிய
மரியாதை கிடைக்கவில்லை என்று கடும் வருத்தத்தில் இருக்கிறார் மனுஷ்.
அரவிந்தன் இந்த யோசனையைத் தெரிவித்ததும், என்னால் எந்த முதலீடும் செய்ய
முடியாது, நான் ஒரு ஏழைக் கவிஞன் என்று தன் இயலாமையைச் சொல்லுகிறார்.

அரவிந்தன்தான் புரவலராயிற்றே… நான் இருக்கிறேன், முதலீட்டைப் பற்றி
நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.. பதிப்பகத்தை
மட்டும் நீங்கள் நடத்துங்கள் என்று கூறுகிறார். கரும்பு தின்ன
புத்திரனுக்கு கசக்கவா செய்யும். சரி… நம்மை நம்பி யார் புத்தகம்
தருவார்கள் என்று கேட்டதும், சுஜாதா அவர் புத்தகங்களை நம்மிடம் தருவார்
என்று அரவிந்தன் உறுதி கூறுகிறார்.

எழுத்தாளர் சுஜாதாவுக்கு, ஆங்கிலத்தில் ஹார்ப்பர் அன்ட் காலின்ஸ்,
பென்குவின் பதிப்பகங்கள் போல தன்னுடைய புத்தகங்கள் தரமாக வர வேண்டும் என்று
தனியாத ஆவல் இருந்தது. அரவிந்தனின் முதலீடும், மனுஷ்யபுத்திரனின்
உழைப்பும் அதை சாத்தியப்படுத்தும் என்று நம்பி, தன்னுடைய புத்தகங்களுக்கான
உரிமையை உயிர்மை பதிப்பகத்துக்கு வழங்குகிறார். அது வரை பல்வேறு சிறுகதைத்
தொகுப்புகளாக இருந்த சுஜாதாவின் கதைகள், மத்யமர் கதைகள், விஞ்ஞானச்
சிறுகதைகள், என்று பல்வேறு தொகுப்புகளாக வெளிக்கொணரும் திட்டம்
உருவாக்கப்படுகிறது.

ஒரு இனிய நாளில் பதிப்பகம் தொடங்குகிறது. தொடக்க வேலைகளை கவனித்து
விட்டு, அரவிந்தன் சிங்கப்பூர் சென்று விடுகிறார். பதிப்பக வேலைகள்
தொடங்கும் சமயத்திலேயே மனுஷ்யபுத்திரனுக்கு கனிமொழியின் அறிமுகம்
கிடைக்கிறது. இந்தப் பதிப்பகத்தை தானும் இணைந்து தொடங்க வேண்டும்
என்பதுதான் கனிமொழியின் விருப்பம். ஆனால், அவர் தாயார் அனுமதிக்கவில்லை.
“நான் உன்னை மந்திரியாக்கனும், பெரிய ஆளாக்கனும்னு கனவு கண்டுகிட்டு
இருக்கேன்.. போயும் போயும் புக் போட்ற வேலையைப் பாக்கறேன்னு சொல்றியே”
என்று கடிந்து கொள்கிறார். கனிமொழியும், அத்திட்டத்தைக் கைவிட்டாலும்,
மனுஷ்யபுத்திரனை நிறையவே ஊக்கப்படுத்துகிறார். அது பின்னாளில் அவருக்கு
பெரிய தலைவலியாக அமையப் போகிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது.

சிங்கப்பூரிலிருந்து அரவிந்தன் மனுஷ்யபுத்திரனை தொடர்பு
கொள்ளும்போதெல்லாம், மனுஷ்யபுத்திரன், நான் ரொம்ப பிசி… அமெரிக்காவுல
ஜார்ஜ் புஷ் கூப்புட்றாரு… இங்கிலாந்துல டோனி ப்ளேர் வரச்சொல்றாரு என்ற
ரேஞ்சில் பிசியாக காட்டிக் கொள்கிறார். அரவிந்தன் ஒரு கட்டத்தில் கடுப்பாகி
இந்தியா திரும்புகிறார். திரும்பி வந்து பார்த்தால், பதிப்பகம் சிறப்பாக
நடந்து கொண்டிருக்கிறது. மனுஷ்யபுத்திரன் அரவிந்தனை ஒரு பொருட்டாகவே
மதிக்கவில்லை. என்ன இது என்று அரவிந்தன் கேட்டதும்.. இது என்னுடைய
பதிப்பகம்.. தேவையில்லாமல் என்னை வந்து தொந்தரவு செய்யாதீர்கள் என்கிறார்.
எரிச்சலான அரவிந்தன், என்னுடைய முதலீட்டையாவது கொடுங்கள் என்றதும், என்னால்
இப்போது தர முடியாது… கொஞ்ச நாள் கழித்து, புத்தகம் விற்றதும் தருகிறேன்
என்கிறார்.

கொஞ்ச நாள் கழித்து கேட்டதும், புத்தகங்கள் விற்கவில்லை… இன்னும் கொஞ்ச
நாள் என்கிறார். இன்னும் கொஞ்ச நாள் ஆனதும், அரவிந்தன் சற்று கடிந்து
கேட்கிறார். அவ்வளவுதான்…. வெகுண்டெழுந்தார் மனுஷ்யபுத்திரன். என்னைப்
பார்த்தா இப்படிக் கேட்கிறாய்… உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கருவி,
தான் தர வேண்டிய ஒரு சிறு தொகைக்காக, கனிமொழி தன்னை அறைக்குள் அடைத்து
வைத்து, சித்திரவதை செய்கிறார் என்று செய்தி பரப்புகிறார்
மனுஷ்யபுத்திரன். அரவிந்தன் அதிர்ந்து போகிறார். கனிமொழியோ, இந்த
விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று ஒதுங்கிக் கொள்கிறார்.

அரவிந்தன் கடைசியாக, எழுத்தாளர் சுஜாதாவின் மனைவியை சந்தித்து, தன்
மீதும், கனிமொழி மீதும் அபாண்டமாக மனுஷ்யபுத்திரன் பழி சுமத்துவதாக
புலம்புகிறார். உங்களுக்கு மனுஷ்யபுத்திரன் எவ்வளவு பணம் தர வேண்டும்
என்று கேட்கிறார் சுஜாதா. பத்து லட்சம் என்று சொன்னதும், ஒரே செக்கில்
பத்து லட்ச ரூபாயை வழங்குகிறார் சுஜாதா. மனுஷ்யபுத்திரனிடம் இதை எப்படி
வசூல் செய்வது என்று எனக்குத் தெரியும். இனி உங்களுக்கு இதனால் தொந்தரவு
வராது என்று கூறிவிடுகிறார். சுஜாதா எப்படி இவ்வளவு தைரியமாக இதைச்
சொன்னார் என்றால், அப்போதுதான் சுஜாதாவின் மற்ற நூல்களுக்கான காப்புரிமை
வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பணத்தை
சுஜாதாவின் மனைவிக்கு கொடுத்த மனுஷ் வெளியில் சொன்னது என்ன தெரியுமா… ?
எவ்வளவு பணம் வச்சுருக்கறானுங்க… இவனுங்களுக்கு என்ன கேடு… என்கிட்ட போயி
பணத்தை திருப்பிக் கேக்கறானுங்க…. போனாப்போகுதுன்னு தூக்கி மூஞ்சிலயே
அடிச்சிட்டேன்…. என்று கவரிமான் போலவே பேசியிருக்கிறார்.

[You must be registered and logged in to see this image.]

இதன் பிறகு, மெள்ள மெள்ள மற்ற பிரபல எழுத்தாளர்களின் நூல்களுக்கான
காப்புரிமையை வாங்குகிறார் மனுஷ். உயிர்மை பதிப்பகத்தின் நூல்கள் ஒவ்வொரு
புத்தகக் கண்காட்சியிலும் சிறப்பாக விற்கின்றன. ஜெயமோகன், ஒலக எழுத்தாளர்
காப்ரியெல் கார்சியா மார்க்குவேஸ்… மன்னிக்கவும் சாரு நிவேதிதா,
எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் நூல்களுக்கான உரிமை உயிர்மை பதிப்பகத்திற்கு
கிடைக்கிறது.

பிரபல எழுத்தாளர்களின் நூல்களுக்கான உரிமையும், உயிர்மை இதழின்
பிரபலமும், மனுஷ்யபுத்திரனை அமெரிக்க அதிபர் ரேஞ்சுக்கு சிந்திக்க
வைக்கிறது. ச்சை… நாம எப்படிப்பட்ட கவிஞன்… நமக்கு ஈடா யாரு இருக்கா
தமிழ்நாட்டுல என்ற தொனியில் பேசவும் தொடங்குகிறார்.

சாரு நிவேதிதா ஜெயமோகன், சுஜாதா போன்ற எழுத்தாளர்களின் நூல்களுக்கு
உரிமை வாங்கி புத்தகம் போட்டு விற்பனை செய்ததோடு சரி…. ராயல்டி தொகை என்ற
பேச்சையே எடுப்பது கிடையாது. இந்த எழுத்தாளர்களும், சரி மனுஷ்யபுத்திரன்
கவிஞராயிற்றே… தந்து விடுவார் என்று காத்துக் கிடந்ததுதான் மிச்சம். மனுஷ்
டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதையும் தவிர, இந்த
எழுத்தாளர்களின் புத்தகங்கள், எழுத்தாளரை அடையாளப்படுத்தாமல்,
மனுஷ்யபுத்திரனின், உயிர்மை வெளியீடு… என்று அவதார் பட ரிலீஸ் ரேஞ்சுக்கு
பேசுகிறார்களே தவிர... எழுத்தாளர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதுவும் சிக்கலை உண்டு பண்ணுகிறது.

இறப்பதற்கு முன் தன் நண்பரோடு ஸ்ரீரங்கம் சென்றிருந்த எழுத்தாளர்
சுஜாதா, செல்லும் வழியில் தன் நண்பரிடம், இதற்கு முன் என்னுடைய பெரும்பாலான
புத்தகங்களின் உரிமை திருமகள் நிலையத்திடம் இருந்தது… அவர்கள்
செட்டியார்கள்… செட்டியார்கள் ஏமாற்றுவது குறித்து நான்
அறிந்திருக்கிறேன். ஆனால் மனுஷ்யபுத்திரன் கூட ராயல்டி தராமல்
ஏமாற்றுகிறாரே… என்று கடுமையா வருத்தப்பட்டிருக்கிறார்.

அவரது நண்பர், நீங்கள் உரிமையை மாற்றி, கிழக்கு பதிப்பகத்துக்கு
கொடுங்கள். அவர்கள் சரியாக ராயல்டி தருவார்கள் என்று கூறுகிறார்.
சுஜாதாவும் சரி என்று முடிவெடுக்கிறார். ஆனால் முதல் புத்தகத்துக்கான உரிமை
வழங்கப்படுவதற்குள், சுஜாதா இறந்து விடுகிறார்.

சுஜாதாவின் மனைவி, முதலில் ஐந்து புத்தகங்களுக்கு மட்டும் உரிமையை
கிழக்கு பதிப்பகத்துக்கு கொடுக்கிறார். அவர்கள் ஒரே வருடத்தில் விற்பனையான
அத்தனை நூல்களுக்கும் ராயல்டியை சரியாகத் தருகிறார்கள். இதைப் பார்த்து
சுஜாதாவின் மனைவி அதிர்ந்து போகிறார்… அப்போ இத்தனை நாளா மனுஷ்யபுத்திரன்
தன்னை ஏமாற்றித்தான் வந்திருக்கிறார் என்று எரிச்சலாகி, பெரும்பாலான
புத்தகங்களுக்கான உரிமையை கிழக்கு பதிப்பகத்துக்கு மாற்றுகிறார்.

இது மட்டுமல்ல… சுஜாதா மறைவுக்குப் பிறகு, கவிஞர் “சுஜாதா விருதுகள்”
என்று ஒரு விருதை ஏற்படுத்துகிறார். அந்த விருது வழங்கும் விழாவுக்காக,
ஆண்டுதோறும் 70 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை, சுஜாதாவின் மனைவியிடம்
வசூல் செய்கிறார் கவிஞர். “ராயல்டியும் தர மாட்டேங்கிறான்… விழா
நடத்தனும்னு பணத்தையும் கேக்குறான்” என்று புலம்பியிருக்கிறார் சுஜாதாவின்
மனைவி.

ஜெயமோகன் மற்றும் உலக எழுத்தாளரும், இதே காரணங்களுக்காக உரிமையை
மாற்றுகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணனின் நூல்கள் மட்டும் இன்னும் உயிர்மை
பதிப்பகத்தின் வசமே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால்,
எஸ்.ராமகிருஷ்ணனின் மனைவி, குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை, டுபுக்கு
கவிஞரின் அலுவலகம் சென்று, எத்தனை புத்தகம் வித்ததது, எத்தனை மீதம், பில்
புக்கை எடுங்கள் என்று கணக்கு வழக்குகளை சரிபார்த்து, பணத்தைக் கையோடு
வாங்கிக் கொண்டு வந்து விடுவார். இதனால்தான் எஸ்.ராமகிருஷ்ணனின் உரிமை
இன்னும் கவிஞரிடம் உள்ளது.

கவிஞரின் திருவிளையாடல் இத்தோடு நிற்கவில்லை. வெளிநாடுகளில் உள்ள
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் புத்தகம் போடுகிறேன் என்று வசூலித்து, ஏமாற்றிய
கதைகளும் உண்டு. சுவிட்சர்லாந்தில் நளாயினி தாமரைச்செல்வன் என்ற
எழுத்தாளர் இருக்கிறார். அவரின் கவிதைத் தொகுப்பை உயிர்மை சார்பில்
புத்தகம் போடுகிறேன் என்று 1.25 லட்ச ரூபாயை வாங்கியிருக்கிறார் கவிஞர்.
அவர் அட்டையைக் கூட வடிவமைத்து அனுப்பி விட்டார். இன்று புத்தகம்
போடுகிறேன்.. நாளை புத்தகம் போடுகிறேன் என்று எப்போது பார்த்தாலும்
டபாய்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் புத்தகம் போட்டு
ஒரு நகலை அனுப்பியிருக்கிறார். அந்தப் புத்தகத்தைப் பார்த்தால், ஏனோ
தானோவென்று ஒழுங்கில்லாமல் போடப்பட்ட புத்தகம் அது. புத்தகம் முழுக்க
அச்சுப் பிழைகள். ஒரே கவிதை 7 பக்கத்தில் தவறுதலாக மீண்டும் மீண்டும்
அச்சடிக்கப்பட்டிருந்தது. நளாயினி நேராக வந்து கவிஞரிடம் கேட்டதும்…. உன்
புக் இருக்கு வேணும்னா எடுத்துட்டுப் போ…. அவ்வளவுதான் என்னால பண்ண
முடியும் என்று கூறியிருக்கிறார். புத்தகம் போட்ட உடன் நான் சென்னைக்கு
வந்திருந்தால், நான் அவனைக் கொலையே செய்திருப்பேன்…. எனக்கு இந்தப் பணம்
பெரிதல்ல.. அதை நான் இரண்டே மாதங்களில் சம்பாதித்து விடுவேன்… என்னுடைய
முதல் புத்தகத்தை இப்படி அலங்கோலமாக அச்சடித்து என்னை அவமானப்படுத்தி
விட்டான் என்று புலம்புகிறார் நளாயினி.

பெர்லின் நகரத்தில் மற்றொரு புலம் பெயர் தமிழர். புத்தகம் போடுவதற்காக
அவர் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். எப்போது புத்தகம் கேட்டாலும்
ஒழுங்காக பதில் சொல்லாமலேயே இருந்த மனுஷ் ஒரு கட்டத்தில் புத்தகம்
அச்சடித்து விட்டேன்.. நீங்கள் கொடுத்த பணத்தில் 30 ஆயிரம் புத்தகத்துக்கு
செலவாகி விட்டது. மீதம் 10 ஆயிரம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். சில
நாட்கள் கழித்து இந்தியா வந்த அவர், கவிஞரிடம் மீதம் உள்ள பணத்தைக்
கேட்டதும், அனைத்தும் செலவாகி விட்டது… நீங்கள்தான் எனக்கு 10 ஆயிரம் தர
வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த தமிழர் பெர்லினில், டாக்சி ஓட்டி
தன் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

சிங்கப்பூரில் மதி கந்தசாமி என்பவரிடம் 5 புத்தகங்கள் போடுவதாகச் சொல்லி
ஒரு கணிசமான தொகையை ஆட்டையைப் போட்டிருக்கிறார் இதே போல லண்டனிலும் ஒருவரை
ஏமாற்றிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், இந்தியா, இலங்கை,
சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கோபால் பல்பொடி விற்பது
போன்று மோசடி செய்திருக்கிறார் கவிஞர். கவிஞரல்லவா… கவிதைக்கு
மட்டுமல்லாமல் வாழ்க்கைகும் பொய்தான் அழகு என்று முடிவெடுத்து விட்டார்
போலும்.

இவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர், வெளியிலேயே
சொல்லுவதில்லை. சொன்னால் நமக்குத்தான் அசிங்கம்… இந்த நபரிடம் எப்படி
பணத்தை வசூல் செய்வது என்று மனம் வெறுத்து விட்டு விடுகிறார்கள். இதுவே
கவிஞருக்கு வசதியாகப் போய் விட்டது. இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே
வாழ்ந்து கொண்டிருக்கும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தவர்தான் கவிஞர்
மனுஷ்யபுத்திரன்.

[You must be registered and logged in to see this image.]

இப்படி பொய் சொல்லுவது, ஏமாற்றுவது இதெல்லாம் கவிஞருக்கு கைவந்த கலை.
அருந்ததி ராயின் God of Small Things நாவலை, தமிழில் மொழி பெயர்த்து
வெளியிட உயிர்மை பதிப்பகமும், David Godwin Associates என்ற பதிப்பகமும்
ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. அந்த ஒப்பந்தத்தின்படி 18 மாதங்களில்
புத்தகத்தை வெளியிட வேண்டும். அப்படி வெளியிடவில்லையென்றால், ஒப்பந்தம்
தானாகவே காலாவதியாகி விடும். கவிஞர், மொழிபெயர்க்கப்பட்ட நூலை சாவகாசமாக,
22 மாதங்கள் கழித்து தயார் செய்கிறார். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 18
மாதங்களுக்குள் நூல் வெளியிடப்படாவிட்டால், ஒப்பந்தம் தானாகவே காலாவதியாகி
விடும் என்ற தெளிவான ஷரத்தில் கையெழுத்திட்டது சாட்சாத் நமது கவிஞர்தான்.

ஒப்பந்தத்தின்படியே 18 மாதங்களுக்குள் நூல் வெளிவர வேண்டும். ஆனால்
சாவகாசமாக நூலை இரண்டு ஆண்டுகள் கழித்து தயார் செய்து விட்டு, எவ்வளவு
சாமர்த்தியமாக, கழிவிரக்கம் கொண்டு கவிஞர் புலம்புகிறார் பாருங்கள்… ?

“கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அவருடைய படைப்பின்மீது உயிரைக் கொடுத்து வேலை
செய்த ஒரு எழுத்தாளனின் உழைப்பு குறித்து அருந்ததி ராய்க்கு எந்த
மரியாதையும் இல்லை. ஒரு நிறுவனம் பற்றி யாரோ போகிறபோக்கில் சொன்ன ஒரு
தகவலைச் சோதித்துப் பார்ப்பதற்குக்கூடஅவருக்கு மனமில்லை.
தனக்கு செலுத்தப்பட்ட காப்புரிமை தொகை பற்றி அவருக்கு எந்தக் குற்ற
உணர்வும் இல்லை. எல்லாவற்றையும்விட அவர் தன்னோடு ஒரு சட்டபூர்வமான
ஒப்பந்தத்தில் ஈடுபட்ட ஒருவரோடு எந்தக் காரணமும் இன்றி பேசக்கூட மறுத்து
விட்டார். நான் சோனியாகாந்தியோடு ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டு அதுபோன்ற ஒரு
பிரச்சினைவந்திருந்தால் அவரை சந்தித்துப் பேசுவதில் எனக்கு எந்தப்
பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் ஆங்கிலத்தில் ஒரே ஒரு நாவல் எழுதிய
எழுத்தாளருக்கு இத்தகைய அதிகாரம் எங்கிருந்து வருகிறது? இவர்தான் அதிகார
வர்க்கம் பற்றி, முதலாளித்துவம் பற்றிப் பேசுகிறார். ஆதிவாசிகளுக்காகப்
பேசுகிறார்.“

இவர் காலதாமதமாக நூலை வெளியிட்டு விட்டு, அருந்ததி ராயைப் பற்றி எப்படி
அவதூறு பேசுகிறார் பார்த்தீர்களா ? அதுவும் அருந்ததி ராய் முதலாளித்துவம்
பற்றிப் பேசக்கூடாதாம் ? இது போல தனக்குச் சாதகமாக எல்லா விஷயங்களையும்
திரித்து ஆதாயம் தேடுவதில், கவிஞர் வல்லவர். தொடர்புடைய இணைப்பு.

“டேய் பேமானி… கவிஞர் சித்தரான கதைன்னு சொல்லிட்டு, கவிஞர் கதையை
மட்டும் சொல்லுற… சித்தர் கதை எங்கடா…“ என்று சென்னை வாழ் சவுக்கு வாசகர்
அன்போடு திட்டுகிறார்……… தோ… சொல்றேன் நைனா… சவுண்ட் விடாத…

சித்தர்கள் என்பவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள். தன்னை உணர்ந்தவர்கள்.
தன்னை உணரவேண்டும் என்றால், உடலை வெல்ல வேண்டும். உடலை வெல்ல வேண்டும்
என்றால் காமத்தை வெல்ல வேண்டும் அல்லவா… கவிஞர் வெறும் கவிஞர் என்று
நினைத்து ஏமாந்து விடாதீர்கள்…. அவர் காதல் கவிஞர்… காதல் கவிதைகளை கனிரசம்
சொட்ட எழுதக்கூடியவர் என்று நினைத்து ஏமாந்து போகாதீர்கள்… காதல் கனிரசம்
சொட்ட பேசக்கூடியவர்… செயலாற்றக் கூடியவர்.

திருச்சியில் இவர் சின்னப் பிரபலமானதில் இருந்தே தனது காதல்
களியாட்டங்களை தொடங்கி விட்டார். பிரபலமானதும், இவரைத் தேடி இலக்கிய
ஆர்வம் உள்ள கல்லூரி மாணவிகள் வரத் தொடங்கினார்கள்… வெளியூரிலிருந்து வரும்
சில மாணவிகள், இரவு தாமதமானால், கவிஞரின் துவரங்குறிச்சி வீட்டிலேயே தங்க
நேர்ந்து விடும். தங்கும் பெண்ணோடு இரவு நேரத்தில் சர் ரியலிசம்,
ஸ்டரக்சுரலிசம், பூண்டு ரசம் போன்ற பல்வேறு விவாதங்களை நடத்துவார். இப்படி
ஒரு நாள் ஒரு பெண்ணோடு விவாதம் நடத்துகையில், அந்தப் பெண்ணை
கட்டிப்பிடித்து முத்தமிட்டிருக்கிறார். அலறியடித்து வெளியே ஓடிய அந்தப்
பெண், அன்றோடு கவிஞர் இருக்கும் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை.

கவிஞரைப் பற்றி விபரமறிந்தவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்
பாருங்கள்… கவிஞரின் காமக்களியாட்டத்தைச் சொல்லுவார்கள். கவிஞர்
துவரங்குறிச்சியில் இருக்கையில், இதே போல ஒரு இலக்கிய ஆர்வலர் ஒரு பெண்
வருகிறார். அந்தப் பெண்ணிடமும் இதே போல நடந்து கொள்கிறார் கவிஞர்.
கவிஞரின் அதிர்ஷ்டம், அது செட்டாகி விடுகிறது. பிறகு, அந்தப் பெண்ணும்,
கவிஞரும் சேர்ந்து வாழத் தொடங்கி விடுகிறார்கள்.

கவிஞர் நெல்லையில் படித்துக் கொண்டிருந்தபோது, கவிஞரின் உதவிக்காக ஒரு
தாயும் அவர் மகளும் வீட்டு வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் கவிஞரின்
படிப்பு முடியும் வரை, கவிஞருக்கு உதவியாக வீட்டு வேலைகளைப் பார்த்துக்
கொள்கிறார்கள். படிப்பு முடிந்ததும், கவிஞர் சென்னை கிளம்புகையில், அந்தப்
பெண்ணின் 14 வயது மகளை நான் சென்னைக்குச் சென்று அந்தப் பெண்ணை படிக்க
வைக்கிறேன் என்று அழைத்துச் சென்று விடுகிறார். அந்தப் பெண்ணும் கவிஞரோடு
சென்னை வந்து தங்கியிருக்கிறாள்.

கவிஞரின் ஸ்டைல் என்ன தெரியுமா ? தன்னைப் பார்க்க வரும் ரசிகைகளிடம்
பேசிக்கொண்டே இருப்பார். திடீரென்று எனக்கு தோள்ப்பட்டையெல்லாம்
வலிக்கிறது.. சிறிது அமுக்கி விட முடியுமா என்று கேட்பார்… அவர்களும்
பரிதாபப்பட்டு அமுக்கி விடுவார்கள். அப்படியே தனது வேலையை ஆரம்பிப்பார்.
இதில் சில க்ளிக்காவதும் உண்டு.

சென்னைக்கு படிக்க அழைத்துச் சென்ற அந்த சிறுமியையும் இதே போன்ற
வேலைக்குத்தான் பயன்படுத்துவார் கவிஞர். அந்தப் பெண் பொறுத்துப்
பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பையனோடு
ஓடிப்போகிறது. அந்தப் பெண்ணின் தாயார், என் பெண் காணாமல் போனதற்கு
மனுஷ்யபுத்திரன்தான் காரணம் என்று புகார் கூறுகிறார். சென்னைக்கு வந்து என்
பெண்ணைக் கண்டுபிடித்துக் கொடுக்காவிட்டால் காவல்துறையில் புகார்
தெரிவிப்பேன் என்கிறார். விஷயம் வெளியில் தெரிந்தால், கவிஞருக்கு அவமானம்
இல்லையா…. திமுகவில் சொல்லி, திமுகவினர் உதவியோடு அந்தப் பெண்ணை
கண்டுபிடித்து வந்து சேர்க்கிறார்கள்.

கவிஞரின் காதல் கதை இத்தோடு நின்று விடவில்லை. கனிமொழியை
காதலிக்கிறேன்…. என்று ஒரு கட்டத்தில் ஆரம்பித்து விட்டார் கவிஞர். எந்த
அளவுக்கு கவிஞரின் காதல் வளர்ந்தது என்றால், அவருடைய “நீராலானது” என்ற
காதல் கவிதைத் தொகுப்பை கனிமொழிக்கு சமர்ப்பணம் செய்து, கனிமொழி பிறந்தநாள்
அன்று, காலை 5 மணிக்கு கனிமொழி வீட்டுக்கு கேக் வாங்கிக் கொண்டு சென்று,
கதவைத் தட்டி, இதுதான் இந்தப் புத்தகத்தின் முதல் பிரதி. இதை உங்களுக்கு
சமர்ப்பிக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறி, ஒரு காதல்
பார்வை பார்த்திருக்கிறார். அப்போது அரவிந்தனும் இருந்திருக்கிறார்.
அரவிந்தனுக்கு கடுமையான கோபம்… ஏன் இந்த மாதிரி சல்லிப்பயலோடெல்லாம்
சகவாசம் வைத்துக் கொள்கிறாய் என்று எரிச்சலாகியிருக்கிறார். முகத்தில்
காறித்துப்பாத குறை… அதிலிருந்து கனிமொழி, கவிஞரைப் பார்த்தாலே காத தூரம்
ஓட ஆரம்பித்து விட்டார்.

கவிஞர் சித்தராவதற்கான வேலைகள்
இத்தோடு முடியவில்லை. கவிஞர் காலச்சுவடு பதிப்பகத்தில் பணியாற்றியபோது,
அங்கே இருந்த மற்றொரு பெண்ணை காதலித்து, கவர்ந்து சென்னைக்கு அழைத்து வந்து
சேர்ந்து வாழத் தொடங்கி விட்டார். சரி ஏற்கனவே ஒரு பெண்ணோடு சேர்ந்து
வாழ்ந்து கொண்டிருந்தாரே என்ற கேள்வி எழும். ஒரு வீட்டில் ஒரே அறைதான்
இருக்குமா என்ன ? பிரபல கவிஞர் வீடல்லவா… பெரிய வீடாகத்தானே இருக்கும் ?

இவரைப் பற்றி பலரும் சொல்லும் மற்றொரு விஷயம், மிக மிக மோசமாக
வதந்திகளைப் பரப்புவார் என்கிறார்கள். தனக்கு ஒருவரை பிடிக்காவிட்டால்,
அதுவும் அவர் பெண்ணாக இருந்தால், இவள் அவனோடு படுத்தாள், இவளுக்கும்
அவனுக்கும் உறவு இருக்கிறது, இவள் காரியம் சாதிப்பதற்காக, அரைகுறை ஆடைகளை
அணிந்தாள் என்று கூசாமல் பேசுவார் என்று பெரும்பாலானோர் கூறுகிறார்கள்.

கவிஞர் பாதி சித்தராகி விட்டார். மீதி சித்தராவதற்கான முதல் படி
நக்கீரனில் தொடர் எழுதத் தொடங்கியதும் அரங்கேறியது. நக்கீரனில்
எதிர்க்குரல் என்ற தொடர் எழுதத் தொடங்கினார். நக்கீரனோடு சகவாசம் வைத்த
பிறகு என்ன ஆகும்…. ? அந்த குணம் இவரையும் தொற்றியது என்று சொல்வதை விட,
இவருக்குள் எப்போதும் இருந்த குணம் கூர்தீட்டப்பட்டது.

ஆம். கவிஞர் சித்தரவாதற்கான அனைத்து தகுதிகளையும் அடைந்தார். தற்போது
உயிர்மை பத்திரிக்கையின் விற்பனை அதள பாதாளத்திற்கு போய் விட்டது. கடந்த
திமுக ஆட்சியில் மட்டும் உயிர்மை பதிப்பகத்துக்கு ஒன்றரை கோடி மதிப்பிலான
லைப்ரரி ஆர்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் கவிஞருக்கு லாபம்
மட்டும் பல லட்சங்கள்.

இனி லைப்ரரி ஆர்டர்கள் கிடைக்காது. முக்கிய எழுத்தாளர்களின்
புத்தகங்களுக்கான உரிமை பறிபோய் விட்டது. இனி எதிர்காலம் கேள்விக்குறி….
புத்தகம் போட்டுத் தருகிறேன் என்று வசூல் செய்யலாம் என்றால், உலகம் முழுக்க
பேர் நாறி விட்டது… இனி பிழைப்புக்கு என்னதான் செய்வது… இருக்கவே
இருக்கிறது அரசியல்.

சரி
அரசியலில் கனிமொழி மூலமாக நுழையலாம் என்றால், கனிமொழி கிட்டவே சேர்க்க
மாட்டார். எப்படி உள்ளே நுழையலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான்
இருக்கவே இருக்கிறது நக்கீரன். நக்கீரன் தொடர்புகள் வழியாக,
கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி ஆறாம் பாக புத்தக வெளியீட்டு விழாவில்
சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்படுகிறார். அந்த விழாவில் இவர் பேசிய
பேச்சு இருக்கிறதே….. அப்பப்பப்பா…. திமுகவில் உள்ள பழைய சொம்புகளான
வைரமுத்து, துரை முருகன், போன்றோரே அசந்து போகும் அளவுக்கு
சொம்படித்திருக்கிறார். அப்படி என்னதான் சொம்படித்தார் என்று தெரிந்து
கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த இணைப்பில் படிக்கலாம்.

ஒரே ஒரு சாம்பிள் “இந்த 90-வது வயதில் உலகத் தமிழர்களின் தமிழ்
அடையாளத்தின் மிகப்பெரிய ஆலமரமாக கலைஞர் கிளை பரப்பி நிற்கிறார். இந்த
விருட்சத்தின் நிழலில்தான் தமிழர்களின் நிகழ்கால அரசியல் சரித்திரத்தின்
ஒவ்வொரு இயக்கமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது”

இதில் சிறப்பம்சமே என்னவென்றால், ஸ்டாலினைப் பற்றி இவர் அடித்த
சொம்புதான். “கலைஞர் அரசியலில் உருவாக்கிய இந்த மகத்தான பண்புகளை
முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவராக இன்று ஸ்டாலின் உருவாகியிருக்கிறார்.
அரசியல் நாகரிகம், உள்கட்சி ஜனநாயகம், அரவணைத்துச் செல்லும் தலைமைப் பண்பு,
உறுதியான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றால் கலைஞரின் அரசியலை ஸ்டாலின்
இன்று அடுத்தகட்டத்திற்கு, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறார்.”

எப்போது ஸ்டாலினைப் பற்றிப் பேசினாலும், “பொம்பளை பொறுக்கி” என்றே
சொம்படிச் சித்தர் (இப்போது சித்தராகி விட்டார்) அழைப்பது வழக்கம்.
ஸ்டாலின் பேச்சை எடுத்தால், சித்தர் “அவன் சரியான மக்கு… எதுக்கும்
லாயக்கில்ல“ என்றுதான் கூறுவார். இப்படி தனிப்பட்ட முறையில் கூறி விட்டு,
சித்தர் அடித்த சொம்பைப் பார்த்தீர்களா… ?

[You must be registered and logged in to see this image.]

இதுதான் ஒரு கவிஞர் சொம்படிச் சித்தர் ஆன கதை… எப்படியாவது
பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட டிக்கெட் வாங்கினால்,
எப்படியும் தேர்தலில் ஜெயித்து விடலாம் என்ற மனப்பால் குடிக்கிறார்
சொம்படிச் சித்தர்…. பாவம்… ஆனானப்பட்ட குஷ்புவுக்கே தண்ணி காட்றாங்க….

நம்பிகையோடு இருங்கள் சித்தரே…\\
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஒரு கவிஞர் சித்தரான கதை… .. Empty Re: ஒரு கவிஞர் சித்தரான கதை… ..

Post by Tamil Wed Jun 26, 2013 10:47 pm

அறிவிப்புஅறிவிப்புஅறிவிப்பு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum