Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆம்வே நிறுவனத்தின் இந்திய சேர்மன் மற்றும் இயக்குநர்கள் கைது!
2 posters
Page 1 of 1
ஆம்வே நிறுவனத்தின் இந்திய சேர்மன் மற்றும் இயக்குநர்கள் கைது!
1996 – 2001ல்தான் சினேகா, அனுபவ், ஆர்.பி.எஃப்., பாரதி, பாலு
ஜூவல்லர்ஸ், கலைமகள் சபா என பலவகையான நிதி நிறுவனங்களின் மோசடிகள்
அம்பலமாகி பூட்டுகள் தொங்க விடப்பட்டன.அதை நடத்திவந்த நிறுவன அதிபர்கள்
சிறைக்குச் சென்றார்கள்.அத்துடன் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடம்
புகார் மனுக்கள் குவிந்தபடியே இருந்தன. (ஆனால், முதலீட்டாளர்களுக்கு
இன்றுவரை பணம் வந்து சேரவில்லை என்பது தனி கதை). இப்படி நிதி நிறுவனங்கள்
மீதான முதற்கட்ட நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான்,
எம்.எல்.எம். என்கிற சங்கிலித் தொடர் வணிக மோசடிக்கு படாடோபமாக பட்டுக்
கம்பளம் விரிக்கப்பட்டது.
அடுத்த சில ஆண்டுகளில்தான், உடல் ஆரோக்கியத்திற்கான காந்த படுக்கை
தருவதாகக் கூறி சங்கிலித் தொடர் வணிகத்தில் ஈடுபட்ட வீகேன் நிறுவனத்தின்
மோசடிகள் குறித்த புகார் பெருமளவில் எழுந்தது. “இந்த நிறுவனங்களே
இப்படித்தான்” என அப்போது புலம்பிய மக்கள், அடுத்த சில ஆண்டுகளில் கோல்டு
குவெஸ்ட் நிறுவனத்தின் தங்க காசுக்கு ஆசைப்பட்டு ஏமாந்து நிற்பதை
பார்த்தோம்.சமீப காலமாக ஈமு கோழி மோசடியும் அம்பலத்து வந்தது
நினைவிருக்கும்.
இதற்கிடையில் மெல்லக் கொல்லும் விஷம் மாதிரி பரவி வந்த மல்ட்டி லெவல்
மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்.) எனப்படும் சங்கிலித் தொடர் வணிகம் வளர்ந்து
வந்தது. இந்த எம் எல் எம் என்பது, “நீங்கள் எங்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகை
செலுத்தி உறுப்பினராகுங்கள். அதன் பின்னர் நீங்கள் பல உறுப்பினர்களை
எங்களுக்குச் சேர்த்து விடுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு உறுப்பினர்கள்
சேர்கிறார்களோ அதன்படி உங்களின் வருமானம் பல மடங்காகும்” என்ற
அடிப்படையிலேயே நடைபெறுகிறது. இதனைக் கேட்கும்போது காது இனிக்கும்.
ஆரம்பத்தில் 10 ஆயிரம் ரூபாய் கட்டி உறுப்பினராகச் சேர்ந்துவிட்டு,
அதன்பிறகு நமக்குத் தெரிந்த 10 உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால்
மாதந்தோறும் பல்லாயிரம் ரூபாய் வருமானமாக கிடைக்குமே என மக்கள்
நினைக்கிறார்கள். ஆனால், இந்தியா போன்ற பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுந்த
நாடுகளில் பல உறுப்பினர்களைச் சேர்த்துவிடுவது என்பது நடைமுறையில்
சாத்தியமில்லாததாகவே காணப்படுகிறது. இதுதான் சங்கிலித் தொடர் வணிகத்தின்
தோல்விக்கும், அந்த நிறுவனங்கள் மீதான மோசடிப் புகார்களுக்கும் அடிப்படைக்
காரணம்.
இது போன்ற சங்கிலித் தொடர் வணிகத்தின் முன்னோடியாக விளங்குவது ‘ஆம்வே’
என்கிற அமெரிக்க நிறுவனம். ஆக்டோபஸ் கால்கள் போல இந்தியாவிலும் கிளை
பரப்பியுள்ள இந்த நிறுவனத்தை 1959இல் ஜாய் வான் ஆன்டேல், ரிச் டிவேஸ் எனும்
இரு அமெரிக்கர்கள் உருவாக்கினார்கள். சுமார் 50 ஆண்டுகாலமாக இந்த நிறுவனம்
தாக்குப் பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இது மக்களின்
அன்றாடப் பயன்பாட்டிற்கு உதவும் சோப்பு, எண்ணெய், ஷாம்பூ, தேயிலைத்தூள்
போன்ற பொருட்களை மட்டுமே தனது சங்கிலி தொடர் வணிகத்தில்
முன்னிலைப்படுத்துவதுதான்.
இதில் ஆரம்பத்தில் பணம் செலுத்தி உறுப்பினராகி இத்தகையப் பொருட்களைப்
பெற்றுக் கொள்கிறவர்களால் மேற்கொண்டு உறுப்பினர்களைச் சேர்க்க
முடியாவிட்டாலும், கட்டிய காசுக்கு இதுவாவது கிடைத்ததே என
திருப்திப்பட்டுக்கொண்டு ஷாம்பூவைத் தேய்த்து தலை முழுகிவிடலாம்.
இந்த ஆம்வே நிறுவனம் தாக்குப்பிடிப்பதற்கான காரணம் இதுவென்றாலும், அந்த
நிறுவனமும் அவ்வப்போது படாடோபமான விழாக்களை நடத்தி, “எங்கள் உறுப்பினர்கள்
உலகப் பணக்காரரர்களாக இருக்கிறார்கள். நீங்களும் இந்த அற்புத உலகத்திற்கு
வாருங்கள்” என ஆளை மயக்கும் பரப்புரைகளை நடத்தியே வருகிறது. அந்த
விழாவுக்குச் செல்லும் ஆம்வே உறுப்பினர்கள் கோட் சூட் அணிந்து காரில்
செல்வதைப் பார்க்கும் நடுத்தர வர்க்கம் நாமும் அந்த நிலைக்கு உடனடியாக
வரவேண்டும் என்ற ஆசையில் உறுப்பினராக முன்வருகிறது.
இவ்வாறு ஆம்வே ஆரம்பித்த மோசடியில் பல நிறுவனங்களும் குதித்தன. ஒரு
காலத்தில் இது பெருகி வரும் அபாயம் உணர்ந்து இதனை இந்திய அரசாங்கம் தடை
செய்திருந்தது. ஆனால் காசால் அரசாங்கத்தையே விலைக்கும் வாங்கும்
நிறுவனங்களால் இந்தச் சட்டம் என்னவான தென்றே தெரியாமல் போனது.
இந்நிலையில்தான் ஆம்வேயின் இந்திய தலைமை செயல் அதிகாரி ஸ்காட் பின்க்னே
மற்றும் 2 நிர்வாக இயக்குநர்கள் மோசடிப் புகாரில் கேரள மாநிலத்தில் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த விசாலாட்சி என்பவர் தாம் ஆம்வே
பொருட்களை விற்பனை செய்ததில் சுமார் ரூ3 லட்சம் நட்டம் ஏற்பட்டது என்று
போலீசில் ஒரு புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து
விசாரணை நடத்தினர்.அப்போது ரூ37 மதிப்புள்ள பொருளை ரூ395க்கு ஆம்வே
நிறுவனம் விற்பனை செய்ததும் இந்த விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஆம்வே
நிறுவனத்தின் மோசடிகள் தொடர்பாக வழக்குகளில் ஆம்வே தலைமை செயல் அதிகாரி
ஸ்காட் முன்ஜாமின் பெற்றிருந்தார்.
இந்நிலையில் இருவித மோசடி வழக்குகளில் கேரள மாநிலம் வயநாட்டில் ஸ்காட்
மற்றும் அந்நிறுவன இயக்குநர்கள் சஞ்சய் மல்கோத்ரா மற்றும் அஞ்சு ஆகியோர்
கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஆம்வே
பொருட்கள் குடோன்களில் இருந்தும் பறிமுதல் செய்யபட்டன. மேலும் ஆம்வே
நிறுவனத்தின் இன்சூரன்ஸ் திட்டம் தொடர்பாகவும் பல்வேரு புகார்கள்
எழுந்துள்ளதாகவும். இது தொடர்பாகவும் கேரள போலீசார் விசாரணை நடத்தி
வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன்.
வழக்கம் போல் இந்த கைது நடவடிக்கை ‘புஸ்வாணம். ஆகி விடக் கூடாது என்பதே பொது ஜனத்தின் எதிர்பார்ப்பு!.
Amway India Chairman William Pinckney, two directors arrested
*************************************************************************
Network marketing firm Amway’s India Chairman and CEO William S Pinckney
and two company Directors were arrested here today on charges of
financial irregularities.The two directors are Sanjay Malhotra and Anshu
Budhraja, crime branch sources said

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இந்திய மீனவர்கள் 37 பேர் இலங்கையில் கைது
» இந்திய நிறுவனத்தின் ‘எலும்பை’ முறிக்கிறது ஸ்ரீலங்கா!
» இன்று அதிகாலை 1.45 மணியளவில்உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மற்றும் உடனிருந்த அனைத்து மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் கைது
» இந்திய மீனவர்கள் 33 பேர் பாகிஸ்தானில் கைது
» இந்திய ராணுவ உளவுத்துறையில் கரும்புள்ளி கைது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum