TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையில் துக்ளக்-3

3 posters

Go down

இலங்கையில் துக்ளக்-3 Empty இலங்கையில் துக்ளக்-3

Post by மாலதி Thu May 30, 2013 9:56 pm

ஈழத் தமிழர்களின் விரோதிகள்

‘இலங்கைத்
தமிழரின் நிலைப்பாடுகள் குறித்த முடிவுகளை எடுக்க வேண்டியது யார் என்ற
கேள்விக்குப் பதில் தேடிப் பார்த்தாலே, இலங்கைத் தமிழர் பிரச்னையில் எழும்
எல்லா குழப்பங்களுக்கும் விடை கிடைத்து விடும்’ என்றார் ஒரு யாழ்ப்பாண
பிரமுகர். அவர் வைத்த வாதங்கள் இவை.


“இலங்கைத்
தமிழர் குறித்து முடிவெடுக்க வேண்டியது யார்? போருக்குப் பயந்து, உயிர்
பயத்தில் வெளிநாடுகளுக்கு ஓடிப் போய், அந்த நாடுகளின் இரக்கத்தில் சொகுசான
வாழ்க்கையை மேலை நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த
தமிழர்களா? அந்தப் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் சலுகைகளை அனுபவித்துக்
கொண்டு, தமிழகத்தில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளா? இலங்கையின் வரலாறு
என்ன, போர்களில் தமிழர்கள் அடைந்த இழப்புகளுக்கு யார், யார் காரணம்
என்பதெல்லாம் தெரியாமல், இலங்கை அரசு அழித்த தமிழர்களை விட, தமிழன் அழித்த
தமிழர்கள்தான் அதிகம் என்ற உண்மை புரியாமல், தமிழன் என்ற ஒற்றை உணர்வில்,
அந்தப் பாசத்தில் தமிழகத்தில் போராடும் மாணவர்களா? அல்லது இலங்கையில்
தங்கள் சொந்த மண்ணில் வாழும் நாங்களா? இவர்களில் முடிவெடுக்க வேண்டியது
யார்?


“சந்தேகமில்லாமல்
நாங்கள்தானே? எங்கள் முடிவு என்ன என்பதைத்தானே மற்ற எல்லோரும் ஏற்க
வேண்டும்? ஏனென்றால், இங்கு வாழ்வது நாங்கள்தானே? ‘வாழ்க்கையை அழித்துக்
கொண்டது போதும். இனியேனும் உயிர் தப்பி மிஞ்சியிருப்பவர்கள் தங்களின்
மிஞ்சிய வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க வேண்டும். அதற்கு யார் நல்லது
செய்ய முடியுமோ அவர்கள் பக்கம்தான் போக வேண்டும்’ என்ற மனோ நிலையில் உள்ள
எங்களின் முடிவுக்குத்தானே மற்றவர்கள் கட்டுப்பட வேண்டும்? இங்குள்ள தமிழர்
அளித்துள்ள முடிவுகள் என்ன?


“2009
மேயர் தேர்தலில் யாழ்ப்பாணத் தமிழர்கள், ஆளுங்கட்சிக் கூட்டணியில் அங்கம்
வகிக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்குத்தான் மெஜாரிட்டி அளித்தனர்.
அந்தக் கட்சிதான் யாழ்ப்பாண மேயர் பதவியைக் கைப்பற்றியது. 2010
நாடாளுமன்றத் தேர்தலில், யாழ் மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் ஆளுங்கட்சிக்
கூட்டணியில் இருக்கும் தமிழ்க் கட்சிகளுக்கே கிடைத்தன. வாக்களித்தது
எல்லாமே தமிழர்கள்தான்; சிங்களர் இல்லை.


“விடுதலைப்
புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 2004 தேர்தலில்
23 இடங்களை வென்றது. இறுதிப் போருக்குப் பிறகு நடந்த 2010 தேர்தலில் 14
இடங்களை மட்டுமே வென்றது. கிழக்கு மாகாண சபையையும், தமிழ் தேசியக்
கூட்டமைப்பால் வெல்ல முடியவில்லை. தமிழர்கள் பெருவாரியாக வாக்களித்த
பகுதிகளில் இதுதான் நிலைமை. ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்தவர்கள் எல்லாம்
தமிழ்த் துரோகிகள் என்றால், அவர்களுக்கு வாக்களித்த ஈழத் தமிழர்களெல்லாம்
யார்?


“இங்குள்ள
மக்களின் மனோபாவம் தெரியாமல், வெளிநாடுகளில் இருந்து கொண்டு தங்கள் ஆசையை
எங்கள் மீது திணிக்க முனைபவர்கள்தான், உண்மையில் ஈழத் தமிழர்களின்
விரோதிகள்” என்றார் அவர் ஆவேசமாக.


கட்டம் இடப்பட்ட செய்தி 2

போரின் சாட்சியங்கள்

இலங்கையில்
அமைதி திரும்பி, அபிவிருத்திப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன என்பதில்
சந்தேகமில்லை. சாலைகள், அரசுக் கட்டிடங்கள், மின்சார நிலையங்கள் எல்லாம்
புதுப்பிக்கப்பட்டு ஃப்ரெஷ்ஷாக காணப்பட்டன. ஆனாலும் அந்த அமைதிக்கு இடையே
மெல்லியதாய் ஒலிக்கும் சோக இசை மாதிரி ஊருக்கு ஊர் நிற்கின்றன சிதிலமடைந்த
பல வீடுகள். போரின் காரணமாக இடம் பெயர்ந்த யார் யாருக்கோ சொந்தமான வீடுகள்,
உரிமையாளர் திரும்பி வராததால் சிதிலமடைந்து, கூரை இழந்து, செடி வளர்ந்து
பரிதாபமாக நிற்கின்றன.


கிளிநொச்சி,
முல்லைத் தீவு பகுதிகளில் இப்படிக் கிடக்கும் வீட்டு வெளிச் சுவர்களில்
எல்லாம், சல்லடை மாதிரி புல்லட் மார்க்குகள் கடைசிக்கட்ட போரின்
சாட்சியங்களாக நிறைந்திருக்கின்றன. ஒரு சில உரிமையாளர்கள் திரும்பி
வந்தாலும், தங்களது வீட்டைச் சீர் செய்து கொள்ள நிதி வசதி இல்லாமல் வேறு
குடிசைகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற வீடுகள் எல்லாம் ஜன்னல்,
கதவு, மேற்கூரை ஓடுகள் எதுவுமே இல்லாமல் வெறும் குட்டிச் சுவர்களாக உள்ளன.


அவையெல்லாம்
எங்கே என்று விசாரித்தபோது, “போர் முடிந்து திரும்பி வந்த பல குடும்பங்கள்
தங்கள் வீடுகளைச் செப்பனிட போதிய பொருளாதார வசதியில்லாமல் தவித்ததால்,
இப்படி ஆளில்லாமல் கிடக்கும் வீடுகளில் இருந்த தேவையான பொருட்களை எடுத்துக்
கொண்டு போய் விட்டார்கள். சிலர் உரிமையாளர்களின் அனுமதி பெற்று
எடுத்தார்கள். சிலர் அனுமதியில்லாமலே களவாடிக் கொண்டனர்” என்று
தெரிவித்தார்கள் அப்பகுதி மக்கள். சொந்தமாக ஒரு வீடு கட்டுவது ஒவ்வொரு
நடுத்தர குடும்பத்திற்கும் இருக்கும் மிகப் பெரிய கனவு. அப்படி கட்டிய
வீட்டை விட்டு விட்டு ஓடும் அளவுக்கு காலச் சூழலில் சிக்கிக் கொண்டவர்களின்
நிலை பரிதாபமானதுதான்.


கட்டம் இடப்பட்ட செய்தி 3

புலிகளால் ஏற்கப்படாத தமிழர்கள்

கிறிஸ்தவ
தமிழர்களை ஏற்றுக் கொண்ட விடுதலைப் புலிகள், தமிழ் பேசும் முஸ்லிம்களை ஏன்
ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கேள்வியை இலங்கையில் பல அரசியல்வாதிகளிடம்
கேட்டும், சரியான பதில் கிடைக்கவில்லை. இந்தியாவில்தான் ஒரு முஸ்லிம்
பெரியவர் அதற்கு எங்களிடம் பதில் சொன்னார். “விடுதலைப் புலிகள் வடக்கு
மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களை மட்டுமே தமிழர்களாக
நினைத்தார்கள். அவர்கள்தான் ஈழத் தமிழர்கள்; அவர்களுக்கு மட்டுமே ஈழம்
சொந்தம் என்று நினைத்தார்கள். எனவே, இந்திய வம்சாவழியில் வந்த எந்தத்
தமிழர்களையும் (அவர்கள் எம்மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) புலிகள்
ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்ததில்லை.


நமது
நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி ஆகியோர், ஆறு நாட்கள் இலங்கையின் பல
பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி, செய்திகளைச்
சேகரித்து வந்துள்ளனர். இந்த இதழில் யாழ்ப்பாணம் பகுதியில் அவர்கள்
பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்:


இலங்கையின்
வட மூலையான யாழ்ப்பாணம், உண்மையில் யுத்தத்தைச் சந்தித்ததா என்று கேள்வி
கேட்கும் அளவிற்கு நிலைமை முன்னேறியிருந்தது. பச்சை பசேல் என விவசாயம்
நடந்து கொண்டிருந்தது. சாலைகள் பளபளவென இருந்தன. அரசுக் கட்டிடங்கள்
புதுப்பிக்கப்பட்டிருந்தன. ஹிந்துக் கோவில்களைப் புதுப்பிக்கும் பணிகள்
நடந்து கொண்டிருந்தன. புத்தம் புது ஆட்டோக்கள் நகரமெங்கும் குறுக்கும்
நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தன. எங்கும் அமைதியாகவும், இயல்பாகவும்
மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தியேட்டரில் புதுத் தமிழ்ப் படம்
(கடல்) ஓடிக் கொண்டிருந்தது. ஆனாலும், ஆங்காங்கே சோகம் இழையோடும் வகையில்
போர் நினைவுச் சின்னங்களாக சிதிலமடைந்த பல வீடுகளைப் பார்க்க முடிந்தது.


சாலையெங்கும்
புதுப்புது கடைகள் ஏராளமாக இருந்தன. ‘போருக்குப் பிறகு வெளிநாடுகளில்
தஞ்சம் புகுந்திருந்த இளைஞர்கள் எல்லாம், நாட்டுக்குத் திரும்பி
வந்துள்ளனர். அவர்களுக்கு கடல் வேலைக்குச் செல்லும் வாய்ப்புதான் அதிகம்.
நிறைய வீடு கட்டும் பணி தற்போது நடப்பதால், பலர் கொத்தனார் வேலைக்குச்
செல்கின்றனர். வசதி இருப்பவர்களும், வெளியிலிருந்து உறவினர்களின் மூலம்
உதவி பெறுபவர்களும் கடை வைக்கிறார்கள். இதனால், பார்க்குமிடமெல்லாம்
கடைகளாக இருக்கின்றன. “இவ்வளவு சிறிய பகுதிக்குள் ஐம்பதாயிரம் கடைகள்
என்பது ரொம்ப அதிகம். எல்லோரும் கடை வைத்து விட்டால் வாங்க ஆள் வேண்டாமா?”
என்றார் ஒரு பெரியவர்.


ஆங்காங்கே
ராணுவ வீரர்கள் கண்ணில் பட்டாலும், அவர்கள் எந்த வாகனத்தையும் நிறுத்திச்
சோதிக்கவில்லை. யாரையும் நிறுத்தி விசாரிக்கிற மாதிரியும் தெரியவில்லை.
“அவர்கள் பாட்டுக்கு அவர்கள் நிற்பார்கள். நாங்கள் பாட்டுக்கு நாங்கள்
போவோம்” என்று சாதாரணமாகச் சொன்னார் ஒரு இளைஞர்.


யாழ்ப்பாணம்
பகுதியில் சிங்களவர்களைக் குடியமர்த்தியதாக அரசு மீது ஒரு குற்றச்சாட்டு
வைக்கப்படுகிறது. தமிழர்கள் மத்தியில் அது பற்றி விசாரித்தோம். ஒரு சிலர்
பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார்களே தவிர, ‘இந்தப் பகுதியில்
இத்தனை சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள்’ என்கிற வகையில் யாரும்
சொல்லவில்லை.


“இங்கு
‘தேசிய வளமைச் சட்டம்’ என்று ஒரு சட்டம் அமலில் உள்ளது. வட பகுதித்
தமிழர்களைத் தவிர, கொழும்புவிலோ அல்லது வேறு தென் பகுதி இலங்கையிலிருந்தோ
யாரும் வட பகுதிக்கு வந்து சொத்துக்கள் வாங்க முடியாது. இங்கு கவர்மென்ட்
ஏஜென்ட்டாக (கலெக்டர்) ஒரு தமிழர்தான் நியமிக்கப்பட்டுள்ளார். காணி (நிலம்)
குறித்த கணக்குகள் அனைத்தும் அவரிடம்தான் உள்ளன. திடீரென யாரும், பல வருட
ஆவணங்களை மாற்றி எழுதி விட முடியாது. சிங்களக் குடியேற்றம் சாத்தியமில்லாத
விஷயம். புலிகளால் 1983-ல் துரத்தி விடப்பட்ட சில தமிழ் முஸ்லிம்
குடும்பங்களிடம் மட்டும்தான், மீண்டும் அவர்கள் நிலம் அவர்களிடமே
ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார் யாழ் மாநகராட்சி அதிகாரி ஒருவர்.


யாழ்ப்பாணம்
பகுதி ஆர்மி மேஜர் ஜெனரல் ஹித்துருசிங்க எங்களைச் சந்திக்க ஒப்புக்
கொண்டார். அவரைச் சந்தித்துப் பேசினோம். “யாழ்ப்பாணத்தில் மட்டுமில்லை.
இலங்கையில் எங்குமே முள்வேலி முகாம்கள் இல்லை. போர் முடிந்து நான்கு
வருடங்கள் ஆகிவிட்டன. இன்னுமா மக்களை முகாமில் வைத்திருக்க முடியும்?
அவரவர்கள் அவரவர் நிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். சாலைகள், அரசு
மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் எல்லாம் பல கோடி ரூபாய் செலவில் முன்னேற்றம்
அடைந்துள்ளன. ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என தெற்குப் பகுதி
மக்கள் பொறாமைப்படும் வகையில், வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்
நடைபெற்று வருகின்றன. சிங்களக் குடியேற்றம் என்பது பச்சைப் பொய்.


“பல
ஆயிரம் சிங்களக் குடும்பத்தினர் 1983 வாக்கில் விடுதலைப் புலிகளால்
இப்பகுதியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீண்டும் இங்கு
குடியேறுவதாக இருந்தால், அவர்களைக் குடியேற்றி வைக்க அரசு தயாராக உள்ளது.
ஆனால், சிங்களர் யாரும் இங்கு வந்து குடியேறத் தயாரில்லை. ஆனாலும்,
சிங்களக் குடியேற்றம் என்ற பொய்யான குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்களக் குடும்பத்தை அரசு வலுக்கட்டாயமாகக்
குடியேற்றி இருப்பதை நிரூபித்தால், நான் இந்த இடத்தை விட்டு உடனே வெளியேறத்
தயார்” என்று சவால் விடுத்தார்.


அவரே
தொடர்ந்து, “ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள்தான் இங்கு இருக்கின்றோம்.
போர் நேரத்தில் போர் வீரர்களாக இருந்த வீரர்கள் வேறு; தற்போது தேசியப்
பாதுகாப்புப் படையினராய் இருக்கும் வீரர்கள் வேறு. மக்கள் எங்களோடு
நட்புறவாக இருக்கிறார்கள். குடித்து விட்டு கணவர் அடிக்கிறார் என்று ஒரு
பெண் ராணுவத்தில் வந்து புகார் செய்கிறார். அவர் போலீஸுக்குப் போகவில்லை.
குழந்தைக்கு உடல்நலமில்லை என்று ஆம்புலன்ஸுக்குப் ஃபோன் செய்யாமல், எங்கள்
கேம்ப்புக்குப் ஃபோன் செய்கிறார்கள் பெண்கள். அவ்வளவு நம்பிக்கை
ராணுவத்தின் மீது ஏற்பட்டிருக்கிறது. பல ஏழைகளுக்கும், விதவைகளுக்கும்
நாங்களே வீடு கட்டிக் கொடுத்திருக்கிறோம்” என்றும் குறிப்பிட்டார்.


ராணுவமே
வீடு கட்டிக் கொடுத்த இடங்களுக்கும், பள்ளிக் கூடங்கள் கட்டிக் கொடுத்த
இடங்களுக்கும் சென்று பார்வையிட்டோம். அங்கிருந்த தமிழர்கள், “ராணுவம்
உதவியாகத்தான் இருக்கிறது” என்று சொன்னார்கள். ஆனாலும், அவர்களின் தேவை
அதிகமாகவே இருக்கிறது. பொருளாதார ரீதியில் அவர்கள் நலிந்து போய்
இருக்கிறார்கள்.


“தற்போது
இங்கு விடுதலைப் புலிகள் கிடையாது. ஆனால், அவர்களின் ஆதரவாளர்கள்
இருக்கிறார்கள். இங்கு ராணுவ ஆட்சி நடக்கவில்லை. ‘தமிழ் தேசியக்
கூட்டமைப்பு’ (டி.என்.ஏ.) புலிகளுக்கு இணையாக ஆயுதமின்றி இங்கு அரசியல்
செய்கிறது. அரசை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் இங்கு இயங்குகின்றன.
சட்டத்தைக் கடைப்பிடிக்கச் செய்யும் நீதிமன்றங்கள் இயங்குகின்றன.
வெளிநாட்டு அமைப்புகள் வந்த வண்ண முள்ளன. இங்கு பச்சையாகப் பொய் சொல்லி
யாரையும் ஏமாற்றி விட முடியாது” என்றார் ஒரு ராணுவ அதிகாரி.


யாழ்ப்பாணத்
தமிழ் மேயர் யோகேஸ்வரி, “போருக்குப் பிறகு துரித கதியில் அபிவிருத்தித்
திட்டங்கள் நடைபெறுகின்றன. புலிகள் காலத்தில் இருண்ட கண்டம் போல் இருந்த
யாழ்ப்பாணம், இப்போதுதான் பழைய கம்பீரத்தை மீண்டும் பெற்று வருகிறது.
இங்கிருந்து கொழும்பு செல்ல 14 மணி நேரம் ஆகும். இப்போது 7 மணி நேரத்தில்
சென்று விட முடிகிறது. வடபகுதியில் 18.6 சதவிகிதமாக இருந்த தமிழ் மக்களை
12.7 சதவிகிதமாக மாற்றியதுதான் புலிகளின் சாதனை. தங்கத் தாம்பாளத்தில்
வைத்து இந்தியா அளித்த வாய்ப்புகளை உதாசீனம் செய்து, தங்களையும் அழித்துக்
கொண்டு, ஏராளமான தமிழர்களையும் அழித்ததுதான் அவர்கள் கண்ட பலன்.


“இதே
யாழ்ப்பாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று தமிழ் மேயர்களைக்
கொன்று குவித்த இயக்கம்தான் புலிகள் இயக்கம். கிளிநொச்சியிலும்,
முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்களைச் சந்தித்துக் கேளுங்கள்… போர்க்
குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் யார் செய்தது எனத் தெரிய வரும்” என்று
உணர்ச்சி வசப்பட்டார். மேலும் அவர், “தமிழ் நாட்டில் ஆரம்ப காலம் தொட்டே,
இலங்கைப் பிரச்னையை சரியான கோணத்தில் அணுகியவர் துக்ளக் ஆசிரியர் ‘சோ’தான்.
தனி ஈழம் சாத்தியமில்லை என்பதைச் சொன்னதோடு, விடுதலைப் புலிகளால் அழிவு
மட்டுமே ஏற்படும் என்று சரியாகக் கணித்தவர் அவர்தான்” என்றும்
குறிப்பிட்டார்.


இலங்கையின்
பெரிய மருத்துவமனைகளில் ஒன்று யாழ்ப்பாண மருத்துவமனை. அதன் இயக்குனர்
சிரிபவானந்தராஜாவை நாங்கள் சந்தித்தோம். “இந்த மருத்துவமனைக்கு வரும்
நோயாளிகள் அதிகம். போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ரீதியான
வைத்தியங்கள் எல்லாம் முடிந்து எல்லோரும் அனுப்பப்பட்டு விட்டனர். மன
ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் வைத்தியம் தொடர்கிறது.
இந்தியாவிலிருந்து மருந்துகளும், உபகரணங்களும் நிறைய வந்தன” என்று கூறினார்
அவர்.


மத்திய
இலங்கையிலிருந்து வடக்கு நோக்கி, நான்கு வழிச் சாலையைச் சீனாவும்,
ரயில்வேயை இந்தியாவும் அமைத்து வருகின்றன. மதவாச்சியிலிருந்து காங்கேசன்
துறை வரைக்கும் 800 மில்லியன் யு.எஸ். டாலர் செலவில் தண்டவாளம் அமைத்து
வருகிறது இந்தியா. இதுபோக, 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புத் தரும்
வகையில் ஒரு பெரிய தொழிற்பேட்டையும் இந்தியாவின் செலவில் உருவாகி வருகிறது.


ஈ.பி.டி.பி.
எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை நடத்தி வரும் இலங்கை கேபினட்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில்
சந்தித்தோம். “ஒரு கட்டத்தில் நானும் ஆயுதம் ஏந்திப் போராடியவன்தான்.
ஆனால், ஒரு காலகட்டத்தில் தனி நாடு சாத்தியமல்ல; அரசியல் தீர்வுதான்
உகந்தது என்ற முடிவுக்கு வந்ததும், அரசியல் பாதைக்குத் திரும்பி விட்டேன்.
இந்தியா அரசியல் தீர்வுக்கு வழி வகுத்தது. புலிகள் ஏற்கவில்லை. இந்திய
அமைதிப்படை இங்கு வந்தது. புலிகள் அதை ஏற்கவில்லை. பிரேமதாச, சந்திரிகா
ஆகியோர் அரசியல் தீர்வுக்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், புலிகள்
அவற்றையும் ஏற்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ கூடப் பேச்சுவார்த்தைக்கு இணங்கி
வந்தார். அதையும் புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.


“அரசியல்
தீர்வுக்குப் போகலாம் என்று சொன்ன தமிழ்த் தலைவர்கள் அத்தனை பேரையும்
‘தமிழ்த் துரோகிகள்’ என்று முத்திரை குத்தி கொன்று குவித்தனர் புலிகள்.
என்னைக் கொல்வதற்கு 12 முறைக்கு மேல் முயன்றனர். என் தம்பி உட்பட எனக்கு
வேண்டிய பலர் இதனால் உயிரிழந்தனர். பிடிவாதத்தை மட்டுமே கொள்கையாகக்
கொண்டிருந்த பிரபாகரன், தன்னை நம்பிய தமிழ்ச் சமுதாயத்தையும் அழித்து,
தானும் அழிந்து போனதுதான் மிச்சம். அவர்கள் ஏராளமான தமிழ்த் தலைவர்களை,
அப்பாவி தமிழ் ஜனங்களை மட்டும் அழிக்கவில்லை. தமிழனின் கலாசாரம், தமிழனின்
கல்வி, தமிழனின் பொருளாதாரம், தமிழனின் மன நிம்மதி, தமிழனின் மனோதைரியம்
அத்தனையையும் அழித்து விட்டார்கள். இன்று இதே தமிழ் மக்களால் தேர்வு
செய்யப்பட்டு நாங்கள் பதவியில் இருக்கிறோம்.


“தமிழ்
மக்களுக்கு, அரசுடன் இணைந்திருந்து நல்லது செய்வதுதான் விவேகமான செயல்.
அரசுடன் இருப்பதால்தான் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொடுத்து, இங்கு
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல ஹை செக்யூரிட்டி ஸோன்களைப்
படிப்படியாக எடுக்கச் செய்திருக்கிறோம். காலம் போக போக, ராணுவம்
முற்றிலுமாகத் தள்ளி வைக்கப்பட்டு தமிழ் மக்கள் மிகச் சுதந்திரமாக
வாழ்வார்கள். அதில் ஐயம் தேவையில்லை. ஆனால், தமிழ் மக்களுக்காக உழைக்கும்
கட்சி என்று கூறிக் கொள்ளும் டி.என்.ஏ., அரசு எடுக்கும் எந்த முயற்சிக்கும்
உதவுவது இல்லை. பிறகு எப்படி தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கும்? வெறும்
அரசு விரோதப் போக்கு மட்டுமே இருந்தால், தமிழ் மக்களுக்கு நல்லது நடந்து
விடுமா?


“போருக்குப்
பிறகு அரசு நியமித்த எல்.எல்.ஆர். கமிட்டி தனது ரிப்போர்ட்டை அரசுக்குச்
சமர்ப்பித்துள்ளது. அதன் பரிந்துரைகளை ஆலோசிக்க நாடாளுமன்ற தெரிவுக்
குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், டி.என்.ஏ. அதில் பங்கேற்கத் தயாராக
இல்லை. தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால், இதுபோன்ற
சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த வேண்டாமா? தற்போது வட மாகாண சபைத் தேர்தல்,
இவ்வருட இறுதியில் வர இருக்கிறது. எனவே, தமிழ் மக்களின் இருண்ட காலம்
முடிந்து போனது. இனி வசந்த காலம்தான். அதற்கு எங்கள் கட்சி துணை நிற்கும்”
என்றார் அவர்.


யாழ்ப்பாணம்
பஸ் நிலையத்தில் நாங்கள் சந்தித்த கங்கா என்ற பஸ் ஆபரேட்டர், நாங்கள்
துக்ளக் நிருபர்கள் என்றதும் மிகவும் சந்தோஷமாக எங்களை எதிர்கொண்டார்.
“உங்கள் ஆசிரியர் சோ இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் மட்டும்
தீர்க்கதரிசியாக இருக்கவில்லை. இலங்கை அரசியல் குறித்தும் தீர்க்கதரிசியாக
இருந்தவர். தமிழகமே உணர்ச்சிபூர்வமாக ஈழப் பிரச்னையை அணுகியபோதும், அவர்
மிகவும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். அதுதான் இன்றைக்குப்
பலித்துள்ளது. துக்ளக் ஏட்டை புலிகள் இங்கு வரவிடாமல் செய்து விட்டார்கள்.
மீண்டும் துக்ளக் இங்கு கிடைக்க ஆவன செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்
அவர்.


அதன்
பிறகு நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஏ9 நெடுஞ்சாலையில்
பயணமானோம். போகிற வழியில், நடைபெற்ற போரின் உச்சத்தையும், இன்னும்
இருக்கும் மிச்சத்தையும் சொல்லும் சாட்சியாக அந்தக் காட்சி எங்கள் கண்களில்
பட்டது.


-தொடரும்-
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலங்கையில் துக்ளக்-3 Empty Re: இலங்கையில் துக்ளக்-3

Post by மாலதி Thu May 30, 2013 9:57 pm

இலங்கையில் ‘துக்ளக்’
1. இங்கு நடக்கும் போராட்டங்கள் – அங்கு நிலவும் கருத்துக்கள்!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவிர, அனேகமாக மற்ற எல்லா அரசியல் கட்சிகளுமே
மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ் ஈழக் கோரிக்கையை வலியுறுத்துகின்றன.
இங்கு புத்த பிட்சுகள் தாக்கப்படுகிறார்கள். ஆன்மீகச் சுற்றுப் பயணம்
வரும் பக்தர்கள் அடித்துத் துரத்தப்படுகிறார்கள். இலங்கை அரசு அலுவலகங்கள்
தாக்கப்படுகின்றன. அரசியல் சார்பில்லாத மாணவர்கள் கூட, தமிழ் ஈழத்திற்காகக்
குரல் கொடுக்கிறார்கள்.

இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இங்கு
நடக்கும் போராட்டங்கள் பற்றி இலங்கையில் உள்ள தமிழர்களும், இலங்கையில்
இருந்து வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகளும் என்ன சொல்கின்றன?


நமது நிருபர் குழு நேரடியாக இலங்கை சென்று, அங்கு ஆறு நாட்கள் கொழும்பு,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புதுக் குடியிருப்பு, முள்ளி வாய்க்கால்,
முல்லைத் தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி ஆகிய நகரங்களுக்குச் சென்று
அங்குள்ள தமிழ் மக்களை, தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து வந்துள்ளனர்.
அத்துடன் இலங்கை அரசு துணையோடு ராணுவ அதிகாரிகள், இலங்கை ராணுவத்தில்
இணைந்திருக்கும் தமிழ்ப் பெண்கள், மறுவாழ்வு இல்லத்தில் இருக்கும் முன்னாள்
புலிகள் ஆகியோரையும் சந்தித்துப் பேசி, எல்லோரின் உரையாடல்களையும் ஆடியோ
மற்றும் வீடியோவில் பதிவு செய்து கொண்டு வந்துள்ளனர்.

நமது
நிருபர் குழு இலங்கையில் உள்ள நிலைமைகள் பற்றி தருகிற இந்தச் சிறிய
கட்டுரைத் தொடரின் முதல் அத்தியாயமாக, இலங்கைத் தமிழர்கள் சிலர் தெரிவித்த
கருத்துக்கள், இங்கே இடம் பெறுகின்றன.
– ஆ.ர்.

வீ. தனபாலசிங்கம் (ஆசிரியர், ‘தினக்குரல்’ நாளிதழ்) யாழ்ப்பாணத் தமிழர் :

வீ.தனபாலசிங்கம்

“தமிழக அரசியல்வாதிகளின் போராட்டங்களை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வது
கிடையாது. அவர்கள் அங்கு ஓட்டு வாங்குவதற்காக, இலங்கை விவகாரத்தில் பல
நிலைப்பாடுகளை எடுப்பார்கள். ஆனால், மாணவர்களின் போராட்டம் உணர்வு
பூர்வமானது. அதை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். ஆனால் அப்படிப் போராடும்
முன்பாக, எங்களின் தேவை என்ன என்பதை அறிந்து போராட வேண்டும்.
இல்லையென்றால், எங்கள் கோரிக்கை ஒன்றாகவும், அவர்கள் கோரிக்கை ஒன்றாகவும்
இருந்தால் அது எல்லோருக்கும் தோல்வியைத் தந்து விடும். “தமிழ் ஈழம் என்ற
கோரிக்கையை நாங்கள் கைவிட்டு விட்டோம். இவ்வளவு அனுபவங்களுக்குப் பிறகு
மீண்டும் ‘தமிழ் ஈழம்’ என்ற கோரிக்கையைக் கையில் எடுத்தால், அது எஞ்சியுள்ள
தமிழர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து விடும். இன்றைய நிலையில் அது
சாத்தியமில்லாத கோரிக்கை. எப்படி இலங்கை அரசாங்கம் எங்களுக்கு
உடன்பாடில்லாத விஷயங்களை எங்கள் மீது திணிக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ,
அப்படித்தான் தமிழகத் தமிழர்களும் எங்கள் ஆலோசனையில்லாமல் எங்கள் மீது
எதனையும் திணிக்கக் கூடாது என்று நினைக்கிறோம். உங்கள் அன்புக்குத் தலை
வணங்குகிறோம். ஆனால், அது எங்களுக்கு அனுகூலமானதாக இருக்க வேண்டும்”.
வீ. ஆனந்த சங்கரி (செயலாளர், தமிழர் விடுதலை கூட்டணி) :

வீ.ஆனந்த சங்கரி

“தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை நாங்கள் துவங்கும் முன்பே
துவங்கியவர்கள் இந்தியத் தமிழர்கள்தான். ஆனால், அந்தக் கோரிக்கையை நீங்களே
கைவிட்டு விட்டீர்கள். அதிகாரம் பொருந்திய மாநில அரசு என்ற நிலைக்கு
நீங்கள் பழகி கொண்டீர்கள். தற்போது அதில் திருப்தியடைந்து நிம்மதியாக
வாழ்கிறீர்கள். இதையேதான் இங்குள்ள தமிழர்களும் விரும்புகிறோம். அதைப்
பெற்றுத் தரும் வகையில் உங்கள் போராட்டம் அமையுமானால், அது
பாராட்டுக்குரியது. சிங்களத் தலைவர்கள் பலர் தங்கள் அரசியலுக்காகப் பல
தவறுகளைச் செய்யலாம். ஆனால், பெரும்பாலான சிங்கள மக்கள் நல்லவர்கள்.
அவர்களைத் தமிழகத்தில் வைத்துத் தாக்குவது மிகவும் தவறானது. காந்தி பிறந்த
மண்ணில் அது நடக்கக் கூடாது. அது எங்களைத்தான் மேலும் பாதிக்கும்.

யோகேஸ்வரி பற்குணராசா (மேயர், யாழ்ப்பாணம்) :

யோகேஸ்வரி பற்குணராசா

“சுமார் எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டைத் தனி நாடாக்க
முடியவில்லை. மொத்த ஜனத் தொகை இரண்டு கோடி கொண்ட இலங்கையில் முஸ்லிம்
தமிழர்களைத் தவிர்த்து, மலையகத் தமிழர்களைத் தவிர்த்து, இந்திய வம்சாவளித்
தமிழர்களைத் தவிர்த்து, வெறும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதித் தமிழர்கள்
சில லட்சம் பேருக்கு மட்டும் ஒரு தனி நாடு கேட்பது எந்த விதத்தில்
சாத்தியப்படும் என்பதை, அங்குள்ள தமிழர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க
வேண்டும். “விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான
ஆதரவாளர்களைத் தவிர, மற்ற எல்லோருமே தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டுப் பல
காலம் ஆகி விட்டது. தற்போது அதைக் கையில் எடுத்துப் போராடுவது, இலங்கைத்
தமிழர்களின் எதிர்காலம் குறித்த மிச்ச கனவுகளையும் திசை மாற்ற மட்டுமே
உதவும். தமிழகத்தில் நிலவும் வதந்திகளை நம்பாதீர்கள். இங்கு வாழ்வது
நாங்கள். இங்கு வந்து பாருங்கள். தற்போதைய உங்கள் போராட்ட வடிவம்,
எங்களுக்கு நன்மை தராமல் பாதிப்பு ஏற்படுத்துவதற்கே வாய்ப்பு அதிகம்
என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.”

கங்கா (பஸ் ஆபரேட்டர், யாழ்ப்பாணம்) :

கங்கா

“இறுதிப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகப் போகிறது. இங்கு தனி ஈழம்தான்
தீர்வு என்று நாங்கள் நினைத்திருந்தால், இந்த நான்கு ஆண்டுகளில் இங்கு
ஒருவராவது உண்ணாவிரதம் இருந்திருக்க மாட்டோமா? ஒருவராவது தீக்குளித்திருக்க
மாட்டோமா? அப்படி எந்தச் செய்தியாவது உங்களை வந்தடைந்ததா? பிறகு ஏன்
அங்குள்ள இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்று
தெரியவில்லை. மொத்த இலங்கை அளவு கொண்ட தமிழகத்தைத் தனி நாடாக கேட்டால்
டெல்லி கொடுக்குமா? பிறகு அந்த அளவை விட மிக மிகச் சிறிதான பகுதியைத் தனி
நாடாக இங்கு எப்படிப் பெற முடியும்? கடந்த 30 வருடங்களாகப் போர் என்ற
பெயரில் நரக வாழ்க்கை வாழ்ந்து வந்த நாங்கள், தற்போதுதான் நிம்மதியாக வாழத்
துவங்கியுள்ளோம். எங்களின் அரசியல் தீர்வுக்கு உதவுங்கள். அதற்கு
இந்தியாவைத் தயார்படுத்துங்கள். அதுதான் நீங்கள் எங்களுக்குச் செய்யும் நிஜ
உதவியாக இருக்கும்”.

பெயர் சொல்ல விரும்பாத தமிழ்ப் பத்திரிகையாளர் :

“தமிழக மாணவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். தங்கள் தனி நாடு
கோரிக்கை இந்தியாவில் எடுபடாது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர், அந்த
ஆசையைக் கைவிட முடியாத அங்குள்ள சில அரசியல்வாதிகள், அவர்கள் ஆசையை உங்கள்
மீதும், எங்கள் மீதும் திணிக்கப் பார்க்கிறார்கள். நன்கு வசதியாக இருக்கும்
புலம் பெயர்ந்த தமிழர்களிடம் சலுகைகளை அனுபவிக்கும் அந்த அரசியல்வாதிகளின்
தூண்டுதலுக்கு ஆளாகி, உங்கள் கல்வியைப் பாழடித்துக் கொள்ளாதீர்கள். ஒரு
அரசியல் கூட்டணிக்குப் போனால், இரண்டு டிஜிட் ஸீட்கூட வாங்க முடியாத சில
சின்னச் சின்ன அரசியல் தலைவர்கள், அவர்களின் அரசியல் ஸ்திரத் தன்மைக்காக
உங்கள் வாழ்க்கையைப் பலியாக்குகிறார்கள். இந்த மண்ணில், எங்கள் இளைஞர்கள்,
வாழ்க்கையைத் தொலைத்தது போதும். அங்குள்ள இளைஞர்களான நீங்களும் உங்கள்
வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள். “இங்கு தனிநாடு என்பது
சாத்தியமேயில்லை. எங்களுக்கு நல்லது செய்ய நினைத்தால், அரசியல் தீர்வு,
தமிழருக்குச் சம உரிமை என்பதான கோரிக்கைகளுக்காகப் போராடுங்கள். அதுதான்
யதார்த்த நிலைமை. அதுதான் எங்களுக்கு நன்மை பயக்கும். எங்கள் மீது அன்பு
செலுத்தும் நீங்கள், நாங்கள் வாழும் நாட்டை எதிரி நாடு என்று அறிவிக்கச்
செய்வதில் என்ன லாபம் அடைவீர்கள்? இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால்,
இங்குள்ள மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், சோப், துணிமணிகளுக்கு எங்கே
போவோம்? அவை வேறு நாடுகள் வழியாக எங்களுக்கு வந்து சேரும். விலையும் மிக
அதிகமாகும். வழியில் யார் யாரோ கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். இதையா
நீங்கள் விரும்புகிறீர்கள்?”

கிளிநொச்சி வி. சகாதேவன் (போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர்) :

கிளிநொச்சி வி.சகாதேவன்

“அங்கு போராடும் இளைஞர்கள் ஒருமுறை இங்கு வந்து பார்த்து, இங்குள்ள
மக்களைச் சந்தித்த பிறகு, உங்கள் போராட்டக் கோரிக்கைகளை வடிவமைக்க வேண்டும்
என்று அன்போடு அழைப்பு விடுக்கிறேன். வழி தவறிய போராட்டம், நன்மைக்குப்
பதிலாக தீமையை உருவாக்கி விடும். 90 ஆயிரம் விதவைகள் இங்கு இருக்கிறார்கள்.
எங்கள் ஒரு இயக்கத்தில் மட்டும், சொத்துக்களை இழந்த 2244 குடும்பங்கள்
உறுப்பினர்களாகி இருக்கிறார்கள். ஈழம் என்பது இனி கனவிலும் சாத்தியமில்லாத
விஷயம். அதற்குப் பதிலாக, விதவைகள் தங்கள் குழந்தைகளை வளர்த்தெடுக்க
மறுவாழ்வுத் திட்டம், வீடுகளை இழந்தவர்களுக்கு மீண்டும் வீடுகள், நிலத்தை
இழந்தவர்களுக்கு மீண்டும் அதே நிலம், தொழிலை இழந்தவர்களுக்கு இழப்பீடுகள்
என்பதுதான் எங்களது இன்றையத் தேவை. தொலைத்த இடத்தில் தேடினால்தான் இழந்த
பொருள் கிடைக்கும். “ராஜபக்ஷ அரசின் செயல்களுக்கு அந்த அரசிடம்தான்
இழப்பீடு பெற முடியும். அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து, சிறையில்
அடைப்பது முக்கியமல்ல. எங்கள் வாழ்வு எங்களுக்குத் திரும்பக் கிடைக்க
வேண்டுமென்பதுதான் அதை விட முக்கியம். இவரிடம் போராடினால்தான் ஓரளவாவது
இழப்பீடு பெற முடியும். 18 கட்சி கொண்ட கூட்டணி ஆட்சி இது. பல கட்சிகளின்
மூலம் அவருக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பல தமிழ் கட்சிகளும் அதில்
உள்ளன. அவர்களும் அதற்கு நெருக்கடி கொடுக்க முடியும். அடுத்த ஆட்சி வந்து
விட்டால் ‘அது அவர்கள் பாடு உங்கள் பாடு’ என்று கைகழுவி விடக்கூடும். எனவே,
முடிந்தளவு இந்த அரசிடமே பேசி, எங்கள் வாழ்க்கையைத் திரும்பப் பெறுவதுதான்
சிறந்த ராஜதந்திரமாக இருக்க முடியும். அதற்கு உங்கள் போராட்டங்கள் துணை
நிற்க வேண்டுமே தவிர, தடைக் கற்களாகி விடக் கூடாது என்று கேட்டுக்
கொள்கிறேன்.”

ஆர். யோகராஜன் (ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க் கட்சி எம்.பி.) :

ஆர்.யோகராஜன்

“எழுபதுகளில் அஹிம்சா முறையில் தோன்றிய தனித் தமிழீழக் கோரிக்கை, 80-களில்
ஆயுதம் ஏந்தத் துவங்கியது. ஆனால், தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட
மக்கள் மத்தியில், அந்தக் கோரிக்கை படிப்படியாகக் கைவிடப்பட்டுவிட்டது.
புலிகள் மட்டுமே அதை விரும்பினார்கள். மக்கள் அரசியல் தீர்வை நோக்கி நகரத்
துவங்கி விட்டனர். தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வு தருவது குறித்து
சிங்கள மக்களிடையே நடத்தப்பட்ட சர்வேயில், 82 சதவிகித சிங்கள மக்கள்
தமிழருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருந்தனர். சிங்கள அரசாங்கம்
அரசியலுக்காகச் செயல்படலாம். ஆனால், சிங்கள மக்கள் அப்படியில்லை.
“தமிழகத்திற்கு வரும் சிங்களவர்களை அங்குள்ளவர்கள் தாக்குவது மிக மிகத்
தவறானது. புத்தபிட்சுகள் கடுமையாகத் தாக்கப்பட்ட ஃபோட்டோ, வீடியோக்கள்
வெளியான பிறகும் கூட இங்குள்ள தமிழர்கள் மீது எந்தத் தாக்குதலும்
நடக்கவில்லை என்பது, இங்கு நிலவும் அமைதிக்கு ஒரு பெரிய உதாரணம். இதன்
பிறகாவது அது போன்ற செயல்கள் அங்கு நடைபெறாமல் இருக்க வேண்டும். அங்குள்ள
இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், சினிமா நட்சத்திரங்கள் இலங்கை வந்தால்
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். அவர்களுக்கு ‘தமிழ்த் துரோகி’ என்று
முத்திரை குத்துகிறீர்கள். இது என்ன நியாயம்? அவர்கள் இங்கு வந்து
மகிழ்விக்கப் போவது யாரை? இங்குள்ள தமிழர்களைத்தானே? இங்குள்ள தமிழன் தமிழ்
இசை கேட்கக் கூடாதா? அந்த இசையமைப்பாளர்களை, பாடகர்களை நேரில் பார்த்து
மகிழக் கூடாதா? கிரிக்கெட், தடகளம்... என்று விளையாட்டுகளில் கூட
இதையெல்லாம் கொண்டு வந்தது மிகத் தவறு.”

டக்ளஸ் தேவானந்தா (இலங்கை அமைச்சர்) :

டக்ளஸ் தேவானந்தா

“உணர்வுகளால் மட்டும் சிந்திக்காமல், நடைமுறை சாத்தியங்களையும் மனதில்
நிறுத்தி தமிழக மாணவர்கள் சிந்திக்க வேண்டும். பெரும்பாலும் தமிழர்கள்
மட்டுமே உள்ள இடத்திற்கு வருகை தரும் சிங்கள வரையும், புத்த பிட்சுகளையும்
தாக்குவதென்பது சரி என்றால், 72 சதவிகித சிங்களவர்களைக் கொண்ட மண்ணில்
தமிழன் தாக்கப்பட்டதும், தாக்கப்படுவதும் நியாயம்தான் என்றாகி விடும்.
அதற்குத் தயவு செய்து இடம் கொடாதீர்கள்.
கண்டி மலைவாழ் தமிழர்கள் :

கண்டி மலைவாழ் தமிழர்கள்

“இங்கு நாங்களும் சிங்களரும் சேர்ந்து வாழ்கிறோம். தமிழகத்தில்
சிங்களர்கள் மற்றும் புத்த பிட்சுகள் தாக்கப்பட்டார்கள்; இலங்கை
அலுவலகங்கள் மீது தாக்குதல் என்றெல்லாம் செய்திகள் வந்தால், அன்றைக்கு
நாங்கள் வெளியே செல்லாமல் பயந்து, பயந்து வீட்டிற்குள்தான் இருப்போம்.
உங்கள் செயல்களால் எங்களது வாழ்வு பாதிக்கப்படக் கூடாதல்லவா? எனவே, இது
போன்ற தாக்குதல்களைக் கைவிடுங்கள். எங்களின் அபிவிருத்திக்கும், அரசியல்
தீர்வுக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் சிந்திக்க
வேண்டுகிறோம்.”

பெயர் வெளியிட விரும்பாத சிங்களர் (தமிழிலேயே பேசினார்) :

“இந்தியாவில் தமிழ்நாட்டைத் தனி நாடாக்கப் போராடாமல், இலங்கையில் பிரிவினை
கேட்டு அங்கு போராடுவது ஆச்சரியமாக இருக்கிறது. பாகிஸ்தானில் மாணவர்கள்
எல்லாம் சேர்ந்து கடுமையான போராட்டம் நடத்தினால், நீங்கள் காஷ்மீரைத் தனி
நாடாக அறிவித்து விட முடியுமா? அதுதான் இங்குள்ள நிலைமையும். ஏற்கெனவே
சிறிய நாடு இது. இங்கு இன்னும் பிரிவுகள் வந்து என்ன பயன்? யாழ்ப்பாணத்
தமிழருக்குத் தனிநாடு கொடுத்தால், அதில் இந்திய வம்சாவளி தமிழர்களையும்,
மலையகத் தமிழர்களையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். பிறகு அவர்களுக்கு
ஒரு நாடு தர வேண்டும். அதையடுத்து சுமார் 14 சதவிகிதம் தமிழ் பேசும்
முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தனிநாடு கொடுக்க வேண்டும்.
சிங்களவர்களில் கிறிஸ்தவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அவர்கள் கேட்டால்
அவர்களுக்கும் ஒரு நாடு கொடுக்க வேண்டும். சாத்தியமா இதெல்லாம்?

(இலங்கையின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் இலங்கை அனுபவம் குறித்த கட்டுரை அடுத்த இதழில்.)

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளின் குரல்

என். நடேசன் (இலங்கையில் வெளியாகும் ‘தினமுரசு’ தமிழ் நாளிதழ் 1.4.13–பக்கம் 5-ல் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து) :

“அக்காலத்தில் பிரபாகரன் ஒன்றரைக் கோடி சிங்களரை எதிரியாக்கியதும், பின்பு
ராஜீவ் காந்தியைக் கொன்று இந்திய மக்களை எங்களுக்கு எதிரியாக்கிய
படுமுட்டாள்தனமான வேலையைக் காட்டிலும், இன்று மிக மோசமான வேலையை இலங்கைத்
தமிழருக்கு எதிராகச் செய்கிறார்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்.
தமிழ்நாட்டில் வைத்து புத்த பிட்சுகளை அடிப்பது, துன்புறுத்துவதன் மூலம்
இலங்கைத் தமிழருக்கு எதிராக, உலகத்தில் உள்ள அறுபது கோடி புத்த மக்களையும்,
அவர்களின் அரசாங்கங்களையும் தூண்டி விடுகிறீர்கள். நான் எழுதுவதில்
சந்தேகம் இருந்தால், ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவு மற்றும்
நடுநிலை கடைபிடித்த நாடுகளின் பட்டியலைப் பாருங்கள். இலங்கை அரசாங்கம்
உங்களின் செயல்களிலிருந்தே பலம் பெறுகிறது. சிங்கள இனவாதத்தின் கொம்புகளைச்
சீவாதீர்கள். நாங்கள்தான் மீண்டும் ரத்தம் சிந்த வேண்டும்.”
மனோ கணேசன் (தலைவர், ஜனநாயக மக்கள் முன்னணி)இலங்கையில் வெளியாகும் ‘தினக்குரல்’ (31.3.13) நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்:

“தமிழக சட்டப் பேரவையில் தமிழீழத்திற்கான வாக்களிப்பு நடைபெற வேண்டும்
என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு அல்லது வாக்களிப்பு
எங்கு நடைபெற வேண்டும் என்ற தெளிவு இல்லை. ஒரு காலத்தில் புலிகளின்
ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பிரதேசம் இருந்தது. அப்போது இத்தகைய ஒரு தீர்மானம்
வந்திருந்தால், பொருத்தமாக இருந்திருக்கும். தமிழகத்தில் இருந்தபடி
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் குறிக்கோள்கள்
அறிவிக்கப்படும்போது, அவற்றை இலங்கை வாழ் தமிழர்களின் அரசியல் தலைமைகளுடன்
புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டு அறிவிக்கப்பட வேண்டும். தமிழக
முதல்வர் மற்றும் போராடும் மாணவர்கள் இலங்கைவாழ் தமிழர்களுடன் பேசியதாகத்
தெரியவில்லையே? “மனித உரிமை மீறல் என்பதுதான் இன்றயை உலகை உலுக்கும் மகா
மருந்து. ஆனால், தனி நாடு, பொது வாக்கெடுப்பு என்ற அரசியல் கோரிக்கைகள்
முன்வைக்கப்படும்போது, அவற்றை உலகம் இன்றையச் சூழலில் வரவேற்காது; உலக மனித
உரிமை அமைப்புகளின் ஆதரவும் கிடைக்காது; இந்திய அரசும் நிராகரிக்கும்.
பாருங்கள், தமிழக சட்டசபையின் தீர்மானங்களை மத்திய அமைச்சரே நிராகரித்து
விட்டார். “அரசியல் தீர்வு கோரிக்கைகளை தமிழகம் இலங்கைத் தமிழ்த்
தலைமைகளிடம் விட்டு விட வேண்டும். மாகாண சபையா? சமஷ்டியா? கூட்டாட்சியா?
தனி நாடா? அது எதுவானாலும் அவற்றை இங்கு வாழும் தமிழர்களின் தலைமை
தீர்மானித்து அறிவிக்கட்டும். தமிழக மாணவர்களும், சட்டசபையும் மனித உரிமை
மீறல்களை முன்னிறுத்தி போராட்டங்களையும் தீர்மானங்களையும்
முன்னெடுக்கட்டும்.”


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலங்கையில் துக்ளக்-3 Empty Re: இலங்கையில் துக்ளக்-3

Post by மாலதி Thu May 30, 2013 9:58 pm

இலங்கையில் துக்ளக் - 2

மூன்று வகைத் தமிழர்கள்

[You must be registered and logged in to see this image.]நமது
நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி ஆகியோர் ஆறு நாட்கள் இலங்கையின் பல
பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி, செய்தி சேகரித்து
வந்துள்ளனர். அதில் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து
இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் பத்திரிகைகளின் கருத்துக்கள் கடந்த
இதழில் வெளியாகின. இந்த இதழில் கொழும்பு, கண்டி மற்றும் கிழக்கு மாகாணத்
தமிழர்களின் கருத்துக்கள் இடம் பெறுகின்றன.


‘இலங்கைக்குப்
போகிறோம்’ என்றதுமே சில உறவினர்களும், நண்பர்களும், ‘இப்படிப் பிரச்னையாய்
இருக்கிற சமயத்தில் நீங்கள் ஏன் அங்கே போகிறீர்கள்? ஏன் இந்த ரிஸ்க்?’
என்று பயமுறுத்தினர். ஆனால், அங்கு எங்களை வரவேற்கக் காத்திருந்த தமிழ்
நண்பரோ, ‘இங்கு துளியளவும் ரிஸ்க் இல்லை. நம்பி வரலாம்’ என்று
தைரியமூட்டினார். அவர் சொன்னபடியே நாங்கள் கொழும்பு சென்றடைந்தபோது, எந்தப்
பதட்டமுமின்றி எல்லோரும் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தில்
போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சூழல் என்பதால், இந்தியத் தமிழருக்கு
விமான நிலையத்தில் சிறப்புச் சோதனைகளோ, ஆய்வுகளோ இருக்கலாம் என்று
ஊகித்திருந்த எங்களுக்கு, அப்படி அங்கு ஏதுமில்லை என்பதே ஆச்சரியமாக
இருந்தது.


ஈஸ்டருக்கு
முந்தைய இரவு என்பதால், வழி நெடுகிலுமுள்ள கிறிஸ்தவ சர்ச்கள்
அலங்கரிக்கப்பட்டிருந்தன. பீச்சில் இரவு பிரார்த்தனைக்கு ஏற்பாடுகள் நடந்து
கொண்டிருந்தன. “இலங்கையைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல், பிறர்
சொல்வதை மட்டுமே கேட்டுக் கொண்டு தமிழகத்தில் பலர் இயங்குவதுதான் பிரச்னை.
அதில் ஒன்று, சிங்களர் என்றாலே பௌத்தர்கள் மட்டும்தான் என்பது. ஆனால்,
சிங்களவர்களில் சுமார் 10 சதவிகிதம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். தமிழ்
இனவாதம், பௌத்த மதவாதம் என்று தமிழகத்தில் மொத்தமாகக் குழப்பிக்
கொள்கிறார்கள்.


“இங்கு
பௌத்த மதவாதம் சிலரிடம் இருக்கிறது. ‘பொதுபல சேனா’ என்ற அமைப்பு, சமீப
காலமாகப் பௌத்த மதவெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொள்கிறது. சகல
கட்சிகளும் இதைக் கண்டிக்கின்றன. ராஜபக்ஷ கூட இதைக் கண்டிக்க வேண்டிய
நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார். ஆனால், பௌத்த மதவாதத்தால் பாதிக்கப்படுவது
தமிழர்கள் மட்டும்தான் என்பது போன்ற எண்ணம் தமிழகத்தில்
உருவாக்கப்படுவதால்தான், அங்கு புத்த பிட்சுகள் தாக்கப்படுகின்றனர். ஆனால்,
பௌத்த மதவாதம் எழுந்தால் அதில் பாதிக்கப்படுவது தமிழர்கள் மட்டுமல்ல,
இலங்கை முஸ்லிம்களும், சிங்கள கிறிஸ்தவர்களும் கூடத்தான்” என்றார் எங்கள்
நண்பர்.


கொழும்பு
நகரத்தில் உள்ள மெயின் ரோடு மற்றும் ஸீ தெருவில் பலரோடு பேசினோம்.
90சதவிகித கடைகள் தமிழ்க் கடைகள்தான். நகைக் கடைகளுக்கும், ஜவுளிக்
கடைகளுக்கும் முதலாளிகள், தொழிலாளிகள் எல்லாமே தமிழர்கள்தான்.
அவர்களிடமெல்லாம் பேசியபோது, “போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள்
ஆகிவிட்டன. இலங்கையில் அமைதி திரும்பி, எல்லோரும் நிம்மதியாக வாழத் துவங்கி
விட்டார்கள். தமிழகம் தயவு செய்து மீண்டும் ‘தமிழீழம்’ என்று ஆரம்பித்துக்
குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்றே பெரும்பாலோர் சொன்னார்கள்.


ஆனால்,
அவர்கள் எல்லோருக்குமே ‘தமிழர்கள் இலங்கையில் சமமாக மதிக்கப்பட வேண்டும்’
என்ற ஆசை இருக்கிறது. அதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்ற
எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தற்போது நடக்கும்
போராட்டங்கள், தங்களின் ஆசைக்கும் எதிர்பார்ப்பிற்கும் இடையூறாக
இருக்குமென்றே அவர்கள் நினைக்கிறார்கள்.


நாங்கள்
சந்தித்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சாமான்ய மக்கள் எல்லோருமே தமிழக
அரசியல்வாதிகளின் பேச்சுக்களையும், போராட்டங்களையும் சீரியஸாக எடுத்துக்
கொள்ளவில்லை. கருணாநிதி மத்திய அரசை விட்டு விலகியதையும், ஜெயலலிதா
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதையும் அவர்கள் தமிழக அரசியலாகத்தான்
பார்க்கிறார்கள். மாணவர்களின் போராட்டத்தை மட்டுமே அவர்கள் மரியாதையாகக்
குறிப்பிட்டார்கள். ‘மரியாதை செய்கிறோம்; தலைவணங்குகிறோம்’ என்று மாணவர்
போராட்டங்கள் குறித்துக் கருத்து தெரிவித்த அவர்கள், ‘ஆனால், மாணவர்கள்
இங்குள்ள நிலைமை தெரியாமல் போராடி, தங்கள் படிப்பைக் கெடுத்துக் கொள்ள
வேண்டாமே?’ என்று அக்கறையோடு குறிப்பிட்டனர்.


‘தமிழகத்தில்
நடக்கும் போராட்டம், இலங்கையில் தமிழர்கள் எதிர்பார்க்கும் இலக்கு நோக்கி
அமையாமல் இருப்பதால், அது வீணாகப் போகிறதே’ என்ற ஆதங்கத்தை அவர்களிடம் உணர
முடிந்தது.


பொதுவாக, போர் நடந்த காலத்திலேயே கொழும்புவில் உள்ள தமிழர்[You must be registered and logged in to see this image.]கள்,
‘தனி ஈழம்’ குறித்து ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. எங்களிடம் பேசிய
ஜுவல்லரி முதலாளி ஒருவர், “முதலில் தமிழகத்தில் உள்ளவர்கள், இலங்கைத்
தமிழர்கள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு
இந்திய வம்சாவழித் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் முஸ்லிம்கள்
இருக்கிறார்கள். இந்திய வம்சாவழித் தமிழர்களிலேயே தேயிலைத் தோட்டங்களில்
வசிக்கும் மலையகத் தமிழர்கள், தனிப் பிரிவு போல் இருக்கிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் ஈழத்தோடு தொடர்பில்லை. இவர்களெல்லாம் ஈழத் தமிழர்கள்
இல்லை.


“வடக்கு
மற்றும் கிழக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமே ஈழத் தமிழர்கள்.
நாங்களும் இலங்கை குடிமக்களே. ஆனாலும், அரசு தரும் சான்றிதழில்
எங்களுக்கெல்லாம் இந்தியத் தமிழர் (India - Tamil) என்றே பெயர் இடப்படும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழருக்கு மட்டும்தான் இலங்கைத்
தமிழர் (Lanka - Tamil) என்ற பெயர் இடம் பெறும்.


“ஈழத்
தமிழர்களுக்குத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மனோபாவம் உண்டு. இந்திய
வம்சாவழித் தமிழர்களை அவர்கள் பெரிதாக மதிக்க மாட்டார்கள். கொழும்புவில்
வந்து தொழில் செய்யும் ஈழத் தமிழர்கள் மீது கூட அவர்களுக்கு கோபம்
ஏற்படுவதுண்டு. விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்திற்கான எல்லைகளை வகுத்துக்
கொண்ட போது, சுமார் 8 ஆயிரம் முஸ்லிம் தமிழ்க் குடும்பங்களை 24 மணிநேரம்
மட்டுமே கெடு கொடுத்து, வட மாகாணத்தை விட்டு வெளியேறச் செய்தனர். அந்த
முஸ்லிம் தமிழ்க் குடும்பங்கள் எல்லாம், வெறும் பாலிதீன் பைகளில் தங்கள்
உடமைகளை எடுத்துக் கொண்டு, பெண்களையும் குழந்தைகளையும் கையில் பிடித்துக்
கொண்டு வடக்கு மாகாணத்தை விட்டு வெளியேறிய துயரத்தை யாரும் மறக்கவும்
முடியாது; மறைக்கவும் முடியாது. இதனாலேயே ஈழப் போராட்டம் துவங்கியது முதலே,
இந்திய வம்சாவழித் தமிழரோ, முஸ்லிம் தமிழரோ, மலையகத் தமிழரோ அதற்கு ஆதரவாக
இருக்கவில்லை” என்று விளக்கினார்,


அந்த ஜுவல்லரி முதலாளி. கதிரேசன் தெருவில் உள்ள ‘சரவணா ஸ[You must be registered and logged in to see this image.]்டோர்ஸ்’
என்ற கடைக்கு வந்த தமிழர்களிடம் உரையாடினோம். ‘இலங்கையில் நாங்கள் சமமாக
நடத்தப்படவில்லை’ என்றே பெரும்பாலான தமிழர்கள் தெரிவித்தனர். ‘சம உரிமை
பெற்றுத் தர இந்தியாவும், தமிழ்நாடும் முயற்சி எடுத்தால் மகிழ்வோம்’ என்று
அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், ‘தமிழ் ஈழம் கோரிக்கை காலம் கடந்தது. இனி
சாத்தியப்படாது’ என்று மிகத் தெளிவாக அவர்கள் குறிப்பிட்டனர். தமிழகத்தில்
காலம் கடந்து நடத்தப்படும் ‘தனி ஈழம்’ தொடர்பான போராட்டம் தங்களுக்குக்
கெடுதல் செய்யும் என்றே அவர்கள் பயப்படுகிறார்கள்.


“கொழும்பு
நகரில் தனி ஈழம் தொடர்பாக வன்முறைகள் வெடித்ததில்லை. விடுதலைப்
புலிகள்தான் அவ்வப்போது இங்கு வந்து வெடிகுண்டுகளை வைப்பதும், மனித
வெடிகுண்டுகளை அனுப்புவதுமாக இருந்தனர். ஒருமுறை, மும்பைத் தாக்குதலைப்
போல, கைகளில் துப்பாக்கிகளை ஏந்தி கண்மண் தெரியாமல் சுட்டபடி வந்தனர்.
மற்றபடி கொழும்பு நகரில் தமிழர் – சிங்களர் மோதல்கள் பெரிதாக
வெடித்ததில்லை” என்றார் தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர்.


மேலே சொல்லப்பட்ட கருத்துக்களை எல்லாம் நாங்கள் மட்ட களப்பு மற்றும் கண்டிக்குச் சென்றபோது, மேலும் உறுதி செய்து கொள்ள முடிந்தது.

கண்டி
பகுதி தேயிலைத் தோட்டம் ஒன்றில் வரிசை வீடுகளில் வாழும் மலையகத்
தமிழர்களிடம் பேசினோம். இரவு நேரம் என்பதால், ஆண்கள் பெண்கள் எல்லோரும்
கூட்டமாகக் குழுமி எங்களிடம் பேசினார்கள். “ஈழம் வேண்டும் என்று நாங்கள்
போராடியதில்லை. காரணம் அப்படி தமிழருக்கென்று ஒரு நாடு அமைந்திருந்தால்
கூட, அதில் எங்களுக்கு இடம் தரப்பட்டிருக்காது. வட மாகாணத் தமிழர்கள்
எங்களை அந்நியமாகத்தான் வைத்திருந்தார்கள். எங்கள் தமிழும், அவர்கள்
தமிழுமே வித்தியாசமாக இருக்கும். நாங்கள் யாழ்ப்பாணம் பகுதிகளுக்குப்
போனால் கூட, அவர்கள் எங்களை உதாசீனமாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், அந்தப்
பகுதிகளில் சுனாமி தாக்குதல்கள் நடந்தபோது, நாங்கள் இங்கிருந்து பொருட்களை
எல்லாம் திரட்டி அங்கு அனுப்பி வைத்து உதவினோம்.


“அவர்களில்
பலர் புலம் பெயர்ந்து, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மிக வசதியாக
வாழ்கிறார்கள். அவர்கள் இங்குள்ள வட மாகாணத் தமிழர்களுக்கு உதவுகிறார்கள்.
எனவே, வட மாகாணத்தில் பலர் வசதியாக இருக்கிறார்கள். நாங்கள்தான் மிகுந்த
கஷ்டத்தில் வாழ்கிறோம். எங்கள் இளைய சமுதாயம், தோட்ட வேலையை விட்டு விட்டு
நகரத்தில் வேறு பல வேலைகளுக்குச் செல்கிறார்கள். தனி ஈழம் என்றில்லாமல்,
தமிழர்களுக்குச் சம உரிமை என்பது போன்ற தீர்வு வந்தால், அது இலங்கையில்
இருக்கும் எல்லா தமிழர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்” என்று
குறிப்பிட்டார்கள் அவர்கள்.


மட்டக்களப்பு
தமிழர்களும் தனி ஈழம் குறித்து ஆர்வம் இல்லாமலே பேசினார்கள். “கிழக்குப்
பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அமைதி திரும்பி விட்டது. போரிலிருந்து
விடுபட்டு, இருமுறை தேர்தலைச் சந்தித்து விட்டோம். இங்கு கொஞ்ச நஞ்சம்
பேருக்கு இருந்த தனித் தமிழ் ஈழ ஆசையும், வன்னி பகுதியில் நடந்த
உயிரிழப்புகளைப் பார்த்துக் கரைந்து காணாமல் போய்விட்டது. அரசியல் தீர்வு
மூலம் போதிய அதிகாரம் கிடைத்தாலே போதும் என்ற மனோபாவம் எல்லோருக்கும் வந்து
விட்டது. தமிழகத்தில் நடக்கும் போராட்டம் அந்தக் கோணத்தில் அமைந்தால்,
அதுதான் யதார்த்தமாகவும் எங்களுக்குப் பலன் தரும் வகையிலும் இருக்கும்”
என்கிற ரீதியிலேயே பலரும் பேசினார்கள்.


கிழக்கு
மாகாணமும், ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் பிடியில்தான் இருந்தது.
ஆனால், கர்ணா வெளியேற்றத்திற்குப் பிறகு புலிகள் அமைப்பு அங்கு பலம்
இழந்தது. இதனால் 2007-ல் கிழக்கு மாகாணம் ராணுவத்தின் வசம் வந்தது.


“இந்தக்
கிழக்கு மாகாண மக்கள் தொகை தமிழர், தமிழ் முஸ்லிம்கள், சிங்களர்கள் – என்ற
வரிசையில் அமைந்திருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்தப் பகுதி,
புலிகளின் பிரதேசமாகவே இருந்தது. அப்போது இங்கிருந்த சிங்களர்கள் பலர்
துரத்தியடிக்கப்பட்டனர். ஈழத்தை விரும்பாத தமிழ் பேசும் முஸ்லிம்களும்
துரத்தப்பட்டனர்; சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், முஸ்லிம்கள் சுமார் 35
சதவிகிதம் பேர் என்பதால், புலிகளால் முஸ்லிம்களை முழுமையாக அப்புறப்படுத்த
முடியவில்லை. முஸ்லிம்கள் ராணுவத்திற்கு ஆதரவாக இருந்தனர். இதனால் கிழக்கு
மாகாணத்தில் புலிகளால் நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால்
பகுதி பகுதியாக அவர்களின் ஆதிக்கம் குறைந்து, 2007-ல் முழுமையாகப்
புலிகளிடமிருந்து விடுபட்டது” என்றார் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு தமிழ்க்
கடைக்காரர்.


1990-ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு அருகில் உள்ள காத்தாங்குடி ம[You must be registered and logged in to see this image.]ற்றும்
ஏறாவூர் நகரங்களில், முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய
துப்பாக்கிச் சூடுதான் முஸ்லிம் – தமிழர் ஒற்றுமையைக் குலைத்துப் போட்டது
என்று கூறப்படுகிறது. 3.8.90 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணிக்கு
காத்தாங்குடி பள்ளிவாசலிலும், ஏறாவூர் பள்ளிவாசலிலும் ஒரே நேரத்தில்
தொழுகையின்போது விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்
103 முஸ்லிம்கள் பலியாயினர்.


காத்தாங்குடி
பள்ளிவாசலுக்கு நாங்கள் சென்றிருந்தோம். சம்பவம் நடந்து 23 ஆண்டுகள்
ஆகியிருந்தாலும், அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டின் அடையாளங்களைச் சரி
செய்யாமல் அப்படியே வைத்துள்ளார்கள். பள்ளிவாசலின் உட்புறச் சுவர்களில்
புல்லட்டுகளின் அடையாளங்கள் இன்னும் அப்படியே உள்ளன. சம்பவம் நடந்த அன்று
அங்கு தொழுகையில் இருந்தபோது உயிர் தப்பிய முகமது இப்ராஹிம் என்பவரைச்
சந்தித்தோம்.


“நாங்கள்
ஈழத்தை ஆதரிக்கவில்லை என்ற கோபம் புலிகளுக்கு இருந்தது. ஏற்கெனவே வடக்கு
மாகாணத்தில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல், இங்கும் வெளியேற்ற முயற்சி
செய்தார்கள். ஆனால், இங்கு நாங்கள் குறிப்பிட்ட இடங்களில் மொத்த மொத்தமாகக்
குடியிருந்ததால், அவர்களால் எங்களை எளிதாக அப்புறப்படுத்த முடியவில்லை.
நாங்களும் விழிப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தி வைத்திருந்தோம். இரவு 10 மணி
முதல் விடியும் வரை எங்கள் இளைஞர்களின் குழு ஊரைப் பாதுகாக்கும்.
ராணுவத்தினரும் எங்கள் பகுதிகளில்தான் பாதுகாப்பாக இருப்பார்கள்.


“கடைகளில்
சாமான் வாங்க முஸ்லிம் பகுதிகளுக்குத்தான் எல்லா ராணுவ வாகனங்களும் வந்து
போகும். பயந்து பயந்துதான் வாழ்ந்து வந்தோம். அன்றைக்கு வெள்ளிக் கிழமை
நாங்கள் எல்லாம் இஷா நேரத் தொழுகையை தொழுது கொண்டிருந்தபோது, இலங்கை ராணுவ
உடையில் வந்த விடுதலைப் புலிகள், பள்ளிவாசலின் எல்லா வாசல்களிலும் சுற்றி
நின்று கொண்டு, இஷ்டத்திற்கு சுட்டுத் தீர்த்து விட்டு ஓடிப் போனார்கள்.
காயம்பட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச் செத்தவர்கள் மட்டும் 78 பேர்.
அதில் எனது 10 வயது மகன் அஷ்ரஃபும் ஒருவன்” என்று கண் கலங்கினார் அவர்.


அருகில்
இருந்த இளைஞர் ஒருவர், “பாலசந்திரன் என்ற பாலகனுக்கு மனமிரங்கும் தமிழ்
உள்ளங்கள், இந்தப் பத்து வயது அஷ்ரஃபுக்கும் மனமிரங்கத்தானே வேண்டும்?”
என்று கேட்டார்.


அருகிலிருந்த
எம்.சி.எம். அமீன் என்பவர், “நானும் சம்பவத்தின்போது இருந்தவன்தான்.
நாங்கள் அடுத்த ஊருக்குப் போவதென்றால் கூட, மொத்தமாகக் காத்திருந்து
ராணுவப் பாதுகாப்போடுதான் போவோம். அப்படி ஒரு நரக வாழ்க்கை வாழ்ந்தோம்.
இன்றுதான் நிம்மதியாக இருக்கிறோம். தமிழர்களும் (ஹிந்துக்கள்), நாங்களும்
புட்டு மற்றும் தேங்காய்ப்பூ போலத்தான் இருந்தோம். புட்டு அவிக்கும்போது
அந்தக் குழாயில் கொஞ்சம் மாவைத் திணிப்பார்கள். பின்னர் கொஞ்சம்
தேங்காய்ப்பூ தூவுவார்கள். பின்னர் மீண்டும் மாவு மீண்டும் தேங்காய்ப்பூ.
இப்படித்தானே புட்டு தயாரிப்பார்கள்? அப்படித்தான் நாங்களும் ஹிந்துக்களும்
ஒரே தமிழ் மொழி பேசும் சகோதரர்களாக இருந்தோம். புலிகள் வந்த பிறகுதான்
இதில் விஷத்தைக் கலந்தார்கள். தங்களை ஆதரிக்காத முஸ்லிம்களையும், பிற
தமிழ்த் தலைவர்களையும் கொன்று குவிக்க ஆரம்பித்தனர். 1986-ல் ஒரு முஸ்லிம்
குடும்பத்தை அவர்கள் உயிரோடு எரித்தது முதல் எல்லாம் தலைகீழாகி விட்டது”
என்றார்.


அந்தப்
பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவுக் கல்
நிறுவுவதற்குக் கூட, அவர்கள் பல ஆண்டுகளாகப் பயந்தே இருந்திருக்கிறார்கள்.
இறுதிப் போர் முடிந்து அமைதி திரும்பிய பிறகு, 2010-ல்தான்
காத்தாங்குடியில் பலியான 78 பேருக்கும், ஏறாவூரில் பலியான 25 பேருக்குமாய்
மொத்தம் 103 பேருக்கு அந்தப் பள்ளிவாசலில் நினைவுக்கல்
எழுப்பியிருக்கிறார்கள்.


ஆக,
நாங்கள் பார்த்த வரையில் கொழும்பு மற்றும் கண்டி தமிழர்கள் எப்போதும்
போரைச் சந்திக்கவில்லை; விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கீழ் இருக்கவில்லை.
எனவே, போரின் பாதிப்போ, விடுதலைப் புலிகளின் ஆதரவோ அங்கு காணப்படவில்லை.
கிழக்கு மாகாணத்தில் ஒரு கட்டம் வரை புலிகள் மீதான ஆதரவும், தமிழ் ஈழ
ஆதரவும் தமிழ் மக்களிடம் இருந்துள்ளது. ஆனால், போரின் விளைவுகளாலும்,
இந்திய அமைதிப்படையின் வருகைக்குப் பிறகும், புலிகள் ஆதரவு அங்கு
படிப்படியாகச் சரிந்து, ஈழ கோரிக்கை வலுவிழந்து விட்டது. 2012 தேர்தலில்
போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பே தனது தேர்தல் அறிக்கையில், தனி ஈழக்
கோரிக்கையைக் கைவிட்டு விட்டது.


போர்க்
குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், முள் வேலி முகாம்கள், பிடிபட்ட
புலிகளின் சித்ரவதைக் கூடங்கள், தமிழர்களின் மீள் குடியேற்றம், சிங்கள புது
குடியேற்றம், ஹிந்து கோவில்கள் அழிப்பு, புதிய புத்தர் கோவில்கள்,
ஊர்களின் தமிழ்ப் பெயர் மாற்றங்கள்... என்று பல கடுமையான குற்றச்சாட்டுகள்
சொல்லப்படுகிற வடக்கு மாகாணத்தில் பயணம் செய்த நமது நிருபர்களின்
அனுபவங்கள் அடுத்த இதழில்...


தொடரும்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலங்கையில் துக்ளக்-3 Empty இன்னமும் அகற்றப்படாத கண்ணி வெடிகள்! இலங்கையில் ‘துக்ளக் – 4

Post by மாலதி Thu May 30, 2013 10:00 pm

[You must be registered and logged in to see this image.]தமிழக
மீனவர்கள் செய்வது சரியா? தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால்
தாக்கப்படுவது குறித்து தொடர் சர்ச்சை எழுந்தபடியே இருக்கிறது. யாழ்ப்பாணத்
தமிழர்களுக்காக இங்கு குரல் கொடுப்போர்தான் பெரும்பாலும், தமிழக
மீனவர்களுக்காகவும் இங்கு குரல் கொடுக்கிறார்கள். எனவே, தமிழக மீனவர்கள்
தாக்கப்படுவது குறித்து யாழ்ப்பாண தமிழ் மீனவர்கள் என்ன நினைக்கிறார்கள்
என்பதை அறிய முயற்சித்தோம்.

யாழ்ப்பாணத்தின் கடற் தொழில் அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.சகாயராஜாவைச்
சந்தித்துப் பேசினோம். “இலங்கைக் கடலோரத்தில் மீன்கள் அதிகம். இதனால் தமிழக
மீனவர்கள் இலங்கைக் கடற்கரை வரை வருகிறார்கள். நாங்கள் எங்கள் கரைகளில்
இருந்தபடி பலமுறை இந்திய மீனவர்களின் படகுகளைப் பார்த்திருக்கிறோம்.
நாங்களும் சரி, அவர்களும் சரி, படகுகளைக் கிளப்பி ஒன்றரை மணி நேரத்தில்
அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழைந்து விட முடியும்.

“ஒரு காலத்தில் இங்கு நடந்த போரின் காரணமாக, நாங்கள் தொழில் செய்யவே
பயந்து வேறு தொழில்களுக்குப் போய் விட்டோம். அதனால், இந்திய மீனவர்கள்
எங்கள் கடற்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி மீன் பிடித்து வந்தனர். இப்போது
இங்கு பல பேர் வெவ்வேறு தொழில்களை இழந்து, இந்த மீன் பிடி தொழிலுக்கு
வந்துள்ளனர். இதனால் இப்போது இந்திய மீனவர்களின் ஆதிக்கத்தை நாங்கள்
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எங்களை விட இந்திய மீனவர்கள் தொழில்
நுணுக்கமும், உயரிய தொழில்நுட்பமும் கொண்டு தொழில் செய்கிறார்கள். இதனால்
அவர்களை மீறி மீன்பிடி தொழில் செய்வது எங்களுக்கு மிகுந்த சிரமமாக
இருக்கிறது.

“இங்கு மடி போடும் விசைப் படகுகளுக்குத் தடை உள்ளது. இந்திய மீனவர்களோ
ஒற்றை மடிக்கு மேல் இரட்டை மடி போட்டுக் கூட மீன்களைக் கவர்ந்து சென்று
விடுகின்றனர். கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவுக்குச் சென்ற போது,
அங்கு வந்திருந்த இந்திய மீனவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி
செய்தோம். ஆனால், பேச்சுவார்த்தைக்கு வராமல் கிளம்பி விட்டனர். அவர்களும்
தமிழர்கள், நாங்களும் தமிழர்கள். இதை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை.
பேசாமல் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு தனி மீன்பிடி காலமும்,
எங்களுக்குத் தனியே மீன் பிடி காலமும் ஒதுக்கி விட்டால் பிரச்னை எழாது.
எங்களுக்கு மீன் பிடி காலம் இல்லாத நாட்களில், நாங்கள் வேறு தொழில் செய்து
பிழைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றார் அவர்.

‘போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பு, கடந்த ஆண்டு
இலங்கை வடக்குக் கடலோரப் பகுதிகளில், சுமார் 600 கி.மீ. தொலைவிற்கு ஒரு பாத
யாத்திரை நடத்தியுள்ளது. இந்திய மீனவர்கள் இரட்டை மடி மூலம் மீன்
பிடிப்பதை தடுக்கக் கோரியே இந்த யாத்திரை நடத்தப்பட்டிருக்கிறது.

“இந்திய மீனவர் படகுகள் அனைத்திலும் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தி
சாட்டிலைட் மூலம் கண்காணித்தால், அவர்கள் எந்தப் பகுதியில் சென்று மீன்
பிடிக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விடும். அதை இந்திய அரசு
செய்யுமா?” என்றும் யாழ்ப்பாணத்தின் சில மீனவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

கட்டம் இடப்பட்ட செய்தி 2

பாலச்சந்திரனைக் கொன்றது யார்?

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின்
படங்கள்தான், தமிழகத்தில் அமுங்கியிருந்த இலங்கைத் தமிழர் பற்றிய உணர்வுகளை
மீண்டும் வெளிப்படச் செய்தது எனலாம். அதன் பின்தான் தமிழகத்தில்
போராட்டங்கள் கிளம்பின. இது குறித்து ராணுவ அதிகாரிகளிடம் நாங்கள்
கேள்விகளை எழுப்பினோம். “பாலச்சந்திரன் உடல் எங்களுக்குக் கிடைத்தது உண்மை.
ஆனால், கொன்றது யார் என்பது தெரியாது. வெளியான ஒரு புகைப்படத்தில் இலங்கை
ராணுவ உடை தெரிவதால், இது ராணுவத்தின் செயல் என்று சிலர்
குற்றஞ்சாட்டுகிறார்கள். புலிகள் பல நேரங்களில் இலங்கையின் ராணுவ உடைகளையே
பயன்படுத்தி வந்தனர் என்பது உலகறிந்த உண்மை.

“மேலும் இன்றைய உலகம் டிஜிட்டல் உலகம். ஃபோட்டோக்களில் எதையும்
எப்படியும் மாற்றியமைக்க முடியும். அதையும் தாண்டி ‘அந்தச் சிறுவன் மணல்
மூடைகளால் சூழப்பட்ட ஒரு பதுங்கு குழியில் இருக்கிறான்’ என்பது மட்டும்தான்
அந்தப் படம் சொல்லும் உண்மை. அது புலிகளின் பதுங்கு குழியாகவும்
இருக்கலாம். புலிகள், ராணுவத்திடம் சிக்காமல் சாவதற்காக சயனைட் குப்பிகளைக்
கடிக்கத் தயாராக இருப்பவர்கள். அந்தச் சிறுவன் ராணுவத்திடம் உயிரோடு
சிக்கி விடக் கூடாது என்று புலிகள் கூட முடிவு எடுத்திருக்க முடியுமே?

“சிறுவனை இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளியவர்கள் இலங்கை ராணுவத்தினர்
என்று குற்றஞ்சாட்டுபவர்கள், அந்தச் சிறுவனுக்கு ராணுவம் ஏன் பிஸ்கட் தந்து
சுட்டுத் தள்ள வேண்டும் என்ற கேள்வியை தங்களுக்குள் எழுப்பிப் பார்க்க
வேண்டும்? ஒரு பாலகனைக் கொல்லும் கல் நெஞ்சம் படைத்தவர்கள், அவனின் பசிக்கு
பிஸ்கட் கொடுத்தா உபசரித்திருப்பார்கள்?” என்று அவர்கள் என்னிடம் கேள்வி
எழுப்பினார்கள்.

“தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இலங்கையைப் பற்றிப் பெரும்பாலும் தவறான
தகவல்களே தரப்படுகின்றன. இவற்றைப் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள்தான்
இன்டர்நெட் மூலம் பரப்புகிறார்கள் என்று நினைக்கிறோம். இது டிஜிட்டல்
உலகம். க்ராஃபிக்ஸில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இலங்கைப் படை
வீரர்களை, விடுதலைப் புலிகள் பிடித்து வைத்துக் கொன்ற காட்சிகளைக் கூட,
இலங்கை ராணுவம் தமிழர்களைக் கொன்றதாக மாற்றிப் பிரசாரம் செய்தார்கள்.
பயங்கரவாதிகள் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம். ஆனால், ஒரு அரசு சார்ந்த
ராணுவ வீரர்கள், நாளை பல பேருக்குப் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம்
உண்டு. அதனால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்பட்டு விட முடியாது
என்பதை தமிழக மக்கள் மறந்து விடக் கூடாது” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி எங்களிடம்
இதுபற்றி பேசியபோது, “அந்தச் சிறுவனின் மரணம் தமிழகத் தமிழர்களை
உலுக்கியதில் ஆச்சரியமில்லை. பாலகனின் மரணம் எந்த மனிதனையும் உலுக்கும் வலு
படைத்தது. அதே தமிழகத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் கொன்று குவித்த
பாலகர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துப் பார்க்க வேண்டும்” என்று
கூறி, விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இறந்து போன சிறார்களின்
புகைப்படங்கள் வெளியான பல நாளிதழ்களை எங்கள் முன் எடுத்துப் போட்டார்.
“இந்தச் சிறுவர்களின் மரணத்திற்கெல்லாம் நாம் இதே இரக்கம், கருணை காட்ட
வேண்டாமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், தமிழகத்தைப் போலவே நாங்கள் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் பலரும்,
பாலச்சந்திரன் மரணம் குறித்து உருக்கமாகவே பேசினர். அந்தச் சிறுவனின்
இறப்புக்கு இலங்கை ராணுவமே காரணம் என்று அங்குள்ள பெரும்பாலானோர்
கருதுகிறார்கள். எனினும் வீட்டுக்கு வீடு இதுபோன்ற சிறார்களை அவர்கள் பலி
கொடுத்திருப்பதால், தமிழகம் அளவுக்கு அந்த மரணம் அவர்களைப் பெரிதாக
பாதிக்கவில்லை. பிரபாகரனின் மரணம் கூட அங்கு பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தவில்லை. அவர்கள் எந்த மரணத்தையும் சாதாரணமாக எடுத்துக்
கொள்ளுமளவிற்கு விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்.

கட்டம் இடப்பட்ட செய்தி 3

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பித்த மக்கள்

விடுதலைப் புலிகள் தங்கள் பிடியில் இருந்த நகரத்தை இழக்கும் நிலையில்,
அடுத்த நகரத்துக்கு நகருவார்கள். அப்போது அங்குள்ள தமிழ் மக்களையும்
தங்களுடன் அழைத்துக் கொண்டே நகர்ந்து விடுவார்கள். அப்படி அடுத்த
நகரத்துக்கு நகரும்போது, தாங்கள் கடந்து போகும் பகுதியில் எல்லாம் கண்ணி
வெடிகளைப் புதைத்து விடுவார்கள். ராணுவம் பின் தொடர்ந்து வந்துவிடக் கூடாது
என்பதற்காக அந்த ஏற்பாடு. இதனால், போர் நடக்கும் பகுதியிலிருந்து தமிழ்
மக்கள் தப்பியோடும் வாய்ப்பும் இருக்கவில்லை. அதை மீறித் தப்பி வந்தாலும்,
தங்களைப் புலிகள் என்று சந்தேகித்து ராணுவத்தினர் சுட்டு விடுவார்களோ என்ற
அச்சமும் அம்மக்களிடையே இருந்துள்ளது.

பொதுமக்களை அப்புறப்படுத்தாமல் தொடர்ந்து போர் நடத்துவதால், இன அழிப்பு
என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டிய நிலை இலங்கை ராணுவத்திற்கும்
இருந்தது. இந்த நிலையில்தான் இலங்கை ராணுவம் ‘நோ ஃபயர் ஸோன்’களை அறிவித்து,
அப்பகுதிகளில் ‘ரிஸீவிங் பாயின்ட்’களைத் திறந்து, ‘பொதுமக்கள் வந்து
சரணடையலாம்’ என்று அறிவித்தது. ராணுவம் இப்படி அறிவித்ததும், ஏராளமான
தமிழ்க் குடும்பங்கள் புலிகளின் எச்சரிக்கையையும் மீறித் திரள் திரளாக
ரிஸீவிங் பாயின்ட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

சுதந்திராபுரத்தில் முதன் முதலாக மக்கள் அப்படி விடுதலைப் புலிகளின்
எச்சரிக்கையை மீறித் திரண்டபோது, ஒரு பெண் புலியும், ஒரு ஆண் புலியும் மனித
வெடிகுண்டாக மாறி, ரிஸீவிங் பாயின்டுக்குச் சென்ற தமிழ் மக்களிடையே
வெடித்துச் சிதறினார்கள். இதில், உயிருக்குப் பயந்து ராணுவத்திடம் சரணடைய
வந்த அப்பாவித் தமிழர்கள் பலர் செத்து மடிந்தார்கள். இதையடுத்து, ‘ரிஸீவிங்
பாயின்ட்’டுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து விட்டது.

ஆனால், புலிகள் பலமிழந்து முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கிப்
பின்வாங்கப் பின்வாங்க, அவர்களின் பிடியில் இருந்த பகுதிகள் கணிசமாகக்
குறைந்தன. சுமார் 3 லட்சம் மக்கள், ஒரு குறைந்த பரப்பளவில் வேலையில்லாமல்,
உணவுக்கு வழியில்லாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்,
தொடர்ந்து இலங்கை ராணுவம் அதிகப்படியான இடங்களில் ‘நோ ஃபயர் ஸோன்’களை
அறிவித்ததால், புலிகளை மீறி, மக்கள் ரிஸீவிங் பாயின்ட்டுகளுக்கு வரத்
துவங்கியுள்ளனர். ‘இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாது’ என்ற சூழலில்,
புலிகள் இயக்கத் தலைமைக்குத் தெரியப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விடுதலைப்
புலிகளே மக்களை வெளியே செல்ல அனுமதித்து, அவர்களோடு தாங்களும்
சிவிலியன்களைப் போல் வந்து ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.

– இவையெல்லாம் யாரோ சொன்ன தகவல்கள் இல்லை. அப்பகுதியில் இருந்து தப்பி
வந்த மக்களும், முன்னாள் விடுதலைப் புலிகளும் சொன்னவைதான். ஆடியோ,
வீடியோவில் பதிவு செய்யப்பட்ட அவர்களின் முழுமையான பேட்டி விவரங்கள்
அடுத்து வரும் இதழ்களில் இடம் பெறவுள்ளன.

000
நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர், ஆறு நாட்கள்
இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி,
செய்திகளைச் சேகரித்து வந்துள்ளனர். இந்த இதழில் கிளிநொச்சி பகுதியில்
அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து
கொள்கிறார்கள்:

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரும் ஏ9 நெடுஞ்சாலையில் பகலில் பயணம்
செய்ததால், இடையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலையின் இரு மருங்கிலும்
சிவப்புக் கலரில் மண்டையோடும், இரு எலும்புகளும் கொண்ட எச்சரிக்கைப்
பலகைகளை எங்களால் கவனிக்க முடிந்தது. உடனே காரை அங்கே நிறுத்தச் செய்து
இறங்கினோம். அவ்வளவுதான்… அருகிலிருந்த புதருக்குள்ளிருந்து சரசரவென ஆறேழு
பேர் வித்தியாசமான யூனிஃபார்மில், முகத்தை மூடிய கண்ணாடி, கையில் வாக்கி
டாக்கி சகிதம் எங்களை நோக்கி ஓடி வந்தனர். “காரை இங்கு நிறுத்தக் கூடாது.
உடனே கிளம்புங்கள்” என்று எங்களை விரட்டினர்.

நாங்கள் தமிழர்கள் என்பதை முகத்தைப் பார்த்தே உணர்ந்து கொண்ட ஒருவர்,
“இங்கே மிதிவெடிகளை (கண்ணி வெடி) அகற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
எந்த நேரமும் ஏதாவது ஒன்று வெடிக்கக் கூடும். எனவே, இங்கு வாகனங்களை
நிறுத்த அனுமதியில்லை. உடனே அகன்று செல்லுங்கள்” என்று எச்சரித்தார்.
அப்போதுதான் அந்த எச்சரிக்கைப் பலகைகளையும் நாங்கள் கவனித்தோம். ‘மிதிவெடி
அபாயம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து நாங்கள் காரில் கிளம்பி விட்டோம். சில கிலோ மீட்டர்களுக்கு
அந்த எச்சரிக்கைப் பலகைகள் தொடர்ந்து காணப்பட்டன. இரு பக்கமும் பல பேர்
கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மண்ணைத் தோண்டி வெடிகள்
இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அப்பகுதிகளில் குச்சி ஊன்றி அதைப்
பாதுகாப்பான பகுதி என்று அடையாளப்படுத்துகின்றனர். (ஏற்கெனவே அந்தப்
பகுதிகளில் ஆளில்லா ரோபோ வாகனம் ஒன்றை ஓடவிட்டு, வெடிகளை வெடிக்கச் செய்து
விடுவார்களாம். அதன் பின்னர், ஆட்கள் மூலம் மண்ணைத் தோண்டி வெடி எதுவும்
இல்லை என்று உறுதி செய்வார்களாம். உயிரைப் பணயம் வைத்து நடக்கும் அந்த வேலை
சிரமமானது என்பதைப் பார்த்ததுமே தெரிந்து விடுகிறது. முதலில் மீள்
குடியேற்றப் பகுதிகளில் வெடிகளை அகற்றி, மக்களைக் குடியேற்றும் பணி
நடந்ததாம். அது முடிவுற்ற பிறகு, இந்த வனப் பகுதியில் வேலை நடக்கிறதாம்.
இந்தத் தகவல்களை பின்னர் நாங்கள் சந்தித்த ராணுவ அதிகாரி மூலம் தெரிந்து
கொண்டோம்.)

மேலும், அந்தப் பகுதியில் இருந்த பனை மரங்கள் அனைத்தும், மேலே கீற்றுகளை
இழந்து வெறும் கம்பங்களைப் போல நின்றன. அந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை
எங்களுக்குக் கார் ஓட்டிய தமிழ் டிரைவர் விளக்கினார். “2004 முதலே
யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடத் துவங்கி விட்டது.
துறைமுகம் மற்றும் விமான நிலையம் இருந்ததால், பெருமளவில் ராணுவத்தைக்
கொண்டு வந்து இறக்கி, இலங்கை அரசு யாழ்ப்பாணத்தைத் தன் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்து விட்டது. ஆனால், கிளிநொச்சி பகுதி 2009 ஜனவரி வரை புலிகளின்
கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

“இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி செல்லும் இந்தப்
பாதையில் ராணுவம் முன்னேறி வந்ததால், இப்பகுதி முழுக்க கண்ணி வெடிகளைப்
புலிகள் புதைத்து விட்டனர். இதனால் இப்பகுதியில் பல ஆண்டுகள் கடும் போர்
நடந்தது. வான்வெளித் தாக்குதல்கள் அதிகம் நடந்தன. இதில்தான் இந்தப் பகுதி
மரங்கள் அத்தனையும் அழிந்தன. இந்தப் பகுதிகளில் தொடர் வான்வெளித்
தாக்குதல்களை நடத்தி, புலிகளை அப்புறப்படுத்திய ராணுவம், பல மாதங்கள் கண்ணி
வெடிகளை அகற்றி, பாதை ஏற்படுத்தி முன்னேறிச் சென்று கிளிநொச்சியைக்
கைப்பற்றியது” என்று கூறிய டிரைவர், “கண்ணிவெடிகள் அதிகபட்சமாக
புதைக்கப்பட்ட பகுதி இது என்பதால், இன்னும் இந்தப் பகுதிகளில் வெடிகளை
அகற்றும் பணி முடிவடையவில்லை” என்று குறிப்பிட்டார்.

கிளிநொச்சி நகரத்தை நெருங்கியதும், வழியில் ராணுவமும், போலீஸும் எங்கள்
காரை வழி மறித்தன. ஏதோ விசாரிக்கப் போகிறார்கள் என்று நாங்கள் நினைத்தபோது,
ஒரு துண்டுப் பிரசுரத்தை மட்டும் எங்கள் கையில் கொடுத்து, பாதுகாப்பாக
வாகனத்தை ஓட்டுமாறு டிரைவரைக் கேட்டுக் கொண்டு வழியனுப்பி வைத்தனர்.

கிளிநொச்சியை அடைந்தபோது, அது பளிச்சென இருந்தது. புதிய பள்ளிகள், புதிய
அரசு அலுவலகங்கள், புதிய நீதிமன்ற வளாகங்கள், புதிய துணைமின் நிலையங்கள்
ஆகியவை பளபளவென நின்றன. தமிழர்களின் தனியார் கட்டிடங்களும்,
புதுப்பிக்கப்பட்ட புதுப்புது ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், டூ வீலர்
ஷோரூம்கள் எல்லாம் காணப்பட்டன. பள்ளி மாணவ- மாணவியர் யூனிஃபார்முடன் ஆள்
நடமாட்டமில்லாத சாலைகளில் கூட, எந்தவிதப் பயமுமின்றி சைக்கிள்களில் பயணம்
செய்ததைப் பார்க்க முடிந்தது.

வீ.ஆனந்த சங்கரியின் அலுவலகத்தை நாங்கள் அடைந்தபோது, அதையடுத்த
நிலத்தில் ஒரு ராட்சத வாட்டர் டேங்க் தரையோடு சாய்ந்து கிடந்தது.
அதைப்பற்றி அந்த வழியே போனவர்களிடம் விசாரித்த போது, ‘இந்நகரைக்
கைப்பற்றும் ராணுவத்தினருக்கு தண்ணீர் வசதி இருக்கக் கூடாது என்பதற்காக,
இந்த வாட்டர் டேங்கை விடுதலைப் புலிகள் வெடி வைத்துத் தகர்த்து விட்டனர்.
இங்கிருந்த அரசுக் கட்டிடங்களையும் அவர்கள் வெடி வைத்துத் தகர்த்து
விட்டுத்தான் வெளியேறினர்’ என்றார்கள்.

அதைப் படமெடுத்துக் கொண்டு, அடுத்த வாசலில் இருந்த தமிழர் விடுதலைக்
கூட்டணியின் அலுவலகத்தில் நுழைந்து, அதன் செயலாளரான முன்னாள் எம்.பி.
வீ.ஆனந்த சங்கரியைச் சந்தித்தோம். முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பில்
(டி.என்.ஏ.) இருந்தவர், தற்போது அந்தக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி
விட்டார். “ராஜபக்ஷ எந்த அளவு குற்றவாளியோ, அதே அளவு குற்றவாளிதான் புலிகள்
தலைவர் பிரபாகரனும். கடும் போரின் போதும் வன்னிப்பகுதி தமிழர்களை வெளியே
விடாமல், தனக்கு அரணாக வைத்துக் கொண்டு பல தமிழ்க் குடும்பங்களை
அழித்தொழித்தார். தமிழர்களை அழித்ததில் பிரபாகரனுக்கு எவ்வளவு பங்கு
இருக்கிறதோ, அதே பங்கு டி.என்.ஏ.க்கும் இருக்கிறது.

“பிரபாகரனை ஒரு அரசியல் தீர்வுக்குத் தயார் படுத்தாமல், அவரது
அழிவுக்கும், ஆயிரக்கணக்கான தமிழர்களின் அழிவுக்கும் டி.என்.ஏ.வும் ஒரு
காரணமாக இருந்தது. கடைசிக் கட்டப் போரின்போது, விடுதலைப் புலிகளின்
வளையத்துக்குள்ளே லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கிறார்கள் என்று
தெரிந்தும், டி.என்.ஏ. அவர்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
பிரபாகரன் இருந்தால் நாம் அரசியல் செய்ய முடியாது, அவரும் அவரது
குடும்பமும் அழியட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை” என்று
குறிப்பிட்டார் ஆனந்த சங்கரி.

மேலும் அவர், “பல கட்டங்களில் தீர்வுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ராஜபக்ஷ
கூட ஒரு கட்டத்தில் இந்திய மாடல் மாகாணசபைத் தீர்வுக்கு ஒத்து வந்தார்.
ஆனால், புலிகள் அழிவை மட்டுமே தேர்வு செய்தனர். கடைசிக் கட்டத்தில் கூட
ராஜபக்ஷ தமிழ் கட்சிகளை அழைத்துப் பேசினார். ‘ஏறக்குறைய 65 ஆயிரம்
தமிழர்கள் ராணுவத்திடம் வந்து தஞ்சம் அடைந்து விட்டனர். இன்னும் சுமார் 20
ஆயிரம் மக்கள்தான் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்’ என்று
எங்களிடம் குறிப்பிட்டார் ராஜபக்ஷ. ஆனால், நான் அதை மறுத்தேன். ‘இன்னும் 3
லட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்’ என்று
தெரிவித்தேன். ராஜபக்ஷ என் மீது கோபப்பட்டார். ‘பொய் சொல்லாதீர்கள்’
என்றார்.

“ஆனால், நான் ஆணித்தரமாக அடித்துச் சொன்னேன். அதன் பிறகு அவர் கொஞ்சம்
நம்பினார் என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் அனுப்பும் உணவுகளைக் கூடுதலாக
அனுப்பச் சொன்னார். (போர் நடக்கும்போதும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில்,
புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களுக்கு, தினசரி உணவு
அனுப்பப்பட்டுள்ளது.) அதோடு, மீண்டும் பல ‘நோ ஃபயரிங் ஜோன்’களை உருவாக்கி,
மக்கள் வெளியே வந்து ராணுவத்தின் ‘ரிஸீவிங் பாயின்ட்’டில் தஞ்சம் புகலாம்
என்று ராஜபக்ஷ அறிவித்தார். முதல் நாளே உள்ளிருந்து 85 ஆயிரம் பேர்
‘ரிஸீவிங் பாயின்ட்’டுக்கு வந்து சேர்ந்தனர். அடுத்தடுத்த நாட்களில் சுமார்
2 லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளியே வந்து விட்டனர். அதன் பிறகுதான் போர்
மேலும் தீவிரமடைந்து முடிவுக்கு வந்தது” என்று குறிப்பிட்டார்.

“புலிகள் மீது பெருந்தவறு என்றாலும், அது பயங்கரவாதக் குழு என்பதால்,
அது தமிழர்களைக் கொன்று குவித்தாலும் அந்தக் குழுவைத் தண்டிக்க முடியாது.
ஆனால், அதே தவறை ஒரு அரசாங்கம் செய்யக் கூடாது. அதற்குச் சில
கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். பொறுமை இழந்து ஆயிரக்கணக்கான மக்களையும்
சேர்த்துக் கொன்றொழிக்கக் கூடாது. இப்போது என்னதான் உலக அளவில் மனித
உரிமைப் பிரச்னைகளை எழுப்பினாலும், ராஜபக்ஷவை யாரும் தூக்கில் போட்டு விட
முடியாது. ஆண்டவன் மட்டும்தான் தண்டனை அளிக்க முடியும். இல்லையென்றால்,
அடுத்து வருகிற ஆட்சி விசாரணை நடத்தி, அவருக்குத் தண்டனை அளிக்க வேண்டும்.
இதெல்லாம் நடக்கிற காரியமில்லை.

“ஆனால், தமிழர்களைச் சமமாக நடத்த இனி வரும் அரசாங்கங்கள் நடவடிக்கை
எடுத்தால், அதுவே போதுமானது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர் கொண்டிருக்கும்
நாடாக இருந்தாலும், ஒரு இஸ்லாமியரான அப்துல் கலாமை அதிபர் ஆக்கியது
இந்தியா. இந்திரா காந்தியை வீழ்த்தியவனைச் சார்ந்த சமூகம், நாட்டில்
பிரிவினை கோரியவர்களைச் சார்ந்த சமூகம் என்று ஒரு சிலருக்காக ஒரு
சமூகத்தையே குற்றவாளியாக்காமல், பெருந்தன்மையுடன் ஒரு சீக்கியரை
பிரதமராக்கியுள்ளது இந்தியா. காந்தி பிறந்த இந்தியா காட்டும்
பெருந்தன்மையைத்தான், நாங்கள் இலங்கை அரசிடமும் எதிர்பார்க்கிறோம். புலிகள்
போகட்டும். இங்கிருக்கும் தமிழர்களுக்குச் சம உரிமை கொடுக்கட்டும்” என்று
முடித்தார் வீ.ஆனந்த சங்கரி.

அவரைச் சந்தித்து விட்டு வெளியே வந்த நாங்கள், ஒரு உணவு விடுதியில்
உணவருந்தினோம். அப்போது அங்கிருந்த ஒருவர், “இலங்கை ராணுவத்தில் தற்போது
இந்தப் பகுதி தமிழ்ப் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 102
தமிழ் இளம்பெண்கள் அப்படி ராணுவத்தில் இணைந்துள்ளனர். அதில் விசேஷம்
என்னவென்றால், அதில் ஒரு சிலர் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள்.
கிளிநொச்சி பெண்கள் பிரிவு ராணுவ முகாமுக்குப் போனால், அவர்களில் பலரைச்
சந்திக்கலாம்” என்று எங்களுக்குத் தகவல் தந்தார். இதையடுத்து ராணுவ
முகாமில் அப்பெண்களைச் சந்திப்பதற்கு அனுமதி பெற முயற்சி செய்தோம். எங்கள்
முயற்சி பலித்தது.

‘தமிழகத்தில் இலங்கை ராணுவத்தைத் தமிழர்கள் தூற்றிக் கொண்டிருக்கும்
வேளையில், அதே ராணுவத்தில் புதிய தமிழ்ப் பெண்களா? அதிலும் அவர்களில் சிலர்
முன்னாள் பெண் புலிகளா?’ – அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் அந்த
முகாமுக்கு விரைந்தோம்.

(தொடரும்)
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலங்கையில் துக்ளக்-3 Empty இலங்கையில் ஹிந்துக் கோவில்கள் இடிக்கப்படுகின்றனவா? துக்ளக்’ - 5

Post by மாலதி Thu May 30, 2013 10:01 pm


[You must be registered and logged in to see this image.]ஹிந்துக்
கோவில்களை அழித்து, புத்த ஆலயங்களைக் கட்டுவதாகத் தமிழகம் முழுக்கப்
பிரசாரம் நடந்தது. நீங்கள் தமிழ்ப் பகுதி முழுக்க எங்கு வேண்டுமானாலும்
விசாரணை நடத்திக் கொள்ளுங்கள். ஒரு கோவில் கூட இடிக்கப்பட்டிருக்காது”
என்று சவால் விட்டார் ஒரு ராணுவ அதிகாரி. மேலும் அவர், “புத்த மதம், ஹிந்து
மதத்தோடு பின்னிப் பிணைந்ததுதான். புத்தர் கோவில்களில், ஹிந்துக்
கடவுள்களுக்குக்கூட இடம் உண்டு. புத்த மதத்தினர் ஹிந்து தெய்வங்களையும்
வணங்கியே வருகிறார்கள். போருக்குப் பிறகு, ஹிந்துக் கோவில்கள் அரசு செலவில்
புனரமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் ஒரு முதலமைச்சர்
ஸ்தானத்தில் இருந்தவரே, இலங்கையில் ஹிந்துக் கோவில்கள் இடிக்கப்படுவதாகப்
புகார் தெரிவித்தார். தமிழகத்திற்குத் தவறான தகவல்களே போய்ச் சேருகின்றன
என்பதற்கு, இதைவிட நல்ல உதாரணம் கிடையாது” என்றும் குறிப்பிட்டார்.

நாங்கள் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் எம்.பி.யான சரவணபவனிடம் இதுபற்றிக் கேட்டபோது, “இங்கே
புதிதாக புத்தர் கோவில்களைக் கட்டுகிறார்களே தவிர, ஹிந்துக் கோவில்கள்
எதுவும் இதுவரை இடிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை” என்றார் அவர். யாழ்ப்பாணம்
மேயரைச் சந்தித்தபோது, “ஹிந்துக் கோவில்கள் எதுவும் இடிக்கப்படவில்லை.
இங்குள்ள ஒவ்வொரு ஹிந்துக் கோவிலும் பல லட்சம் ரூபாய் அரசு செலவில்
புனரமைக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

கிளிநொச்சி,
புதுக்குடியிருப்பு, முல்லைத் தீவு பகுதிகளில் புதிய புத்தர் கோவில்கள்
எழுந்திருப்பதை நாங்களே நேரில் பார்த்தோம். அது பற்றி ராணுவ அதிகாரி
ஒருவரிடம் விளக்கம் கேட்டோம். “தமிழ்ப் பகுதிகளில் புத்தர் கோவில்களை
எழுப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்தக் கோவில்களை யாரும்
எழுப்பவில்லை. முன்பு இந்தப் பகுதிகள் எல்லாம் முழுக்க முழுக்கப் புலிகளின்
கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால், தற்போது தேசியப் பாதுகாப்பு அடிப்படையில்
இங்கெல்லாம் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் இருக்கும்
புத்த மதத்தினர் வழிபடுவதற்காக இந்தக் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு
புத்தக் கோவில் வந்து விட்டது என்பதற்காக, ஹிந்து மதம் அழிக்கப்படுகிறது
என்று அர்த்தம் அல்ல. இங்கிருந்து புலம் பெயர்ந்து போன ஹிந்துக்கள், கனடா,
பிரிட்டன், நார்வே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் எத்தனை முருகன் கோவில்களை,
விநாயகர் கோவில்களைக் கட்டியுள்ளார்கள் என்று பாருங்கள். இதனால் அவர்கள்
அங்குள்ள கிறிஸ்தவ மதத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்றா, அங்குள்ள மக்கள்
நினைத்தார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

கட்டம் இடப்பட்ட செய்தி 2

தமிழர்கள் தற்போதும் வெளிநாடுகளுக்கு ஓடுவது ஏன்?

கிளிநொச்சி, முல்லைத் தீவு
பகுதியில் தற்போது வசிக்கும் தமிழர்களுக்கு, புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர்
அவ்வப்போது அல்லது மாதாமாதம் பணம் அனுப்பி உதவி வருகிறார்கள். ‘தனி ஈழமா?
அப்பா... சாமி... பட்டதெல்லாம் போதுமடா’ என்று எங்களிடம் கூறிய தமிழ்க்
குடும்பத்தினர் பலர், தங்களின் படம், பெயர் வேண்டாம் என்று கேட்டுக்
கொண்டனர். காரணம் கேட்டபோது, “புலம் பெயர்ந்த தமிழர்கள் தனி ஈழத்துக்கு
ஆதரவானவர்கள். ‘தனி ஈழம் எல்லாம் வேண்டாம்’ என்று சொன்னால், அவர்கள்
கோபப்பட்டு பணம் அனுப்புவதை நிறுத்திக் கொள்வார்கள்” என்று தெரிவித்தனர்.

புலம் பெயர்ந்த தமிழர்கள்
மீது உள்ளூர் தமிழர்களுக்குப் பொறாமையும், கொஞ்சம் கோபமும் இருப்பதை
அவர்களது பேச்சில் உணர முடிந்தது. “அவர்கள் உயிரிழப்பு, அங்க இழப்பு,
குடும்ப உறுப்பினர் இழப்பு என்று பெரிய சேதாரங்கள் வருவதற்கு முன்,
வெளிநாடுகளில் குடியேறி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டனர். இனி இங்கு
ஈழம் அமைந்தால்கூட, அவர்களும், அவர்களது வாரிசுகளும் வந்து குடியேறுவார்களா
என்பது கூட நிச்சயமில்லை. ஆனால், வெளியிலிருந்து ‘தனி நாடு, பொது
வாக்கெடுப்பு’ என்று மேலும் மேலும் கிளறி விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

“ஏனென்றால், இங்கு பிரச்னை
இருந்து கொண்டே இருந்தால்தான், அவர்கள் அந்தந்த நாடுகளில் குடியிருந்தபடியே
காலம் தள்ள முடியும். மேலும், இங்கிருக்கும் மற்ற நெருங்கிய உறவினர்களை,
‘அகதிகள்’ என்ற பெயரில் அங்கு அழைத்துக் கொள்ளவும் முடியும். எனவே, தனி
ஈழம் குறித்துப் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதில்
அர்த்தமில்லை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அதே நேரம் வன்னிப் பகுதி
தமிழர்கள் பலருக்கு கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப்
புலம் பெயரும் ஆசை இன்னமும் இருக்கிறது. “இந்த மண்ணில் அனுபவித்த
கொடூரங்களை மறக்க நினைக்கிறோம். மேலும், இங்குள்ள ராணுவ நடமாட்டம் இன்னும்
ஒரு இறுக்கத்தையே எங்கள் வாழ்க்கையில் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எந்த
நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம் உள்ளுக்குள் இன்னமும் இருப்பதை மறுக்க
முடியாது. எனவே, அமைதியான ஒரு வெளிநாட்டில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால்
நல்லது என்ற மனோபாவம், எங்களில் பலருக்கு இன்னமும் இருக்கிறது. அதனால்தான்
கள்ளத் தோணிகளில் வெளிநாடுகளுக்குத் தப்பிப் போகும் சம்பவங்கள்
தொடர்கின்றன” என்றனர் ஒரு தமிழ்க் குடும்பத்தினர்.

நமது நிருபர்கள் எஸ்.ஜே.
இதயாவும் ஏ.ஏ. சாமியும் கிளிநொச்சி பகுதியில் அவர்கள் பார்த்தவற்றையும்,
பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்....

கிளிநொச்சியில் உள்ள பெண்கள்
ராணுவ முகாமிற்குச் சென்று, அங்கு புதிதாக இணைந்துள்ள தமிழ்ப் பெண்களைச்
சந்திக்க முயற்சி செய்தபோது, கிளிநொச்சி ராணுவ முகாம்களுக்குப் பொறுப்பான
மேஜர் பந்துல என்பவரைச் சந்தித்து அனுமதி பெற்றோம். கிளிநொச்சியில் ராணுவம்
செய்து வரும் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.[You must be registered and logged in to see this image.]

“நாங்கள் கிளிநொச்சியைக்
கைப்பற்றிபோது, இங்கு பறவைகள் தவிர வேறு உயிரினங்கள் கிடையாது.
வெறிச்சோடிக் கிடந்தது. புலிகள், இப்பகுதி மக்களை, தங்களுக்கு அரணாகத்
தங்களுடனே அழைத்துச் சென்று விட்டனர். ஆனாலும், இங்கிருக்கும் வீடுகளையோ,
ஹிந்துக் கோவில்களையோ ராணுவம் துளியளவும் சேதப்படுத்தவில்லை. இறுதிப் போர்
முடிந்த இந்த நான்கு வருடங்களில், 42 ஆயிரத்து 580 தமிழ்க் குடும்பங்களைச்
சேர்ந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 605 தமிழர்கள் மீள் குடியேற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.

“தமிழகத்தில் பிரசாரம்
நடப்பதுபோல், இங்கு எந்த அவலநிலையும் இல்லை. கிளிநொச்சி முள்வேலி முகாமில்
ஒரு குடும்பம் கூடக் கிடையாது. ராணுவத்தினரைத் தவிர, ஒரு சிங்களக்
குடும்பம் கூட இங்கு குடியேற்றப்படவில்லை. எல்லாம் வதந்திகள்தான். இதுபோன்ற
குற்றச்சாட்டைக் கிளப்புபவர்கள், ‘இந்த இடத்தில் முள்வேலி முகாம் உள்ளது.
அதில் இன்னும் இத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள். இந்த இடத்தில் இத்தனை
சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன’ - என்று ஆதாரத்தோடு சொல்ல
வேண்டும். சும்மா வாய்க்கு வந்தபடி சொல்லக் கூடாது.

“உண்மையில் இலங்கை ராணுவம்
இங்குள்ள தமிழர்களுக்கு உறுதுணையாகவே உள்ளது. அரசாங்கம் 1.75 மில்லியன்
பணத்தை கிளிநொச்சி மறுவாழ்வுக்கென ஒதுக்கிச் செலவு செய்து வருகிறது. 20
ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நாங்கள்
ராணுவத்தின் செலவில் 3 ஆயிரம் தமிழ் மாணவர்களைப் படிக்க வைக்கிறோம்.
இதுபோக, ஒவ்வொரு ராணுவ வீரரும், குறைந்தது மாதம் 100 ரூபாய், தமிழ்
மாணவர்களின் கல்விக்காக நன்கொடையாகத் தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்
மூலம் 400 தமிழ் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. ராணுவத்தின்
செலவில் அவர்களுக்கு இலவச ஷுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு ராணுவமே இலவச சைக்கிள்களை வழங்கியுள்ளது.

“மேலும் இப்பகுதியிலுள்ள
தமிழ் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு ராணுவத்தின் சார்பில் இலவச
தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. எலெக்ட்ரிஷியன் வேலை, கொத்தனார் வேலை,
தச்சு வேலை, டெய்லரிங் வேலை, சமையல் வேலை, பேக்கரி வேலை, செல்ஃபோன்
ரிப்பேர், கம்ப்யூட்டர், அழகுக்கலை உள்ளிட்ட பல துறைகளில் அவர்களுக்குப்
பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 14 ஆயிரம் பேர் இந்தப்
பயிற்சிகளைப் பெற்றுள்ளார்கள். இதில் முன்னாள் விடுதலைப் புலிகள் மட்டுமே
10 ஆயிரத்து 683 பேர்” என்று விளக்கினார் அவர்.

கடைசியாக அவர் ஒன்று
சொன்னார். “ராணுவத்தின் வேலை பயங்கர வாதத்தை அழிப்பது மட்டும்தானே தவிர,
தமிழர்களை அழிப்பது இல்லை. போர் எப்போதோ முடிந்து விட்டது. இப்போது
ராணுவத்தின் லட்சியம், இங்கு ஐந்து கீகளை ஏற்படுத்துவதுதான்.
Rehabilitation, Reintegration, Reconstruction, Resettlement,
Reconciliation (மறுவாழ்வு, மறு இணைப்பு, மறு நிர்மாணம், மறுகுடியேற்றம்,
மறு சமாதானம்) ஆகிய ஐந்தும்தான் இப்போதைய எங்கள் லட்சியம். அதை
நிறைவேற்றுவோம்” என்றார்.

இதையடுத்து, இலங்கை
ராணுவத்தில் இணைந்துள்ள 102 தமிழ்ப் பெண்களில், சுமார் 40 பெண்களைச்
சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. ராணுவ
அதிகாரிகள் யாரும் அருகில் இல்லாமல் அந்த தமிழ்ப் பெண்களுடன் சுதந்திரமாக
நாங்கள் உரையாடினோம். எல்லோரும் சுமார் 21 முதல் 25 வயது வரையிலான
இளம்பெண்கள். 35 ஆயிரம் இலங்கை ரூபாய் சம்பளம். பிடித்தம் 5 ஆயிரம் ரூபாய்
போக, 30 ஆயிரம் கையில் வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர். இது பொருளாதாரத்தில்
பின்தங்கியிருக்கும் தங்கள் குடும்பத்தினருக்குப் பேருதவியாக இருப்பதாக
அவர்கள் குறிப்பிட்டனர்.

அதில் ஒரு பெண், “ஏண்டா இந்த
வேலையில் சேர்ந்தோம் என்று இருக்கிறது. வெளிநாட்டில் உள்ள உறவினர்கள்
எல்லாம் எங்கள் குடும்பத்தைக் கேவலமாகப் பேசுகிறார்கள். ‘துரோகிகள்’ என்பது
போல் பார்க்கிறார்கள். முன்பு எங்களுக்குச் செய்து வந்த உதவிகளை இதனால்
நிறுத்திக் கொண்ட[You must be registered and logged in to see this image.]ு விட்டார்கள்” என்றார் சோகமாக.

இன்னொரு பெண், “என்
வீட்டிலும் நான் ராணுவத்தில் சேருவதற்குப் பலத்த எதிர்ப்பு. உறவினர்கள்
தவறாகப் பேசுவார்கள் என்ற பயம் என் அம்மாவுக்கு இருக்கிறது. நான்தான் என்
அம்மாவிடம், ‘நம் பொருளாதாரத்தை நாம்தான் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெளிநாட்டில் சொகுசாக இருக்கும் உறவினர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்
என்பதற்காக, நாம் பட்டினி கிடந்து சாக முடியாது’ என்று தீர்மானமாகப் பேசி,
அவரைச் சமாதானம் செய்து இப்பணியில் சேர்ந்தேன்” என்றார்.

எங்களிடமே சில பெண்கள்,
“நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் அண்ணா? எங்களைத் தவறாக
நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அந்தளவுக்குக் குற்றவுணர்ச்சியை
அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளார்கள், நமது தமிழ் உணர்வாளர்கள். (‘இது
உங்கள் வாழ்க்கை. உங்களுக்கு எது சரி என்று தெரிகிறதோ, அதைச் செய்வதில்
தவறில்லை. வெளிநாடுகளில் உள்ளவர்கள் வெறும் வார்த்தைகளை மட்டும்தான்
உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்; வாழ்க்கையை அல்ல’ - என்பது அவர்களுக்கு
நாங்கள் தந்த பதில்.)

போருக்குப் பிறகு
அமைதியாகவும், நிம்மதியாகவும் தாங்கள் வாழ்வதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ராணுவத்தினர், தங்களை மிகுந்த மரியாதையாகவும், கனிவாகவும் நடத்துவதாக
அவர்கள் குறிப்பிட்டனர். நாங்கள் அவர்களைச் சந்தித்த அறையில், கேமெரா
எதுவும் உள்ளதா, ஏற்கெனவே ராணுவத்தினர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து
‘இப்படித்தான் பேச வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்களா என்ற சந்தேகம்
எங்களுக்கு எழுந்தது. இதையடுத்து சில பெண்களை அறைக்கு வெளியே அழைத்துச்
சென்று, மரத்தடியில் நிறுத்தி தனியே பேசினோம். ராணுவ அதிகாரிகள் அதற்கு
மறுப்புத் தெரிவிக்கவில்லை. அங்கும் அந்தப் பெண்கள், அதே ரீதியிலேயே
ராணுவத்தைப் புகழ்ந்தனர். ‘இப்படித்தான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று
எந்த நிபந்தனையும் எங்களுக்கு விதிக்கவில்லை’ என்று அடித்துச் சொன்னார்கள்.
‘உண்மையிலேயே மிகுந்த பாசத்தோடு நடத்துகிறார்கள். வேலைக்குச் சேர்ந்த
ஓரிரு மாதங்களிலேயே டூ வீலர் வாங்க லோன் கொடுத்துள்ளார்கள். நாங்கள்
பெரும்பாலோர் தற்போது டூ வீலர் வைத்திருக்கிறோம்’ என்றார்கள் சந்தோஷம்
பொங்க.

‘புலிகள் இயக்கத்தில் இருந்த
பெண்கள் யார், யார்’ என்று அவர்களிடம் நாங்கள் கேட்டபோது, முதலில் சொல்லத்
தயங்கினார்கள். பின்னர் அவர்கள் எங்களிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
நாங்கள் பதில் சொல்லி, கொஞ்சம் சகஜநிலைக்குத் திரும்பியதும், இருவர் கை
தூக்கினார்கள். (சென்னை வந்தால் ரஜினியைப் பார்க்க முடியுமா? ஷாலினி,
ஜோதிகா எல்லாம் இனி நடிக்கவே மாட்டார்களா? சிம்பு - தனுஷ் சண்டை உண்மையா -
இப்படியெல்லாம் அமைந்தன அவர்களது கேள்விகள்.)

அந்த இருவரையும் நாங்கள்
தனித்தனியே சந்தித்துப் பேசினோம். அவர்கள் சில மாதங்கள் மட்டுமே
இயக்கத்தில் இருந்தவர்கள். (விடுதலைப் புலிகள் இயக்கத்தை அங்குள்ள
தமிழர்கள் சுருக்கமாக ‘இயக்கம்’ என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.)

அவர்கள் இருவருமே விரும்பி
இயக்கத்தில் இணைந்தவர்கள் இல்லை. புலிகளால் வலுக்கட்டாயமாக இழுத்துச்
செல்லப்பட்டவர்கள். ஆரம்பத்தில் வீட்டுக்கொரு பிள்ளையை இயக்கத்துக்குத் தர
வேண்டும் என்று நிபந்தனை விதித்த புலிகள், இறுதிக் கட்டங்களில் இளைஞர்,
இளம் பெண்கள் யாராயிருந்தாலும் இயக்கத்திற்கு இழுத்துச் சென்று
விடுவார்களாம். 14 வயது, 15 வயது சிறார்களையும் அவர்கள் விடவில்லையாம்.

முதல் பெண் (பெயர்
நீக்கப்பட்டுள்ளது) இயக்கத்தில் இருந்தது சில மாதங்கள்தான். “முதலில்
என்னையும், பிறகு என் தங்கையையும் இயக்கத்தில் பிடித்துச் சென்று
விட்டார்கள். கடைசிக் கட்டப் போர் நடந்த நேரம் என்பதால், என்னைப்
பயிற்சியில் எல்லாம் ஈடுபடுத்தவில்லை. பிற்பாடு நாங்கள் ராணுவத்தில்
சரணடைந்த போது, நான் இயக்கத்தில் இருந்தவள் என்பதால், என்னை 9 மாதம்
தடுப்பு முகாமில் ராணுவத்தினர் வைத்திருந்தனர். பின்னர் சிறு வயது
என்பதால், கட்டாயத்தின் பேரில்தான் நான் இயக்கத்தில் இருந்தேன் என்பதை
உணர்ந்து, என்னை விடுவித்து விட்டார்கள். அந்தத் தடுப்பு முகாமில் எந்தச்
சித்திரவதைக்கும் நான் ஆளாகவில்லை. உணவு, உடை வழங்கியதோடு கல்வியைத்
தொடரவும் உதவியது ராணுவம். என் தங்கைதான் என்ன ஆனாள் என்று இன்றுவரை
தெரியவில்லை. புலிகள் பிடித்துக் கொண்டு போனதோடு சரி. அதன் பிறகு இறந்தாளா,
இருக்கிறாளா என்பது கூடத் தெரியவில்லை” என்று கண் கலங்கின[You must be registered and logged in to see this image.]ார் அந்தப் பெண்.

இரண்டாவது பெண் (பெயர்
நீக்கப்பட்டுள்ளது) 2008-ஆம் ஆண்டு இறுதியில் இயக்கத்தில் வலுக்கட்டாயமாகச்
சேர்க்கப்பட்டார். “என்னையும் என் அண்ணனையும் இயக்கத்தினர் பிடித்துக்
கொண்டு போய் விட்டார்கள். இருவரில் ஒருவரையாவது திரும்பப் பெற்று விட
வேண்டும் என்று அம்மா அலையாத இடமில்லை. ஒவ்வொரு முகாமுக்கும் சென்று கெஞ்சி
அழுதிருக்கிறார். பிறகு என் தங்கையையும் பிடித்துக் கொண்டு போனார்கள்.
ஆனால், என் தங்கை கொஞ்சம் தைரியமானவள். இயக்கத்தினர் பிடித்துக் கொண்டு
போனாலும், ஓரிரு நாட்களிலேயே தப்பி வந்து வீட்டு வாசலில் நிற்பாள். எனக்கு
வழியும் தெரியாது, தைரியமும் கிடையாது. அப்படி ஒரு முறை தப்ப முயன்று
பிடிபட்டும் இருக்கிறேன். தப்பி ஓடுபவர்களை இயக்கத்தினர் மீண்டும்
பிடித்தால், பையன்களுக்கு மொட்டை அடித்து விடுவார்கள். பெண்களுக்கு கிராப்
வெட்டி விடுவார்கள். அப்போதுதான் மீண்டும் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில்
பிடிக்க முடியும் என்பது அவர்களது யுக்தி. எத்தனையோ பெண் பிள்ளைகள்
கூந்தலை இழக்க நேர்ந்ததற்காக அழுது கூப்பாடு போட்டிருக்கிறார்கள்.

“ஒன்றரை மாதங்கள்
பயிற்சியில் இருந்தேன். துப்பாக்கி தூக்கும் அளவிற்கு எனக்கு வலு இல்லை.
இரவில் பயத்தில் தூக்கமில்லாமல் விழித்திருப்பேன். தப்பி ஓடக்
காத்திருக்கிறேன் என்று எண்ணி, ‘தப்பித்தால் சுட்டு விடுவோம்’ என்று
மிரட்டுவார்கள். போரின் கடைசி நேரத்தில் ஆளில்லாமல், சின்னச் சின்னப்
பிள்ளைகளையெல்லாம் இயக்கத்திற்குப் பிடித்துக் கொண்டு போனார்கள்.
தாய்மார்கள் எவ்வளவு அழுதிருக்கிறார்கள் தெரியுமா? ரைஃபிளைப் பிடிக்கக் கூட
முடியாத சிறுவர்கள் எல்லாம் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால்தான் புலிகள்
என்றாலே எல்லோருக்கும் வெறுத்துப் போச்சு.

“2009 பிப்ரவரி மாதம்
சுதந்திரா புரத்தில் வேறு சிலரோடு நானும் ரிஸீவிங் பாயின்ட்டுக்குச்
சென்றேன். என் குடும்பத்தில் யார் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத
நிலை. முகாமில் அம்மாவைப் பார்த்து விடலாம் என்று ஆசைப்பட்டேன். அது
முதலில் நடக்கவில்லை. என் சின்னத்தம்பி என்றால் எனக்கு உயிர். அவனையும்
பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில், சாப்பிடாமலே பல நாள் முகாமுக்குள்
சுற்றிச் சுற்றித் திரிந்தேன். ராணுவத்திடம் இன்னின்னாரைக் காணவில்லை என்று
கடிதம் கொடுத்து வைத்திருந்தேன். பிற்பாடுதான், பக்கத்து வீட்டு அக்கா
மூலமாக என் அம்மாவும் ரிஸீவிங் பாயின்ட்டுக்கு வந்துள்ளது தெரிந்து
அவர்களைச் சந்தித்தேன்” என்றார்.

இந்தப் பெண், இயக்கத்தில்
இருந்தது என்னவோ ஒரு சில மாதங்கள்தான். ஆனால், இவர் இயக்கத்தில் இருந்த
பெண் என்பது ராணுவத்திற்குத் தெரிய வந்ததும், தடுப்புக் காவலில் இரண்டே
முக்கால் வருடமும், சிறையில் நான்கு மாதங்களும் அடைக்கப்பட்டுள்ளார்.
அதற்குக் காரணம், இயக்கத்தில் இவருக்குச் சூட்டப்பட்ட பெயர்தான்.
இயக்கத்தில் இணைந்ததும் புலிகள், அவர்களுக்குப் புதிய தமிழ்ப் பெயர்களைச்
சூட்டுவார்களாம். அதன்படி, இந்தப் பெண்ணிற்கு இறந்து போன ஒரு பெண் புலியின்
பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அந்தப் பெயர் ராணுவத்தினருக்குத் தெரிந்த,
பிரபலமான பெயர் என்பதால், இந்தப் பெண்தான் அவரோ என்ற ஐயத்தில், நீண்ட நாள்
விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்.

தன் இளமைப் பருவம்
அநியாயமாகத் தொலைந்து போனதற்குப் புலிகள் இயக்கத்தையே குற்றம் சொல்லும்
அந்தப் பெண், “நாங்கள் புலிகள் என்று தெரிந்த பிறகும் ராணுவத்தினர்
கடுமையாக நடத்தவில்லை. நான் முகாமில் இருந்தவரை உணவு, உடை மட்டுமில்லாமல்
கல்வியும் கொடுத்தார்கள். நான் பள்ளி இறுதித் தேர்வு எழுதியது ராணுவ
முகாமில்தான். பாலியல் தொந்தரவு எதையும் நான் அனுபவிக்கவில்லை;
பார்க்கவில்லை. என் கூட்டாளிகள் மத்தியில் கேள்விப்பட்டதும் இல்லை. ஆனால்,
வெளியில் அப்படி ஒரு பேச்சு உள்ளது. ஆனால், என்னளவில் அப்படி எதையும் நான்
பார்க்கவில்லை’‘ என்றும் குறிப்பிட்டார்.

மேலும் “என் சித்தி
குடும்பத்தினர் 2006-ல் பொங்கல் கொண்டாட யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள்
ஊருக்கு (ஊரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது) வந்தனர். ஆனால், அவர்கள் வந்த
நேரத்தில் இயக்கத்தினர் ‘பாதை குத்தி விட்டதால்’ (கண்ணி வெடி மூலம் பாதையை
மறித்து விட்டதால்), அவர்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிப் போக முடியாமல்
நரக வேதனையை அனுபவித்தார்கள். மிகுந்த வசதி படைத்தவர்கள், இயக்கத்திற்குப்
பணம் செலுத்தி விடுதலையாகிப் போன சம்பவங்கள் உண்டு. எல்லோருக்கும் அந்த
வசதியில்லையே?” என்றும் அவர் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கத்தில்
விரும்பி இருந்தவர்களும் சரி, வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களும் சரி,
போரின் இறுதிக்கட்டத்தில், ராணுவத்தின் ரிஸீவிங் பாயின்ட்களுக்கு
சிவிலியன்களோடு சிவிலியன்களாக வந்து சரண்டர் ஆனார்கள். ஆனால், ராணுவத்தினர்
அந்தப் புலிகளை எப்படி அடையாளம் கண்டுபிடித்துப் பிரித்தெடுத்தனர்?
இங்குள்ள புலி ஆதரவாளர்களால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத அந்த உண்மைகள்
அடுத்த வாரம்.

(குறிப்பு: பேட்டிகள்
எல்லாம் பெரும்பாலும் ஆடியோ மற்றும் வீடியோவில் பதிவு
செய்யப்பட்டிருப்பதால், அவற்றை மீண்டும் கேட்டு இலங்கைத் தமிழர்களின்
வட்டார மொழியிலேயே கட்டுரையை வெளியிடும் வாய்ப்பு இருந்தது. எனினும்,
வாசகர்கள் புரிந்து கொள்வதற்குக் கடுமையாக இருக்கும் என்பதாலும், அடிக்கடி
அடைப்புக்குள் விளக்கம் தர வேண்டியிருக்கும் என்பதாலும், பத்திரிகைத்
தமிழிலேயே கட்டுரை வெளியாகிறது.)

(தொடரும்)
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலங்கையில் துக்ளக்-3 Empty இலங்கையில் ‘துக்ளக்’ - 6

Post by மாலதி Thu May 30, 2013 10:03 pm

“இரக்கமற்ற படுபாவிகள் அவர்கள்”

[You must be registered and logged in to see this image.] இலங்கையில் ‘துக்ளக்’ - 6

நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர் வவுனியா மற்றும்
புதுகுடியிருப்பு பகுதிகளில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம்
பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்....


விடுதலைப் புலிகள் இயக்கத்தில் விரும்பி இருந்தவர்களும் சரி,
வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களும் சரி, போரின் இறுதிக்கட்டத்தில்
ராணுவத்தின் ரிஸீவிங் பாயின்ட்டுகளுக்கு சிவிலியன்களோடு சிவிலியன்களாக
வந்து சரண்டர் ஆனார்கள். ஆனால், ராணுவத்தினர் அந்தப் புலிகளை அடையாளம்
கண்டுபிடித்து பிரித்தெடுக்க உதவியது யார் தெரியுமா?

சரணடைந்த
மக்கள் கூட்டத்தை நோக்கி, “ஒரு மணி நேரம் புலிகள் இயக்கத்தில்
பணிபுரிந்திருந்தாலும் அவர்கள் தனியே வந்து விடுங்கள். விசாரணைக்குப் பிறகு
விடுவித்து விடுவோம்” என்று ராணுவம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் கடைசி
நேரத்தில் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர், இளம்பெண்கள்
எழுந்து உண்மையை ஒப்புக் கொண்டு சரண் அடைந்துள்ளனர்.

ஆனால், பல
ஆண்டுகள் இயக்கத்தில் இருந்தவர்கள் ஒப்புக் கொள்ளாமல் அமைதியாக
இருந்துள்ளனர். அந்த நிலையில் பொதுமக்களே எழுந்து, ‘இதோ இவன்தான் என் மகனை
இயக்கத்துக்குத் தூக்கிக் கொண்டு போனவன். அதோ அவன்தான் என் மகளை
இயக்கத்துக்கு இழுத்துக் கொண்டு போனவன்’ என்று சரமாரியாகக் காட்டிக்
கொடுத்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில் அந்தத் தமிழ் மக்கள், புலிகள் மீது
எவ்வளவு கோபத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது மிகப் பெரிய
சான்று. வலுக்கட்டாயமாக இயக்கத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்களும்,
தங்கள் பங்குக்குச் சக புலிகளைக் கணிசமாகக் காட்டிக் கொடுத்துள்ளனர்.

சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலிகள் இவ்விதம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 ஆயிரம் பேர், கடந்த மூன்று
ஆண்டுகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் மறுவாழ்வு மையங்களுக்கு
அனுப்பப்பட்டு, தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வவுனியாவிலுள்ள முன்னாள் புலிகளின் மறுவாழ்வு மையத்தில் இருப்பது
சுமார் 350 பேர் மட்டுமே. பெண்கள் மையத்தில் சுமார் 20 பேர் மட்டுமே
இருக்கிறார்கள். இந்த மறுவாழ்வு மையத்தில் இவர்களுக்கு ஒரு வருடத்தில்
ஆங்கிலம், சிங்களம், கம்ப்யூட்டர் மற்றும் விருப்பமான தொழில் பாடங்கள்
கற்பிக்கப்படுகின்றன. அதன்பின் விடுவிக்கப்படுகிறார்கள்.

நாங்கள்
ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்ததால், வவுனியாவில் உள்ள அந்தப் பெண்கள்
மறுவாழ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டோம். நுழைந்ததுமே நம்மை வரவேற்றது,
சின்ன குடிசை சைஸிலிருந்த ஒரு பத்ரகாளியம்மன் கோவில். ஹிந்துக் கோவில்களை
ராணுவம் இடிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு நடுவே, ராணுவ முகாமிற்குள்ளேயே
ஹிந்துக் கோவில் இருந்தது எங்களை வியப்படைய வைத்தது. (ராணுவம் இந்தக்
கோவிலை அனுமதித்தது மட்டுமல்ல; அந்தக் கோவிலை அவர்களும் வணங்குவது உண்டு -
என்று எங்களிடம் தெரிவித்தனர் அங்கிருந்த முன்னாள் பெண் புலிகள்.)

அந்த முகாமில் இருந்த முன்னாள் பெண் புலிகள், ஒரு வித சலிப்புடனே எங்கள்
முன் வந்து அமர்ந்தனர். நாங்கள் தமிழகப் பத்திரிகையாளர்கள் என்று தெரிந்த
பிறகு, முக மலர்ச்சியோடு பேச ஆரம்பித்தனர். “நான்கு வருடங்களாக விசாரிப்பு,
விசாரிப்பு என்று, கேட்டதையே பலமுறை கேட்டு எங்களுக்குப் போரடித்து
விட்டது. இங்கு மறுவாழ்வு மையம் வந்த பிறகுதான், தற்போது நிம்மதியாக
இருக்கிறோம். இப்போது, மறுபடி யாரோ சந்திக்க வருகிறார்கள் என்றதும்,
விசாரணைக்குத்தான் வருகிறார்களோ என்று சலித்துப் போனோம். நல்லவேளை இது
நீங்களாக இருக்கிறீர்கள்” என்று அவர்கள் பெருமூச்சு விட்டனர்.


இதனாலேயே அவர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்காமல், அவர்கள் போக்கிலேயே
பேச விட்டோம். “தமிழகத்தில் மாணவர்கள் போராடுவதைத் தொலைக்காட்சிகளில்
பார்த்தோம். நாலைந்து வருடங்களுக்கு முன்னால் போராடியிருந்தால் ஏதாவது பலன்
இருந்திருக்கும். இப்போது காலம் கடந்து, எல்லாம் முடிந்த பிறகு போராடி
என்ன பயன்?” என்றார்கள் சலிப்போடு.

அந்தப் பெண்களில், ஐந்து
வருடங்களுக்கு மேலாக இயக்கத்தில் இருந்த பெண்கள் நாலைந்து பேரை மட்டும்
தேர்வு செய்து தனியே பேசினோம். “இயக்கத்தில் விரும்பித் தான் சேர்ந்தோம்”
என்றார்கள்.

“தனி நாடு கிடைக்கும்; அங்கு நிம்மதியாக வாழலாம் என
ஆசைப்பட்டு, புலிகளின் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்தோம்.
முழுப் பயிற்சி எடுத்து சயனைட் குப்பிகளும் மாட்டிக் கொண்டுதான்
இயக்கத்தில் இருந்தோம். ஆனால், ஜெயிக்க முடியாது; தோற்று போவோம் என்பது
தெரியத் தெரிய எங்களுக்கு ஆர்வம் குறைந்தது. அப்பாவி மக்களின்
உயிரிழப்புகள் அதிகமானபோது, எங்கள் மனதில் மாற்றம் ஏற்படத் துவங்கியது.
எங்களது படைகள் பின்வாங்கப் பின்வாங்க நாங்கள் உறவினர்களோடு நெருங்க
ஆரம்பித்தோம். அவர்களும் ‘இனி வெல்ல முடியாது; எங்களோடு வெளியே வந்து விடு’
என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ‘புலிகளும் சரண் அடையலாம். கொல்ல மாட்டோம்’
என்று ராணுவம் அறிவித்ததை நம்பி சரணடைந்தோம். அதனால் இன்று உயிரோடு
இருக்கிறோம்” என்றார்கள் அவர்கள்.

“தடுப்புக் காவல், சிறை என்று
ஓரிரு வருடங்கள் துன்பம் அனுபவித்தாலும், இப்போது நிம்மதியாக இருக்கிறோம்.
இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியே சென்று விடுவோம். அதன் பின் சுதந்திரமாக
வாழ்வோம்” என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.

“நாங்கள்
சரணடையச் செல்லும் முன், ‘எங்களைக் கொன்று விடுவார்கள்; பாலியல் பலாத்காரம்
செய்து விடுவார்கள்’ என்றெல்லாம் ஒருவித அச்சம் எங்கள் மனதில் இருந்தது.
ஆனாலும், வேறு வழியில்லாமல் சரணடைந்தோம். ஆனால், அந்த மாதிரி எந்த கெட்ட
சம்பவங்களும் எங்களுக்கு நடக்கவில்லை. இங்கே நாங்கள் சுதந்திரமாக
இருக்கிறோம். எங்கள் பிறந்த நாளை ராணுவத்தினரே கொண்டாடுகிறார்கள். தீபாவளி,
கிறிஸ்துமஸ், தமிழ் வருடப் பிறப்பு போன்ற எல்லா பண்டிகைகளையும் கொண்டாட
இங்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள். அன்றைய தினங்களில் எங்கள் உறவினர்களை
இங்கு வரவழைத்து, அவர்களும் எங்களோடு உணவருந்தி மகிழ அனுமதிக்கிறார்கள்.
உண்மையில் நாங்கள் இங்கு நிம்மதியாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.

அப்படி கூறிய அவர்கள், ஓடிப் போய், அது குறித்த ஃபோட்டோ ஆல்பத்தையும்
எடுத்து வந்து எங்களிடம் காட்டினார்கள். ஒரு முன்னாள் பெண் புலிக்கு,
ராணுவமே திருமணம் செய்து வைத்துள்ளது. அங்கிருந்த ஒரு பெண்ணின் சிறு வயது
மகனும், அப்பெண்ணுடனே முகாமில் தங்கியுள்ளான். அவனை ராணுவமே படிக்க
வைக்கிறது. அந்தக் குழந்தை, அங்குள்ள பெண் ராணுவ அதிகாரிகளுக்கெல்லாம்
செல்லப் பிள்ளையாக திகழ்கிறான். அவனது பெயர் சூட்டு விழாவையும் ராணுவமே
தமிழர் மற்றும் ஹிந்து முறைப்படி நடத்தி வைத்துள்ளது.

‘தமிழீழம்
கிடைக்காமல் போனதில் வருத்தமா?’ என்ற கேள்வியையும் அந்த முன்னாள்
புலிகளிடம் நாங்கள் வைத்தோம். “வருத்தம் இல்லாமல் எப்படி இருக்கும்? ஆனால்,
ஈழம் கிடைக்கவில்லை என்பதற்காக இங்குள்ள தமிழினமே அழிந்து போக வேண்டும்
என்று நினைக்க முடியுமா? எத்தனையோ விஷயங்களுக்கு வாழ்க்கையில்
ஆசைப்படுகிறோம். அவை கிடைக்கவில்லை என்பதற்காக உடனே உயிரையா விடுகிறோம்?
ஏமாற்றத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வதில்லையா? அப்படித்தான் இதுவும். பலரின்
வாழ்க்கையையும், உடல் அங்கங்களையும், மன நிம்மதியையும் இழக்கச் செய்தது
போதும். திரும்ப தமிழீழம் என்று ஆரம்பித்துக் குழப்பங்களை உருவாக்கக்
கூடாது. அது முடிந்து போன கதை. இனி சாத்தியமில்லாத விஷயம்” என்றார்கள்
உறுதி கலந்த குரலில்.

சிறுவர், சிறுமியரை புலிகள் வலுக்
கட்டாயமாக இழுத்துச் சென்று இயக்கத்தில் சேர்த்தது பற்றி அவர்களிடம்
கேட்டோம். இயக்கத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பெண் (பெயர்
நீக்கப்பட்டுள்ளது.) அது குறித்துப் பேசினார். “நான் சேர்ந்த காலத்தில்
எல்லாம் இளைஞர்கள் இயக்கத்தில் விரும்பி வந்து சேர்ந்தனர். இயக்கத்தினர்,
‘வீட்டுக்கு ஒரு பிள்ளையை இயக்கத்துக்குக் கொடுங்கள்’ என்று வேண்டுகோளாக
பிரச்சாரம் செய்வார்கள். வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல மாட்டார்கள். அதன்
பிறகு ஒரு கட்டத்தில் ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’ என்பதைக்
கட்டாயமாக்கினார்கள்.

“2004-க்குப் பிறகு, தோல்விகள் தொடரத் தொடர
கண்ணில் பட்ட எல்லா சிறார்களையும் இயக்கத்துக்கு இழுத்துக் கொண்டு போகும்
நிலை ஏற்பட்டது. தாய்மார்கள் அழுது கொண்டே பின்னால் ஓடி வருவார்கள்.
மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். ‘உன் பிள்ளையைப் போர் முனைக்கு அனுப்ப
மாட்டோம். மற்ற வேலைக்குத்தான் வைத்துக் கொள்வோம் போ’ என்று அந்தத்
தாய்மார்கள் துரத்தப்படுவார்கள். பாவமாக இருக்கும். சிலர் மண்ணை அள்ளித்
தூற்றி விட்டுக் கூடப் போவார்கள்” என்று பேசிக் கொண்டே போனவர், திடீரென
உடைந்து கண் கலங்கியபடி “மறக்க விரும்புகிறேன்... எல்லாவற்றையும் மறக்க
விரும்புகிறேன். மன்னியுங்கள்” என்று தலையை கவிழ்த்துக் கொண்டார்.

அவரை ஆறுதல்படுத்தி புதிய வாழ்க்கைக்கு வாழ்த்துச் சொல்லி அவரை
தைரியப்படுத்தினோம். அதன்பின் அவரிடம் நாங்கள் எந்தக் கேள்வியும்
கேட்கவில்லை. ‘அரசியல் ரீதியான தீர்வுக்காகப் பல வாய்ப்புகள் வந்தபோதும்,
புலிகள் இயக்கம் அதை நழுவ விட்டதே... அப்போதெல்லாம் அது தவறு என்று
உங்களுக்குத் தோன்றவில்லையா?’ என்று மற்றவர்களிடம் கேட்டோம். “இது சரி, இது
தவறு என்று சொல்லும் அளவுக்கெல்லாம் எங்களுக்கும், தலைமைக்கும் தொடர்புகள்
கிடையாது. எங்களுக்கு என்ன உத்தரவு வருகிறதோ, அதைச் செய்வோம்.
அவ்வளவுதான். இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில், எங்களுடன் இருந்த தமிழ்
மக்களே எங்களை வெறுத்துத் தூற்ற ஆரம்பித்தபோதுதான், தலைமையின்
உத்தரவுகளுக்கு முரண்பட ஆரம்பித்தோம். நாங்களே எங்களுக்குள் பேசி வைத்து
ராணுவத்திடம் சரணடைந்து விட்டோம்” என்றார்கள் அவர்கள்.

இறுதிக்
கட்டப் போரின்போது, புலிகளைப் பொதுமக்களே தூற்றினார்கள் என்பதை
நிரூபிக்கும் வகையில், புதுக்குடியிருப்பு நகரில் நாங்கள் சந்தித்த இளைஞர்
ஒருவர் புலிகள் மீது அப்படி ஒரு கோபத்தோடு எங்களிடம் பேசினார். “என் வயதில்
நீங்கள் ஒரு இளைஞனை இங்கு சந்தித்தால், அவன் போர் நேரத்தில்
வெளிநாட்டுக்குத் தப்பிப் போனவனாகவோ, அல்லது வெளிமாகாணங்களுக்குத் தப்பிப்
போனவனாகவோதான் இருப்பான். இங்கு இருந்திருந்தால் அவன் இயக்கத்திற்கு
இழுக்கப்பட்டு போருக்குப் பலி கொடுக்கப்பட்டிருப்பான். நான் தப்பிப்
பிழைத்தது பேரதிசயம். என்னை நான்கு முறை இயக்கத்துக்கு இழுத்துக் கொண்டு
போய் விட்டார்கள். ஒவ்வொரு முறையும் தப்பி வந்தேன். தப்பி வந்தால் என்
வீட்டுக்குப் போக முடியாது. எங்காவது ஒரு வீட்டில் பதுங்கி இருப்பேன்.
சாப்பிடக் கூடப் பணம் இருக்காது. இதனால் திருடனானேன். களவாடித்தான் பல
நேரம் பசியாறினேன். திரும்ப வேறு ஊரில் என்னைப் பிடித்துக் கொண்டு போய்
விடுவார்கள்.

“இயக்கத்திலிருந்து தப்பி ஓடியவன் என்று அடையாளம்
தெரிவதற்காக, எனக்கு மொட்டை போட்டு விட்டார்கள். அப்படியும் தப்பிப்
போனேன். புலிகள் முகாமில் பல சிறார்கள் அழுதபடி கிடப்பார்கள். அவர்களிடம்
எல்லாம் பேரம் பேசினேன். ‘உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விட்டால்
எனக்குப் பணம் பெற்றுத் தர வேண்டும். உன் வீட்டில் எனக்கும் அடைக்கலம் தர
வேண்டும்’ என்றெல்லாம் பேரம் பேசி அவர்களையும் என்னுடன் அழைத்துக் கொண்டு
தப்பிப் போயிருக்கிறேன். அதேபோல், சில வீடுகளில் பணமும் பெற்றேன். சில
வீடுகளில் அடைக்கலமும் அடைந்தேன். ‘எல்லோரையும் கொன்னுட்டுத் தனி நாடு
வாங்கி யாரைக் குடியமர்த்தப் போகிறீர்கள்’ என்று கோபத்தில் புலிகளிடம்
கேள்விகள் கேட்டு, அவர்களிடம் அடி கூட வாங்கியிருக்கிறேன்.


“சுதந்திராபுரத்தில் ரிஸீவிங் பாயின்ட் அமைக்கப்பட்டு ‘நோ ஃபயரிங் ஸோன்’
என்று ராணுவம் அறிவித்ததும், மக்கள் சந்தோஷத்தோடு புலிகளின் கட்டுப்பாட்டு
பகுதியிலிருந்து கூட்டமாக வெளியேறினார்கள். நானும் அவர்களோடு போனேன்.
வரிசையாக எல்லோரும் போய்க் கொண்டிருந்தபோது, எனக்கு முன்னால் சென்று
கொண்டிருந்த மக்களிடையே ஒரு பெண் புலி, மனித வெடிகுண்டாக வெடித்துச்
சிதறினார். அந்த வெடியில் பொதுமக்கள் பலர் அங்கேயே விழுந்து மடிந்தனர்.
பலர் உடல் உறுப்புகளை இழந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். நல்லவேளையாக
எனக்கு எதுவும் ஆகவில்லை. கீழே விழுந்ததோடு சரி, விழுந்த எல்லோரும் எழுந்து
பின்புறமாக ஓடினோம். அப்போது எதிர்த்து வந்தது ஒரு மோட்டார் சைக்கிள்.
திடீரென அந்த மோட்டார் சைக்கிளும் அந்த ஆண்புலியோடு வெடித்து சிதறியது.
மேலும் பலர் செத்தார்கள். மேலும் பலர் உடல் உறுப்புகளை இழந்து ரத்த
வெள்ளத்தில் துடித்தார்கள். இதில்தான் எனக்கு முதுகுபுறத்தில் காயங்கள்
ஏற்பட்டன. அந்த இரு மனித குண்டுகள் வெடித்ததும், ராணுவம் பின்வாங்கிப் போய்
விட்டது. விடுதலைக்காக ஆசையுடன் சென்ற நாங்களும் பழையபடி புலிகளின்
எல்லைக்குள்ளேயே திரும்பி வர வேண்டியதாயிற்று.

“அப்புறம் மற்றொரு
கட்டத்தில்தான் நான் ரிஸீவிங் பாயின்டுக்கு தப்பி வந்தேன். நான் ஒரு
தமிழன். நான் சொல்கிறேன்... இலங்கை ராணுவத்தை விடப் பல மடங்கு கொடியவர்கள்
விடுதலைப் புலிகள். அவர்கள் தலைமையில் ஒரு நாடு அமைந்திருந்தால், அது
சுடுகாடாகத்தான் தமிழர்களுக்கு இருந்திருக்கும். இரக்கமற்ற படுபாவிகள்
அவர்கள்” என்று ஆவேசமாகப் பேசிய அந்த இளைஞரை, நாங்கள் சந்தித்தது
தற்செயலாகத்தான். புதுக்குடியிருப்பு நகரத்தில் ஒரு சின்ன ஜவுளிக் கடையில்
துணி வாங்கிக் கொண்டிருந்த இரு பெண்களிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று
நாங்கள் சென்றபோது, அதே கடை வாசலில் பைக்கில் வந்து இறங்கினார் அந்த
இளைஞர். சுமார் 25 வயது இளைஞர் என்பதால், அவர் தமிழீழத்துக்கு ஆதரவாக
பேசக்கூடும். அவரது கருத்தையும் கேட்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவரிடம்
பேச்சுக் கொடுத்தோம். ஆனால், அந்த இளைஞரோ கொட்டித் தீர்த்து விட்டார்.

“நான் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் ஐடியாவில் இருக்கிறேன். ஆனால்,
புலிகள் மனித வெடி குண்டாக வெடித்தபோது, என் முதுகின் மேற்புறத்தில்
ஏற்பட்ட காயத்தின் தழும்புகள் இன்னமும் இருக்கின்றன. வெளிநாடு
செல்லும்போது, நான் இலங்கைத் தமிழர் என்று யாராவது சந்தேகப்பட்டு என்னைச்
சோதனையிட்டால், இந்த வெடிக்காயங்களைப் பார்த்து, என்னை விடுதலைப் புலி
என்று நினைக்கக் கூடும். எனவே, அந்தப் பகுதியில் பச்சை குத்தியிருக்கிறேன்
பாருங்கள்” என்றபடி எங்கள் காருக்குள் வந்து சட்டையைக் கழட்டி முதுகை
காட்டினார் அந்த இளைஞர். (அவரது எதிர்கால நலன் கருதி, நாங்களே அவரது
பெயரையும் முகத்தையும் தவிர்த்துள்ளோம்.)

நாங்கள் கிளம்பும்போது,
“நீங்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். நான் சொன்னதை நீங்கள்
நம்புகிறீர்களோ இல்லையோ, நான் சொன்னதை நீங்கள் எழுதுவீர்களோ இல்லையோ
தெரியாது. ஆனாலும்... என்ற ஊரில் ஒரு அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு.....
என்ற பெயரில் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் இருக்கிறார். அவரது குடும்பத்தை
மட்டும் தவிர்க்காமல் சந்தித்து விட்டுப் போங்கள்” என்று கூறி வழியனுப்பி
வைத்தார் அந்த இளைஞர்.

உடனே அந்தக் குடும்பத்திடம் அப்படி என்ன
தகவல் இருக்கிறது என்பதை அறியும் ஆசை எங்களுக்குள் எழுந்தது. அந்த ஊரை
நோக்கி காரைச் செலுத்தச் சொன்னோம்.

– எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி
(தொடரும்)

பெட்டிச் செய்திகள்:

1.ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டனவா?

ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் எல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றப்படுகின்றன
என்பது புலி ஆதரவாளர்கள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இது
குறித்து ஒரு பட்டியலையும் சிலர் வெளியிட்டுள்ளனர். இது பற்றி நாங்கள்
அங்குள்ள சிலரிடம் விசாரித்தோம். “இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில்
உள்ள பல ஊர்களுக்கு சிங்களத்திலும் பெயர்கள் உண்டு. புலிகளின்
கட்டுப்பாட்டில் இருந்தபோது, அந்த ஊர்ப் பலகைகள் எல்லாம் தமிழில் மட்டுமே
இருந்தன. தற்போது அரசாங்கம் எல்லா ஊர்களின் பெயரையும் ஆங்கிலம், தமிழ்,
சிங்கள மொழிகளில் எழுதியுள்ளது.

“உதாரணமாக தமிழில் ‘ஆனையிரவு’
என்று சொல்லப்படும் ஊருக்கு ஆங்கிலத்தில் 'Elephant Pass' என்றும்,
சிங்களத்தில் ‘அலிமாண்டுகடுவா’ என்றும் பெயர் உண்டு. எல்லாவற்றிற்குமே
‘யானைகள் கடக்கும் இடம்’ என்றுதான் அர்த்தம். எனவே, மும்மொழிப்
பெயர்களையும் பயன்படுத்தத் துவங்கியுள்ளார்களே தவிர, தமிழ்ப் பெயர்களை
எல்லாம் அழித்து விட்டார்கள் என்பது கொஞ்சம் கூட உண்மையல்ல. ஒரு சில
இடங்களில் மட்டும் புலிகள், தங்களது மாவீரர்கள் பெயரைச் சில நகர்களுக்கும்,
தெருக்களுக்கும் சூட்டியிருந்தனர். அந்தப் பெயர்கள் மட்டுமே முழுமையாக
நீக்கப்பட்டுள்ளன” என்றார்கள் சிலர். நாங்கள் பார்த்த ஊர்களின் பெயர்ப்
பலகைகள் எல்லாம் மூன்று மொழிகளிலும் காணப்பட்டன.

2.இலங்கையில் சீனர்கள் ஆதிக்கம்?

‘சீனர்கள் ஆதிக்கம் இலங்கையில் அதிகமாகி விட்டது?’ என்ற வதந்தி
இந்தியாவில் நிலவுகிறது. இலங்கையில் ஆறு நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம்,
கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி என்று பல
நகரங்களில் சுற்றினோம். மருந்துக்குக் கூட ஒரு சீனர் எங்கள் கண்ணில்
படவில்லை. இது பற்றிக் கொழும்புவில் சிலரிடம் விசாரித்தோம். “மத்திய
இலங்கையையும் வட இலங்கையையும் இணைக்கும் எக்ஸ்பிரஸ் ஹைவே வேலையைச் சீன
அரசாங்கம் செய்து கொடுக்கிறது. அங்கு போனால் அந்த வேலையில் ஈடுபடும்
சீனர்களைக் காணலாம்” என்றார்கள். ஆக, சீன அரசாங்கத்தின் மறைமுக ஆளுமை
இலங்கையில் இருக்கக் கூடும். ஆனால், நேரடியாகச் சீனர்களின் பங்களிப்பு இந்த
அளவுக்குத்தான் இருப்பதாகத் தெரிகிறது.

3.இன அழிப்பு முயற்சியா?

இலங்கையில் தமிழின அழிப்பு முயற்சி நடந்ததாகத் தமிழகத்தில் பலமான
குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்படுகிறது. அது பற்றி ஈழ மக்கள் ஜனநாயகக்
கட்சிப் பிரமுகர் ஒருவர் கருத்துக் கூறினார். “இங்கு நடப்பது எதையும்
அறியாத தமிழக அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்த தமிழர்கள் திட்டமிட்டுப்
பரப்பும் வதந்திகளை எல்லாம் அப்படியே நம்புகிறார்கள். இன அழிப்பு என்றால்
சரணடைந்த 12 ஆயிரம் புலிகளை ராணுவம் கொன்றிருக்கலாம். கிழக்கு மாகாணமும்,
யாழ்ப்பாணமும் எப்போதோ புலிகள் வசமிருந்து ராணுவத்தின் வசம் வந்துவிட்டன.
அங்கெல்லாம் தமிழர்களை ராணுவம் கொன்று போட்டிருக்கலாம். ஆனால்,
அப்படியெல்லாம் நடக்கவில்லை. இறுதிக் கட்டப் போரின்போது சுமார் 3 லட்சம்
தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களை
எல்லாம் ராணுவம் கொன்று அழித்து விடவில்லை. புலிகளோடு நடந்த யுத்தத்தில்,
அவர்கள் அரணாக நிறுத்தி வைத்த பொதுமக்களில் பலர் இறந்ததைத் தவிர, ராணுவம்
பிற பகுதி தமிழர்கள் யாரையும் வேண்டுமென்றே திட்டமிட்டு அழிக்கவில்லை.
பிறகு எப்படி இது இன அழிப்பாகும்?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலங்கையில் துக்ளக்-3 Empty இலங்கையில் ‘துக்ளக்’ - 7

Post by மாலதி Thu May 30, 2013 10:04 pm

முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?

[You must be registered and logged in to see this image.]
இலங்கையில் ‘துக்ளக்’ - 7

இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி செய்திகள் சேகரித்த நமது நிருபர்கள்
எஸ்.ஜே.இதயா மற்றும் ஏ.ஏ.சாமி ஆகியோர் இந்த இதழில் புதுக்குடியிருப்பு,
முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்....


புதுக்குடியிருப்பு நகரில் எங்களுக்குப் பேட்டியளித்த இளைஞர், ஒரு
ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்தைச் சந்திக்கச் சிபாரிசு செய்ததால், அந்தக்
குடும்பத்தைத் தேடிக் கிளம்பினோம். வழியில் வேறு பலரையும் சந்தித்துப்
பேசியபடியேதான் போனோம். ஒரு தேநீர் விடுதியில் நாங்கள் சந்தித்த சுமார்
எழுபது வயதுப் பெரியவர் சொன்ன கருத்து குறிப்பிடத்தக்கது.

“போர்
ஆரம்பித்த காலத்தில் நாங்களே பொடியன்களைத் (இளைஞர்களை) தட்டிக் கொடுத்தது
உண்மை. ஆனால், காலப்போக்கில் உயிரிழப்புகள் அதிகமாக, அதிகமாக வேதனை எங்களை
வாட்டத் துவங்கி விட்டது. எத்தனையோ பேச்சு வார்த்தைகளில் அரசியல் தீர்வு
ஒன்றைப் பெற்று, புலிகள் போரை நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர்கள் கடைசி
நாள் வரை அதற்குத் தயாராக இல்லாமல் போய் விட்டார்கள். இதனால் கொத்து
கொத்தாகத் தமிழர்கள் பலியாக வேண்டியதாயிற்று. இலங்கை ராணுவம் விமானம் மூலம்
குண்டுகளை வீசி தமிழர்கள் பலரைக் கொன்றது உண்மை. ஆனால், புலிகள்
நினைத்திருந்தால் அதைத் தவிர்த்திருக்க முடியும். ‘எங்களுக்குத் தனி நாடே
வேண்டாம். எங்களை விடுங்கள். நாங்கள் எங்காவது போய் பிழைத்துக் கொள்கிறோம்’
என்று எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் இயக்கத்தின் காலில் விழுந்து
அழுதிருக்கின்றன. ஆனால், அவர்கள் மக்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
அதனால்தான் சாவு எண்ணிக்கை அதிகமானது.

“நீங்கள் எல்லாம்
போங்கள்.... ராணுவமா, நாங்களா என்று பார்த்து கொள்கிறோம்’ என்று புலிகள்
எங்களையெல்லாம் வெளியே அனுப்பி, சவால் விட்டிருந்தால், அது வீரப்
போராட்டமாக இருந்திருக்கும். இவ்வளவு மக்கள் அழிந்திருக்க மாட்டார்கள். அதே
நேரம், போரும் எப்போதோ முடிந்து போயிருக்கும். ஆனால், புலிகள்
வலுக்கட்டாயமாக, மக்களைத் தங்களுக்கு அரணாக வைத்திருந்ததால்தான், பல்வேறு
நாடுகள் இலங்கை ராணுவத்திற்குப் பல உதவிகள் செய்த நிலையிலும், இந்தப் போர்
இத்தனை ஆண்டுகள் நீடித்தது. மக்கள் அரண் இல்லாமல் போயிருந்தால், புலிகளை
இலங்கை ராணுவம் எப்போதோ ஒடுக்கி இருக்கும்.

“தங்கள் பிடியில்
இருந்த பகுதிகளைச் சுற்றி புலிகள் கண்ணி வெடிகளைப் பதித்து விட்டனர்.
தங்கள் பகுதிகளில் புலிகளே வரிவசூல் செய்தனர். ஆனால், அரசாங்கம் அந்த
பகுதியைச் சுற்றிலும் ராணுவத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு, அந்த ராணுவ
வீரர்களுக்கு மட்டுமல்லாமல், புலிகள் பகுதியிலுள்ள எங்களுக்கும் உணவு
அனுப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் அனுப்ப வேண்டும் என்றால்
எத்தனை ஆண்டுகளுக்குத்தான் செய்வார்கள்? பல தமிழர் அமைப்புகள் அரசியல்
தீர்வை நோக்கி நகர்ந்தபோது, புலிகளும் அப்படி நகர்ந்திருக்க வேண்டும்.
இப்போது ராணுவத்தை மட்டும் குறை சொல்லிப் புலம்புவதில் அர்த்தமில்லை”
என்றார் அவர்.

அவர் குடும்பத்தில் எல்லோருமே போரில் இறந்துபோன நிலையில், அவர் மட்டுமே தனிமையில் வசிப்பதாகச் சொன்னபோது கலக்கமாக இருந்தது.

புதுக் குடியிருப்பு நகருக்கு வெகு அருகில்தான், விடுதலைப் புலிகள்
இயக்கத் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த பங்கர் (பாதாள) வீடு இருக்கிறது. அந்த
வீட்டைப் பார்வையிடச் சென்றோம். காட்டில் அடர்ந்த மரங்களை வெட்டி ராணுவம்
தற்போது பாதை அமைத்துள்ளது. இரு புறங்களிலும் கம்பி வேலி கட்டி கண்ணி
வெடிக்கான எச்சரிக்கைப் பலகைகளையும் நட்டு வைத்துள்ளனர். பிரபாகரன் வாழ்ந்த
அந்த வீட்டை, கேன்டீன் மற்றும் டாய்லெட் வசதிகளோடு தற்போது சுற்றுலாத்
தலமாக மாற்றியுள்ளது இலங்கை அரசு. நாங்கள் சென்றபோது, ஒரு பள்ளிக்கூடத்துக்
குழந்தைகள் பஸ்ஸில் வந்து அந்த வீட்டைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாண தமிழ்க் குடும்பத்தினர் சிலரும் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

மேலே ஒரு பெரிய ஹால் போல சும்மா இருக்கிறது ஒரு வீடு. டார்க் பச்சை
மற்றும் லைட் பச்சை நிறங்களில் சின்ன சின்ன பிட் துணிகள் கொண்டு
பொறுமையாகத் தொடுக்கப்பட்ட ஒரு வலை, அந்த வீட்டின் கூரை மீது விரித்து
விடப்பட்டிருக்கிறது. (மேலே இருந்து பார்த்தால் மரம் மற்றும் புதர் போல்
தெரியுமாம்.) அந்த ஹாலுக்குக் கீழே பூமிக்குள் மூன்று தளங்களில் இருக்கிறது
பிரபாகரனின் வீடு. காரை கீழேயே ஓட்டிச் சென்று ‘பார்க்’ செய்யும் வகையில்
அண்டர் க்ரௌண்ட் கார் பார்க்கிங்கும் இருக்கிறது. குண்டு விழுந்தாலும்
இடியாத வண்ணம், பூகம்பம் வந்தாலும் உடையாத வண்ணம், பூமிக்குள் இருக்கும்
அந்த வீட்டின் சுவர்கள் ஒவ்வொன்றும் மூன்றடி கனத்தில் உள்ளன.


வழக்கமான படிக்கட்டுப் பாதை போக, அவசரத்திற்கு தப்பித்து வெளியே செல்ல,
கீழே உள்ள மூன்றாவது தளத்திலிருந்து தனி ஏணிப்பாதை ஒன்றும் உள்ளது.
வீட்டைச் சுற்றி நான்கு இடங்களில் காவல் நாய்களின் கூடாரம். அதை அடுத்து
நான்கு இடங்களில் மனித வெடிகுண்டு காவலாளிகளின் கூடாரம். அதைச் சுற்றி 12
அடி உயரத்திற்கு மின் கம்பி வேலி. அதற்கு வெளியே மேலும் நான்கு காவல்
கூடாரங்கள். அதையடுத்து மற்றொரு கம்பி வேலி. அதற்கு வெளியே பல
மீட்டர்களுக்கு கண்ணி வெடிகளைக் கொண்ட ஏரியா. இவ்வளவு பாதுகாப்புக்கு நடுவே
இருந்திருக்கிறது பிரபாகரனின் அந்தப் பாதாள வீடு.

இதையெல்லாம்
சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கிச் சொல்ல ராணுவ வழிகாட்டி ஒருவர்
நியமிக்கப்பட்டிருக்கிறார். ‘பொதுமக்களும், சாதாரண விடுதலைப் புலிகளும்
வெளியே புல்லட்களுக்குப் பலியாகியபடி இருக்க, அதன் தலைவர் மட்டும் எப்படி
பாதுகாப்பாக இருந்தார் பாருங்கள்’ என்று மக்களுக்கு உணர்த்தவே, இந்தப்
பங்களாவை ராணுவம் சுற்றுலாத்தலமாக்கி இருப்பதை யூகிக்க முடிகிறது.

அதன் பின் நாங்கள் புதுக்குடியிருப்பு நகரிலிருந்து முல்லைத் தீவு
நோக்கிப் பயணமானோம். போகும் வழியில் புறநகர் பகுதியில் (ஏறக்குறைய
இறுதிப்போர் நடந்த பகுதியின் அருகில்), புதுப் புது வீடுகள்
காணப்பட்டதையொட்டி, அங்கு சென்று விசாரித்தோம். ஒரு வீட்டில் கணவன்
இல்லாமல் இரு குழந்தைகளோடு ஒரு பெண் வசித்து வந்தார். அவரோடு பேசினோம்.
“வீடில்லாமல் தவித்த எனக்கு ராணுவமே வீடு கட்டிக் கொடுத்துள்ளது” என்று
குறிப்பிட்ட அவரிடம், போர்க் காலம் குறித்து விசாரித்தோம்.

“போர்
நடந்த காலங்களில் இயக்கத்தில் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்று,
பல வருடங்கள் நான் வீட்டை விட்டே வெளியே போகாமல் இருந்தேன். என் அம்மா ஒரு
மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்து எனக்குத் திருமணம் செய்து வைத்தார்.
திருமணம் ஆனதும் ‘எப்படா கர்ப்பிணி ஆவோம்’ என்று ஆவலாகக் காத்திருந்தேன்.
ஏனென்றால், கர்ப்பிணி என்றால் நான் தைரியமாக வெளியே சென்று வரலாம்.
இயக்கத்தினர் பிடித்துச் செல்ல மாட்டார்கள். நான் சுதந்திரக் காற்றை
சுவாசிக்க முடியும். அதே போல், கர்ப்பம் தரித்து நான்கு மாதங்களுக்குப்
பிறகு வெளியே செல்ல ஆரம்பித்தேன். அப்போதும் இயக்கத்தினர் என்னைத் தடுத்து
நிறுத்தி விசாரித்தனர். கர்ப்பிணி என்று நம்பிய பிறகுதான் அனுப்பி
வைத்தனர்.

குழந்தை பிறந்த பிறகு கைக்குழந்தையுடன் வெளியே
செல்வேன். பிரச்னையிருக்காது. குழந்தை வளர, வளர குழந்தையை என் அம்மாவிடம்
பிடுங்கிக் கொடுத்து விட்டு, என்னை மீண்டும் பிடித்துச் சென்று விடுவார்களோ
என்ற பயம் வந்து விட்டது. இதனால், மீண்டும் கர்ப்பம் தரித்தேன். மீண்டும்
சுதந்திரமாக வலம் வந்தேன். ஆனால், இயக்கத்தினர் என் கணவரைத் தேடத் துவங்கி
விட்டனர். இதனால் அவர் எங்கள் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று
வரை அவர் என்னிடம் வரவில்லை” என்று கண் கலங்கினார்.

அருகில்
இருந்த ஒரு வயதான பெண்மணியிடம் பேசியபோது, “இந்தியாதான் எனது வீட்டைக்
கட்டித் தருகிறது. இலங்கை பணத்தில் 5.5 லட்ச ரூபாய் (இந்திய மதிப்பில்
சுமார் 2.5 லட்சம் ரூபாய்) கொடுக்கிறார்கள். நாங்களே கட்டுமானப் பொருட்களை
வாங்கி, கொத்தனார் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். நாம் கட்டக் கட்ட,
தவணை முறையில் பணம் கொடுப்பார்கள். மணல் விலைதான் அதிகமாக உள்ளது. நாங்களே
சித்தாள் வேலை பார்ப்பதால், இத்தொகைக்குள் கட்ட முடிகிறது. ஆடம்பரமாகக்
கட்ட முடியாது. அடிப்படை வீடு ஒன்றையாவது கட்டிக் கொள்ள முடிகிறதே, அந்த
வகையில் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார் அந்த வயதான பெண்மணி.

இதன் மூலம் ‘இந்தியா தருகிற பணம் கொள்ளை போகிறது’ என்று தமிழகத்தில் சிலர்
வைக்கும் குற்றச்சாட்டும் பொய்யானது என்பது தெரிகிறது. (பார்க்க: பெட்டிச்
செய்தி)

இதையடுத்து, நாங்கள் முள்ளிவாய்க்காலை நோக்கிக்
கிளம்பியபோது, வழியில் தண்ணீருக்கு நடுவே ஒரு பிரம்மாண்டமான நினைவுச்
சின்னம் காணப்பட்டது. போரின் வெற்றியை அறிவிக்கும் வகையில் இலங்கை அரசு
அந்த நினைவுச் சின்னத்தை எழுப்பியுள்ளது. அருகிலேயே, புலிகளிடமிருந்து
கைப்பற்றிய வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் காய்ந்து கருவாடாய்க்
கிடக்கின்றன. அந்த நினைவுச் சின்னத்தை அடுத்து, புலிகளிடமிருந்து
கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்களும், தற்கொலைப் படகுகளும் பொதுமக்களின்
பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இலங்கை குறித்த ஒரு புகைப்படக்
கண்காட்சியும் அங்கு இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக வந்து
பார்வையிடுகிறார்கள்.

இதையடுத்து, நந்திக்கடல் காயல் (லகூன்)
கரையோரமாக முள்ளி வாய்க்கால் பகுதிக்குப் போனோம். வீடுகள் அதிகம்
கண்ணில்படவில்லை. அப்பகுதியின் கடற்கரையில் ஒரு பாழடைந்த கப்பல்
காணப்பட்டது. அருகே ஒரு ராணுவ கேன்டீனும் இருந்தது. அங்கு தேநீர்
அருந்தியபடி, அந்தக் கப்பல் குறித்து விசாரித்தோம். “இந்த இடம்தான் போர்
100 சதவிகிதம் நிறைவுக்கு வந்த இடம். கடைசியாக மிஞ்சியிருந்த ஒரு சில
விடுதலைப் புலிகள், இந்தக் கப்பலுக்குள் ஒளிந்து கொண்டு சுட்டுக் கொண்டே
இருந்தார்கள். அவர்களைக் கொன்று ராணுவம் போரை நிறைவு செய்தது” என்றார்கள்
அங்கிருந்தவர்கள். அந்த கப்பலைப் பற்றி விசாரித்தபோது, “பல ஆண்டுகளுக்கு
முன்பு இலங்கைக் கடல் பகுதியில் ரிப்பேராகி நின்ற இந்த வெளி நாட்டுக்
கப்பலை, விடுதலைப் புலிகள் இழுத்துக் கொண்டு வந்துவிட்டனர். இதிலிருந்த
எஞ்ஜின்கள், இதர பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கழற்றித் தங்களது
படகுகளுக்குப் பயன்படுத்தி வந்தனர்” என்று தெரிவித்தனர்.


இதன்பின், நாங்கள் முல்லைத் தீவுக்குப் போய் அங்கிருந்த தமிழர்கள் சிலரிடம்
பேசினோம். கடைசி நாள் போர் குறித்து அவர்கள் விவரித்தனர்.
“முள்ளிவாய்க்கால் பகுதியில் நாங்கள் புலிகளுடன் சிக்கிக் கொண்டோம்.
அவர்கள் எங்களை வெளியே அனுப்புவதாக இல்லை. ராணுவமோ புதுக்குடியிருப்புப்
பகுதி வழியாகவும், முல்லைத் தீவு வழியாகவும் எங்களை நெருங்கி விட்டது.
இருபுறம் ராணுவம். கீழ்புறம் கடல், மேல்புறம் நந்திக்கடல் காயல். எங்கும்
தப்ப முடியாது. உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே போய் விட்டது. அந்த
நேரத்தில் இலங்கை ராணுவம் எப்படியோ கடல்பகுதிக்கு முன்னேறி வந்து,
அங்கிருந்தபடி புலிகளைத் தாக்கத் துவங்கியது. இதனால் நாங்கள் நந்திக்கடல்
மீதான குறுகிய பாலத்தின் வழியாகத் தப்பி முல்லைத் தீவை நோக்கி ஓடி வந்தோம்.

“முதலில் எங்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவம், பிறகு நாங்கள்
பொதுமக்கள் என்பது தெரிந்ததும் நிறுத்திக் கொண்டது. பலர் துப்பாக்கிச்
சூட்டிற்குப் பயந்து காயலில் விழுந்து தப்பிக்க நினைத்து உயிரிழந்தனர்.
பொதுமக்கள் வெளியேறியதும், ராணுவம் முழுமையாக அந்தப் பகுதிக்குள் புகுந்து
போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. கடைசி நாள் போரில், புலிகளோடு சேர்ந்து
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்து போனாலும், எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான
மக்கள் தப்பித்து இன்று உயிரோடு இருப்பது நம்ப முடியாத அதிர்ஷ்டம்
என்றுதான் சொல்ல வேண்டும்” என்று விவரித்தார்கள் அவர்கள். அந்தச்
சம்பவத்தைப் பற்றிச் சொல்லும்போதே, அவர்கள் கண்களில் ஒருவிதமான பீதியைப்
பார்க்க முடிந்தது.

இதன் பின் நாங்கள், அந்த ஆம்புலன்ஸ் டிரைவரது
குடும்பத்தைச் சந்திக்கச் சென்றோம். கணவன், மனைவி, இரு மகன்கள் அடங்கிய
குடும்பம் அது. மூத்த மகன் இடது காலில் செயற்கைக் கால் பொருத்தியிருந்தார்.
அந்த டிரைவரிடம் நாங்கள் பேச்சுக் கொடுத்தோம். “நான் அரசு வைத்தியசாலையில்
ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணியாற்றுகிறேன். பத்து வருடங்களுக்கும் மேலாக
புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தேன். போரில் காயம்படும் புலிகளை
உடனுக்குடன் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்ப்பது என் பணி. எத்தனையோ
ஆயிரம் புலிகளை அப்படி நான் காப்பாற்றியிருக்கிறேன். எனக்கு இரு ஆண்
குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. அந்தக் குழந்தைகள் வளர வளர, எனக்குப் பயம்
வரத் துவங்கியது. இயக்கத்தினரிடம் சென்று என் குடும்பத்தை வெளியே அனுப்பி
விடுமாறு கெஞ்சினேன். நான் அவர்களுக்குச் செய்த உதவிகளை நினைத்து அவர்கள்
மனமிரங்குவார்கள் என்று நம்பினேன். ஆனால், அவர்கள் உடன்படவில்லை.


“அதன் பின் கொஞ்ச நாள் கழித்து மீண்டும் அவர்களிடம் ‘நான் இங்கு இருந்து
உங்களுக்கு ஊழியம் செய்கிறேன். என் மனைவி, குழந்தைகளை மட்டும் வெளியே
அனுப்பி விடுங்கள்’ என்று கெஞ்சினேன். அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.
மாறாக, என் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, ‘உயிர் மேல் உனக்கு
அவ்வளவு ஆசையா?’ என்று மிரட்டினார்கள். அதன் பின் ஒருநாள் விமானப் படைத்
தாக்குதல் சமயத்தில், பதுங்கு குழியில் என் மனைவியும், குழந்தைகளும் ஒளிய
நேர்ந்தபோது, மண் சரிந்து விட்டதால் என் மகள் உயிரோடு மண்ணில் புதைந்து
இறந்து போனாள்” என்று கண் கலங்கியபடி, தனது செல்ஃபோனிலிருந்த தனது மகளின்
வால்பேப்பர் ஃபோட்டோவைக் காட்டினார்.

“மீண்டும் தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு இயக்கத்தினரிடம் போனேன். நான் இறுதி வரை உங்களோடு
இருக்கிறேன். தயவு செய்து என் குடும்பத்தை மட்டும் வெளியே அனுப்பி
விடுங்கள் என்று கெஞ்சினேன். அவர்கள் என்னைப் பலவந்தமாகத்
துரத்தியடித்தனர். அதோடு மறுநாளே என் வீட்டிற்கு வந்து, என் மூத்த மகனைப்
பார்த்து விட்டு, அவனைத் தங்களோடு அழைத்துச் சென்று விட்டனர். நானும் என்
மனைவியும் அவர்கள் காலில் விழுந்து கெஞ்சினோம். இப்போதுதான் ஒரு மகளை
இழந்திருக்கிறோம். என் மகனை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியபோது,
மறுபடியும் துப்பாக்கியைக் கழுத்தில் வைத்து மிரட்டி விட்டுச் சென்றனர்.
நாங்கள் அழுதபடியே வீட்டில் இருந்தபோது, என்னை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ்
ஓட்ட அழைத்துச் சென்று விட்டனர். இயக்கத்துக்குப் போன என் மகன் ஓரிரு
நாளில் தப்பி வந்து விட்டான். ஆனால், அவனை நாங்கள் ஒளித்து வைக்கும்
முன்பாகவே, மீண்டும் வந்து பிடித்துக் கொண்டு போய் விட்டனர்.


“அடுத்த முறையும் அவன் தப்ப முயன்றிருக்கிறான். அப்போது கோபமாகி அவன்
காலில் சுட்டு விட்டனர். முழங்காலுக்குச் சற்று மேலே பாய்ந்த குண்டு
மறுபுறமாக வெளியே வந்து விட்டது. நானே என் மகனை எனது ஆம்புலன்ஸில்
மருத்துவமனைக்குக் கொண்டு வர வேண்டியதாகி விட்டது. அப்போது இலங்கை அரசின்
ரெட் க்ராஸ் கப்பல் முல்லைத் தீவிற்கு அடிக்கடி வரும். காயம்பட்டவர்களை
அதில் எடுத்துக் கொண்டு போவார்கள். புலிகள்தான் அதற்குப் பாஸ் வழங்கி,
கடும் காயம்பட்டவர்களை ரெட் க்ராஸ் ஆட்களிடம் ஒப்படைப்பார்கள். என் மகன்
சுடப்பட்ட நேரத்தில் ரெட் க்ராஸ் கப்பல் வந்ததால், என் மகனை அவர்களிடம்
ஒப்படைக்கச் சொல்லி இயக்கத்தினரிடம் மன்றாடினேன். ஆனால், அவர்கள் ஒத்துக்
கொள்ளவில்லை. ‘புல்லட் தான் வெளியே வந்து விட்டதே? பிறகென்ன? இங்கேயே
வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறி விட்டனர். ஆனால், இங்கே
பார்த்த வைத்தியம் கைகூடவில்லை. உள்ளே நரம்புகள் அழுகிப் போனதாகக் கூறி,
ஓரிரு நாட்களில் அவனது காலையே வெட்டி எடுத்து விட்டார்கள்.

“நான்
அழுது ஆர்ப்பாட்டம் செய்தேன். அதன் பிறகு எனது மனைவியையும், எனது இளைய
மகனையும் மட்டும் கப்பலில் அனுப்பி வைக்கச் சம்மதித்தனர். அவர்கள்
வெளியேறினார்கள். போரின் இறுதி கட்டத்தில்தான் நான் என் மூத்த மகனைத்
தூக்கிக் கொண்டு ரிஸீவிங் பாயின்ட்டிற்கு ஓடி ராணுவத்திடம் தஞ்சம்
புகுந்தேன். விடுதலைப் புலிகள் மாதிரி அரக்கர்களை உலகில் எங்கும் பார்க்க
முடியாது. அவர்கள் தலைமையில் ஒரு தனி நாடு அமைந்திருந்தால், அதுதான்
உலகத்திலேயே கொடூரமான நாடாக அமைந்திருக்கும்” என்றார் அந்த ஆம்புலன்ஸ்
டிரைவர் ஆக்ரோஷமாக. “தோற்கப் போகிறோம் என்று உணர்ந்த நாள் முதலே, அவர்கள்
மிருகத்தனமாக மாறி விட்டார்கள்” என்றார் அவரது துணைவியார். அந்தக் காலை
இழந்த இளைஞன் இன்னமும் மன அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளவில்லை.

இப்படித்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக, வட மாகாணத்தின் பல பகுதிகளில்
பல சோகக் கதைகள் வெடித்து வருகின்றன. ஆனால், இந்த உண்மைகளை முதலில்
உள்வாங்கிக் கொள்ள மறுக்கும் சிலர், உடனே ‘அப்படியானால் இலங்கை ராணுவ
வீரர்கள் எல்லாம் உத்தமர்களா?’, ‘ராஜபக்ஷ என்ன மகாத்மாவா?’ என்றுதான் அவசர
அவசரமாகக் கேள்வி எழுப்புகிறார்கள். ‘ராஜபக்ஷ அரசு மீது எந்தத் தவறுமே
இல்லையா?’ என்ற கேள்விக்கு அடுத்த இதழில் பதில் தேடுவோம்.

– எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி
(தொடரும்)

பெட்டி செய்தி:

இந்தியா தரும் பணத்தில் ஊழலா?

‘இலங்கைத் தமிழர் புதிதாக வீடு கட்டிக் கொள்வதற்காக இந்தியா கொடுக்கும்
பணத்தை இலங்கை அரசு சூறையாடுகிறது. அந்தப் பணத்தில் சிங்களருக்கு வீடு
கட்டிக் கொடுக்கப்படுகிறது. அந்தப் பணத்தை வேறு தேவைக்களுக்கு இலங்கை அரசு
பயன்படுத்துகிறது’ என்றெல்லாம் இங்கு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
இது குறித்து நாங்கள் இந்தியத் தூதரக வட்டாரத்தில் விசாரித்தோம். “முதலில்
ஆயிரம் பேருக்கு மட்டும் ஒரு ஏஜென்ஸி மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு
செய்யப்பட்டது. அதன் பிறகு, அதில் பலவிதமான குற்றச்சாட்டுகள் எழ
வாய்ப்பிருந்ததால், நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிலேயே 5.5 லட்ச
ரூபாயை படிப்படியாக வரவு வைக்க முடிவு செய்யப்பட்டு விட்டது. அதன்படி,
தற்போது இந்திய அரசே நேரடியாக தமிழ் பயனாளிகளுக்கு பணம் கொடுக்கிறது. இதில்
எந்த ஊழலோ, லஞ்சமோ, தரக் குறைவோ ஏற்பட வாய்ப்பே இல்லை’‘ என்றார் ஒரு தூதரக
அதிகாரி. அதே போல், இந்தியா அமைத்துக் கொடுக்கும், ரயில் பாதையையும்
இந்திய ஒப்பந்தக்காரரைக் கொண்டே செய்யப்படுகிறது. இலங்கை அரசிடம் பணத்தை
நேரடியாகக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சீனாவும் தனது தரப்பு
உதவியான நெடுஞ்சாலை அமைக்கும் பணியை, தங்கள் நாட்டு ஒப்பந்தக்காரர் மூலம்,
தனது ஊழியர்களைக் கொண்டே செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலங்கையில் துக்ளக்-3 Empty Re: இலங்கையில் துக்ளக்-3

Post by mmani Fri Jun 07, 2013 9:47 pm

தமிழர்களை திருப்திபடுத்தாத இலங்கை அரசு!

இலங்கையில் ‘துக்ளக்’ - 9

இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி, செய்திகள் சேகரித்த நமது நிருபர்கள்,
எஸ்.ஜே. இதயா மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர் இலங்கையில் தாங்கள்
பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்....


இலங்கை அதிபர் ராஜபக்ஷ குறித்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில்
பிரதானமானது, ‘உலகப் போர் தர்மங்களுக்கு மாறாக ஏராளமான பொதுமக்களை அவர்
கொன்று குவித்தார்’ என்பது. நாங்கள் சந்தித்த பொதுமக்களிடம் இது குறித்துக்
கேட்டோம்.

விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டபோது, ஏராளமான
அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை அவர்கள் உறுதி செய்தனர். ஆனால் அவர்களில்
பெரும்பாலோர் “போர் என்று வந்த பிறகு அவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க
முடியும்? ‘எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, புலிகளை மொத்தமாக அழித்து
வன்னியை மீட்டெடுக்க வேண்டும்’ என்று ராணுவம் முடிவெடுத்த பிறகு, நாங்கள்
வன்னியை விட்டு வெளியேறி ஓடி விடத்தான் ஆசைப்பட்டோம். ஆனால், புலிகள்
மக்களை விடாததுதான் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் அழிவுக்குப் பிரதானமான
காரணம்.

“விமானம் மூலம் ராணுவம் குண்டு வீசும்போது, உயிருக்குப்
பயந்து பதுங்கு குழிகளில் ஒளிந்த மக்கள், விமானம் போனதும் வெளியே வந்து
புலிகளிடம்தான் தங்கள் ஆத்திரத்தைக் காட்டுவார்கள். ‘எங்களை வெளியே செல்ல
அனுமதி’ என்று அவர்களிடம் கோபப்படுவார்கள். அவர்களோ, ‘விலகி ஓடு. இல்லையேல்
சுட்டு விடுவோம்’ என்று பதிலுக்கு ஆக்ரோஷமாகக் கத்துவார்கள். சிலரை
சுட்டும் தள்ளியிருக்கிறார்கள். எனவே ராணுவத்தை விட புலிகள் மீதான
ஆத்திரம்தான் வன்னிப் பகுதி மக்களுக்கு அதிகம்” என்கிற ரீதியில் கருத்து
தெரிவித்தனர்.

ஒரு சாரார் இன்னொரு விதமாகக் கருத்து தெரிவித்தனர்.
“விடுதலைப் புலிகளை ஆதரிக்காத பொதுமக்கள் கூட, புலிகளிடம் பிணைக் கைதிகளாக
இருந்தனர். அப்போது ஒரு அரசாங்கம் பொறுமையாகத்தான் செயல்பட்டிருக்க
வேண்டும். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளே இருக்கிறார்கள்
என்று தெரிந்த பிறகும், விமானப் படை மூலம் குண்டு வீசுவது வரம்பு மீறிய
செயல். புலிகள் மூன்று லட்சம் சிங்களர்களை இப்படி பிணைக் கைதிகளாக
வைத்திருந்தால், ராணுவம் இவ்வளவு ஈஸியாக குண்டுகளை வீசியிருக்குமா?
தமிழன்தானே... எவ்வளவு பேர் சாகிறார்களோ, அந்தளவுக்குத் தொல்லை குறையும்
என்ற மனோபாவம் அரசுக்கு இருந்ததால்தான், இவ்வளவு தமிழர்கள் அநியாயமாக
இறந்து போனார்கள். சுமார் முப்பது ஆண்டுகள் போரைச் சந்தித்த ராணுவம்,
இன்னும் ஓரிரு ஆண்டுகள் பொறுமையாகப் போரிட்டு அப்பாவி மக்களைப் படிப்படியாக
வெளியேற்ற முயற்சி செய்திருக்க வேண்டும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

முன்னாள் பெண் புலிகளிடம் நாங்கள் இதுகுறித்துப் பேசியபோது, “இரு பக்கமும்
தீவிரமான போர் அணுகுமுறைகள் இருந்தன. இரு பக்கமும் இழப்புகள்
ஏற்பட்டுவிட்டன. இதில் யாரைக் குறை சொல்ல முடியும்? நாங்கள் ராணுவத்தைக்
குறை சொன்னால், அவர்கள் இயக்கத்தைதானே குறை சொல்வார்கள்?” என்று கேள்வி
எழுப்பினார்கள்.

‘ரசாயன குண்டுகளை ராணுவம் வீசியது’ என்ற
குற்றச்சாட்டு குறித்து இறுதிப்போரில் உயிர் தப்பியவர்களிடம் விசாரித்தோம்.
அவர்களுக்கு அது பற்றிய தெளிவில்லை. “குண்டுகள் விழும். சிலர் சாவார்கள்.
சிலர் உயிர் தப்பிப்போம். அது எத்தகைய குண்டுகள் என்று ஆராயவா
நேரமிருக்கும்? இறந்தவனைக் கட்டிக் கொண்டு அழுவதற்கே நேரம் போதாது” என்று
கண் கலங்கினர்.

இந்தப் போர்க்குற்றம் குறித்த
குற்றச்சாட்டுகளுக்கு அடுத்ததாகச் சொல்லப்படும் பெரிய குற்றச்சாட்டு,
இன்னும் தமிழர்களை ரீசெட்டில் செய்ய மனமில்லாமல், அவர்களை இரண்டாம்தர
குடிமக்களாக நடத்த முற்படுகிறது இலங்கை அரசு என்பது.

இதுகுறித்து
சில பிரபலங்களிடம் பேசினோம். தினக்குரல் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் இது
குறித்து எங்களிடம் பேசினார். “புலிகளின் போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழர்
போராட்டமாகத்தான் பார்த்தன இலங்கை அரசாங்கங்கள். போர்க்குற்றம் என்பது இந்த
ஆட்சியில்தான் என்றில்லை. எல்லா ஆட்சிகளிலுமே இருந்து கொண்டுதான் இருந்தன.
தற்போது இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் இறந்து போனார்கள்
என்பதைத்தான் பெரிதாகப் பார்க்கிறோம். ஆனால், 30 வருட காலத்தில் இறந்து போன
தமிழர்களின் எண்ணிக்கை ஏராளம். இன்று ஜெனிவாவில் அமெரிக்க தீர்மானத்தை
ஆதரித்த அத்தனை நாடுகளுமே, ஒரு காலகட்டத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க
உதவுகிறோம் என்று இலங்கை ராணுவத்திற்கு உதவிய நாடுகளே! சர்வதேச
அரசாங்கங்கள் தத்தம் அரசியலை மனதில் வைத்துக் கொண்டுதான் இலங்கை விஷயத்தை
அணுகுகின்றன. இது நன்கு தெரிந்தாலும், அவர்களின் நன்மையில் நமக்கும் ஒரு
நன்மை கிடைத்தால் நல்லது என்ற கோணத்தில்தான் அவற்றை நாங்கள் வரவேற்கிறோம்.

“அன்று உதவி செய்த நாடுகள்தான் இன்று போர்க்குற்றம், மனித உரிமை என்று
இலங்கை அரசுக்கு எதிராகக் குற்றம் சுமத்துகின்றன. இதற்கு என்ன காரணம்?
இலங்கை அதிபர், அவர்களுக்கும் உண்மையாயில்லை என்றுதான் யூகிக்க முடிகிறது.
2008-ல் கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றங்களை நடத்தி, ஓரிரு
மாதங்களிலேயே அங்கு தேர்தலை நடத்தியது இலங்கை அரசு. ஆனால், போர் முடிந்து
நான்கு ஆண்டுகள் ஆகியும் வடமாகாணத்தில் இன்னும் ஏன் தேர்தலை நடத்தவில்லை?
காரணம் அங்கு ஆளும் கட்சி ஜெயிக்க வாய்ப்புக் குறைவு. 2009-ல் போர்
முடிந்து இந்த நான்கு ஆண்டுகளில் தமிழர்களின் மனதை வென்றெடுக்க, ஆளும் அரசு
எதையும் செய்து விடவில்லை. ஒரு குறைந்தபட்ச அரசியல் தீர்வுக்குக் கூட அரசு
முன்வரவில்லை. நான் ஜெயித்து விட்டேன். இனி நான் சொல்கிறபடிதான் நீ நடக்க
வேண்டும் என்ற மனோபாவம்தான் அரசிடம் இருக்கிறது.

“போர் வெற்றியை
சிங்கள இன வெற்றியாகக் காட்டிக் கொண்டார் எங்கள் அதிபர். சிங்கள இயக்கங்கள்
ஒரு அரசின் வெற்றியை தங்கள் இன வெற்றியாகக் கொண்டாடித் தீர்த்தன.
வாக்குகளுக்காக, தமிழனை வீழ்த்தி விட்ட இமேஜை சிங்கள மக்களிடையே
விதைக்கிறார் அதிபர். இது பேரினவாதச் சிந்தனை. பொதுபல சேனா என்ற பௌத்த
அமைப்பு சமீப காலமாக சர்ச்சைகளில் அடிபடுகிறது. தமிழர்களுக்கு எதிராகவும்,
இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் அந்த அமைப்பு
சச்சரவுகளைக் கிளப்புகிறது. அரசாங்கம் அந்த இயக்கத்தை ஆதரிக்கிறது என்று
நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. ஆனால், அந்த இயக்கத்தின் கோரிக்கைகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து, அரசு உடனுக்குடன் ஏற்றுக் கொள்கிறது. இது
நல்லதல்ல.

“இந்தியாவும் இலங்கையும் கலாச்சார, பண்பாட்டு ரீதியாக
மட்டுமல்லாமல், உணர்வு ரீதியாகவும் பிணைக்கப்பட்ட நாடுகள். தொப்புள் கொடி
உறவு உள்ளதால், இந்தியா எந்த நேரமும் தலையிடும் என்ற பயம் இலங்கைக்கு
இருக்க வேண்டும். இன்று மன்மோகன் சிங் இந்த விஷயத்தில் தலையிடாமல்
இருக்கலாம். ஆனால், மீண்டும் இந்திரா, ராஜீவ் மாதிரி ஒரு பவர்ஃபுல் தலைவர்
வரும்போது, இந்தியா தலையிட்டு தமிழர்களுக்குச் சம உரிமையையும், அதிகாரப்
பகிர்வையும் பெற்றுத் தர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.


“அதே நேரம் இங்கு இலங்கையில் ஒரு மகாத்மா காந்தி, ஒரு நெல்சன் மண்டேலா
போன்ற தன்னலமற்ற நல்ல தலைவர் தமிழனுக்கு அமையாமல் போனது எங்களின்
துரதிர்ஷ்டம். புத்திஜீவிகள், கல்விமான்களின் தலைமை கிடைக்காமல்,
மலட்டுத்தனமான, வீரியமற்ற தலைமைகள் தமிழனுக்கு அமைந்து விட்டன. அதன்
விளைவுகளைத்தான் இலங்கைத் தமிழர் அனுபவித்து வருகின்றனர்” என்றார்
வீ.தனபாலசிங்கம்.

கொழும்புவில் உள்ள ஆர்.யோகராஜன் எம்.பி.யிடம்
இதுகுறித்து நாங்கள் பேசினோம். “நான் தொண்டைமான் அவர்களின் இலங்கை
தொழிலாளர் காங்கிரஸில்தான் நீண்ட காலம் இருந்தேன். அவர்கள் ஆளும் கட்சிக்கு
ஆதரவான நிலை எடுத்ததும், ‘ராஜபக்ஷ என்ற இனவாதியால் தமிழர் விஷயத்தில்
நியாயமாகச் செயல்பட முடியாது’ என்று நான் முடிவெடுத்து, 2009-ல் அந்தக்
கட்சியை விட்டு வெளியேறி ரனில் விக்ரமசிங்கவின் கட்சியான ஐக்கிய தேசியக்
கட்சியில் இணைந்தேன். கொழும்பு நகரில் போட்டியிட்டு தற்போது எம்.பி.யாகவும்
இருக்கிறேன். 2005-ல் தமிழர்கள் எல்லாம் ரனில் கட்சிக்கு வாக்களிக்கும்
எண்ணத்தில் இருந்தபோது, புலிகள் தமிழர்களைத் தேர்தல் புறக்கணிப்பு செய்ய
வைத்தனர். ராஜபக்ஷ திறமைசாலி இல்லை, அவர் ஜெயித்தால் ஈஸியாய் வீழ்த்தி
விடலாம் என்று புலிகள் கணக்குப் போட்டு விட்டனர். 30 ஆண்டுப் போரில் சுமார்
70 ஆயிரம் உயிர்கள் போய் விட்டன. ஆனால், அந்தப் போரினால் பலனேதும்
இல்லாமல் போய் விட்டது.

“போர் நடந்த காலத்தில் சர்வ கட்சிப்
பிரதிநிதிகள் குழுவொன்று அமைக்கப்பட்டு 13- ஆவது சட்ட திருத்தத்தை எப்படி
அமல் செய்யலாம் என்று ஆராயப்பட்டது. ஆனால், போர் முடிவுக்கு வந்ததும்
அந்தப் பரிந்துரைகளைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டார் ராஜபக்ஷ.
சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் வீடுகளை இழந்து
விட்டனர். பல நாடுகள் உதவி செய்தும் இன்னமும் அரசாங்கம் துரிதகதியில்
வீடுகளைக் கட்டித் தரவில்லை. இன்னும் 1 லட்சத்து 23 ஆயிரம் வீடுகளைக் கட்ட
வேண்டும் என்று அரசாங்கமே சொல்கிறது. அரசின் இந்தத் தாமதம் குறித்து நான்
நாடாளுமன்றத்தில் விவாதித்தேன். ‘30 ஆண்டுகள் போர் நடந்துள்ளது. உடனே சரி
செய்து விட முடியாது’ என்று அமைச்சர் குறிப்பிட்டார். பதிலுக்கு நான் ‘30
ஆண்டுகள் போர் நடந்தது என்பதற்காக மீள் குடியேற்றத்துக்கும், 30 ஆண்டுகள்
காத்திருக்கச் சொல்ல முடியாது. சில நிமிட சுனாமியில் பேரழிவு ஏற்பட்டது.
சில நிமிடங்களில் அதைச் சரி செய்து விட முடியாது என்றாலும்,
மூன்றாண்டுகளுக்குள் மறு கட்டுமானம் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், தமிழர்
பகுதிக்கு மட்டும் ஏன் இவ்வளவு நாட்களை எடுத்துக் கொள்கிறீர்கள்’ என்று
வாதிட்டேன்.

“இப்போது தமிழர் வேண்டுவதெல்லாம், இந்தியாவில்
தமிழ்நாடு உள்ளதுபோல் அதிகாரம் பொருந்திய மாகாணசபை ஒன்றைத்தான். பிற
மாகாணங்களில் இருக்கும் இந்திய வம்சாவழி தமிழர்களுக்கும் சம உரிமை
வேண்டும். இதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் தேவை”
என்றார் அவர்.

வீ.ஆனந்தசங்கரி இதுகுறித்து எங்களிடம்
குறிப்பிட்டபோது, “போர் வெற்றியைக் கொண்டாடிய அதிபர் ராஜபக்ஷ, ‘புலிகள்
கேட்டதை நான் தராவிட்டாலும், டக்ளஸ் தேவானந்தாவும், ஆனந்த சங்கரியும்
கேட்டதையாவது நான் தர வேண்டாமா? அதை நான் நிச்சயம் தருவேன். சிங்கள
மக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று
குறிப்பிட்டார்.

ஆனால், இன்னும் எதையும் செய்து தர அவர்
முன்வரவில்லை” என்று குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் அரசியல் ரீதியான
கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். ஆனால், அப்பாவி பொதுஜனம் பொருளாதார
முன்னேற்றமும், நிம்மதியான வாழ்க்கையும் அமைந்தால் போதும் என்ற
மனோபாவத்திலேயே கருத்து தெரிவித்தனர்.

புலிகள் ஆதரவாளர்கள்,
‘துரோகி’ என்ற முத்திரையை, எத்தனையோ தமிழ் தலைவர்கள் மீது
குத்தியிருக்கிறார்கள். அதில் அவர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளானவர்
புலிப்படையின் முன்னாள் தளபதி கருணா. தற்போது இலங்கையின் நியமன
எம்.பி.யாகவும், தமிழர் மீள் குடியேற்ற இணை அமைச்சராகவும் இருக்கும் விநாயக
மூர்த்தி முரளிதரனுக்கு, இயக்கம் சூட்டிய பெயர்தான் கருணா. ‘புலிகள்
இயக்கத்தில் சேர்ந்தது ஏன்? விலகியது ஏன்?’ என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு
அவர் அளித்த பதில்கள் அடுத்த வாரம்.
– எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி
(அடுத்த இதழில் முடியும்)

பெட்டிச் செய்திகள்:

‘உதயன்’ மீது தொடரும் தாக்குதல்கள்!

புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பு நாளிதழான
‘உதயன்’ மீது தாக்குதல் நடப்பது இலங்கையில் வாடிக்கையாக உள்ளது. அடிக்கடி
இந்த நாளிதழின் அலுவலகம், அச்சுக்கூடம், விநியோகஸ்தர்கள் தாக்கப்பட்டு
வருகின்றனர். இந்த நாளிதழைக் கொளுத்தும் போராட்டமும் அவ்வப்போது நடந்து
வருகிறது. “உதயன் நாளிதழ் மீது இதுவரை சுமார் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதுகுறித்து ஒவ்வொரு முறையும் போலீஸில் புகார் தருகிறோம். ஆனால், அரசு
இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. எனவே இந்தத் தாக்குதல்கள் அரசு
ஒத்துழைப்புடனே நடப்பதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது” என்று எங்களிடம்
குறிப்பிட்டார் அந்தப் பத்திரிகையின் உரிமையாளரும், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு எம்.பி.யுமான சரவணபவன்.

ஒவ்வொரு முறை, உதயன் மீது
தாக்குதல் நடக்கும்போதும், ‘இது சிங்கள வெறியர்களின் செயல். ராணுவத்தினரின்
செயல்’ என்றே ‘உதயன்’ குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், அங்கிருக்கும்
சிலர் அதை மறுக்கிறார்கள். “கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும்
சிங்களர்கள் வந்து தாக்குதல் நடத்த வாய்ப்புக் குறைவு. இந்தத் தாக்குதல்கள்
தமிழர்களாலேயே நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம். காரணம் - ‘உதயன்’
பத்திரிகை ஆதாரம் ஏதுமில்லாமல், வரம்பு மீறி ஆளுங் கட்சிக் கூட்டணித்
தலைவர்களை விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

“ராஜபக்ஷ
அரசாங்கத்தைக் குறை சொல்வதை விட, அவருக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழ்
அரசியல்வாதிகளைத் திட்டமிட்டு அசிங்கப்படுத்த முனைவது உதயனின் வழக்கம்.
இதனால் பல முறை தமிழர் பகுதிகளில், தமிழர்களாலேயே ‘உதயன்’ எரிக்கப்பட்டு
இருக்கிறது. தங்களுக்குப் போட்டி என்று நினைக்கும் தமிழர் தலைவர்களை
அசிங்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால்தான், அடிக்கடி அந்தப்
பத்திரிகை சர்ச்சைக்குள்ளாகிறது” என்கிறார்கள் அவர்கள்.

“அந்தப்
பத்திரிகையை தமிழர் எழுச்சிக்காகவோ, தமிழர் நலனுக்காகவோ அவர்கள்
நடத்தவில்லை. பிற தமிழ்த் தலைவர்களை அசிங்கப்படுத்துவதற்கும், குறை
கூறுவதற்காகவுமே நடத்துகிறார்கள். முழுக்க முழுக்க வியாபார நோக்கில்
செயல்படுகிறது ‘உதயன்’ என்கிறார் ஆனந்த சங்கரி.

இருந்தாலும்,
வழக்கு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஒரு பத்திரிகை
அலுவலகத்தை அடிக்கடி தாக்குவது என்பது கண்டிக்கத்தக்க செயலே. அது குறித்து
நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையே!

ரிஸ்க் எடுத்த ராணுவ வீரர்கள்!

பொதுமக்கள் கொலை குறித்து, ராணுவ அதிகாரி ஒருவரிடம் நாங்கள் பேசிய போது
அவர் தந்த விளக்கம் இது: “ராணுவ வீரர்கள் எல்லோருமே கொடுங்கோலர்கள் இல்லை.
அதிலும் பெரும்பாலானோர் அமைதியை விரும்புகிறவர்கள், பக்திமான்கள், கொலைக்கு
அஞ்சுபவர்கள் இருக்கிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஒரு ஊரைக்
கைப்பற்றும்போது, அந்த ஊரில் காலியாகக் கிடக்கும் அத்தனை கட்டிடங்களிலும்
ராணுவம் புகுந்து யாரும் இருக்கிறார்களா, ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று
பார்க்க வேண்டும். அப்பகுதியில் இருக்கும் ஹிந்து கோவில்களுக்குள்ளும்
அவர்கள் சென்று சோதனையிட வேண்டும். சொன்னால் நம்ப மாட்டீர்கள்...
பெரும்பாலான வீரர்கள் வெளியே தங்கள் ஷுக்களை விட்டுவிட்டுத்தான் உள்ளே
சென்று சோதனையிடுவார்கள்.

“பயங்கரவாதிகள் மனதளவில் எந்தக்
கொடூரத்தைச் செய்வதற்கும், சந்திப்பதற்கும் தயாராக இருப்பார்கள். மனித
வெடிகுண்டாக வெடித்துச் சிதறவும் அவர்கள் தயாராக இருப்பார்கள். ஆனால்,
ராணுவ வீரர்களிடம் அந்த மனோபாவத்தை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தன்னோடு
பணிபுரிந்து வரும் சக ராணுவ வீரர் இறந்து போனால் கூட, ஒரு ராணுவ வீரர்
மனம் நொந்து அழத் துவங்கி விடுகிறார். அவருக்கு கௌன்ஸிலிங் கொடுத்துத்தான்
சரி செய்ய வேண்டும்.

“தூரத்திலிருந்து சுடுவது வேறு; ஒருவனைப்
பிடித்து வைத்து, கையை கட்டி, தலையில் சுடுவது வேறு. இன்டர்நெட்டில் பல
வீடியோக்கள் அப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளன. இலங்கை ராணுவத்தில்
பணிபுரியும் பெரும்பாலான வீரர்களுக்கு அந்தளவு மனோபலம் கிடையாது என்பதே
உண்மை. அப்படி ஒரு மனித உயிரைப் பறித்தால், அது தெய்வ குற்றமாகி விடும்
என்று கருதுபவர்களே அதிகம். காரணம், அவர்கள் எல்லாம் வெறியூட்டப்பட்ட
பயங்கரவாதிகள் இல்லை. மாதச் சம்பளத்திற்குப் பணிபுரியும் அரசாங்க
ஊழியர்கள். போரின்போது ராணுவத்தை விட்டு ஓடிப்போன வீரர்கள் பலருண்டு.

“பொதுமக்கள் பலரை ராணுவம் கொன்றுவிட்டது என்று தொடர்ந்து குற்றச்சாட்டு
வைப்பவர்கள், ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். புலிகள் கொன்ற ராணுவ
வீரர்கள் எத்தனை பேர்? புலிகள் கொன்ற தமிழ்த் தலைவர்கள், மேயர்கள்,
எம்.பி.க்கள் எத்தனை பேர்? பொது இடத்தில் அவர்கள் வைத்த குண்டுகளில்
வெடித்துச் சிதறிய அப்பாவி மக்கள் எத்தனை பேர்? கணக்குப் போட்டுப்
பார்த்தால், புலிகளின் சாதனைப் பட்டியல்தான் பெரியதாக இருக்கும். ஒரு நேரம்
புலி ஆதரவாளர்கள், ‘நடந்தது ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கும்,
ராணுவத்திற்குமான மோதல் அல்ல. அது ஈழ நாட்டுக்கும், இலங்கை நாட்டுக்கும்
இடையே நடந்த போர்’ என்று சொல்கிறார்கள். மறுநிமிடமே, ‘சொந்த நாட்டு மக்கள்
மீது குண்டு வீசி அழித்த ஒரே ராணுவம் இலங்கை ராணுவம்தான்’ என்றும் குற்றம்
சாட்டுகிறார்கள். அவர்களுக்குச் சாதகமானதை எப்படி வேண்டுமானாலும்
பேசுகிறார்கள்.

“புலிகளின் பழக்கமே பொதுமக்களோடு பொதுமக்களாக
ஊடுருவி, திடீரென மனித வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பதுதான். இந்த நிலையில்,
நீங்கள் யாரை பொதுஜனம் என்று நினைப்பீர்கள்? யாரை புலிகள் என்று
கணிப்பீர்கள்? சரணடையும் பொதுமக்களை ராணுவம் ஏற்பது என்பது எவ்வளவு பெரிய
ரிஸ்க் தெரியுமா? பொதுமக்களை வரிசையில் நிறுத்தி சோதிக்கும்போது, எந்த
நிமிடமும் யாராவது ஒருவர் வெடித்துச் சிதறலாம். அதோடு நாங்களும் சேர்ந்து
வெடித்துச் சிதற வேண்டும். அப்படி சம்பவங்கள் நடந்தும் இருக்கின்றன.
ஆனாலும், நாங்கள் அத்தனை தமிழரையும் கொன்று குவிக்காமல், பல லட்சம் பேரை
ரிஸீவ் செய்துள்ளோம். ஒவ்வொருவரையும் சோதித்து முடிக்கும் வரை, எங்களுக்கு
உயிர் போய் உயிர் வரும். அந்த அளவுக்கு எங்கள் உயிரைப் பணயம் வைத்துதான்,
இத்தனை லட்சம் தமிழர்களை இன்று புலிகளிடமிருந்து மீட்டெடுத்து அவர்கள்
சுதந்திரமாக வாழ வழி செய்து தந்துள்ளோம்.”

குடும்ப ஆதிக்கம்

தமிழர்கள் மட்டுமில்லாமல், சில சிங்களர்களுமே ராஜபக்ஷ மீது வைக்கும்
முக்கிய குற்றச்சாட்டு, ‘அவரது குடும்பத்தினர் ஆட்சியிலும் அதிகாரத்திலும்
தலையிடுகிறார்கள், அதன் மூலம் அந்தக் குடும்பத்தில் பணம் கொழிக்கிறது’
என்பதுதான். அடுத்தது ‘மகிந்த ராஜபக்ஷ நடுநிலையானவர் என்பது போல் காட்டிக்
கொண்டு, தனது சகோதரர் கோத்தபய ராஜபக்ஷ மூலம் தனது இனவாத சிந்தனையைப் பரப்பி
வருகிறார்’ என்ற குற்றச்சாட்டு. இதற்கு ஆதரவாக முரட்டுத்தனமான சில பௌத்த
அமைப்புகளை கோத்தபய ஆதரித்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
‘பௌத்தர்களுக்கு மட்டுமே இலங்கை சொந்தமானது’ என்பது போன்ற விஷக் கருத்துகளை
விதைக்கும் பௌத்த அமைப்புகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற
குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

‘பொதுபல சேனா’ என்ற பௌத்த
அமைப்பு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், முஸ்லிம் அமைப்புகள் கொடுத்து
வந்த (இறைச்சி வர்த்தகம் தொடர்பான) ‘ஹலால்’ சான்றிதழுக்கு, இலங்கை அரசு தடை
கொண்டு வந்திருப்பதை முஸ்லிம் அமைப்புகள் கண்டித்துள்ளன. நாங்கள்
இலங்கையில் இருந்த நேரத்தில், ஒரு முஸ்லிம் ஜவுளி தொழிற்சாலை தாக்கப்பட்டதை
அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துக் கொண்டிருந்தன.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இலங்கையில் துக்ளக்-3 Empty Re: இலங்கையில் துக்ளக்-3

Post by logu Fri Jun 14, 2013 9:20 pm

வந்து பார்த்து விட்டு, விமர்சனம் செய்யுங்கள்! – முன்னாள் புலித் தளபதி கருணா பேட்டி

இலங்கையில் ‘துக்ளக்’ - 10

இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி, செய்திகள் சேகரித்த நமது நிருபர்கள், எஸ்.ஜே.இதயா மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர் அங்கு தாங்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் இதுவரை பகிர்ந்து கொண்டார்கள். இந்த இதழில் இலங்கை மீள் குடியேற்றத் துறை அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், ‘துக்ளக்’ இதழுக்கு அளித்த பேட்டியுடன் இக்கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது.


அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் என்றால், தமிழகத்தில் பலருக்கு இவரைத் தெரியாது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதியாக விளங்கிய கருணா என்றால்தான் பலருக்கும் தெரியும். கருணா என்பது புலிகள் இயக்கம் அவருக்குச் சூட்டிய பெயர். புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிச் சரணடைந்த அவருக்கு, இலங்கை அரசு, நியமன எம்.பி. பதவியையும், இணை அமைச்சர் பொறுப்பையும் வழங்கியுள்ளது. கருணா என்ற பெயரை தற்போது யாரும் அங்கு பயன்படுத்துவதில்லை.

கேள்வி: இன்று அரசாங்கத்துடன் இணக்கமாகப் போகும் நீங்கள், ஆரம்பத்தில் ஏன் ஆயுதம் தூக்கினீர்கள்?

பதில்: தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய 1980 காலகட்டத்தில் அதற்கான தேவை உண்மையிலேயே இருந்தது. எங்களிடம் இளமையும், வேகமும் இருந்தது. அதனால்தான் நாங்கள் ஆயுதம் தூக்கினோம். அப்போது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எங்களுக்கு முழு ஆதரவு தந்தார். உண்மையிலேயே இந்திரா காந்தியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

கேள்வி: பின்னர் ஏன் விலகினீர்கள்?

பதில்: இந்திய அரசும், தமிழக அரசும் அப்போது எங்களுக்குப் பெரிதும் ஆதரவாக இருந்தன. ஆனால், விடுதலைப் புலிகள் அதற்குரிய பதில் மரியாதையைச் செலுத்தத் தவறி விட்டனர். ராஜீவ் காந்தி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைக் கொண்டு வந்தபோது, அதைப் புலிகள் இயக்கம் ஏற்றிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. மாறாக, இந்திய ராணுவம் இலங்கை வந்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டோம். மற்ற எல்லா தமிழ்ப் போராளிகள் இயக்கங்களும் இந்திய அரசின் ஆலோசனையை ஏற்று, வடகிழக்கு இணைந்த மாகாண சபை அமைப்புக்குச் சம்மதித்து, இந்திய ராணுவத்தின் பக்கம் இருந்தன. ‘தனி நாடு வேண்டாம்; தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் பெற்றுத் தருகிறோம்’ என்ற இந்தியாவின் அருமையான திட்டத்தை, அன்று நாங்கள் மட்டும் எதிர்த்து, இந்திய ராணுவத்துடனேயே போரிட்டோம். இதனால் வடகிழக்கு இணைந்த மாகாணசபை என்ற அரிய வாய்ப்பு கைநழுவிப் போயிற்று. அந்தத் தவறு போதாது என்று புலிகள், பழிவாங்கும் நடவடிக்கையாக ராஜீவ் காந்தியைக் கொலை செய்தனர். அந்த நிமிடம் முதல் இந்திய அரசு, இலங்கை விவகாரத்தைப் பொறுத்து பின்வாங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் பிறகு ஸ்காண்டிநேவியன் நாடுகளின் பேச்சுவார்த்தையில் சமஷ்டி முறைத் தீர்வுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஆஸ்லோவில் (நார்வேயின் தலைநகரம்) வைத்து ஒரு உடன்பாடும் கையெழுத்தானது. அந்தப் பேச்சுவார்த்தைக் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். ஒரு மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையை முறியடித்து, ‘ஓயாத அலைகள்’ போர் நடவடிக்கை மூலம் புலிகள் ஒரு பெரிய வெற்றியைப் பெற்ற நேரத்தில், அந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதனால், அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்க அந்தப் பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

மேற்கத்திய நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. சமஷ்டி முறை தீர்வுக்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டது. அந்த முறையை எப்படி அமல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று முடிவானது. ஆஸ்லோவில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் ஆன்டன் பாலசிங்கமும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர். ஆனால், பிரபாகரன் இதை ஏற்கவில்லை. ‘யாரைக் கேட்டுக் கையெழுத்துப் போட்டீர்கள்’ என்று எங்களைக் கடிந்து கொண்டார். அங்குதான் எனக்கும், பிரபாகரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடு பெரிதாக வெடித்தது.

அப்போதும் நான் அவருக்கு எடுத்துச் சொன்னேன். ‘இதுவரை போராடியது வேறு. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் உலக நாடுகள் எடுத்துள்ள முடிவு, நமக்கு இனிச் சாதகமாக இருக்காது. அந்தச் சம்பவத்தை ஒட்டி, உலக நாடுகள் அத்தனையும் பயங்கரவாத தடுப்பில் ஒருமித்த முனைப்புக் காட்டத் துவங்கி விட்டன. அதற்குப் புலிகள் இயக்கமும் விதிவிலக்கல்ல. 26 நாடுகள் ஏற்கெனவே இயக்கத்திற்குத் தடை விதித்து விட்டன. சமரசத்தின் மூலம் சமஷ்டி அதிகாரத்தைப் பெறுவதே நல்லது’ என்று வாதிட்டேன். ஆனால், பிரபாகரன் கேட்கவில்லை. எங்களது ஆஸ்லோ பேச்சுவார்த்தையை இந்தியாவும் மேற்பார்வையிட்டது. நம்பியார் என்ற அதிகாரியை அதற்காக நியமித்திருந்தார்கள். இந்தியாவும் அந்தத் தீர்வை வரவேற்றது. ஆனால், பிரபாகரன் மட்டும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் நான் வெளியேறினேன். பிரபாகரனின் பிடிவாதத்தால் தொடர்ந்து அழிவுகளும், முள்ளிவாய்க்கால் சம்பவமும் நடந்து முடிந்து விட்டன.

கேள்வி: ஆக, இனி இலங்கையில் தனிநாடு என்பது சாத்தியமில்லையா?

பதில்: சிறந்த மாகாண சபை ஆட்சி முறையைக் கொண்டு, இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடாக உலகில் வாழ்ந்து காட்டுகிறது. அதை ஏன் இலங்கையிலும் செய்து காட்ட முடியாது? தனி நாடு என்ற கோரிக்கையை இனி உலகம் ஏற்காது. அதற்கு எந்த நாடும் ஆதரவும் தெரிவிக்காது.

இதைத் தமிழக மக்களும், இளைஞர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களது ஆதரவு மற்றும் எழுச்சியை தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன். இங்குள்ள தமிழர்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பது நல்ல விஷயம்தான். அதைச் சரியான முறையில் செய்து நல்ல ஒரு அதிகாரப் பகிர்வைத் தமிழர்கள் பெறுவதற்கும், நல்ல அபிவிருத்திப் பணிகளை பெறுவதற்குமான முயற்சியாக மாற்றினால், தமிழகத்தில் ஒரு மாகாண சபையின் கீழ் எப்படி தமிழர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களோ, அதே போல் இங்குள்ள தமிழர்களும் வாழ முடியும்.

கேள்வி: இலங்கை அரசு மீது வைக்கப்படும் போர்க் குற்றங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இலங்கை அரசை மட்டும் குறை சொல்லிக் கொண்டே இருப்பதில் பயனில்லை. எந்த நாட்டு அரசாங்கமாக இருந்தாலும், தனது நாட்டில் நடக்கும் ஒரு சச்சரவை, ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்கும் அதிகாரமும், கடமையும், உரிமையும் அந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. இந்தியா உட்பட எந்த நாடாக இருந்தாலும் தனி நாடு கேட்கும் இயக்கங்களை ஒழிக்கவே முயற்சி எடுக்கும். இலங்கையில், அவ்வாறு ஒழிக்கும் முன்பு பல சமரசத் திட்டங்களுக்கு வாய்ப்பு தந்தார்கள். ஆனால், புலிகள் எதற்கும் உடன்படவில்லை. எனவே, எந்தச் சமரசத்திற்கும் தயாராக இல்லாத புலிகள் இயக்கம்தான் அழிவுகளுக்குப் பொறுப்பாக முடியும்.

நீங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கெல்லாம் போய் வந்ததாகச் சொன்னீர்கள். நீங்களே நேரடியாகப் பார்த்திருப்பீர்கள். மக்கள் இப்போதுதான் உயிர் பயம் நீங்கி நிம்மதியாக வாழத் துவங்கியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் ஏறக்குறைய பழைய நிலை வந்து விட்டது. வடக்கு மாகாணத்தில் மறுகட்டுமானப் பணிகளும், மீள் குடியமர்த்தும் பணிகளும் நடந்து வருகின்றன. 30 ஆண்டுகால அழிவை இரண்டு, மூன்று வருடங்களில் சரி செய்துவிட முடியாது. கண்ணி வெடிகள் உள்ளிட்ட ஆயுதக் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியே இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும், எனது மீள்குடியேற்ற அமைச்சகம் மிகத் துரிதமாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

எல்.எல்.ஆர்.சி. என்ற கமிட்டி, போர் அழிவுகளைப் பற்றி எல்லாப் பகுதிகளுக்கும் சென்று விசாரித்து, ஆராய்ந்து ஒரு வெளிப்படையான அறிக்கையைத் தந்திருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் பட்டியல், காணாமல் போனவர்கள் பட்டியல், அழிவுகளின் மதிப்பீடு, போர்க்குற்றங்கள் என எல்லாத் தளங்களிலும் ஆய்வு மேற்கொண்ட அந்தக் கமிட்டி, தனது கண்டுபிடிப்புகளையும், பரிந்துரைகளையும் தந்துள்ளது. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் இப்போது திட்டமிட்டு வருகிறோம். தற்போது போர் முடிந்து விட்டது. பிடிபட்ட புலிகள் கூட மன்னிக்கப்பட்டு அல்லது குறைந்த தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய எல்லோரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். சண்டைக்குச் சண்டை, பழிக்குப் பழி என்று கிளம்பினால் குரோதம்தான் அதிகமாகும். இதை இலங்கை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இங்குள்ள மக்களும் கோபத்தை மறந்து, ராணுவத்திடம் நெருங்கி, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் துவங்கி விட்டனர்.

இந்த நிலையில், இந்திய மக்கள் புதிய போராட்டங்களைத் துவக்கி, குழப்பங்களை உருவாக்குவது நல்லதல்ல. அது இங்குள்ள மக்களைத்தான் மேலும் பாதிக்கும். போரில் அழிந்தது தமிழர்கள் மட்டுமில்லை. முஸ்லிம்களும் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளனர். ராணுவ இலக்கு அல்லாத எத்தனையோ பொதுஇடங்களில் புலிகள் வெடித்த குண்டுகள் மூலம், எவ்வளவோ அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்களின் இறப்புகளுக்கு நியாயம் கேட்கப் போனால், சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தங்கள் அழிவுகளுக்குப் பதில் கேட்பார்கள்.

தமிழ் மக்களுக்கு, பழையபடி வீடுகள் கட்டிக் கொடுத்து, அவர்களுக்குப் பொருளாதார வழி வகைகள் செய்து, தங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் கொண்டு செலுத்தவும், அடுத்த தலைமுறையைச் சிறந்த முறையில் உருவாக்கவும் உதவுவதுதான் இன்றைய அவசரத் தேவை. இலங்கை அரசாங்கம் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வட பகுதிக்கு ஒதுக்கி உள்ளது. இதில் 10 சதவிகிதம் கூட சிங்கள மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படவில்லை. விரைவில் வட மாகாண சபைத் தேர்தலும் வரவிருக்கிறது. எனவே, தற்போது நிலவும் அமைதி தொடர்வதற்கும், தமிழர் சம உரிமையும், அதிகாரமும் பெற உதவுவது மட்டுமே இன்றைய தேவை என்பதை இந்திய மக்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் இன்னமும் தமிழீழ கோரிக்கையைக் கைவிடவில்லையே?

பதில்: புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்தே பழைய நினைப்பில் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இங்கு வந்து பார்க்க வேண்டும். போருக்குப் பிறகு, பல புலம் பெயர்ந்த தமிழர்கள் இங்கு திரும்பி வந்துள்ளனர். அவர்கள் இங்கேயே தொழில் செய்யவும் துவங்கியுள்ளனர். இதை நான் வரவேற்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் மிக நுட்பமான அறிவு பலத்துடன், ஏராளமான பண பலத்துடன் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் இங்கு திரும்பி வரவேண்டும். இங்கு தொழில் செய்து, இங்குள்ள தமிழர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். வசதியோடு இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், ஆளுக்கு ஒரு வீடு கட்டித் தர முன் வந்தாலே, இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவ வேண்டிய தேவையே இராது. அவ்வளவு பேர் வசதியாக வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் இங்குள்ள தமிழர்களுக்கு உதவ நினைத்தால், பொருளாதார ரீதியில் உதவ வேண்டும். அவர்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவதால், ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக, இங்குள்ள மக்கள் மீது குரோதம்தான் வளரும்.

கேள்வி: போர் முடிந்து நான்காண்டுகள் ஆகியும் இன்னும் ராணுவ நெருக்கடி தொடர்ந்து இருப்பதான குற்றச்சாட்டு பற்றி?

பதில் : தேசியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் வட, கிழக்குப் பகுதிகளில் மட்டுமில்லாமல், இலங்கையின் பல பகுதிகளிலும் ராணுவம் இருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் கூட சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ராணுவம் இருக்கிறது. நாகப்பட்டினத்தில் கப்பல் படைத் தளம் இருக்கிறது. இது மக்களின் உரிமையைப் பறிப்பதாகாது. இங்கு படிப்படியாக ராணுவம் விலக்கப்படும். இந்த நான்கு வருடத்தில் எவ்வளவோ விலக்கப்பட்டிருக்கிறது. பல முகாம்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்திலும், புலம் பெயர்ந்த தமிழர்களிடத்திலும் மீண்டும் ‘ஈழ’ கோஷம் எழுவதால், எந்த அரசாங்கத்துக்கும் சந்தேகம் எழவே செய்யும். மீண்டும் புலிகள் வந்து விடுவார்களோ, ஆயுதப் போராட்டம் உருவாகி விடுமோ என்ற ஐயப்பாடு கிளம்பவே செய்யும். எனவேதான் மீண்டும் ‘தமிழீழம்’, ‘பதிலடி’ என்றெல்லாம் குரல் எழுப்ப வேண்டாமென்று தமிழக மக்களையும், புலம் பெயர்ந்த தமிழர்களையும் கேட்டுக் கொள்கிறேன். அதனால் இங்குள்ள தமிழர்களின் சுதந்திரம் தான் பாதிக்கப்படும்.

கேள்வி: நீங்கள் வெளியே வராமல் இருந்திருந்தால், ஈழம் கிடைத்திருக்கும் என்று பேசப்படுகிறது. நீங்கள்தான் வெளியே வந்து, புலிகளின் ரகசியங்களை எல்லாம் அம்பலப்படுத்தி விட்டீர்கள் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே?

பதில்: ‘காட்டிக் கொடுத்தேன், ரகசியங்களை அம்பலப்படுத்தினேன்’ என்பதெல்லாம் பொய்க் கதை. நான் இயக்கத்தில் இருந்தபோது, பல ராணுவ நடவடிக்கைகளை முறியடித்து பல பெரிய வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறேன் என்பது உண்மை. குறிப்பாக, ஆனையிரவைக் கைப்பற்றியதெல்லாம் புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஆபரேஷன் என்று கருதப்பட்ட அந்த ராணுவ நடவடிக்கைகளை முறியடித்ததில் நான் பெரும் பங்கு வகித்தேன். ஆனால், நான் வெளியே வராமல் போயிருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். நானும், எனது ஆதரவாளர்களும் வெளியேறாமல் இருந்திருந்தால், இன்னும் பல ஆண்டுகள் சண்டை வேண்டுமானால் நீடித்திருக்கலாம். ஆனால், ஈழம் என்றுமே கிடைத்திருக்காது.

ஆரம்பத்தில் இயக்கத்தில் மக்கள் விரும்பிச் சேர்ந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில், கட்டாயமாக ஆள் பிடிக்க ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. எந்த ஒரு போராட்டமும் வெல்வதற்கு மக்களின் ஆதரவு வேண்டும். ஆனால், எந்தக் குடும்பமும் தன் கணவனோ, மகனோ, தந்தையோ போரில் ஈடுபட்டுச் சாவதை விரும்பாது. ஆனால், புலிகள் அதைக் கட்டாயப்படுத்தினார்கள். ஆண்கள் குறைந்தபோது, பெண்களையும் ராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்த்தார்கள். இதனால் மக்கள் விரக்தியடைந்தனர். அந்த நேரத்தில்தான் நார்வே, சமரசத்திற்கு வந்தது. நான் பிரபாகரனிடம் பேசினேன். ‘இதுவரை ராணுவ வெற்றிகளைத்தான் பெற்று வருகிறோம். இதை அரசியல் வெற்றியாக மாற்றி கொள்ள நாம் முன் வரவேண்டும். ராணுவ வெற்றியை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் மேலும் பிற நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொண்டு மீண்டும் போருக்கு வரும். திரும்பவும் சண்டைதான் போட வேண்டும். என்றைக்கும் நிம்மதியோ, விடுதலையோ இருக்கப் போவதில்லை. எனவே, அரசியல் தீர்வுக்கு போவோம்’ என்று சொன்னேன். ஆனால், அவர் ‘தனி நாடு’ என்ற சிந்தனையை விட்டு வெளியே வரவில்லை.

இங்கு பல்கலைக் கழகப் படிப்புக்குத் தேர்வாவது மிகப் பெரிய விஷயம். நான் அதற்குத் தேர்வானேன். ஆனால், அங்கு சேருவதற்கு முன்பாக, புலிகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து விட்டேன். சேரும்போது என் எண்ணம் என்னவாக இருந்தது என்றால், ‘ஒரு நான்கைந்து ஆண்டுகள் போராடினால் தமிழீழம் கிடைத்து விடும். அதன் பிறகு படிப்பு, வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்பதுதான். ஆனால் 25 ஆண்டுகள் போராடியும் தீர்வோ, வெற்றியோ கிடைக்கவில்லை என்ற போது, சலிப்புதான் வந்தது. மக்களும் புலிகளுக்கு எதிராக மாறத் துவங்கினார்கள். உலக நாடுகளும் புலிகளுக்கு எதிராக மாறின. இந்தியாவும் புலிகள் ஆதரவை விலக்கிக் கொண்டது. முதல் சந்ததி முடிந்து, இரண்டாவது சந்ததி உயிர்களை இழக்கத் துவங்கியாகி விட்டது. புலிகள் மூன்றாவது சந்ததியையும் அழிக்காமல் விட மாட்டார்கள் என்று தோன்றியது. தனிநாடு சாத்தியமில்லை என்பதைப் புரிந்து, தனது வெற்றிகளை அரசியல் வெற்றியாக மாற்ற புலிகள் உடன்படாததால்தான் நான் வெளியேறினேன்.

கொஞ்சம் விமர்சித்தாலும் அவரைத் துரோகி என்று முத்திரை குத்துவதோடு, அவரைக் கொலை செய்யவும் புலிகள் தயங்கவில்லை. ஏராளமான தமிழ்த் தலைவர்களை அந்த இயக்கம் கொன்று போட்டது. திம்பு பேச்சுவார்த்தையில் இந்திய அரசு, ‘எல்லா தமிழ்த் தலைவர்களும் இணைந்து செயல்படுங்கள். பெரிய வெற்றி கிடைக்கும்’ என்று அறிவுரை கூறியது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத புலிகள், அத்தனை சக இயக்கத்தினரையும் கொன்று குவித்தனர். சகோதரப் போராளிகளைக் கொன்று குவிப்பதை, புலிகளின் தளபதிகள் பலரே ஏற்கவில்லை. மக்கள் மத்தியிலும் அது புலிகளின் பெயரைக் கெடுத்தது. பிரபாகரனுக்குக் கிடைத்த குறுகிய கால வெற்றிகள் அவரை மதி மயக்கி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். நான் யதார்த்த நிலையை உணர்ந்து வெளியேறினேன்.

இன்று சிங்கள மக்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்களோ, அதே சுதந்திரத்துடன் தமிழர்களும் வாழ வேண்டும் என்பது மட்டும்தான் எனது இலக்காக உள்ளது. தனிநாடு என்று பேச ஆரம்பித்தால், அது இங்குள்ள மக்களுக்கு நலன் பயக்காது.

கேள்வி: இலங்கை ராணுவம், தமிழர் நிலங்களைக் கைப்பற்றி வைத்துக் கொண்டதாக ஒரு பெரிய குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

பதில்: இலங்கை காணிச் சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலங்களின் விபரம் அரசு ஏஜென்டிடம் (கலெக்டர்) உள்ளது. அதை மீறி, ஒரு துண்டு நிலத்தைக் கூட யாரும் யாருக்கும் கொடுத்து விட முடியாது. அப்படிப் பிடுங்கிக் கொடுத்தாலும் கூட, அவர் நீதிமன்றத்திற்குச் சென்று ஜெயித்து விட முடியும். எனவே, நிலங்கள் பறிபோவதாகச் சொல்வது பொய். கண்ணி வெடிகள் இருக்கும் பகுதி இன்னமும் ராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அங்கு பணிகள் முடிந்த பிறகுதான், நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியும். அதே போல், ராணுவ முகாம்கள், தொழிற்திட்டங்கள், புதிய சாலை வசதிகள், மின் திட்டங்கள் போன்ற அபிவிருத்தி மற்றும் நாட்டுத் நலத் திட்டங்களுக்காக ஒரு அரசாங்கம், மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முடியும். அதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது.

உதாரணத்திற்கு, கிழக்கு மாகாணத்தில் சாம்பூர் பகுதியில் மூதூர் என்ற இடம் உள்ளது. அங்கு இந்திய அரசாங்கம், இலங்கைக்காக நிலக்கரி அனல் மின் திட்டத்தைச் செய்து தரவுள்ளது. இதற்காக அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத் தேவை பூர்த்தியாவதுடன், ஆயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கவுள்ளது. இதுபோன்ற அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் நிலத்தைக் கையகப்படுத்துவது உலகெங்கும் நடப்பதுதானே?

கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு போலீஸ் அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசால் ஏற்கப்படும் வாய்ப்புள்ளதா?

பதில்: இந்திய மாடலில் மாகாண சபை அதிகாரம் என்று பேசும்போது, இங்கும் இந்தக் கோரிக்கை எழுகிறது. இந்தியா ஒரு பெரிய நாடு. அங்குள்ள மாகாண அமைப்பை இங்கு அப்படியே காப்பி அடிக்க முடியாது. இன்று சென்னையில் புறநகரையும் சேர்த்தால், இரண்டு கோடி அளவுக்கு மக்கள் தொகை இருக்கும் என்கிறார்கள். ஆனால், இலங்கையின் மொத்த மக்கள் தொகையே இரண்டு கோடிதான். இங்கே இந்தியாவைப் போல மாகாணத்திற்கு போலீஸ் அதிகாரம் தர இயலாது. அமெரிக்காவில் மேயரிடம் போலீஸ் அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் அது போல் முனிஸிபாலிட்டி அமைப்புகள் கேட்டால் போலீஸ் அதிகாரத்தைத் தர முடியுமா? அதுபோன்ற நிலைதான் இங்கே.

இலங்கை சிறிய நாடு. குறைந்த மக்கள் தொகை. அதனால் மாகாண சபைக்கு போலீஸ் அதிகாரம் வழங்கி விட முடியாது. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு போலீஸ் அதிகாரம் கொடுத்தால், இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் கொடுக்க வேண்டி வரும். அது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடிய சிக்கல்களை ஏற்படுத்தலாம். கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். எனவே, அது இங்கு சாத்தியப்படாது. அதற்கு என்ன செய்யலாம்? தமிழர்களை போலீஸ் படையில் இணைப்பது, தமிழ் அதிகாரிகளை தமிழர் பகுதிகளில் பணி செய்ய அனுமதிப்பது போன்ற விஷயங்கள் ஒரு நல்ல தீர்வாக அமையும். அதைதான் இப்போது செய்து வருகிறோம். கிழக்கு மாகாணத்திற்கு ஸீனியர் டி.ஐ.ஜி. என்றால் சங்கர் என்ற தமிழர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு டி.ஐ.ஜி. என்றால் இந்திரன். அவரும் தமிழர்.


தமிழர்கள் போலீஸில் சேரும் வகையில் கிழக்கு மாகாணத்தில் போலீஸ் பயிற்சிக் கல்லூரி இயங்குகிறது. இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் அதில் சேர்ந்துள்ளனர். ராணுவத்திலும் தமிழர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாறுதல்களை நாம் வரவேற்று, அதைக் கூடுதலாக்க முயற்சித்து, இந்த தேசத்தில் எல்லோரும் சேர்ந்து அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ, உலகத் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும். அதற்கு இடையூறு செய்யக்கூடாது.

ஆரம்பத்தில் ராணுவத்தைப் பார்த்து மக்கள் பயந்தார்கள். இப்போது அந்தப் பயமில்லாமல் வாழ துவங்கி விட்டார்கள். இலங்கையில் ஒட்டு மொத்தமாகத் தமிழ்ப் பேசும் மக்கள் என்று பார்த்தால் 28 சதவிகிதம் பேர் இருக்கலாம். மீதி 72 சதவிகிதம் பேர் சிங்கள மக்கள்தான். 72 சதவிகித சிங்கள மக்களை மீறி, சுமார் 28 சதவிகித தமிழ் மக்களுக்கு எந்த அரசாங்கமும் விசேஷ சலுகைகளை அள்ளி வீசி விடாது. இந்த யதார்த்த உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், படிப்படியாக தமிழருக்கு உரிய உரிமையைப் பெற்று விடலாம். அதற்குச் சாத்திய கூறுகள் நிறைய உள்ளன. தமிழ் மக்களால் ஒரு தமிழ் ஜனாதிபதியைக் கொண்டு வர முடியாது. ஆனால், ஒரு ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் தமிழர்கள் பங்கு வகிக்க முடியும். அவர்களை எந்தக் கட்சியாலும் உதாசீனம் செய்ய முடியாது. அந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

கேள்வி: இலங்கை அரசு மீது வைக்கப்படும் இன அழிப்புக் குற்றச்சாட்டு குறித்து?

பதில் : இன அழிப்பு என்பது சுத்தப் பொய். சரணடைந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ராணுவம் அழித்து விடவில்லை. மீள் குடியேற்றம் செய்துள்ளது. 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை. வழக்குகளைச் சந்தித்து விட்டு, சுதந்திரமாக வாழ்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் முக்கியப் பிரமுகர் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இன்று நன்றாக இருக்கிறார்கள். சூசையின் குடும்பத்தினர் நன்கு வாழ்கிறார்கள்.

3 லட்சம் மக்களை, முள்ளிவாய்க்கால் பகுதியில் 20 ஆயிரம் புலிகள் பிடித்து வைத்திருந்தார்கள். அரசாங்கம் மிக நிதானமாகத்தான் சண்டை பிடித்தது. மூன்று லட்சத்து இருபதாயிரம் பேரையும் கொன்று விடவில்லை. முடிந்தளவு மக்களை வெளியேற்றிய பிறகே, புலிகளை அழித்தார்கள். புலிகளிலும் 10 ஆயிரம் பேருக்கு மேல் சரணடைந்தனர். கடைசி நேரத்தில் கூட சரணடையுமாறு புலிகளிடம் வேண்டுகோள் வைத்தார் அதிபர் ராஜபக்ஷ. ஆனால், அவர்கள் கேட்கவேயில்லை. மக்களின் தீர்வுக்காகத்தான் யுத்தம் - மக்களையே தீர்த்துக் கட்டுவதற்கு யுத்தமல்ல என்பதைப் பிரபாகரன் புரிந்து கொள்ளத் தவறி விட்டார்.

தமிழனின் வீரத்தைச் சொல்வதற்காக, ‘தமிழன் வாளோடு பிறந்தவன்’ என்று சொன்னதெல்லாம் போதும். இனி இங்கு பிறக்கும் தமிழன் ‘வாழ்வோடு பிறக்கட்டும்.’


கேள்வி: தமிழக மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்: நீங்கள் எனது கருத்துக்களையோ, அரசாங்கக் கருத்துக்களையோ அப்படியே நம்பத் தேவை யில்லை. அதே நேரம் இணையத்தில் பார்ப்பதையும், புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு சிலர் சொல்வதையும் நம்பாதீர்கள். இலங்கை நாடானது சுற்றுலாவுக்காக எல்லோருக்கும் திறந்து விடப்பட்டுள்ள நாடு. சுற்றுலாப் பயணியாக வாருங்கள். இலங்கை முழுக்கச் சுற்றுங்கள். உண்மை நிலையை நீங்களே கண்டறிந்து பின் ஒரு முடிவை எடுங்கள். மக்களாகட்டும், மாணவர்களாகட்டும், அரசியல் தலைவர்களாகட்டும் யாரும் இங்கு வரலாம். மக்களைச் சந்தித்துப் பேசலாம். ஒருமுறை வந்து பார்த்து விட்டுப் பிறகு விமர்சனம் செய்யுங்கள். குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்றோர் இங்கு வந்து, இங்குள்ள தமிழ் மக்களையும், தமிழ்த் தலைவர்களையும் சந்திக்க வேண்டும் என்று அன்போடு அழைப்பு விடுக்கிறேன். இங்குள்ள மக்களும் சந்தோஷப்படுவார்கள். அங்குள்ள மக்களுக்கும் உண்மை நிலை தெரியவரும்.

– எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி

(முற்றும்)

(குறிப்பு: இதுவரை இலங்கையில் தாங்கள் பார்த்ததையும், கேட்டதையும் செய்திக் கட்டுரையாக எழுதி வந்த நமது நிருபர் எஸ்.ஜே. இதயா, அடுத்த இதழில் இந்தப் பயணத்தின் மூலம் தான் உணர்ந்தவற்றை வைத்துச் சில கருத்துக்களை எழுதுகிறார்.)
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இலங்கையில் துக்ளக்-3 Empty Re: இலங்கையில் துக்ளக்-3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் ‘துக்ளக்’ - 10
» “துக்ளக்” பத்திரிக்கையில் “இலங்கை பிரச்சனை” என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதி::
» எண்ணிப் பார்க்க வைத்த ஜெயலலிதா பற்றிய சோவின் துக்ளக் கேள்வி-பதில்-தலையங்கம்.
» ஈழத்தில் பத்து பார்ப்பனக் குடும்பம் சுட்டுக் கொல்லப் பட்டு இருந்தால் கல்கி துக்ளக் கூட்டம் இப்படி எழுதுமா?
» இலங்கையில் போர்க்குற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum