TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வாழ்வில் பின்னிப் பிணைந்த முதுமை ஒரு சுமையல்ல!

2 posters

Go down

வாழ்வில் பின்னிப் பிணைந்த முதுமை ஒரு சுமையல்ல!  Empty வாழ்வில் பின்னிப் பிணைந்த முதுமை ஒரு சுமையல்ல!

Post by Tamil Mon May 27, 2013 7:10 pm



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கையின் அந்திம காலத்தைக் கடப்பது தொடர்பான கவலை
நம்மில் அத்தனை பேருக்கும் இருக்கிறது. முதுமையைத் தொட்டிருப்பவர்களும்,
தொட இருப்பவர்களும் இப்பருவம் குறித்த எதிர்மறை எண்ணங்களால்
சூழப்பட்டிருக்கிறார்கள்.பணம் படைத்தவர்கள் முதல் பாட்டாளிகள் வரையில்
முதுமையை அடையும் மனிதர்களுக்கு சமூகம் அளிக்கும் அங்கீகாரம் அல்லது
உரிமைகள் குறித்த விஷயத்தில் கேள்விகள் தொக்கி நிற்கின்றன. சமூகத்தில்
தாங்கள் புறந்தள்ளப்பட்டதாக முதியவர்கள் எண்ணத்
தலைப்பட்டிருக்கிறார்கள்.இதற்கு பல்வேறு சமூகக் காரணங்களை அடுக்கலாம்.
உழைத்து சம்பாதிக்கும்வரை வீட்டின் தலைமகனாக மதிக்கப்பட்டவருக்கு முதுமைப்
பருவத்தில் அளிக்கப்படும் மரியாதை தேய்வதால், முதியோர் இல்லங்களே மேல்
என்று பலர் கருதுகின்றனர்.

முதியவர்களைப் பெரும் சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில்
சேர்த்துவிட்டு அனாதைகளாகவே விட்டுவிடும் அவலம் அரங்கேறி வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் இதை
உணர்த்துகின்றன.


மதுரையிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு முதியவர் தனது தள்ளாத வயதில்
உயிரிழந்தார். இதையடுத்து முதியோர் இல்லப் பொறுப்பாளர்கள், அந்த முதியவர்
சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அவரை
அங்கு சேர்த்துவிட்டபோது அவரது உறவினர்கள் அல்லது பிள்ளைகள் என்று
கூறியவர்கள் தந்த முகவரியையும், செல்பேசி எண்களையும் தேடி எடுத்து
தொடர்புகொள்ள முயன்றனர். இதற்காகச் சில மணி நேரங்களைச் செலவிட்டும்
அவர்களுக்குத் தோல்வியே மிஞ்சியது. செல்போன் எண்களும், முகவரியும்கூட
போலியானது என்பது பின்னர் தெரியவந்தது. போலியாக முகவரியையும், பயன்பாட்டில்
இல்லாத செல்போன் எண்ணையும் கொடுத்து முதியவரை அந்த இல்லத்தில்
சேர்த்துள்ளனர்.


அந்த முதியவர் சடலம் இல்லத்தில் நெடுநேரம் வைக்கப்பட்டிருந்ததால்
அங்கிருந்த சக முதியவர்களுக்கும் மரண பயம் தொற்றிக்கொண்டது. இதை உணர்ந்து
கொண்ட இல்லப் பொறுப்பாளர்கள் உடனடியாக சடலத்தை தகனம் செய்ய
தன்னார்வலர்களின் துணையை நாடினர். தன்னார்வலர்கள் சிலர் தங்கள் சொந்தச்
செலவில் ஆம்புலன்சுடன் வந்து சடலத்தைப் பெற்றுக்கொண்டு சுடுகாட்டுக்குக்
கொண்டு சென்றனர். அந்தச் சடலத்தை எந்த முறைப்படி அடக்கம் செய்வது அல்லது
எரிப்பது என்பது புரியாமல் அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது.


ஒருவேளை சொத்துக்காக, சடலத்தைச் சொந்தம் கொண்டாடவும் சிலர் வரக்கூடும்,
போலீஸாரின் விசாரணைக்கும் தாங்கள் உள்படக்கூடும் என்பதால் சடலத்தை அடக்கம்
செய்த நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படம் எடுத்து ஆவணமாக்கப்பட்டது.


அனாதைச் சடலமாக அடையாளம் காட்டப்பட்டு அந்த முதியவரின் இறுதிச் சடங்குகள் முன்பின் தெரியாத நல்ல உள்ளங்களால் நிறைவேற்றப்பட்டன.


சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் நெஞ்சுருக வைக்கிறது. உடல்நலம்
பாதிக்கப்பட்டு சொந்த பலத்தில் நடமாட முடியாத முதியவர் ஒருவரை அவரது
உறவினர்களோ அல்லது பிள்ளைகளோ அவர் உயிரோடு இருக்கும்போதே வாகனத்தில் ஏற்றி
சுடுகாட்டில் தள்ளிவிட்டு மாயமாகிவிட்டார்கள். தன்னார்வ அமைப்புகளால்
பின்னர் அவர் மீட்கப்பட்டார். உயிரோடு இருக்கும்போதே புதைக்கும் எண்ணம்
கொண்ட மனிதர்களின் மாபாதகச் செயலை எண்ணி வருந்திய அப்பெரியவர் சில
நாள்களிலேயே உயிரைத் துறந்தார்.


இதுபோல் அரசு மருத்துவமனைகளில் முதியோர்களைச் சிகிச்சைக்காகச்
சேர்த்துவிட்டு, அவர்களைக் கைகழுவி விடும் சம்பவங்களும் பல இடங்களில்
நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அரசு மருத்துவமனையொன்றில்
முதியவர் ஒருவரைச் சிலர் சேர்த்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்கள்
கொடுத்த முகவரியில் விசாரித்தபோது, அது போலி முகவரி என்பது தெரியவந்தது.
வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு அந்த முதியவரை
மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு விட்டுவிட்டார்கள். பின்னர்
மருத்துவமனை வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த அந்த முதியவருக்கு
தன்னார்வலர்கள் சிலர் உதவி செய்தனர். அவரது சட்டைக் காலரில் உள்ள டெய்லர்
கடை முகவரியில் விசாரித்து அவரை அவரது உறவினர்களிடம் சேர்த்து வைக்க
தன்னார்வலர்கள் படாதபாடு படவேண்டியிருந்தது. நோயுற்ற முதியவர்கள் பலரும்
சுற்றுலாத் தலங்களிலும், ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் அனாதைகளாக
விடப்படும் அவலமும் அரங்கேறி வருகிறது. இச் சம்பவங்களால் ஒட்டுமொத்தமாக
முதியோர்கள் புறக்கணிக்கப்படுவதாக அர்த்தம் கொள்ள முடியாது.


முதுமைப் பருவத்தில் பிள்ளைகளால் கவனிக்கப்படுவோம், பாதுகாக்கப்படுவோம்
என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு ஏற்பட வேண்டும். அவ்வாறு முதியோருக்கு
உணவளித்து கவனித்துக்கொள்ளாத பிள்ளைகளை எதிர்த்து பெற்றோர் வழக்கு தொடரவும்
சட்டங்கள் இருக்கின்றன.


ஒருசில நீதிமன்றங்களில் இதுபோன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஆனால்
சட்டங்கள் மட்டும் மனித மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்துவிடாது.
முதியோருக்காக பல்வேறு சலுகைகள், உதவி திட்டங்கள் பலவற்றையும் அரசும்
செயல்படுத்துகிறது. ஆனாலும் ஆங்காங்கே முதியோர் அனாதைகளாகக்
கைவிடப்படுவதும் தொடர்கிறது. முதுமையைப் போற்றுவதும், முதியவரைப்
பாதுகாப்பதும் நாகரிக சமூகத்தின் அடையாளங்கள்.


முதுமை ஒரு சுமையல்ல என்ற எண்ணம் முதியோருக்கு மட்டுமின்றி
இளைஞர்களுக்கும் இருக்க வேண்டும். முதுமையைச் சுமையாகக் கருதாத
பெற்றோர்களும், அவர்களுக்கு உணவளித்து பராமரிப்பதை சுமையாகக் கருதாத
பிள்ளைகளும் உருவாக்கப்பட வேண்டும். அத்தகைய நிலை உருவாகாத வரையில் அனாதைச்
சடலங்களாக சுடுகாடுகளில் முதியோர் வீசப்படுவதும், அனாதைகளாகவே முதியோர்
இல்லங்களில் அவர்கள் அடைக்கப்படுவதும் தொடரவே செய்யும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

வாழ்வில் பின்னிப் பிணைந்த முதுமை ஒரு சுமையல்ல!  Empty Re: வாழ்வில் பின்னிப் பிணைந்த முதுமை ஒரு சுமையல்ல!

Post by அருள் Tue May 28, 2013 9:20 am

[You must be registered and logged in to see this image.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum