Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
13வது திருத்தத்தை இலங்கை நீக்கினால் பதிலடியாக கச்சதீவை மீளப்பெற இந்தியா உத்தேசம்!
Page 1 of 1

இந்திய
அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை
அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும்
பட்சத்தில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கச்சதீவை மீளப்பெறுவதற்கு
டில்லி நிர்வாகம் உத்தேசித்துள்ளது என உயர் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து
அறியமுடிகின்றது.
இந்த விவகாரம் சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின்
தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் சல்மான்
குர்சித் உள்ளிட்ட அரச உயர்மட்ட பிரமுகர்கள் தமது இராஜதந்திரிகளுடன்
டில்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றும் அவ் வட்டாரங்களிலிருந்து
அறியமுடிகின்றது.
ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றாக
1987ல் இலங்கை இந்திய அரசுகளிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட
ஒப்பந்தத்துக்கு எதிராக இலங்கையில் என்றுமில்லாதவாறு தற்போது பலத்த
எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
குறிப்பாக, கூட்டணி அரசின்
கடும்போக்குடைய பங்காளிக் கட்சிகள் 13ற்கு எதிராக போர்க்கொடி
தூக்கியுள்ளதுடன், அதை நீக்குமாறு கோரும் பிரேரணையொன்றை நாடாளுமன்றில்
சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அத்துடன்,
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய
ராஜபக்ச மற்றும் அரச சார்புடைய கடும்போக்குடைய சிங்கள அமைப்பினரும்
"13'ற்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அரசில்
அங்கம் வகிக்கும் சிறுபான்மையினக் கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் "13'ஐ
மேலும் பலப்படுத்த வேண்டும் என அதற்கு ஆதரவு தெரிவித்தாலும், அரச
கூட்டணியில் பிரதான கட்சியாகத் திகழும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இது
விடயத்தில் தமது நிலைப்பாட்டை அறிவிக்காமல் தொடர்ந்தும் மௌனம் காத்து
வருகின்றது.
கூட்டு அரசுக்குள் கருத்து வேறுபாடென்பது அரசியல்
ஜனநாயகக் கலாசாரம் எனக் கூறி இது விடயத்திலிருந்து அரசு நழுவிச்
செல்கின்றது. இதன் மூலம் "13'ல் மாற்றம் கொண்டு வருவதற்கு அரசு பச்சைக்கொடி
காட்டும் என்ற விடயம் உறுதியாகின்றது.
அத்துடன், வடக்குத்
தேர்தலுக்கு முன்னர் "13'ல் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிப்பதற்கு
சட்டமூலமொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அரசு முயற்சிக்கின்றது என அறியக்
கூடியதாகவுள்ளது.
இவ்வாறு அரசமைப்பின் "13' விடயத்தில் இலங்கை
அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், "13' விடயம்
சம்பந்தமாக இந்தியா தனது பூரண கவனத்தைச் செலுத்தியுள்ளது.
இதன்படி அண்மையில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசியூடாக
கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்
அரசமைப்பின் 13வது திருத்தத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம்
என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,
அரசமைப்பிலிருந்து 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கோ அல்லது அதை
பலவீனப்படுத்துவதற்கோ இலங்கை அரசு முயலும் பட்சத்தில் இதற்குப் பதிலடி
கொடுக்கும் வகையில் இலங்கையிடமிருந்து கச்சதீவை இந்தியா மீளப்பெறும் எனக்
கூறப்படுகின்றது. இது தொடர்பில் டில்லி உயர்மட்டம் தீவிரமாக ஆராய்ந்து
வருகிறது.
1974ம் ஆண்டுவரை இந்தியாவின் கட்டுப்பாட்டின்
கீழிருந்த கச்சதீவு அதன் பின்னர் இலங்கைக்கு வழங்கப்பட்டது. சிறிமா
சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி கச்சதீவை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.
எனவே, இந்தியாவின் தலையீட்டின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 விடயத்தில்
இலங்கை தலையிடுமானால், கச்சதீவை இந்தியா நிச்சயம் மீளப்பெறும் என்று
அரசியல் ஆய்வாளர்களும் எதிர்வு கூறுகின்றனர்.
அதேவேளை,
இலங்கைக்கு கச்சதீவை வழங்குவதற்கு எதிராக இந்தியாவின் தமிழக கட்சிகள்
இன்றும் குரலெழுப்பி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar topics
» இலங்கை 13வதில் திருத்தத்தை மேற்கொண்டால் பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்க இந்தியா உத்தேசம்!
» இலங்கை சட்ட திருத்தத்தை மத்திய மாநில அரசுகள் மாற்றி அமைக்க வேண்டும்: ராமதாஸ்
» இலங்கை வீரர்களை நீக்கினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» 13வது திருத்தச்சட்டம் குறித்து பேசியதை மூடி மறைத்த இலங்கை ஜனாதிபதி செயலகம், வெளிவிட்டார் சுஜாதா சிங்
» ஆதாரமற்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் இலங்கை மீது இந்தியா காட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum